10. விஷ்வ மித்ரன்

4.5
(4)

💙  விஷ்வ மித்ரன் 💙

அத்தியாயம் 10

 

“இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ் விஷ்வா! இதோட மூனு ஸ்கூல் மாத்தியாச்சு. படிக்க மாட்டேங்குற. ஹோர்ம் வர்க் பண்ணுறதில்ல தினம் தினம் ஒரு சண்டைய இழுத்துட்டு வந்து நிக்கிற. டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வராத நாளே இல்லை. ஏன்டா இப்படி படுத்துறே?” என்று அதட்டி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது நீலவேணியே தான்.

 

“நீலா! அவன எதுக்கு திட்டுறே? இந்த ஸ்கூல் ரொம்ப பெரியது. இதுல சமத்தா படிச்சு பெரியவனாயிடுவான் என் பையன். ஏன்டா கண்ணா நீ நல்ல பையனா இருப்ப தானே?” என்று கேட்டார் சிவகுமார்.

 

ஸ்கூல் யுனிஃபார்ம் அணிந்து, பேக் பட்டியை ஒரு கையால் இறுகப் பிடித்து, மறு கையில் வாட்டர் பாட்டிலுடன் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தவன் குட்டி விஷ்வாவே தான். ஃபார்த் ஸ்டான்டர்ட்.

 

விஷ்வா மிகவும் துடுக்கானவன். ஸ்கூல் போனால் படிப்பதை தவிர மற்ற எல்லா வேலையையுமே கச்சிதமாக செய்தான். சக மாணவர்களிடம் அடி தடி பண்ணுவது, டீச்சரிடம் எடக்கு மடக்காக கேள்வி கேட்டு திணற வைப்பது, ஹோர்ம் வர்க் செய்யவே மாட்டான்.. இப்படி க்ளாஸ் டீச்சரிடம் ஃபோன் வரும் போது நீலவேணி அவனை சரமாரியாக திட்ட, சிவகுமாரோ அவனைக் காப்பாற்றி வேறு ஸ்கூலில் சேர்த்து விடுவார்.

 

இதுவே வாடிக்கையாகிப் போக கடைசியாகப் போன ஸ்கூலுக்கு போகவே முடியாது என்று ஒற்றைக் காலில் நின்று விட்டான் அவன். இப்போது லேவன்ஸ் எனும் பிரபல பாடசாலையில் அட்மிசன் வாங்கியிருந்தனர்.

 

நீலவேணி “டேய்! உன் கிட்ட தானே அப்பா கேக்குறார். வாயத் திறந்து பதில் சொல்லு. இந்த ஸ்கூல்லயும் ஏழரைய கூட்டின வகுந்துடுவேன்” பல்லைக் கடிக்க,

 

“நீ போய் கார்ல இரு” என மனைவியை அனுப்பி வைத்த சிவா, மகனின் புறம் திரும்பி “கண்ணா! அம்மா உன் மேல எவ்ளோ பாசம் வெச்சி இருக்காங்க. அவங்கள கஷ்டப்படுத்தாம நல்லா படிக்கனும். சமத்து பையனா இருந்து நல்ல பெயர் வாங்கனும்” பாசமாகத் தலை வருடினார்.

 

“எனக்கு படிப்பு வர மாட்டேங்குது பா. நான் என்ன பண்ணட்டும்? புக்க திறந்தாலே லெட்டர் எல்லாம் டான்ஸ் ஆடி ஆராரோ பாடி என்ன தூங்க வெச்சிடுது” பாவமாகச் சொன்னான் விஷ்வஜித்.

 

“அதெல்லாம் படிக்க படிக்க சரியாகிடும் டா” என்றவரைப் பார்த்து “அப்பா கிட்ட பேசி வேலைக்கு ஆகாது. க்ளாஸ்கு போய் டீச்சர்கு பெருசா ஏதாச்சும் பண்ணி ஸ்கூல்ல விட்டு அனுப்புற மாதிரி பண்ணிரனும். கமான் விஷ்வா! நீ கலக்கு. யூ கேன் டூ இட்” தனக்குத் தானே புகழாரம் சூடி தைரியப்படுத்திக் கொள்ள, க்ளாஸ் டீச்சர் வந்து அவனை அழைத்துச் சென்றார்.

