06. தணலின் சீதளம்

5
(3)

சீதளம் 6

கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் கதிரவனுக்கு சிகிச்சை செய்யப்பட்ட டாக்டர்,
“ கையில பெரிய பிராக்சர் ஆகி இருக்கு. சரியாக ஒரு மாசம் ஆகும். அதுவரைக்கும் கைய ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க. உங்க உதவிக்கு யாரையாவது எப்பவும் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ரத்தம் கொஞ்சம் அதிகமா போயிருக்கு ரொம்ப வீக்கா இருக்கீங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகலாம்” என்று மிக நீளமாக அவனிடம் சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.
கதிரவனோ தன்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்த வீராவின் மேல் கொலை வெறியோடு இருந்தான்.
“ உன்னை கொல்லாமல் விடமாட்டேன் வீரா. இந்த கதிரையே இப்படி ஆக்கிட்டல்ல. உன்னையும் உன் அண்ணனையும் என் கையால தான் கொல்லுவேன்” என்று அவர்கள் இருவர் மீதும் மேலும் வன்மத்தை வளர்த்துக் கொண்டான் கதிரவன்.
இன்னும் அவளுடைய வன்மத்தில் தூபம் போடுவது போல வெளியே இருந்த ரகுவோ, டாக்டர் கதிரின் அறையை விட்டு வெளியே வரவும் இவன் உள்ளே வந்தவன் கதிரிடம்,
“ லேய் மாப்பு நம்ம அங்கிருந்து வந்த பிறகு அங்க என்ன எல்லாம் நடந்திருக்கு தெரியுமாடா அந்த வேந்தன் என்னல்லாம் பண்ணிருக்கான்னு தெரியுமா” என்று அவன் சொல்ல கதிரோ,
“இந்த கம்பியால அடிச்சேன்னா மண்ட கலந்து ரத்தம் வந்து எனக்கு பக்கத்து பெட்டில நீயும் எனக்கு துணையா கிடைப்ப”
“என்னடா மாப்பி இப்படி சொல்ற உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தா இப்படி சொல்றியே டா” என்று முகத்தை தொங்க போட்டான் ரகுவந்தன்.
அதில் எரிச்சல் அடைந்த கதிரவனோ,
“ பின்ன என்ன டா நானே கையில அடிபட்டு இங்க வந்து கிடைக்கேன். நான் இங்க வந்ததுக்கு அப்புறம் அங்க என்ன நடந்ததுன்னு தெரியுமான்னு என்கிட்ட கேட்கிற உன்னல்லாம் என்ன செய்யறது. எனக்கு என்னடா தெரியும். சுத்தி வளர்க்காம நேரா விஷயத்தை என்னனு தெளிவா சொல்லு” என்று கோபப்பட ரகுவோ,
“ டேய் மாப்பு உங்க வீட்டு மாட்ட அந்த வேந்தன் அடக்கி உங்க அப்பாவ அங்க எல்லாரும் முன்னாடியும் மன்ன கவ்வ வச்சுட்டான்டா” என்று அங்கு நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான் ரகுவந்தன்.
கதிர் தன்னுடைய இடது கையால் ஓங்கி பெட்டில் குத்தி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டியவன்,
“ வேந்தாஆஆஆ உன்ன சும்மா விடமாட்டேன் டா” என்று அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்தினான்.
இங்கு வேந்தன் வீட்டிலோ அன்றைய இரவு வீட்டின் வெளியே மரக்கட்டிலில் வேந்தன் மல்லாக்க படுத்து அந்த இரவு வானத்தை பார்த்துக் இன்று சந்தித்த மேகாவை நினைத்து யோசித்து கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனுக்கு என கையில் பால் டம்ளருடன் அவனை நோக்கி வந்த அவன் தங்கை அறிவழகி அவன் வானத்தை பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை கண்டு,
“ அப்படி என்ன இந்த அண்ணா இப்படி யோசிக்குது” என்று அவனின் அருகில் வர வேந்தனோ ஒரு முறை மேகாவின் நினைவில் சிரித்து விட்டான்.
இந்த காட்சியும் அறிவழகி கண்ணில் தப்பாமல் விழுந்து விட்டது.
“ என்னன்னா ஏதோ பொண்ணு வலையில மாட்டிக்கிட்ட போல இருக்கு. யார் அந்த பொண்ணு” என்று சிரிப்புடன் அவன் படுத்திருக்கும் கட்டலில் வந்து அமர்ந்தாள் அறிவழகி.
அவளைக் கண்டதும் எழுந்து அவள் அமர்வதற்கு இடம் கொடுத்து அமர்ந்தவன்,
“ அது எப்படி அறிவு சரியா பொண்ணு தான்னு கண்டுபிடிச்ச” என்று அவளிடமே திருப்பிக் கேட்டான்.
“ என்ன அண்ணா நீ அதெல்லாம் ரொம்ப ஈசி நீ முதல்ல விஷயத்தை சொல்லு யார் அந்த பொண்ணு” என்று மீண்டும் கேட்டாள்.
