Home Novelsஇதய வானில் உதய நிலவே...!!18. இதய வானில் உதய நிலவே!

18. இதய வானில் உதய நிலவே!

by Shamla Fasly
5
(2)

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️

 

நிலவு 18

 

பல்கோணியில் நின்று வானில் உதித்த நிலவைப் பார்த்திருந்தாள் அதியா. 

 

நாளை அவளது திருமணம்! அவளது வாழ்வில் அவளுக்கான ஒருவன் இணையப் போகின்றான். செல்வி அதிய நிலா ராகவன் திருமதி அதியநிலா உதய வர்ஷனாக கிரீடம் சூடப் போகின்றாள்.

 

அவள் வாழ்க்கையில் நிகழவிருக்கும் அதி முக்கியமான நிகழ்வை அவளது குடும்பத்தினரும் கூட இருந்து கொண்டாட வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று நினைக்கும் போதே நயனங்களில் விழி நீர் பூத்தது.

 

“அப்பா…! நாளைக்கு உங்க பொண்ணுக்கும் உங்க உதய் கண்ணாவுக்கும் கல்யாணம். உங்களுடைய ஆசை, பல வருட கனவு நிறைவேறப்போகுது. ஆனா நீங்க என் கூட இல்லை. உங்க கால விழுந்து என்னால ஆசீர்வாதம் வாழ முடியாது. உங்க முகத்தைப் பார்த்து சிரிக்க முடியாது. ஆனந்த கண்ணீரோட தோள் சாய முடியாது.

 

ரொம்ப கவலையா இருக்கு. ஐ மிஸ் யூ பா! அம்மா, அண்ணா, அண்ணி எல்லோரையுமே மிஸ் பண்றேன். மிஸ் யூ ஆல்” என்று கூறியவளின் விழிகளில் ஊற்றெடுத்த நீர் அணை கடந்து கன்னமெனும் கரையைத் தாண்ட முற்படும் போது ஒரு கை வந்து சட்டென கண்ணீரைத் துடைத்தெறிந்தது.

 

கதகதப்பான, அன்போடு கலந்து அந்த ஸ்பரிசமே அது யார் என்பதை உணர்த்த தன் கன்னத்தில் பதிந்த கையைப் பிடித்து, “உதய் கண்ணா!” என்று கன்னத்தில் அழுத்திக் கொண்டாள் பெண்ணவள்.

 

“யாஹ்! இட்ஸ் மீ உதய வர்ஷன்” வரிசைப் பற்கள் தெரிய அழகாக இதழ் பிரித்தான் வர்ஷன்.

 

“உங்க ஃபேமிலி எல்லோரையும் மிஸ் பண்றீங்களா இதயா?” அன்பு கனியக் கேட்டவனை ஏறிட்டு,

 

“ம்ம்! ரொம்ப மிஸ் பண்ணுறேன்” என்றாள் அவள்.

 

“நானும் அவ்வளவு மிஸ் பண்றேன் தியாம்மா! உங்க அழகான சிரிப்பை மிஸ் பண்ணுறேன். கிக்கான ஓர விழிப் பார்வையை மிஸ் பண்ணுறேன். டேய் மயக்கராங்குற அதிரடி அழைப்பை மிஸ் பண்ணுறேன். என்னோட இதய நிலவோட முழுமையான பிரகாசத்தை அதைவிட மிஸ் பண்ணுறேன். மொத்தத்துல என் ரியல் அதிக்காக துடிக்கிற இதயத்துடிப்பை மிஸ் பண்ணி என்னை நானே தொலைக்கிறேன்”

 

இதயத்தைத் தொட்டு காட்டியவனின் பேச்சில் மயங்கியவள் மனமோ “மாயக்காரன்” என்று முணுமுணுக்க முகமும் சூரியகாந்திப் பூவாக மலர்ந்தது.

 

“எஸ்! இது.. இது தான் கரக்டு! மை பெண்டா பேபி இஸ் பேக்” தன் தலையில் தட்டிக் கொண்டு கூறியவனின் செய்கையில் அவள் விழிகளில் பளிச்சென்ற மின்னல்.

 

“பேசியே கவுத்துருவடா கேடி” என்று சிணுங்கினாள் அதியா.

