13. இதய வானில் உதய நிலவே!

4.8
(4)

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️

 

நிலவு 13

 

காபி ஷாப்பில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் உதய வர்ஷனும் அதிய நிலாவும்.

 

அதியின் முறைப்பைப் பார்த்து “நீங்க எதுக்கு என்னை முறைக்கிறீங்க?” என அவளை முறைத்தான் உதய்.

 

“நீ எதுக்கு என்னை முறைக்கிறனு எனக்குத் தெரியல. அதனால நான் முறைக்கிறேன்” என்று கைகளை விரித்தாள் பெண்ணவள்.

 

“எனக்கு மட்டும் இப்படி முறைச்சுட்டு இருக்கணும்னு வேண்டுதலா? நீங்க தான் என்னை முறைக்க வைக்கிறீங்க” குற்றம் சாட்டினான் காளை.

 

“ஓகே நோ ப்ராப்ளம்! நீ அடிக்கடி சிரிச்சு பார்த்திருக்கிறேன். இப்படி முறைச்சுப் பார்த்ததில்லை. நீ முறைக்கும் போது கூட செம்ம அழகா இருக்க. வெச்ச கண்ணு வாங்காம இந்த உலகத்தையே மறந்து உன்னை சைட் அடிச்சிட்டு இருக்கலாம் டா கண்ணா” என்று கன்னத்தில் கை வைத்து தன்னவனைப் பார்த்தது அந்தக் காதல் கிளி!

 

“ஆமா சைட்டு அடிப்பீங்களா சைட்டு? இதுதான் மெயின் ப்ராப்ளமே. எங்க ஆஃபீஸ்கு பில்டிங் ப்ளானை எக்ஸ்பிளைன் பண்ண வந்துட்டு என் முகத்தை பாத்துட்டு இருக்கீங்க. எங்க சார் கூப்பிடுறதைக் கூட காதுல வாங்கிக்காம அப்படியே கண்ணு மூடாம பார்க்குறீங்க. அவங்க என்ன நினைப்பாங்க?” என்று கேட்டான் அவன்.

 

“ஹலோ ஹலோ இதுல என் தப்பு எதுவும் இல்லை. மொத்த அழகையும் கொள்ளையடிச்சு முகத்தில் வச்சிருக்குறது உன் தப்பு. எனக்கு காதலை உணர்த்தினது உன் தப்பு. இப்போ என் லவ்வை ஏத்துக்காம பந்தா பண்ணி என்னை இன்னும் இன்னும் நெருங்க வைக்கிறது உன் தப்பு. இப்படி தப்பை தப்பாம பண்ணிட்டு என் மேல பழி போடறது உனக்கே நியாயமா டா?” நியாயம் கேட்டாள் அதி.

 

“பழி போடுறது நானா நீங்களா? அப்படி எல்லோரும் முன்னாடியும் என்னைப் பார்க்காதீங்க” உதடு பிதுக்கினான் காளை.

 

“அப்போ உன்னைத் தனியா இருக்கும் போது எத்தனை மணி நேரம் வேணாலும், எப்படி வேணாலும் சைட் மேலே சைட் அடிக்கலாமா?” கண்ணடித்தாள் கண்ணழகி.

 

“ஓவரா பேசாதீங்க எனக்கு இதெல்லாம் பிடிக்கல. சைட் அடிக்க வேற பசங்களா இல்ல?”

 

“உனக்கு பிடிக்கலனாலும் எனக்கு இது தான் பிடிச்சிருக்கு டார்லிங்! சைட் அடிக்க நிறைய பசங்க இருக்கலாம். ஆனால் என் ஹார்ட்டை ஆட்டைய போட்டு அட்டையா ஒட்டிக்கிட்டு இருக்குறது நீ தான்யா” என்று இதயத்தை சுட்டிக் காட்டினாள்.

