18. வாடி ராசாத்தி

0
(0)

வாடி ராசாத்தி – 18
அம்முவையும் கிஷோரையும் காரில் இருந்து கவனித்தது கேபி மட்டுமில்லை, கூட இருந்த சற்குணமும் தான்.
“மச்சான், பாப்பா மேலே கோபம் வருதா….?” என்றான் மெதுவாக.
“நீ என்ன நினைக்கிற….?”
“கேள்வி கேட்டா பதில் சொல்லி பழகுடா…. எப்போ பாரு எதிர் கேள்வி கேட்கிறது….” கடுப்பானான் சற்குணம்.
சற்குணத்தின் அக்கறையை கிண்டல் செய்தது போதும் என்று நினைத்து அவனுக்கு பதில் சொன்னான் கேபி.
“என் பொண்டாட்டிக்கு வாய் இருக்கிற அளவு தைரியம் இல்லைன்னு கொஞ்சம் கோபம் தான்…. பார்த்துக்கலாம்….”
“டேய், அவ நிலைமையில் இருந்து யோசிக்கவே மாட்டியா….?”
“என்ன பெரிய நிலைமை….? நான் என்ன யாரோவா….? கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆயிட போகுது…. எங்க மாமா ரொம்ப பண்றார்…. இவளும் சேர்ந்துகிட்டு ஆடுறா…. உண்மையில இருக்கு டா அவளுக்கு…. எவனையோ கட்டிக்க ரெடி ஆய்ட்டா பாரேன்….”
“உன்னை பத்தி ஊருக்கே தெரியும்…. அவளுக்கு தெரியாதா….” உன்மேல இருக்க நம்பிக்கையில் இருப்பாளா இருக்கும்…. அவ ஒன்னும் அப்பாவி இல்லையே…. உனக்கு ஏத்த கேடி தான் அவ….”
“கல்யணம் முடியட்டும்….” கருவினான் கேபி.
“நீ பண்ற பிடிவாதத்துக்கு இதையே அவளும் நினைச்சா, செமையா இருக்கும் டா…. பார்போம் யார் யாரை படுத்த போறீங்கன்னு….”
“சரி இதை விடு, நான் சொன்னது என்ன ஆச்சு….?” வேகமாக கேட்டான் கேபி.
“பிளான் எல்லாம் பக்கா, முடிஞ்சதும் சொல்றேன்…. நம்பிக்கையான ஆளுங்க தான்…. சொதப்ப மாட்டாங்க, நம்பலாம்….” உறுதியாக சொன்னான் சற்குணம்.
“ம்ம்ம்…. அவனுங்களை சும்மா விடக்கூடாது டா, ஆதாரம் மட்டும் என்
கைக்கு வரட்டும்….”
“கண்டிப்பா, கேவலமான பசங்க டா, இவனும் இவன் பிரண்ட்சும்…. ஆனா உஷாரா இருக்கானுங்க…. குடும்பத்துக்கு மட்டுமில்லை, அவனுங்க குரூப் தவிர வேற யாருக்குமே இவனுங்க கேடி வேலை தெரியலை. நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் லிங்க் பிடிச்சேன்…. விஷயம் தெரிஞ்ச அப்போ செம ஷாக் எனக்கு….”
@@@@@@@@@@@@@
தங்களை கடக்கும் காரை கண்டவுடன், அம்முவின் முகம் மாறியதை வைத்தே போவது யார் என்று உணர்ந்துக் கொண்டான் கிஷோர். அவனுக்கு தான் நன்றாக தெரியுமே அவள் மனது. அவள் மனதை பற்றி எல்லாம் அவனுக்கு கவலையில்லை, அவள் வேண்டும் அவனுக்கு. அவ்வளவுதான். அவன் நினைத்தது அவனுக்கு கிடைத்தால் போதும்!
