கள்வன்-09
“நந்தாஆஆஆ..” என்று கத்தியவன் உள்ளே சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்தவளை தன் கையில் ஏந்திக்கொண்டு வெளியே வந்தான்.
இங்கே கீழே “உன்கிட்ட என்ன சொன்னாலும் நீ அடங்கவே மாட்டல்ல..?” எனக் கேட்டுக் கொண்டிருந்தான் நந்தா.
“டேய் காப்பத்துடா அறியாப்புள்ள தெறியாமா பண்ணிட்டேன்..”
“இந்த வாய் மட்டும் இல்ல உன்ன காக்கா தூக்கிட்டு போய்டும்..” என்று கூறியவன் லியாவை கூண்டில் இருந்து வெளிய எடுத்து கையில் வைத்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம் தான் மித்ரன் நந்தாவை கூப்பிட்டது.
அவன் சத்தம் கேட்டதும் என்ன ஆனாது என்று பதறியவன் மேலே படிக்கட்டு நோக்கி ஏறும் முன்னே, வெண்மதியை கையில் ஏந்திக் கொண்டு வந்து கொண்டிருந்த மித்ரனை பார்த்தவன் பதற்றத்துடன் “பாஸ் என்னாச்சு..?” என்றான்.
“சீக்கிரம் கார எடு நந்தா..”
“ஓகே பாஸ்..” என்றவன் அங்கிருந்து வேகவேகமா காரை எடுத்துக் கொண்டு வந்து கிழே இறங்கியவன் காரின் பின் கதவை திறந்து கொண்டு நின்றான்.
லியாவோ மதியை அந்த நிலமையில் பார்த்ததும் கண்ணீருடன் மித்ரன் பிண்ணாடியே பறந்து வந்தது.
அவன் முன்னே வாயைத் திறந்தால் அவன் சுட்டாலும் சுட்டு விடுவான் என்று அமைதியாக வந்தது.
காரின் அருகே வந்தவன் மதியை உள்ளே படுக்க வைத்து தானும் ஏறிக் கொண்டவன், அவள் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டானே தவிர அவன் முகமோ என்ன நினைக்கிறான் என்று யாராலும் கனிக்க முடியாத அளவுக்கு இருந்தது.
அவன் பின்னோடே வந்த லியாவோ காரின் அருகே வந்ததும் நந்தாவின் தோளில் அமர்ந்து கொண்டது. அவனும் எதுவும் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றான்.
மதியின் கையில் இருந்து இரத்தம் நிற்காமல் வந்து கொண்டே இருக்க “இடியட் இடியட்..” என்று இரத்தம் அதிகமாக போனதில் மயக்கித்தின் வசம் சென்றவளை கூட திட்டிக்கொண்டே அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைகுட்டையை எடுத்தவன் இரத்தம் மேலும் வராதவாறு இறுக்க கட்டி விட்டான்.
மின்னல் வேகத்தில் வந்த கார் ஹாஸ்பிட்டல் வாசலில் வந்து நிற்க, அவர்கள் வருவதற்குள் நந்தா அவன் நண்பனான அந்த ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கும் டாக்டருக்கு கால் செய்து விடயத்தை மேலோட்டமாக கூறியிருந்தான்.
கார் நின்றதும் நந்தா இறங்கி வருவதற்துள் பொறுமை இல்லாதவன் காரின் கதவை திறந்து அவளை கையில் ஏந்தி அந்த ஸ்ட்ரெக்சரில் அவனே அவளை படுக்க வைத்தான்.
அவளைத் தொடக் கூட யாருக்கும் அனுமதி கொடுக்க வில்லை.
டாக்டர் என்பதால் மாத்திரம் அவள் உயிரை தற்போது அவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர்களை மட்டும் அவளை தொடுவதற்கு தற்போது அனுமதித்தான். (வேறு வழி இல்லை ஆத்தா)
அவளை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்ததும் வேகமாக ஐசியூ வார்டுக்கு கொண்டு சென்றனர்.
“சார் இதுக்குமேல நீங்க உள்ள வரக்கூடாது..” என்று தங்களோடே வந்தவன் ஐசியூ வார்டுக்குள் உள்ளே வருவது போல் இருக்க, அதை பார்த்த தாதி பெண் ஒருவர் அவனை வெளியே இருக்கும் படி கூறிவிட்டு கதவை அடைத்தார். வேறு வழி இல்லாமல் வெளியே நடை பயின்று கொண்டிருந்தான் மித்ரன்.
வெண்மதி அவன் அறையை விட்டு வெளியேறியதும் ஒரு திடமான முடிவு எடுத்தவள், லியாவிற்கு சாப்பிடுவதற்காக சமையலறையில் இருந்த பிரிஜில் ஒரு பழத்தை எடுத்தவள், பக்கத்தில் இருந்த ஒரு சிறிய கத்தியையும் எடுத்து வந்து அதற்கு வெட்டிக் கொடுத்தவள் கத்தியை அவள் அறையிலியே வைத்திருந்தாள்.
