🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
விழி 02
வாயிலிலே தூணில் சாய்ந்து கொண்டு ருத்ரனின் வருகைக்காக காத்திருந்தாள் ஆலியா.
அருகில் நின்று அவளைத் தான் கண் இமைக்காது சைட் அடித்துக் கொண்டிருந்தான் நிதின்.
அவனது பார்வையை உணர்ந்தாலும் கண்டும் காணாதது போல் ஆலியா வெளிப் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவன் பார்வையை தாங்க முடியாது போக திரும்பி நிதினைக் கனல் கக்க முறைத்தாள் ஆலியா.
“எதுக்கு நீ இப்போ முழுங்குற மாதிரி பார்த்து இர்ரிடேட் பண்ணுற?” கண்களால் எரித்தாள் அவள்.
“என் ஆளு நான் பார்ப்பேன் ரசிப்பேன். நீ உன் வேலையை பாரு” தோளைக் குலுக்கினான் அவன்.
“நிதின். ஆளு கீளுனு சொல்லாத” பல்லைக் கடித்தாள்.
“உனக்கு எப்படினு தெரியாது. ஆனா நான் உன்ன லவ் பண்ணுறேன்”
“பட் நான் தான் உன்ன லவ் பண்ணலயே” கையை விரித்தாள் ஆலியா.
“அதுக்கு என்ன? ஐ லவ் யூ”
“எனக்கு உன் மேல நிறைய மதிப்பு இருக்கு நிதின். சும்மா சும்மா ஒவ்வொன்ன சொல்லி அத கெடுத்துக்காத ப்ளீஸ் டா”
“நான் உன் கிட்ட மதிப்பு மரியாதைய எதிர்பார்க்கல. எனக்கு உன் காதல் ஒன்னு மட்டும் போதும் ஆலி” காதலுடன் மொழிந்தான்.
“நி…தீஈஈன்” என பற்களை நறநறத்தாள்.
“இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது செல்லம். உன் கிட்ட ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்க. நீ யாரை வேணா லவ் பண்ணு என்ன வேணா பண்ணு. ஆனா நீ எப்படி இருந்தாலும் நான் உன்ன லவ் பண்ணுவேன். அத நீ மனசுல வெச்சிக்க. எப்போவும் எந்த சூழ்நிலையையும் என் காதல் கொஞ்சமும் மாறாது. நான் சொன்னது உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நெனக்கிறேன்”
“ஆமா இவரு பெரிய ப்ரபஸர். பாடம் நடத்திட்டு புரிஞ்சுதா இல்லையானு கேட்குறார்” காண்டாகினாள் அவள்.
“டக்கு டக்குனு சூடாகாத. சரி நீ உன் வேலையை பாரு. நான் என் அதிமுக்கியமான வேலைய பார்க்குறேன்”
“அது என்ன அதிமுக்கியமான வேலை?” கேள்வியாக நோக்கினாள்.
“என் தேவதையை சைட் அடிக்கிறத தவிர எனக்கு வேறென்ன வேலை?” என கண் சிமிட்ட, இவளோ பழிப்புக் காட்டி விட்டு திரும்பிக் கொண்டாள்.
ஒருவாறு அவர்களது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தனது காரில் வந்து சேர்ந்தான் ருத்ரன் அபய்.
“அய்ய் மாமா வந்துட்டாரு” என சிரித்துக் கொண்டே எழுந்து ஓடிச் செல்ல நிதினும் அவள் பின்னே சென்றான்.
“மாமா!” என கூப்பிட, “ஹேய் ஆலி. எப்போ வந்த?” என்றான் புன்னகைத்துக் கொண்டே.
“நான் நேற்று மார்னிங்கே வந்துட்டேன். ஆனா நீங்க தான் இல்ல. எவ்ளோ நேரம் காத்துட்டு இருந்தேன் தெரியுமா?” எனக் கேட்டாள்.
“சரி சரி. மன்னிச்சிடு தாயே”
“சரி விடுங்க. வாங்க உள்ள போகலாம்” என்று அழைத்தாள்.
“ம்ம் ஓகே” என தலையசைத்தவன் அப்போதே நிதினைக் கண்டு “டேய் நித்தி! இப்போவா வந்த நீ?” எனக் கேட்டான்.