 

“ஆமா கேடி தான். இந்த அழகான லேடியோட அடங்காத கேடி” என கண்களை மூடித் திறந்தான் வேங்கை.

 

அவனது ஒவ்வொரு செய்கைகளும், வார்த்தைகளும் அவளை ரசிக்க வைத்தன. அவளை நோக்கி, “எங்கே கியூட்டியைக் காணோம்” என்று தேடியவனுக்கு,

 

“இவ்ளோ நேரம் ஆட்டம் போட்டுட்டு இப்போதான் டிவி முன்னால உட்கார்ந்தாள்” என்ன பதிலளித்து அவனோடு அறைக்குள் நுழைந்தாள் அதி.

 

“ஸ்ஸ் ஸ்ஸ்!” என்று உதய் மறைந்திருந்து விசில் அடிக்க, டிவியில் பதிந்திருந்த விழிகளை வேகமாக அங்குமிங்கும் சுழற்றினாள் ஷாலு.

 

“யாரை தேடுற பாப்பா?” தெரியாதது போல் வினவினாள் அதி.

 

“வர்ஷு அங்கிள் வந்திருக்காரு. விசில் சத்தம் கேட்டுச்சு” ஆவலுடன் அங்குமிங்கும் பார்த்தாள் அண்ணன் மகள்.

 

“அது… நான் தான் விசில் அடிச்சேன் டா”

 

“நீயே அடித்தாலும் இப்போ வர்ஷு இங்க தான் இருக்கார். அவரோட பெர்ஃப்யூம் ஸ்மெல் வருது” என்று மூக்கை உறிஞ்சி வாசம் பிடித்தாள் சிறுமி.

 

“கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே பிரைட் கேர்ள்” என்று கூறியபடி மறைந்திருந்த இடத்தை விட்டு வெளிவந்தான் உதய்.

 

“அய் அங்கிள்! நான் தான் சொன்னேன்” என்று துள்ளிக் குதித்து தன்னிடம் ஓடி வந்தவளை அலேக்காகத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான் காளை.

 

“நீங்க இப்போ இருந்து எங்க கூட இருப்பீங்களா வர்ஷு?” ஆசையோடு அவன் முகம் பார்த்தாள் பிஞ்சு.

 

மறுப்பாக தலையசைத்து, “இன்னிக்கு இல்ல டா. நாளைல இருந்து உன் கூடத்தான் இருப்பேன். கல்யாணம் நாளைக்கு தானே? சோ அது முடிஞ்சதும் நாம மூணு பேரும் ஒன்னாவே இருக்கலாம்” என்று அவள் முடியைக் காதோரம் சொருகி விட்டான் அவன்.

 

“உங்களுக்கும் அத்துவுக்கும் கல்யாணம் தானே? அப்புறம் ஏன் நம்ம வீட்டுல நிறைய பேர் வரல? எதிர்த்த வீட்டு அக்காவுக்கு கல்யாணம் நடந்தப்போ அவங்க வீட்டில் எப்பவுமே நிறைய ஆட்கள் இருப்பாங்க. என் வயசு குட்டீசும் இருந்தாங்க. எனக்கும் அவங்க கூட ஜாலியா விளையாட தோனுச்சு. அத்து தான் போக விடவில்லை”

 

“அவங்க சொல்லாம எப்படி டா போக முடியும்? உனக்கு இன்னும் புரியாது பாப்பு மா” வருத்தமாகக் கூறியவளை ஷாலுவின் ஆசை உடைத்திருந்தது.

 

“இப்போ என்ன? உனக்கு உன் கூட இங்கே வந்து குட்டிப் பசங்க விளையாடனும். அதானே?” மென்மையாகக் கேட்டான் உதய்.

 

“ஆமா ஆமா” என்ன தலையை வேகமாக மேலும் கீழுமாக ஆட்டி வைத்தாள் ஷாலு.

 

“அதோ காலிங் பெல் அடிக்குது. உனக்கு நான் பலூன் ஆர்டர் பண்ணி இருக்கேன். அது வந்திருக்கும் போய் எடுத்துட்டு வா” என அவளை அனுப்பி வைத்தான்.