 

“ஹாய் ப்ரெண்ட்ஸ் அய்ம் விஷ்வஜித். நிவ் அட்மிசன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி விட்டு அமர்ந்தவனை அனைவரும் சிரித்துப் பேசி கை குலுக்கி வரவேற்றனர், ஆனால் ஒருவனைத் தவிர!

 

தன்னோடு கலகலப்பாகப் பேசிய அனைவரையும் விட, அவன் விழிகளோ அந்தப் பையன் மேல் தான் படிந்தது. கொழுக் மொழுக்கென்ற கன்னங்களை உப்பிக் கொண்டு யாருடனும் ஒன்றாமல் ஒரு ஓரமாக ஏதோ எழுதிக் கொண்டு இருந்தான். அவன் அருள் மித்ரன்!

 

பஞ்சமே இல்லாத பேச்சுடன் இருப்பவர்களுக்கு மத்தியில் அமைதியே உருவாக இருந்த மித்ரனின் மேல் விஷ்வாவுக்கு ஏதோ ஆர்வம் ஏற்பட அவனருகில் போய் நின்று “ஹலோ. வாட்ஸ் யூர் நேம்?” என அதிகாரமாகக் கேட்டான்.

 

தலை தூக்கிய மித்ரனோ “அருள் மித்ரன்” என்று மெதுவாக சொல்லி விட்டு பென்சிலை எடுத்து மீண்டும் எழுதத் துவங்கினான்.

 

“ஹ்ம் மித்து நைஸ் நேம்..! அய்ம் விஷ்வா” என்றவன் தனது இருக்கைக்கு சென்றான்.

 

நாட்களும் கடக்கத் தொடங்கின. மித்ரன் அமைதியாக, தானும் தனது படிப்பும் என்று புத்தகத்தினுள் மூழ்கியே இருந்தான் என்றால் விஷ்வாவோ பல சுட்டித் தனங்களைச் செய்து டீச்சரிடம் திட்டு வாங்குவதும் ஹோர்ம் வர்க் செய்யாமல் வந்து பனிஷ்மன்ட் பெறுவதுமாக இருந்தான். இடையிடையில் மித்ரனைத் திரும்பித் திரும்பி பார்த்து விடுவான்.

 

ஒரு நாள் மித்ரன் வராமலிருக்க விஷுவுக்கு அவனைப் பார்க்காதது கவலையாக இருந்தது. மறு நாள் வந்து விடவே, அவன் முன் போய் நின்று “ப்ரெண்ட்ஸ்?” என்று கையை நீட்டினான்.

 

அவனுக்கு கை கொடுக்காமல் கைகளை கட்டிக் கொண்டு கண்களை உருட்டி விஷ்வாவைப் பார்த்தான் மித்து.

 

“முடியாது விஷ்வா” உறுதியாகச் சொல்ல, “ஏன்?” முகம் வாடி விட்டது அவனுக்கு.

 

“நீ ஹோர்ம் வர்க் பண்ணாம வர்ரது எனக்கு பிடிக்காது. டீச்சர் உனக்கு திட்டுறதும் பிடிக்காது” என்றான் மித்ரன்.

 

நாடியில் விரல் தட்டி யோசித்து விட்டு “அப்போ நான் ஹோர்ம் வர்க் பண்ணிட்டு வந்தா என்னை உன் ப்ரெண்ட்டா ஏத்துப்பியா? என் கூட ஜாலியா பேசுவியா?” கண்களில் எதிர்பார்ப்பு மின்ன வினவ, “யாஹ் சூர்” என்று பதிலளித்தவன் வெளியேறினான்.