 

“அச்சோ கடவுளே! எனக்கு இதுக்கு மேல எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல” தலையில் கை வைத்துக் கொண்டான் வர்ஷன்.

 

“நீ எதுவும் புரிய வைக்க வேணாம். என் லவ்வை புரிஞ்சுக்க அது போதும். சைட் அடிச்சுட்டு, உன் கூட பேசிட்டு, உன்னைப் பார்த்துட்டு அப்படியே இருந்துருவேன்” என்று அவள் காதல் வசனம் பேசும் போது ஆர்டர் செய்த ஜூஸ் வந்தது.

 

“ஓஓ ஷிட்…!!” என அதி முகம் சுருக்க, “என்னாச்சுங்க?” என்று வினவினான் உதய்.

 

“காஃபி ஆர்டர் பண்ணி இருந்தா காபி வித் காதல்னு சொல்லி இருக்கலாம். வந்தது ஜூஸ் தானே? அதான் அப்படி”

 

“உங்களுக்கு இது வேணாம்னா காஃபி கொண்டு வர சொல்லட்டுமா?” என்று கேட்டவனைப் பார்த்து, “இல்லை வேண்டாம்! நாம கொஞ்சம் டிஃபரண்டா ஜூஸ் வித் காதல்! அப்படின்னு சொல்லி குடிக்கலாம்” என்று பருகினாள் அவள்.

 

அவளுக்குத் தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. முன்பெல்லாம் ஓரிரு வார்த்தைகள் பேசவே ஆயிரம் தடவை யோசிப்பாள். இப்பொழுது படபடவென பேசுகிறாள். “ரியல் அதி இஸ் பேக் வித் லொட் ஆஃப் லவ்ஸ்!” என்று உள்ளுக்குள் சிரித்தாள்.

 

அவனும் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்க “உதய்!கொஞ்சம் திரும்பிப் பாரு” என கை காட்டினாள்.

 

அவனும் அவள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்க்க அங்கே எதுவும் இருக்கவில்லை. விலுக்கென திரும்பி “ஓஹ்ஹோ! ஜூஸ்ஸை மாற்றி குடிக்க போறீங்களோ? இதெல்லாம் எனக்கு தெரியாது நினைச்சீங்களா?” என்று முறைத்து க்ளாஸை மாற்றி ஒரே மிடரில் குடித்து முடித்தான்.

 

“ஆமாடா. டாம் அண்ட் ஜெர்ரி பார்க்குறதால லவ்வர்ஸ் இப்படி பண்ணுறதை சினிமால பார்த்திருக்க மாட்டேனு நினைச்சேன்” என்று பாவமாகக் கூற அவனோ நக்கலாகச் சிரித்தான்.

 

“ஹலோ ஓவரா சந்தோஷப்படாத. உன்னை அங்கே பார்க்க வச்சிட்டு கிளாஸ்சை மாத்திரலாமுன்னு நினைச்சேன். பட் அன்லக்கி நீ குயிக்கா திரும்பிட்டதால மாத்த முடியல. சோ பேபி! இப்போ நீ குடிச்ச ஜூஸ் நான் குடிச்சிட்டு வச்சது? எப்படி டேஸ்ட் சூப்பரா இருந்ததா டாக்டரே?” குறும்புடன் அவனைப் பார்த்தாள் பாவை.

 

“வாட்? நிஜமாவே மாத்தலையா” இஞ்சி தின்ற குரங்கு போல் ஆனது அவன் முகம்.

 

“இப்போ நான் என் வர்ஷு கண்ணா குடிச்சதை குடிக்க போறேன்” என அவனைப் பார்த்துக் கொண்டே ருசித்து அருந்தினாள் இதயா.

