கள்வன்-05
லியாவும் வெண்மதியும் தங்களுடைய அறையை விட்டு வெளியே வந்தவர்கள்
அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு சுற்றி சுற்றிப் பார்த்தார்கள். அங்கு அவர்களைத் தவிர சமையல்காரப் பெண்மணி மட்டும் இருந்தார் வேறு யாரும் அங்கு இல்லை.
இந்த நேரத்தில் லியாவின் குட்டி மூளையோ இங்கிருந்து
தப்பிப்பதற்கானப் பிளானை போட ஆரம்பித்தது.
மதிக்கு மட்டும் கேட்கும் ஹஸ்கி குரலில் “மதி என் கூட வா.. நா ஒரு ப்ளான் வச்சிருக்கன்.. இங்கிருந்து
தப்பிக்கிறதுக்கு.. வா தாம தனியா போய் பேசலாம்..” என்று அங்கிருந்து மதியை தனியே அழைத்து திரும்பவும் வெண்மதியை அடைத்து வைத்திருந்த அறைக்குள் வந்தது.
“இந்த வீட்ல அந்த ஒரே ஒரு சமையல்கார அம்மாவை தவிர யாரும் இல்லை.. ஷோ ஈசியா தப்பிச்சுப் போயிடலாம்.. என்ன சொல்ற மதி..?” என்றது லியா. உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா லியா..? அவன் சொன்னதைக் கேட்டதானே..? அதுக்கப்புறம் எப்படி நீ இங்கிருந்து தப்பிச்சு போறதப் பத்தி பேசுற..?” “ஐயோ.. என்ன மதி நீ அவனப்
பாத்து எதுக்கு இப்படி பயப்படுற..? அவன் எல்லாம் ஒரு ஆளு..” என்று லியா சொல்லிக்
கொண்டிருக்க, மதிக்குத் தானே தெரியும் அவன் மனிதன் இல்லை தன்னை வேட்டையாடும் ராட்சசன் என்று மனதில் நினைத்துக் கொண்டவள் லியாவை முறைத்துப் பார்த்து “சரி லியா அவன் எல்லாம்
ஒரு ஆளுன்னு சொல்ற நீங்க.. ஏன் மேடம் அவன் வந்தப்போ.. ஏன் என் முதுகுப் பின்னாடி ஒழிஞ்சிங்க..? தைரியமா நின்னு பேச வேண்டியதுதானே..?” என்று
கேட்டாள்.
அதற்கு லியாவோ நாக்கு தண்டியடிக்க பேசவே தெரியாது என்பது போல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்த மதிக்கு அவள் இருக்கும் சூழ்நிலையை மறந்து கலகல வென்று சிரிக்கத்
தொடங்கினாள்.
“இப்ப எதுக்கு நீ சிரிக்கிற..?”
“பின்ன உன் மூஞ்சியப் பாரு பேய் அறஞ்ச மாதிரி இருக்கு.. ஏதோ பெரிய பெரிய வசனம் எல்லாம் பேசின..? இப்போ ஒரு கேள்வி கேட்டதும் ஊமக்கொட்டான் மாதிரி முழுச்சா சிரிக்காமல் என்ன
பண்றது..” என்றாள் வெண்மதி.
“ஹலோ மதி மேடம் அந்த ராட்சசன் கடத்தி வச்சு இருக்கிறது என்ன இல்ல..? உங்களத் தான் அந்த நெனப்பு கொஞ்சமாவது
உங்களுக்கு இருக்கா..?” என்று லியா கேட்கவும் மதிக்கு இவ்வளவு நேரம் லியாவோடு பேசும் போது தன்னை மறந்து சிரித்து பேசியவளுக்கு அப்போதுதான் தான்
இருக்கும் சூழ்நிலை புரிந்தது. உடனே அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க முகம் கூம்பியத் தாமரைப் போல் ஆனது.
