வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர்

5
(17)

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் 1

டீஸர் 1: 

குழவியின் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட்டான் அவன்.. அந்த பெண் மகவோடு தனக்கு ஏதோ பல ஜென்ம பிணைப்பும் பந்தமும் இருப்பதாய் உணர்ந்தான் அவன்..

“அழகு குட்டி.. இப்படித்தான் ஓடி வருவாங்களா செல்லம்? இத்தனை நேரம் அந்த வண்டி இடிச்சிருந்தா பாப்பாக்கு அடி பட்டிருக்கும் இல்ல?”

சற்றுமுன் அவன் முகத்தை பார்த்தவர்கள் இப்போது பேசுவது அவன் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மென்மை குடிகொண்டிருந்தது அவன் வார்த்தைகளில்..

இப்படி உணர்வுகளின் பிடியில் அவன் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நேரம் அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டு ஓடி வந்த பெண் ஒரு நிம்மதி பெருமூச்சோடு அவன் அருகில் வந்து “தேங்க்யூ சார்.. தேங்க்யூ சோ மச்.. ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போயிடுச்சு தெரியுமா? என்னடா சக்தி? இப்படி பண்ணிட்ட.. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்க அம்மாக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?”

அவள் பேசிக் கொண்டே அந்த குழந்தையை வாங்குவதற்கு கையை நீட்ட அவ்வளவு நேரம் அந்த பிஞ்சு முகத்தை பார்த்து மலர்ந்திருந்த அவன் முகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியதும் ஏகத்துக்கும் இறுகிப்போய் இருந்தது கோபத்தில்..

“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நீங்க இவளோட அம்மா இல்லையா? அதான்.. இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்திருக்கீங்க.. உங்களை மாதிரி ஒரு இர்ரெஸ்பான்சிபில் பெர்சன் கிட்ட இந்த மாதிரி ஒரு அழகான பூவை கொடுத்து பார்த்துக்க சொன்ன அந்த அதிமேதாவி யாரு?”

“சார்.. என் பாஸ் குழந்தை சார் இவ.. அவங்களுக்கு மீட்டிங் இருக்கிறதுனால அந்த ரூம்ல வச்சுக்க முடியாதுன்னு மீட்டிங் முடியற வரைக்கும் நான் இவளை பார்த்துக்கலாம்னு இங்க லான்ல விளையாட்டு காட்ட வந்தேன்.. ரெண்டு பேரும் பால் விளையாடிட்டு இருந்தோம்.. பாலை போய் எடுத்துட்டு வரதுக்குள்ள இந்த மாதிரி பண்ணிட்டா..”

வருத்தம் தோய்ந்த குரலில் அந்த பெண் சொல்ல “சும்மா காரணம் சொல்லாதீங்க.. உங்க கிட்ட இந்த குழந்தையை கொடுக்க முடியாது.. முதல்ல இவங்க அம்மா கிட்ட நாலு கேள்வி கேட்டுட்டு அப்புறம் தான் பிள்ளையை ஹேண்டோவர் பண்ணுறேன்.. உலகத்துல குழந்தை இல்லன்னு எத்தனையோ பேரு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் கொடுக்காம உங்களை மாதிரி பொறுப்பில்லாதவங்களுக்கு குழந்தையை கொடுக்கிறாரே அந்த கடவுள்.. அவரை சொல்லணும்..” 

அந்த பெண்ணிடம் ஏகத்துக்கும் எரிந்து விழுந்தவன் “முதல்ல உங்க பாஸ் எங்க இருக்காங்க.. சொல்லுங்க..” அதிகார தோரணையோடு கேட்டான் அவளிடம்..

“அவங்க மீட்டிங் ரூம்ல இருக்காங்க சார்..”

“அந்த ரூமுக்கு என்னை கூட்டிட்டு போங்க..” 

அவன் முன்னே கையை காண்பிக்க அவளும் அவனை சிறிது அச்சத்தோடு பார்த்துக் கொண்டே அந்த அறையை நோக்கி நடந்தாள்..

அறையின் முன்னே வந்து நின்றவன் புருவம் சுருங்க யோசனையோடு பார்த்தான் அந்த அறையை.. 

“ம்ம்.. நான் சம்யுக்தா மேடமை மீட் பண்ண வேண்டிய ரூம் ஆச்சே இது.. சம்யுக்தா மேடம் ரொம்ப வயசானவங்களாச்சே.. அவங்களுக்கு நிச்சயமா ரெண்டு வயசுல குழந்தை இருக்க முடியாது..”

இப்படி யோசித்தவன் அவள் பக்கம் திரும்பி “சம்யுக்தா மேடம் தான இங்க..” என்று இழுக்க..

