“கைய விடு விஜய்”, என்று கலா சொல்லவும், “இப்போ எதுக்கு அவளை அடிக்கிறீங்க?”, என்று அவன் கேட்கவும், “அவ வாகினி ஹாஸ்பிடல் போயிட்டு வந்து இருக்கா”, என்று அவர் சொல்லவும், “நானும் தான் போயிட்டு வந்தேன் அப்போ என்னையும் அடிங்க”, என்றவனை பார்த்து அதிர்ந்து விட்டார்.
“எதுக்கு டா அங்க போன?’, என்று அவனிடமும் சீறி வர, “இங்க பாருங்க மா..”, என்று கன்னத்தை காட்ட, கன்னம் சிவந்து வீங்கி இருந்தது.
“என்ன பாக்குறீங்க? விக்ரம் தான் அடிச்சான். இப்படியே நான் வெளிய போனா அவளோ தான். அதே மாறி இவளையும் பாருங்க”, என்று வர்ஷாவின், தாடையை பற்றி வலிக்காமல் திருப்ப, அவளின் கன்னங்களும் வீங்கி இருந்தன.
அவரின் கைவண்ணம் தானே, நேற்று அறைந்த போது தெரியவில்லை. ஆனால் இப்போது அவருக்கும் வலித்தது.
அவளும் அவர் ஈன்ற மகவு தானே!
“விடு”, என்று விஜயின் கையை தட்டி விட்டு, வர்ஷா அவளின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“ஏன் டா சிட்டில வேற ஹாஸ்பிடல் இல்லையா என்ன?”, என்று கலா விஜயை பார்த்து கேட்கவும், “இருக்கு… ஆனா அங்க போனா ஆயிரத்தி எட்டு கேள்வி கேப்பாங்க… எனக்கு மூட் சரி இல்ல… நான் இன்னைக்கு ஆபீஸ் போகல”, என்று சொன்னவன் அவனின் அறைக்குள் அவனும் நுழைந்து கொண்டான்.
இதே சமயம் மைத்திரியும் விக்ரமும் வேலை செய்து கொண்டிருந்தனர். மதிய உணவு சாப்பிடும் நேரம் என்பதால், அவள் சாப்பிட போகும் சமயம் அவளை நிறுத்தி இருந்தான் விக்ரம்.
“சொல்லுங்க சார்”, என்று அவள் பார்க்கவும், “உன் லவர்ர நான் அடிச்சதால ஏதாச்சு வருத்தமா?”, என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.
அவளோ உடனே, “ஐயோ இல்ல சார்… நானே அப்போ விஜய் கிட்ட அத தான் சொல்லிட்டு இருந்தேன்”, என்று அவள் சொல்லவும், “ம்ம்… கோ அண்ட் ஹேவ் யுவர் லஞ்ச்”, என்று சொல்லவும் அவள் நகர்ந்து விட்டாள்.
அதே சமயம் அவனின் கைபேசி அலறியது சான்வி தான் அழைத்து இருந்தாள்.
விக்ரமோ அதை எடுத்து காதில் வைக்க, “எல்லாம் ஓகே தான விக்ரம்?”, என்று கேட்கவும், “நோட் பெட்…”, என்றவுடன், “உங்களுக்கு வர்ஷா மேல ஓவர் பாசம் தான்”, என்றாள்.
அவன் பதில் அளிக்க வில்லை. அமைதி தான்.
“ஆமானும் சொல்ல மாற்றிங்க இல்லனும் சொல்ல மாற்றிங்க… என்னனு எடுத்துக்கறது?”, என்று அவள் சலிப்பாக கேட்க, “நான் எதுவும் சொல்ல விரும்பல”, என்று முடித்து கொண்டான்.
அவனை மேலும் சங்கட படுத்த அவள் விரும்பவும் இல்லை.
“சரி நீங்க ஒர்க் பாருங்க விக்ரம்… நேவி ப்ளூ சூட் எடுத்துட்டீங்களா?”, என்று கேட்கவும், அவனின் இதழ்கள் விரிந்து “எடுத்துட்டேன் டி”, என்று அவன் சொல்லவும், இப்போது அவளின் இதழ்களும் விரிந்தன.
