5
(12)

இறுதி அத்தியாயம்

அடுத்த நாள் காலையில் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது..

மாமு ப்ளீஸ் எனக்கு முடியல என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்…

அவள் காதோரம் முத்தமிட்டு, சரி கொஞ்ச நேரம் தூங்கு என்று அவன் குளித்து கீழே சென்றான்…

அவன் சுடு நீர் வைத்தான்..

தேவகி எதுக்கு டா சுடு தண்ணி ?

அம்மா அவளுக்கு கால் வலிக்குதுன்னு சொல்றா என்றான்…

அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தார் தேவகி..

அவருக்கு புரிந்து விட்டது..

இங்க கொடு என்று ஹாட் பேக்கை வாங்கியவர் அதில் சுடு நீர் நிரப்பி கொடுத்தார்..

இந்தா காஃபி எடுத்துட்டு போ என்று கொடுத்தார்…

நான் என்ன ஆச்சு ன்னு பார்க்கவா என்று கேட்க?

இல்லை மா வேண்டாம்.. அப்புறமா வாங்க என்றான்…

சரி போ .. நான் டிபன் எடுத்துட்டு வரேன் என்றார்…

அவன் ஹாட் பேக்கை வைத்து அவளுக்கு ஒத்தடம் கொடுத்தான்…

அவளுக்கு இதமாக இருந்தது..

இந்தா காஃபி குடி..

அவளுக்கு கால்களை அமுக்கி விட்டவன்.சீக்கிரம் குளிச்சிட்டு வா அம்மா டிபன் எடுத்து வரேன்னு சொன்னாங்க என்றான்..

உங்களுக்கு கால் வலிக்கலையா என்று கேட்டாள்?

ம்ம் நான் ஸ்டில் பாடி என்று அவன் ஆர்ம்ஸை உயர்த்தி காட்டினான்…

இருவரும் ரூமை சுத்தம் செய்து விட்டு குளித்து முடித்துவிட்டு கீழே வந்தார்கள்..

நானே டிபன் எடுத்து வரேன்னு சொன்னேன் தானே.. அதுக்குள்ள நீயே வந்துட்டியா என்று கேட்க?

ஆமாம் அத்தை அது பரவால்ல இப்ப ஓகே தான் என்றாள்…

இருவரின் முகத்தை வைத்தே அவர்களின் அந்நியோன்யத்தை நினைத்து மனதிற்குள் சந்தோஷம் பட்டுக் கொண்டார்…

அன்னைக்கு அப்படி கோபப்பட்டவரா இவர் என்று பிரகதிக்கு ஆச்சரியமாக இருந்தது…

இவர்கள் வாழ்க்கைய அழகாக நகர்ந்தது..

இடையில் அபிஷேக் இங்கே வந்து அவன் குடும்பத்தோடு பெங்களுர் சென்று விட்டார்கள்..

மாமியார் மருமகள் என்பதைத் தாண்டி இருவருக்கும் ஒரு வித பாசத்தோடு பழகினார்கள்…

அவர்களின் கடைக்கு அழைத்துச் செல்வான் அரவிந்த்..

சுகுமாருக்கு ஓய்வு தேவை படும் போது பிரகதி  தான் கடையை பார்க்கச் செல்வாள்..

ஆரம்பத்தில் தயங்கினாலும் அடுத்தடுத்து அவளுக்கு பிடித்துப் போனது..

அரவிந்த் வீட்டில் இருந்தாள் பிரகதியை ஒரு வழி ஆக்கி விடுவான்..

கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தாளும் அங்கு மேடையில் அமர்ந்து அவளை படுத்தி வைப்பான்…

தேவகி கிச்சனில் இருந்தாலும் அவருக்கு தெரியாமல் முத்தமிடுவது ;

டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவளை வம்பு இழுப்பது என்று படுத்தி எடுப்பான்…

தேவகியே டேய் போதும் டா அவள சீண்டாத என்று சொல்லும் அளவுக்கு குறும்பு செய்தான்…

கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னா கேட்க மாட்டான் இப்பவா என் பேச்சை கேட்பான் என்று நினைத்துக்கொண்டார் தேவகி…

ஆனாலும் இவர்களை பார்க்கும் போது மனசுக்கு நிறைவாக இருக்கும் தேவகிக்கு..

