வதைக்காதே என் கள்வனே

4.7
(15)

கள்வன்-06

தன்னுடைய புது ப்ராஜெக்ட் கான்பிரன்ஸ் சம்பந்தமாகப் பாரிஸ் வந்தவன் அவன் நினைத்தது போலவே அந்த கான்பிரன்ஸ் நல்லபடியாகவே நடந்தேறியது. அவனுக்கு அவனுடைய பிஸ்னஸை பாரிஸில் ஒரு கிளை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் இந்த கான்பிரன்ஸுக்கு வந்திருந்தான். அதுவும் நல்லபடியாகவே நடந்தேற கூடிய சீக்கிரம் அவன் கம்பெனியின் ஒரு கிளை இங்கு தொடங்கி நண்பன் எய்டன் தலைமையில் ஆரம்பிப்பதாக முடிவு செய்துவிட்டு இரவு அவனுடைய பிசினஸ் சம்பந்தமான கான்பிரன்ஸ் நல்லபடியாக முடிந்ததனால் நண்பனுடன் சின்னப் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருந்ததால் நாளை இந்தியா செல்வதாக முடிவு செய்தான்.

அதேபோல அன்று இரவு நண்பன் எய்டனுடன் “ஆரன் லக்சரீ பொட்டிக் ஹோட்டலில்” தங்களுடைய வெற்றியைக் கொண்டாடினார்கள். “ஓகே மச்சி நாளைக்கு நான் இந்தியா கிளம்புறேன்.. மத்த வேலை எல்லாம் நீயே பாத்துக்கோ.. உனக்கு ஏதும் தேவைப்பட்டுச்சுன்னா எனக்கு போன் பண்ணு நான் பாத்துக்குறேன்.. பட் மெட்டிரீயல் எல்லாமே நல்ல குவாலிட்டியா இருக்கணும்.. சின்ன குறை கூட வந்துட கூடாது..” என்றான் மித்ரன். “ஹேய் கமான் மேன்.. நான் இருக்கேன் இல்ல நான் பாத்துக்குறேன்.. எந்த பிரச்சனையும் இல்லாம நீ எதிர்பார்த்த மாதிரி கம்பெனிய உருவாக்கிடலாம்.. யு டோன்ட் வரி..” என்றான் எய்டன்.

மித்ரன் தன்னுடைய கல்லூரி படிப்பை இங்கு தான் முடித்தான்.

அப்போது அறிமுகம் ஆனவன் தான் எய்டன். இருவருமே ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.

இவ்வாறு இருவரும் பேசிவிட்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தார்கள்.

இங்கு மதியோ அவன் குறிப்பிட்ட வேலைகளை முடித்து விட்டு வர.. லியாவோ இன்னும் நல்ல தூக்கத்தில் இருந்தது.

அதை பார்த்ததும் மதிக்கு வந்ததே கோபம்.

கூடவே ஒரு குறும்புத் தனமும் தோன்றியது.

மெல்ல அந்த பெட்டில் ஏறி லியாவின் அருகில் சென்று அதன் காது பக்கத்தில் அவள் உதடுகளை வைத்து “லியாஆஆஆஆஆ” என்று அந்த அறை அதிரும் அளவு கத்தினாள்.

பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் லியா அதோட ஆள் கூட டூயட் ஆடிக் கொண்டு இருந்தது.

இவள் கத்திய கத்தலில் பதறியடித்து கொண்டு எழ மதியோ விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.

லியா எழுந்து அமர்ந்து மதியை முறைத்தபடியே இருந்தது.

சிறிது நேரத்தில் சிரித்து முடித்தவள் லியாவை பார்த்து

“என்ன லியா உன் ஆள் கூட டூயட்டா..?”என்று நக்கலாகக் கேட்டாள்.

லியாவோ ‘இவள் தன்னை பயமுறுத்தி எழுப்பியதும் இல்லாமல் தன்னைக் கிண்டல் வேறு செய்கிறாளே கிராதகி..’ என்று மனதில் நினைத்து கொண்டே “பண்றதெல்லாம் பண்ணிட்டு கேள்வி வேற கேட்குறியா..?” என்றது.

