03. தணலின் சீதளம்

5
(5)

சீதளம் 3

அடுத்தடுத்து மாடுகள் வந்த வண்ணம் இருக்க வீரர்களும் சில மாடுகளை அடக்கியும் சில மாடுகளை அடக்க முடியாமலும் சென்று கொண்டிருக்க அங்கு விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது.
அப்பொழுது பூங்கொடியின் வீட்டின் மாடு களத்தில் இறங்க அவளுடைய காதலனான சந்துருவின் மேல் அவளுடைய பார்வை படிந்தது.
அவனும் அங்கு வீரர்களுடன் இருந்தவன் இவர்களுடைய மாடு வரப்போகிறது என்று மைக்கில் சொல்ல அதைக் கேட்டவன் அந்த கூட்டத்தில் தன்னுடைய காதலியான பூங்கொடியை தேடினான்.
ஒரு கட்டத்தில் அவளையும் கண்டு பிடிக்க பூங்கொடியும் அங்கே இருந்தே சைகையால் கையை காட்டி “ஆல் தி பெஸ்ட்” என்று கூற அவனும் அதை கண்டு புன்னகைத்தவன் சரி என்று தலையை ஆட்டியவாறு மாடு வரவும் அதை சில போராட்டங்களோடு தான் அதை ஒரு வழியாக அடக்கி விட்டான்.
அதை கண்ட பெண்கள் கூட்டமோ “ஓஓஓ” என்று கத்தியவாறு பூங்கொடியை கட்டி அணைத்தார்கள்.
“ என்னடி அடுத்து உங்க கல்யாணம் தான ஒரு வழியா உன் ஆளு சொன்னது போலவே மாட்ட அடக்கியாச்சு. கல்யாண பொண்ணு ரெடி ஆகிட்டாங்க போல இருக்கே” என்று கிண்டல் செய்ய அவளும் வெட்கத்தில் நானிச் சிவந்தாள்.
இப்படியே நேரம் சென்று கொண்டிருக்க அங்கு இருப்பது சற்று போர் அடிக்க உடனே தன்னுடைய பார்வையை அங்கு சுற்றி இருந்த இடங்களில் அலைய விட்டாள் மேகா.
அப்பொழுது அவள் கண்ணில் பட்டது என்னவென்றால் அங்கு ஒரு மரத்தில் ஒரு புறா ஒன்று காலில் கயிறு கட்டப்பட்டு ஒரு கிளையில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது பறக்க முடியாமல்.
அதை கண்டு கொண்ட மேகாவோ,
‘ அச்சச்சோ பாவம் அந்த புறா இப்படி கயத்துல மாட்டிக்கிச்சு பறக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்படுது’ என்று யோசித்தவள் உடனே அந்த மரத்தின் அருகே சென்று அந்த புறாவை தன்னுடைய கையில் பிடித்தவள் அதன் காலில் மாட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து கொண்டிருக்க,
அப்பொழுது போட்டியில் கலந்து கொண்ட ஒரு மாட்டை அதன் உரிமையாளர் அது வீரர்களிடம் பிடிபட்டுவிட்டதால் தான் தோற்று விட்டோம். இவ்வளவு நாட்களாக அதற்கு பார்த்து பார்த்து தீனிகள் வாங்கிப் போட்டு அதை நன்றாக ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்து கொண்டு வந்தவருக்கோ மிகுந்த ஏமாற்றம் அடைய அந்த நேரம் மூண்ட கோபத்தால் தன்னுடைய கையில் வைத்திருந்த கட்டையால் மாட்டை அவர் அடிக்க,
அந்த மாடோ அவருடைய அடித்த அடியின் வலி தாங்க முடியாமல் சீறிப்பாய்ந்து அவரை தள்ளிவிட்டு வேகமாக ஓடி வர எதிரே வந்த ஆட்களோ அதனுடைய வேகத்தை கண்டு எங்கே தங்களை முட்டி விடுமோ என்று அஞ்சி ஒவ்வொரு திசையாக ஒழிய ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது தன்னுடைய அருகில் நின்ற மேகாவை தேடிய பூங்கொடியோ அவள் தன் அருகில் இல்லை என்று தெரிந்ததும்,
“ ஐயோ இவ வேற அடிக்கடி எங்க தான் போவானு தெரியல. எவ்வளவு சொல்லியும் இவ கேட்கவே மாட்டா போல இருக்கே எங்க போனா” என்று அவளைத் திட்டியவாறு அவளைத் தேட,
பக்கத்தில் ஒரு மரத்தின் அடியில் தன்னுடைய கையில் புறாவை வைத்துக் கொண்டிருந்த மேகாவை பார்த்தவளோ,
“ அடியே மேகா என்னடி செய்ற நீ” என்று இங்கிருந்தவாறே அவளைக் கேட்க அவளோ,
“ இரு பூங்கொடி இந்த புறா கயித்துல மாட்டிக்கிச்சு பாவம் பறக்க முடியாம கஷ்டப்படுது அதை எடுத்துவிட்டு இருக்கேன்” என்று சொல்ல சற்றே அந்த இடத்தில் கொஞ்சம் கூச்சலாக இருக்க என்னவென்று மேகாவின் மேலிருந்த பார்வையை கூச்சல் வந்த திசை நோக்கி பூங்கொடி பார்க்க, அங்கோ ஒரு மாடு வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது மேகாவை நோக்கி.