இரண்டு மகன்களும் அவரவர் இணையோடு சந்தோஷம்..

இந்த வயதில் வேறு என்ன வேண்டும் அவருக்கு..

சுகுமாரும் மனைவியோடு கோவிலுக்கு சென்று வருவார்.. இப்பொழுது பழைய கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை..

பிரகதி இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போனால் போதும் ; எதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்து விடுவான்..

இல்லையென்றால் வேளை முடிந்ததும் அங்கு சென்று விடுவான்..

இப்படியே இரண்டு மாதங்கள் முடிந்த போது பிரகதி கருவுற்று இருந்தாள்..

ஸ்கேன் செய்து விட்டு வந்தார்கள்..

அனைவருக்கும் மகிழ்ச்சி..

பிரகதி வீட்டுக்கு முதல் வாரிசு.. மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள்…

இப்பொழுது இன்னும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.

6வது வார பரிசோதனையில் ட்வின்ஸ் பேபி என்று டாக்டர் கூற..

அவனுக்கு இன்னும் சந்தோஷம்..

டவுட் கேட்டு டாக்டரை டென்ஷன் ஆக்கி விடுவான்..

அபிஷேக் அவன் குடும்பத்தோடு வந்து சென்றான்…

இப்பொழுது ஐந்தாவது மாதம்..

பெரிதாக வேலை எல்லாம் செய்ய விடுவதில்லை…

தங்கத் தட்டில் வைத்து தாங்காதது தான் குறை..

ஐந்தாம் மாதம் வளையல் போட்டு பிரகதிக்கு சடங்கு செய்தனர்…

இரவில் அவனுக்குள் அவளை அணைத்து படுத்துக் வைத்துக் கொள்வான்..

வயிற்றில் கை வைத்து பேசுவான்..

குழந்தைகளும்  அவன் பேச்சை கேட்டதற்கு அடையாளமாக அசைவுகளை காட்டுவார்கள்..

பிரகதியும் நிறைய தடவை  அவனிடம் கேட்டு இருக்கிறாள் உங்களுக்கு ஏன் என்னை ரொம்ப பிடித்து இருக்கு என்று?

அது எனக்கும் தெரியாது?

என் லவ் எப்படி. தெரியுமா?

நான் உன்ன பார்க்காம லவ் பண்ணி இருக்கேன்..

உன் நினைச்சு லவ் பண்ணி இருக்கேன்..

உன்ன கல்யாணம் செய்வனான்னு தெரியாது ஆனா உன் ஃபோட்டோ பார்த்து லவ் பண்ணி இருக்கேன்..

இதெல்லாம் எப்படின்னு எனக்கு தெரியல டி என்பான் அரவிந்த்…

என்னமோ தெரியவில்லை ஏதோ பல ஜென்மமாக தொடர்வது போல ஒரு பந்தம் இருவருக்கும்…

அப்படியே ஏழு மாதங்கள் ஆனது..

வளைகாப்பு போடுவது பற்றி பிரகதி வீட்டில் இருந்து பேச வந்திருந்தார்கள்..

ஆரம்பத்தில் தேவகியும் கௌசல்யாவும் சற்று தயங்கினாலும் இப்பொழுது நன்றாகவே பேசிக் கொண்டார்கள்…

கல்யாணத்தில் செய்த தவறை மீண்டும் செய்து கூடாதுஎன்று பார்த்து பார்த்து பிரகதிக்கு செய்தார் தேவகி….

