வதைக்காதே என் கள்வனே

4.7
(15)

கள்வன்-04

தான் என்ன தவறு செய்தோம். தன்னை எதற்காக அவன் இவ்வாறு கொடுமைப் படுத்துகிறான். போதாக்குறைக்குத் தன்னை அடைத்து வேறு வைத்திருக்கிறான். என்று பலவாறு யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவளின் அருகே வந்த லியாவோ அவள் அமர்ந்திருந்தக் கோலத்தைக் கண்டு

“மதி என்னடி இது.. ஏன் இப்படி உக்காந்திருக்க..? என்ன ஆச்சு உனக்கு..? அந்த ராட்சசன் உன்னை எதுவும் பண்ணானா..? அடிச்சானா..?”

என்று மதியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, ஆனால் மதியோ லியாவுக்கு எந்தப் பதிலும் கூறாமல் தன் முழங்கால்களில் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பொறுமை இழந்த லியாவோ அவளுடையப் போர்வையைத் தன் வாயால் இழுக்க ஆரம்பித்தது. அதன் பின்பே சுயம் பெற்றவள் லியாவைப் பார்த்து இதற்கு மேலும் தாங்க மாட்டேன் என்பது போல அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது. லியாவுக்கோ பதறியது அவளின் நிலை கண்டு.

அவள் கன்னத்தில் அவன் அடித்தற்க்கான தடம் கிடக்க உதடுகளிலும் இரத்தக்கசிவு இருக்க லியாவோ கொதித்துப் போனது‌. ஆனாலும் அந்த குட்டிப் பறவையால் என்னதான் செய்ய முடியும்.

தன் மனதுக்குள் மித்ரனை முடிந்த அளவு வசைபாடி விட்டு அவள் பக்கத்தில் சென்று அவள் முழங்கால்களில் ஏறி வந்து அவள் முகத்திற்கு நேராக நின்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிக்கொண்டது.

அதுவே மதிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது..

நந்தாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஸ்டடி ரூமுக்குச் சென்றவன் அவனுடன் தன் பிசினஸ் சம்பந்தமாகப் பேச ஆரம்பித்தான். “பாஸ் நீங்க நாளைக்கு பாரிஸுக்கு கிளம்பி ஆகணும்.

நம்ம நியூ ப்ராஜெக்ட் சம்பந்தமா கான்பிரன்ஸ்க்கு கண்டிப்பா போய் தான் ஆகணும்..” என்று நந்தா சொல்லவும் மித்ரனோ யோசனையோடு அவனை பார்த்தான்.

“சரி ஓகே எப்போ கிளம்பனும்‌..”

“பாஸ் மார்னிங் அஞ்சு மணிக்கு நீங்க கிளம்பினும். நான் எல்லாமே ரெடி பண்ணிட்டேன்..”

“சரி ஓகே நான் திரும்ப வர்ற வரைக்கும் அவ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது.. ஒரு நாளைக்கு ரெண்டு தடவை மட்டும் சாப்பாடு கொடுக்கச் சொல்லு. யாரும் அவகிட்ட பேசக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தது அப்படின்னா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு நல்லாவே தெரியும். சோ கேர் ஃபுல்லா அவளை பாத்துக்க வேண்டியது உன்னோடப் பொறுப்பு..” என்றவன் தன் அறைக்கு சென்று பெட்டில் படுத்து விட்டத்தை பார்த்தவாறு யோசிக்கத் தொடங்கினான்.

அவனுக்கோ தூக்கம் தான் வந்தப் பாடு இல்லை.

கண்களும் ரத்த சிவப்பாக மாறி இருந்தது.

ஆனால் அவனுக்குள் இருக்கும் வெறி மட்டும் அப்படியே இருந்தது.

உன்ன சம்மா விடமாட்டேன் வெண்மதி. அணுவனுவா சித்ரவதை பண்ணுவேன்.. இது தானே ஆரம்பம் .. இன்னும் இருக்குடி உனக்கு..” என்று நினைத்தவாறே உறங்கிப் போனான்.

இங்கே வெண்மதி இருந்த அறையில் வேலைக்காரப் பெண் ஒருவர் கையில் சாப்பாட்டுத் தட்டுடன் உள்ளே வந்தாள்.

அந்த வேலைக்கார பெண்ணுக்கோ அவளிடம் எதுவும் பேசுவதற்கு அனுமதி கிடையாது.

