நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு உடலில் ஒரு மாற்றம். கார் ஜன்னலில் ஊடாக இதுவரை வந்து கொண்டிருந்த காற்று சற்று அதிகமாக குளிரையும் சேர்த்து வந்தது இப்போது. அதனால் அவளுக்கு மிகவும் குளிராக இருக்க தான் உடுத்திருந்த புடவை முந்தானையால் தன் கைகளை நன்றாக மூடிக்கொண்டாள். தூக்கத்திலேயே இருந்தாலும் அந்த குளிரின் அளவு அதிகமாக அதிகமாக அவளால் உறங்க முடியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்தவள், தான் காரில் இருப்பதை உணர்ந்து பதற்றமடைந்தாள். ஒரு சில வினாடிகளில் தன் நிலைமை, தனக்கு நடந்தது அனைத்தும் நினைவு வர நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். முன்னாடி இருந்த கண்ணாடியில் அவளைப் பார்த்தார். “என்னம்மா நல்லா தூங்கி எந்திரிச்சிட்டியா….? ஊட்டிக்குப் பக்கத்துல வந்துட்டோம்ல அதான் ரொம்ப குளிரா இருக்கு….” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அவரைப் பார்த்து சம்பிரதாயத்துக்காக சிரித்தவள், அந்தக் காரின் ஜன்னலில் சாய்ந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள். எங்குமே இருள் சூழ்ந்திருந்த போதும் அந்த வானத்து வெண்ணிலவு மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது தன் தோழி நட்சத்திரங்களுடன். இந்த இருளைப் போல தான் தன் வாழ்க்கையும் இருளாகி விட்டது. என்று நினைத்து பெருமூச்சு விட்டாள் சம்யுக்தா.
“இங்க பாரு அது இது அந்த பார்ட்டி இந்த பார்ட்டினு சொல்லிட்டு இருக்கக் கூடாது…. ரெண்டே வாரத்துல முடிச்சுட்டு சீக்கிரமா இங்க வந்துடனும்…. உனக்கு இங்க நிறைய வேலை இருக்கு…..”
“கண்டிப்பா நான் எதுவும் சொல்ல மாட்டேன்…. ரெண்டு வாரத்துல வந்துடுவேன்….”
“குட்….”
“அண்ணா அப்பாக்கு கால் பண்ணேன் ரீச் ஆகல….”
“அப்பா சென்னையில் இருந்து இப்போதான் ஊட்டிக்கு வந்துட்டு இருக்காங்க…. அதனால சிக்னல் பிரச்சனையா இருக்கும்…. நீ அப்பா இங்க வந்ததுக்கு அப்புறமா பேசு…”
“ஓகே அண்ணா…”
“ஓகே பாய்….” என்றவன் போனை கட் பண்ணி விட்டு வீட்டின் வெளிப்புறம் வந்து நின்றான். குளிர் உடலைத் தாக்கிய போதும், அவன் அசையவில்லை. வரப்போகும் பெண்ணைப் பற்றி அவனது சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் எப்படிப்பட்டவர்? உண்மையாகவே அவளது வாழ்க்கை கஷ்டமானதா? இல்லை தந்தையையே ஏமாற்றி இங்கே வருவதற்கான முயற்சியா? என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான் தீக்ஷிதன்.
“சரி சரி இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு போயிட்டுவல அப்புறம் என்ன உங்க அக்கா கூட நீ எத்தனை நாள் வேணும்னாலும் பேசலாம்….”
“ஆமா கண்டிப்பா இந்த வாட்டி எங்க அம்மா என்ன சொன்னாலும் சரி அக்காவ பார்த்து பேசாம மட்டும் விடவே மாட்டேன்….”
“வித்து இன்னும் ரெண்டு வாரம்தான் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம்ல….”