“இப்ப என்ன பண்றது லியா..? ஏதாவது ஐடியா சொல்லு.. எனக்கு
அவனைப் பார்த்தாலே பயமா இருக்கு.. கை கால் எல்லாம் உதறுது.. அதுலயும்
அவனுடைய கண்ணைப் பார்க்கணுமே அப்படி ஒரு நெருப்பு.. பார்வையாலேயே சுட்டு
எரிச்சிடுவான் அப்படி இருக்கு..” என்று அவனைப் பற்றி சொல்லிக்
கொண்டிருக்கையிலேயே அவள் உடல் லேசாக நடுக்க முற்றது.
“சரி இன்னைக்கு
நைட்டு இந்த வீட்ல இருந்து எப்படி தப்பிச்சு போகலாம் அப்படின்னு
பார்க்கிறதுக்கு நான் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு பார்க்கிறேன்.. அதுக்கு
அப்புறம் நம்ம ரெண்டு பேரும் இங்கிருந்து தப்பிச்சுப் போய்டலாம் ஓகே வா..” என்றது லியா.
“சரி அப்போ இன்னைக்கு நைட்டு நீ முதல்ல இங்கிருந்து வெளியே
போய் நம்மளுக்கு ஏதாவது வழி கிடைக்குமான்னு பாரு.. அதுக்கு அப்புறம் நாம இங்கிருந்து தப்பிச்சிடலாம்..” என்றாள் மதி. இருவரும் சேர்ந்து வெளியே
வந்தவர்கள் உணவு உண்பதற்காக கிச்சனுக்கு சென்று அங்கு உள்ள
பெண்மணியிடம் சாப்பாடு கேட்க ஆரம்பித்தார்கள்.
அந்தப் பெண்மணியோ அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்லமால் உணவை ஒரு தட்டில் வைத்து மதியின் கையில் கொடுக்க, அவளும் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருவரும் சாப்பிட்டவர்கள், சாப்பிட்டு முடித்து கிளம்ப அந்த சமயக்கார அம்மாவோ
கையில் ஒரு சீட்டை கொண்டு வந்து மதியின் கையில் கொடுக்க அவளோ “என்ன இது..?” என்று கேட்க அவரோ அந்த சீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு மதியையும் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் திரும்பவும் சமையல் கட்டிற்குள் நுழைந்து கொண்டார்.
தன் கையில் இருந்த சிறிய பேப்பரை திருப்பித் திருப்பிப் பார்த்தவள் அது என்னவாக
இருக்கும் என்று யோசித்தவாறே பிரித்து படிக்கலானாள்.
அதில் குறிப்பிட்டு இருந்தது என்ன என்றால் மித்திரனின் அறை எங்கு உள்ளது என்றும் அவள் என்ன என்ன செய்ய வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தது.
அவள் அந்த சீட்டில் உள்ளதை படிப்பதைப் பார்த்த லியாவோ அவளிடம் என்ன என்று கேட்க. “இதுல அந்த ராட்சசனோட ரூம் எங்க
இருக்குன்னு எழுதிருக்கு.. அப்பறம் அவன் ரூம க்ளீன் பண்ணி அவனோட துணிகளையும் கையாலயே துவைச்சு அயன் பண்ணி வைக்கனுமாம்..” என்று கூறினாள் மதி.
அதற்கு லியாவோ “ஏன் இதை
அந்த அம்மா வாயில சொன்னா முத்து உதுந்துடுமா..” என்று அந்த
சமையல்காரப் பெண்மணியை முறைத்துக் கொண்டே இவளிடம் கிசுகிசுத்தது.
“தெரியல வா போய் பார்ப்போம்..” என்று கூறியவள் அந்த சீட்டில் குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்றாள்.
மித்ரனின் அறையின் வாயில் முன்பு நின்றவள் அந்த அறையின்
கதவை பார்க்க அதுவோ மிகவும் பெரியதாக இருந்தது.
பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு அந்த அறையை திறந்து கொண்டு இருவரும் உள்ளே சென்றார்கள். உள்ளே சென்று அந்த அறையை சுற்றி பார்க்க அந்த ஒரு அறையே மாளிகை போல அவ்வளவு பெரியதாக இருந்தது.
அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அந்த அறையில் இருந்த பெட்டிற்க்கு
எதிர் திசையில் மித்ரனின் ஆள் உயர போட்டோ ஒன்று மாட்டி இருந்தது.