“அம்மு, இனிமே நீ தேவையில்லாத எதை பத்தியும், யாரை பத்தியும் கவலைப்படக் கூடாது! உன் எண்ணம் எல்லாம் என்னை பத்தியும், நம்ம கல்யாணத்தை பத்தியும் தான் இருக்கணும்…. புரியுதா….” குரலில் கொஞ்சம் கடின தன்மையுடன் அவன் பேச, அவனை கூர்ந்து பார்த்தாள் அம்மு.
அவளின் பார்வையில் சட்டென்று தழைந்து போனான் கிஷோர். மனதினில் கல்யாணம் வரை அடக்கி வாசிடா என்று சொல்லி கொண்டே,
“நீ சந்தோஷமா இருந்தா தாண்டா இனிமே நான் சந்தோஷமா இருப்பேன்…. என் மனசெல்லாம் உன்னை சுத்தி தான்….” என்றான்.
அவன் வழிவதை பொறுத்து கொள்ள முடியாதவளாக, “சரி நீங்க கிளம்புங்க….” என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வீட்டிற்குள் விரைந்தாள்.
“அம்மு, உன் மேல ரொம்ப ஆசை வைச்சு இருக்கேன், ஆனா நீ என்னை உதாசீனம் பண்ற, என் பொறுமை போற நாள் உனக்கு நல்லதா இருக்காது…. என்று மனதினில் பொருமி கொண்டே கிளம்பினான் அங்கிருந்து.
சரியாக அவன் கிளம்பவும், அவனுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
“டேய், நான் தான் என் கல்யாணம் வரை இதெல்லாம் எதுவும் வேண்டாம்னு சொல்லி இருந்தேன்ல, அப்புறம் எதுக்கு டா இப்போ இப்படி பண்ற….?”
“மச்சான், உன் கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கு டா, வாடா வழக்கம் போல் ரொம்ப சீக்ரெட் தான்…. எந்த பிரச்சனையும் இல்லை….”
“சரி சரி, எப்போ திருவிழா?” ஆர்வமாக கேட்டான் கிஷோர்.
“வழிக்கு வந்தியா, வா வா, தெரியும்டா எனக்கு…. நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு….” என்று ஒரு ஏரியா பேர் சொல்லி அங்கே வரச் சொல்லி வைத்தான் அவன் நண்பன்.
மறுநாள் காலை,
ஒரு வீட்டின் முன்பு அழைப்பு மணியை அழுத்தி கொண்டு இருந்தார்கள் கிஷோரும் அவன் நண்பனும்.
வேகமாக கதவை திறக்கபட, “டேய் உன்னை போன் தானே பண்ண சொன்னேன்….” என்ற குரல் தெரியாதவர்களை கண்டதும் அப்படியே தேய்ந்து,
“யாரு…. யாரு வேணும் உங்களுக்கு….?”
“நீதான் மா, என் ஆளு என்னை எதிர்பார்த்து ஆசையா இருப்பா, நான் போகலைனா ஏமாந்து போய்டுவா, நீங்க போயிட்டு வாங்க அண்ணானு உன் வீட்டு அட்ரெஸ் கொடுத்தான்…. ஆரம்பிப்போமா….?” என்றபடி அந்த பதினேழு வயது சின்ன பெண்ணை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்கள் கிஷோரும் அவன் நண்பனும்.