 

மறு நாள் எத்தனையோ கஷ்டப்பட்டு ஹோர்ம் வர்க் செய்து வந்திருந்தான் விஷ்வா. அதை டீச்சரிடம் காட்ட, அவனை அதிசயமாகப் பார்த்து விட்டு அவனைப் பாராட்டினார்.

 

அதில் அவன் மித்ரனைப் பார்க்க, அவன் மகிழ்வுடன் பார்த்த பார்வையில் விஷ்வா உள்ளுக்குள் குதித்துக் கும்மாளம் போட்டான்.

 

இன்ட்ரவல் பெல் அடிக்க மித்ரன் சம் எழுதி விட்டு விஷ்வா வரும் வரை படிக்கட்டில் அமர்ந்திருந்தான். அங்கு வந்த ரவி எனும் அவர்களது வகுப்பு மாணவன் மித்ரன் எழுதி வைத்த ட்ராவிங்கை கிழித்து வீசினான்.

 

இயல்பாகவே அமைதியான சுபாவமுடைய மித்துவுக்கு கண்கள் கலங்கிப் போக, ரவியைப் பார்க்க அவன் முகத்தில் ஒரு குத்து விழுந்தது. அவனோ அதிர்ந்து பார்க்க, விஷ்வா தான் கோபமாக நின்றிருந்தான்.

 

“என் மித்துவோட ட்ராவிங்க கிழிச்சு போடுவியா டா?” என்று கேட்டு அவனை கீழே தள்ளி அடித்துத் துவைத்தான்.

 

“விஷு” என கலங்கிய கண்களுடன் மித்ரன் தடுக்க,அதற்குள் ஆசிரியை ஒருவர் கண்டு ப்ரின்சிபல் அறைக்கு கூட்டிச் சென்றார்.

 

“விஷ்வா வாட் இஸ் திஸ்? எதுக்கு ரவிய போட்டு அடிச்சிருக்கே” ப்ரின்சி கேட்க, “அவன் மித்துவோட ட்ராவிங்க கிழிச்சான்” என்றவனுக்கு இன்னும் கோபம் தீர்ந்தபாடில்லை.

 

“மித்துவோடத தானே கிழிச்சான்? உன்னோடத இல்லையே. அவனோடதுனா நீ எதுக்கு இடைல வரனும்?” என்ற கேள்வியில், “இவன் என் நண்பன் மேம். இவனுக்கு ஏதாவது ஒன்னுனா நான் அதை தட்டிக் கேட்பேன். அவன சும்மாவே விட மாட்டேன்” மித்ரனின் தோள் மீது கை போட்டு சொன்னான்.

 

ரவிக்கு மித்ரனிடம் சாரி கேட்க சொல்ல அவனும் மன்னிப்பு வேண்டினான்.

 

“விஷ்வா! நீயும் ரவி கிட்ட சாரி கேளு” என்று சொல்ல, அவனோ முறைத்துக் கொண்டு மட்டுமே இருந்தான்.

 

“விஷ்வா” ப்ரின்சிபல் அதட்ட, வேண்டா வெறுப்பாக சொல்ல போக “சாரி ரவி” அதற்குள் முந்திக் கொண்டு சாரி கேட்டான் மித்து.

 

“அவனுக்கு கேட்க சொன்னா நீ எதுக்கு மித்து சாரி கேட்குற?” டீச்சர் கேட்க, “அவன் என் விஷு மிஸ். அவன் கேட்குறதும் நான் கேட்குறதும் ஒன்னு தான். அவன் எப்போவுமே சும்மா கெத்தா தான் நிற்கனும். என் முன்னாடி அவன் சாரி கேட்டு நிக்குறது எனக்குப் பிடிக்கல” என்றான் அவன்.

 

ப்ரின்சி “ஓகே. ரெண்டு பேரும் இந்த க்ரவுண்ட சுற்றி நாலு ரவுண்ட் ஓடனும். ஸ்கூல்ல அடி தடி சண்டை போட்டா இது தான் பனிஷ்மன்ட்” என்று கடுமையாக கூறினார்.

