விடியல் – 03
நகரமே உறங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரம் அது.
மணமேடையில் இருந்து அப்படியே எழுந்து வந்திருந்தவனுக்கோ இந்த இடத்தைக் கண்டு பிடித்து வருவதற்கே வெகு நேரம் எடுத்திருந்தது.
தன்னுடைய ஜீப்பை ஒரு மறைவான மரத்தடியில் நிறுத்தினான் நம் நாயகன்.
அவன் யுகேஷ் வர்மா..!
அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ்.
அவனுடன் அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான மூவர் வந்திருந்தனர்.
ரவி, சரவணன் மற்றும் மதன்.
இந்த மூவரைத் தவிர வேறு யாரையும் யுகேஷ் நம்புவதில்லை.
எந்த ரகசிய மிஷனாக இருந்தாலும் இவர்களுடன் மட்டுமே அவன் இறங்குவான்.
“மதன் ஜீப்ல இருக்க ரெனோவை அவிழ்த்து விடு.. இங்கதான் அந்த சுரங்கம் எங்கேயோ இருக்கணும்..” என்றான் வர்மா.
அடுத்த நொடி அவர்களுடைய நாய் அந்த இடத்தை மோப்பம் பிடிக்கத் தொடங்கியது.
அது ஒரு கிடங்கின் உள்ளே சென்று அதைப் பார்த்து குரைப்பதைக் கண்டவர்கள் வேகமாக அந்த இடத்தை நெருங்கினர்.
கிடங்கின் கீழே ஒரு சுரங்க இடம் இருப்பது அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தெரிய வந்தது.
“கமான் காய்ஸ்.. இதுதான் ஸ்பாட்…” என்றான் வர்மா.
மூன்று மாதங்களாக பலரை வேட்டையாடி வந்த சைக்கோ கில்லரின் மறைவிடம் இதுதான்.
பதினொரு கொலைகள்.
ஒவ்வொரு கொலையும் ஒரு மிருகத்தனமான திட்டமிடலுடன் நடந்திருந்தது.
“கில்லர கண்டு பிடிச்ச அடுத்த நிமிஷமே போட்றணும்…” என்றான் யுகேஷ் வர்மா.
“எஸ் சார்…” என்றவர்களின் மனதிலும் அந்த உறுதி இருந்தது.
“ரவி ஸ்கேன் பண்ணு. சரவணா நீ இடது பக்கம் போ… மதன் நீ வலது பக்கம்..” என யுகேஷ் மெதுவாக உத்தரவிட்டான்.
அவனுடைய குரல் பனிக்கட்டி போல இறுகியிருந்தது.
மூவரும் துப்பாக்கிகளை உயர்த்தி மெல்ல கிடங்கின் உடைந்த கதவை நெருங்கினர்.
ஒரு மறைவான பொறியை அழுத்தியதும் தரையில் ஒரு இரகசிய கதவு திறந்தது.
சுரங்கத்திற்கு செல்லும் படிகள் இருளில் மறைந்திருந்தன.
யுகேஷ் முன்னே சென்றான்.
அவனுடைய டார்ச் ஒளி சுரங்கத்தின் ஈரமான சுவர்களைத் தொட்டது.
அவர்கள் மெல்ல இறங்கினர்.
சுரங்கம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது.
திடீரென ஒரு மெல்லிய முனகல் சத்தம் அவர்களுடைய செவியை மோதியது.
யுகேஷ் சட்டென துப்பாக்கியை உயர்த்தினான்.
“நிதானம்… மெதுவா நகருங்க..” என முணுமுணுத்தான் அவன்.
சுரங்கத்தின் முடிவில் ஒரு பெரிய அறை.
அங்கே இரு இளைஞர்கள் இருந்தார்கள்.
பத்தொன்பது வயது மதிக்கத்தக்கவர்கள்.
அவர்களுடைய கழுத்தில் இரும்புச் சங்கிலிகள் பூட்டப்பட்டிருந்தன.
நாய்களைப் போல கட்டப்பட்டிருந்தனர்.
தரையில் எலும்புத் துண்டுகள் சிதறிக் கிடந்தன.
அவர்களுக்கு உணவாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த வர்மாவின் மனம் அதிர்ந்தது.
அவனுடைய விழிகள் கோபத்தில் சிவந்தன.
“சார்… என்ன கொடுமை இது… மனுஷத்தனமே இல்லையா..” என சரவணன் அதிர்ச்சியுடன் முனகினான்.