இந்த பெண் பன்னிரெண்டாம் வகுப்பு தான் படிக்கிறது, அவளின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். வீட்டில் யாரும் இல்லை என்பதால்,காதலனை வீட்டிற்கு வர சொல்லி இருந்தது. கிஷோரின் நண்பன் ஒருவன், கபே ஒன்று நடத்துகிறான், பள்ளி, கல்லூரி ஜோடி மாணவர்கள் பலரை அவன் காண நேரும். அதில் பல மாணவர்களிடம் நன்றாக பேசுவான், அதன் மூலம் அவர்கள் மட்டுமல்லாது, அவனிடம் பேசாத பலரின் விஷயமும் அவனுக்கு தெரியும். இந்த வயதில் இப்படி தனியாக சந்திப்பவர்கள் என்ன தெய்வீக காதலா என்ற நினைப்பில், கிஷோரும், அவன் நண்பர்களும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து வம்பு செய்து கிளம்புவார்கள். அந்த பெண்ணோ, அந்த பையனோ யாரிடமும் சொல்ல முடியாமல் மறைத்து விடுவார்கள். சொன்னாலும் நாங்கள் அவர்களை கண்டித்தோம், அதனால் எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்ற சொல்லி விடலாம். ஆனால் பாவம் அந்த பெண் இவர்கள் செயலில் கூனி குறுகி போய் விடுவாள். இவர்கள் உள்ளே சென்ற சற்று நேரத்திற்கு எல்லாம் மற்ற இருவர், அந்த பெண்ணின் காதலனை அழைத்து கொண்டு அங்கே வந்து சேர்ந்தனர்.
“அண்ணா, ப்ளீஸ் அண்ணா, வேணா அண்ணா, இனிமே இப்படி மீட் பண்ணவே மாட்டோம், விட்ருங்க அண்ணா….” கெஞ்சினான் பையன். அவர்கள் இருவரையும் அந்த பெண்ணின் வீட்டில் வைத்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்தார்கள்.
அந்த பெண் பயத்தில் உதறியபடி நின்றாள். உதவி செய்ய வருவேன் என்றவர்கள் வருவார்களா…? இல்லையா….? அதற்குள் நம் கதி என்னவாகுமோ என்று பயத்தில் உறைந்து இருந்தாள்.
“என்ன பாப்பா, பையன் இப்படி பண்றான்…. இன்னைக்கு அவன் வேலைக்கு ஆக மாட்டான்…. நீ எவ்ளோ ஆசையா இருந்து இருப்பே…. நான் வேணா கிஸ் பண்ணவா….?” ஒருவன் அவள் இதழை பிடித்தபடி கேட்க, மற்றவர்கள் சத்தமாக சிரித்தார்கள்.
அசிங்கப்பட்ட உணர்வில், கண்ணில் கடகட வென்று நீர் வழிந்தது அவளுக்கு.
சே! பாப்பா பாவம் டா, அழுது பாரு…. கட்டிபிடி வைத்தியம் பண்ணுடா…. சரியாய்டும்…. சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி லேசாக அணைத்தான் கிஷோர்.
“ஐயோ….” அந்த பையன் அலற, அனைவரும் சிரித்தனர்.
அந்த பெண் கிஷோரிடம் இருந்து திமிறி, மடங்கி கிழே அமர்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.
அப்போது, காலிங் பெல் விடாமல் அடிக்க, அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்து கொண்டனர். யாரும் அவர்கள் வாகனத்தை வாசலில் நிறுத்தவில்லை. அதனால் பின் வழியே போய்விடலாம் என்று நினைத்து கொண்டு, வந்து இருப்பது யார் என்று பார்க்க சொன்னார்கள்.
அந்த பெண் வேகமாக சென்று கீஹோல் வழியே பார்க்க, சிலிண்டர் கொண்டு வந்து இருந்தார்கள். எதுவும் பேசாமல் விடாமல் கதவை திறந்து விடு, நாங்கள் ரூமில் இருப்போம், மீறினால் உன் போட்டோ உங்க அப்பா அம்மா ஆபிஸ் நண்பர்கள் அனைவருக்கும் போகும் என்று மிரட்டினான் என்றான் கிஷோரின் நண்பன்.