 

விஷ்வா இரண்டு ரவுண்ட் ஓடி வர டீச்சரிடம் கெஞ்சிக் கூத்தாடி மற்ற இரு ரவுண்டையும் தானே ஓடி வந்தான் மித்ரன்.

 

“மித்து கால் வலிக்குதா டா? எல்லாமே என்னால தான்” சோகமாக விஷு கூற, “இப்போ சொல்லுறே. அப்போ எப்படி டா அராத்து மாதிரி சண்டைக்கு போன? செம மாஸ்டா நீ” அவன் முடியைக் கலைத்துச் சிரித்தான் நண்பன்.

 

“அப்போ நாம இனிமேல் ப்ரெண்ட்ஸ்” கைகளை நீட்டியவனுக்கு இம்முறை கை கொடுத்து, அவன் தோள் மேல் கை போட்டு “யாஹ் ப்ரெண்ட்ஸ்” என்றான் மித்து.

 

“விஷு! நாம ஒன் டைம் ப்ராமிஸ் பண்ணலாம் டா. அப்படினா நான் உனக்கு ஒன்னு சொல்லுவேன், நீயும் என் கிட்ட சொல்லனும். அத நாம கண்டிப்பா செஞ்சே ஆகனும்” என்று சொல்ல, அவனும் ஆர்வமாக தலையாட்டினான்.

 

“சரி டா. நீ பர்ஸ்ட் சொல்லு. நான் என்ன பண்ணனும்?” கேட்டான் விஷ்வா.

 

“நீ ஃபைனல் எக்ஸாம்ல ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கனும் விஷு” என கையை நீட்ட, திகைத்து விழித்தான்.

 

படிப்பென்றாலே பாகற்காயாக கசப்பவனுக்கு பர்ஸ்ட் ராங்க் எனும் போது மினி ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போலிருந்தது.

 

இருந்தும் மித்து அவனாகக் கேட்கும் முதல் விஷயம் என்பதால் மறுக்கத் தோணாது “ஓகே ப்ராமிஸ்” என அவன் கை மேல் கை வைத்து சத்தியம் செய்தான்.

 

“இப்போ நீ கேளு” மித்ரன் ஆர்வமிகுதியில் சொல்ல, “இல்லடா நான் டைம் வரும் போது கேட்குறேன்” என்று மழுப்பி விட்டான்.

 

பரீட்சைக்கான நாளும் நெருங்கியது. விஷ்வ மித்ரர்களின் நட்பும் மிக நெருக்கமாக மாறியிருந்தது. விஷ்வா நண்பனுக்காக படி படி என படித்தான்.

 

அவனின் மாற்றத்தில் நீலவேணி சிவகுமாரிற்கு அளவில்லா ஆனந்தமாகியது.

 

“பர்ஸ்ட் ராங்க் விஷ்வஜித் சிவகுமார்” என்று அறிவித்த டீச்சர் அவனைப் பாராட்டினார். அனைவர் பார்வையும் பிரம்மிப்புடன் அவனைத் தழுவியது என்றால், அவனது பார்வையோ மித்ரனில் மட்டுமே நின்றது. அவனது ஆசையை நிறைவேற்றி விட்டதில் மனம் நிறைந்தது.

 

ராங்க் சீட்டை மித்ரனிடம் கொடுத்து “இதுக்கு சொந்தக்காரன் விஷ்வஜித் சிவகுமார் இல்லை. விஷ்வ மித்ரன் நீ தான்!” என்று சொல்ல அவனைக் கட்டிக் கொண்டான் அந்த தோழனும்.

 

அன்று விஷ்வா மித்ரனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தமது மகனின் மாற்றத்திற்கும், மகிழ்விற்கும் காரணமான மித்துவை நீலவேணி சிவகுமார் தம்பதியர் அணைத்துக் கொண்டனர்.