“நாங்க எப்போதோ வந்துட்டோம் சாரோட கண்ணுக்கு தான் எங்கள தெரியல” என கோபித்துக் கொண்டான்.
“நோ கோபம். சும்மா வாடா” என அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
“தீஞ்ச சோறு எதுக்கு நீ என் ப்ரெண்ட் கிட்ட வர்ர? போ போ” தம்மோடு வந்த ஆலியாவை விரட்டினான்.
“ஹலோ அவர் என் மாமா! மூடிட்டு வா” முறைப்பை சிந்தினாள்.
“ரொம்பத் தான்” என நொடித்துக் கொள்ள, “போடா காஞ்ச பிஸ்கட்”என்றாள் அவள்.
“ஆரம்பிச்சுட்டீங்களா உங்க டாம் அன்ட் ஜெர்ரி சண்டையை. முடியலப்பா” என சிரித்தான்.
“சித்தும்மா! உங்க அருமைப் பையன் வந்துட்டான். ஓடி வாங்க” என கத்தினான் நிதின்.
“இதோ வரேன் நித்தி” என வந்தார்.
“ம்மா பார்த்து மெதுவா வாங்க” ருத்ரன் எச்சரிக்க, “நான் என்ன கிழவியா விழுகுறதுக்கு?” என்று கேட்டார் அவர்.
“நீங்க கிழவி இல்ல சித்தும்மா. குமரி” என நிதின் சிரிக்க, “அவன் கிடக்குறான். நீ உள்ள வா ருத்ரா” என்று அழைத்தார் தாய்.
“சித்தும்மா! நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. இவ்வளவு நேரமா என்னோட பேசிட்டு இருந்துட்டு இப்போ உன் பையன் கூட கொஞ்சுறீங்க”
“நீ பீல் பண்ணாத. நான் உன்னை கொஞ்சுறேன்” என்றான் ருத்ரன்.
“போடா நாதாரிப் பயலே… என் ஆளு முன்னாடி இப்படி எல்லாம் சொல்லாத” என சொல்ல ஆலியா அதிர்ந்து போய் முறைத்தாள்.
“அது யாருடா உன் ஆளு” ஆராய்ச்சிப் பார்வையை வீசினார் சித்ரா.
“வேற யாரு? என் சித்தும்மா தான். நீங்க தானே என் டார்லிங்” என சமாளித்து வைத்தான்.
“போடா படவா” என அவன் தலையில் தட்டினார்.
ஆலியா “அத்தை இன்னும் நாலு கொட்டு கொட்டு அப்போவாவது அவன் திமிரு அடங்குதானு பாக்கலாம்”
“வேணும்னா நீ வந்து கொட்டு தாராளமா ஏத்துக்குறேன்” என நிதின் சொல்ல, “நிதின்ன்ன்” என்று பல்லைக் கடித்து விட்டுச் சென்றாள் அவள்.
“நித்தி ஏன்டா உன் ஆளு கோச்சிட்டு போகுது? இன்னும் சக்ஸஸ் ஆகலையா” என காதில் கிசுகிசுத்த நண்பனிடம், “இல்லடா மச்சான்” என்றான் பாவமாக.
“சரிடா நீ பீல் பண்ணாத நான் பிரஷ் ஆகிட்டு வர்றேன்” என தனது அறைக்குச் சென்றான்.
♡♡♡♡♡
தனது அறையில் அங்கும் இங்கும் நடந்தவாறே டென்ஷனாக இருந்தாள் ஆலியா.
“மாமா வந்துட்டார். இனியும் நாம லேட் பண்ண வேண்டாம். ஏதாவது சொல்லி திட்டினா என்ன பண்ணுறது? அவரும் இன்னிக்கு என்னை கண்ட உடனே சந்தோஷப்பட்டார் தானே? ஒருவேளை அவர் மனசுலயும் நான் இருக்கேனா? நினைக்கவே ஹேப்பியா இருக்கு.
அவர் இதுக்கு முன்னாடி கூட யாரையும் காதலிச்சதில்ல. சோ எதுவும் சொல்ல மாட்டார். நாம லேட் பண்ணிட்டே போயிட்டோம்னா ஏதாச்சும் தடங்கல் வந்து விடும். இப்போவே சொல்லுறது தான் நல்லது” என தனக்குள் பேசியவளின் மனத்தில் நிதினும் வந்து போனான்.