வெறி பிடித்து வந்து கொண்டிருந்த அந்த மாட்டின் கண்களிலோ மேகா அணிந்திருந்த அந்த சிகப்பு நிற தாவணி தென்பட இதுவோ சீறிக்கொண்டு வந்தது அந்தத் துணியை குத்தி கிழிப்பதற்கு.
அதை கண்டு கொண்ட பூங்கொடிக்கோ சர்மமும் நடுங்கியது.
“ அடியே மேகா ஓடுடி வேகமா ஓடு மாடு வருதுடி”
என்று சொல்ல,
“ என்னடி நீ மாடு வருது பூச்சாண்டி காட்டுறியா அதுக்கெல்லாம் பயப்பட மாட்டா இந்த மேகா” என்று தன்னுடைய தோழி காலையில் தான் அணிந்த இந்த சிகப்பு தாவணியை மாற்ற எவ்வளவு சொல்லியும் தான் கேட்காததால் இப்பொழுது தன்னுடன் விளையாடுகிறாளோ என்று நினைத்து அவளை கிண்டல் செய்தவாறே திரும்பி பார்க்க, பார்த்தவளோ அப்படியே நின்று விட்டாள்.
அவள் முன்னே அவ்வளவு பெரிய மாடு அவளை நோக்கி தன்னுடைய தலையை நாலா பக்கமும் சிலுப்பியவாறே வேகமாக ஓடி வர இவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிலை போல நின்ற இடத்தை விட்டு நகரவே இல்லை.
அங்கு பூங்கொடியோ தலையில் அடித்துக் கொண்டு,
“ அடியே என்னடி புடிச்சு வச்ச செல மாதிரி நிக்கிற ஓடுடி வேகமா அங்க இருந்து ஓடு இல்லேனா மாடு முட்டிடும் டி” என்று கத்த மேகாவோ சட்டென சுயம் வந்தவள் கை கால்கள் உதற தலை தெறிக்க ஓட ஆரம்பித்தாள்.
மேகாவோ அந்த மாட்டை பார்த்து முழுவதுமாகவே பயந்து போனாள்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவள் ஓடிக் கொண்டிருக்க இங்கு பூங்கொடியோ,
“ ஐயோ காப்பாத்துங்க யாராவது காப்பாத்துங்க என் பிரண்ட மாடு மட்ட போகுது யாராவது காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டிருக்க,
அப்பொழுது கம்பீரமான ஆழுமையான ஒரு குரல், “வீராஆஆஆ” என்று தூரத்தில் இருந்து ஒரு ஆணினுடைய சத்தம் கேட்க, அவனுடைய விழிப்பில் வீராவோ வேகமாக அந்த மாட்டை நோக்கி ஓடி வந்தான்.
வேகமாக ஓடிய மேகாவுக்கோ ஒரு கட்டத்தில் கால்கள் தள்ளாட ஓட முடியாமல் மூச்சு வாங்க,
“ ஐயோ போச்சி செத்தேன்” என்று சொல்லியவாறு தன்னுடைய கண்களை மூடியவாறு மேகா நிற்க, ஒரு நிமிடமே ஆகும் அந்த மாடு அவளை குத்தி கிழிப்பதற்கு.
அவளை துரத்திக் கொண்டு வந்த அந்த மாடும் மேகாவை முட்டுவதற்கு சற்று இடைவெளி இருக்க மேகாவுக்கும் அந்த மாட்டிற்கும் இடையே குறுக்கே வந்து கம்பீரமாக நின்றான் வீரா.
அடுத்த நொடி வேகமாக வந்த புல்லெட்டில் மேகாவை இடையோடு தூக்கி தன்னுடைய வண்டியில் உட்கார வைத்தவன் சற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு, அவள் என்ன என்று சுதாரிக்கும் முன்னமே ஒற்றை கையால் அவளுடைய சிகப்பு நிற தாவணியை அவிழ்த்து எடுத்தவன் தான் அணிந்திருந்த வேஷ்டியை மறுக்கையால் உருவி அவளுடைய உடலில் இருந்து தாவணி விலகி அவளுடைய மேனி வெளியே யாருக்கும் தெரியாத அளவிற்கு தன்னுடைய வேஷ்டியால் அவளுடைய உடலை மூடினான்.
ஆனால் அவன் தன்னுடைய உடலில் இருந்து தாவணியை உருவியதையோ அவனுடைய வேஷ்டியால் தன்னுடைய உடலை மூடியதையோ உணராமல் அவளுடைய பார்வையோ வீராவையே பார்த்துக் கொண்டிருந்தது.
இமைக்கும் நொடியில் தன்னை காத்த வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் நின்ற அந்த ஆண் மகனோ,
“ ஹலோ என்ன பகல் கனவா. அட ச்சை வெளியே வா” என்று அவளுடைய தோளை தட்ட,
“ அம்மா” என்றவாறு அப்பொழுதுதான் தன் முன்னே நின்ற அந்த ஆறடி ஆண்மகனை பார்த்தாள்.