 

மித்ரன் “விஷு! உன் தங்கச்சி பாப்பா எங்க டா” என்று ஆசையுடன் தேட, “அதோ வர்றா. குட்டிம்மா! மித்து அண்ணா” என்று அறிமுகப்படுத்தினான் விஷ்வா.

 

மித்ரன் முட்டி போட்டு அமர்ந்து கைகளை விரிக்க, ஓடி வந்து அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து “மித்து” மழலையில் மிழற்றியது சிறுமி.

 

அண்ணா எனும் வாசகம் அவள் வாயிலிருந்து வரவில்லை. மித்ரனும் அவளுக்கு பிடித்த மாதிரியே அழைக்கட்டும் என்று விட “மித்து” “மித்து” என அவனோடே ஒட்டிக் கொண்டு பூனைக் குட்டியாய் சுற்றினாள் அக்ஷரா..

 

“ஏய் போடி. இது என் ப்ரெண்டு” என விஷ்வா அவனை இழுக்க, “ம்ஹூம் என் மித்து” அக்ஷுவும் சண்டைக்கு வந்தாள்.

 

“ரெண்டு பேருக்கும் தான் இந்த மித்து. எப்போவுமே உன் ப்ரெண்டு தான் விஷு! அக்ஷு குட்டிக்கும் நான் எப்போவுமே மித்து தான். ஓகேவா?” என்று இருவரையும் அணைத்துக் கொண்டான் அருள் மித்ரன்.

 

அன்றிலிருந்து அதுவே அவனுக்கும் வீடாகிப் போனது. சிவகுமாரை “சிவாப்பா” என்று அழைத்தவனோ நீலவேணியை தனது தாயாக நினைத்து “அம்மா” என்றே கூப்பிட்டான்.

 

ஹரிஷும் இவர்களோடு நட்புப் பாராட்ட சிவகுமாரை “டாட்” என்றழைக்கும் விஷ்வாவுக்கு ஹரிஷ் “அப்பா”வாகிப் போனார்.

 

…………..

அன்றைய நினைவில் முகமும் மனதும் மென்மையடைய நின்றவனை நோக்கி “என்னடா பழைய ஞாபகமா?” புருவம் உயர்த்திய விஷ்வாவுக்கு, தலையசைப்புடன் ஆமென்று பதிலளித்து மித்ரன் பைக்கில் ஏறிக் கொள்ள,

 

விஷ்வா “காபி டேக்கு போகலாம்” என்று விட்டு காரில் ஏறி உயிர்ப்பித்துச் செல்ல, அவனை ஒட்டியே பைக்கை செலுத்தினான் மித்ரன்.

 

என்று தன்னோடு ஒன்றாக பைக்கில் வருவானோ? என்ற ஏக்கம் மனதைத் தீண்டிச் செல்ல, அவன் மனதில் சிம்மானம் போட்டு அமர்ந்திருப்பவளின் முகம் அவன் மனதில் வந்து போனது.

 

குறும்புச் சிரிப்பும், துறு துறு முகவெட்டுமாக இருப்பவளை நினைத்தவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்க “எப்படி டி இருக்கே? உன் மனசுலயும் நான் இருப்பேனா.‌ ஐ மிஸ் யூ சோ மச் அம்முலு” என்று முணகினான் மித்து.

 

காஃபி டேவில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் நண்பர்கள். இருவருக்கும் இடையில் நிலவிய அமைதியைக் கலைக்கும் பொருட்டு தொண்டையை மெல்ல செருமிக் கொண்டான் விஷ்வா.

 

மெனு கார்டை சுழற்றியவாறு ‘பேசு’ என்பதாய் செய்கை செய்தான் தோழன்.

 

“அக்ஷு! ஒரு பையன லவ் பண்ணுறா மித்து” சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்க்க, சலனம் எதுவுமின்றி அவனைப் பார்த்து “ரியல்லி? நம்ம அக்ஷு அவ்ளோ பெரிய மனுஷியாகிட்டாளா? யாரந்த லக்கி பர்சன்” என்று கேட்டான் அவன்.