“இந்த காஞ்ச பிஸ்கட் வேற லவ்வு கிவ்வுனு என்னை பாடாப்படுத்துறான்..அவன் என்ன உண்மையா லவ் பண்றானா? எப்படி பண்ணினா எனக்கென்ன? என் மனசுல எப்பவுமே மாமா தான் இருக்காரு. இன்னும் இன்னும் எல்லாத்தையும் மூடி மறைச்சா இந்த நித்தி பையன் ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணித் தொலச்சிடுவான். இப்படியே போயி மாமா கிட்ட லவ்வ சொல்லிடலாம். மாமா ஓகே சொல்லனும்” என நினைத்துக் கொண்டு ருத்ரனின் அறைக்குச் சென்றாள்.
♡♡♡♡♡
இங்கு ருத்ரனும் ப்ரெஷ் ஆகி வந்தவன் கட்டிலில் சாய்ந்து கொண்டு போனை நோண்டத் தொடங்கினான்.
அறைக்கதவு தட்டப்பட நிமிர்ந்தவன் அங்கிருந்து ஆலியாவைக் கண்டு உள்ளே வருமாறு கையசைத்தான்.
“ஹேய் என்ன மேடம் கதவை எல்லாம் தட்டி பர்மிஷன் கேட்கிறீங்க? உள்ளே வா ஆலி” என்றான் எழுந்து அமர்ந்து கொண்டு.
“ஒன்னும் இல்ல மாமா. சும்மா தான்”
“ஒன்னும் இல்லாம நீ வர மாட்டியே? என்ன விஷயம்னு சொல்லு”
“மாமா அது…. அ….அது நான் எப்படி சொல்லுறது” என தடுமாற்றம் அவளை ஆட்கொண்டது.
“வாயால தான் சொல்லனும். அது மட்டும் இல்ல ஆலி. அன்னைக்கு ஒரு நாள் கால் பண்ணப்போ ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே. அதை இன்னும் சொல்லவே இல்லை நீ”
“ஆமா சொன்னேன் தான். நீங்க கூட ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே. அதை சொல்லுங்க மாமா” என ஆவலுடன் வினவினாள் அவனது மாமன் மகள்.
“நானும் சொல்லணும் தான். உனக்கு கண்டிப்பா சப்ரைஸா இருக்கும். நான் பர்ஸ்ட் சொல்லவா?”
“ஓகே சப்ரைஸா? என்னன்னு சொல்லுங்க மாமா” என்று கேட்டாள் ஆர்வமாக.
“அது…. அது வந்து” என கால் பெரு விரலால் நிலத்தில் கோலமிட்டான் ஆடவன்.
“மாமாவும் வெட்கம் எல்லாம் படறாரு. ஒரு வேளை அவர் மனசுலயும் நான் இருக்கேனோ? என் கிட்ட லவ்வ சொல்ல தான் போறார் போல. அச்சச்சோ பறக்கிறா மாதிரி இருக்கே” என மனதினுள் நினைத்தவள்,
“என்ன மாமா இப்படி வெட்கப்படுற? சட்டு புட்டுன்னு சொல்லு” என அவசரப்படுத்தினாள்.
“நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் ஆலி. என் அம்முவ ஒரு நாள் எதேச்சையா ஒரு தடவை தான் கண்டேன். ஆனா அப்போவே அவ என் மனசுக்குள்ள நுழைந்துட்டா. ரெண்டு வருஷம் தாண்டியும் என் இதயத்துக்குள்ள அப்படியே அவ இருக்கா என கண்கள் மின்ன சொல்ல ஆலியாவோ அதிர்ச்சியுடன் உடைந்து போனாள்.
இவ்வளவு நேரமாக காதலை சொல்ல தவித்து துடித்துக் கொண்டிருந்த இதயம் சுக்கு நூறாக உடைந்து இரத்தக் கடலில் மூழ்கியது.
“ஆலி! என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியாகிட்ட?” அவளது முகமாற்றம் அறிந்து கேட்டான்.
“என் மாமா மனசுல நானில்லையா?வேறு யாரோ தான் இருக்காளா?என்னால முடியல கடவுளே ஏன் எனக்கு இப்படி ஒரு நிலைமையை தந்த? ஆனா அவ தான் மாமா கண்ணிலேயே படலையே. மாமாக்கும் என்னை பிடிக்கும் தானே. என் காதலே சும்மா சொல்லி பார்க்கலாம் ஒருவேளை அவர் என்னை ஏத்துக்கிட்டார்னா” என சிந்தனையில் மூழ்கினாள்.