“இல்ல சார்.. சம்யுக்தா மேடம் வரல.. சம்யுக்தா ஆர்ச்சரி அகாடமி இன்சார்ஜ் வில்விழி மேடம் தான் வந்திருக்காங்க.. சக்தி அவங்களோட குழந்தை தான் சார்..”

“ஓ.. ஆனா சம்யுக்தா மேடம் தானே என்னை மீட் பண்ணறதா இருந்தது..”

“ஆமா சார்.. ஆனா அங்க ஒரு ஈவன்ட் இருந்ததுனால அவங்களால வர முடியல.. உங்களுக்கு மெயில் பண்ணி இருந்தோமே..”

சட்டென தன் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுத்து பார்த்தவன் “ப்ச்.. மெயில் அனுப்பி இருக்காங்க.. நான் தான் மிஸ் பண்ணிட்டேன்..” என்றவன் அந்த அறை கதவை மெல்ல தட்டி விட்டு உள் நுழைந்தான்..

குழந்தை அவன் கன்னத்தில் இருந்த தாடியை கைவிரலால் வருடி  “அவ்வு.. அவ்வா.. சத்தி அவ்வா..” என்று சொல்லிக் கொண்டே வர அதன் மழலை மொழியில் அவன் கவனம் முழுவதும் இருக்க உள்ளே வந்த பிறகுதான் எதிரில் அமர்ந்திருந்தவள் யார் என்று நிமிர்ந்து பார்த்தபடி “மிஸ். வில்விழி..” என்றவன் அப்படியே அதிர்ந்து போனான் அங்கே அமர்ந்திருந்தவளை கண்டு..

தான் காண்பது உண்மைதானா..? கண் எதிரில் இருக்கும் பிம்பம் அவளுக்கு சொந்தமானது தானா? ஒருவேளை தன் கண்கள் தன்னை ஏமாற்றுகின்றதோ? என்ற சந்தேகத்தில் கண்களை கசக்கி மறுபடியும் பார்த்தவனால் தன் விழிகளையே நம்ப முடியவில்லை..

யாரை இறுதிவரை பார்க்கவே மாட்டோமோ என்று நினைத்து மூன்று வருடங்களாக உருகி அவள் நினைவில் மறுகி அந்தப் பிரிவு துயரில் உருகுலைந்து போய் இருந்தானோ அவளை மீண்டும் கண்ட நொடி வாடியிருந்த அவன் முகம் பிரகாசமாய் மலர்ந்திருந்தது.

“மலரு.. மலரு..” என்றவன் முகம் சுருக்கி அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி “ஹலோ இவங்க மலர்விழி.. நீங்க என்ன இவங்க பேரை தப்பா சொல்றீங்க..?” என்று கேட்க மலர்விழி என்று அவனால் அழைக்கப்பட்டவளோ முகத்தில் சிறு அதிர்வும் இல்லாமல் “வாங்க மிஸ்டர் இந்திர தனுஷ்.. அவங்க தப்பா சொல்லல.. நீங்க சொல்ற பேர்ல இப்ப இங்க யாரும் இல்ல.. என் பெயர் வில்விழி பரிமேலழகர்.. அந்த மலர்விழி செத்துப் போய் ரொம்ப நாளாச்சு..”

சிறு தடுமாற்றமும் இல்லாத ஆளுமை நிறைந்த குரலில் அவள் சொல்லி இருக்க அவள் பதிலில் ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்த நொடியே எப்போதும் அவன் கண்களில் குடி கொண்டிருக்கும் திமிரும் தீர்க்கமும் மறுபடியும் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது..

இதழ் ஓரமாய் இறுமாப்போடு ஏளன புன்னகை சிந்தியவன் “அது எப்படி நீங்க மிஸ் ஆக முடியும்..? எப்போவுமே என்கிட்ட இருந்து நீங்க மிஸ் ஆகவே முடியாது.. ஏன்னா உங்க பேரு மலர்விழியோ இல்ல வில்விழியோ.. சட்டப்படி நீங்க இன்னும் என் மனைவிதான்.. அதனால நீங்க வில்விழியா மாறி இருந்தாலும் இப்போவும் சரி இனிமேலும் சரி மிஸஸ்.இந்திரதனுஷா மட்டும் தான் இருப்பீங்க.. இதுவரைக்கும் இதுல எந்த மாற்றமும் இல்லை.. இனிமேலும் வராது.. என்ன மிஸஸ்.இந்திரதனுஷ்.. நான் சொல்றது சரிதானே?”

அவன் கேட்கவும் இப்போது அதிர்வது அவள் முறையானது.. முகம் முழுக்க கோவத்தோடு அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் வில்விழியாய் மாறி இருந்த மலர்விழி..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!