 

“அந்த லக்கி ஃபெல்லோவ் அவளோட அருள். இட் மீன்ஸ் யூ அருள் மித்ரன்” எனச் சொல்ல, “வாஆஆட்” அதிர்ச்சியுடன் தான் வாய் பிளந்தான்.

 

“அ…அக்ஷு என்னை லவ் பண்ணுறாளா? ஐ கான்ட் பிலீவ் திஸ்” தடுமாற்றமாய் வார்த்தைகள் வெளிப்பட்டன.

 

அவனைப் பார்த்து புன்னகைத்து “எதுக்குடா ஷாக் ஆகுற? அவள் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை இருபது வயசாகுது. உன் மேல உயிரையே வெச்சிருக்கா டா. நானும் உன் கூட சேர்த்து வைக்கிறேனு வாக்கு கொடுத்துட்டேன்” உறுதியாக மொழிந்தான்.

 

“என் கிட்ட கேட்காம நீ வாக்கு கொடுத்திருக்கியே டா?” இயலாமையுடன் நோக்கினான் மித்ரன்.

 

“நான் சொல்லுற நீ கேப்பங்குற நம்பிக்கைல கொடுத்தேன். இந்த தடவையாச்சும் என் நம்பிக்கைய பொய்யாக்க மாட்டேனு நம்புறேன்” என்றவன் குரலில் அத்தனை வலி! அந்த வலியில் சுருக்கென வலித்தது இவனுக்கு.

 

விஷ்வா “உனக்கு ஞாபகம் இருக்குல்ல ஒன் டைம் ப்ராமிஸ் கேட்டது. நீ என் கிட்ட ஃபர்ஸ்ட் ராங்க் எடுக்க சொன்ன” என்றவனைப் பார்த்து பழைய ஞாபகங்கள் முகிழ்க்க ஆர்வமாக தலையாட்டியவன் “மறக்க கூடிய விஷயமா அது?” என்று கூற,

 

“அந்த ப்ராமிஸ்ஸ நான் இப்போ கேட்குறேன். நீ என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கனும்” நிதானமாகச் சொன்னான் விஷ்வா.

 

அதிர்வுடன் “வி…விஷு” என்றழைத்தவனுக்கு வார்த்தையே வராது தான் போயிற்று.

 

“என்னடா என்ன?”

 

கண்களை இறுக மூடித் திறந்த மித்து “இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்ல விஷு” என்க, “அதான் யேன்னு கேக்குறேன்” விடாமல் கேட்டான் அவன்.

 

“என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் என் கல்யாணம் பற்றி யோசிக்கனும்” என்றவனின் பேச்சில் விழி விரித்து, “தங்கச்சியா? ஹூ இஸ் ஷீ? உனக்கு சிஸ்டரே இல்லையே டா” என்றவனுக்கு குழப்பமாய் இருந்தது.

 

சட்டென முகம் கனிய “முன்ன இருக்கல. இப்போ எனக்கும் ஒரு ஸ்வீட் தங்கச்சி இருக்கா. மை வைஷு பாப்பா. வைஷ்ணவி” எனக் கூறிய மித்ரன் அவளைச் சந்தித்ததை சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.

 

விஷ்வாவுக்கோ அவளைப் பார்க்கும் ஆவல் மேலிட, உதடுகளோ “வைஷ்ணவி.. நவி!” என அவனை அறியாதே அசைந்தன.

 

“சோ இப்போ நீ என்ன சொல்ல வர்றே?” கைகளைக் கட்டிக் கொண்டு அவனை ஆழ்ந்து பார்க்க, மித்ரனுக்கோ அக்ஷுவுடனான திருமணத்தை மறுக்கவும் முடியவில்லை. விஷ்வாவின் வாக்கை தனது வாக்காக நினைப்பவனாயிற்றே அவன்? ஆயினும் ஏற்றுக் கொள்ளவும் மனம் சண்டித் தனம் செய்ய,

 