இருவரும் அந்த போட்டோவை பார்த்ததும் திடுக்கிட்டு ஒரு அடி பின்னால் சென்றார்கள்.
அவன் போட்டோவை பார்த்ததும் அவன் தான் வந்து விட்டானோ
என்று அஞ்சும் அளவிற்கு அவன் மேல் அவர்களுக்கு பயம் இருந்தது. பின்பு ஒரு நிமிடத்தில் தங்களை சுதாரித்துக் கொண்டவர்கள் அந்த போட்டோவை ஆராயத் தொடங்க ஆரம்பித்தார்கள்.
அழகான கலையான முகம்.
அதில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் மீசையும் கொண்டு ரொம்பவும் கலரும் இல்லாமல் கருப்பும் இல்லாமல் மாநிறமாக இருப்பவனின் அழகோ பேரழகாக இருந்தது.
கருப்பு நிறக் கோட் சூட்டில் ஆண்மகனுக்கே உரிய அழகுடன்
இருந்தான் மித்ரன்.
மதியோ தன்னையும் மறந்து ஒரு கணம் அவனின்
தோரனையைப் பார்த்து ரசிக்கத்தான் செய்தாள்.
அதன் பின்பு அவனுடைய
கண்களைப் பார்க்க அவளுக்கோ நேற்று அவன் தன்னை கடத்தி வந்ததும் இரவு
தன்னிடம் அத்துமீறி தன்னுடைய பெண்மையை சிதைத்ததையும்
எண்ணியவளுக்கோ அந்த ரசனைப் பார்வை பயமாக மாறியது.
அதன் பிறகு அந்த போட்டோவை பார்க்காமல் அவன் சொன்ன வேலைகளை கர்ம சிரத்தையாக
செய்து கொண்டிருந்தாள்.
லியாவோ அந்த அறையை ஒரு சுற்று சுற்றி விட்டு அந்த
பெட்டில் படுத்து குதித்து உருண்டு விளையாடியது சிறிது நேரத்தில் அந்த பஞ்சு மெத்தையின் இதயத்தில் தூங்கியும் போனது.
மதியோ அவனுடைய அறையை சுத்தம் செய்துவிட்டு அவனுடைய ஆடைகளை துவைத்து விட்டு
வந்தவளுக்கு பெண்டு கலண்டது. தான் இங்கு இல்லாத வேளையிலும் அவள் நிம்மதியாக இருக்க கூடாது என்று அனைத்தையும் செய்தான்.
***
உலகின் அழகிய நகரமான பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸுன்
ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் மித்ரன்.
அவனை வரவேற்பதற்காகவே
அவனுடைய நண்பன் எய்டன் ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்தான்.
மித்ரன் ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் எய்டன் அவனை கட்டி அணைத்து வெல்கம் செய்து
“ஹாய் மித்ரா ஹௌவ் ஆர் யூ..?”
“யா ஐ அம் ஓகே.. நீ எப்படி இருக்க எய்டன்..?” என்று தங்களுக்குள் சிறு நல விசாரணையை முடித்துக் கொண்டு அவனுக்காக புக் செய்து இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல காரின் அருகே அழைத்து வந்தான்.
அந்த காரோ பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
பிஎம்டபிள்யூ ஐ8 அவனைப்
போலவே அந்த காரும் பார்ப்பதற்கு அவ்வளவு ஸ்டைலிஷ்ஷாக தெரிந்தது.
மித்ரன் அந்த காரில் ஏறி அமர்ந்ததும் அந்த நான்கு சக்கர வாகனமோ சீறிப்பாய்ந்தது.
நேராக அவன் வழக்கமாக பாரீஸ் செல்லும் போது அவன் தங்கும்
ஹோட்டலுக்கு முன்பு நின்றது. காரில் இருந்து இறங்கியவன் தன்
வேக எட்டுக்களுடன் உள்ளே சென்று தனக்கான ரூம் கீயை பெற்றுக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
இன்று மாலை நடக்கும் மீட்டிங்கிற்க்கு தேவைப்படும் தகவலை சேகரிப்பதற்காக தன்னுடைய லேப்டாப்பை ஓபன்
செய்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
Nice
♥️♥️♥️