 

“உன் இதழ் பட்ட குவளை அமிர்தமாய் இனிக்கிறதே! உன் கரம் கோர்க்க எனக்கு வரம் கொடுக்க மாட்டாயோ வேந்தா?” கவி பாடினாள் அதி. எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

“டேய் ராஸ்கல்! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அன்னிக்கு என் மேல இருந்த காதல் இன்னும் அப்படியே இருக்கு. அப்புறம் ஏன் வர்ஷு என்னையும் நோகடிச்சு உன்னை நீயே வருத்திக்குற? இதற்கு பதிலாவது சொல்லு” அன்போடு கேட்டாள் அதிய நிலா.

 

“நான் அன்னைக்கு சொன்னதைத் தான் இப்போவும் சொல்லுறேன் உங்க மேல காதல் இல்லை. அப்படி இருக்கும் போது என்னால எப்படி உங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஏத்துக்க கஷ்டமா இருந்தாலும் இது தான் உண்மை அதியா. உங்களுக்கு நான் இந்த ஜென்மத்தில் கிடைக்க மாட்டேன்.

 

தயவு செஞ்சு உங்க மனசை மாத்திக்கங்க. உங்களுக்காக பிறந்த ஒருத்தன் இருப்பான். அவன் உங்களுக்காக நிச்சயம் வருவான்” என்று சொன்னான் வர்ஷன்.

 

“ஜஸ்ட் ஷட் அப்! எனக்காகப் பிறந்தவன் யார்னு நான் புரிஞ்சுகிட்டேன். எனக்கானவன் நீ தான் உதய்! எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன் கூடத்தான். இதை உன்னால மட்டுமில்ல வேற யாராலையும் தடுக்க முடியாது. நீ எனக்குத் தான்! நான் உனக்குத் தான்! இனிமேல் இப்படி பேசாத” கோபத்தில் சிவந்த விழிகள் இப்பொழுது கண்ணீரில் சிவக்கலாயின.

 

“அதியா…!” என்று அழைத்தவனிடம், “எஸ் அய்ம் அதியா. பட இன்னும் கொஞ்ச நாளில் நான் மிஸ்ஸிஸ் அதியநிலா உதய வர்ஷன்” என்று உறுதியாக மொழிந்தவாறு அங்கிருந்து வெளியேறினாள் மங்கை.

 

அன்று, ஷாலுவின் பாலர் பாடசாலையில் சுற்றுலா செல்வதாக இருக்க அவளைப் பத்திரமாக பேருந்தில் ஏற்றி ஆசிரியையிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பிய அதியின் மனதில் புன்னகையுடன் வந்து நின்றான் அவளின் மாயக் கண்ணன்.

 

அவனுக்கு அழைத்துப் பேச வேண்டும் என்று ஆவல் எழுந்தாலும் அவளிடம் அவனது தொலைபேசி எண் இருக்கவில்லை. “இன்னிக்கு எப்படியாவது அவனை மீட் பண்ணி நம்பரை வாங்கிடனும். அப்போதான் நினைக்கும் போதெல்லாம் அவன் முகம் பார்க்க முடியும், அவன் குரல் கேட்க முடியும்” என்று கனவுலகில் சஞ்சரகக்கத் துவங்கினாள்.

 

ஷாலு வீட்டில் இல்லாதது ஏதோ போல் இருந்தது. வர்ஷுவைக் காணவும் இதயம் படபடக்க அவன் ஜாகிங் போவதாக கூறியது நினைவுக்கு வந்தது. அன்றொரு நாள் அவனை பூங்கா வீதியில் சந்தித்தது நினைவில் உதிக்க,

 

“அட்ரா சக்கை! இனிமேல் கொஞ்சமும் தாமதிக்க கூடாது. உடனே போய் என் ஸ்வீட் ஹார்ட்டை சந்திச்சு அவனோட ஹார்ட் பீட்டை எகிற விட்டு வரலாம்” என்று நினைத்து முட்டி வரை டாப்ஸ்சும் ஜீன்ஸ், ஷூவும் அணிந்து தலையில் கேப் போட்டு வெளியேறினாள்.