மதியோ “சாரி கோவிச்சுக்காத சும்மா விளையாட்டுக்கு என் செல்லம்ல..” என்று கொஞ்ச இருவரும் ஒருவழியாக சமாதானம் ஆனார்கள்.

இப்படியே அன்றையா நாள் அவர்களுக்கு கழிந்து இரவு நேரமும் வந்தது.

அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி லியா அந்த வீட்டில் இருந்து மதியை அழைத்துச் செல்ல வழி ஏதும் கிடைக்குமா என்று பார்க்க தயார் ஆனது.

“லியா பார்த்து கவணமா இரு..”

“அதெல்லாம் நா பார்த்துக்கிறேன் நீ பயப்படத..”

“லியா முடியலைன்னா வந்துடு சரியா.. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது.. எனக்கு நீ தான் முக்கியம்.. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை..”

“இங்க பாரு எனக்கு எதுவும் ஆகாது.. உன்ன அந்த ராட்சசன் கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்தியே தீருவேன் அப்படி இல்ல என் பேரு லியா இல்ல..” என்று சொல்லி விட்டு லியா புறப்பட்டது.

லியா மெதுவாக அறையில் இருந்து பம்மிக் கொண்டே வெளியே வந்து சமையல் கட்டிற்குள் எட்டி பார்த்தது சமையல்கார அம்மா என்ன செய்கிறார் என்று.

அந்த சமையல்கார பெண்மணியோ தன் வேலைகளை முடித்துவிட்டு அவருடைய அறைக்குள் சென்று விட்டார்.

“அப்பாடி அந்த கிழவி இல்ல..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தது லியா.

அந்த வீட்டின் உள் புறத்தை பார்த்து பிரம்மித்ததை விட வீட்டீன் வெளிப்புற தோற்றத்தை கண்டு கண்கள் விரிய அதிர்ச்சியோடு பார்த்தது.

ஏனென்றால் அந்த வீட்டை சுற்றி சீனப் பெருஞ்சுவர் போல மிக உயரமாகவம் அகழமாகவும் இருந்து அதன் சுற்றுச் சுவர்.

அதைப் பார்த்து தான் லியா அதிர்ச்சியாக நின்றதே.

எப்படியாவது வழியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு உயர பறந்து வீட்டை சுற்றி பார்க்க..

அந்த ஒரு வீட்டைத் தவிர சுற்றி எந்த ஒரு வீடும் இல்லை.

ஏன் ஒரு சிறு கட்டிடம் கூட கிடையாது. இதை பார்க்கவும் லியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி.

தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று.

ஆம் அது ஒரு தீவு.

சுற்றி வர ஒரு ஆள் நடமாட்டம் கூட இருக்காது.

அந்த வீட்டை சுற்றி அனைத்திலும் கரண்ட் ஷாக் குடுத்து வைத்திருந்தான்.

அவன் ஒருவன் நினைத்தால் மாத்திரமே யாரும் உள்ளே வர முடியும் வெளியே செல்லவும் முடியும்.

மெயின் கேட்டில் ஒரு வாட்சுமேன் காவலுக்கு இருந்தார்.

அதை பார்த்த பார்த்த லியா ஒரு திட்டம் தீட்டியது. வாட்சுமேன் அசந்த நேரம் தான் மதியை இங்கிருந்து அழைத்து செல்ல முடியும் என முடிவெடுத்து அன்றைய இரவு முழுவதும் அந்த வாட்ச்மேனை இது வாட்ச் பண்ணியது.

எப்போது எல்லாம் அவர் விழிப்பாக இருப்பார், எப்போதும் எல்லாம் அவர் கண் அயர்வார் என்று கூர்ந்து பார்த்து கொண்டே இருந்தது.

சூர்யா பகவான் தன் பணியை வந்தும் கர்ம சிரத்தையாக தன் பணியை செய்து செய்து கொண்டிருந்தது.

அதன் பின்னர் ஒரு முடிவாக மதியை பார்க்க சென்றது.

