கீதா, சம்யுக்தா ஹாஸ்பிடலுக்கு வரும் முன்னரே சம்யுக்தாவிற்கு ட்ரீட்மென்ட் பண்ணிய டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு, சம்யுக்தாவை மாத்திரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்து வக்கீலின் ஆபீசுக்கு சென்றவர், பிரகாஷையும் அங்கே அழைத்தார். அவர்கள் இருவரும் அவரிடம் சம்யுக்தாவைப் பற்றி கூறினார்கள். டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றான் பிரகாஷ். வக்கீலிடம் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்ற வகையில் பிரகாஷ் சொன்னான். உடனே வக்கீலும் அதற்குரிய டைவர்ஸ் பத்திரத்தை தயார் செய்து கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்தனர்.
அங்கே சம்யுக்தா அழுது கொண்டு வருவதை பார்த்ததும் கீதாவிற்கு கோபம் வந்தது. இவள் மீது குறையை வைத்துக்கொண்டு தன் மகனுக்கு கட்டி வைத்து தன்னை லீலா மீதும் அவருக்கு கோபம் வந்தது. எல்லாவற்றையும் சேர்த்து சம்யுக்தாக்கு அறைந்து விட்டார்.
கீழே விழுந்த அவள் கதறி அழுதாள். ஆனால் அவளை ஒரு பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை.
“ஏய் எந்திரி டி…..” என்ற கீதா அவளின் கூந்தலை பிடித்து எழுப்பினாள்.
“அத்தை விடுங்க வலிக்கிது….” என்ற சம்யுக்தாவின் அழுகை நிறைந்த குரலை அவர் மதிக்கவே இல்லை. “இங்கபாருடி உன்னை கல்யாணம் பண்ணி வச்சு என் பையனோட வாழ்க்கையே நான் நாசமாக்கிட்டேன்…. எந்த நேரத்தில் நீ பிறந்தன்னே தெரியல…. இங்க பாரு மரியாதையா இந்த டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டு உன் வீட்டுக்கு போயிடு….”
“என்ன டாக்குமெண்ட் அத்தை…?”
“டைவர்ஸ் தான் உனக்கு என் பையனுக்கு இனிமே எந்த சம்மந்தமும் இல்ல…. மரியாதையா கையெழுத்து போட்டுட்டு உன் வேலையைப் பாத்துட்டு போயிட்டே இரு…. நான் என் பையனுக்கு நல்ல இடமாக பாத்து கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்…” என்றார்.
“அத்தை என்ன அத்தை இது….? பிரகாஷ் நீங்க என்ன பேசாம அமைதியா இருக்கீங்க… உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு கேட்டீங்க இல்ல….”
“இங்க பாரு எங்க அம்மாவோட முடிவு தான் என் முடிவு…. இந்த டாக்குமென்ட்ல கையெழுத்து போட்டுட்டு போயிட்டேனா அது உனக்கு நல்லது…. இல்லேன்னு வையேன் கோர்ட்டு கேஸ்ன்னு அலைய வச்சு உன்னை நாறடிச்சிடுவேன்…. உனக்கு வேற ஒரு தொடர்பு இருந்துச்சு அதுதான் நான் டைவர்ஸ் பண்றேன்னு சொல்லுவேன்….”
“ச்சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா…? கட்டின பொண்டாட்டிக்கு தப்பான தொடர்பு இருக்கு கோர்ட்ல சொல்லுவேன்னு சொல்ற வெக்கமா இல்ல உனக்கு…. நீ எல்லாம் என்னடா ஆம்பள…?”
“ஏய் என்ன வாய்க்கு வந்தபடி பேசுற…? கொன்னுடுவேன் பாத்துக்க…”
“பிரகாஷ் நீ எதுக்குடா இவகிட்ட எல்லாம் பேசிகிட்டு கையெழுத்த போடுடி….”
“இல்லத்த நான் இதுல கையெழுத்து போட மாட்டேன்….”
“அப்போ என்ன பண்ண சொல்ற… உன்ன மாதிரி ஒரு மலடியை என் பையன் கூட வச்சிருந்து என் குடும்பத்துக்கு வாரிசு இல்லாமாக்கணுமா….?”
“அம்மா இத நான் உங்ககிட்ட சொல்லல ஆனா இப்படியான நேரத்துல சொல்லுவேன்னு நான் நினைக்கல… நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணு லவ் பண்ணேன்…. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பழகிட்டு இருந்தோம்…. நான் உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு இருக்கும்போது தான் நீங்க இதோ இந்த சனியனைப் புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டீங்க…. ஆனா என்னால அவளை அவ்வளவு சீக்கிரமா மறக்க முடியல…. சோ நான் வீட்டுக்கு தெரியாம அவ கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்…. இப்போ அவ மாசமா இருக்கா….”
“பிரகாஷ் நிஜமாவா சொல்ற அப்போ நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்துடுச்சில்ல…”
“கண்டிப்பா அம்மா ஒரு வாரிசு வந்தாச்சு…. ஆனா இவ இருக்கும் போது நான் எப்படி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்…?”
