வதைக்காதே என் கள்வனே

5
(12)

கள்வன்-29

மித்ரனின் அப்பா அவனிடம் சொன்னதைக் கேட்டு அப்படியே உடைந்து போய் அமர்ந்தவன் பின்பு அவள் மேல் அவன் வைத்திருக்கும் காதலையும் அவள் அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதையும் சொல்ல அவனுடைய குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.

பின்பு அவனது அப்பா அவனிடம் “என்ன மன்னிச்சிருப்பா எனக்கு இந்த விஷயம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா நான் அந்த பொண்ணுகிட்ட அப்படி சொல்லி இருக்க மாட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. நீ உடனே என் மருமகளை கூட்டிட்டு வா.. அவகிட்ட நான் மன்னிப்பு கேட்கணும்..” என்று சொல்ல அவனோ எழுந்து தன் அப்பாவை அணைத்துக் கொண்டான்.

அவனுடைய அம்மாவும் அவனுக்கு ஆறுதல் சொல்ல உடனே அங்கிருந்து கிளம்பியவன் வெண்மதியைத் தேட வெளியே வந்தான்.

அப்போது லியா அவன் முன்னே பறந்து வந்தது.

உடனே லியாவைப் பார்த்தவன் அதை தன் கையில் தூக்கி “லியா நீ இங்க இருக்க அப்படின்னா மதி வந்துட்டாளா..?” என்று ஆச்சரியமாக கேட்டவன் லியா வந்த திசையை அங்கும் இங்கும் ஆராய்ந்தான்.

ஆனால் லியா “மதி என்ன பார்க்க வரவே இல்ல‌ ரொம்ப நேரமாகுது.. அதனாலதான் நானே அவளைத் தேடி வந்தேன் எங்க மதி..?” என்று அவனிடம் கேட்க அவனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

‘எங்கு சென்றாலும் லியாவைத் தன் உடனே அழைத்துச் செல்பவள் இப்போது அவளையும் விட்டுவிட்டு சென்று விட்டாளா..? அப்படி எங்கு தான் சென்று இருப்பாள்..’ என்று நினைத்தவன் நந்தாவிற்கு அழைத்து உடனே வரச் சொன்னான்.

நந்தா வந்ததும் இருவரும் கமிஷனர் ஆபீஸ் சென்று அவளைப் பற்றி சொல்ல அவரும் அனைத்து ஸ்டேஷனுக்கும் இன்பஃம் செய்தவர் அவளை உடனே கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீஸ் கொஞ்ச நேரத்தில் அங்குள்ள பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் ஏர்போர்ட் என்று அனைத்து இடங்களிலும் சிசிடிவி மூலம் பார்வையிட்டார்கள்.

அப்பொழுது அவள் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறியதும், அதன் பிறகு அவளை ஒரு பெண் அழைத்துச் சென்றதும், அங்கு உள்ள சிசிடிவியில் பதிந்திருந்தது.

உடனே மித்ரனை அழைத்து அவனிடம் கூறினார்கள். அந்த சிசிடிவியில் வென்மதியை ஆஷா அழைத்துப் போவது தெளிவாக தெரிந்திருந்தது. அதை பார்த்தவனுக்கு ‘ஆஷா ஏன் இவள கூட்டிட்டு போகனும்..’ என்று யோசித்தான்.

அதன் பிறகு அதை வைத்து அந்தப் பெண் அவளை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறியதையும் பார்த்தனர்.

“சார் இப்போ அந்த ஆட்டோக்காரனை பிடிச்சா நமக்கு தெரிய வந்துரும்..” என்று கமிஷனர் சொல்லிக் கொண்டிருக்க, மித்ரனும் “ஓகே சார் சீக்கிரம்..” என்று அவனும் அவன் ஆட்களிடம் சொல்லி அந்த ஆட்டோ நம்பரை வைத்து தேடச் சொல்ல சிறிது நேரத்திலியே அந்த ஆட்டோக்காரனை பிடித்தனர்.

அவனை விசாரித்ததில் கடற்கரையோரம் உள்ள ஒரு பீட்ச் ஹவுஸில் இறக்கி விட்டதாகக் கூறவும் உடனே மித்ரன் அங்கு புறப்பட்டான்.