“மிஸ்டர் ஜெய்ஷ்ங்கர் ஏதும் சொல்லமாட்டாரா?”, என்றவனிடம், “அவருக்கு தெரிஞ்சா தானே”, என்றவுடன், “உன் அப்பா என்னைக்கு வச்சி செய்ய போறாரோ”, என்றான்.
இருவரும் சிரித்து கொண்டனர்.
“சரி போய் சாப்பிடுங்க… பை”, என்று சொல்லி வைத்து விட்டார்.
விக்ரமின் எண்ணங்களோ அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ரிசப்ஷன் பத்தி தான் இருந்தது.
அவனின் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.
பல நாட்கள் கழித்து கலாவதியை பார்க்க வேண்டுமே!
நிச்சயமாக அவர் வருவார் என்று அவனும் அறிவான்.
மிஸ்டர் கவின் தொழில் சாம்ராஜ்யத்தில் ஒரு பெரும் புள்ளி.
வேதாந்தம் கூட வருவேன் என்று சொல்லிருந்தார்.
எத்தனை நாட்கள் கழித்து பார்க்க போகிறான் என்று அவனுக்கே தெரியாது.
ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு சென்றவர் கலா.
அவனுக்கு அவரை பார்க்கும் போதெல்லாம் அரக்கியை பார்ப்பது போல தான் தெரியும்.
அவனை தான் வளர்க்காமல் போய் விட்டார் என்றால், வர்ஷா இன்னும் மோசம், அவள் பிறந்த மூன்று மாதங்கள் வரையில் தான் பார்த்துக்கொண்டார்.
தாயை போல் அல்லாமல் பேய்யை போல் தான் அவனுக்கும் வாகினிக்கும் அவர் எப்போதும் தெரிவார்.
அவன் சிந்தனைகளை ஒதுக்கி வைத்தவன், மதிய உணவு உட்கொள்ள சென்று விட்டான்.
இப்படியே அன்றைய நாள் நகர, அவளின் வீட்டிற்குள் வந்தாள் வாகினி.
வரவேற்பு அறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் பார்த்தீவ்.
அவன் என்ன கேட்பான் என்று ஓரளவு யூகித்து வைத்து இருந்தாள்.
“மேடம் உங்க ப்ரோப்லேம்லாம் என்கிட்ட சொல்லமாட்டீங்க அப்படி தானே?”, என்று அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், வீட்டில் சமைக்கும் சத்தம் கேட்டது.
ப்ரணவும் ஆத்விக்கும் தான் சமையல் அறையில் இருந்தனர்.
பிரணவ் சொல்லி இருப்பான் என்று நிச்சயம் அவளுக்கும் தெரியும்.
“அப்படி எல்லாம் இல்ல பார்த்தீவ், அந்த ஆளு இவளோ பெரிய ப்ரோப்லேம் கிரியேட் பண்ணுவான்னு எனக்கு தெரியாது… அண்ட் அதான் எல்லாம் முடிஞ்சிதே சில்”, என்று அவள் சொல்லவும், “இன்னைக்கு மட்டும் கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா வர்ஷா என்னவாகிருப்பா?”, என்று அவன் கேட்கவும், “அதெல்லாம் அவளுக்கு ஒன்னும் ஆக நாங்க விட்டு இருக்க மாட்டோம்… நீங்க ரொம்ப யோசிக்காதிங்க கலெக்டர் சார்… போய் எனக்கு ஒரு இஞ்சி டீ போட்டு வைங்க”, என்று அவள் சொல்லவும், அவனுக்கு தான் கடுப்பாக இருந்தது.
இரவு உணவு உட்கொள்ளும் சமயம், ஆத்விக் தான் நிறைய பேசினான். வாகினியோ பிரணவை பார்க்க, அவனோ அவளை பார்க்கவே இல்லை.
