“ராஜலக்ஷ்மி என்கிற வதுவிற்கும், அசோக் என்கிற வரனிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் பெரியவர்களின் முன் நிச்சயிக்கப்படுகிறது”, என்று அய்யர் சொல்ல, மோதிரத்தை மாற்றி கொண்டனர் இருவரும்!
அப்போது அவளுக்கு இருபத்தி ஆறு வயது தான்!
அதுவும் திருமண நடைபெற இருக்கும் ஆனந்தத்தில் பூரித்து கொண்டு இருந்தாள்!
அசோக்கிற்கு இது காதல் திருமணம், ராஜிக்கு என்னவோ அவளின் தாய் வழியாக வந்த சம்மந்தம் தான்!
அசோக்கின் அண்ணி மாலதி ராஜி பணிபுரியும் அதே பள்ளியில் தான் பணிபுரிகிறாள்!
அப்போது அண்ணியை சில நேரம் இவன் இறக்கி விட போகும் சமயம் அவனுக்கு பிடித்த பெண் தான் ராஜி!
அசோக்கும் நல்லவன் தான், சென்னையில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறான்!
கை நிறைய சம்பாதிக்கிறான், ஒரு கேட்ட பழக்கமும் கிடையாது. அப்போது அவனுக்கு பெண் பார்த்து கொண்டிருந்தார்கள்!
அவனுக்கு ஏனோ ஓரிரு முறை ராஜியை பார்த்த மோதே பிடித்து விட்டது! அதற்கு பிறகு அவளை பற்றி அறிந்து கொண்டவன், அவனின் பெற்றோர்களிடமும், அண்ணன் அண்ணியிடமும் சொல்ல, அவர்கள் நேரடியாக சென்று ராஜியின் அன்னையிடம் பேசிவிட்டு வந்தார்கள்.
அன்று ராஜி வந்தவுடன், அவளது தாயும் நடந்ததை கூற, அவளும் சம்மதித்து விட்டாள் தான்!
அவர்கள் பெரிதாக எதுவும் கேட்கவும் இல்லை! பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று தான் சொல்லிருந்தார்கள்!
மாலதியின் வழியாக அவளின் குடும்பத்தை பற்றி சிறிதளவு ராஜிக்கும் தெரியும் தான்!
பெரிதாக பிரச்சனை இருப்பதால் அவளுக்கும் தெரியவில்லை!
அவளும் பெண் பார்க்க வர சொல்ல சம்மதித்தாள்!
பெண் பார்க்கும் சமயம் தான் முதன் முதலில் அவளிடம் முதல் முறையாக பேசினான் அசோக்.
“கல்யாணத்துக்கு அப்பறோம் சென்னை என் கூடவே வந்துரு ராஜி! உங்க அம்மாவையும் நம்ப கூடவே வச்சிக்கலாம்! அவங்களுக்கு அது தோது படலானா பக்கத்துலயே கூட தங்க வச்சிக்கலாம்”, இது தான் அவன் வாயில் இருந்து வந்த முதல் வார்த்தைகள்!
அவளையும் தாண்டி அவளின் அன்னையை பற்றியும் யோசிக்கிறான் என்பதே அவளுக்கு பெரிதாக தான் பட்டது!
“நான் கல்யாணத்துக்கு அப்பறோம் கூட வேலைக்கு போகணும்னு நினைக்கிறன்”, என்று அவள் சொல்ல, “அது உன் இஷ்டம், சென்னை இல்லாத ஸ்கூல்ஸ் ஆஹ்? எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல! உன் சம்பள பணத்தை நீ என்னைக்கும் எனக்கு தர வேண்டாம்! அது உன்னோடது, உன் அம்மாக்கு ஏதாச்சு செய்யணும்னா செய்”, என்பதோடு நிறுத்தி கொண்டான்!
உண்மையாகவே அவன் நல்லவன் என்று அவன் பேசுவதிலேயே அவளுக்கும் தெரிந்தது!
அவன் ஒன்றும் இதை எல்லாம் பேச்சுக்கு சொல்ல வில்லை!
அவளுக்கும் பிடித்து இருந்ததால் சம்மதம் என்று தான் சொல்லிவிட்டாள்.
அடுத்து வந்த முகூர்த்தத்தில் நிச்சயம் நடக்க, மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என்று முடிவு எடுத்து இருந்தனர்!
அதற்கு பின் வந்த நாட்கள் எல்லாம் இனிமையிலும் இனிமை தான்!
காதல் ஜோடிகளை போல் பேசிக் கொண்டார்களா என்று தெரியவில்லை! ஆனால் நல்ல மிக மிக நல்ல நண்பர்களாக பேசி கொண்டார்கள்!
அவர்கள் பேச்சியில் முதிர்ச்சி இருந்தது! இது ஒன்றும் பருவ வயதில் நடக்கும் காதல் அல்லவே!
நல்ல புரிதலும் இருவருக்குள்ளும் வந்து இருந்தது!