இங்கு நட்டாலியா கையில் விஷ பட்டிலை வைத்துக்கொண்டு வெண்மதியை நெருங்கியவள் “ஹாப்பி ஜர்னி மை சிஸ்டர் மெரோனி..” என்றவள் அவள் வாயில் விஷத்தை ஊற்றப் போக, பற்களை கடித்துக் கொண்டு முகத்தை அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டிருந்தாள் வெண்மதி.

பொறுமை இழந்த நட்டாலியாவோ “ஆஷா அவ வாய திற..” என்று கட்டளையிட ஆஷாவோ வெண்மதியின் தாடையை இறுகப்பற்றியவள் இன்னொரு கையால் அவள் வாயை பிளந்து கொண்டிருந்தாள்.

வெண்மதியோ கண்ணீரில் கரைந்து கொண்டு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க, நட்டாலியா அவள் வாயில் ஊற்றப் போனாள்.

அப்பொழுது லியா பறந்து வந்து அந்த பாட்டிலை தட்டிவிட்டது.

லியா பாட்டிலை தட்டிவிட்டதும் நட்டாலியா யாரது என்று பார்க்க லியாவோ பறந்து பறந்து அவளைத் தாக்கியது.

“ஏய் ஏய் சீ தள்ளிப் போ..” என்று அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள் நட்டாலியா.

அப்பொழுது மித்ரன் தன் வேக எட்டு வைத்து வெண்மதியிடம் நெருங்கினான். அவனைப் பார்த்தவளுக்கோ கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிந்து கொண்டிருந்தது.

அவனும் அவள் அருகில் வந்தவன் ஆஷா அவள் தாடயை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவள் காது கிழியும் அளவிற்கு அவள் கன்னத்தில் ஒரு அடியை இறக்கினான்.

அவன் அடித்த அடியில் ஆஷா தூரப் போய் விழுந்தாள். உடனே வெண்மதியின் கட்டை அவிழ்த்தவன் அவளை இழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.

அவளோ தன்னைக் காக்க ஆபத்பாந்தவன் வந்து விட்டான் என்று அவன் நெஞ்சுக்குள் புதையும் அளவிற்கு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அந்த இடத்தை போலீஸ் சுற்றி வளைத்தது. தன்னிடம் இருந்து வெண்மதியைப் பிரித்தவன் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு நட்டாலியாவின் அருகே சென்று அவள் கன்னத்தில் ஒரு அடி விட்டான்.

அவளோ “ஆஆஆ..” என்று கத்தியவாறு சுருண்டு விழுந்தாள். அவள் அருகே சென்றவன் “நீ எல்லாம் ஒரு பொண்ணா ச்சை கூடப் பிறந்த தங்கச்சி மேல உனக்கு ஏன் டி இவ்வளவு வன்மம்..? தாய் தகப்பன் பாசம் தான் கிடைக்கல தன் அக்காவோட பாசமாவது கிடைக்காதான்னு உன் பின்னாடி சுத்துன பொண்ண எவ்வளவு அசிங்க படுத்திருக்க..? இப்போ அவள் வயத்தில ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சியும் அவள கொல்லப் பாத்திருக்க.. இதுக்கும் மேல உன்ன உயிருடோ விட மாட்டேன் டி..” என்றவன் அருகில் நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருந்து கன்னை உருவி எடுத்தவன் அவள் நெற்றியில் வைக்க, அவளோ சற்று நேரத்தில் படபடத்துப் போனாள்.

அந்த இன்ஸ்பெக்டரோ மித்ரனின் அருகில் வந்து “சார் சார் என்ன பண்றீங்க..? அதான் நாங்க இருக்கோமே நீங்க எதுவும் பண்ணாதீங்க.. அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கலாம்..” என்று சொல்ல அவனோ எதையும் காதில் வாங்காமல் டிரிகரை அழுத்தும் சமயம் வெண்மதி அவன் காலில் விழுந்தாள்.