“அதுவா இன்னைக்கு ஒரு பொண்ணு சிவப்பு தாவணி போட்டிருந்தா அவளை ஒரு மாடு முட்டுறதுக்கு துரத்துச்சு சரி ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு காப்பாத்துனா அவ என்னடான்னா என்ன ஒரு மனுஷனா கூட மதிக்காம வீரா தான் அவளை காப்பாத்தினான்னு அவனை ஹீரோவாக்கி என்ன ஜீரோவாக்கட்டா.
இது கூட பரவாயில்லை அறிவு வீராவுக்கு முத்தம் கொடுத்துட்டு அதை பார்த்து நான், நான் பொறாமை படுறேன்னு சொல்லி முதல்ல வந்த வீராவுக்கு தான் முத்தம் இரண்டாவது வந்த உங்களுக்கெல்லாம் கிடையாதுன்னு சொல்லி என்ன ரொம்ப டேமேஜ் பண்ணிட்டா” என்று தன் தங்கையிடம் மேகாவை பற்றி அவன் சொல்ல அறிவழகியோ இவன் சொல்வதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
அதை பார்த்து கடுப்பான வேந்தனோ,
“ இப்போ எதுக்கு நீ இப்படி சிரிக்கிற முதல்ல சிரிக்கிறத நிறுத்து அறிவு” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னான்.
“ பின்ன என்னன்னா இதைக் கேட்டு யாருக்குத் தான் சிரிப்பு வராது. என் ஃப்ரெண்ட்ஸ், இந்த ஊர்ல, ஏன் இந்த சுத்து பட்டு ஊர்ல உள்ள பொண்ணுங்க அம்புட்டு பேரும் உன்ன கரெக்ட் பண்றதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணி இருப்பாங்க. ஆனா நீ யாரையுமே ஏறெடுத்து கூட பார்க்காம இருந்த. இப்ப என்னடான்னா அப்படிப்பட்ட ஆளு ஒரு பொண்ணு கிட்ட இப்படி பல்பு வாங்கிட்டு வந்து நிக்கிற இதைக் கேட்கும் போதே எனக்கு சிரிப்பு வருதுண்ணா. ஒரு வேளை அவங்களோட சாபம் தானோ என்னவோ. கண்டிப்பா அந்த இடத்துல நான் இருந்து உன் முகத்தை பார்த்து இருந்தா ஐயோ நெனச்சி நெனச்சு சிரிச்சுகிட்டு இருந்துருப்பேன்” என்றாள் அறிவழகி.
வேந்தனோ தன்னால் முடிந்த மட்டும் தங்கையை முறைத்துப் பார்த்தான்.
“இங்க பாரு அறிவு நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை. அது ஒரு லூசு புள்ள அதை பத்தி பேசாதே”
என்று தங்கையிடம் சொன்னான்.
“ சரி அண்ணா அதை பத்தி பேசல ஆனா ஒன்னே ஒன்னு. இது மட்டும் கேட்டுக்குறேன் அந்த பொண்ணு எப்படி இருக்கும் பார்க்க அழகா இருக்குமா” என்று அவளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக கேட்டாள்.
இவனோ அவளை ஏகத்துக்கும் முறைக்க,
“ சொல்லு அண்ணா அப்புறம் டைம் செட் பண்ணி என்ன எவ்வளவு வேணா முறைச்சுக்கோ இப்ப சொல்லு” என்றாள்.
“நல்லா அழகான பொண்ணுதான் என்ன அந்த கடவுள் அழக அள்ளி கொடுத்துட்டு மூளைய மட்டும் குறைவா வச்சுட்டான்” என்று சொல்ல அறிவழகியோ,
“ அண்ணா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அறிவா இருக்கிற பொண்ணுங்க அழகா இருக்க மாட்டாங்க. அழகா இருக்குற பொண்ணுங்களுக்கு அறிவு இருக்காதுன்னு சொல்லுவாங்க ஒரு வேளை இந்த பொண்ணு விஷயத்துலயும் அதே மாதிரி இருக்குமோ” என்று அவனிடம் கேள்வி கேட்க,
“ ஆமா இது ரொம்ப முக்கியம் ஒழுங்கா ஓடிப்போ” என்று தன் தங்கையை துரத்தி விட அவளோ,
“ நீ இப்படி எல்லாம் சொல்றத பார்த்தா எனக்கு அந்த பொண்ண பார்க்கணும்னு தோணுது அண்ணா” என்றாள் அறிவழகி.
“சரி நீ என்ன இன்னைக்கு இங்கேயே தூங்க போறியா இல்ல உள்ள போய் தூங்க போறியா” என்று அவன் வெகு நேரமாகியும் உள்ளே வராமல் இருக்க சந்தேகமாக கேட்டாள் அறிவழகி.