மூன்று மாதங்கள் மூன்றே நிமிடத்தில் போனது போல தான் அனைவருக்கும் தோன்றியது!
முகூர்த்த பட்டு எடுத்து, பத்திரிகைகளும் அனைவருக்கும் கொடுத்தாகி விட்டது!
இன்று பந்தக்கால் நட்டு விட்டார்கள்! இன்னும் மூன்று நாட்களில் திருமணம்!
“என்ன டி உனக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சாமே!”, என்று ராஜி வினோவை இடிக்க, “ஆமா டி அன்னைக்கு வந்து பார்த்துட்டு போனங்கள்ல அவங்க தான்”, என்று அவளும் சொல்ல, அடுத்து ராஜிக்கு நலங்கு வைத்து முடித்து விட்டார்கள்!
“நீ ரொம்ப ஜொலிக்குற டி”, என்று வினோதினி நெட்டி முறித்தாள்!
“இன்னும் மூணு நாள் தான் டி இருக்கு அதுக்கு அப்பறோம் உன் அவரு உன்ன கூட்டிட்டு சென்னை பறந்திருவார்… நீ அதுக்கு அப்புறோம் எங்க இருந்து என்ன நினைவிலே வச்சிக்க போற?”, என்று அவள் சலித்துக்கொள்ள, “லூசு இதெல்லாம் உனக்கே ஓவர்ரா இல்ல!”, என்று அவள் அடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.
யசோதாவிற்கு தான் கொஞ்சம் கவலையாக இருந்தது! ஒரே பெண், அவளை கட்டி கொடுத்து கடமையை முடிக்க போகிறார் என்கிற மனநிம்மதி ஒரு பக்கம், மறுபக்கம் அவருக்கு என்று இருந்த ஒரே சொந்தம் அவளும் விட்டு செல்வது தான் எத்தனை கொடுமை!
பெண் இனமே பிரிவின் சாபம் பெற்றது தானே!
அவருக்கும் இந்த நாள் வர போகிறது என்று தெரியும் தான்! ஆனால் இன்னும் மூன்று நாளில் அவள் வளர்த்த மகள், பிரிய போகிறாள் என்பது எந்த தாயுக்கும் இனிக்குமா என்ன?
“என்ன அம்மா சோகமா இருக்கீங்க?”, என்று கேட்டுக்கொண்டே அவளின் அன்னையின் அருகில் அமர்ந்தாள் ராஜி!
“நீ சீக்கிரம் வளந்துட்ட!”, என்று சொல்லிக்கொண்டே அவளின் தலையை வருட, “உன்னையும் என் கூட நான் சென்னைக்கு கூட்டிட்டு போயிருவேன் மா”, என்று அவள் சொல்லவும், “எனக்கு அதெல்லாம் ஆசை இல்ல டி! இந்த ஊரே எனக்கு போதும்! உன் அப்பா வாழ்ந்த ஊரு, அவரோட நினைவுகளோடே நான் வாழ்ந்திருவேன்”, என்று சொன்ன அன்னையிடம் இப்போது அவள் எதுவும் பேசவில்லை, கொஞ்ச நாள் போகட்டும் என்று தான் விட்டுட்டு விட்டாள்.
அன்றைய நாள் அப்படியே செல்ல, இரவு எட்டு மணியளவில் அவளுக்கு அசோக்கிடம் இருந்து அழைப்பு வந்தது!
“இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, அதுக்கு அப்புறம் இந்த ராஜலக்ஷ்மி என்றும் அஷோக்கு தான்”, என்று அவன் சொல்ல, “சரி தான்!”, என்று அவளும் சொல்லி சிரிக்க, “ராஜி, உங்கிட்ட இது வரைக்கும் நான் சொன்னது இல்ல, இன்னைக்கு சொல்றேன், ஐ லவ் யு”, என்று அவன் சொன்னதும், அவளுக்கோ அதிர்ச்சி தான்!
இத்தனை நாட்களில் அவன் காதலை சொன்னதே இல்லை! இன்று சொல்கிறான்!
“இது உனக்கு வேணா அரேஞ்ட் மேரேஜ் ஆனா எனக்கு கொஞ்சமே கொஞ்சம் லவ் மேரேஜ் தான், ஆனா அதுக்காக பழகலாம் வரல, உன்ன பார்த்ததும் பிடிச்சுது ஏன்னு தெரியல?”, என்று அவன் பேசிக்கொண்டே செல்ல, ராஜிக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை!
சிறிது நேரம் பேசிமுடித்து விட்டு அவன் அவளிடம் இருந்து பதிலை எதிர் பார்க்க, அவள் எந்த பதிலும் அளிக்க வில்லை!
“என்ன ராஜி ஏதுமே சொல்ல மாட்டுற?”, என்று அவன் கேட்க, அவளோ, “இல்ல எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”, என்றாள்.
