வதைக்காதே என் கள்வனே

4.6
(12)

கள்வன்-28

அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியவள் லியாவையும் பார்க்காமல் மனதில் தோன்றிய வெறுமையோடு கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அப்போது அவள் தோளை ஒரு கைப்பற்றியது.

யார் என்று திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆஷா அவள் தோள் மேல் கை வைத்து சிரித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

“என்ன வெண்மதி எங்கயோ கிளம்பற போல இருக்கு..? அப்புறம் எங்க..? உன் கூடவே ஒட்டிப் பிறந்த மாதிரி திரியுமே உன்னோட கிளி லியா அதைக் காணோம்..?” என்று அவள் கேட்க. அப்போது தான் அவளுக்கு லியாவின் ஞாபகமே வந்தது.

மித்திரனின் அப்பா அவளிடம் வீட்டை விட்டுப் போகும்படி சொன்னதுமே சுற்றம் மறந்து போனவளுக்கு லியா மட்டும் எப்படி ஞாபகம் இருக்கும்.

“அது வந்து என் பிரண்டு கிட்ட விட்டுட்டு வந்து இருக்கேன்..” என்று பொய் சொல்லி சமாளித்தாள்.

“சரி எங்க போற.. கொஞ்ச நாளா ஆபீஸ் பக்கம் கூட காணல..?” என்று கேட்க.

“இல்ல எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனால தான் வரல..” “சரி இப்ப எங்க போற..?” என்று ஆஷா கேட்க.

“அது தெரியல..?” என்றாள்.

“என்ன வெண்மதி எங்க போறேன்னு தெரியலன்னு சொல்ற.. உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா..?” என்று அவளிடம் கேட்க, சட்டென அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வடிந்தது.

அதை பார்த்தவள் “ஏய் என்ன ஆச்சு ஏன் இப்ப அழுகுற..?” என்றாள். அதற்கும் அவளிடம் எந்த பதிலும் இல்லை. அந்த நேரம் பஸ் கண்டைக்டர் வந்து டிக்கெட் கேட்க ஆஷா உடனே “இல்ல பஸ் மாதிரி ஏறிட்டாங்க நாங்க வேற பஸ்ஸுக்கு போய்க்கிறோம்..” என்று கூறியவள் அவளிடம் மெதுவான குரலில் “முதல்ல என்கூட வா அப்புறம் பேசிக்கலாம்..” என்று அழைத்தாள். அவளும் ஒன்றும் பேசாமல் அவளுடன் சென்றாள்.

அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்தவள் ஒரு பீட்ச் ஹவுஸிற்க்கு அவளை அழைத்து வந்தாள்.

ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய வெண்மதி “ஆஷா மேடம் ஏன் இங்க வந்துருக்கோம் இது உங்க வீடா..?” என்று கேட்க ஆஷாவோ, “இல்ல இது என் வீடு இல்ல.. என் ப்ரண்டு வீடு வா உள்ள போலாம்..” என்று அவள் கையைப் பிடித்து உள்ளே கூட்டி சென்றாள்.

அவர்கள் உள்ளே வரவும் “ஹாய் வெல்கம் மெரோனி..” என்று ஒரு பெண்ணின் குரல் அவளை வரவேற்க. அடுத்த அடி எடுத்து வைக்காமல் உடல் இறுக நின்றாள் வெண்மதி.

ஆஷாவை திரும்பிப் பார்க்க ஆஷா கேலி புன்னகையோடு அவளைப் பார்த்தவள் அவளை விட்டு நட்டாலியாவின் அருகில் போய் நின்றாள்.