“இவ இருந்தா தானே பிரகாஷ்…. இவதான் இப்ப வீட்ட விட்டு போயிடுவால்ல அதுக்கப்புறம் நீ மருமகளை முறைப்படி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு….” என்று அவர் பாட்டிற்கு பிரகாஷ் உடன் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் பிரகாஷ் சொன்னதைக் கேட்ட சம்யுக்தாவுக்கு அந்த நிமிடமே செத்துவிடலாம் போல இருந்தது. பேச்சும் வரவில்லை அவளுக்கு. “பிரகாஷ் நீங்க இப்ப என்ன சொன்னீங்க….”
“என்ன அதிர்ச்சி அடைஞ்ச மாதிரி நடிக்கிறியா…? நான் சொன்னதெல்லாம் உனக்கு கேட்டிச்சி… நீ கேட்டது எல்லாம் உண்மைதான்….”
“உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல… தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி நான் உயிரோட இருக்கும்போது இன்னொருத்தி கூட ரிலேஷன்ஷிப்பில் இருந்து இப்ப அவ மாசமா இருக்கான்னு வேற சொல்றீங்க….. அத்தை நீங்களும் ஒரு பொண்ணு தானே…. உங்க பையன் வேறொருத்தி கூட தொடர்புல இருக்கான்னு தெரிஞ்சும் அவன்கிட்ட கோவப்படாம எப்படி இப்படி பேசிட்டு இருக்கீங்க….?”
“ஏய் வேற எப்படி பேசச் சொல்ற.. இதே நீயும் ஒரு பிள்ளைக்கு தாயாகி காலை இருந்தா நான் உன் பக்கம் நின்னு இருப்பேன்… எனக்கு என் குடும்பம் விளங்கனும் அதுக்கு ஒரு வாரிசு வேணும் அவ்வளவுதான்…. இது எங்க குடும்ப விஷயம் நான் பாத்துக்குவேன் மரியாதையாக கையெழுத்து போட்டுட்டு போயிடு….”
“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இதுல கையெழுத்து போடத்தான் போறேன்… இப்படி ஒருத்தன் கூட எப்படி வாழ முடியும் என்னால…”
“ஆமா நீ வாழ்ந்து கிழிச்சுட்ட…. நீ இருக்கிறது தண்டத்துக்கு என் பையனை விட்டா வேற யாரும் உன்னை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க….” என்றார் கீதா.
சம்யுக்தா இவர்களுடன் பேசவே கூடாது என்ற முடிவெடுத்தவள், கீதாவின் கையில் இருந்த அந்த டாக்குமெண்டை வாங்கி கடகடவென்று எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டு அவர்கள் முகத்தில் எறிந்தாள். அடுத்து அவன் கட்டிய தாலியை தன் கழுத்தில் இருந்து சிறிது கூட யோசிக்காமல் கழற்றி அவன் முகத்தில் எறிந்தவள், “இதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனா நீங்க இத்தனை நாள் எனக்கு கொடுத்த கஷ்டத்துக்கு கண்டிப்பா நீங்க அனுபவிப்பீங்க….”
“அதெல்லாம் நாங்க அனுபவிக்கிறோம்….. நீ உன் வேலைய பாரு…. பிரகாஷ் வா போகலாம்….” என்று பிரகாஷை அழைத்துக் கொண்டு கீதா சென்று விட்டார். சம்யுக்தாக்கு வேறு போக்கிடம் ஏது தன் தாய் வீட்டிற்கு செல்லலாம் என்று அங்கே சென்றாள்.
இங்கே நடந்த அனைத்தையும் இரு விழிகள் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. ஏனோ அந்த விழிகள் அவளை பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று நினைத்து, அவள் பின்னையே சென்றன. சம்யுக்தா தன் தாய் வீட்டிற்கு வந்தாள். ஆனால் காவலாளியை, “சின்னம்மா உங்களை மேடம் உள்ள விட வேணாம்னு சொல்லி இருக்காங்க…. உங்களை விட்டா அப்புறம் என் வேலை போயிடும்….”
“அண்ணா நான் அம்மாவ பாத்தே ஆகணும் ப்ளீஸ் கொஞ்சம் அவங்களை வரச் சொல்லுங்க…” என்றாள். அவரும், “சரி இருங்கம்மா கால் பண்ணி பாக்குறேன்…” என்று அவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல லீலாவதி, “அந்த மாகாணியை பாக்க நான் கீழ வரணுமா…? அவள உள்ள விடு என்ன சொல்றான்னு பாக்கலாம்…” என்றார். காவலாளியும் சம்யுக்தாவிடம் லீனா கூறியதை கூறினார். பின்னர் அவள் உள்ளே சென்றாள்.
