அவனது டிரேட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் அந்த இருபத்தி எட்டு வயது ஆண்மகன். ஆணழகன்!
ஆறடிக்கு மேல் உயரம் இருப்பான், மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம், அவனது கூறிய விழிகள் அனைவரையும் முதலில் ஈர்த்து விடும்.
அவனது அடர்ந்த கேசம் காற்றில் ஆடுவதை ரசிக்கும் பெண்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
அவனின் கட்டுமஸ்த்தான தேகத்தை பார்க்க கன்னியர்கள் பல காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்தியாவின் தி மோஸ்ட் எலிஜெபில் பேச்சிலர்களுள் ஒருவன் ஆயிர்றே அவன்!
அவன் எம்பிஏ இங்கிலாந்தில் படித்து முடித்து விட்டு வரும் பொழுது அவனுக்கு இருபத்தி மூன்று வயது.
அதற்கு பின் அவனை சிஇஓ உடனே வெல்லாம் ஆகவில்லை அவனின் தந்தை வேதாந்தம்.
அவனிற்கு அவனின் தொழிலாளிகளின் கஷ்ட நஷ்டங்கள் புரிய வேண்டும் என்பதற்காக அவன் படித்த பிஇ மெக்கானிக்கல் என்று சொல்லி ஒரு என்ஜினீயர் ஆக தான் அவரின் நிறுவனத்திலேயே பணியில் அமர்த்தினார்.
அவனும் மேல் அதிகாரிகளிடம் இருந்து திட்டு எல்லாம் வாங்கி இருக்கின்றான்.
மூன்று வருடங்கள் கடின உழைப்பு அவனுடையது.
இறுதியாக மேனேஜர் பதவியில் இருந்தவனை பார்த்து, அவனின் தந்தை மனமிறங்கி, அவரும் ஓய்வு பெற நினைத்து சிஇஓ வாக ஆக்கிவிட்டார்.
வேதாந்தம் குரூப்ஸ், இந்தியாவின் புகழ் பெற்ற நிறுவனங்களில் ஒன்று.
அதை வேதாந்தத்தின் அப்பா, அதாவது நம் கதாநாயகனின் தாத்தா தான் நிறுவினார்.
இப்போது அது தான் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
வேதாந்தம் அவரின் மொத்த உழைப்பையும் போட்டு மெருகேற்றி இருந்தார்.
அவனோ உடற்பயிற்சி முடித்து விட்டு, குளியலறைக்கு சென்று அலுப்பு தீர குளித்து விட்டு வந்தவன், அவனின் ரேமண்ட் சூட் எடுத்து அணிந்து கொண்டு, அவனின் ரோலக்ஸ் வாட்சையும் அணிந்து அவனின் இன்றைய மீட்டிங்கிற்கு தயாராகி கொண்டு இருந்தான்.
இன்றைய மீட்டிங் பெரிய காண்ட்ராக்ட் ஆயிர்றே! முன்னூறு கோடி ப்ராஜெக்ட் என்றால் சும்மாவா?
அவனை கண்ணாடியில் பார்த்து கொண்டு டைம் பார்த்தவன், ஏழே முக்கால் என்று காட்டியது.
அவனின் கைபேசியும் சிணுங்கியது!
“ஷார்ப் ஆன் டைம்”, என்று நினைத்து கொண்டே அவனின் கைபேசியை எடுத்தான்.
அவனது பிஏ மைத்திரி தான் அழைத்து இருந்தாள். ஒரு வருடமாக அவனுடன் வேலை செய்யும் பெண் அவள்.
அவளின் நேர்மையை என்றுமே அவன் சந்தேகித்ததே இல்லை.
அவனின் தந்தை நடத்தும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணவள்.
மிகவும் புத்திசாலி என்பதால் அவள் எம்பிஏ முடித்ததும், வேதாந்தமே அவளை அவனின் மகனின் பிஏவாக நியமனம் செய்ய பரிந்துரைத்தார்.
அவளுக்கு நேர்முக தேர்வும் நடத்த பட்டது. அவளின் திறமையில் நம் நாயகனும் வியந்து தான் போனான்.
கைபேசியை எடுத்து காதில் வைத்தவுடன், “குட் மோர்னிங் சார்”, என்ற குரலுக்கு, “குட் மோர்னிங் மைத்திரி”, என்றவுடன், “சார் யு ஹவ் மீட்டிங் அட் நைன் திரட்டி”, என்று அவள் சொல்லவும், அவனும் “ஓகே, ஐ வில் பி ஆன் டைம்”, என்று சொல்லிவிட்டு துண்டித்து விட்டான்.