தற்போது அதை பார்த்தவளுக்கோ இனியும் தான் உயிருடன் இருக்க கூடாது ஒரு பெண் எதை இழக்க கூடாதோ அதையும் இழந்து அவனின் கீழ்த்தரமான பேச்சுக்களால் மேலும் உடைந்தவள் எங்கே அவன் சொன்னது போல தன்னை விலை மாதுவாக மாற்றிவிடுவானோ..? என அஞ்சி தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தவள் அந்த கத்தியை தன் கையில் எடுத்தாள்.
“சாரி லியா எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும் தான். இப்போ உன்ன தனியா விட்டு விட்டு போறேன். என்ன மன்னிச்சிடு.. அவனுக்கு நான் தான் தேவை நீ இல்ல.. அதனால நான் போன பிறகு உன்ன விட்டுடுவான். நீ வேற எங்கேயாவது போய் பிழைச்சுக்கோ.. நான் போறேன்..” என்று தனக்குள் கூறியவள் சற்றும் யோசிக்காது தன் வலது கரத்தில் வைத்திருந்த கத்தியால் இடது கரத்தில் மணிகட்டு பக்கத்தில் வெட்டி விட்டாள்.
தன் வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது என்று கண்களை மூட, அதிக இரத்தம் போக போக நிற்க முடியாது தறையில் சரிந்தவளை பார்த்துதான் மித்ரன் நந்தாவைக் கூப்பிட்டது.
ஐசியூ வாயிலில் நடை பயின்று கொண்டிருந்தவனின் பக்கத்தில் தந்தாவின் தோளில் அழுது கொண்டிருந்த லியாவை நந்தா தன் கையில் தூக்கியவன் பக்கத்தில் நிற்கும் மித்ரனுக்கு கேட்காத குரலில் “லியா அழுகாத அவளுக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாம இரு..” என்று சொல்லியவன் லியாவை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்.
லியாவிற்கு அப்போது அவன் அளித்த ஆறுதல் மனதை இதமாக்க அவன் நெஞ்சுக்குள் ஒட்டிக் கொள்ள அதை அப்படியே தன் மேல் சட்டையின் பாக்கிட்டுக்குள் போட்டுக் கொண்டான்.
சிறிநு நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் மித்ரனிடம் “சார் அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்னும் ஒரு மூனு மணி நேரத்தில கண்ணு முழிச்சிடுவாங்க.. அதுக்கு அப்புறம் நீங்க போய் பாருங்க..” என்று சொல்லி விட்டு நந்தாவிடம் வந்து அவன் தோள் மேல் கை போட்டு கொஞ்சம் தள்ளி கூட்டி வந்தவன், “டேய் என்னடா இவரு இரும்பை ஏதும் முழுங்கிட்டாரா..? இப்படி வெறப்பா இருக்காரு.. எதாவது சொன்னாலும் மதிக்கவே மாட்டிங்கிறாரு..” என்க.
“டேய் அவர பத்தி அப்படி பேசாதா.. அவரு ரொம்ப நல்லவரு.. அவங்களுக்கு ஏதும் இல்லதான..?” என்று மதியை பற்றி கூடுதலாக விசாரித்தான் லியாவை பார்த்து கொண்டே..
“இல்லடா ப்ளட் கொஞ்சம் அதிகமாக ப்ளீட் ஆகிருக்கு.. கொஞ்சம் வீக்கா இருக்காங்க மத்தபடி சீ இஸ் ஆல் ரைட்..” டாக்டர் சொன்னதைக் கேட்டதும் தான் லியாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நந்தாவும் லியாவை பார்த்து மெலிதாகச் சிரித்தவன் “இப்ப ஓகேவா லியா.. அவளுக்கு எதுவும் இல்ல சீக்கிரம் சரி ஆகிடுவா சரியா.. எதாவது சாப்பிடுறியா..?”
“இல்ல வேண்டாம் நா மதிய பார்க்கனும்..”
“பார்க்கலாம் பார்க்கலாம்.. நேத்துல இருந்து நீ எதுமே சாப்டல வா போகலாம்..”
“இல்ல நந்தா மதி கண்முழிச்சதும் பார்த்துட்டு போவேமே..?”
“அவ கண் முழிக்க இன்னும் நேரம் இருக்கு.. நீ வா..” என்றவன் மித்ரன் அருகில் வந்து “பாஸ் உங்களுக்கு சாப்பிட எதாவது வாங்கிட்டு வரட்டுமா..?”
“நோ நீட் நீ போ..” என்றான் மித்ரன்.
“பாஸ் நா போய் ஒரு டீ மட்டும் குடிச்சிட்டு வரட்டுமா..? நைட்ல இருந்து சாப்பிடவே இல்ல ஒரு மாதிரி இருக்கு..” என்றான் பாவமாக. மித்ரனோ ஒரு நிமிடம் அவனையும் அவன் தோளில் இருக்கும் லியாவையும் பார்த்து விட்டு அவன் எதற்காக சொல்கிறான் என்று தெரிந்தும் தெரியாதது போல “ம்ம் போ..” என்று மட்டும் சொன்னான்.