 

பலூன் என்றதும் துள்ளலுடன் ஓடிய ஷாலு கதவைத் திறக்க, “பலூன் ஃபோர் மை பிரண்ட் ஷாலு” என பலூன் கொடுத்தான் ஒரு சிறுவன்.

 

“தேங்க்யூ! யார் நீங்க?” என விசாரித்தாள் சின்னவள்.

 

“சொல்லுறேன் நாம உள்ளே வரலாமா?” என்று அச்சிறுவன் கேட்க, “வாங்க வாங்க” என மகிழ்வுடன் அழைத்தாள் ஷாலு.

 

தனக்கு விளையாட ஒரு நண்பர் கிடைத்து விட்ட குஷி அவளுக்கு. அவள் நினைத்ததற்கு மாறாக அவனுக்குப் பின் ஒருவர் பின் ஒருவராக பதினைந்து குட்டி வாண்டுகள் உள்ளே நுழைய கண்களை அகல விரித்தாள் வர்ஷுவின் கியூட்டி.

 

“ஓய் முட்டக் கண்ணி! இப்போ உன் ஆசைப்படி நிறைய குட்டீஸ் வந்துட்டாங்க. இனி ஃபுல்லா ஆட்டம் போடு” என்று அவள் உயரத்திற்கு குனிந்து கொஞ்சிய உதய்யிடம் ஓடிவந்து அவன் கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்த மாரி பொழிந்தாள் அவள்.

 

“நாம இழுத்த இழுத்து உன் கன்னத்தை பெருசாக்கிற மாதிரி, நீ கிஸ் பண்ணி பண்ணி அங்கிளோட கன்னத்தைப் பெரிசாக்கிடாத. போய் உன் நிவ் ப்ரெண்ட்ஸ் கூட விளையாடுங்க” புன்னகையுடன் தலை கோதியவனை இமை சிமிட்டலுடன் பார்த்தாள் இதயா.

 

ஷாலுவுக்காக, அவளது சந்தோஷத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனின் தூய அன்பு அவளை மெய்சிலிர்க்க வைத்தது. ஷாலுவுக்காக எதையும் செய்யத் துணியும் அவளைப் பெறாத தகப்பன் இவன்! இப்படி ஒருவன் தன் வாழ்வில் கிடைக்க கோடான கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என நினைத்தாள் மங்கை.

 

“இருள் சூழ்ந்த இதய வானை ஒளிர வைக்க உன் ஒற்றைப் பார்வையே போதுமே என் பௌர்ணமி நிலவே!” தலை சாய்த்துக் கவி பாடினான் காதல் கிறுக்கன்.

 

உதய் “எவ்வளவு நேரம் தான் என்னை நிற்க வைத்து பேசிட்டு இருப்பீங்க? கால் பயங்கரமா வலிக்குதுங்க” முகம் சுருக்கினான்.

 

“டேய் அரைக் கிறுக்கா! நீ உட்காரவே கூடாது, இன்னைக்கு ஃபுல்லா நின்னுட்டே இருக்கணும்னு நான் ஆர்டர் போட்டேனா? இல்லல்ல. அப்புறம் எதுக்கு சும்மா நின்னுட்டு குற்றப்பத்திரிகை வாசிக்கிற. உட்காருவியா? இல்லனா கையைப் பிடித்து உட்கார வைக்கணுமா?” முறைப்புடன் கேட்டாள் காரிகை.

 

“அட இது கூட நல்ல ஐடியாவாத் தான் இருக்கு. அப்படியே செய்யுங்க இது குட்டி” என கண்ணடித்தான்.

 

“ஆசையைப் பாரு. என்னால முடியாது”

 

“ஆசைக்காட்டி மோசம் செய்யக் கூடாதுங்க. சொன்னா சொன்னத செஞ்சுதான் ஆகணும். நீங்க செய்யலன்னா என்ன நானே செய்கிறேன்” என கூறியவன் அவள் கைப்பிடித்து அமர்ந்து அவளையும் இழுக்க,

 

“டேய் ரோமியோ! இன்னும் ஒரு நாள் பொறுத்துக்க முடியலையா?” என்று வினவினாள் அதி.