“ஐ லவ் யுனு சொல்லு”, என்று அவன் சொல்ல, அவளிடம் தயக்கம், அசோக் நல்ல மனிதன் தான், அவனை நல்ல நண்பனாக பார்க்க துவங்கினாள், கணவனாக தாலி கட்டிய பின் பார்த்து கொள்ளலாம் என்பது அவளது தற்போதைய மனநிலை!
ஆனால் காதல் இப்போது வரை அவளிடம் பூக்க வில்லை, அது தான் உண்மையும் கூட! எப்படி இல்லாத காதலை உரைக்க முடியும்?
“இல்ல அது வந்து…. “, என்று அவள் தயங்க, “ஒன்னும் பிரச்சனை இல்ல… டேக் யூர் டைம்… ஆனா சீக்கிரம் காதல சொல்லிடுமா! நீ என்னைக்கு காதலை சொல்றியோ அன்னைக்கு தான் நம்ப வாழ்க்கைய துவங்க போறோம்… சரி நான் கொஞ்சம் வெளிய போறேன்”, என்று சொன்னவன், சிறிது நேரம் பேசிவிட்டு வைத்து விட்டான்!
அவளும் நல்ல மனநிலையில் தான் உறங்க சென்றாள்!
அடுத்த நாள் அவளின் வாழ்வையே புரட்டி போட போகும் நாள் என்று அவள் அறியவில்லை அல்லவா!
அடுத்த நாள் அவள் விழிக்க, அவளின் செவிகளை எட்டிய செய்தியை கேட்டு அப்படியே அமர்ந்து விட்டாள்!
அவள் கேட்டது என்னவோ, குடி போதையில் வண்டி ஒட்டி அசோக் மறித்தது தான்!
அவளிடம் நேற்று சொல்லிவிட்டு தான் சென்றான், நண்பர்களுடன் பார்ட்டி இருக்கிறது என்று!
ஆனால் அவனும் குடிக்கப்போகிறான் என்று சொல்லவில்லை!
குடித்து விட்டு வண்டியை ஓட்டி இப்படி அவனின் உயிரை மட்டும் அல்லாமல் அவளது வாழ்க்கையையும் சூனியம் ஆக்கி சென்று விட்டானே!
என்ன தான் அசோக் குடித்து விட்டு வண்டி ஓட்டி அவனுக்கு ஆக்சிடென்ட் நடந்து இருந்தாலும், நம் மக்கள் தான் நல்லவர்கள் ஆயிர்றே! அதுவும் நம்மை சுற்றி உள்ள மக்கள் அதிலும் நல்லவர்கள் அல்லவா!
“ராஜியின் ராசி சரி அல்ல, அதனால் தான் இப்படி அசோக்கிற்கு ஆகி விட்டது! அதிரிஷ்டமில்லாதவள்”, என்று ஊர் முழுக்க பரவ செய்து விட்டனர்!
அவன் குடித்து செத்ததற்கு அவள் என்ன செய்ய முடியும்!
ராசி என்பது என்ன? அல்ல அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்றால் என்ன?
இதை தீர்மானனிப்பது யார்?
இதுவே அவர்களின் பெண்ணிற்கு இப்படி ஒரு இழிநிலை ஏற்பட்டால் இதே வாக்கியத்தை கூறும் தைரியம் ஒருவருக்காவது இருக்கிறதா!
அடுத்த பெண்ணிற்கு என்றால் மட்டும் வரிந்து கொண்டு வந்து விடுவார்கள்!
இரண்டு நாட்களில் மணமேடை எற காத்து இருந்தவளுக்கு கிடைத்தது என்னவோ அமங்கலம் ஆனவள் என்கிற பட்டம் தான்!
அதற்கு பின், அவளுக்கு வந்த சம்மந்தங்கள் எல்லாம் அவளுக்கு இப்படி திருமணம் நின்று விட்டது என்று தெரிந்து தட்டி கழித்து விட்டார்கள்!
இல்லை இரண்டாம் தாரமாக கேட்டால் கூட பரவா இல்லை! நாற்பத்தி வயது உடையவர்கள் எல்லாம் வந்தால் அவளும் என்னதான் செய்வாள்!
அவளின் மனமே மறுத்து விட்டது! செய்யாத தப்புக்கு தண்டனையை அனுபவிப்பதும் தான் எத்தனை கொடுமை!
இவ்வாறு அவளின் நினைவுகள் சுழன்று கொண்டு இருக்க, வினோதினி அழைப்பில் நிதர்சத்துக்கு வந்திருந்தாள்!
நேரத்தை பார்த்தாள், ஆறு மணி ஆகியிருந்தது!
“சரி டி நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்று சொன்னவள், அவளின் வீட்டிற்கு சென்று விட, இங்கோ அன்பரசன் அவனின் புதிய கடையை பார்த்து கொண்டிருந்தான்!
அவனின் வாழ்க்கையிலும் தான் எத்தனை போராட்டம்!
அதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று கூட அவனுக்கு தெரியவில்லை!
அவனின் நினைவுகளோ, மூன்று வருடத்திற்கு முன்னால் சென்றது!
Intresting sis
Nice. Anbu life la enna achu