“ப்ளடி ××××××..” வாய்க்குள் திட்டினான் யுகேஷ் வர்மா.
“ரவி சரவணா.. இவங்கள மீட்கிற வேலையை பாருங்க. மதன் நீ என்கூட வா..” என அடுத்த உத்தரவை பிறப்பித்தான்.
ரவி உடனடியாக இளைஞர்களை நோக்கிச் சென்றான்.
சங்கிலிகளை உடைக்க முயன்றான்.
வர்மாவும் மதனும் சுரங்கத்தின் மற்ற பகுதிகளை சோதனையிட்டனர்.
அங்கே இரத்தக் கறைகள்.
எலும்புகள்.
சில உடைகளின் துண்டுகள்.
இன்னும் பலர் இங்கு கொலை செய்யப்பட்டிருந்ததற்கான சான்றுகள் பல இருந்தன.
வர்மாவின் இதயம் கனத்தது.
ஆனால் அந்த சைக்கோ கில்லர் அங்கே இல்லை.
“சார்… அவன் தப்பிச்சுட்டான் போல..” என்றான் மதன் கவலையுடன்.
“ஷிட்.. வாட் த ஃப…×× எப்படி தப்பிச்சான் அந்த பரதேசி..? 19 வயசு சின்ன பசங்கள நாய் மாதிரி சங்கிலியால கட்டி வச்சு எலும்பு போட்டுருக்கான்.. இந்த சைக்கோவ என் கையாலேயே கொல்லணும் மதன்..” என்ற வர்மாவின் குரல் கோபத்தில் நடுங்கியது.
ரவி சங்கிலிகளை உடைத்து இளைஞர்களை விடுவித்தான்.
அவர்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர்.
“பயப்படாதீங்க. நாங்க போலீஸ். உங்கள காப்பாத்த வந்திருக்கோம்..” என்றான் சரவணன்.
அவர்களால் நடக்க முடியவில்லை.. அவர்களைத் தூக்கி வந்து ஜீப்பில் ஏற்றினர்.
அந்த இளைஞர்களின் கண்களில் நன்றியும் பயமும் கலந்திருந்தன. பாதி மயக்க நிலையில் இருந்தனர்.
வர்மா ஜீப்பை ஓட்டி நகரத்தை நோக்கிச் சென்றான்.
நேரமோ நள்ளிரவு ஒரு மணி.
காவல்துறையில் துப்பறியும் பிரிவிற்கு அந்த சைக்கோ கில்லரின் இடத்தை பற்றிய விபரங்களை அனுப்பி வைத்தவன் மருத்துவமனையில் இளைஞர்களை ஒப்படைத்தான்.
“மதன்… கொஞ்ச நேரத்துல நீங்க எல்லாரும் உங்க வீட்டுக்கு கிளம்பிருங்க… எல்லாரும் பத்திரமா இருங்க… சரவணா… நீ மீடியாக்கு தகவல் கொடுத்துடு… ரவி… நீ ரெனோவை உன் கூட அழைச்சிட்டு போ…” என்றவன் “நான் கிளம்புறேன்…” என முடித்தான்.
“சார்…” எனத் தயங்கி அழைத்தான் ரவி.
“என்னடா… சொல்லு…” என அழுத்தமாக வந்தது வர்மாவின் குரல்.
“ஹாப்பி மேரீட் லைஃப் சார்…”
“இப்ப இதுதான் முக்கியமா…?” என அவனை முறைத்துப் பார்த்தான் வர்மா.
“என்ன இருந்தாலும் கல்யாணமும் முக்கியம் சார்…” என்ற சரவணனும் மதனும் அவனைத் தொடர்ந்து வாழ்த்த,
“அடிச்சு மண்டைய உடைக்கிறதுக்கு முன்னாடி ஓடிப்போயிருங்கடா…” எனத் திட்டிவிட்டு தன்னுடைய ஜீப்பில் ஏறிக்கொண்டவன் தன் வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினான்.
அவனுக்கோ அவ்வளவு ஆத்திரமாக இருந்தது.
எவ்வளவு முயன்றும் அந்தக் கில்லரை கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் அவனை ஆட்டிப் படைத்தது.
கோபத்தின் வீரியத்தில் ஜீப்பின் வேகத்தை இன்னும் அதிகரித்தான் அவன்.