சாப்பாட்டு தட்டை அவர்கள் அருகே வைத்துவிட்டு சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் வெண்மதிக்கும் உடலின் அழுப்பு காரணமாகவும் அவன் தந்த காயங்களின் வலி காரணமாகவும் சோர்ந்து போனவளாய் மயக்கம் வரும் தருவாயில் இருக்க அந்த உணவு இப்போது அவளுக்கு தேவையான ஒன்றாக இருந்தது.

அந்த சாப்பாடை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

லியாவும் அவளுடன் இணைந்து சாப்பிட்டது.

பாவம் அதுவும் எவ்வளவு நேரம் தான் தன் குட்டி வயிற்றை பசியில் வைத்திருக்கும்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்த அறையிலியே இருவரும் உறங்கிப் போனார்கள்.

அதிகாலையில் மித்ரனோ எழுந்து குளித்துவிட்டு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமாகி வெளியே வந்தவன் மாடிப்படிகளில் இறங்கி வந்து ஹாலுக்கு வந்தவன், வெண்மதி இருந்த அறையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான்.

பின்பு அந்த அறை நோக்கி வேக எட்டுக்களுடன் நடந்து சென்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

அவன் உள்ளே வந்தது கூட தெரியாமல் கட்டிலில் வெண்மதியும் லியாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அதை பார்த்ததும் அவனுக்கோ கோபம் கனன்று கொண்டு வந்தது.

உடனே அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவன் கட்டிலுக்கு அருகே உள்ள டேபிளில் தண்ணீர் போத்தல் இருக்க அதை கையில் எடுத்தவன் மூடியை திறந்து அதில் இருந்த மொத்த தண்ணீரையும் அவர்கள் மீது சலப் என்று கொட்டினான். தங்கள் மீது தண்ணீர் விழுந்ததும் பதறி அடித்துக் கொண்டு வெண்மதி எழுந்திருக்க லியாவோ,

“அய்யோ சுனாமி சுனாமி மதி ஓடு வா..” என்று கத்தி கூச்சல் இட மித்திரனோ லியா கத்துவதில் எரிச்சல் தாங்காமல்,

“ஷட்டப்..” என்று உறும அவ்வளவு தான் அந்த ஒரு சொல்லில் லியாவோ தன் இறகுகளைக் கொண்டு வாயை மூடி மதியின் அருகில் அமர்ந்துக் கொண்டது. வெண்மதியோ அவனைப் பார்த்து தட்டு தடுமாறி எழுந்து நிற்க அவனோ அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க நடுங்கிப் போனாள் பெண்ணவள்.

ஆனால் அவனோ அதைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் அவளை நோக்கி வந்தவன் அவள் கழுத்தில் கை வைத்து நெரித்து,

“நான் ஒரு வாரம் இங்க இருக்க மாட்டேன். என் ரூம க்ளீன் பண்றது என் துணிகளை துவைக்கிறது எல்லாமே நீ தான் பண்ணனும்..” இதைக்கேட்ட லியாவோ மனதிற்க்குள் ‘அவ எண்ண உன் பொண்டாட்டியாடா..?’ என்று கவுண்டர் கொடுத்தது.

வெளியே அவன் முன்னால் லியாவுக்கு பேச வருமா என்பதே சந்தேகம் தான்.

“அத விட்டுட்டு இந்த வீட்ட விட்டு எங்கேயாவது தப்பிச்சு போகணும்னு நினைச்சே உன் கூட சேர்த்து இதோ உன் கூட ஒட்டிப் பிறந்த மாதிரியே திரியுதே இதையும் உயிரோட கொளுத்திடுவேன்..”

‘டேய் நான் என்னடா பண்ணேன் என்னையும் சேர்த்து கொளுத்துவேன்னு சொல்ற டோமிரித் தலையா உனக்கு இருக்குடா ஒரு நாள்..’ என்று லியா மனதுக்குள் திட்டிக் கொண்டது. என்று எச்சரித்தவன் லியாவை ஒரு பார்வைப் பார்க்க அதுவோ அவனின் பார்வைக்கு அர்த்தம் உணர்ந்து உடனே அந்த அறையில் இருந்து பறந்து சென்றது.

லியா அங்கிருந்து சென்றதும் மீண்டும் வெண்மதியை நோக்கியவன் அவளின் முகத்தின் அருகே நெருங்க அவளுக்கோ உடல் சில்லிட்டுப் போனது.

அவனுடைய கண்களை நேருக்கு நேராகப் பார்க்க வைத்தவன் அவள் எதிர்பாராத நேரம் வன்மையாக அவள் இதழ்களைக் கவ்விக்கொண்டான்.