“ஆமாம் மது…. எனக்கு அங்க ஊர்ல அவ்வளவா க்ளோஸ் பிரெண்ட்ஸ் கிடையாது… என் அக்கா மட்டும்தான் என்னோட க்ளோஸ் ப்ரெண்டு…. அக்கா எல்லாமே அவதான்…. இப்போ நீ கிடைச்சிருக்க மது… நம்ம எங்க போனாலும் நம்ம பிரண்ட்ஷிப் மட்டும் எப்போவும் ஒன்னாவே இருக்கணும்…. இன்னைக்கு இருக்கிற மாதிரி ஒண்ணா இருக்கணும் எப்பவும்….”
“கண்டிப்பா வித்து கவலைப்படாத… நம்ம எப்பவுமே டச்லையே இருப்போம்….” என்றால் மதுரா. இப்படியாக இருவரும் பேசிக் கொண்டே அவர்கள் வேலையை பார்த்தனர்.
வீட்டின் வெளியே இருந்த. கதிரையில் அமர்ந்து காலை அதன் மீசை மீது தூக்கி வைத்த படி இரு கைகளாலும் வெற்றியைப் பற்றிக் கொண்டு இருந்தான் தீஷிதன்.
உன் வீட்டுக்கு அருகே வந்ததும் சம்யுக்தாவிடம் திரும்பிய பரந்தாமன். “அம்மாடி கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிடலாம்… அங்க போனா நீ நிம்மதியா தூங்கலாம் சரியா….?” என்றார். “சரிங்க சார்….” என்றவள் அமைதியாகி விட சற்று நேரத்தில் வீடும் வந்தது.
கார் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்த தீஷிதன் கார் அருகே வந்தான். காரில் இருந்து இறங்கினார் பரந்தாமன். அவர் முகத்தைப் பார்த்த தீக்ஷிதனின் முகம் யோசனையில் சுருங்கியது. மறுபக்கம் வந்த பரந்தாமன் கதவை திறக்க காரினுள் இருந்து இறங்கினாள் சம்யுக்தா. சத்தியமாக இப்படி ஒரு பெண்ணை தீஷிதன் எதிர்பார்க்கவில்லை என்று அவனது முகம் காட்டிய அதிர்ச்சியிலேயே புரிந்து கொண்டார் பரந்தாமன். கண்களால் மகனிடம் எச்சரிக்கை செய்ய அதை உணர்ந்த தீஷிதன் தனது பார்வையை மாற்றினான்.
கீழே இறங்கிய சம்யுக்தா நிமிர்ந்து யாரையும் பார்க்காமல் நின்றாள். “சம்யுக்தா இதுதான் என் பையன்… பேரு தீக்ஷிதன்… தீஷி இதுதான் நான் சொன்ன சம்யுக்தா….” என்று இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார்.
சம்யுக்தா அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் தீஷிதன் அவளை நன்றாகப் பார்த்தான்.
“சரி ஓகே டாட் உள்ள வாங்க….” என்று அவன் முன்னே செல்ல, “சம்யுக்தா வாமா உள்ள…” என்று அவளை அழைத்துக் கொண்டு வந்தார்.
ஒரு அறையைக் காட்டி, “அம்மாடி இந்த அறையில் தாங்கிக்க…. உனக்கு தேவையானது எல்லாம் எடுத்துக்கலாம்…” என்றவர் அதற்கு அருகில் இருந்த ஒரு அறையைக் காட்டினார். இது என் பொண்ணோட ரூம்…. வரும்போது உனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்தோம் இல்ல பிரஷாகிட்டு, நிம்மதியா தூங்கு…. இங்க உனக்கு எந்த பிரச்சனையுமே வராது….” என்றவரிடம், “சரி…” என்று தலையாட்டி விட்டு அவர் தனக்கு என்று காட்டிய அறைக்குள் சென்று விட்டாள்.
இங்கே தனது தந்தையின் கையைப் பிடித்து இழுத்து வந்தான் தீஷிதன் அவனின் அறைக்கு.
“டாட்… உண்மைய சொல்லுங்க… எதுக்காக இந்தப் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்தீங்க….?”