 

பூங்கா தெருவுக்கு வந்தவள் தூரத்தில் தன்னவனைக் கண்டு கொள்ள அனிச்சம் பூவாய் மலர்ந்து சிரித்தன அவள் நேத்திரங்கள்.

 

ஓடும் போது துள்ளி அடங்கி நெற்றியில் புரண்டு சில்மிஷம் செய்யும் முடிகள், வில்லாய் வளைந்த பருவங்கள், மின்னல் கீற்றாய் ஒளிரும் விழிகள், கூரிய நாசி, எப்பொழுதும் புன்னகை உறைந்திருக்கும் சிவந்த இதழ்கள், திமிறிப் புடைத்த மார்பு என்று அவனை இமை சிமிட்டாமல் ரசித்தாள் ரசிகையாய்!

 

அவள் வதனத்தை இவ்வினிய காலைப் பொழுதில் பார்த்துக் கொண்டே இருப்பது கூட அவளுக்கு இன்பத்தைக் கொடுத்தது. பாலைவனமாக இருந்த அவள் வாழ்வில் தூறலாய் வந்து காதலெனும் அடை மழையைப் பொழிந்தவன் அவன்.

 

தனக்கு என்று இருந்த அளப்பரிய ஆசைகளை மறந்தும் மறுத்தும் வாழ்ந்தவளது சிறு சிறு ஆசைகளைக் கூட கேட்காமலே நிறைவேற்றியவன் அவன்! வெள்ளைக் காகிதமாக இருந்த அவள் வாழ்வில் வண்ண ஓவியம் தீட்டி அவளுக்கு உயிரூட்டிய தூரிகை அவன்! அவளது மனதில் ஒளிரும் தாரகை அவன்!

 

வாழ்வில் அவளுக்குப் பிடித்தத்தை ஏற்படுத்தியவன்! அவன் சிரிப்பழகன்! குறும்பழகன்! கொஞ்சம் திமிரழகன்! கவியழகன்! அன்பழகன்! மொத்தத்தில் அவன் பேரழகன்!

 

தன் இதயம் கவர்ந்த கண்ணாளனைக் காண்கையில் அவளுக்குப் பிடித்த சினிமா பாடல் என்று ஞாபகத்திற்கு வந்தது.

 

🎶 ஒரு தல காதல தந்த

இந்த தறுதல மனசுக்குள் வந்த

ஒரு தல காதல தந்த

இந்த தறுதல மனசுக்குள் வந்த 🎶

 

🎶 காதலிக்க கைடு இல்ல

சொல்லி தர வா வாத்தி

சேர்த்து வச்ச ஆசை எல்லாம்

அள்ளி தர வா வாத்தி

என் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி 🎶

 

🎶 {அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு} (2) 🎶

 

🎶 உன் பேர தினம் கூவும்

குயிலா ஆனேன் நான்

நீ பாக்க புது மாரி

ஸ்டைலா ஆனேன் நான் 🎶

 

🎶 பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா

ஆனேன் நான்

மனசார உன்னோட ஃபேனா

ஆனேன் நான் 🎶

 

🎶 கொஞ்சம் பார்க்கணும்

கைகள் கோர்க்கணும்

ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக

ஊர சுத்தணும்..

பேண்டு வாசிச்சு

கிரேண்டா மேரேஜு

கெட்டி மேளம் எங்கும் கேக்கணும் 🎶

 

🎶 {அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு} (2) 🎶

 

🎶 ஒரு தல காதல தந்த

இந்த தருதல மனசுக்குள் வந்த

ஒரு தல காதல தந்த

இந்த தருதல மனசுக்குள் வந்த 🎶

 

🎶 காதலிக்க கைடு இல்ல

சொல்லி தர வா வாத்தி

சேர்த்து வச்ச ஆசை எல்லாம்

அள்ளி தர வா வாத்தி

என் உசுர உன் உசுரா

தாரேன் கை மாத்தி 🎶

 

🎶 புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு 🎶

 

கன்னத்தில் கை வைத்து அவனை அளவிட்டுக் கொண்டிருந்தவளின் பார்வையின் வீச்சு அவனைத் தாக்கியதோ என்னவோ? அவள் பக்கம் தலை திருப்பிப் பார்த்தான் வர்ஷன்.

