சீதளம் 9
அவர்களுடைய வீட்டில் உள்ளே வந்த மேகாவோ அந்த வீட்டை சுற்றி பார்க்க அவர்களின் குடும்ப புகைப்படம் அங்கு பெரிதாக மாற்றப்பட்டிருந்தது.
அந்த புகைப்படத்தை பார்த்தவளின் முகமோ வேந்தனின் முகத்தை பார்த்ததும் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.
அதை அருகில் இருந்த அன்னலட்சுமி வடிவுக்கரசி அறிவழகி என மூவருடைய கண்களிலும் பதிந்து போனது.
ஆனாலும் யாரும் அதை வெளி காட்டவில்லை.
அப்பத்தா மேகாவின் அருகில் அமர்ந்தவர்,
“ உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டார்.
“ மேகா” என்றாள்.
“மேகா உங்க அப்பா அம்மா என்ன செய்றாங்க. எங்க இருக்காங்க” “என்னோட அப்பா அம்மா சென்னைல இருக்காங்க பாட்டி. அப்பா சொந்தமாக பிசினஸ் பண்றாரு. அம்மா ஹவுஸ் வைஃப் நான் சென்னையில வெட்னரி டாக்டர் படிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றாள் மேகா.
“ அப்போ நீ இந்த ஒரு பொண்ணு இல்லையாமா” என்று அவர் கேட்க,
“ஆமா பாட்டி நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இங்க பூங்கொடி அவ என்னோட பிரண்ட் அவ கூட தான் இங்க ஊருக்கு வந்து இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் நல்ல க்ளோஸ். அவ எப்ப எல்லாம் லீவுக்கு ஊருக்கு வராலோ அப்பவும் நானும் அவளோடவே வந்துருவேன்” என்றாள் மேகா.
‘ இந்த பொண்ணு பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் சென்னையில தான்னு சொல்லுது. நம்ம வேந்தன் படிக்கும் போது மட்டும் தான் சென்னைக்கு போனான் அதுக்கு அப்புறம் அவன் சென்னைக்கு போகவே இல்ல. ஒருவேளை வேந்தன் படிக்கும்போதே இந்த பொண்ண லவ் பண்ணி இருப்பானோ. அப்படின்னா நம்ம கிட்ட ஏதாவது சொல்லி இருப்பானே. இத்தனை வருஷமா மறைச்சு வைக்க வேண்டிய அவசியம் இல்லையே. இந்த பொண்ணு கிட்ட கேட்கலாமா வேண்டாமா’ என்று யோசித்துக் கொண்டிருந்தார் அப்பத்தா.
அப்பொழுது அறிவழகி அவளுடைய அம்மா கொடுத்த புடவையை மேகாவிடம் நீட்டினாள்.
“ என்ன இது புடவை எல்லாம் எனக்கு எதுக்கு?” என்று மேகா சொல்ல, அன்னலட்சுமியோ,
“ இல்லமா இது சாமி பாதத்தில் வைச்சு கும்பிட்ட புடவை. கல்யாணமாகாத வயசு பொண்ணுக்கு என் பொண்ணு கையால் கொடுக்கணும். அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் கூடி வரணும்னு வேண்டிகிட்டது. அதான் உனக்கு கொடுக்கிறோம் உனக்கு எதுவும் ஆட்சியேபனை இல்லைன்னா நீ வாங்கிக்கோமா” என்றார் அன்னலட்சுமி.
அவர் சொல்வதைக் கேட்டவள் மறுக்க தோன்றாமல் அந்த புடவையை கையில் வாங்க, மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தான் வேந்தன்.
மேகாவின் கண்களோ எதர்ச்சியாக அவள் எதிரே இருந்த மாடிப்படியை நோக்க அங்கு வேந்தனும் அவள் பார்த்ததும் புருவத்தை ஏற்றி இறக்கி அவளைப் பார்த்து கண்ணடித்தான். அதில் சட்டென தன்னுடைய பார்வையை கீழே பதிந்து கொண்டவள்,
“பிராடு ஏலியன்” என்றாள் மெதுவாக மேகா.
“ சரிங்க நான் கிளம்புறேன்” என்று மேகா சொல்லவும் வேந்தன் தனக்கு சாப்பாடு வைக்க சொல்லவும் சரியாக இருந்தது.
“என்ன அவசரம் முதல் முதல்ல எங்க வீட்டுக்கு வந்து இருக்க ஒரு வாய் சாப்பிட்டு போலாமே” என்று அன்னலட்சுமி சொல்ல அவளோ,
“ ஐயோ இல்லை ஆன்ட்டி அதெல்லாம் வேண்டாம் நான் போறேன்” என்று அவள் சொல்ல அப்பத்தாவோ,
“ அட என்னமா நீ போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க. அதெல்லாம் முடியாது சாப்பிட்டு தான் நீ போகணும்” என்று அன்பு கட்டளையாக சொன்னது மட்டுமில்லாமல் கையோடு அவளை அழைத்து சாப்பாட்டு மேஜையில் அமர வைத்தார்.
வேறு வழி இல்லாமல் சங்கடமாக அமர்ந்திருந்தாள் மேகா.