அவனை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவளோ,
“ச்சை”
என்று முகத்தை சுழித்தவள்,
“ஹலோ கொஞ்சமும் உங்களுக்கு மேனஸ் இல்லையா ஒரு பொண்ணு முன்னாடி இப்படியா நிப்பீங்க” என்று கேட்க அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன்,
“ என்னது மேனஸ் எனக்கு இல்லையா. அது சரி நான் மேனஸை பார்த்து இருந்தா நீ இந்த நேரம் செத்து இருப்ப” என்று சொல்ல அவளோ ஙவென அவனையே பார்த்திருந்தாள்.
“ என்ன லுக்கு முதல்ல உன்னை பாரு” என்று அவளுடைய மேனியை தன்னுடைய கையால் சுட்டிக்காட்ட அப்பொழுதே தன்னை குனிந்து பார்த்தவளோ தான் அணிந்திருந்த சிகப்பு நிற தாவணி பறிபோய் வெள்ளை நிற வேஷ்டி இருக்க அவளோ,
“ இது எப்படி என்கிட்ட வந்தது” என்று அவனிடமே கேள்வி கேட்க,
“ அது சரி பைத்தியமா அப்போ” என்று அந்த ஆண்மகன் சத்தமாகவே சொல்ல மேகாவுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“ ஹலோ யாரை பார்த்து பைத்தியம்னு சொல்றீங்க நான் ஒன்னும் பைத்தியம் கிடையாது என்னை பார்த்தா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரியுதா” என்று சொல்ல,
“உன்ன பைத்தியம்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது இங்க என்ன நடந்துச்சுன்னாவது உனக்கு ஞாபகம் இருக்கா” என்று அவன் கேட்க அவளோ,
“ ஐயோ ஆமா நான் எப்படி இதை மறந்தேன். நான் உயிரோட தான் இருக்கேனா ஓ மை காட் நல்ல வேலை. ஆமால்ல அவன் தானே என்ன காப்பாத்துனான். சும்மா ஹீரோ மாதிரி பறந்து வந்து என்னை காப்பாத்துனான்” சென்று சொல்ல,
“ யாரு அவன் உன்ன காப்பாத்துனானா அது சரி” என்று இவன் சொல்ல அவளோ,
“ இல்லையா பின்ன ஒரு நிமிஷம் நான் எப்படியும் அந்த மாடு முட்டி என்னோட கதி அவ்வளவுதான்னு நெனச்ச சமயம் அப்படியே சூப்பர் மேன் மாதிரி வந்து அந்த மாட்டை எதுத்து நின்னான் பாருங்க செம்மையா இருந்துச்சு” என்று வீராவை பற்றி அவள் புகழ்ந்து சொல்ல, இங்க இவனோ தலையில் அடித்துக் கொண்டான்.
‘ உண்மையிலேயே இது பைத்தியம் தான் போல’ என்று அவன் நினைத்துக் கொள்ள, அச்சமயம் பூங்கொடியும் அவளுடைய நண்பிகளும் இவர்கள் அருகே வந்து,
“ ரொம்ப நன்றி வேந்தன் அண்ணா” என்று சொல்ல,
“ அதெல்லாம் பரவாயில்லைம்மா இந்த மாதிரி ஒரு அரை லூசு பொண்ண இப்படி தனியா விடாம கூட நாலு பேர் கூட்டிட்டு போங்க” என்று அவன் சொல்லி விட,
“ என்னது அரை லூசா? ஓய் யாரை பார்த்து அரை லூசுன்னு சொல்ற இன்னொரு தடவை என்னை அரை லூசுன்னு சொன்ன இங்க பார் இந்த வீரா கிட்ட சொல்லிக் கொடுத்து உன்னை முட்ட சொல்லிடுவேன்” என்று அவள் சொல்ல அவனோ இருக்கும் இடத்தை மறந்து கலகலவென சிரித்து விட்டான்.
பூங்கொடியும் அவளது நண்பிகளும் இவளுடைய இந்த பேச்சைக் கேட்டு தங்களுடைய தலையில் தட்டிக் கொண்டார்கள்.
உண்மையிலேயே இவ அரை லூசு தான் அந்த அண்ணா சொன்னதுல தப்பு இல்லை என்று அவர்களும் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
பூங்கொடியோ,
“ அடியே இவர் யாருன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்க அந்த வீராவே இந்த அண்ணனோட தம்பி தான். இந்த அண்ணன் சொன்னதுனால தான் வீரா முன்ன வந்தது. தக்க சமயத்துல இந்த அண்ணன் தான் உன்ன வண்டில தூக்கிட்டு போய் காப்பாத்தினாங்க” என்று சொல்ல மேகாவோ அப்பொழுதும் புரிந்து கொள்ளாமல்,
“ பாத்தியா நீயே சொல்ற முதல்ல அந்த வீரா தான் வந்துச்சு. என்னை காப்பாத்துனது வீரா தான் இவர் ஒன்னும் இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!