பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது அந்த டிவி நிறுவனம்! அந்த நிறுவனத்தில் இப்போது ட்ரெண்டில் இருப்பது அந்த சேனலின் தொகுப்பாளர் ஆர்த்தி தான்!
அவளின் உதவியாளரை அழைத்தவள், “யாரோட இன்னைக்கு இன்டெர்வியூ?’, என்று கேட்க, அவனோ தயங்கி நின்று கொண்டு இருந்தான்!
“மேம், அது வந்து…”, என்று அவன் இழுக்க, “என்னனு சொல்லு மென்! அதுக்கு ரெடி ஆகணும்ல?’, என்று அவள் கோவமாக கேட்க, “மேம், இன்னைக்கு உங்க ரெகுலர் ஷோ, “டாக் வித் செலிபிரிட்டிஸ்” ஷோவ்க்கு வர இருந்த நடிகர் வரல”, என்றான்!
அவளுக்கோ கடுப்பாகி விட்டது, “ஷோ இல்லனா சொல்ல வேண்டியது தானே! நான் இவளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்து இருக்க மாட்டேன்ல”, என்று அவள் தலையை தேய்த்து கொண்டு சொல்லவும், “ஷோ இருக்கு மேம், ஆனா வேற ஷோ!”, என்றவன் நிறுத்தி, “இப்படியும் மனிதர்கள் ஷோ இன்னைக்கு நீங்க ஹோஸ்ட் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க”, என்று அவன் சொல்லவும், அவளுக்கோ கோவம் வானை தொட்டது!
“அந்த ஷோல வித்யாசமா வேலை செய்றவங்கள தானே இன்டெர்வியூ பண்ணுவாங்க! இன்னைக்கு யாரு?”, என்று கேட்கும் போதே, அதில் அவளுக்கு பெரிதாக விருப்பமில்லை இன்று வெளிப்படையாக தெரிந்தது!
“அது வந்து மேம்… அது”, என்று அவன் மீண்டும் தயங்க, “யோவ் சொல்லித்தொலை யாரு”, என்று காட்டமாக கேட்க, “ஒரு மேல் ப்ரொஸ்டிடுட்”, என்று சொன்னதும் தான் தாமதம் எழுந்தே விட்டாள்!
“என்ன விளையாடறிங்களா? ஒரு மேல் ப்ரொஸ்டிடுட் அவனை நான் இன்டெர்வியூ எடுக்கனுமா?”, என்று கேட்டவளின் குரலில் அப்படி ஒரு ஆக்ரோஷம்!
“நீங்க பண்ணா நல்லா இருக்கோம்னு தான் இன்னைக்கு சேனெல்ல சொன்னாங்க”, என்றவனை பார்க்கவும், “என்னவோ பண்ணி தொலைங்க… ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு நாலு அடி டிஸ்டன்ஸ்ல சேர் போடுங்க”, என்று கட்டளையும் விடுத்தாள்.
பின்பு அரை மணி நேரத்தில் ஷூட்டிங் துவங்க இருக்க, அங்கே வந்தான் அந்த நேர்காணலின் நாயகன், புனிதன்!
புனிதன் என்று பெயரில் வைத்திருக்கும் அவனும் தான் தினமும் அவனின் உடலை அழுக்காக ஆக்கி கொண்டு இருக்கிறான்!
அவன் வரும் போதே, அவனை பார்த்து பலர் முகத்தை சுளிக்க, அந்த ஷோவின் டைரக்டர் சிகாமணி தான் அவனை வந்து அழைத்தார்!
“நீ ஏதும் கவலை படாத புனிதன்! இந்த நேர்காணல் முடியும் போது மக்களுக்கு உங்க மேல இருக்க கண்ணோட்டமே மாறிடும்!”, என்று புன்னகைத்தவருக்கு, அவனின் முகத்தில் இல்லாத புன்னகையை உதட்டில் கொடுத்தான்!
அவனின் வாழ்க்கையில் தான் எத்தனை போராட்டம்!
அவனோ அவனிற்கு என்று ஒதுக்கப்பட்ட சேரில் அமர, அப்போது அங்கு வந்து சேர்ந்தால் ஆர்த்தி!
அவளுக்கு கொஞ்சம் கூட அவனை பார்க்க பிடிக்கவில்லை என்பதை அவளின் முகமே கூறியது!