“இப்போ எதுக்கு அவனை முறைச்சிகிட்டே இருக்க?”, என்று பார்த்தீவ் கேட்கவும், “உங்களுக்கு தூது சொன்னவன் அவன் தானே! அதான் தூது சொல்றதுக்கு உங்க அண்ணா எவளோ கொடுக்குறாருனு கேட்டு நானும் அவனை எனக்கு ஹையர் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”, என்று அவள் சொல்லவும், பிரணவின் காதுகளையும் அது அடைந்தது தான்.
“அவனுக்கு உன் மேல அவளோ பாசம் டி… எங்க நீ மாட்டிக்க போறன்னு நினைச்சி சொன்னான்”, என்று அவன் தம்பிக்காக பேச, “இப்படியே பேசுனீங்கனா அப்புறம் வீட்ல எல்லா வேலையும் நீங்களும் உங்க தம்பியும் தான் செய்ய வேண்டியதா இருக்கும்”, என்று அவள் கூறவும், பிரணவ் பார்த்தீவின் காலை உதைத்தான்.
பார்த்தீவோ அவனை பார்க்க, வாயை மூடு என்று கைஅசைவில் அவன் சொல்லவும், வாகினி சிரித்து விட்டாள்.
“மாமியார் மருமக சீரியல்ல விட எங்களை நீ ரொம்ப கொடும படுத்துற டி”, என்று பார்த்தீவ் சலிப்பாக சொல்லவும், வாகினியோ சிரிப்பை அடக்கி கொண்டு, “இன்னும் நிறைய கொடுமை பண்ணுவேன்”, என்று அவள் சொல்லவும், பிரணவ் தான் பார்த்தீவை முறைத்து கொண்டு இருந்தான்.
அவனால் இவனுக்கும் அல்லவா வாகினி வேலை தருவாள்.
வாகினி சாப்பிட்டு முடித்து சென்று விட, பிரணவ்வோ, “நான் கேட்டனா உன்ன அண்ணி கிட்ட பேச சொல்லி, என்னையும் வச்சி செய்ய போறாங்க “, என்று அவன் சொல்லிவிட, “டேய் சும்மா சொல்றா டா அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டா”, என்று பார்த்தீவ் சொல்லவும், அமைதியாக உண்டனர்.
ரிசெப்ஷனிற்கு முந்தைய நாள் விக்ரமிற்கு அழைத்து இருந்தால் சான்வி.
“எனக்கு ஒரு ஜெவெல்லரி செட் வேணும் வாங்கி கொடுக்குறீங்களா?”, என்று அவள் ஆசையாக கேட்கவும், “ஏன் மிஸ்டர் ஜெய்ஷ்ங்கர் இல்ல மிஸ்டர் ராகவ் கிட்ட காசு இல்லையா?”, என்று அவன் நக்கலாக கேட்கவும், “உங்க கிட்ட கேட்டேன் பாருங்க, என்ன சொல்லணும்”, என்று அவள் கோபமாகவும், “சரி சரி அழாத வாங்கி தரேன்”, என்று அவன் சொல்ல, நேரத்தையும் இடத்தையும் சொல்லி இருந்தான் விக்ரம்.
அன்று மாலை அவர்கள் இருவரும் கார் பார்க் செய்து விட்டு வர, கடையில் நுழைந்தனர்.
அதே சமயம், வாகினியும் பார்த்தீவும் கடையில் நுழைய, சான்விக்கோ மூச்சே அடைத்து விட்டது.
“ஐயோ உங்க அக்கா விக்ரம்”, என்று சொல்லி அவள் நகர பார்க்க, அவன் விட்டால் தானே!
“ஐயோ விடுங்க! அண்ணி பார்த்தா ப்ரோப்லேம் ஆகிடும்”, என்று அவள் நகர முற்பட, அவனின் கைகள் அவளை இறுக்கி கொண்டது.
இதே சமயம், பார்த்தீவோ வாகினியின் காதுகளில், “என்ன விக்ரம் சான்வி கூட வந்து இருக்கான்”, என்று கேட்கவும், “தெரியும் பார்த்தேன்… லவ் பன்றாங்க போல”, என்று அவள் சொல்லவும், “என்ன டி இவளோ ஈஸியா சொல்ற?”, என்றவனின் புருவங்கள் உயர்ந்தன.
