01. தணலின் சீதளம்

4.4
(7)

சீதளம் 1

“மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது..”

என்ற பாடல் அந்த ஊரில் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அதிகாலை வேலையிலேயே.

அதிகாலைய வேளையாக..?
இங்கு மக்கள் அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தால் அதிகாலை போலவே தெரியவில்லையே.
“ஆமாம் மக்களே நாம வந்திருப்பது மதுரை தாங்க.
நல்ல தரமான ஒரு ஜல்லிக்கட்டு பாத்துட்டு போவோம் வாங்க”

ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் என்றால் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

ஆம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க தான் வந்திருக்கோம்.

ஒரு பக்கம் மாரியம்மன் இன்னொரு பக்கம் முத்தாரம்மன் என்று கம்பீரமாக வீற்றிருக்க, இருவருக்கும் இடையில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருக்க,

தைமாதம் மூன்றாம் நாளான இன்று வாடிவாசலில் சீறிவரும் காளைகளையும் அவைகளை அடக்கும் வீரர்களையும் என அந்த விளையாட்டை காண ஆண் பெண் என மக்கள் கூட்டம் அலைமோதியது.

பல புகழ்பெற்றால் தொலைக்காட்சிகளில் கூட இந்த விழா நேரலையாக காட்சி பெறும்.

அங்கு உள்ள மக்கள் தைத்திருநாளை எவ்வளவு விமர்சையாக கொண்டாடுகிறார்களோ அதே போலவே தை மூன்றாம் நாளான இன்று அங்கு வாடி வாசலில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் அவ்வளவு விமர்சையாக நடக்கும்.

நூற்றுக்கும் மேலான காளைகள் 1000க்கும் மேலான வீரர்கள் என அந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

அதேபோலவே கோடிக்கணக்கில் ஆன பரிசுகளும் அள்ளிக்கொண்டு போவார்கள் வீரர்களும் மாட்டை வளர்ப்பவர்களும்.

அப்படி இருக்கையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஜல்லிக்கட்டு என்பதால் அந்த சுற்று வட்டார ஊர் மக்களும் ஏன் வெளிநாட்டில் இருந்து இருப்பவர்கள் உட்பட ஆவலாக காத்துக் கொண்டிருந்தது இந்த நாளைத் தான்.

ஜல்லிக்கட்டு நம் நாட்டின் வீர விளையாட்டு என்று சொல்வார்கள்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம் தடை விதிக்கப்பட்டது.

ஏனென்றால் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகள் மிகவும் வன்மையாக கொடுமைப்படுத்தப்படுகிறது என்று சொல்லி இரண்டு வருடமாக ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று அரசாங்கம் சொல்லியது.

இப்பொழுது அந்த தடை நீக்கப்பட்டு முதலாக நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக அனைத்தும் தயாராக இருந்தது.

அங்கு வாடி வாசலில் மாடுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்க, வீரர்களோ ஒவ்வொரு குழுவாக நின்று கொண்டு வாடி வாசலில் இருந்து வெளிவரும் காளையை அடக்குவதற்கு தயாராக இருந்தார்கள்.

“டேய் மாப்பு இன்னைக்கு நடக்கப் போற இந்த ஜல்லிக்கட்டுல அந்த வீராவை அடக்கி அவனுக்கு நான் யாருன்னு காட்டணும்டா”

என்று ஒரு கையால் தன்னுடைய மீசையை முறுக்கியபடி இன்னொரு கையால் வண்டியின் ஆக்சிலேட்டரை திரிக்கிய படியும் தனக்கு பின்னே அமர்ந்திருக்கும் தன் நண்பனுடன் பேசிக்கொண்டு வந்தான் கதிரவன்.

பின்னி அமர்ந்திருந்த அவனுடைய நண்பனான ரகுவந்தன்,

“ ஆமா மச்சி இத்தனை வருஷமா அந்த வீராவை அடக்குறதுக்கு யாருமே முன்வரல. அத பாத்தாலே எல்லாரும் பயந்து போயிட்டாங்க அப்படி என்ன அந்த காளையில இருக்கு. அதுவும் எல்லா மாட்டை போல தானே. இந்த முறையாவது வீராவை அடக்கிடலாம்னு காத்துகிட்டு இருந்தா இந்த கவர்மெண்ட் காரங்க ஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சி நம்மளுடைய ஆசையில மண்ணள்ளி போட்டுட்டாங்க.

