கள்வன்-22
“இங்க பாரு நீ என்ன சொன்னாலும் அதை நம்ப நான் தயாராக இல்லை.. ஒழுங்கு மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போயிரு.. இல்லன்னா கழுத்த பிடிச்சி வெளியே தள்ளுற மாதிரி இருக்கும்..” என்று அவர் கோபமாக கத்த, இவளோ அவர் காலில் விழுந்தவள் “சார் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்க.. அன்னைக்கு நடந்ததுல அவர் தப்பு இல்லை.. அது ஏதோ ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆயிடுச்சு ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. அவர் நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாரு.. அவங்க அம்மாவ பாக்கணும்னு அவர் ஏங்குறாரு… ப்ளீஸ் சார் தயவு செய்து அவரை ஏத்துக்கோங்க..”
“என்ன அங்கே நானும்தான் இருந்தேன்.. நீ அவ்ளோ தெளிவா தான சொன்ன.. இப்ப வந்து ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு அவன் மேல தப்பே இல்லைன்னு வந்து சொல்லிட்டு இருக்க.. இதுல நாங்க எதை நம்புறது நாங்க என்ன காதுல பூ வச்சுட்டு இருக்கோம்னு நினைச்சியா..?” என்றவர் செக்யூரிட்டியை அழைத்தார்.
உள்ளே வந்த செக்யூரிட்டியை பார்த்து “இவளை இங்கே இருந்து வெளியே தள்ளுங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அவளோ அவரை அழைத்தவாறே கத்திக் கொண்டிருந்தாள்.
செக்யூரிட்டியோ, “இந்தா பொண்ணு வெளிய போ.” என்று சொல்ல இவளோ மறுத்து நின்று கொண்டிருந்தாள். செக்யூரிட்டியும் அவளது கையை பிடித்து தரதரவென்று இழுத்து வந்து வெளியே தள்ளிவிட, அவன் தள்ளிவிட்ட வேகத்தில் இவள் கீழே போய் விழ போக சரியாக அந்த நேரம் பார்த்து இரு வலிய கரங்கள் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டன.
ஒரு நிமிடம் அவளுடைய உயிரே அவள் கையில் இல்லை. அவள் உடலும் நடுங்கத் தொடங்கியது. அதை உணர்ந்தவன் தன்னோடு அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல பயப்படாத நான் வந்துட்டேன்..” என்று அவன் சொல்ல அப்பொழுதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். மித்ரன் அவளை அணைத்தவாறு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.
அதே கணம் அந்த வாட்ச்மேனை பார்த்தவன் “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவளை கீழே தள்ளிவிட்டு இருப்ப..?” என்று அவனை ஒரு உதை உதைத்தவன் அவளை கூட்டிக்கொண்டு தன்னுடைய காரில் அவளை உட்கார வைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தவன், அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அந்தக் காரில் வெகு நேரம் அமைதியே நிலவியது. அவளோ தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு வீதியை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒரு கை தன்னுடைய வயிற்றை தொட்டுப் பார்த்தது.
அதை கவனித்த மித்திரனும் காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் அவளிடம் திரும்பி “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. உன்னை யாருடி அங்க போக சொன்னது..?” என்று கேட்டான்.
“அது வந்து என்னால தானே நீங்க உங்க குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருக்கீங்க.. அதான் உங்க அப்பாகிட்ட நடந்தத சொல்லலாமுன்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. ஆனா அவரு நான் என்ன சொல்ல வர்றேன்னு காது கொடுத்து கூட கேட்காமல் என்னை வெளியே தள்ள சொல்லிட்டாரு..” என்றாள்.
“இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்.. என்னுடைய தனிப்பட்ட விஷயத்துல நீ தலையிட்ட உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது மைண்டிட்.. வயித்துல குழந்தை இருக்குன்னு கொஞ்சமாவது நெனப்பு இருக்கா டி உனக்கு.. அந்த நேரத்துல நான் வரலைன்னா இன்னேரம் என்ன ஆகி இருக்கும்.. என் குழந்தையையும் என்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நினைக்கிறியா நீ..” என்று கேட்டவனுக்கும் கண்கள் கலங்கியது.
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் அழகையோடு “அப்படில்லாம் இல்லங்க.. அப்படி சொல்லாதீங்க.. நான் ஏதோ அவசரத்துல தெரியாம பண்ணிட்டேன்.. இனி இப்படி நடக்காது என்ன நம்புங்க..” என்றாள். சிறிது நேரம் அவளைப் பார்த்தவன் அவளை எதுவும் சொல்லாது காரை ஸ்டார்ட் செய்து தன்னுடைய ஆபிஸிற்கு வந்தான்.
அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தன்னுடைய அலுவலகத்தின் உள்ளே நுழைந்து தன்னுடைய கேபினுக்குள் சென்று விட்டான். அவளும் மெதுவாக காரை விட்டு இறங்கி தன்னுடைய கேபினுக்குள் அமர்ந்து கொண்டு முன்னால் இருக்கும் டேபிளில் தலை குனிந்து அழுது கொண்டிருந்தாள்.
அவள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. எப்படியாவது அவரிடம் உண்மையை சொல்லி அவனை ஏற்றுக்கொள்ள வைக்கலாம் என்று நினைத்தவளுக்கு அவர் அவளை ஒரு வார்த்தை கூட பேச விடாது வீட்டை விட்டு துரத்தி அடிப்பார் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அது போக மித்ரனும் அவளை திட்டி விட்டுப் போக முழுவதுமாக உடைந்தவள் வேறு வழி இன்றி அழுது கரைந்தாள்.