“அவன் என்ன குழந்தையா? நான் பார்த்துட்டு இருக்க? பிடிச்சி இருந்தா கல்யாணம் பண்ணிக்க போறான்”, என்று அவள் சாதாரணமாக தான் பேசினாள்.
“நல்ல அக்கா டி நீ”, என்று அவன் சொல்லவும், “ஐ நோ”, என்று அவள் முடித்து இருந்தாள்.
இரு ஜோடிகளும் பேசிக்கொள்ளவே இல்லை.
கண்டும் காணமால் நகர்ந்து சென்று விட்டனர்.
சான்வி அவளுக்கு பிடித்த ஒரு நெக்லெஸ் எடுக்க, அதற்கு பணம் செலுத்தியது என்னவோ விக்ரம் தான்.
“என் பர்ஸை காலி பன்னிருவ போல”, என்று அவன் அலுத்து கொள்ள, “தங்கச்சிக்கு வாங்கி தரும் போது இனிச்சிதா?”, என்று புருவம் உயர்த்தி அவள் கேட்க, “அப்போ அந்த பொறாமைல தான் கேட்டியா?”, என்று அவன் வினவ, “ச்ச ச்ச”, என்றவள் ஒரு நொடி கழித்து, “அப்படியும் வச்சிக்கலாம்”, என்று முடித்து இருந்தாள்.
முதலில் சான்வியும் விக்ரமும் வெளியே சென்று விட்டனர்.
அடுத்து தான் வாகினியும் பார்த்தீவும் வெளியே வந்தனர்.
அதற்குள் விக்ரமும் சான்வியும் சென்று விட, வாகினியும் பார்த்தீவும் சென்று விட்டனர்.
அடுத்த நாள் அனைவரும் அந்த ரிசெப்ஷன் செல்ல ஆயுத்தமாகி கொண்டு இருந்தனர்.
சற்றே இறுகி இருந்தது விக்ரமின் முகம். அவனோ தயாராகி வர, அங்கே வேதாந்தமும் தயாராகி அவனுக்காக காத்துகொண்டு இருந்தார்.
“கிளம்பலாம் அப்பா”, என்று சொன்னவனிடம், “என்ன ஆனாலும் டோன்ட் லூஸ் யுவர் காம்”, என்று அவர் சொல்லவும், அவன் தலையசைத்து கொண்டான்.
வாகினியின் வீட்டிலோ அவள் தயாராகி நிற்க, அவளின் வீட்டின் ஆண்கள் தான் நேரமாக்கி கொண்டு இருந்தனர்.
“இங்க தான் ஆம்பளைங்க லேட்டா ரெடி ஆகுறாங்க”, என்று அவள் முணுமுணுத்து கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தனர் பார்த்தீவ், பிரணவ் மற்றும் ஆத்விக்.
“போகலாமா?”, என்று அவள் கேட்கவும், பார்த்தீவ் தான், “கலா ஆண்ட்டி வருவாங்க”, என்று சொல்லவும், “ஐ டோன்ட் கேர்”, என்று சொன்னவள் வெளியே சென்று விட்டார்.
இதே சமயம், வர்ஷா தனி காரில் வருவதாக சொல்லி விட, கலா, விஜய் மற்றும் ஸ்ரீதர் ஒரே காரில் வந்து இறங்கினர்.
நிறைய பத்திரிகையாளர்கள் இருக்க, விக்ரமின் காரும் உள்ளே நுழைந்தது.
அவனும் காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழையும் சமயம், எதிரே வந்தனர் கலா, விஜய் மற்றும் ஸ்ரீதர்.
விக்ரமின் கண்கள் கலாவை உரசி செல்ல, அவன் அங்கிருந்து நகரும் சமயம், “விக்ரம்”, என்று அழைத்து இருந்தார் கலா.
விக்ரமோ கண்களை அழுத்தி மூடி திறந்து அவரை பார்க்க, அவரும் அவனின் அருகே வந்தார்.
தாயும் தனையனும் பல நாள் கழித்து சந்திக்கும் சமயம், பூகம்பம் வெடிக்குமா? அல்லது பூந்தென்றல் வீசுமா?