வீட்டிற்கு வந்ததும் யாரையும் தொந்தரவு செய்யாமல் நேரே தன்னுடைய அறைக்குள் வந்தவன் அங்கே படுக்கையில் படுத்திருந்த நந்தினியைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தான்.
பின் பெருமூச்சோடு அவள் அருகே சென்று அவளின் கரத்தில் தட்ட திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள் அவள்.
திடீரென ஒரு ஆடவன் தன் முன்னே நிற்பதைக் கண்டு அலறப் போனவள் சட்டென சுதாரித்தாள்.
அவனுடைய தோற்றத்தைப் பார்த்து அவளுடைய விழிகள் அகல விரிந்தன.
உடம்பில் ஆங்காங்கே சேறு வேறு இருந்தது.
“தூங்கிடாத… ஃபிரஷ் ஆயிட்டு வர்றேன்…” எனக் கூறிவிட்டு அவன் குளியல் அறைக்குள் நுழைந்து விட அவளுக்கோ பெருமூச்சு.
பாவம் ஏதோ வேலையாகத்தான் சென்றிருக்கிறான். அவள்தான் அவசரப்பட்டு அவனைத் திட்டிவிட்டாள் என்பதை உணர்ந்தவள் எப்படியும் இப்போது வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்கப் போகிறான் என எண்ணியவாறு அவனுக்காக படுக்கையில் காத்திருக்கத் தொடங்கினாள்.
பத்து நிமிடத்தில் துண்டை இடையில் சுற்றியவாறு வந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தானே தவிர அவள் எதிர்பார்த்த மன்னிப்பையோ விளக்கத்தையோ கூறவே இல்லை.
அவனுடைய படிக்கட்டு தேகத்தைப் பார்த்தவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
“செம டென்ஷனா இருக்கு… ஐ நீட் யு நந்தினி…” என்றான் அவன் இயல்பாக.
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
திருமணத்திலிருந்து பாதியில் சென்றிருக்கிறான்.
இதோ இரவு இரண்டு மணிக்குத்தான் மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறான்.
அவளைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது. அவளுக்கும்தான்.
இன்னும் அவர்கள் பேசவே இல்லையே.
அவனுடைய தாமதத்திற்கு சிறு மன்னிப்பு கூட கேட்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே இல்லையா..?
மண்டபத்தில் அவ்வளவு ஏமாற்றங்களையும் சமாளித்து தனியாக சடங்குகளை முடித்துவிட்டு வந்தவளுக்கு அவன் மீது கோபம் கோபமாக வந்தது.
ஒருவேளை ஐ நீட் யு என்பதன் மூலம் வெறும் அணைப்பை மட்டும்தான் கேட்கின்றானோ என எண்ணியவள் “எ.. எனக்குப் புரியல…” என்றாள்.
“லைட் ஆஃப் பண்ணிட்டு வரேன்… அதுக்கு அப்புறமா உனக்குப் புரிஞ்சிடும்…” என்றவன் அவளுடைய பதிலுக்காகக் கூட காத்திருக்காமல் அறையின் மின் விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்திருந்தவளை அப்படியே தள்ளி அவள் மீது படர திணறிப் போனாள் நந்தினி.
அவனுடைய திடகாத்திரமான உடல் அவள் மீது சரிந்ததும் மூச்சடைப்பது போல இருந்தது.
காதலோடு சுமந்தால் காமத்தில் பாரம் கூட பெண்களுக்குத் தெரியாது.
ஆனால் ஏற்கனவே அவளுடைய மனதில் ஏகப்பட்ட பாரம் ஏற்கனவே ஏறி இருக்க,
அதற்கான எந்த விளக்கமும் மன்னிப்பும் கேட்காமல் அவள் மீது படர்ந்து அவளுக்கு பெரும் சுமையாக மாறிப்போனான் அந்த ஏசிபி வர்மா.
அவனுடைய கரங்கள் வேகமாக அவளுடைய ஆடையை அகற்றத் தொடங்க பதறியவள்,
“ப்ளீஸ்… இப்படி இப்போ என்ன அவசரம்…? நாம ஏன் நாளைக்கு…” என அவள் கூறி முடிப்பதற்கு முன்பே அவளுடைய உதடுகளை அழுத்தமாக கவ்விக்கொண்டான் அவன்.
முதல் இதழ் முத்தம் அவளுக்கு உணர்வுகளை கடத்தாமல் மரத்துப்போகச் செய்தது.