“தீஷி அந்த பொண்ணு நான் இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு…. அந்த பொண்ணோட மாமியார் அவள ஹாஸ்பிடல்ல வெச்சி அத்தனை பேருக்கு முன்னாடியும் அடிச்சிட்டாங்க…. அந்த பையன் அவன்லாம் மனுஷனே இல்ல தெரியுமா….? சம்யுக்தாகூட கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு அதே நேரம் அவளுக்கு தெரியாம இன்னொருத்தி கூடேயும் வாழ்ந்துட்டு இருக்கிறான் அந்த ராஸ்கல்…. இதெல்லாம் அவகிட்ட சொல்லி அவ மேல ஏதோ தப்பு இருக்கிற மாதிரி இவங்க பிரேம் பண்ணிட்டாங்க…. ரொம்ப ஒடைஞ்சு போயிருந்தா… ஆறுதல் தேடி அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கா ஆனா அவங்களும் நீ எங்க பொண்ணு இல்ல…. உன்னை தத்தெடுத்து தான் வளர்த்தோம்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க…. இதுக்கு மேல எதுக்கு இருக்கணும்னு நினைச்சு அந்த பொண்ணு அந்த பாலத்தில் இருந்து குதிக்க போயிட்டா…. நல்லவேளை நான் காப்பாத்திட்டேன்…. அதுமட்டுமில்ல அவ ரொம்ப உடைஞ்சு போயிட்டது தெரிஞ்சது…. அந்த இடத்தை விட்டு வேற இடத்துக்கு போன அவளை மனநிலை மாறும்னு நினைச்சேன்… அதுதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்…. பாக்க ரொம்ப குண்டா கண்ணுக்கு கண்ணாடியும் போட்டுட்டு இருக்கிறானு தீஷி நீ அந்த பொண்ணை எப்பவும் காயப்படுத்த கூடாது… அது மட்டும் இல்ல அவளோட . வெளித்தோற்றத்தை வைத்து என்னிக்குமே காயப்படுத்திடாத… அதனால ரொம்ப ஒடிச்சு போய் இருக்கா அவ…. எம்பிஏ படிச்சிருக்கா ஆனா அவளோட சர்டிபிகேட் எல்லாம் அவ வீட்ல இருக்கு…. நீ என்ன ஏதுனு பார்த்து நம்ம கம்பனில ஒரு நல்ல வேலை போட்டு கொடுத்துடு தீஷிதன்.
“அப்பா ஒருத்தங்களோட வெளித்தோற்றத்தை வச்சு அவங்கள காயப்படுத்துற அளவுக்கு நான் மோசமானவன் இல்லப்பா…. ஆனா சர்டிபிகேட்ஸ் இல்லாம எப்படி வேலை போட்டு கொடுக்கிறது…?”
“குடுக்கலாம் தீஷி… பாவம் அவ வேலைக்கு போகணும்னு அவசியம் இல்ல…. ஆனால் சம்யுக்தா வேலைக்கு போகணும்…. இல்லனா அங்க நடந்தத நினைச்சுட்டு அவளுக்கு இன்னும் ஸ்ட்ரெஸ் ஆகும்….”
“யாரோ ஒரு பொண்ணு மேல எதுக்கு இவ்வளவு அக்கறைனு தெரியல்ல டாட்…”
“உதவி பண்றதுக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல தீஷி…. நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணு…”
“என்ன சத்தியம் டாட்…”
“சொல்றன் பண்ணு…”
“சரி…” என்றவன் அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அவரைப் பார்க்க, “நீ சத்தியம் பண்ணதை எப்பவும் மீறமாட்டனு நம்புறேன் தீஷி… அதே நேரம் சத்தியத்தை என்னைக்குமே மறந்திடாத….”
“ஓகே டாட்… நீங்க ரொம்ப தூரம் ட்ரைவ் பண்ணி வந்து இருக்கீங்க ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பேசிக்கலாம்….”
“ஓகே பா நான் வரேன்…” என்றவர் அவர் அறைக்குச் செல்ல, தீஷிதன் தனது அறைக் கதவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அடைத்துவிட்டு கட்டிலில் வந்து படுத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