ஆனா பரவால்ல மச்சான் இப்பதான் தடையெல்லாம் நீக்கி ஜல்லிக்கட்டு ஆரம்பம் ஆகிட்டே. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் நடக்க போற இந்த ஜல்லிக்கட்டுல நீ அந்த வீராவை மட்டும் அடக்கிட்டேன்னு வையி அதுக்குப் பிறகு அந்தப் பைய வெளிய தலை காட்டவே முடியாது” என்று தன்னுடைய நண்பனுக்கு உத்வேகம் கொடுத்தான் ரகு.

கதிரவனோ,
“ ஆமாடா சின்ன வயசுல இருந்து அவனுக்கும் எனக்கும் செட்டே ஆகாது.
பள்ளிக்கூடத்துல ஒன்னா படிக்கும்போது கூட எப்போ பாரு அவன் தான் என்ன பின்னுக்கு தள்ளி ஜெயிச்சுகிட்டே இருப்பான் இப்ப வரைக்கும் அவன் தான் ஜெயிச்சுகிட்டே இருக்கான். இந்த முறை கண்டிப்பா நான் ஜெயிக்கணும் டா ஜெய்ச்சி அவன் மூஞ்சில கரிய பூசணும்”
என்று சூல் உரைத்தான் அவன்.

இருவரும் பேசிக்கொண்டே வர வாடிவாசலும் வந்தது.

அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தன்னுடைய புல்லட்டை நிறுத்தியவன் தன் நண்பனுடன் உள்ளே சென்றான்.

அங்கு பல வீரர்கள் பத்து நபர்கள் இருபது நபர்கள் என்று ஒவ்வொரு குழுவாக தங்களுக்கு என அடையாளமாக ஒவ்வொரு கலரில் அவர்களுடைய பெயர்கள் அடிக்கப்பட்டு டி-ஷர்ட் அணிந்திருக்க,

கதிரவனும் ரகுவம் தங்களுக்கு என அடிக்கப்பட்ட பச்சை கலர் டி-ஷர்ட்டை எடுத்தவன் தான் அணிந்திருந்த டி ஷர்ட்டை ஒரு கைவலியாகவே உருவி எடுத்து அந்த பச்சை நிற டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு நடக்க, பல பெண்களின் பார்வையோ அவன் மேல் விழுந்தாலும் அவனுடைய பார்வையோ எந்த பெண்ணின் மேலும் விழவில்லை.

ஆனால் ரகுவோ, பெண்கள் மட்டுமல்லாமல் அங்கு நிற்கும் ஆண்டிகளையும் கூட விட்டு வைக்காமல் வஞ்சனை இல்லாமல் அவன் கண்கள் அனைவரையும் பார்த்து வைத்தது.

பாவம் அவன் மேல் தான் பெண்கள் ஆண்டிகள் அவர்களை விடுங்கள் அங்கு உள்ள கிழவிகளின் பார்வைகள் கூட அவன் மேல் படவில்லை.

சோ சேட் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராகு.

“இந்தா புள்ள இன்னைக்கு இங்க ஜல்லிக்கட்டு போட்டி நடக்க போகுது. ஆனா நீ என்னடான்னா சிகப்பு கலர்ல தாவணி போட்டு வந்திருக்க. இங்க எவ்வளவோ மாடுகள் வரும். அதுங்க பார்த்துச்சுனா சும்மா இருக்காது. உடனே போய் நீ வேற கலர்ல தாவணி இருந்தா போட்டு வா இல்லனா சொல்லு நான் என்னோடத தாரேன்”

என்று வெளியூரில் இருந்து வந்திருக்கும் தன்னுடைய தோழி சிகப்பு நிறத்தில் தாவணி அணிந்திருக்க அந்த ஊரைப்பற்றி தெரிந்தவளோ தன்னுடைய தோழிக்கு அறிவுரை கூறினாள்.