மதியோ லியாவை பார்த்தும் எப்படியும் இங்கிருந்து தப்பித்து விடலாம் என்ற சந்தோஷத்தில்

“லியா என்னாச்சு எதுவது வழி கிடைச்சதா..?” என்று ஆர்வமாக கேட்டாள்.

லியாவும் தான் பார்த்த விடையங்களை ஒன்று விடாமல் கூறியது.

அதை கேட்டதும் அவளோ இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.

பின் தன் தலைவிதி இதுதான் என்று நினைத்தவள் கலங்கிய விழிகளோடு “பரவாயில்ல லியா விடு என் தலையெழுத்து எப்படி இருக்கோ அப்படியே இருக்கட்டும்..” என்றாள்.

பைத்தியம் மாதிரி பேசாத மதி.. இங்க பாரு வெளிய இருக்குற அந்த வாட்சுமேன் அவன நான் நைட்டு புல்லா வாட்ச் பண்ணேன் சோ அவன் கவனக் குறைவா இருக்கிற நேரத்தையும் நான் நோட் பண்ணேன் அந்த நேரத்தை பயண்படுத்தி தான் வெளிய போக போறோம்‌ சரியா.. இன்னைக்கு ராத்திரி நாம இங்க இருந்து எஸ்கேப் ஆகுறோம் அவ்வளவு தான்..” என்றது லியா.

மதியும் தான் இங்கிருந்து தப்பிக்க ஒரு சின்ன வழி கிடைத்ததை நினைத்து உள்ளம் மகிழ்ந்தவள் இன்றைய இரவுக்காக காத்திருந்தாள்.

அன்றைய நாளும் கழிய அவர்கள் காத்துக்கொண்டிருந்த இரவும் வந்தது. தக்க நேரத்திற்காக காத்திருந்தார்கள்.

“மதி நான் எல்லாமே செக் பண்ணிட்டேன்.

கரெக்டா நாம 12 மணிக்கு மேல கிளம்பனும்னா கண்டிப்பா தப்பிச்சிடலாம்.

அந்த சமையக்கார கிழவி தூங்குச்சுன்னா எழுந்திருக்கவே எழுந்திருக்காது.. சோ வெளிய அந்த ஒரு வாட்ச்மேன் இருக்காரு.. நான் மதியானமே பின்பக்கமாக இருக்கிற ஒரு ஜன்னல் கதவை திறந்து வச்சிட்டேன்.. அது வழியா நாம தப்பிச்சு பின்னாடி வழியா ஓடி அந்த வாட்ச்மேன் அசர்ற நேரம் நாம வெளிய போய்டாலாம்.. இங்கிருந்து வெளியே போனா தான் நம்மளால அடுத்து என்ன பண்ண முடியும்னு யோசிக்க முடியும்..” என்று மதியை அழைத்துக் கொண்டு லியா சத்தமே எழுப்பாமல் அதுவும் பறந்தால் இறகின் சத்தம் மற்றவருக்கு கேட்கும் என்று அவள் தோளில் நின்று கொண்டது.

அந்த ஜன்னலில் பக்கம் வந்தவர்கள் மெதுவாக ஜன்னலின் வெளிப்புறமாக மதி

சுற்றி முற்றி பார்த்தாள்.

எங்கும் இருட்டாக இருந்தது. இருட்டைக் கண்டு பயப்படுபவளோ இன்று இங்கிருந்து தப்பிக்க வேண்டும் எனில் பயத்தை புறம் தள்ளிவிட்டு இங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள்.

பின்பு ஜன்னலில் இருந்து மெதுவாக கீழே இறங்கியவள் அந்த இருட்டில் மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

அங்கும் இங்கும் சுற்றி பார்த்து கொண்டே ஓடியவள் எது மீதோ பலமாக மோதி தொப்பென்று கீழே விழுந்தாள்.

கீழே விழுந்தவள் தான் எது மீது மோதினோம் என்று பார்க்க அது என்ன என்று பார்த்தவள் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “வதைக்காதே என் கள்வனே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!