நட்டாலியா வெண்மதியை பார்த்து “என்ன அன்னைக்கு என் கண்ணில் இருந்து நீ தப்பிச்சிட்டதா நினைச்சியா..? அன்னைக்கு நீ என்ன பார்த்து ஓடுனத நானும் பார்த்தேன்.. அப்பவே முடிவு பண்ணிட்டேன் உன்னு எப்படியும் தூக்கிடுவேன்னு.. அந்த சமயம் தான் ஆஷாவை பார்த்தேன்.. அவளும் அங்க தான் வந்திருந்தா.. உன்ன பார்த்ததும் நீ தான் அதுன்னு சந்தேகப்பட்டு உன் பின்னாடியே வந்தேன்.. அப்பதான் ஆஷா மேல மோதினேன்..”

“மிஸ் ஆகிட்டாலே இருடி என் கண்ணுல சிக்காமலா போயிடுவ..” என்று நட்டாலியா வாய் விட்டு சொல்லிக் கொண்டிருக்க, ஆஷா “ஹலோ பார்த்து வர மாட்டீங்களா இப்படியா மேல வந்து மோதுவீங்க..?” என்று கேட்க, வெண்மதியை பார்த்த வாறே இவளிடம் “சாரி தெரியாம மோதிட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆஷா அவள் பார்த்துக் கொண்டிருக்கும் திசை பக்கம் பார்க்க அங்கு தூரத்தில் மித்ரனின் கார் போய் கொண்டு இருந்தது. அதில் மித்ரனும் வெண்மதியும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.

அவர்களை பார்த்த ஆஷா “ஆமா ஏன் நீங்க அவங்கள பாத்துட்டு இருக்கீங்க..?” என்று கேட்க, நட்டாலியாவோ ஆஷாவின் புறம் திரும்பி “அவங்கள உங்களுக்கு தெரியுமா..?” என்று கேட்க, ஆஷாவோ “ஆமா எனக்குத் தெரியும் என்னோட பாஸ் தான் அவரு.. கூட இருக்குற பொண்ணு எங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ற பொண்ணு பேரு வெண்மதி..” என்று சொல்ல, இவள் முகத்திலோ புன்னகை விரிந்தது.

“ஓ அப்படியா ரொம்ப நல்லதா போச்சு எனக்கு அவளோட அட்ரஸ் வேணுமே கிடைக்குமா..?” என்று கேட்க ஆஷாவோ அவளை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தவள் “நீங்க எதுக்காக அவளோட அட்ரஸ கேக்குறீங்க..? உங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்..?” என்று கேட்க, அதற்கு இவளும் அவளிடம் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று சிந்தித்து கொண்டு அமைதியாக இருக்க,

“என்னாச்சு பயந்துட்டீங்களா பயப்படாதீங்க எனக்கும் அவர்களை பிடிக்காது.. தைரியமா சொல்லுங்க எதுக்கு அவளோட அட்ரஸ் கேக்குறீங்க..?” என்று கேட்க நட்டாலியாவின் முகத்தில் பல்ப் எரிந்தது.

இவளோ அவள் மேல் இருக்கும் வெறுப்பை சொல்ல ஆஷாவுக்கும் மித்ரனையும் வெண்மதியையும் பழி வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக இது மாற இவளிடம் கூட்டு சேர்ந்து கொண்டாள்.

“அதுக்கப்புறம் தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உன்னை பிளான் பண்ணி தூக்குறதுக்காக காத்துக்கிட்டு இருந்தோம்.. ஆனால் நீயே இப்படி வலிய வந்து சிக்குவேன்னு எதிர்பார்க்கல..” என்று நட்டாலியா சொல்லிக்கொண்டே இருக்க வெண்மதியோ இருவரையும் தீப்பார்வை பார்த்து பார்த்துக கொண்டிருந்தாள். அதிலும் ஆஷாவை வாய்ப்பு கிடைத்தால் கொல்லும் வெறியே வந்தது.