 

“நான் பொறுக்கிறது எப்படின்னு எனக்குத்தான் தெரியும்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் உதய்.

 

“நான் பொறுக்க சொன்னேனாக்கும்!? சும்மா பருப்பு வேக வைக்கிறான்” என நொடித்துக் கொண்டவளுக்கு அவனது இந்த கட்டுப்பாடு கூட உள்ளுக்குள் இனித்தது.

 

“ரொம்ப சலிச்சுக்காம இப்படி வந்து உட்காருங்க மேடம்”

 

“கல்யாணம் கூட ஆகப்போகுது. இன்னும் மரியாதையைக் கைவிட மாட்றீங்களே டாக்டரே?” என்று புருவம் உயர்த்தியபடி உட்கார்ந்தாள்.

 

“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இப்படி கூப்பிடுறது மனசுக்கு இதமா இருக்கு”

 

“எனக்கும் பிடிச்சிருக்கு தான். பட் நீ என்ன வா ,போனு கூப்பிடுறதை கேட்க ஆசையா இருக்கு. டி போட்டு கூப்பிட்டா இன்னும் கிக்கா இருக்கும்”

 

“அப்படியா? ஆனால் எனக்கு இது பழகிருச்சு. சரி உங்க கையைக் காட்டுங்க” என்று சொன்னான்.

 

“அது எதுக்கு?” கேள்வியாய் அவன் முகம் பார்த்தாள் பெண்.

 

“உங்க கையை ஒன்னும் கடிச்சு சாப்பிட மாட்டேன். நீட்டுங்க” என்க அவள் கையை நீட்ட தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் இருந்து ஏதோ ஒன்றை எடுத்தான்.

 

அதைக் கண்டு, “வாவ் மெஹந்தி கோன்!” என்று மலர்ந்த முகம் சட்டெனக் கூம்பியது.

 

“இந்த வாட்டம் ஏனோ மலரே?” எனக் கேட்டான் அவன்.

 

“மெஹந்தி போடணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. என் லைஃப்ல மெஹந்தி போட்டதே இல்லை உதய். எனக்கு போடத் தெரியாது, இப்போ நீ கொண்டு வந்திருந்தாலும் போட முடியாது” இதழ் பிதுக்கினாள் அதியா.

 

“ஏன் முடியாதுங்கறீங்க? உதய் இருக்கும் போது என் பெண்டாவுக்கு என்ன கவலை? நான் போட்டு விடுறேன்” என்று கூறினான் ஆணவன்.

 

“வாட்? உனக்கு போடத் தெரியுமா” விழிகளை பெரிதாக விரித்தாள் அதி.

 

“எஸ்! ஐ கேன் டூ இட். உங்க மாயக்காரன் என்னவோ மாய மந்திரம் பண்ணி போட்டு விடுவான் பாருங்க” என்றவன் கையை நீட்ட அவனது கைக்கு மேல் தனது கையை வைத்தாள் அவள்.

 

பஞ்சன்ன வெண்மையான கரத்தை மென்மையாகப் பிடித்து மெஹந்தி போட ஆரம்பிக்க அவனை விழியகற்றாமல் ரசித்திருந்தாள் அதிய மங்கை.

 

“அப்படி பார்க்காதீங்க. அப்புறம் என் கை உங்க கையை விட்டு கன்னத்தை நோக்கி நகர்ந்து அதைக் கிள்ளி கொஞ்சித் தீர்க்கும். என் கண்ணு உங்க முகத்தை விட்டும் பார்வையை நகர்த்த விடாது. இந்த அழகான கண்களைப் பாருனு இதயம் இதயாவுக்காக இயந்திர வேகத்துல இயங்கும். அப்புறம் அப்படி ப்ரீஸ் ஆகி நிற்க, வானத்தில் நிலவு போயி சூரியன் வரது கூடத் தெரியாத அளவுக்கு போயிடும். இது தேவையா?” அவளைப் பார்த்து இதழ் கடித்துச் சிரித்தான் சிரிப்பழகன்.

 

“டேய் நீ பேசுறதை ரசிக்கத் தோணுது. உன் பேச்சு அழகா? குரல் அழகா? அதுல இருக்கிற விஷயம் அழகா? இல்ல நீ அழகானு மனசு விடை தெரியாமல் தவிக்குது” குறும்புப் புன்னகையுடன் மொழிந்தாள் மாது.