 

“ஹாய் டா” என்று அருகில் சென்றாள் அவள்.

 

“நீங்களும் ஜாக்கிங் பண்ண வந்துட்டீங்களா அதியா?” என வினவினான் உதய்.

 

“ஜாக்கிங் போறதெல்லாம் என் பழக்கம் கிடையாது. இருந்தாலும் சைட்டிங் வேலையைப் பார்க்குறதுக்காக ஜாகிங் பண்ண வேண்டியிருக்கு. சோ ரெண்டுத்தையும் சேர்த்து பண்ணிட்டாப் போச்சுன்னு கிளம்பிட்டேன்” என்று கூறினாள் அவள்.

 

“என்ன கேள்வி கேட்டாலும் அதுக்குள்ள உங்க லவ்வை இழுத்துப் புகுத்தி விடுறீங்களே. இது உங்களுக்கே நியாயமா?” கையசைவில் கேட்டான் ஆடவன்.

 

“என்ன பண்ணுறது உதய்? என் ஆளுக்கு நான் லவ் பண்ணுறது அடிக்கடி மறந்து போயிடுது. அதான் நானும் அடிக்கடி அட்வர்டைஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்று புன்னகை பூத்தாள் பாவை.

 

“என் க்யூட்டி எங்கே? தூங்குகிறாளா” ஷாலுவைப் பற்றிக் கேட்கும் இப்போது அவன் முகத்தில் ஜொலிப்பு!

 

“அவ நர்சரில டூர் கூட்டி போய் இருக்காங்க. பாப்பாவையும் அனுப்பி விட்டேன். அவள் இல்லாமல் வீட்டில் இருக்க கஷ்டமா இருக்கு. அவளை விட்டு நான் ஒரு நாள் கூட பிரிஞ்சு இருந்ததில்லை” என முகம் வாடினாள் அதி.

 

அவனோ எதுவும் பேசாமல் பேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியே எடுத்துப் பார்க்க, “ஃபீல் பண்ணாதனு கூட சொல்ல மாட்டியா உதய்? அந்த அளவுக்கு நான் வேண்டாதவள் ஆகிட்டேனா? என் முகம் கொஞ்சம் வாடினால் கூட நீ தாங்க மாட்டியே,

!? இப்போ ஏன்டா” என மனதினுள் கதறினாள் அவள்.

 

“இங்கே பாருங்க” என்று அவளிடம் தனது அலைபேசியைக் கொடுக்க புரியாமல் பார்த்தாள் அவள். அதில் ஷாலு தென்பட விழி விரித்தாள்.

 

டூரில் ஷாலு ஒரு பாடலுக்கு அழகாக நடனமாடும் காட்சி இருந்தது. “இது எப்படி உன் கிட்ட?” என வினவினாள்.

 

“எங்க கிட்ஸ் கமிட்டியில் இருக்கிற ரேகா தான் கியூட்டியோட நர்சரி டீச்சர். அவ கிட்ட அனுப்ப சொன்னேன். பாருங்க உங்க பாப்பா எப்படி டான்ஸ் ஆடுறானு”

 

தலையசைப்புடன் ஷாலுவைப் பார்த்தாள் அவள். ஷாலு பற்றிய கவலை அவளை விட்டும் பறந்து போய் இருந்தது.

 

“உனக்கு ஏன் டா பாப்பாவை அவ்ளோ பிடிக்குது?” என்று கேட்டவளுக்கு பதில் கூறலானான் அவன்.