சிலிண்டருக்கு கதவை திறப்பது போல் திறந்து விட்டு, காசு வாங்கி கொண்டு அவன் கிளம்பும் போது இந்த பெண்ணும் வீட்டை விட்டு வெகு வேகமாக வெளியே ஓடி விட்டாள். சிலிண்டர் கொண்டு சென்றதே சற்குணம் ஏற்பாடு செய்த ஆள் தான். அவர்களின் வேலை இவர்களுக்கு தெரிந்தது இப்போது அவர்கள் கேங்கிற்கு தெரியவேண்டாம் என்று நினைத்தான் சற்குணம். அந்த பெண் வெளியே ஓடியதும், இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இது போல இதுவரை ஆனது இல்லை. இவர்களுக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. மெதுவாக தெருவில் எட்டி பார்க்க, நடமாட்டம் கம்மியாக தான் இருந்தது. அது ஒரு புறநகர் பகுதி தான். வந்தது போலவே இருவர் இருவராக அந்த பையனையும் அழைத்து கொண்டு கிளம்பினார்கள். ஓடியவள் எங்க டா போனா….? ரொம்ப தூரம் போய் இருக்க முடியாது, இங்க தான் எங்கேயோ மறைஞ்சு இருக்கா என்று சொல்லிக்கொண்டே போனார்கள்.
அந்த பொண்ணு கிட்ட சொல்லி வை டா, எதாவது எங்கேயாவது உளறினா, சும்மா விடமாட்டோம்னு, உனக்கும் தான்….. என்று அவனை மிரட்டி விட்டும் சென்றார்கள்.
அவர்கள் சென்றதை உறுதிபடுத்தி கொண்டு, சற்குணம் ஏற்பாடு செய்தஆட்கள் அவர்கள் மறைவாக வைத்திருந்த கேமராவை எடுத்தார்கள். இவர்கள் செய்த ரகளையை லைவ்வாக பார்த்தார்கள். அந்த பெண் பட்ட பாட்டை பார்த்து, ஆதாரமாவவது ஒன்னாவது என்று தான் ஆளை போக சொன்னான் சற்குணம். அனைவரையும் அடித்து துவைத்து விடும் வேகம் பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு. ஓடிவந்த பெண் அவர்கள் சற்று தள்ளி நிறுத்தி இருந்த காரில் ஏறி மறைந்து கொண்டாள்.
அந்த பெண்ணை வீட்டில் விட்டு, புத்திமதி சொல்லி விட்டு வந்தான் சற்குணம் .உங்க அம்மாவை உனக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி வரவை என்று சொல்லி, அவளின் அம்மா வரும் வரை மறைவாக இருந்து பார்த்து விட்டே கிளம்பினான்.
அன்று மதியமே, வீடியோ இருந்த பெண் டிரைவ் கேபியின் கைக்கு வந்தது. கண்டவனுக்கு ரத்தம் கொதித்தது.
“வண்டி ஏத்தி கொல்லணும் டா இவனை!”
“இதுக்கே இப்படி சொல்ற…. ஆரம்பமே போதும்னு நாங்க ஆள் அனுப்பிட்டோம், மத்த இடத்தில எல்லாம் என்ன செஞ்சாங்களோ நாய் பசங்க….”
“உனக்கு சொன்னது யார்….?”
“அவன் பிரண்ட் கடைக்கு பக்கத்தில, ஒரு சாக்லேட் கடை இருக்கு, அங்க வேலை செய்றது எனக்கு தெரிஞ்ச பையன். அவன் கிட்ட நான் விசாரிக்க, அவன் அவனுக்கு தெரிஞ்ச இடத்தில விசாரிக்க, இப்படி ஒரு பகீர் செய்தி. யாரோ பாதிக்க பட்டவங்க கிட்ட இருந்து தான் நியூஸ் வந்து இருக்கு. எனக்கு சொன்ன பையனுக்கும் யாருனு தெரியலை. இப்போ டார்கெட் அந்த பையன்னு தெரிஞ்சு, பலோ பண்ணி பிளான் பண்ணோம். சொன்னப்போ அந்த பசங்க பாவம் மிரண்டு போச்சுங்க….”
முதல்ல வீட்டை என் பேரில் ரிஜிஸ்டர் பண்ற வேலை பார்க்கணும், அப்பறம் வைக்கிறேன் பாரு வேட்டு அவனுக்கு. கிஷோரின் மீது கொலைவெறியில் சொன்னான் கேபி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!