 

அவனது பேச்சில் உள்ளம் குளிர்ந்த உதய் மெஹந்தி போட்டு முடித்தான். “வாவ் இவ்வளவு அழகா இருக்கு. உனக்கு எப்படித் தெரியும்?”

 

“என்னோட எக்ஸ் கேர்ள் ப்ரெண்டுக்கு மெஹந்தினா ரொம்ப இஷ்டம். அதான் போட்டு பழகினேன்” என்று கூற,

 

“வாயிலே ஒன்னு போடுவேன் டா” என அவன் தோளில் அடித்தாள் கோபத்துடன்.

 

அடியைச் சுகமாக வாங்கிக் கொண்டு தன்னை ரசிப்பவனைப் பார்த்து, “டேய்…!! நான் அடிச்சுட்டு இருக்கேன். நீ என்னடான்னா சைட் அடிச்சுட்டு இருக்க?” அவனை மேலும் அடித்தாள்.

 

அவளது கையைப் பிடித்து “இது எனக்கு அடியாவே தெரியல. ஒரு அழகான மென்மையான பூ என்னை இதமாத் தீண்டி வருடிக் கொடுக்கிற மாதிரி இருக்கு. அண்ட் கோபத்தில் சிவக்கிற இந்த மூக்கு நுனியைப் பார்க்க க்யூட்டா இருக்கு” என்று அவன் ரசனை பொங்கக் கூற, துளியாய்த் துளிர் விட்ட வெட்கத்துடன் தன் தலையில் லேசாகத் தட்டினாள் தாரகை.

 

“இந்த கையிலும் போட்டு விடேன்” என்று அடுத்த கையை நீட்டியவளிடம், “இல்ல ஒரு கையில் போட்டால் நல்லா இருக்கு” என்று சொல்லியவன்,

 

“நான் போயிட்டு வரேன் அதிம்மா! நாளைக்கு சீக்கிரமே சந்திக்கலாம்” என்று ஒற்றைக்கண்ணை சிமிட்டு விட்டுச் சென்றான் அவளின் காதல் கண்ணாளன்.

 

காதலர்கள் கணவன் மனைவியாகும் தருணத்தைக் காணும் அவாவில் கிழக்கை சிவக்க வைத்து வானில் அவதரித்தது கதிரவன்.

 

கண்விழித்து கட்டிலில் எழுந்தமர்ந்த உதயவர்ஷன் கண்களை மூடிக்கொண்டு கைகளால் துலாவி அலைபேசியைத் தேடி ஆன் செய்து கண்களை திறக்க தொடு திரையில் அழகாகச் சிரித்தபடி இருந்தார் ராகவன்.

 

“வெர்ரி வெர்ரி ஹேப்பி மார்னிங் ராவ் அங்கிள்! இன்னைக்கு உங்களோட அசை நிறைவேறப் போகுது. உங்க விருப்பப்படி உங்க பொண்ணு அதியும் உங்க பையன் உதய்யும் ஒன்னு சேரப் போறாங்க. எங்களுக்கும் ஷாலு பாப்பாவுக்கும் நீங்க மனசார ஆசிர்வாதம் செய்யுங்க” என்று ராவ்விடம் பேசியவனின் இதயம் தன் இதயத் துடிப்பானவளை நினைக்கையில் படபடவென அடித்துக் கொண்டது.

 

குறித்த நேரத்திற்கு வேஷ்டி சட்டையில் முடியை அழகாக வாரி விட்டு கம்பீரமாகக் கோயிலை அடைந்தான் நம் நாயகன்.

 

சுமதியும் ஆசிரம நிர்வாகியும் வந்திருக்க தன்னவளின் தரிசனத்திற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான். ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து முதலில் ஷாலு இறங்க அவளுக்குப் பின்னால் இறங்கிய தன் தேவதையை இமைக்கவும் மறந்து பார்த்தான் அவன்.

