August 2024

நாணலே நாணமேனடி – 15

அடுத்து வந்த ஓரிரு நாட்களும் வெகு சாதாரணமாகத் தான் கழிந்து போனது, புதுமணத் தம்பதியினருக்கு. முதல் நாளன்று இரவு நந்தன் சொன்னது போல், மறுநாளே சுவர் வார்ட்ரோபில் தன் உடைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவள் கூடவே, சற்று ஒழுங்கீனமாகக் காணப்பட்ட அவனது உடைகளையும் அழகாக மடித்து வைத்து, அவனிடமிருந்து மெச்சும் சிறு தலை அசைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தாள். வீடியோ காலில் பார்த்து வந்த மம்மியை இப்போதெல்லாம் இருபத்திநான்கு மணி நேரமும் தன் கண் முன்னே காண்பதில் குஷியோ […]

நாணலே நாணமேனடி – 15 Read More »

நாணலே நாணமேனடி – 14

திருமணம் நல்லபடியாக முடிந்து, சம்யுக்தா நந்தனின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். வர முன்பு, கண்களில் கண்ணீர் சொரிய நின்றிருந்த தாயைக் கட்டியணைத்து ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு வித்யாவிடம் கண்ணசைவில் விடை பெற்றுக் கொள்ள மறக்கவில்லை. வந்தவளை புகுந்த வீட்டு சாம்பிரதாயங்கள், சடங்கு முறைகள் என படுத்தி எடுத்தனர், வீட்டில் கூடியிருந்த யதுநந்தனின் நெருங்கிய சொந்தங்கள். யதுநந்தன் தன்னை சாதாரணமாகக் காட்டிக் கொள்ள பெரிதும் பாடுபட்டான். ஒவ்வொரு நிகழ்விலும் பல்லவியின் நினைவுகள் மேலெழுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துப் போனவன்

நாணலே நாணமேனடி – 14 Read More »

நாணலே நாணமேனடி – 13

சம்யுக்தா தயங்கியது போல் எதுவும் நடக்கவில்லை.   காருண்யராஜ் ‘டிஸ்கவுண்ட்’ மூலமாக, வாங்கிய பட்டுச்சேலை மற்றும் பிறவற்றின் பெறுமானத்தைக் கொஞ்சமாகக் குறைத்து நந்தன் முன்னிலையில் அவளது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் தான் நடந்து கொண்டார். போகிற போக்கில், ‘நாளைக்கு ஸ்டோர் வந்ததும் என்னை வந்து பாரும்மா, சம்யுக்தா!’ என சாடைமாடையாகப் பேசி கண்காட்டி விட்டுச் செல்ல, ‘நான் உங்களை வந்து பார்க்கலேன்னாலும் வழமையான அர்ச்சனை என்னைத் தேடி வராதா சாரே?’ என்ற நினைப்பில் சிரிப்பு பீரிட்டது சம்யுக்தாவுக்கு.

நாணலே நாணமேனடி – 13 Read More »

நாணலே நாணாமேனடி – 12

தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள். தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள் மறுநாள் முழுவதும் வழமை போல் வீட்டுவேலை, துணிக்கடை எனக் கடந்து போனது அவளுக்கு. ‘உங்களை மீட் பண்ணனும்’ என அவள் காலையில் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியைப்

நாணலே நாணாமேனடி – 12 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️

கதவைத் திறந்தவளை நோக்கிய ஆதியின் முகத்தில் 1000 வோல்ட் பல்ப் எரிய ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான். “ஹேய்… ப்ரியா… நீ நல்லா இருக்கல்ல? எவ்வளவு நாளாச்சுடீ உன்ன பாத்து?” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து “லவ் யூ டி சதிகாரி. என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என அவளைக் கொஞ்ச யூவியின் வயிற்றிலிருந்துதான் புகை கிளம்பியது. “ஒருவேளை அவன் பல்லவியிடம் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறியது இவளைத் தானோ?” என்கிற சந்தேகமும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️ Read More »

சித்திரம் – 03

நால்வரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்… இனி என்ன செய்வது‌…. மொத்த அலுவலகமும் காலி…. கோடீஸ்வர பிள்ளைகள் என்றால் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை…. இவர்களோ குடும்பத்தை காப்பாற்ற ஏதோ கடனை கிடனை வாங்கி அலுவலகத்தை தயார் செய்திருந்தார்கள்… இன்னும் பாதி கடன் முடியக் கூட இல்லை…‌ அதற்குள் அடித்து உடைத்து விட்டு சென்று விட்டான்….. சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகி விட்டது…. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி யோசனையாகவே

சித்திரம் – 03 Read More »

நாணலே நாணமேனடி – 11

அன்று சம்யுக்தா துணிக்கடையை விட்டு வெளியேறிய போது, துணையாகப் போகிறவனைப் சந்தித்துப் பேசியதோடு சரி! அவனின் ‘சம்யு’ என்ற சுருக்க அழைப்பு தந்த பெயர் தெரியா இதத்துடன், அகம் தித்திக்க அவன் இறக்கிச் சென்ற இடத்திலே உறைந்து நின்றிருந்தவளை, அரவம் கேட்டு வெளியே வந்த சத்யா தட்டி எழுப்பி நிஜத்துக்கு அழைத்து வந்ததெல்லாம் வேறு கதை. அதற்கு மறுநாள் அவன் அழைப்பு விடுத்த போது, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனிடமிருந்து வந்திருந்த அழைப்பை வெகு நேரம்

நாணலே நாணமேனடி – 11 Read More »

நாணலே நாணமேனடி – 10

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.   எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது. சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு

நாணலே நாணமேனடி – 10 Read More »

நாணலே நாணமேனடி – 09

நாட்கள் வழமை போல் கடந்து சென்றன, சம்யுக்தாவுக்கு. ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை. ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம்

நாணலே நாணமேனடி – 09 Read More »

error: Content is protected !!