அவனோ,
இதோ இப்போ உள்ள வந்துருவேன் அறிவு நீ பால் குடிச்சிட்டியா” என்று தங்கையிடம் கேட்க அவளோ,
“ இல்லன்னா அப்பாவுக்கும் பாட்டிக்கும் அம்மா எடுத்துட்டு போயிட்டாங்க. உனக்கு நான் எடுத்துட்டு வந்தேன் இனி தான் நான் போய் குடிக்கணும்” என்று சொல்ல இவனும்,
“ சரி நேரம் ரொம்ப ஆகுது நீ போய் பாலை குடிச்சிட்டு போய் தூங்கு நான் இன்னும் கொஞ்ச நேரத்துல உள்ள வந்துடுவேன்” என்று விட, அவளும் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் அங்கிருந்து அகன்றதும் வேந்தனோ,
“ ச்சை இந்த பொண்ணால அறிவு கிட்ட என் மானமே போச்சு. ஒருவேளை அறிவு சொன்ன மாதிரி இந்த பொண்ணுக்கு அழகு அதிகமா இருக்கறதுனால தான் அறிவு இல்லையோ” என்று தன் தங்கை சொன்னதையே யோசிக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் தன்னுடைய தலையில் தட்டிக் கொண்டவன்,
“ என்னவா இருந்தா நமக்கு என்ன. இப்ப எதுக்கு நம்ம அவள பத்தி யோசிக்கணும். வேந்தா போகுற ரோடு சரியில்ல ஒழுங்கா உள்ள போய் தூங்குற வழிய பாரு” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் உள்ளே எழுந்து சென்று விட்டான்.
மறுநாள் காலையில் மேகா வேந்தன் கொடுத்த வேஷ்டியை கையெழுத்து பார்த்தவள்,
“ ஐயோ இதை அந்த ஏலியன் கிட்ட கொடுக்கணுமே என்ன செய்யலாம்” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது பூங்கொடி அவளுடைய அறைக்கு வர,
“ என்னடி இந்த வேஷ்டியவே கையில் வைத்து உத்து பார்த்துக் கிட்டு இருக்க என்ன தெரியுது அதுல” என்று அவளைக் கிண்டல் செய்வது போல கேட்க அவளோ,
ஹான் நாளைக்கு உன் ஆளு கூட உனக்கு நிச்சயதார்த்தம் நடக்குமா நடக்காதான்னு பாத்துகிட்டு இருக்கேன்” என்று இவள் சொல்ல பூங்கொடியோ,
“ அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன் நாளைக்கு நடக்கப்போற நிச்சயதார்த்தத்தில எதுவும் குழப்பம் பண்ணிராதா ஆத்தா உன் கால்ல வேணா விழிறேன். சரி சொல்லு எதுக்கு இதை பார்த்துட்டு இருக்க” என்று கேட்க,
“ இல்ல போங்கடி இத அந்த ஏலியன் கிட்ட கொடுக்கணும் அதான் எப்படி கொடுக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள் மேகா.
“என்ன ஏலியனா என்னடி சொல்ற” என்று பூங்கொடி புரியாமல் அவளிடம் கேட்க அவளோ,
“ ஆமாடி அதான் 7 அடிக்கு குறையாம வளர்ந்து இருக்காருல்ல அதான் ஏலியன்னு சொன்னேன் அவர்கிட்ட இந்த வேஷ்டியை கொடுக்கணும்”
“அடிப்பாவி அந்த அண்ணா இந்த ஊர்ல எவ்வளவு பெரிய மனுஷன். அவங்க குடும்பம் எவ்வளவு பேர் போன குடும்பம் தெரியுமாடி. அவருக்கு ஏலியன்னு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுற உன்னை எல்லாம் என்ன செய்ய”
“அந்த ஏலியன் இந்த ஊருக்கு எவ்வளவு பெரிய ஆளா வேணா இருந்துட்டு போகட்டும் எனக்கு என்ன. இப்போ இதுக்கு பதில் சொல்லு இந்த வேஷ்டியை எப்படி கொடுக்கிறது உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா”
“என்னமோ பண்ணு ஆனால் அந்த அண்ணா முன்னாடி மட்டும் தயவு செஞ்சு இப்படி எல்லாம் கூப்பிட்டு வைக்காதடி”
“ அத அந்த ஏலியன பார்க்கும்போது பாத்துக்கலாம் இப்போ இதுக்கு நீ பதில் சொல்லு”
“ சரி சரி சொல்றேன் ரொம்ப யோசிக்காத அவங்க வீடு ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வருவோம்”
என்று பூங்கொடி சொல்ல மேகாவும்,
“ ஓஓ அப்படியா அப்ப சரி சூப்பர் பூங்கொடி வா நாம இப்பவே போயி அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துரலாம்” என்று இருவரும் வேந்தனின் வீட்டிற்கு புறப்பட்டார்கள்.
வேந்தனின் வீடு இரண்டு தெரு தள்ளி இருப்பதால் இருவருமே பூங்கொடியின் வீட்டில் இருந்து நடந்தே வந்தார்கள். அங்கு மிகப் பெரிய கேட்டை திறந்து உள்ளே வந்த மேகாவோ,
“வாவ் சூப்பர் எவ்ளோ அழகா இருக்கான்” என்று வாயை பிளந்து பார்த்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!