அவன் கைகளோ அவள் இடையை உடும்புப் போல வலைத்துப் பிடித்தான். அந்தப் பிடி அவள் இடுப்பு எலும்புகள் உடையம் அளவுக்கு இருந்தது.

வெகு நேரமாக ஆழ்ந்து முத்தமிட்டவன் அவள் தோய்ந்து சரியவும் அவளை பொத்தென்று கிழே விட்டவன் அவளை திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அவளோ தன்னுடைய இழி நிலை கண்டு வருந்த மட்டுமே முடிந்தது. அவன் அந்த அறையை விட்டு வெளியேறியதும் லியா மீண்டும் மதி அருகில் வந்தது.

“லியா நீ இங்கேயே இரு நான் குளிச்சிட்டு வந்துடறேன்..” என்று அந்த அறையில் இருந்தக் குளியல் அறையை நோக்கி மெல்ல நடந்து சென்றால் வெண்மதி.

உள்ளே வந்தவள் தான் அணிந்திருந்தப் போர்வையை விலக்கிவிட்டு அங்கே இருந்த கண்ணாடியில் தன் மேனியை பார்த்தவளுக்கோ அவன் தந்த காயங்களின் வடுவைப் பார்க்க அவளோ மேலும் கலங்கிப் போனாள்.

ஒரு மனிதனால் இவ்வளவு கொடூரமாக நடந்துக் கொள்ள முடியுமா என்று அக்கணம் தோன்றியது அவளுக்கு.

அங்கிருந்த சவரைத் திறந்து விட்டவள் அதனடியில் தலை குனிந்து நின்றவாறே நடந்ததை நினைத்து பார்த்து கண்ணீர் விட்டாலே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தால் விடை தான் தெரியவில்லை அவளுக்கு.

தான் எங்கே சென்றாலும் இந்த ராட்சசன் தன்னை கவர்ந்துக் கொள்வான் என்று யோசித்தவளுக்கு வழிதான் கிடைக்கவில்லை.

அவள் மேனியில் தண்ணீர் படப்பட அவள் உடலில் உள்ள காயங்களோ எரியத் தொடங்கின.

தன்னுடைய வலியைப் பல்லை கடித்துக் கொண்டு பொருத்தவள் குளித்துவிட்டு பாத்ரோப் எடுத்து அணிந்து கொண்டு குளியல் அறையை விட்டு வெளியே வந்தாள். தான் அணிந்து கொள்ள வேறு ஏதும் ஆடை இருக்குமா என்று பார்த்தவளுக்கோ நேற்று இரவு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்ட அதே பெண்மணி கையில் அவளுக்கு தேவையான ஆடையோடு வந்தார். பின்பு அந்த ஆடையை கட்டிலின் மேல் வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

அவளோ அந்த ஆடையைப் பார்க்க அது ஒரு சுடிதார் என்பதைப் பார்த்தவள் பின் திருப்தியாக அதை அணிந்து கொண்டு அந்த அறையை விட்டு மெல்ல வெளியே வந்தாள். வெளியே வந்து பார்த்தவளுக்கோ ஆச்சரியம்.

அந்த வீடு அவ்வளவு பெரிய வீடாக இருந்தது.

அதை வீடு என்று சொல்வதை விட பெரிய அரண்மனை என்று கூட சொல்லலாம்.

நின்ற இடத்தில் இருந்து அந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவளக்கோ தலை சுற்றாதக் குறையாக இருந்தது.

லியாவுமே அப்போதுதான் அந்த வீட்டை சுற்றிமற்றி பார்த்தது. “யம்மாடி எவ்வளவு பெரிய வீடு.. இந்த மாதிரி வீட்டை நான் படத்துல கூட பார்த்தது கிடையாது.. இவ்வளவு பெரிய வீட்டில நம்ம இருக்கோமா..?” என்று நேரம் காலம் தெரியாமல் அது அந்த வீட்டை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த வெண்மதியோ லியாவின் தலையில் ஒரு கொட்டுவைத்து

“நாம என்ன நிலைமையில இருக்கோம்.. நீ என்னடான்னா இந்த வீட்டை ரசிச்சிட்டு இருக்க.. அந்த ராட்சசன் ஒன்னும் நம்மளை இந்த வீட்டுக்கு விருந்தாளிய கூட்டிட்டு வரல..? கடத்திட்டு வந்திருக்கான் உனக்கு ஏதாவது புரியுதா இல்லையா..?” என்று அதனிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “வதைக்காதே என் கள்வனே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!