“ப்ளீஸ் வேணாம் விட்ருங்க அவளை கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்கு போய்ட்டா நீங்க இல்லாம என்னால வாழ முடியாது.. தயவு செஞ்சு விட்ருங்க..” என்று கெஞ்ச ஒரு நொடி அவளை உறுத்து விழித்தவன் கண்களை மூடித் திறந்து கன்னை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். “இன்ஸ்பெக்டர் இவங்க ரெண்டு பெரும் ஜென்மத்துக்கும் வெளிய வராத அளவுக்கு இவங்களை உள்ள தள்ளிடுங்க..” என்று கர்ஜித்தவன் வெண்மதியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தான்.

காரை விட்டு இறங்கியவன் அவளை இறங்க சொல்ல அவளோ தயங்கி நின்றாள். அவளின் தயக்கம் உணர்ந்தவன் அவளின் கையைப் பிடித்து அவளை உள்ளே கூட்டிச் கொண்டு வந்தான்.

இவளைப் பார்த்ததும் மித்ரனின் அம்மா அப்பா தங்கை மூவரும் அவளின் அருகே வர அவளோ மித்ரனின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

உடனே மித்ரனின் அப்பா “அம்மாடி முன்னாடி வா நான் செஞ்சது தப்புதான் ஏதோ புரிஞ்சுக்காம அப்படி பண்ணிட்டேன்.. என்ன மன்னிச்சிடுமா..” என்று சொல்ல அப்பொழுதும் அவள் அவன் பின்னே முதுகோடு ஒண்டிக் கொண்டிருந்தாள்.

“அம்மாடி தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு என் மகனோட சந்தோஷம் நீ அவன் கூட இருப்பது தான்னு இப்பதான் எனக்கு புரிஞ்சது.. இந்த வயசானவனை பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருமா..” என்று அவர் கையெடுத்து கும்பிட, அதுவரை அவன் பின்னே நின்றிருந்தவள் அவரின் அருகில் வந்து அவரின் கையை பிடித்துக் கொண்டாள். “பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க சார்..” என்றாள் வெண்மதி.

அவரோ முகத்தில் புன்னகையோடு அவள் தலையில் கை வைத்து “நீ நல்லா இருக்கணுமா.. சார் எல்லாம் வேணாம் என்னை மாமான்னே கூப்பிடு..” என்றார்.

“சரி மாமா….” என்றவளுக்கு விழிகளில் நீர் நிறைந்தது.

அது ஆனந்தக் கண்ணீர்..!!

அதன்பிறகு மித்ரனின் அம்மா அவளை அணைத்துக் கொண்டு “எத்தனை மாசம் ஆகுதுமா..?” என்று கேட்க, அவளோ “அஞ்சு மாசம் ஆகுதுமா..” என்றாள்.

இதயாவும் அவள் அருகில் வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு “அண்ணி அப்போ கூடிய சீக்கிரமே நான் அத்தையாக போறேனா ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

அப்போது மித்ரனின் அம்மா “சரி உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு காலைல முருகன் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்.. இப்ப போய் கொஞ்சம் ஓய்வு எடுமா.. உன்னை பார்க்க ரொம்ப சோர்வாக இருக்கிற சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என்க.

மித்ரனும் அவளை அழைத்துக்கொண்டு அவளை சாப்பிட வைத்து அவளை தங்களது அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தான்.

ஆனால் அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. அவளும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவனிடம் எப்படி பேசுவது என்று தயங்கிக் கொண்டு இருந்தாள்.

இப்படியே அன்றைய நாள் முழுவதும் சென்றது.

இரவு படுக்கும் போது அவள் புடவையுடனே படுத்து இருக்க அவனோ அவள் அருகில் வந்தவன் கையில் ஒரு இலகுவான ஆடையை வைத்துக் கொண்டு “இந்தா இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வந்து படு..” என்று கொடுக்க, அவளோ அதைக் காதில் வாங்காதவள் போல அப்படியே அமர்ந்திருந்தாள். அவனும் கையில் வைத்திருந்த ஆடையை அங்கே அருகில் வைத்துவிட்டு திரும்ப, அவளோ அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு வழியாக தன்னை திடப்படுத்திக் கொண்டவள் “என்கிட்ட பேச மாட்டீங்களா..?” என்று கேட்டாள்.