புனிதனோ ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து கொண்டு தயாராகினான்!
“இங்க பாருங்க, நீங்க எப்படி சம்பவம் பண்ணுவிங்கனு எல்லாம் விளக்கமா சொல்லணும்னு அவசியம் இல்ல”, என்று அவள் சொல்ல, “உங்கள மாறி பொண்ணுங்க தான் எனக்கே விளக்குவாங்க மிஸ்”, என்று அழுத்தமாக மிக அழுத்தமாக வந்தது அவனின் வார்த்தைகள்!
ஆர்த்திக்கு செருப்பால் அடித்த உணர்வு!
இதுவே ஒரு பெண் விலைமாதுவை அழைத்து வந்திருந்தால் கூட, ஐயோ பாவம் என்று தானே அவள் சொல்லிருப்பாள்! ஆனால் ஒரு ஆண் என்பதால் இப்படி ஒரு பார்வை மற்றும் ஏளனமா?
ஆர்த்தியும் அவளின் கோவத்தை கட்டு படுத்தி கொண்டு, நேர்காணலை துவங்கினாள்!
“வணக்கம் மக்களே! நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி, “இப்படியும் மனிதர்கள்”, நான் உங்கள் விஜெ ஆர்த்தி! இன்னைக்கு நம்ப சந்திக்க இருக்கும் நபர் ரொம்ப ரொம்ப வித்தியாசமானவர் இப்படி உண்மையாவே ஒரு வேலை செய்றவர்கள் இருக்காங்கன்னே எனக்கும் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி தான் தெரியும்!”, என்றவள் நிறுத்தி அவனை ஒரு நக்கல் பார்வை பார்த்தாள்.
“இன்னைக்கு அந்த வேலை செய்றவரை தான் பார்க்க போறோம்! ஒரு மேல் ப்ரொஸ்டிடுட் புனிதன்”, என்று அவள் முடிக்க, “மேம், முதல்ல ஒரு இன்டெர்வியூ எப்படி எடுக்கணும்னு உங்களுக்கு தெரியுமா?”, என்று நேரடியாகவே அவன் கேட்கவும், அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டு தான் போயினர்!
சிகாமணியை தவிர! அவருக்கு தான் புனிதன் பற்றி தெரியுமே!
“சார்”, என்று கேமராமேன் பதற, “கீப் ரோலிங்”, என்று சொல்லிவிட்டார்!
ஆர்த்திக்கோ ஆத்திரம், ஆனால் கேமரா ஓடிக்கொண்டு இருந்ததால் வெளிப்படையாக காட்டவும் முடியாது!
“ஏன் நீங்க சொல்லித்தறிங்களா?”, என்று கேட்கவும், “வேணும்னா சொல்லுங்க சொல்லி தரேன்! ஒரு நிகழ்ச்சில யாரு வந்தாலும் அவங்கள மரியாதையா மிஸ்டர், மிஸ்ஆர் மிச்ஸஸ் இல்ல வேற ஏதாச்சு அவங்க வாங்குன பட்டத்தை வச்சு தான் அழைக்கணும்! சரி இதே நிகழ்ச்சில ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விலை மாது வந்தாங்க! அவங்கள நீங்க மிஸ்னு தான் கூப்பிட்டீங்க! இவளோ ஏன் அவங்கள நீங்க ஒன்னும் பிமல் ப்ரொஸ்டிடுட்ன்னு சொல்லல, ஆனா ஒரு ஆம்பள இந்த வேலை செஞ்சதுனால எனக்கு இவளோ தான் மரியாதை இல்லையா?”, என்று கேட்கவும், அங்கிருந்த அனைவருக்குமே அவனின் மேல் ஒரு ஆர்வம் பிறந்தது!
உன் நிகழ்ச்சியில் நான் வந்ததற்கு எனக்கு மரியாதை வேண்டும் என்று நேரடியாக இல்லமால், எவ்வளவு அழகாக மறைமுகமாக கேட்டு விட்டான்!
“சாரி மிஸ்ட்டர் புனிதன்! என்னோட பால்ட் தான்!”, என்று சொல்லி ஆக வேண்டிய கட்டாயம்!