இது தினமும் நடக்கும் ஒன்று தான். அவனுக்கு சரியாக ஏழே முக்காலுக்கு அழைத்து அவனின் அன்றைய முக்கிய மீட்டிங்கை சொல்லி விடுவாள்.
அவனும் கீழே இறங்கி செல்ல, அங்கே அவனுக்காக காத்து கொண்டு இருந்தார் வேதாந்தம்.
சிங்கமாக தொழில் சம்பிராஜ்யத்தையே கட்டி ஆண்டவர் அவர்!
இப்போது ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார். சிங்கத்திற்கு பிறந்தவன் மட்டும் என்ன சிறுபாம்பு ஆகிவிடுமா?
அவன் நேராக உணவு மேஜையில் அவருக்கு எதிரே அமர, “விக்ரம்”, என்ற அழைப்பில் அவரை பார்த்தான்.
அவன் முகத்தில் என்றுமே உணர்ச்சியை காட்டியதே இல்லை.
எப்போதும் இறுக்கமாக தான் இருப்பான். ஒரு சிலர் மட்டுமே அவனின் மெல்லிய பக்கத்தை அறிவார்கள்.
“சொல்லுங்க அப்பா”, என்று அவன் அவரை பார்க்க, “இந்த டீல் நமக்கு கிடைச்ச ஆகணும்”, என்று அவர் சொல்லவும், “கண்டிப்பா நமக்கு தான் கிடைக்கும்”, என்று வந்தன அவனின் வார்த்தைகள்.
“மாமா”, என்கிற அழைப்பில் இருவரும் திரும்பி பார்க்க, அங்கே நின்று கொண்டு இருந்தான் ஐந்து வயது பாலகன் ஆத்விக்.
“ஹே சாம்ப்”, என்று அவன் சொல்லவும், அவனின் அருகில் ஓடிச்சென்று அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் ஏறி நின்று கொண்டான்.
“ஆத்விக் ஷுஸ் ஓட சேர்ல ஏற கூடாதுனு எத்தனை தடவ சொல்றது?”, என்று வாகினி உள்ளே நுழைந்து கொண்டே கூற, “இதுல என்ன இருக்கு மா விடு”, என்று வேதாந்தம் சொல்லவும், “நீங்கலாம் தான் அவனை ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க”, என்று அவள் சென்று அவளின் தந்தையின் அருகில் அமர்ந்தாள்.
“தனியாவா வந்த?”, என்று அவர் கேட்கவும், “இல்ல மாமா இவங்களோட ஆல் டைம் டிரைவர் நான் இருக்கேனே”, என்று வாகினியின் கணவன் பார்த்தீவும் உள்ளே நுழைந்தான்.
“என்ன மிஸ்டர் கலெக்டர் சார் உங்க புகழ் தான் ஊர் முழுக்க பேசுறாங்க?”, என்று விக்ரம் நக்கலடிக்க, “உங்கள விட கம்மியா தான் பேசுறாங்க மிஸ்டர் விக்ரம சத்ரியன்”, என்று சொல்லிக்கொண்டே வாகினியின் அருகில் அமர்ந்தான் பார்த்தீவ்.
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?”, என்று வேதாந்தம் கேட்கவும், “உங்க மகளை கட்டிருக்கேன் அப்புறம் இந்த கேள்வியை நீங்க கேக்கலாமா மாமா?”, என்று அவன் சொல்ல, அவனின் கையை நறுக்கென்று கிள்ளினாள் வாகினி.
“ஆறு வருஷம் முன்னாடி, கட்டுனா உன் அக்காவை தான் கட்டுவேன்னு சொன்னதா நியாபகம்”, என்று அவன் இதழ்களில் கீற்று புன்னகை.
“தெரியாம சொல்லிட்டேன் டா”, என்று பார்த்தீவ் சொல்லவும், வாகினியோ முறைக்க ஆரம்பித்தாள்.
வாகினி மற்றும் பார்த்தீவிற்கு முப்பத்தி இரண்டு வயது!
ஆனால் பார்ப்பதற்கு இருவருமே அப்படி இருக்க மாட்டார்கள்.