ஆனால் அவளுடைய தோழியோ அதை எல்லாம் அசட்டையாக நினைத்துக் கொண்டு,

“ என்னடி நீ இப்படி பேசுற சென்னையில ஒரு பெரிய சிட்டில படிச்சுக்கிட்டு இப்படி சில்லித் தனமா பேசுற. இன்னுமா இதெல்லாம் நீங்க நம்புறீங்க.
இங்க பாரு நம்ம வெட்னரி டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கோம். விலங்குகளை பத்தி நம்மளுக்கு எவ்வளவோ தெரியும். அது எல்லாம் எவ்வளவு ஸ்வீட் தெரியுமா? நீ என்னடான்னா சிகப்பு துணியை பார்த்தா மாடு முட்டும் பச்சை துணியை பார்த்தா எலி கடிக்கும் அப்படி இப்படின்னு பழைய பஞ்சாங்கம் படிச்சிக்கிட்டு இருக்க. போடி எனக்கு இது தான் பிடிச்சிருக்கு நான் இதைத்தான் போடுவேன். இந்த மாதிரி சில்லியான விஷயங்கள் எல்லாம் நான் நம்ப மாட்டேன்” என்றாள் அந்த பட்டணத்துக்காரி மேகா.

“அடியே மேகா இது ஒன்னும் நாய்க்குட்டியோ பூனைக்குட்டியோ இல்ல ஆட்டுக்குட்டியோ இல்ல மாடுடி. இன்னைக்கு ஜல்லிக்கட்டு வேற எல்லா காளை மாட்டுக்கும் கொம்பு நல்லா ஊச்சியா சீவி வச்சிருப்பாங்க. பல மாடுகள் வெறி புடிச்ச மாதிரி தான் இருக்கும். சொன்னா கேளுடி தயவு செஞ்சு இந்த தாவணிய மாத்திட்டு வா”

“ இல்ல பூங்கொடி என்னால முடியாது நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அப்பரம் இங்க பாரு மதம் புடிச்ச யானையே வந்தாலும் மடியில போட்டு தடவி கொடுக்குற ஆளு நானு இது ஜஸ்ட் மாடுங்க தானே. அப்படியே பாசமா கூப்பிட்டா தலையை குனிஞ்சு கிட்டு பக்கத்துல வந்து நிக்க போது. இதுக்கு போய் இவ்வளவு பேசுற”

“ எப்படியோ போய் தொலை இவ்வளவு சொல்லியும் கேட்கலைன்னா என்ன செய்கிறது. ஆனா ஒன்னு மேகா எப்பவும் நீ என் கூடவே தான் இருக்கணும் சரியா. தனியா போக கூடாது இந்த ஊர் வேற உனக்கு புதுசு”

என்று தன்னுடைய தோழிக்கு பல அறிவுரைகள் கூறியே தன்னுடன் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தாள் பூங்கொடி.

அவளுடன் மேகாவும் அவள் ஊரில் உள்ள தோழிகளும் என நால்வரும் அங்கு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு வந்தவர்கள் நேராக முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கிக் கொள்ள பூங்கொடியோ,

“இங்க பாருங்கடி இன்னைக்கு என் ஆளு எங்க வீட்டு மாட்ட புடிச்சு என் அப்பன் கிட்ட என்ன பொண்ணு கேட்கிறேன்னு சொல்லி இருக்கான்டி அவன் கண்டிப்பா ஜெயிக்கணும்னு இந்த முத்தாரம்மன் கிட்ட வேண்டிக்க வந்து இருக்கேன் நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்கடி”

என்று தன் தோழிகளிடம் தனக்காக வேண்டிக்க சொல்ல அவர்களில் ஒரு தோழியோ,

“ என்னங்கடி இப்படி சொல்றா, இவ ஆளு ஏதோ நம்ம வீரனை புடிக்க போற மாதிரி இப்படி பயப்படுறா இங்க பாருடி பூங்கொடி உன் வீட்டுக் மாட்டை யார் வேணாலும் அடக்கிடலாம். உன் ஆளு கண்டிப்பா புடிச்சிருவான் நீ பயப்படாத புள்ள” என்று சொல்ல இன்னொரு பெண்ணோ,

“ அது என்னடி இவங்க வீட்டு மாட்ட யார் வேணாலும் புடிக்கலாம்னு இவ்ளோ உறுதியா சொல்ற”

என்று அந்தப் பெண் கேட்க அதற்கு மற்றொரு பெண்ணோ,

“ இருக்காதா பின்ன நம்ம ஊர்ல வீரா தான் முதல் இடம். அவனுக்கு முன்னாடி எல்லா மாடுமே டம்மி மாடுங்க தான் யார் வேணாலும் புடிக்கலாம்.