“எப்படி இந்த தொழிலுக்கு வந்திங்க?”, என்று அவள் முதல் கேள்வியை கேட்க, “நான் முதன் முதல்ல கிராமத்துல இருந்து இங்க வேலை செய்ய தான் வந்தேன்… அம்மா அப்பா நான் தான் மூத்த பையன்! எனக்கு அடுத்து ஒரு தங்கச்சி தம்பி இருகாங்க! சின்ன வயசுலயே கஷ்டம், வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன்! எங்க ஊருக்கு வந்த ஒருத்தர், பட்டணத்துக்கு வந்தா வேலையும் கிடைக்கும் நல்லா சம்பாதிக்கலாம்னு சொன்னாரு! தெரியமா தான் வந்தேன்! அப்பறோம் தான் இது ஒரு புதை குழினு தெரிஞ்சிது!”, என்றவன் எச்சில் ஏறி இறங்கியது!
“உங்களுக்கு இந்த வேலை கஷ்டமா இல்லையா?”, என்று கேட்க, “யாரும் இந்த வேலைய ரசிச்சு பண்றது இல்லைங்க”, என்பதுடன் அவன் நிறுத்தி கொண்டான்!
“என்ன சொல்றிங்க? எல்லா ஆம்பளைங்களும் பொண்ணுங்க பின்னாடி நாய் மாறி தான அலைறிங்க”, என்று வக்ரமாக வந்தது அவளின் கேள்வி, “என்ன தேடி வர பொண்ணுங்க கூட நாய் மாறி தான் வராங்க! அவங்கள என்ன சொல்லலாம்?”, என்றவன் அவனை சமன் செய்து கொண்டு, “ஆண் பெண்ணு எல்லாம் இல்லைங்க! இந்தியால இருக்குற குழந்தைகளுக்கான பாலிய சீண்டல்ல ஐம்பத்தி இரண்டு விழுக்காடுக்கும் மேல ஆண் பிள்ளைகளுக்கு தான் நடக்குதுனு சொல்லுது ஆய்வுகள் இது தெரியுமா உங்களுக்கு? இவளோ ஏன் எந்த அளவுக்கு விலை மாதுக்கள் இப்போ இருக்காங்களோ அதே அளவு இப்போ விலை மகன்களும் இருக்காங்க!”, என்று அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தி கொண்டான்!
மீண்டும் தொடர்ந்தான், “ஆண்களுக்கு மட்டும் தான் காம உணர்ச்சி இருக்குமா? பெண்கள் ஜடமா என்ன? ஆண்களை விட பெண்களுக்கு தான் உணர்ச்சிகள் அதிகம் அதுல காமும் சேர்த்து தான் இருக்கு! மீடியால இருக்க உங்களுக்கு கூட இதெல்லாம் தெரியல்னு நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்கு!”, என்றவுடன் அவளுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது!
“சாரி மிஸ்டர் புனிதன்! தெரிஞ்சோ தெரியாமையோ இந்த தொழிலுக்கு வந்துட்டீங்க! இன்னும் ஏன் இந்த தொழில்?”, என்று அவள் கேட்க, “யாரு எங்களுக்கு வேலை கொடுப்பா? இப்போ உங்க டிவில நான் இன்டெர்வியூ கொடுக்குறேன்! உங்க டிவி சேனல்ல எனக்கு ஒரு எடுபிடி வேலையாச்சு கொடுப்பாங்களா?”, என்று கேட்கவும், அங்கிருந்த அனைவருமே வாய் அடைத்து தான் போய் விட்டனர்!
உண்மை தானே, அவனுக்கு கண்டிப்பாக வேலை தர மாட்டார்கள் என்பது தானே நிதர்சனம்!
“நீங்க சொல்றது உண்மை தான் மிஸ்டர் புனிதன்!”, இப்போது உண்மையாகவே மிஸ்டர் புனிதன் என்கிற அழைப்பு தானாக வந்திருந்தது!
“ஐ அம் சாரி! உங்களுக்கு எந்த ஏஜ் குரூப்ல நிறைய பெண்கள் அழைப்பார்கள்?”, என்று அவள் கேட்க, அவனின் இதழ்களுக்குள் கேலி புன்னகை!