வாகினி அழகு சிற்பம் தான், அனைவரையும் அவளின் ஆளுமையால் ஈர்த்து விடுபவள். ஒரு குழந்தைக்கு அன்னை என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். சந்தூர் அம்மா என்று பார்த்தீவ் கூட கலாய்ப்பது உண்டு.
பார்த்தீவ் மட்டும் என்ன சும்மாவா? கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில் இருக்கும் அழகன் தான்.
வாகினியின் முன்னே இப்போதும் பார்த்தீவிற்கு காதல் கடிதம் கொடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?
அவனின் பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுபவன்.
இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்கள், அது நாளடைவில் காதலாக மலர்ந்து, திருமணமும் செய்து கொண்டனர்.
அவர்களின் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆத்விக்.
“என்ன உங்க தம்பிய காணோம்?”, என்று விக்ரம் கேட்கவும், “உன் பிரண்ட்க்கு இம்போர்ட்டண்ட் ஒர்க் இருக்காம்… உன்ன ஈவினிங் பார்க்குறேன்னு சொல்லிட்டான்”, என்று பார்த்தீவ் சொல்லவும், “அப்படி என்ன தான் வேலையோ?”, என்று அவன் சலித்து கொண்டான்.
“அத யாரு சொல்றா பாரு”, என்று வாகினி சொல்லவும், அவளை விக்ரம் பார்க்க, “இப்படி பார்க்குற வேலை எல்லாம் வச்சிக்காத! என்ன சொல்லி கொடுக்குற நீ ஆத்விக்கு?”, என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க, “என்ன சொல்லி கொடுத்தேன்?”, என்று அவனும் சேரின் பின்னே சாய்ந்து வாகினையை பார்த்தவன், அடுத்து ஆத்விக்கை பார்க்க, அவனோ சிரிக்க துவங்கினான்.
வாகினியிடம் இப்படி பேசும் ஒரே ஆள் விக்ரம் மட்டும் தான்.
ஆளுமையானவள் அவள்! ஜெனரல் சர்ஜென்! ஆனால் இந்த வயதிலே ஒரு மருத்துவமணியையே கட்டி ஆளும் திறனை கடவுள் அவளுக்கு கொடுத்து இருந்தார்.
பேசும் இடத்தில் பேசுவாள், அவள் பேசும் போது அவளின் முன் யாராலும் பேசவே முடியாது!
வேதாந்தத்திற்கு பிறந்த இருவருமே வேங்கைகள் என்று அனைவரும் சொல்லுவார்கள்.
பார்த்தீவ் கூட சில நேரம் அவளிடம் அமைதியாக தான் போவான். ஏன் வேதாந்தம் கூட அவளின் மகளின் முன் அமைதி காப்பது உண்டு.
ஆனால் விக்ரம் மட்டும் தான் அவளை எதிர்த்து பேசும் ஒரே நபர்.
அக்காவின் மேல் அளவு கடந்த பாசம் இருந்தாலும், அவளை சீண்டுவது அவனிற்கு மிகவும் பிடித்த ஒன்று.
வாகினியோ ஆதிவிக்கை முறைக்க, சிறுவன் அவன் கப்சிப் என்று ஆகி விட்டான்.
“இப்போ எதுக்கு அவனை முறைக்கிற அக்கா? என்கிட்ட பேசு”, என்று அவன் சொல்லவும், “கொஞ்சம் கூட மரியாதை தர மாட்டுறான்”, என்று அவள் சொல்லவும், “யாருக்கு மரியாதை தரல?”, என்று அவன் கேட்கவும், வாகினி விக்ரமை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள்.
தெரிந்து கொண்டே கேட்கிறான் அல்லவா!
“உனக்கு தெரியாது பாரு?’, என்று பார்த்தீவ் சொல்ல, “தெரியாதே”, என்று தோள்களை குலுக்கினான் விக்ரம்.
வாகினிக்கு தான் அவனின் தலையை பிளந்தால் என்னவென்று தோன்றியது.
“இங்க பாரு விக்ரம், உனக்கு பிடிக்குது பிடிக்கல அப்படின்றது செகண்டரி, அவன் சின்ன பையன் பெரியவங்கள மதிக்கணும்”, என்று வாகினி அழுத்தி சொல்லவும், “பெரியவங்கள தான மதிக்கணும், பெரியவங்க யாரு சின்னவங்க யாருனு என்ன பேஸிஸ்ல நீ சொல்ற அக்கா?”, என்று விக்ரம் புருவம் உயர்த்தி கேட்கவும், வாகினிக்கு தான் தலையை பிய்த்து கொள்ளலாமா என்று இருந்தது.