“என்னடி அப்படி பார்க்கிற என்ன என்ன கொல்லனும் போல ஆத்திரம் வருதா.. ஆனா எனக்கு உன்ன பார்த்தாலே அப்படியே உடம்பெல்லாம் பத்திகிட்டு வருது.. நீ உண்மையிலேயே என் கூட தான் பிறந்தியா..? ஏன் உன் மேல எனக்கு பாசமே வரல..? அப்படியே வெறி தான் வருது..” என்று நட்டாலியா ஒரு பக்கம், மறுபக்கம் ஆஷாவோ “என்ன வெண்மதி உனக்கு அப்படியே ஹெல்ப் பண்ணி உனக்கு நல்லது செய்வேன்னு நினைச்சியா..? மித்ரன் அவனுக்கு என்ன மனசுல பெரிய பேரழகன்னு நினைப்பா..? அன்னைக்கு என்னை எப்படி அசிங்கப்படுத்தினான் தெரியுமா.. அதுவும் நீ அதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா..? அதுக்கு அப்புறம் பார்த்தா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்துறீங்க.. எனக்கு எப்படி இருக்கும்.. அதனாலதான் எப்படிடா உங்க ரெண்டு பேரையும் பழிவாங்கலாம்னு நினைச்சிட்டு இருக்கும்போது உங்க அக்கா நட்டாலியா எனக்கு கை கொடுத்தா.. இப்போ வசமா வந்து நீயா மாட்னியா..?” என்று இருவருமே தங்கள் பழிவெறியை அவளிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவளுக்கோ வேட்டையாடும் இரு கழுகுகள் இடம் ஒரு சிறு பறவை மாற்றியது போன்று உணர்ந்தவள், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே மடிந்து அமர்ந்தாள்.

“ஆஷா அவளைத் தூக்கிட்டு வந்து அங்கே கட்டி வை..” என்று ஒரு நாற்காலியைக் காட்டி நட்டாலியா உத்தரவிட, ஆஷாவும் அவள் சொல்வதைக் கேட்டு வெண்மதியின் கையைப் பிடித்து தூக்கியவள் அங்கு இருந்த சேரில் அமர்த்தி அவளை கயிறு கொண்டு கட்டி விட்டாள்.

வெண்மதியே “ப்ளீஸ் என்ன விட்ருங்க..” என்று அழுது கொண்டிருந்தாள்.

ஆனால் அவர்களோ அதைக் கண்டு கொள்ளாமல் நட்டாலியா கையில் ஒரு விஷப்பாட்டலை எடுத்துக்கொண்டு அவள் அருகே நடந்து வந்தாள். அதை பார்த்த வெண்மதிக்கோ உள்ளே பயம் எடுத்தது.

“அக்கா ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாத வேண்டாம்.. என் வயித்துல குழந்தை இருக்கு தயவு செஞ்சு இப்படி பண்ணாத..” என்று கெஞ்சிக் கொண்டிருக்க, ஆஷாவும் நட்டாலியாவும் ஒரு நிமிடம் அதிர்ந்தார்கள்.

ஆஷாவோ “ஓஓ அவ்வளவு தூரம் போயாச்சா அவன் கூட படுத்து புள்ள வேற பெத்துக்க போற..? அதுக்கு நாங்க விட்டாதான.. உன்ன மட்டும் கொன்னு போட்டு போகலாம்னு பார்த்தா இப்போ அவன் குழந்தையும் சேர்ந்து சாகப் போகுதா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ஹஹஹஹ..” என்று சொல்லிக்கொண்டே இருவரும் அவளைப் பார் பார்த்து கேலியாக சிரித்தார்கள்.

பிறகு நட்டாலியா அவள் அருகே வந்து ” இங்க பாரு அமைதியா இந்த விஷத்தை நீ குடிக்கணும்.. இல்லைன்னா நானே உன் வாயில ஊத்தி விடுவேன்..” என்று சொல்ல, வெண்மதியோ அவளுக்கு தன்மேல் மட்டும் தான் வெறுப்பு இருக்கும் வயிற்றில் குழந்தை இருக்கு என்று சொன்னால் குழந்தைக்காகவாவது தன்னை விட்டு விடுவாள் என்று நினைத்து சொல்ல அவளோ அதை அவளுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டாள்.

அதேநேரம் இங்கே மித்ரனோ வெண்மதியை தேடிக் கொண்டிருந்தான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!