 

சிவப்பும் மஞ்சளும் கலந்த தங்க நிற அலங்காரம் இழையோடிய சாரி அணிந்து, பின்னலிட்ட கூந்தல் கருநாகமாக முதுகில் புரள, கூந்தலில் கம கம மல்லிகைச் சரம் சூடி உதய் வாங்கிக் கொடுத்த எளிமையான ஆபரணங்களை அணிந்து காலில் கொலுசு ஜல் ஜல் என ஆரவாரிக்க முகத்தில் புதிதாக தோன்றிய மலர்ச்சியும் வெட்கச் சிரிப்பும் பேரழில் கூட்டி அவனது இதயத்தை தாளம் தப்பித் துடிக்க வைத்திற்று.

 

“வர்ஷு” என கத்தியவாறு ஓடி வந்த ஷாலுவை, “வாடா கியூட்டி மா” என்று அள்ளித் தூக்கிக் கொண்டான் அவன்.

 

தனதருகே வந்த அதியைப் பார்த்தவனுக்குள் புதுவித உணர்வு! இப்பொழுது புதிதாகப் பிறந்ததாக உணர்ந்தான் உதயன்!

 

“நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சு! தம்பி வந்து உட்காருங்கோ” என ஐயர் சொல்ல உதய் மாலையைக் கழுத்தில் போட்டு அமர்ந்தான்.

 

அதையும் மாலையை அணிந்து கொண்டு அவனருகே அமர்ந்தாள். தற்போதைய அவனது அருகாமை அவளைப் பல்வேறுபட்ட உணர்ச்சிக் குவியலுக்குள் ஆழ்த்தியது.

 

“வெண்முகம் இத்தனை விகசிக்கக் காரணம் வானத்து நிலவு உம் முகத்தில் குடி கொண்டதாலோ என் உயிர் நிலவே?” ரகசியம் கொஞ்சும் தன் கரகரத்த குரலில் கேட்டான் அவன்.

 

“டேய் பக்கத்துல எல்லோரும் நிற்கிறாங்க. அடக்கி வாசி” என பொய்யாக முறைப்பை அள்ளித் தெறித்தாலும் அவனது வார்த்தைகளில் உள்ளுக்குள் ரசித்துச் சிரித்தாள் அவள்.

 

“சீக்கிரமா கல்யாணத்தை நடத்துங்க ஐயா. லேட் பண்ணாதீங்க. வர்ஷுவை சீக்கிரம் எங்க கூட வச்சுக்கணும்” அவசரப்படுத்தினாள் ஷாலு.

 

“அடடே! மாப்பிள்ளை, பொண்ணை விட பாப்பாவுக்கு அவசரமாக இருக்கே” என்ற ஐயர் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார்.

 

“பொண்டாட்டி” என்று அவன் மெல்லமாக அழைக்க, “இன்னும் ஆகலை” மறுப்பாக சொன்னாள் அதியா.

 

தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி! தாம்பூலம் தேவையில்லை நீ தான் என் சரிபாதி” என்று மயக்கும் குரலில் பாடியவனை ஒரு நொடி கண்களில் காதலுடன் நோக்கினாள் மணப்பெண்.

 

உதய்யின் கையில் தாலி கொடுக்கப்பட என்னவென்று தெரியாத, இதுவரை என்றுமே உணர்ந்திடாத புது வகை உணர்வுடன் தன்னவளைப் பக்கவாட்டாக ஏறிட்டான்.

 

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்” ஐயரின் வார்த்தைகள் காதில் இன்னிசை கானமாய்ப் பாய, நாதஸ்வரங்களும் மேளங்களும் ஓங்கி ஒலிக்க அவளின் விழிகளைத் தன் காதல் சொட்டும் விழிகளால் ஊடுருவியவாறே அவளது வெண்சங்குக் கழுத்தில் தாலியை கட்டியவனின் இதழ்களில் கீற்றாய் தோன்றியது அழகிய புன்னகை.

 

இது அவனது வழக்கமான புன்னகை அல்ல. இன்பமும், இனிமையும், மனநிறைவும், திருப்தியும், காதலும், பரவசம் எனப் பலவகை உணர்வுகளின் செறிவுடன் உளமாறப் பூத்த புன்னகை.