எதை கேட்டாலும் இப்படி எடக்கு முடக்காக பேசுபவனிடம் அவளாலும் என்ன பேசிவிட முடியும்.
“இதுக்கு அவனே பரவால்ல”, என்று அவள் முணுமுணுத்தது அவனின் செவிகளையும் சென்று அடைந்தது தான்.
விக்ரம் அவளை பார்த்து விட்டு ஆத்விக்கிடம் திரும்பியவன், “என்ன சாம்ப் ஸ்கூல் எப்படி போகுது?”, என்று கேட்கவும், “நேத்து தான் ஒரு பையன் கிட்ட வம்பு பண்ணிட்டு வந்திருக்கான். அவங்க ஹெட் மிஸ்ட்ரேஸ் கூப்டு இருக்காங்க! நீயே போயிட்டு வா”, என்று வாகினி சொல்லவும், விக்ரமோ இதழ் குவித்து ஊதிக்கொண்டு, “ஏன் நீங்க போக மாட்டிங்களா?”, என்று கேட்டான்.
“நீ தானே டா அவனுக்கு எல்லாம் நல்ல பழக்கமும் சொல்லி கொடுக்குற, நீ போனா தான் கரெக்டா இருக்கும்”, என்று பார்த்தீவ் சொல்லவும், வாகினி சிரித்து விட்டாள்.
“என்ன மாமா நக்கலா?”, என்றவனை பார்த்து, “ச்ச உங்கள போய் நக்கலடிக்க முடியுமா?”, என்று பார்த்தீவ் பவ்யமாக சொல்லுவதை போல் நடிக்கவும், வேதாந்தம் கூட சிரித்து தான் விட்டார்.
“த்ரீக்கு வர சொன்னா அந்த டெவில்”, என்று அவனின் மூன்று விரல்களை உயர்த்தி ஆத்விக் சொல்லவும், “ஹெட் மிஸ்ட்ரேஸ் உனக்கு டெவிலா?”, என்று வாகினி சீற, “அப்படி தான் மாமா சொல்லி கொடுத்தார்”, என்று சொன்னானே பார்க்கலாம்.
விக்ரம் ஜூஸ் குடித்து கொண்டு இருக்க, அவனுக்கு புரக்கை ஏறி விட்டது.
“அடப்பாவி ஆது போட்டு கொடுத்துட்டியே”, என்று அவனின் மனம் கலங்க, அதை எல்லாம் வெளி காட்டி கொண்டால் அவன் விக்ரம் சத்ரியன் அல்லவே!
விறைப்பாகவே இருந்தான்.
“என்ன டா இதெல்லாம்?”, என்று வாகினி சீற, “நான் ஒன்னும் தப்பா சொல்லலையே! டெவில் தான் அவ”, என்று அவன் சொல்லவும், வேதாந்தம் தனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
“சரி சரி நான் மூணு மணிக்கு வரேன்”, என்று விக்ரம் சொல்லவும், ஆத்விக்கும் அழகாக தலை ஆட்டி கொண்டான்.
சாப்பிட்டு முடித்து, அனைவரும் கிளம்பும் சமயம், “ஆல் தி பெஸ்ட்! உனக்கு தான் இந்த ப்ராஜெக்ட் கிடைக்கும், கிடைக்கணும்”, என்று சொன்ன வாகினி அவனின் உச்சந்தலையில் முத்தம் பதித்து வாழ்த்து கூற, விக்ரமின் இதழ்களிலும் புன்னகை.
மிக மிக அபூர்வமான ஒன்று தான்!
அழகானவன் சிரித்தால் இன்னும் பேரழகனாக தெரிவான்.
“பை மாமா… ஆல் தி பெஸ்ட்”, என்று ஆத்விக் அவனின் கன்னத்தில் முத்தம் பதிக்க, “ஜெய்ச்சிட்டு வா டா”, என்று பார்த்தீவ் அவனை அணைத்து விடுவித்தான்.
விக்ரம் அவனின் விலை உயர்ந்த ரோல்ஸ் ரொய்ஸ் காரில் ஏறி பயணிக்க துவங்கினான்.
சத்ரியன் அவனின் போர்க்களத்திற்கு கிளம்ப, அடுத்த அத்தியாயத்தில் சாணக்கியனை காண்போம்!
அருமையான பதிவு
Super starting sis