அடியே பூங்கொடி உண்மையிலேயே உன் ஆளுக்கு உன் மேல ரொம்ப லவ் இருந்துச்சுன்னா இன்னைக்கு நடக்க போற போட்டியில வீராவை பிடிக்க சொல்லு அப்புறம் உங்க அப்பன் கிட்ட எதுக்கு சம்மதம் கேட்கணும். நாங்களே மஞ்ச கயித்தை எடுத்து கட்ட சொல்லிட மாட்டோம்”

என்று அந்த பெண் அவளை கிண்டல் செய்ய அதற்கு பூங்கொடியோ,

“ ஏண்டி நான் என் காதல் ஜெயிக்கணும் அவன் கூட நல்லா வாழனும்னு ஆசைப்பட்டு சொன்னா நீங்க வீராவ பிடிக்க சொல்லி அவனை சாகடிக்க முயற்சி பண்றீங்களா போங்கடி நீங்க ஒன்னும் எனக்காக வேண்டிக்க வேண்டாம் நானே என் ஆளுக்காக வேண்டுகிறேன்” அங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் முத்தாரம்மனை வணங்கினாள்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மேகாவோ,

“ என்னடி இந்த ஊர்ல வீராங்கிற மாட்ட தவிர மத்த எல்லா மாடும் சுத்த வேஸ்ட்ங்குற மாதிரி சொல்ற சரி. அந்த வீராங்கிற மாடு அப்படி என்ன ஸ்பெஷல்”

என்று இதுவரை இருந்த தன்னுடைய சந்தேகத்தை அவள் கேட்க, அதற்கு அந்தப் பெண் பதில் கூறுவதற்கு முன்பு அந்தக் கோயிலுக்குள் வந்த பஞ்சு மிட்டாய் தலையோடு கடவா மீசையோடு வந்த ஒரு பெரியவர் அவர்களின் பேச்சை கேட்டு விட்டு,

“ அட என்ன புள்ள இப்படி கேட்டுட்ட அசலுரா நீ , எங்க வீராவ பத்தி நான் சொல்றேன் கேளு”
என்றவர்,

“எங்க வீரா இதுவரைக்கும் எந்த போட்டியிலும் தோற்றதே கிடையாது. அவன இதுவரைக்கும் யாரும் பிடிக்க முன் வரலை. அவனைப் பார்த்தாலே பத்தடி தள்ளி தான் நிப்பாங்க. அவன் வர்றான்னு தெரிஞ்சாலே அம்புட்டு எழவட்டங்களுக்குமே அள்ளு விடும்.
அட சொல்லிக்கிட்டு இருக்கும்போதே எங்க வீரா வந்துட்டான் பாரு” என்று அவர் கை காட்ட அங்கு ஒரு குட்டி யானை வாகனத்தில் அழைத்து வரப்பட்டான் வீரா.

நல்லா ஐந்து அடி உயரத்தில் ஜல்லிக்கட்டு காளை என்றால் அதற்கு பொருத்தமான உருவம்.
கூர் விழிகள்.
ஒன்றை அடிக்கு மேல் இருந்த அவனுடைய இரண்டு கொம்புகளை கூர்மையாக சீவி விட்டிருந்தார்கள். அவனுடைய கருப்பு நிறத்தில் சும்மா ராஜா தோரணையாக தன்னுடைய திமிலை சிலிப்பியவாறு அந்த குட்டியானை வாகனத்தில் இருந்து இறங்க, பார்க்கவே அவ்வளவு பயங்கரமாக இருந்தது.

20 ரேட்டிங் வந்தால் உடனே அடுத்த அத்தியாயம் பியர்ஸ்🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!