அவனோ அவள் புறம் திரும்பாமல் “என்னை விட்டு போகணும்னு நினைச்சவங்க கூட எல்லாம் என்னால பேச முடியாது..” என்று சொன்னான்.

உடனே கட்டிலை விட்டு எழுந்தவள் அவன் முன்னால் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனை இறுக்கமாக அணைத்தவள் “உங்க அப்பா என்கிட்ட வந்து அப்படி கேட்கும் போது நீங்க மறுபடியும் உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு நினைச்சு தான் உங்களை விட்டு போனேன்.. சத்தியமா அது உங்களை இப்படி காயப்படுத்தும்ன்னு எனக்கு தெரியாது.. எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும்.. அது உங்க குடும்பம் உங்க கூட இருந்தா தான் அது நடக்கும்னு நினைச்சி தான் நான் போனேன்.. ப்ளீஸ் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க எனக்கு செத்துடலாம் போல இருக்கு..” என்று சொல்ல, அவனோ சட்டென அவள் வாய் மேல் கை வைத்து “இப்படி எல்லாம் பேசினா நானே உன்ன கொன்னுடுவேன் டி..” என்றவன் கண்களும் கலங்கின.

“எப்போ என் வாழ்க்கையில நீ வந்தியோ அப்பவே எனக்கு எல்லாமே நீ தான்னு முடிவு பண்ணிட்டேன்.. யாருக்காகவும் என் குடும்பத்துக்காகவும் கூட உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியாது..” என்றவன் அவள் இதழில் முத்தமிட்டான். அவளும் அவனுக்கு இணைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆழ்ந்த முத்தம் இருவருக்கும் அது அச்சமயம் தேவையாக இருந்தது. பின்பு அவள் மூச்சுவிட திணற அவளை விட்டு விலகியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அவள் முன் குனிந்தவன் அவள் மாராப்பு சேலையை விலக்கிவிட்டு அவனுடைய குழந்தைக்கு முத்தம் பதிதான்.

“சரி இப்ப போய் இந்த ட்ரஸ் மாத்திட்டு வா நீ ரொம்ப டயர்டா இருப்ப தூங்கலாம்..” என்க. அவளோ அவனைப் பார்த்து “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நீங்களே மாத்தி விடுங்களேன்..” என்று செல்லம் கொஞ்ச புன்னகைத்தவன் அவளுக்கு ஆடையை மாற்றி விட்டு அவளைப் படுக்க வைத்து தானும் படுத்துக் கொண்டாள்.

அன்றைய இரவு அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது.

மறுநாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் யமுனா சொன்னபடி முருகன் கோவிலில் வைத்து மித்ரன் அவன் குடும்பத்தினர் முன்னர் வெண்மதியின் சங்குக் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான்.

அச்சமயம் மித்திரனின் தங்கை இதையாவோ நந்தாவைப் பார்த்து கண்ணடித்தாள்.

லியாவுடன் பேசிக்கொண்டிருந்த நந்தா எதேர்ச்சியாக அவள் புறம் திரும்ப அவள் கண்ணடித்ததை பார்த்து அதிர்ச்சியாக நின்றான்.

இதைக் கவனித்த லியா “என்ன நந்தா அந்த பொண்ணு உன்ன பார்த்து கண்ணடிக்குது..” என்று கேட்க, அவனும் “அப்போ அதை நீயும் பார்த்தியா அப்போ அது கனவல்ல நிஜம்தான்.. இந்த பொண்ணு ஏன் என்ன பார்த்து கண்ணடிக்குது..?” என்று லியாவிடம் விடம் கேட்டான்.

அதுவோ “அட மரமண்டை இது கூட உனக்கு புரியலையா..? உன்னை சைட் அடிக்குது டா..” என்ற லியா அவனை கேலி செய்ய, லியாவைப் பார்த்து முறைத்தவன் இதயாவைப் பார்க்க, அவளோ மீண்டும் ஒருமுறை அவனை பார்த்து கண்ணடித்தாள்.

“ஆத்தாடி இது ரூட்டே வேற மாதிரி இருக்கே..” என்று நினைத்தவன் லியாவைக் கையில் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டான். அதைக்கண்டு இதயாவும் வாய்விட்டு சிரித்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!