மிகவும் வன்மையாக அவளை கையாளத் தொடங்க துப்பாக்கி பிடித்த கரங்கள் அல்லவா அவனுடையவை. அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அவளுடைய எண்ணங்களுக்கு அங்கே மதிப்பு கொடுக்கப்படவில்லை.
அவளுடைய சுயமரியாதை படுக்கையில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
அவளுக்கு கன்னத்தில் முத்தமிடும் போது அவளுடைய கண்ணீரை உணர்ந்து கொண்டவன் சட்டென விலகி மின்குமிழை ஒளிரச் செய்ய பதறி போர்வையால் தன்னை மூடிக்கொண்டாள் அவள்.
“எதுக்கு இப்போ அழுற…? நான் என்ன உன்னை ரேப்பா பண்றேன்…?” என அவளைப் பார்த்து அழுத்தமாகக் கேட்டான் அவன்.
“எ.. எந்த புருஷனாவது முதல் ராத்திரில பொண்டாட்டிகிட்ட இப்படி பேசுவாங்களா…?” என விம்மலுடன் கேட்டாள் அவள்.
“வேற எப்படி பேசணும்…? எனக்கு இதுதான் முதல் கல்யாணம்… எந்த பொண்டாட்டிகிட்டயும் இதுவரைக்கும் பேசிப் பழக்கம் இல்லை…” என்றான் அவன்.
அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
“அப்போ நான் மட்டும் பத்து கல்யாணமா பண்ணிட்டு வந்திருக்கேன்…?” என்றாள் தழுதழுத்த குரலில்.
“ப்ச்… இப்போ எதுக்கு அழுதேன்னு சொல்லு… பாதில நிறுத்திட்டு பேசிட்டு இருக்கேன்… இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது…” என்றான் அந்த வெட்கம் கெட்டவன்.
“என்கிட்ட சாரி கூட கேட்கணும்னு உங்களுக்குத் தோணவே இல்லையா…?”
“வாட் சாரியா… நான் எதுக்குடி உன்கிட்ட சாரி கேட்கணும்…” என்றவன் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து கேட்டான்.
“கல்யாண மண்டபத்துல் இருந்து பாதிலயே எழுந்து போயிட்டீங்க… எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா… இப்போ வந்து என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல… ரெண்டு மணிக்கு வந்து தூங்கிட்டு இருந்தவள எழுப்பி உங்க தேவைய தீர்த்துக்க கூப்பிடுறது தப்பு இல்லையா…”
“இத பாரு… எமோஷனல் நாடகமெல்லாம் எனக்கு வராது… இவ்வளவு நாளும் பிரம்மச்சாரியா இருந்தேன்… இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு பக்கத்துல பொண்ண வச்சுக்கிட்டு நான் எதுக்கு விரதம் இருக்கணும்… தூங்கிட்டு இருந்தவள எழுப்பினா என்ன தப்பு… நீதானே என் பொண்டாட்டி… உன் கிட்டதானே எழுப்பிக் கேக்க முடியும்… அதுக்காக பக்கத்து வீட்ல இருக்கவள எழுப்ப முடியுமா…?” எனக் கேட்டவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
“இத பாரு… இதுக்குத்தான் நீ அழுதேன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது… நான் உன் கூட இருக்கும்போது உடம்புல ஏதாவது வலிச்சா மட்டும் சொல்லு… சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணுறேன்… மத்தபடி வேற எதுவும் என்னால பண்ண முடியாது…” என்றவன் மின்குமிழை அணைக்காமலேயே மீண்டும் அவளை நாடத் தொடங்க பதறி விலக முயன்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவளை மொத்தமாக எடுத்துக் கொண்டவன் அதன் பின்னரே அவளை விட்டு விலகிப் படுத்தான்.
விக்கித்துப் போய் அமைதியாக படுத்திருந்தாள் அவள்.
மனம் மிகவும் வலித்தது.
“கேஸ் விஷயத்துல ரொம்ப டென்ஷனா இருந்தேன்… இப்ப ரொம்ப ரிலீஃப்பா இருக்கு…” என்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிப் போய் விட போர்வையைத் தன் உடலில் சுற்றிக் கொண்டவள் அழுகையுடன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
🥀🥀
நம்ம ஸ்பைடர் மேன் மற்றும் வர்ணா அடுத்த அத்தியாயத்துல வருவாங்க..