 

“பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். ஆனால் பிடிச்சது ஏன்னு கேட்டா காரணம் இருக்காது. காரண காரியம் இல்லாம எந்த லாஜிக்கும் இல்லாமல் சட்டுன்னு வரது தான் பாசம்! க்யூட்டியை பார்த்த உடனே எனக்கு பிடிச்சது. எனக்கு அவள் முகம் எங்க நிலாம்மாவை ஞாபகப்படுத்துச்சு. ராவ் அங்கிளை மனசுல கொண்டு வந்துச்சு. எனக்கு பொதுவா குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குங்க. ஆனா அவங்களை விட ஷாலு ரொம்ப ஸ்பெஷல்” என்று புன்முறுவல் பூத்தான்.

 

ஷாலினி மீது அவன் கொண்டுள்ள பாசம் அவனது வார்த்தைகளிலே புரிந்தது அதியாவுக்கு.

 

“அப்போ என்னை ஏன் பிடிச்சுது உதய்?”

 

“இப்போ பிடிக்கல அதியா! அதனால இந்த கேள்வியை கேட்க வேண்டாம்”

 

“ஓகே! இப்போ ஏன் பிடிக்கலைன்னு சொல்லு. பிடிக்காததுக்கு ஈசியா காரணம் சொல்லி விடலாம்னு நீ தானே சொன்ன. என்னைப் பிடிக்காததுக்கு நீ காரணம் சொல்லணும்” என்று அவள் கேட்க,

 

“எல்லாத்துக்கும் காரணம் இருக்காது. அந்த காரணங்களை சொன்னா சில பேருக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது” என்றான் அவன்.

 

“இப்படி நீ மழுப்புறதைப் பார்த்தால் என்னை பிடிச்சிருக்குன்னு புரியுது. ஏதோ சும்மா பிடிக்காத மாதிரி நடிக்கிற” என சிரிப்புடன் சொன்னாள் அதியா.

 

“மனசுல எது தோன்றினாலும் அதை பட்டுனு சொல்லிடுறவன் நான். உள்ளுக்குள்ள ஒன்னை வச்சு வெளியில நடிக்க எனக்குத் தெரியாது. ப்ளீஸ் இந்த டாபிக்கை இத்தோட விட்றுங்க” என்று வேண்டினான் உதயா.

 

“அப்படி எல்லாம் விட்டு விட்டுத் தான் நீ பிடி கொடுக்காமல் சுத்திட்டு இருக்க. என்னால இதுக்கு மேல வைட் பண்ண முடியாது டா! எனக்கு ஒரு பதில் தெரியணும்”

 

“வேணாம்னு சொன்னா கேளுங்க அதியா! எனக்கு உங்க மேல காதல் இல்லை. அதனால என் கிட்ட இப்படி எல்லாம் பேசாதீங்க. உங்க மேல நாலு மாசத்துக்கு முன்னாடி காதல் இருந்துச்சு. அதான் உங்களை சுத்தி சுத்தி வந்தேன். ஆனால் இப்போ அந்தக் காதல் கொஞ்சமும் இல்ல.

 

இப்படி மாறி மாறி நினைக்கிறதைப் பார்த்தால் நான் உங்க மேல வச்சது காதலே இல்லையோனு நினைக்கத் தோணுது. உங்க மேல வந்த ஈர்ப்பை காதல் என்று நம்பிட்டேன் போல. இப்போ நான் தெளிவா இருக்கேன்..” என்று இன்னும் ஏதோ சொல்ல வந்தவனைக் கையுயர்த்தித் தடுத்திருந்தாள் பெண்.

 

“என் மேல இருந்த காதலைத் தப்பா பேசி கொச்சைப்படுத்துறது நீயா இருந்தா கூட அதை என்னால ஏத்துக்க முடியாது. உனக்கு என் மேல வந்தது ஒன்னும் ஈர்ப்பு கிடையாது. உண்மையான, தூய்மையான காதல். அது என்னிக்குமே மாறாது. மங்கிப் போகாது, அழியவே அழியாது. நீ என்னை மறந்துட்டேன்னு சொல்லுறது எல்லாம் சுத்தப் பொய்” கோபத்தில் கண்கள் சிவக்கப் பேசினாள் அவள்.