அவளின் அருகே வந்து அமர்ந்தான் வேந்தன்.
அவளைப் பார்த்து ஓர புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.
பின்பு இருவருக்கும் வாழை இலை போட்டு பலவகை உணவுகள் இலையில் பரிமாறப்பட வேந்தனும் சாப்பிட ஆரம்பித்தான்.
இங்கு மேகா கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருக்க அப்பத்தாவோ,
அம்மாடி சாப்பாட ரொம்ப நேரமா காக்க வைக்க கூடாது சங்கோஜப் படாமல் சாப்பிடுத் தாயி” என்று சொல்ல அவரைப் பார்த்து லேசாக புன்னகைத்து சரி எனும் விதமாய் தலையை ஆட்டியவள் சாப்பாட்டை பிசைந்து ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவளுக்கோ அதனுடைய காரம் செவியைத் தீண்டியது. கண்கள் கலங்க “ஆஆஆ” என்று கத்த ஆரம்பித்தாள். அங்கிருந்தவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ ஐயோ என்னம்மா என்ன ஆச்சு” என்று அவளின் அருகே வந்தார் அன்னலட்சுமி.
வேந்தனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவளுடைய கத்தலில் திடுக்கிட்டு இவள் புறம் பார்த்தான்.
அவளோ வாயை தன்னுடைய கைகளால் வீசியவள்,
“ அய்யோ காரம் ரொம்ப அதிகமா இருக்கு என்னால சாப்பிட முடியல வாய் ரொம்ப காந்தது” என்று சொன்னவளுக்கோ கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தன. அவளோ நெய்யும் பாலும் என்று சாப்பிட்டு வளர்ந்தவள். சிறிது கூட சாப்பாட்டில் காரம் சேர்க்கவில்லை. இவர்களோ கிராமத்து ஆட்கள். அவர்களுக்கு காரம் இல்லாமல் சாப்பாடு இறங்காது.
அந்த சாப்பாட்டை இவள் ஒரு வாய் வைத்ததுமே இவளால் அந்த காரத்தை ஜீரணிக்க முடியவில்லை.
அவள் சாப்பாட்டின் காரத்தால் கத்தி அழுவதை பார்த்தவர்களோ ஆளுக்கு ஒரு திசைக்கு சென்றார்கள் அவளுடைய காலத்தை போக்குவதற்கு.
ஆனால் வேந்தனோ எங்கும் செல்லாமல் தன்னுடைய பாட்டிற்கு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
இங்கு பக்கத்தில் இவளோ தன்னுடைய இரு கைகளாலும் மேலும் வீசிக் கொண்டே கத்திக் கொண்டிருக்க சட்டென அவளை நெருங்கியவன் அவளுடைய இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
அவளுடைய விழிகளோ சாசர் போல விரிந்து கொண்டது அவனுடைய செயலில்.
எவ்வளவு வேகத்தில் முத்தத்தை பதித்தானோ அவ்வளவு வேகத்தில் எதுவுமே நடவாதது போல தன்னுடைய சாப்பாட்டை மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான் வேந்தன்.
அறிவழகி அன்னலட்சுமி வடிவக்கரசி மூவரும் தங்களுடைய கைகளில் ஜூஸ் இனிப்பு நெய் என மூவரும் கொண்டு வந்தார்கள்.
“அம்மாடி இதை குடி”
“ இதை சாப்பிடும்மா”
“மேகா இந்த நெய்ய ஊத்திக்கோங்க காரம் தெரியாது” என்று ஆளுக்கு ஒன்றாக கொண்டு வந்து கொடுத்தார்கள்.
சாப்பிட மாட்டேன் என்று கூறியவளை வம்படியாக சாப்பிட சொன்னவர்களுக்கோ அவள் காரணத்தால் அழுவதை தாங்க முடியவில்லை.
மேகாவோ தன்னுடைய வாயை பொத்திக்கொண்டு,
“ இல்ல வேண்டாம் சரியாகிட்டு” என்றாள்.
உடனே அறிவழகி,
“ எப்படி மேகா அதுக்குள்ள உங்களுக்கு சரியாயிடுச்சு?” என்று கேட்க,
வேந்தனோ,
“ நான் தான் மருந்து கொடுத்தேன்” அதைக் கேட்டு அவர்கள் மூவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது என்றால் மேகாவோ அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.
அப்பத்தாவோ,
“ என்னப்பா சொல்ற நீ மருந்து கொடுத்தியா” என்று கேட்க அவனோ,
“ ஆமா அப்பத்தா ஜாங்கிரி கொடுத்தேன் சரியா போச்சு” என்று சொன்னவனுடைய பார்வையோ மேகாவின் இதழை பார்க்க அவனுடைய இடது கைவிரல் அவனுடைய இதழை வருடியது.
அதை பார்த்த மேகாவுக்கோ ஐயோ என்று ஆனது.
அப்பொழுது வாசலில் நின்ற உருவத்தை பார்த்த அப்பத்தாவோ,
“ டேய் சக்தி நீ என்னடா பேய் அடிச்ச மாதிரி நிக்கிற எப்ப வந்த” என்றார்.
