கள்வன்-08
பாரிஸ்ஸில் தான் வந்த வேலையை சிறப்பாக முடித்து விட்டு தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தவன் மதியை அங்கே அடைத்து வைத்து விட்டு நந்தாவிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாலும் அந்த நேரத்தில் வீட்டில் சில இடங்களில் மைக்ரோ கேமரா செட் செய்து விட்டுத்தான் வந்திருந்தான்.
அதில் லியாவும், வெண்மதியும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டியது, லியா அவனை வண்டி வண்டியாக திட்டியது அனைத்தும் பதிவாகி இருந்தது.
தன்னுடைய லேப்டாப்பை ஓபன் செய்து அவற்றை ஆராய்ந்தவன் அவர்கள் திட்டத்தை பார்த்ததும் கொதித்துப் போனான்.
மறுநாள் இந்தியா செல்வதாக முடிவு செய்திருந்தவன் இவர்களின் திட்டத்தால் அப்பொழுதே தன்னுடைய ப்ரைவேட் ஜெட்டில் கிளம்பி விட்டான்.
வரும் போதே நந்தாவிற்கு அழைத்து தன்னை ஏர்போட்டில் பிக்கப் செய்து கொள்ளுமாறு கட்டளையிட்டான்.
அதன் பின்னர் விரைவாக வீட்டீற்கு வந்தவன் மேல் தான் மதி மோதி நின்றாள்.
பின்பு அவளை அவன் ஸ்டைலில் அவளை வைத்தே அவளை வன்மையாக புனர்ந்தது.
மறுநாள் காலை அழகாக விடிந்தது.
ஆனால் மதிக்கோ அது அழகான விடியல் இல்லை.
முதலில் கண்விழித்த மித்ரனோ தன் கைவளைவில் கிடந்தவளை பார்த்தான்.
அவளோ இரவெல்லாம் அவன் சொல்வதை செய்து அவற்றையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் அவளை விட்டு பிரிந்த பிறகு தூக்கமின்றி அழுதிருப்பாள் போல. கண்கள் வீங்கி கன்னம் சிவந்து இருந்தது.
அவளை கூர்ந்து பார்த்தவனின் இரும்பு இதயத்தில் இனம் புரியாத ஒரு வலி நொடியில் தாக்கியது.
பின்பு தன்னுடைய தலையை இடவலமாக ஆட்டி தன்னை சுதாரித்துக் கொண்டவன் தன் எண்ணத்தின் போக்கை மாற்றிக் கொண்டு முகம் சுளித்தவாறு ‘இவள் பண்ண வேலைக்கு இதெல்லாம் பத்தாது ச்சீ..’ என எண்ணியவன் சட்டென அவளைத் தன் கைவளைவில் இருந்து உதறி தள்ளிவிட்டு எழுந்து கொண்டான்.
அவன் தள்ளிய வேகத்தில் கட்டிலை விட்டு கீழே விழுந்தவள் பதறி அடித்துக் கொண்டு எழுந்து அவனை பயத்துடனே பாரக்க,
அவனின் பார்வை தன்னிடமே நிலை குத்தி நிற்பதை பார்த்தவள் தன்னை குனிந்து பார்த்தாள்.
அப்போதுதான் தன் உடலில் கைக்குட்டை அளவு கூட உடை இல்லாமல் இருப்பதைக் கண்டு சட்டென கட்டிலிலுருந்த போர்வையை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டாள்.
அவனோ அவளைப் பார்த்து ஒரு கேலி பார்வை சிந்தி “நைஸ் ஸ்ட்ரெக்ஷர் உன்னோடது செமையா மூட் ஏறுது.. உன்ன வச்சி ப்ஸ்னஸ் பண்ணா மார்கெட்ல உனக்கு ரேட் பிச்சிக்கும்..” என்று அவளை முடிந்த அளவுக்கு உடலாலும் மனதாலும் வதைத்தவன் மீண்டும் ஒரு முறை அவளை பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவன் அந்த அறையை விட்டு வெளியேறியதும் மதியோ அப்படியே கீழே அமர்ந்தவள் தலையை பின்னோக்கி சாய்த்து விட்டத்தை வெறித்தவாறு மித்ரனை சந்தித்ததில் இருந்து அவள் வாழ்க்கை திசை மாறிப் போனதை ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தவளுக்கோ அவளுடைய வாழ்க்கையே சூன்யம் ஆனதைப் போல இருந்தது.