சிறிது நேரம் கழித்து கேபினுக்குள் இருந்தவன் அவளை திரும்பி பார்க்க அவளோ இன்னும் தலையை நிமிர்த்தாமல் அப்படியே இருந்தாள். சற்று நிமிர்ந்து அவன் அறையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தவன் நேரம் மதியம் 2 என்று காட்ட “ஷிட் வயித்துல குழந்தை இருக்குன்னு கொஞ்சமாவது நினைப்பு இருக்கா இவளுக்கு..” என்று தனக்குள் புலம்பியவன் சட்டென்று எழுந்து வெளியே வந்தவன் அவளுடைய கேபினுக்குள் நுழைந்தான். அவளோ அப்பொழுதும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் படுத்திருந்தாள். அவள் அருகில் வந்து அவள் தோளை தொட்டு “ஏய் எழுந்திரு..” என்றான். அவளோ அப்பொழுதும் எழுந்திருக்கவில்லை.
‘என்ன ஆச்சு இவளுக்கு எழுந்திருக்காம இருக்கா..’ என்று யோசித்தவன் அவளை நிமிர்த்தி பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“சரியான இம்சடி நீ..” என்றவன் தண்ணீரை எடுத்து கொஞ்சமாக அவள் முகத்தில் தெளித்து அவளை எழுப்பினான். அவன் தண்ணீரை தெளித்தும் பதறி எழுந்தாள்.
“ஹே ஹே ரிலாக்ஸ் நான் தான் பயப்படாதே..” என்றான்.
“இப்ப எதுக்காக என்னை எழுப்பினீங்க..?” என்று சற்று கோபமாக அவள் கேட்க, அவளை உறுத்து விழித்தவன் “மணி என்ன ஆச்சு பாத்தியா..?” என்றான். அவளுக்கு அவன் கேட்பது புரியவில்லை.
“ஏன் உங்களுக்கு மணி பார்க்க தெரியாதா நீங்க பார்க்க வேண்டியதுதானே இதை கேக்குறதுக்காகவா என்ன தூக்கத்திலிருந்து எழுப்புனிங்களா..?” என்று கேட்க, தன் தலையில் அடித்துக் கொண்டவன், “இல்ல நீ எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்ப மட்டும் தான் இப்படியா பைத்தியம் மாதிரி உளராமா என் கூட வா..” என்றான்.
அவளோ “எங்கே..?” என கேட்க “ஏன் மேடம் எங்கன்னு சொன்னா தான் வருவீங்களா..? வான்னா வாடி..” என்று அவள் கையை பிடித்து அழைத்துச் சென்றான். அவளும் அவனை மனதிற்குள் திட்டியபடியே அவன் பின்னால் சென்றாள். இருவரும் ஒரு பெரிய பிரபலமான ஒரு ஹோட்டலுக்குள் சென்றார்கள்.
அந்த ஹோட்டலைப் பார்த்ததும் அவளோ வியர்ந்தாள். ‘இங்க எதுக்காக கூட்டிட்டு வந்திருக்காரு..’ என்று யோசித்தவள் எதுவும் கூறாமல் அவனுடனே சென்றாள்.
அவர்கள் இருவருக்கும் ஒரு தனி அறையை புக் செய்தவன் அவளை அழைத்துக்கொண்டு அங்கு அமர்ந்தான். வெய்ட்டர் வரவும் இருவருக்கமான உணவை ஆர்டர் பண்ண அவளோ அவனை ஏறிட்டாள். அவளை சட்டை செய்யாதவன் உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அவளைப் பார்த்து “என்ன பார்க்கிற என் குழந்தைக்கு பசிக்கும்ல்ல அதனால தான் கூட்டிட்டு வந்தேன்.. உன் மேல உள்ள அக்கறைனு எல்லாம் நினைச்சுக்காத..” என்று சொல்ல அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
இருவருக்குமான சாப்பாடு வர சாப்பாடு அவளுக்கு எடுத்து வைத்தவன் “சாப்பிடு..” என்று கட்டளையிட அவளும் “எனக்கு பசிக்கல எனக்கு வேண்டாம் நீங்க வேணா சாப்பிடுங்க..” என்று சொல்ல அவளை ஒரு கணம் பார்த்தவன் “உனக்கு பசிக்குதோ இல்லையோ ஒழுங்கா சாப்பிடு.. என் குழந்தைக்கு பசிக்கும்.. மரியாதையா சாப்பிடு இல்ல இங்க இருக்குற எல்லா சாப்பாட்டையும் சாப்ட வச்சிருவேன்” என்க, அவளோ அவனை முறைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவனோ அவன் பாணியில் மிரட்டி அவளை உண்ண வைத்துவிட்டு தானும் உண்ண ஆரம்பித்தான். இருவரும் சாப்பிட்டு முடித்து அந்த அறையை விட்டு வெளியே வர வெண்மதியோ எதிரே இருந்த ஒருவரைப் பார்த்து அப்படியே மலைத்துப் போய் நின்றாள்.
யாரைத் தன் வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நினைத்தாளோ அந்த முகம் அவள் கண்ணில் தெரிய அப்படியே விதிர்விதிர்த்துப் போய் நின்றிருந்தாள்.