உடனே நந்தா லியாவை கூட்டிக் கொண்டு ஒரு பழக்கடை முன் நிற்க. “சார் என்ன வேணும்..?” என்க.
“ஒரு கிலோ ஆப்பிள்..” என்று சொல்ல வாய் எடுக்க லியாவோ “எனக்கு கொய்யாப்பழம் தான் பிடிக்கும்..” என்றது தன் சின்னக் குரலில்.
அதைக் கேட்டவுடன் நந்தாவும் தன் உதட்டில் சிறு புன்னகையை உதிர்த்தவன் “யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு எதுவுமே வேண்டாம் அப்படின்னு சொன்னாங்க உனக்கு அது யாருன்னு தெரியுமா லியா..?” என்க. ஏற்கனவே சிவந்த குட்டி மூக்கோ மேலும் சிவக்க “எனக்கு எதுவும் வேண்டாம் போடா..” என்று கோவித்துக் கொள்ள “அச்சோ சாரி பேபி.. வா உனக்கு பிடிச்ச கொய்யாப்பழமே வாங்கித் தாறேன் ஓகேவா..” என்றவன் “அண்ணா கொய்யாப்பழமே கொடுங்க..” என்றான்.
சிறிது நேரம் கழிய வெண்மதி மெல்ல தன் கண்களைத் திறந்தாள். உள்ளே இருந்த தாதி பெண்ணோ அவளை ஒரு முறை பரிசோதித்து விட்டு வெளியே வந்து “சார் அவங்க கண் முழிச்சிட்டாங்க நீங்க போய் பாருங்க நா டாக்டர கூட்டிட்டு வர்றேன்..” என்றவாறு அங்கிருந்து சென்றார்.
மித்ரனோ தன் கை முஷ்ட்டிகளை இறுக்கி மடக்கி கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
கண்களை முழித்ததும் தான் ஒரு மருத்துவமனையில் இருக்கிறோம் என்பது புரிய கண்களை சுழல விட அவனை பார்த்ததும் அவளுக்கோ உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொண்டது.
ஆனாலும் அதைக் காட்டாமல் அமைதியாக வேறு புறம் திரும்பி கொண்டாள்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு அவளின் முகத்திருப்பல் ஆத்திரத்தை மூட்ட பற்களை கடித்து கொண்டு “எதுக்கு சூசைட் ட்ரை பண்ண..?” என்றான்.
அவளோ அவனை பார்க்காமலே “ஏன்னு உங்களுக்கு தெரியாதா..?” என்றாள்.
“ப்ச்.. சொல்லுடி..?” என்று மீண்டும் குரல் உயர்த்தினான். அதற்குள் அங்கு டாக்டர் வந்துவிட அமைதியாக இருந்தான் மித்ரன்.
டாக்டர் அவளை செக் செய்து விட்டு “ஷீ இஸ் ஆல் ரைட் சார்.. நீங்க இன்னைக்கு ஈவினிங்கே வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் பட் காயத்துல மட்டும் தண்ணி படாம பாத்துக்கோங்க மத்தபடி நோ ப்ராப்ளம் நா வறேன் சார்..” என்றவர் சென்று விட்டார்.
“சொல்லுடி..?” என்றான் விடாமல் மீண்டும்.
அவளோ “என்ன ஏன் காப்பாத்தினீங்க..? உங்க டார்ச்சல் தாங்கமா தானே சாக போனேன்..?” என்றவள் கையில் டிரிபஸ் ஏறிக்கொண்டு இருந்த ஊசியை கழட்ட முற்பட.. சட்டென ஒரு கையால் அவள் கையைப் பிடித்தவன், மற்றைய கையால் அவள் கழுத்தை பிடித்துக் கொண்டு “என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க மனசுல.. உன்ன சாக விடுறதுக்கா உன்ன தூக்கிட்டு வந்துருக்கேன்..? உடனே செத்துட்டா உனக்கு என்னோட வலி புரியாது. நீ ஒவ்வொரு நாளும் துடிக்கனும். அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்..” என்றான் கண்களில் மின்னும் வெறியோடு.
“ஐயோஓஓ ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிறிங்க.. நீங்க யாரு என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் பண்ணது கிடையாது. ஆனா நீங்க நா என்ன பண்ணேனும் சொல்லாம என்ன சித்ரவதை பண்றிங்க.. உங்க கிட்ட இருந்து தப்பிக்கவும் வழி இல்லை. இதை எல்லாம் பார்த்துட்டு நா இன்னும் உயிரோட இருக்கனுமா..?” என்றாள்.
அவள் கழுத்தில் உள்ள பிடியை மேலும் நெறுக்கியவன் “ச்சை நடிக்காதடி.. உன்னால ஒரு அழகான அன்பான குடும்பமே சிதஞ்சு போச்சு.. சொல்லவா டி சொல்லவா.. நீ என்ன செஞ்சேன்னு..” என்றவன் அன்று நடந்ததை அவளிடம் கூற ஆரம்பித்தான்.
வாங்க நாமளும் அவன் என்னதான் சொல்றான்னு பார்த்துட்டு வருவோம்.
❤️🔥