“கடவுளே நான் யாருக்கும் எந்தப் பாவமும் பண்ணலையே.. ஆனா இவரோட வாழ்க்கையில நான் என்னமோ மன்னிக்கவே முடியாத அளவுக்கு பாவம் பண்ண மாதிரி என் வாழ்க்கையை சிதைச்சி என்ன இப்படி சித்ரவதை பண்ராறே..” என்று தனக்குள் கூறி மருகியவள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள்.
அந்த அறையை விட்டு வெளியேறிய மித்ரனோ நேராக தன் அறைக்கு வந்தவன் குளியலறைக்குள் நுழைந்து குளித்து முடித்து தயாராகி வந்தவன் நந்தாவுக்கு அழைப்பு எடுத்து லியாவை கொண்டு வருமாறு சொன்னான்.
நந்தாவோ லியாவை தன்னுடனே வைத்திருந்தவன் மித்ரனின் தொலைபேசி அழைப்பு வர நடுங்கிய வாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “பாஸ்.. ” என்றான் அவனுக்கே கேட்காத குரலில்.
“ஹலோ நந்தா லைன்ல இருக்கியா..?”
” ஹான் சொல்லுங்க பாஸ்..”
“அந்த கிளிய கொண்டு வா உடனே ரைட் நவ்..” என்றவன் போனை துண்டித்தான்.
அவன் லியாவை கொண்டு வருமாறு சொன்னதும் மனதில் பயத்துடனே லியாவை பார்த்தான் நந்தா.
லியாவோ சோகமே உருவாக இருந்தது. அதுக்கு மதியை முதலில் காண வேண்டும் அதன் பிறகே அது தன் சுயம் வரும் நிலையில் இருக்க நந்தாவிடம் “என்ன விடு நான் மதிக்கிட்ட போகனும்..” என்று பாவம்போல கூறியது.
அதை கேட்டதும் நந்தாவுக்கு லியாவை பார்க்க பாவமாகவும் இருந்தது அதே சமயம் கோவமும் வந்தது.
‘இந்த நிலைமைக்கு மூலக்காரனமே நீதானே உருவத்துக்கும் பேசுற பேச்சுக்கும் கொஞ்சமாவது சம்மந்தம் இருக்கா..’ என நினைத்தவன் ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு “இப்ப பாஸ் உன்னைய தான் கொண்டு வர சொல்றாரு தயவு செஞ்சு அவர் முன்னாடி உன் ஓட்ட வாய மட்டும் திறக்காத.. அவர் என்ன மூட்ல வேற இருக்காருன்னு தெரியல..” என்றான் நந்தா.
“அவன் எதுக்கு என்னைய கொண்டு வர சொல்றான்..?”
நந்தா லியாவை பார்த்து முறைக்கவும் “சரி சரி முறைக்காத சொல்றாரு போதுமா.. சும்மாவே உன் மூஞ்சிய பார்க்க முடியாது இதுல முறைக்கிற மூஞ்சிய பார்க்க சகிக்கல..”
“இல்ல எனக்குப் புரியல நீ என்ன நிலைமையில இருக்கன்னு தெரிஞ்சும் என்ன கலாய்க்குற பாரு உன்மையாவே உனக்கு பயமா இல்லையா..” என்று கேட்க
அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு “கிட்ட வா சொல்றேன்..”
அவனும் அந்த அரை ஜான் கூட இல்லாத உருவத்தின் பேச்சை கேட்டு ஆறடி ஆண்மகன் குனிந்து “என்ன..?” என்று கேட்க.
“அதெல்லாம் ராணுவ ரகசியம் உன்கிட்ட சொன்னா நீ ஹீரோ ஆகிடுவியே சொல்ல முடியாது போடா..” என்றது லியா.
நந்தாவோ வந்த கோபத்தில் “உன்ன பாஸ் கொல்றதுக்கு முன்னாடி நானே உன்ன கொல்றேன் பாரு..” என்று லியா இருந்த கூண்டை கையில் தூக்கியவன் அதனோடு உரையாடியவாறு மித்ரன் இருக்கும் ஹால் நோக்கி வந்தான்.