“வைஷுவுக்கு கல்யாணம் பண்ணனும். அதயும் ஈசியா பண்ணிட முடியாது. மாப்பிள்ளை தேடனும். அவளுக்கு ஒரு நல்ல லைஃப அமைச்சு குடுக்காம என்னால கல்யாணத்த பற்றி திங்க் பண்ண முடியல” என்று சொல்ல,

 

சிறு நேரம் தாடை தட்டி தீவிரமாக யோசித்தவனுக்கு ஏதோ தோன்ற “நீ எதுக்கு வரன் பார்க்கனும்? உன் தங்கச்சிய நானே கல்யாணம் பண்ணிக்குறேன். உன் ரூட்டு க்ளியர்” தோளைக் குலுக்கியபடி சொன்னவனின் பேச்சில் அதிர்ந்து நிற்பது மித்ரனின் முறையாயிற்று.

 

“என்ன சொன்ன விஷ்வா? நீ ஜோக் பண்ணாத” வாய் தான் அப்படி சொன்னாலும் மனதோ அவன் சொன்னது நிஜமாக இருக்க வேண்டும் என்று அடித்துக் கொண்டது. ஏற்கனவே வைஷ்ணவியில் விஷ்வாவைக் கண்டவனுக்கு இருவரும் ஒன்றிணைவது தேனாக இனித்தது.

 

“நொட் ஜோக் அய்ம் சீரியஸ் மித்து! உன் தங்கச்சிய நான் கட்டிக்குறேன். உனக்கும் மாப்பிள்ளை தேட வேண்டியிருக்காது. என் தங்கச்சிய நீ கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன சொல்லுறீங்க மாப்பிள்ளை?” கிண்டலுடன் கேட்டு கையை நீட்டினான்.

 

மாப்பிள்ளை எனும் அழைப்பின் ரகசியத்தை இப்போது புரிந்து கொண்ட மித்ரனோ பெருமகிழ்வு பொங்க அவன் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

 

விஷ்வா வைஷ்ணவி மேட் ஃபார் ஈச் அதர் என்று அவன் நினைத்தான. வைஷு, தான் வளர்ந்த வீடான விஷ்வா வீட்டிற்கே செல்லப் போவதை நினைத்து ஆனந்தக் கடலில் மூழ்கினான்.

 

“ஓகே டன் மாப்பிள்ளை! பட் வைஷு கிட்ட இது பற்றி கேட்கனும். அவளோட விருப்பம் தான் எனக்கு முக்கியம்” நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

 

விஷ்வா “என்னையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறியா மித்து? எனக்கும் வைஷு கூட பேச வேண்டியிருக்கு. என்ட் உன் தங்கச்சிய பார்க்கனும்” என்று வெளிப்படையாக கூறியவனின் மனம் அவளைப் பார்க்க பரபரத்தது.

 

குடிகாரி’யாக தன்னால் ஐஸ்கிரீம் ஃபார்லரில் பெயர் சூட்டப்பட்டு, உன்னை பார்க்கவே கூடாது என்று சபதம் செய்து கொண்டவள் தான் வைஷு என்பதை அறிந்தால் விஷ்வாவின் நிலை?

 

“ஓஹ்ஹோ என் தங்கச்சிய பார்க்க அவ்ளோ ஆர்வமா சார்க்கு?” குறும்பு கொப்பளித்தது மித்ரனின் குரலில்.

 

“யாஹ் அப்கோர்ஸ். நீ பில்டப்பு கொடுத்த அளவுக்கு உன் தங்கச்சி வர்த்தா இல்லையானு பார்க்கனும். பட் ஒன் திங்க் நீ வைஷு கிட்ட இந்த விஷயத்த சொல்லி விருப்பமா இல்லையானு கேளு. அவங்க நோ சொன்னாலும் நீ அக்ஷுவ ஏத்துக்கிட்டு தான் ஆகனும்” என்றவனைப் பார்த்து பெருமூச்செறிந்தான் காளை.

 

“டபுள் ஓகே” குறுஞ்சிரிப்பு உதயமானது உதட்டில்.