“சொன்னா நம்புவீங்களானு தெரியல! ஆனா எங்களை நிறைய கூப்பிடறது நாற்பத்தி அஞ்சு வயசுக்கு மேல இருக்குறவங்க தான்! அடுத்து அதிகமா கூப்பிடறது பதினெட்டு வயசுல இருந்து இருபத்தி அஞ்சு வயசுல இருக்கிற பெண்கள் தான்! இன்னும் கொடுமை சில நேரம் அப்படி அழைக்கிற பெண்கள் எல்லாம் அண்ணானு வேற வந்ததும் கூப்பிடுவாங்க! கொடுமையா இருக்கும்”, என்றவனின் குரல் தழுதழுத்தது!
கேட்டவர்களுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது!
“நாற்பத்தி அஞ்சு வயசு பெண்களா?”, என்று அவள் அதிர்ச்சியாக கேட்க, “ம்ம்… அவங்க புருஷங்க கிட்ட அவங்களுக்கு இப்போல்லாம் தேவ பட்டது கிடைக்கலன்னு சொல்லி கூப்பிட்றவங்க… இன்னொன்னு சொன்னா இப்படி எல்லாம் பெண்கள் இருபங்களானு ஆச்சிரியம் படுவீங்க! அவங்க புருஷங்க அவங்கள ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம்… அதனால எங்களை கூப்பிட்டு அந்த வெறியை தீர்த்துக்குவாங்க! ரொம்ப வக்ரமா இருக்கும், கட்டி போட்டு, ஒரு பொம்பளலாம் என்ன கத்தியால் கீற ஆரம்பிச்சிட்டா! அங்க இருந்து அடிச்சி பிடிச்சி வர்றதுக்குள்ள உயிரே போயிருச்சு”, என்று சொல்லவும், ஆர்த்தியின் கண்களில் ஒரு துளி கண்ணீர்!
சட்டென துடைத்து கொண்டாள்!
“இதெல்லாம் மேல் தர வரகத்துல இருக்குறவங்க மட்டும் தான் பண்றங்களா?”, என்று அவள் அடுத்த கேள்வியை தொடுக்க, “அப்படினு சொல்ல முடியாது! ஒரு சின்ன பொண்ணு வந்தா, சாதாரண குடும்பம் தான்! அவளோட பார்ட் டைம் சேவிங்ஸ் எடுத்துட்டு வந்தா, எனக்கு இந்த எஸ்பிரியன்ஸ் வேணும்னு சொன்னா, எனக்கு தூக்கி வாரி போட்டது! அதுக்கு அப்பறோம் அவ கிட்ட பேசி அனுப்பி வச்சிட்டேன்”, என்று அவன் சொல்லவும், “உங்களுக்கு வந்த மறக்க முடியாத கிளைன்ட் யாராவது இருக்காங்களா?”, என்று அடுத்த கேள்வி கேட்டாள்.
“ஒன்னு இல்ல மூணு பேறு இருக்காங்க”, என்று அவன் சொல்லவும், “மூணு பேறு பத்தியும் சொல்லுங்க”, என்று அவள் ஆரவமாக கேட்க, “ரொம்ப ஆர்வமா இருக்கீங்க”, என்று அவன் சொல்ல, “சும்மா தெரிஞ்சிக்க தான்”, என்றவள் முகத்தில் இப்போது அவனை பார்த்து அந்த அருவெறுப்பு இல்லை!
“முதல் ஒருத்தர் ஆண்!”, என்று அவன் சொன்னதும், அங்கு இருந்த அனைவரின் கண்களும் இருந்தன!
“என்ன சொல்றிங்க?”, என்று அவளையும் மீறி கேட்க, “சொல்றேன் கேளுங்க, அவர் ஒன்னும் நீங்க நினைக்கிற மாறி ஓரின சேர்க்கையாளர்லாம் இல்ல! அவரோட பொண்டாட்டி இப்படி யாரோடயோ அபெர் வச்சிருக்காங்கனு தெரிஞ்சி, யாரு அந்த விலைமகனு தெரிஞ்சிக்க, ஒருஒருதராய ஹயர் பண்ணிட்டு இருக்காரு… காசு கொடுத்து அவரு கஷ்டத்தை கேட்க வச்சாரு! பாவம் மனுஷன்”, என்று சொல்லவும், அவளோ சிரித்து விட்டாள்!