“ஆலி ஓய் ஆலியா! ஏன் பேசாமல் இருக்க?” என அவள் தோளை மெதுவாக தட்டினான்.
“அது சும்மா தான். உங்க அம்முவ பற்றி தான் நினைச்சேன். ஆமா இத நீங்க ஏன் சப்ரைஸா இருக்கும்னு சொன்னீங்க?” விடையறிய நாடினாள்.
“ஏன் மா இப்படி கேட்டுட்ட? அப்போதே சொல்லி இருக்கலாம் தான் ஆனா இதை உன் கிட்ட நேரிலேயே சொன்னா நீ சந்தோஷப்படுவனு தான் ஒன்னும் சொல்லல. யாருக்கு வேணாலும் நீ என் மாமா பொண்ணா தெரியலாம். ஆனால் என்ன பொறுத்தவரை நீ என் செல்ல தங்கச்சி. எனக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும். உன் கிட்ட சொல்லனும் தானே? நீ யூ.எஸ் போயிருந்தப்போ சொல்லல. நேரில் வரும் வரை இருந்தேன்”
இதைக் கேட்ட ஆலியாவுக்கு சிறிது குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.
“ருத்ரா மாமா என்னை அவர் தங்கச்சியா நினைச்சு தான் அவ்வளவு பாசமா இருக்காரு. ஆனா நான் இப்படி காதல் என்று சொல்லி அவர் பாசத்தை கொச்சைப்படுத்திட்டேனே. இது தெரிஞ்சா மாமா ரொம்ப கவலைப்படுவார். இப்படியே சொல்லாம விட்டுடலாம். ஐ அம் சாரி மாமா இனி என் மனசுல இருந்து எப்படிப்பட்டாவது உங்களை மறந்து விடுகிறேன்” என தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டாள்.
“எதுக்கு நீ சட்டு சட்டுன்னு சைலன்ட் மோடுக்கு போயிடுற. ஏன் கண்ணு கலங்குது ஆலியா?” என வினவினான்.
“நீங்க என்ன உங்க தங்கச்சியா பார்க்கிறீங்கனு சொன்னதை கேட்கும் கண்ணு கலங்கிருச்சு மாமா” கஷ்டப்பட்டு பொய் சொன்னாள் அவள்.
“இதுக்கு போய் யாராவது அழுவாங்களா? நீ எப்பவும் ஹேப்பியா இருக்கனும் டா. ஏன்னா நீ நம்ம குடும்பத்தோட குட்டி இளவரசி” என்று சிரித்தான்.
“ஹ்ம்ம் ஓகே மாமா. நான் வரேன்” என்று விட்டு கண்களை துடைத்துக் கொண்டு ஓடிச் சென்றாள்.
♡♡♡♡♡
பாடசாலை விட்டு வந்தவள் சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டின் முன் இருந்த கார்டனிற்கு சென்றாள் அஞ்சனா…
அவளுக்கு பூக்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவளது கைவண்ணத்தில் கார்டன் அழகுடன் இருந்தது. மாலை வேளையில் அங்கு தான் ஏதாவது செய்து நேரத்தைக் கழிப்பாள்.
சொல்லப் போனால் தனிமையில் வாழும் அவளுக்கு அதில் மலர்ந்திடும் பூக்கள் தான் நண்பர்கள். அவளது அம்மாவுக்கு மல்லிகைப்பூ என்றால் பிடிக்கும் என்பதில் நிறைய மல்லிகைப்பூக்கள் அங்கு வீற்றிருந்தன.
அந்த செடி அருகில் சென்று ஒரு மல்லிகைப்பூவை தன் மலர்க் கையால் மென்மையாய் வருடினாள் அஞ்சு.