மித்ரன் நந்தா வந்ததும் லியாவை பார்த்து “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவ அவ்வளவு சொல்லியும் என் மேல பயமே இல்லாம இங்க இருந்து எஸ்கேப்பாக ப்ளான் பண்ணி அவளை கூட்டிட்டு போவ..?” என்று அதை பார்த்து அவன் கேட்க.
லியாவோ இவ்வளவு நேரம் நந்தாவுடன் கேலியோடு வாய் அடித்துக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் அப்படியே நடுங்கியவாறு அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் குனிந்து நின்றது.
நந்தாவோ “பாஸ் ப்ளீஸ் விட்ருங்க பாஸ் அது ஏதோ தெரியாம பண்ணிட்டு..” என்று லியாவுக்கு சப்போர்ட் செய்தான்.
அவன் சொன்னதை கேட்டதும் மித்திரனுக்கு லியா மேல் உள்ள கோபம் நந்தாவின் மேல் பாய்ந்தது. “என்ன நந்தா புதுசா இருக்கு..? இந்த கிளிக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க.. நீ என்ன பேசுற யார்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா..?” என்றான்.
உடனே நந்தாவும் “இல்ல பாஸ் மன்னிச்சிடுங்க தெரியாம பேசிட்டேன். நேத்து அத கொல்ல சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதுவும் இல்லாம அது ஒரு சின்ன பறவை அதான் சாரி பாஸ்..” என்றான் நந்தா.
‘அடப்பாவி அவன் மறந்தாலும் இவன் விடமாட்டான் போலயே..’ என்று லியா நந்தாவை மனதுக்குள் வறுத்துக் கொண்டிருந்தது.
மித்ரனோ நந்தாவை ஒரு முறை முறைத்து விட்டு லியாவிடம் திரும்பி “நா இப்ப எல்லாக் கறியும் சாப்டு இருக்கேன் கிளிக்கறி மட்டும் இதுவரைக்கும் சாப்பிட்டதில்ல நீ ஒழுங்கா இருக்கலனு வை உன்ன எண்ணைல பொறிச்சி டேஸ்டு பார்த்துருவேன் பார்த்துக்க..” என்றவன் நந்தாவிடம் “இது இந்தக் கூண்ட விட்டு வெளியே வரக்கூடாது அவக்கிட்ட போகவும் கூடாது அப்படி போச்சு உன் வேலைக்கு உத்தரவாதம் இல்லை புரிஞ்சதா வா போகலாம்..” என்று நந்தாவுடன் தன் அலுவலகம் செல்ல வெளியே சென்றான்.
அவன் தலை மறையும் வரை பம்மிக் கொண்டு இருந்த லியா அவன் சென்று விட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு அவனை வசைப்பாட ஆரம்பித்தது.
“டேய் வளர்ந்துகெட்டவனே நீ ரொம்ப ஓவரா போறடா.. என்ன.. இந்த லியாவை எண்ணையில பொறிச்சி டேஸ்டு பார்ப்பியா.. இருடா ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்ன கொத்தி கொத்தியே கொல்லப் போறேன் டா டப்பா தலையா..” என்று சொன்ன லியாவின் முன் இரு பாதங்கள் தென்பட்டது.
சட்டென தலையை மேல் நோக்கி நிமிர்ந்து பார்க்க எதிரே மித்ரனோ விழிகள் சிவக்க ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.
வெளியே சென்றவன் இன்று நடக்க இருக்கும் மீட்டிங் சம்பந்தப்பட்ட பைலை எடுப்பதற்காக மீண்டும் உள்ளே வந்தவன் லியா அவனை திட்டியதை முழுவதுமாக கேட்டவன் அதை வெட்டவா இல்லை குத்தவா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
“நந்தா நா திரும்ப கீழே வரும்போது இது இங்க இருக்க கூடாது..” என்றவன் தன் அறை நோக்கி சென்றான்.
அவன் அறைக்குப் போக வெண்மதி இருக்கும் அறையைத் தாண்டி தான் போக வேன்டும்.
போகும் போது மதி இருந்த அறையை திரும்பிப் பார்க்க அவளோ இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
அதை பார்த்தவனுக்கோ ஒரு நிமிடம் பூமி தன் சுழற்சியை நிறுத்தியது போல இருந்தது.
அடுத்த நிமிடமே “நந்தாஆஆஆ…” என்று கத்தியவன் உள்ளே நுழைந்தான்.