“அடுத்த நபர் யாரு?”, என்று அவள் கேட்கவும், “அடுத்ததும் ஆண் தான்!”, என்று அவன் சொல்ல, “இவரும் பொண்டாட்டியோட அபெர் வச்சிருக்கவரா கண்டுபிடிக்க கூப்பிட்டாரா?”, என்று அவள் கேட்க, “இவரு அதுக்கும் மேல அவங்க பொண்டாட்டியோட அபெர் வச்சிக்க கூப்பிட்டாரு”, என்று அவன் சொன்னதும், அங்கிருந்தவர்களின் கண்கள் வெளியே வந்து விழவில்லை என்பது அதிசயம் தான்!
“என்ன சொல்றிங்க மிஸ்டர் புனிதன்?”, என்று அவள் அதிர்ச்சியாக கேட்க, “அந்த கூத்த ஏன் கேட்குறீங்க? அவங்களுக்கு குழந்தை இல்லயாம்! அவரோட சிமென் கவுண்ட் கம்மியாம்! ஆனா அழகான குழந்தை வேணுமாம்! அதனால ஆன்லைன்ல நல்ல அழகான ஆண் மாகாண பார்த்தாராம்! அவரோட மனைவிக்கும் சந்தோஷத்தை கொடுக்கலைனு சோசியல் சர்வீஸ் பன்றாரு”, என்றதும், “ஷாக்கிங்கா இருக்கு மிஸ்டர் புனிதன்”, என்றவளிடம், “ஆனா இப்படியும் மக்கள் இருக்காங்க”, என்றான்!
“மூணாவது?”, என்றவளிடம், “அது கொஞ்சம் காம்ப்ளிகேட்ட்! ஆனாலும் சொல்றேன், ஒரு பேமஸ் நடிகை அவங்க ஆனா அவங்க பிஏ பேரை வச்சி புக் பன்னிருந்தாங்க! அவங்கல பார்த்ததும் அதிர்ந்துட்டேன்! அவங்களோ ரொம்ப சகஜமாக தான் பழகுனாங்க! நல்லா தான் நடந்துக்கிட்டாங்க, எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பறோம், என் கூடவே இருந்துரு, எனக்கு கல்யாணம் மேலெல்லாம் நம்பிக்கை இல்லனு சொன்னாங்க… ஆனா நான் ஒத்துக்கல! ஏனா அது அவங்க காதல் தோல்வில இருந்த நேரம்!”, என்று சொல்லி முடித்து கொண்டான்!
“வெளிய இருந்து பார்க்கும் போது அசிங்கமா தெரியுறீங்க! ஆனா நாங்க பார்க்குற நிறைய நல்ல மக்களோட கருப்பு பக்கங்கள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு! அதுவும் அந்த பெண் உங்கள கத்தியால் கீற வந்தது எல்லாம் கேட்கும் போதே நெஞ்சம் பதை பதைக்குது!”, என்று ஆர்த்தி சொல்லவும், அவனிடம் மௌனம் தான்!
பின்பு அவனே, “எங்கள உயர்வா நடத்தணும்னு நாங்க யாரும் நினைக்கல! நாங்க பண்றது கேவலமான தொழில் தான்! ஆனா நாங்களும் மனிதர்கள் தானே! எங்கள மதிக்கலானாலும் பரவால்ல மிதிக்காதிங்க! நீங்க எங்களுக்காக இரக்கம்லாம் கூட பட வேண்டாம்! ஆனா இழிவா நடத்தாதீங்க!”, என்பவன் அத்துடன் நிறுத்தி கொண்டான்!
“தேங்க யு சோ மச் மிஸ்டர் புனிதன்! எப்பவோம் பெண்களுக்கு ஒரு கேள்வி இருக்கும், விலை மாது கிட்ட போற ஆண்கள் எல்லாம் ஓழுங்கான்னு! அதே கேள்வி பெண்களையும் கேட்கலாம்! விலை மகன்களிடம் போடும் பெண்களை என்ன சொல்றது! பணம் எல்லாத்தையும் மறச்சிறுது! சில நேரம் மக்கள் அவர்களோட சுயத்தை உணர்ச்சிகளிடம் இழந்துறாங்க! இதுக்கு நம்ப நாடும் ஒரு காரணம்! செக்ஸ் எடுகேஷன் நம்ப நாட்ல இப்பவும் ஸிரோ தான்! அதெல்லாம் சரி செஞ்சா தான் எல்லாமே சரியாகும்! “, என்று அவள் சொல்லவும், “ஆண்களை கூட ரேப் பன்றாங்க இப்போல்லாம் ! இதுவே நிறைய பேருக்கு தெரியாது! பெண்களாவது வெளிப்படையா கொஞ்சம் சொல்ராங்க இப்போ எல்லாம்! இன்னும் ஆண்கள் அதை எல்லாம் சொல்றது கூட இல்ல! சொன்னா நம்ப சமூகம் என்ன செய்யும்னு ஒரு பயம் இன்னும் இருக்கு!”, என்று அவன் தான் முடித்து இருந்தான்!