 

அவனைப் பார்த்து ‘சாரி மாப்ள! இந்த விஷயத்துல நான் அவசரப்படுறனு தெரியுது. அய்ம் செல்பிஷ் ஃபெலோவ். ஆனாலும் நீயில்லாம அக்ஷு கஷ்டப்படுறத பார்க்க முடியல. அதுவுமில்லாம த்ரிஷா வீட்டுக்கு போய்ட்டு வந்ததுல இருந்தே அவ அப்செட்டா இருக்கா. அதனால தான் உன்னை கம்பள் பண்ணுற மாதிரி கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டேன். அவள உன்னால மட்டும் தான் சரி பண்ண முடியும்’ என்று மானசீகமாக மன்னிப்பு யாசித்தான் விஷ்வா.

 

விஷ்வாவின் கையைப் பிடித்து அழுத்திய மித்து “ஏன்டா அப்செட்டா இருக்க? அக்ஷுவ நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு நினைக்குறியா?” மெல்லிய குரலில் கேட்டான்.

 

“ச்ச இல்லடா. உன்ன தவிர வேறு யாராலயும் அவள நல்லா பார்த்துக்க முடியாது. உனக்கு ஞாபகம் இருக்கா சின்ன வயசுல எவ்ளோ சொல்லிக் கொடுத்தும் அவள் உன்னை அண்ணானு கூப்பிடவே இல்லை. அன்னக்கி உன்ன லவ் பண்ணுறேனு சொன்னது ஷாக் தான். அத விட சந்தோஷமாவும் இருந்துச்சு” என்றவனின் பிரகாசிக்கும் வதனத்தையே இமை கொட்டாமல் விழிகளில் நிரப்பிக் கொண்டான்.

 

அவனது இந்த மகிழ்விற்காக உயிரையும் கொடுக்கலாம் என்றே தோன்றியது நண்பனுக்கு! தம்முள் இருந்த விரிசல் பிரிவு கோபம் அனைத்துமே இப்போது மாயமாகிப் போய் இருப்பதை இருவருமே உணரவில்லை.

 

“வா விஷு! வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்க, “ம்ம்” என எழுந்தான்.

 

…………….

மித்ரனுக்கோ பல நாள் கழித்து நண்பன் வீட்டுக்கு வருவதில் சந்தோஷம் ஊற்றெடுக்க “உள்ள வா டா” என்று சொல்லும் போதே விஷ்வாவின் ஃபோன் அடித்தது.

 

“நீ போ. நான் கால் பேசிட்டு வரேன்” என்று சொல்லிய விஷ்வா பிசினஸ் விஷயமாக கதைக்கத் துவங்க, ஹரிஷிடம் விஷ்வா வந்ததைச் சொல்ல ஓடினான் மித்ரன்.

 

பேசி முடித்து விட்டு திரும்பியவனின் விழிகளில் பட்டது அந்த உருவம். கறுப்பு நிற துணியால் கண்களைக் கட்டி, பின் வாசல் வழியாக பதுங்கிப் பதுங்கிச் சென்ற உருவத்தைக் கண்டு மித்துவின் பைக்கில் இருந்த ஹெல்மட்டை தலையில் மாட்டி அதன் பின்னே ஓடியவன் அருகில் சென்று, அது பெண் என்பதை உணர்ந்த விஷ்வா “திருடி திருடி” என்று கத்த,

 

எதிர்பாராத சத்தத்தில் அலறியடித்துத் திரும்பி நின்று, ஹெல்மெட்டால் முகத்தை மறைத்திருந்தவனைப் பார்த்து பயந்து “அய்யய்யோ திருடன்” பெரும் சத்தமிட்டாள் வைஷ்ணவி!

 

மித்ரனின் அம்முலு யார்…..?? அக்ஷராவா…..??

வைஷ்ணவி விஷ்வாவை தன் மணாளனாக ஏற்பாளா…..??

 

நட்பு தொடரும்………!!

 

✒️ ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!