 

“நீங்க என்னதான் கோபப்பட்டாலும் இது தாங்க உண்மை” தன் நிலையிலிருந்தும் சற்றும் தளராமல் நின்றான் காதலன்.

 

“உண்மையும் இல்ல ஒரு மண்ணும் இல்லை! உன் மனசுல நான் இருக்கேன். நான் மட்டும் தான் இருக்கேன். அந்த இடத்தை அடைய வேற யாராலேயும் முடியாது”

 

“இல்லை இல்லை இல்லை! என் மனசுல நீங்க இல்லை. அப்படியே இருந்தாலும் அதை அழிக்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன். என் வாழ்க்கைக்குள் வேறு எந்தப் பொண்ணும் வர முடியாது” கடினமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

 

“ஏன் வர முடியாது? அதுக்குள்ள வேறு யாரும் இல்லைல. சும்மா வெட்டிக் கதை பேசி என்னைத் திசை திருப்பி விடப் பார்க்காத. நீ எது சொன்னாலும் நான் என் முடிவுல இருந்து மாற மாட்டேன். உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன். நீ எனக்கு கண்டிப்பா கிடைப்ப உதி! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” குறு நகையுடன் அவனை நோக்கினாள் அதியா.

 

“நான் உங்களுக்கு ஒருக்காலும் கிடைக்க மாட்டேன். நாம ரெண்டு பேரும் ஒரு போதும் சேர முடியாது. நம்ம வாழ்க்கை வேறு வேறு. அது ஒன்னாகாது” என்று ஆணித்தரமாகக் கூறினான் வர்ஷன்.

 

“ஏன்? ஏன் வர்ஷ் என்னை வார்த்தைகளால் காயப்படுத்துற? உன் காதலுக்குத் தகுதியில்லாத அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? அன்னைக்கு உன்னை ஹர்ட் பண்ணதுக்கு இப்படி தண்டனை தர்றதுக்கு பதிலா என்னை உன் கையால கொன்னுரு டா” கண்களில் விழி நீர் தேங்கி நின்றன.

 

“உங்களுக்கு நான் தண்டனை தரல அதியா. அந்தக் கடவுள் உங்க வாழ்க்கையில் விளையாடுறதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? என்னால உங்க காதலைப் பற்றி நினைக்க முடியாது.

 

“ஏன்? ஏன்னு எனக்கு தெரிஞ்சாகனும் உதய்” பிடிவாதம் பிடித்தாள் அவள்.

 

“ஏன்னா எனக்கு இன்னொரு பொண்ணு கூட கல்யாணமாகப் போகுது. கூடிய சீக்கிரமே என் லைஃப்ல ஒரு பொண்ணு வரப் போறா. நான் வாக்கு கொடுத்துட்டேன் அதி. அதை என்னால மீற முடியாது” நிதானமாக வெளிவந்தன வார்த்தைகள்.

 

அவ்வார்த்தைகள் அவளது இதயத்தைக் குத்தி கிழிக்க அதிர்ச்சியாய் நின்றாள் அதியா. “யார் அந்தப் பொண்ணு?” ஜீவனில்லாத விழிகளை அவன் மீது நிலைக்க விட்டாள்.

 

“என் ராவ் அங்கிளோட பொண்ணு நிலா” என்று கூறி விட்டு விருட்டென அங்கிருந்து கிளம்பினான் உதய வர்ஷன்.

 

உயிர் உடலை விட்டுப் பிரிவது போல் வலிக்க தளர்ந்து போய் கையால் அந்த பெஞ்சின் கைப்பிடியை பிடிமானமாகப் பிடித்து அழுத்தித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் அதிய நிலா.

 

நிலவு தோன்றும்….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!