“இந்த நிகழ்ச்சியை பார்த்த எல்லாருக்கும் இது ஒரு விழிப்புணர்வாவும் இருக்கும் என்று நம்பி அடுத்த வார நிகழ்ச்சியில் இன்னொரு வித்யாசமான நபருடன் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் ஆர்த்தி”, என்று நிகழ்ச்சியை முடித்தவள், எழுந்து நின்று அவனிடம் கை நீட்டினாள்!
அவனோ அவளை புருவம் சுருங்கி பார்க்க, “கை கொடுங்க! உங்கள வந்ததும் ரொம்ப ஹார்ஷா ட்ரீட் பண்ணதுக்கு சாரி! ஒரு பேசிக் கார்ட்டஸி இருந்திருக்கணும்! அது கூட இல்லாம நடத்துகிட்டேன்”, என்று உண்மையாக அவள் வருந்தவும், அவனும் கை குலுக்கி விடை பெறும் சமயம், “ஆமா உங்களுக்கு எப்படி சிகாமணிய தெரியும்?’, என்று கேட்டாள்!
அவர் தானே இவனை அழைத்தது!
“என்கிட்ட வந்து அவரோட பொண்டாட்டிய பத்தி புலம்புனத்தே அவர் தான்!”, என்றானே பார்க்கலாம்!
அப்போது தான் அவருக்கு இப்போது சமீபமாக விவாகரத்து ஆனாது தெரியும்!
“நீ நினைக்கறது சரி தான் ஆர்த்தி!”, என்று வந்தது சிகாமணியின் குரல்!
“நான் ஷூட்டிங்னு போய்டுறேன்! அவள கண்டுக்கறது இல்ல! ஒரு விதத்துல இது நலத்துக்கு தான்! பசங்க தான் வெளிநாட்ல படிக்கிறாங்க! அதனால பெரிய பிரச்சனைலாம் இல்ல! டிவோர்ஸ் பண்ணிட்டாச்சு அவளும் நிம்மதியா இருப்பா நானும் நிம்மதியா இருப்பேன்”, என்று அவர் சொல்லவும், ஆர்த்தியால் அவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது!
“கண்டிப்பா முடிஞ்சா திருப்பி மீட் பண்ணலாம் புனிதன்”, என்று ஆர்த்தி சொல்லவும், “என்ன மீட் பண்ணமா இருக்கறது தான் உங்களுக்கு நல்லது! பை ஆர்த்தி”, என்று சொன்னவன், சென்று விட்டான்!
ஆர்த்தியினுள் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது இந்த உரையாடல்!
“சார்”, என்று சிகாமணியை அழைத்தவள், “நம்ப ஏன் இத ஒரு ஷார்ட் பிலிம்மா எடுக்க கூடாது?”, என்று கேட்க, “கண்டிப்பா மா, நம்ப நாட்ல இப்படியும் ஆண்கள் இருக்காங்கனு தெரியுமான்னு தெரியல! கொஞ்சம் கான்ட்ராவர்சியல் தான் இருந்தாலும் எடுக்கலாம்! என்ன டைட்டில் வெக்கலாம்?”, என்று கேட்க, “விலை மகன்”, என்று வந்தன ஆர்த்தியின் உதடுகளில் இருந்து வந்த வார்த்தைகள்!
Vera level vera level solla varthai ila da 🥳🥳🥳🥳
Solla varthai illai sis
Thank you so much
கதை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த கருத்தை எடுத்து எழுதவே தனி மனநிலை வேணும்…
விலைமகன் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அவங்களோட நிலைமை இப்படினு இப்ப தான் தெரியும்…
Thank you so much!
No comments, superb. இந்த மாதிரி ஒரு சப்ஜெக்ட் எடுத்து தைரியமா சொன்னதுக்கு.
Thank you so much!
Romba nalla iruku ❤
Thank you so much
Thank you so much!
Ni words to express 🫡🫡🫡🫡🫡
Thank you sis