“அம்மா…. அம்மா….” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா. சம்யுக்தாவை பார்த்த மாத்திரத்தில் லீலா, “அங்கேயே நில்லு.. ழ. எதுக்கு இங்க வந்த….?” என்று கேட்டார். தன் கவலைகளை சொல்லி, தாய்மடி மீது படுத்து அழலாம் என்று நினைத்த சம்யுக்தாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. “அம்மா என்ன நடந்துச்சினு தெரியுமா…. அங்க பிரகாஷ் இன்னொரு….. இன்னொரு பொண்ணு கூட தொடர்புல இருக்காரும்மா….. அம்மா என் வாழ்க்கையே போயிடுச்சு…. அதுதான் அவன் கட்டின தாலியை கழட்டி அவனோட மூஞ்சிலேயே வீசிட்டு வந்துட்டேன்…. நான் உங்க பொண்ணா இங்கேயே இருந்துடுறன் அம்மா….” என்றாள்.
“என்ன கழுத்துல இருந்த தாலிய கழட்டி வைச்சிட்டு வந்துட்டியா…? உனக்கு என்ன பைத்தியமா…?”
“அம்மா என்னம்மா இப்படி சொல்றீங்க… இன்னொரு பொண்ணு கூட தொடர்புல இருந்தவன் கூட நான் எப்படி வாழ முடியும்….?”
“பொண்ணுனா எல்லாத்தையும் அனுசரிச்சு போகணும்…. இப்படி ஒரேடியா முடிச்சிட்டு வந்து நிக்கக்கூடாது…. நீ இப்படி வந்து நிக்கிற… நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணப் பேச்சு எடுத்தா அக்கா நீ இப்படி வாழாவெட்டியா வந்து இருக்கேன்னு நாலு பேரு பேச மாட்டாங்க….. இங்க பாரு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது…. மரியாதையா இந்த பிரகாஷ் கூட சேர்ந்து இருக்கிற…. இல்ல இங்க இருந்து போயிடு….”
“நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்னு சொல்லியும் எப்படிம்மா உங்களுக்கு என்னை மறுபடியும் அங்கேயே போய் இருக்கச் சொல்லி மனசு வந்துச்சு…. நான் உங்க பொண்ணு தானே… இல்ல என்னை எங்கையாவது தத்தெடுத்தீங்களா….?” என்று வருத்தத்துடன் கூறினாள் சம்யுக்தா. “ஆமாடி உன்னை தத்துத்தான் எடுத்தும்….. நீ எங்க பொண்ணே கிடையாது….. போதுமா இங்கிருந்து போயிடு….”
“அம்மா என்னம்மா இப்படி சொல்றீங்க….. அவங்க எல்லாம் என்னை பேசுறத விட நீங்க இப்படி சொல்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்குமா…..”
“கஸ்டமா இருந்தாலும் அதுதான் உண்மை….. நீ என்னோட பொண்ணு கிடையாது…. உன்ன ஒரு ஆசிரமத்துல இருந்து நாங்க தத்தெடுத்திட்டு வந்தோம்…”
“அம்மா நிஜமா நான் உங்க பொண்ணு இல்லையா….? நீங்க பொய் தானே சொல்றீங்க….”
“பொய் எல்லாம் ஒன்னும் இல்ல… நீ எங்க பொண்ணு கிடையாது…. மரியாதையா இங்கிருந்து போயிடு…. ஒன்னு அந்த பிரகாஷ் வீட்டுக்கு போ…. இல்லனா எங்கேயாவது போய் சாகு ஆனா இங்க உனக்கு இனிமே இடம் கிடையாது…..” என்றார்.
சம்யுக்தாக்கு உலகமே இருண்டது போல இருந்தது. சிறிது நேரம் அங்கிருந்த சோபாவில் இருந்தாள். “இங்க பாரு இங்கிருந்து ஒரு பிரயோசனமும் இல்ல….) நீயா வெளில போயிட்டேனா உனக்கு நல்லது….. நானாக கழுத்த புடிச்சு வெளிய தள்ளினா உனக்கு அசிங்கமாயிடும்…..” என்றார் லீலா.
எழுந்து அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்த சம்யுக்தா. “கவலைப்படாதீங்கம்மா உங்களுக்கு எதுக்கு கஷ்டம்….. என்னை வெளில புடிச்ச தள்ற கஷ்டத்தை கொடுக்க மாட்டேன்…..” என்றவள் அவள் காதில் கையில் போட்டிருந்த நகைகளை கழற்றி அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
அவளை பின் தொடர்ந்தால் வந்த விழிகளுக்கு சொந்தக்காரர். அவள் அழுது கொண்டே செல்வதை பார்த்தார். அவள் பின்னாடியே தனது காரை ஃபாலோ பண்ணிக் கொண்டு வந்தார். இருள் சூழ்ந்த வேளையில் அந்த பஸ் ஸ்டாண்டில் இருந்தாள் சம்யுக்தா. அவளுக்கு என்ன செய்வது எங்கு போவது என்று எதுவும் தெரியவில்லை. இரவு நேரத்தில் அவள் இங்கே இருப்பதை பார்த்த சிலர் அவரிடம் தவறாக பேச முயன்றனர். உடனே அங்கிருந்து எழுந்து சென்றாள். இரு விழிகளுக்கு சொந்தமானவர் மீண்டும் அவளை பின்தொடர்ந்து சென்றார். சம்யுக்தா இதற்கு மேல் எதுக்காக உயிரோட இருக்கணும் என்று நினைத்து அங்கிருந்த பாலத்தின் மீது ஏறி நின்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Ayyayyo