“ஹேய் மல்லிப்பூ! எப்படி இருக்க? உன் வாசனை மூக்கைத் துளைக்குது தெரியுமா. நீ அசைஞ்சி அசைஞ்சு சிரிக்கிறியா ம்ம் புரியுது. உனக்கு எதுக்கு சிரிப்புக்கு பஞ்சம்? உன்னை மாதிரி, எல்லோரும் மாதிரி நானும் சிரிப்பேன் தான். ஆனா அதுக்கு பின்னாடி மறைஞ்சி இருக்குற வலியும் இழப்புகளும் எனக்கு மட்டும் தான் தெரியும். இங்கே பாரு உனக்கு தான் எத்தனை ப்ரெண்ட்ஸ்? ஆனா எனக்கு உரிமையா பெயர் சொல்லி கூப்பிட யாருமே இல்லை.
என் அப்பாம்மாவ எவ்ளோ மிஸ் பண்ணுறேன் தெரியுமா? அவங்க மடியில படுத்துக்கனும். எல்லா விஷயத்தையும் அவங்க கூட ஜாலியா ஷேர் பண்ணிக்கனும். அவங்க கையால சாப்பிடனும் இப்படினு பல தரப்பட்ட ஆசைகள் கனவுகள் ஏக்கங்கள் எனக்குள்ள இருக்கு… அது என்னைக்குமே நனவாகாதுல.
அது மட்டுமல்ல என் ஸ்கூல்ல இருக்கிற டீச்சர் ஒருத்தர் சொன்னா நான் இழந்த அத்தனை அன்பையும் சந்தோசத்தையும் ஒட்டு மொத்தமாக எனக்கு தர ஒரு ராஜா வருவார்னு. ஆனா எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கையே இல்ல. உறவுனு சொல்லிக்க யாருமே இல்லாத என்ன யாரு தான் கல்யாணம் பண்ணிப்பாங்க? அதுக்காக எனக்கும் எந்த ஆசையும் இல்லனு சொல்லல. நானும் சாதாரண விருப்பங்கள் உள்ள ஒரு பொண்ணு தான்.
எனக்குனு வர்ரவன் எனக்குனே பிறந்தவனா இருக்கனும். என் நியாயமான விருப்பங்கள மதிக்கனும். பார்த்த அந்த நிமிஷமே அவர் கிட்ட நான் ஏதோ ஒரு வகையில பாதுகாப்ப உணரனும். அவர் கூட இருக்குற நேரங்களில் அவர் முகத்த பார்த்தாலே என் காயங்கள் ஆறி போயிடனும். எல்லாத்தையும் விட மேலா எனக்கு ரொம்ப பிடிச்ச என் டீச்சர் வேலைய அவரும் மதிக்கனும்.
இப்படி ஒன்னில்ல ரெண்டில்ல நிறையவே ஆசைகள் இருக்கு. ஆனா இதையே நெனச்சி நெனச்சி நடக்காத ஒன்னுக்காக உருகி ஏங்கித் தவிக்கிற பொண்ணும் நான் இல்ல….” என தளர்ந்த குரலில் பேசினாள்.
அவளும் சாதாரண உணர்வுகள் உள்ள ஓர் பெண் அல்லவா…..???ஆனால் அஞ்சனா கலங்கியது என்னவோ சில நொடிகள் தான்.
“ரொம்ப பேசி உன்னை காண்டாக்கிட்டேன் போல. இரு உனக்கு தண்ணி ஊத்தறேன்” என சட்டென தன்னை பழைய நிலைக்கு மாற்றிக் கொண்டவள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினாள்.
கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து தாவணியை இடையில் சொருகிக் கொண்டு ஒரு காலை நிலத்தில் ஊன்றி மறு காலை மடக்கி அவள் நின்ற அந்த கோலம் கூட அழகாகத் தான் தோன்றியது.
தன் சோர்வை நீக்க ஒரு பாட்டை பாடிக் கொண்டே இருந்தாள் அஞ்சனா.
இவ்வாறு தனக்குள் பற்பல விருப்பங்கள் தீரா ஆசைகள் இருந்தாலும் அதை மறைத்து பெரிதாக அலட்டிக் கொண்டு கண்ணீர் வடிக்காது திடமாக நிற்பவள் தான் அஞ்சனா!
சோதனைகள் பலவற்றை தாண்டி தான் சாதிக்கலாம் அன்றோ? அதே போல பல இழப்புகளை சந்தித்த காரிகையின் கண்ணீரை தனதன்பால் துடைத்தெறிய வருவானோ அவளின் மணவாளன்?
தொடரும்………♡
ஷம்லா பஸ்லி