அப்பொழுதுதான் அனைவருடைய பார்வையும் வாசலை நோக்கியது.
அங்கு சக்தியோ நெஞ்சில் கை வைத்தவாறு கண்கள் தெறிக்க நின்று கொண்டிருந்தான்.
அவனோ வேந்தன் மேகாவுக்கு முத்தம் கொடுக்கும் சமயம் வீட்டின் உள்ளே வந்தவன் “வடிவு” என்று அழைக்க வாய் எடுத்தவன் நிமிர்ந்து பார்க்க அங்கோ அப்படி ஒரு காட்சியை கண்டவனோ திடுக்கிட்டு போய் நின்று விட்டான். “அ.. அப்.. அப்பத்தா நான் நான் இப்பதான் வந்தேன்” என்று திக்கி திணறி சொல்லியவாறு உள்ளே வந்தவனுடைய விழிகளோ வேந்தனின் மேலும் மேகாவின் மேலும் மேலும் மாறி மாறி அலைபாய்ந்தது.
அதை பார்த்த அப்பத்தாவோ,
“ என்னடா அவங்களையே வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்க. சாப்பிட தானே வந்த வா இப்படி வந்து உட்காரு” என்று அவனை அமரச் சொல்ல சக்தியும்,
“ என்னலே நடக்குது இங்க” என்பது போல பார்த்து வைத்தான்.
அவனுக்கும் சாப்பாடு வைத்து சாப்பிட சொன்னார்கள்.
அப்பொழுது மேகா இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க அப்பத்தாவோ,
“ என்ன தாயி அதுக்குள்ள எழுந்திருக்க சாப்பிடவே இல்லையே” என்று அவளிடம் கேட்க அவளோ,
“ இல்ல பாட்டிமா எனக்கு வயிறு நெறஞ்சிட்டு என்னால இதுக்கு மேல சாப்பிட முடியாது தப்பா எடுத்துக்காதீங்க நான் கிளம்புறேன்” என்று எழுந்து கொள்ள, அறிவழகியோ கை கழுவும் இடத்தை காட்டியவள்,
“ அங்கு போய் வாஷ் பண்ணிக்கோங்க” என்றாள்.
அவளும் அங்க சென்று கை கழுவிக்கொண்டு இருக்க அவள் பின்னோடு வேந்தனோ சாப்பிட்டு முடித்தவன் கை கழுவ உள்ளே சென்றான்.
இங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த சக்தியின் பார்வையோ இருவரின் மேலும் பதிந்தது.
மற்று மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளவில்லை. கை கழுவ வந்த மேகாவோ கையை கழுவிக்கொண்டு வேந்தனை திட்டிக் கொண்டிருந்தாள்.
“பொறுக்கி ஏலியன் கிடைக்கிற நேரம் எல்லாம் கிஸ் அடிக்கிறான் ஏதோ அவன் சொந்த பொண்டாட்டி மாதிரி. இவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் இந்த மேகாவுக்கு ரெண்டு தடவ முத்தம் கொடுத்துட்டான். இருடா என் கைல மாட்டாமலா போயிடுவே அப்ப கவனிச்சிக்கிறேன்” என்று சொல்ல அவளுக்கு பின்னோடு இரண்டு பக்கமும் கைகளை வைத்தவாறு ஒட்டி நின்றவன் அவளுடைய காதின் அருகே குனிந்து அவனுடைய மீசை அவளுடைய கன்னத்தில் உரச,
“ என்ன செய்வ” என்று கேட்டான்.
அதில் திடுக்கிட்டவளோ சட்டென அவனே நோக்கி திரும்பி நின்றவள் என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிப் போனாள் அவனுடைய இந்த நெருக்கத்தில்.
“ சொல்லுடி லூசு பாப்பா என்ன செய்வ இதோ இப்பவும் பக்கத்துல தான் நிக்கிறேன் நல்லா கவனிச்சுக்கோ நான் ரெடி நீ ரெடியா” என்று தன்னுடைய புருவத்தை மேலே உயர்த்தி குறும்பாக கேட்டான்.
அவளுக்கு நா தந்தி அடித்தது.
“ நீ நீங்க என்ன செய்றீங்க தள்ளி போங்க முதல்ல” என்றாள்.
“ ஹான் என்னம்மா ரெண்டு வார்த்தை பேசுரதுக்கே இப்படி திக்குற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பேச்சு பேசன இப்ப பேசு. ஏதோ உன் கையில மாட்டினா என்ன என்னமோ செய்வேன்னு எல்லாம் சொன்ன செய்யு” என்றவன் அவளுக்கு பின்னாடி ஊடே தன்னுடைய கையை கொண்டு வந்து கையை கழுவியவன் அவன் இடுப்பில் சொருகி இருந்த தாவனியின் முந்தானையை எடுத்து அவளுடைய முகத்திற்கு நேராக தூக்கிப் பிடித்தவன் தன்னுடைய கையையும் துடைத்து விட்டு வாயையும் துடைத்தான் அவளை பார்த்துக் கொண்டே.
அவளோ அவனே தீயாக முறைத்துக் கொண்டு இருந்தாள்.