இந்த முறை செக்கப் சென்ற போது ” டாக்டர் அரவிந்திடம் பேபீஸ் எல்லாம் ஓகே தான்; ஆனால் ரெண்டு பேபிஸ் இருக்கனால பிரகதிக்கு கொஞ்சம் வீக்கா இருக்காங்க..

ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்.. ப்ரஷர் கூட கொஞ்சம் அதிகம் தான்”

வலி வர முன்னாடி சர்ஜரி பண்ணிடலாம் .. இப்பவே எல்லார் கிட்டயும் சொல்லாதிங்க” எல்லாரும் அட்வைஸ் பண்ணி இன்னும் டென்ஷன் ஆகிடுவாங்க என்றார்‌.‌

ஓகே டாக்டர்; வேற ப்ராப்ளம் இல்லையே என்று கேட்க?

நோ நோ அரவிந்த் என்றார்..

வளைகாப்பு நாளும் வந்தது..சிம்பிளாக ஒரு 20 பேரை மட்டும் அழைத்து வளைகாப்பு போட்டனர்..

வளைகாப்பு முடிந்து அவள் வீட்டுக்கு அனுப்பவில்லை..

குழந்தை பிறந்த பிறகு கூட்டி போய்க்கோங்க என்று சொல்லி விட்டான்… யாரும் எதுவும் சொல்லவில்லை..

அவன் தான் அவர்களை விட நன்றாக பார்த்துக் கொண்டானே.. அதனால் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லாத வருத்தம் இருந்தாலும் அரவிந்துக்காக சம்மதம் சொன்னார்கள்..

அவளுக்காக  அவன் வீட்டு மாடியில், பிரகதி வீட்டில் இருந்ததை போலவே டெரேஸ் கார்டன் அமைத்தான்…

அவனே மேற்பார்வை பார்த்தான்..

அண்ணே நாங்க பார்த்து செய்து தரோம் என்று வேலை செய்ய வந்தவர்கள் கூற..அவன் கேட்கவே இல்லை…

இத இப்படி செய்யுங்க, அத அங்க வைங்க ; ஊஞ்சல் இங்க மாட்டுங்க என்று படுத்தி எடுத்து விட்டான்..

ஏன்டா இப்படி என்று வீட்டில் எல்லோரும் கேட்டு விட்டார்கள்?

ஃபார் மை லவ் என்றான்…

திவ்யாவோ , பிரகதியை பார்த்து உன் மேல பொறாமை எல்லாம் இல்லை; ஆனா கொஞ்சம் பொறாமையா இருக்கு என்றாள்…

உன்மையா லவ் மேரேஜ் செய்தது நீங்களா, இல்லை நாங்களான்னு சந்தேகமா இருக்கு என்றாள்?

அண்ணி கண்ணு வைக்காதீங்க ..

கொழுந்தனாரே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான்  உங்களுக்கு திருஷ்டி எடுத்து விடறேன் வருத்தப்படாதீங்க என்றாள்…

திவ்யா தான் பேசிக் கொண்டிருந்தாள்..

ஆனால் இவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..

இருவரின் தோளில் தட்டி, நான் கீழே போறேன்.. நீங்க நல்லா ரொமேன்ஸ் பண்ணுங்க என்று அவள் சென்று விட்டாள்…

ஐயோ அக்கா இருங்க நானும் வரேன் என்று சென்றவளின் கையை பிடித்து இழுத்து அவன் மடியில் அமர வைத்தான்…

புடிச்சிருக்கா டி?

ம்ம்.

ஏதாவது சொல்லு டி?

இல்லை என்று தலையாட்டினாள்..

ஏண்டி பேச மாட்டியா?

ஆமா என்று மேலும் கீழும் தலையாட்டினாள்..

அவள் நெற்றி மீது முட்டி, கண்ணத்தில் முத்தமிட்டான்…

அவன் கேட்காமலே அவள் அவன் கண்ணத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்…

என்ன டி ஆச்சு?

நீங்க தான்..