 

அதே சிரிப்புடன் அவள் கன்னத்தைப் பிடித்து முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவளது பிறை நெற்றியில் அழுத்தமாகத் தன் முதல் முத்திரையைப் பதித்தான் காதல் கணவன்.

 

தன் இதயம் கவர்ந்தவனின் முதல் முத்தத்தில் மயிர்க்கால்கள் பூரித்து மேலெழ உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்திட, உள்ளத்தில் ஊற்றெடுத்த ஆனந்த ஊற்று உடலெங்கும் சிலீரிட்டுப் பாய்ந்து விழி வழியே தேங்கி நின்றது ஆனந்தக் கண்ணீராக!

 

தன் ஆசைகளை மறந்து தன்னை முழுமையாக வேலை, கடமை என்பவற்றில் மட்டும் ஈடுபடுத்தி தனக்கென அல்லாது ஷாலுவுக்காகவே வாழ்ந்தவள் அதியா. இன்று அவளது வாழ்வில் அவளைப் பற்றி மட்டுமே நினைக்க, அவளது ஆசைகளை ஆவலுடன் நிறைவேற்ற, அவளை எல்லை மீறி நேசிக்க, அவளுக்காகவே சுவாசிக்க, அவளையே உயிர் மூச்சாகக் கொள்ள ஒரு அன்பான ஜீவன்.

 

உதய்யும் கூட அவளைத் தான் பார்த்திருந்தான். இதுநாள் வரை தனது உலகில் தன்னந்தனியாகவே வாழ்ந்தவனது வாழ்வில் கரம் கோர்த்துப் பயணிக்க ஒரு அழகிய உறவு! அத்தோடு அவன் கைகளில் சுகமாகக் கனக்க ஒரு குட்டி உறவாய் ஷாலு! தனக்கு இந்த நொடி உயிர் பிரிந்தாலும் சந்தோஷமே என்று நினைத்தது அவன் மனம்.

 

குங்குமத்தை வகுட்டில் வைத்து இன்னும் சில பல சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்து சுமதியிடமும் ஆசிரம நிர்வாகியிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர் தம்பதியினர்.

 

“என் கால்ல விழ மாட்டீங்களா?” என பெரிய மனுஷி போல கேட்டாள் ஷாலு.

 

“உன் கால்ல விழாது. கன்னத்தில் தான் விழும் குட்டிம்மா” என்று கூறிய உதய் அதிக்கு கண்ணைக் காட்ட இருவரும் ஒரு சேரக் குனிந்து அவளது கன்னங்களில் முத்தமிட்டனர்.

 

“தேங்க்யூ வர்ஷ் அன்ங் அத்துக் குட்டி” என கிளுக்கிச் சிரித்தாள் ஷாலு பாப்பா.

 

“அதி! வாங்க அப்படியே ஒரு செல்பீ எடுக்கலாம்” என்று அழைத்தான் உதய்.

 

“இப்போவேவா…??” என்று கேட்க,

 

“ஆமாங்க உங்க ஃபோட்டோ எதுவுமே என் போன்ல இல்லை. இல்லைன்றதை விட நான் எடுக்க நினைக்கலைனு தான் சொல்லுவேன். ஏன்னா என் பெண்டா பேபியைக் கல்யாணம் பண்ணுன அந்த நிமிஷம் கல்யாணப் பொண்ணா இந்த ஃபோன்ல உங்க போட்டோவை சேமிச்சுக்கணும்னு இருந்தேன்.

 

உங்களைக் காணும் போதே நீங்க அதியா! என் மனசுல வரும் போது நீங்க இதயா! இப்போ இந்த உதய்யோட மனைவி உதயா!” என்று புன்னகைத்தான்.

 

“மை கியூட் மாயக்காரா!” என அவனை முறுவலுடன் பார்த்தாள் அதிய நிலா.

 

அவன் ஷாலுவைத் தூக்கிக் கொள்ள அதியோ உதய்யின் புஜத்தில் கைப்பதித்து அவன் தோளில் லேசாகச் சாய்ந்த காட்சி உதய்யின் அலைபேசியில் அழகாகப் படமாக்கப்பட்டது…!!

 

நிலவு தோன்றும்….!!🌛

 

✒️ ஷம்லா பஸ்லி❤️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!