நான் என்ன பண்ணுணேன்…

நீங்க என்ன ஒரு ராணி மாதிரி ட்ரீட் பண்றீங்க…

என் லைஃப் ல எதிர்பார்க்காம கிடைச்ச பொக்கிஷம் நீங்க தான் என்று இறுக்கமாக கட்டிக் கொண்டாள்..

அப்புறம் என்றான்…

நீங்க என் கைய எப்போமே விடக்கூடாது…

உங்க கைக்குள்ள எப்போமே நான் இருக்கனும்..

எப்பவும்  இதே போல  சந்தோஷமா இருக்கனும்..

அப்புறம் என்றான்..

இதுக்கு மேல எனக்கு சொல்ல‌ வார்த்தை இல்லைங்க என்று அவன் இதழில் முத்தம் இட்டாள்…

ஹேய் லவ் யூ டி என்றான்..

இப்போவே உன்ன எடுத்துக்கனும் டி?

ஆனா உள்ள ரெண்டு குட்டி வாண்டு இருக்காங்க சோ என்னால ஒன்னும் பண்ண முடியாது என்றான்..

தெரியும் , அதனால என்ன கட்டி பிடிச்சுக்கோங்க என்றாள்..

ரதி நான் ஒன்னு சொல்லட்டுமா?

என்று அவள் கண்ணம் உரசி கேட்க?

ம்ம் சொல்லுங்க என்றாள் அவனை பார்த்து…

உனக்காக நான் எப்போமே ‌இருப்பேன் டி.

சந்தோஷமோ , சோகமோ இந்த இடத்தில வந்து உட்காரும் போது நீ நான் , வேற எதுவும் யோசிக்க கூடாது..

நாம  சந்தோசமா இருந்த நாட்கள நினைச்சு பார்த்துக்கணும் என்றான்.

நீ என் நெஞ்சில சாய்ந்துக்கனும்…

ம்ம் சரி மாமு என்றாள்..

இப்படியே சிறிது நேரம் நிறைய பேசினார்கள்…

அரவிந்த் இன்னும் மேலே என்ன பண்ற.. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க

என்று அபிஷேக் அழைத்தான்..

வாங்க போகலாம், அத்தை திட்டுவாங்க என்று இருவரும் கீழே வந்தனர்…

அப்புறம் லவ் பண்ணிக்கோங்க … இது  சாப்பிடற நேரமா என்றார் தேவகி‌‌…

வயித்துல ரெட்டை பிள்ளைய வெச்சிட்டு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை என்று அவர் கூறினார்…

அம்மா அப்படி எல்லாம் இல்லை என்று அரவிந்த் கூற..

பிரகதி நீ உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு… உனக்கு உன் அம்மா தான் சரிபட்டு வருவாங்க என்று கூற..

அவ போனா நானும் கூடவே போயிடுவேன் என்றான்..

டேய் நீங்க இணைபிரியா ஜோடி ன்னு தெரியுது சாப்பிடுங்க என்றான் அபிஷேக்…

லவ் பண்ணா பொறுக்காதே என்று அரவிந்த் கூற..

நாங்களும் லவ் மேரேஜ் தான்…

ஆனாலும் உன்னை மாதிரி பண்ணல டா என்று சிரித்தான்…

இப்படியே  சிரித்து பேசி மகிழ்ந்து சந்தோஷமாக நாட்கள் கடந்தன..

அடுத்த செக்கப் சென்ற போதே அவளை அட்மிட் செய்தார்கள்….

அவர்கள் காதலுக்கு பரிசாக ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை பிறந்தது…

அவர்கள் காதலை போலவே அவர்கள் வாழ்க்கையும் அழகான ஓவியம் போல இருந்தது…

அவள் மீது உள்ள அவன் காதலும்..

அந்த காதலை எண்ணி எண்ணி அவர்கள்  மனம் மகிழ்வுடன்

இவர்கள் காதல்  என்றும் தீராக் காதலாக  இருக்கும்…

                  ‌******முற்றும்******

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!