Home Novelsகரம் விரித்தாய் என் வரமே22. கரம் விரித்தாய் என் வரமே

22. கரம் விரித்தாய் என் வரமே

by Ambika ram
5
(2)

கரம் விரித்தாய் என் வரமே – 22

ராஜேஷை விட்டு நொடியும் விலக மாட்டேன் என்றிருந்தவளை அவனிடம் இருந்து பிரிக்கவே மனமில்லை அவனுக்கு. ஆனால் அவனின் கட்டுப்பாடு தகர்ந்து விடும் என்ற நிலையில், “பூனைக்குட்டி ப்ளீஸ் டா…. என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ டா…. என்னை சோதிக்காதே செல்லம்….” சிரித்து கொண்டே அவனின் அவஸ்தையை சொன்னான் ராஜேஷ்.

அவன் அப்படி சொன்னதும் அவனிடம் இருந்து துள்ளி விலகினாள் அஸ்வினி. வெட்கத்தில் முகம் சிவந்து விட,

“அழகா இருக்கே பூனைக்குட்டி…. எனக்கே எனக்கு இந்த அழகு பொண்ணு….” என்று கொஞ்சினான் ராஜேஷ்.

“ம்ம்ம்…. எனக்கே எனக்கு இந்த ஆளை மயக்கும் அழகன்….” அவளும் கொஞ்சினாள்.

அவரவருக்கு அவரவர் இணை தானே எல்லமுமாக இருக்க வேண்டும்! அவர்கள் இருவருக்கும் அப்படி தான் இருந்தது. அஸ்வினியின் பேச்சில் கிளர்ந்தவன் அவளிடம் கொஞ்சி, மிஞ்சி காதல் செய்து ஒரு வழியாக வீட்டிற்கு கிளம்பினான்.

கிளம்பும் முன் மறக்காமல்,

இரண்டு நாளில் கிளம்புறதால வேலை இருக்கும். மீட் பண்ண முடியாது. முடிஞ்சவரை அங்கே இருந்து பேச ட்ரை பண்றேன்…. ஆனா ரொம்ப எதிர்பார்க்காதே…. ஸ்கூல் பிரண்ட்ஸ் அவங்க, பொண்ணு கிட்டே பேசினாவே கிண்டல் பண்ணுவாங்க…. அதனால் நாட் ஷுயர்! போயிட்டு வந்து நேரில் பார்க்கலாம், மிஸ் யூ டா….” என்றான்.

ஐந்து நாள் பயணமாக நண்பர்களுடன் பங்களூர் அருகே இருக்கும் சில பகுதிகளுக்கு சுற்றுலா செல்கிறான் ராஜேஷ்.

“ஓக்கே, நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா….” என்று வழியனுப்பி வைத்தாள் அஸ்வினியும்.

*****************

இரண்டாம் நாள் காலை நண்பர்களுடன் கிளம்பியவன் சென்னையை தாண்டியவுடன் அவளை அழைத்தான். அவள் போன் எடுக்கபடவே இல்லை!
ஒரு வேளை குளிக்கிறாளோ….? திரும்ப வந்து அழைப்பாள் என்று விட்டான். அரை மணி ஆகியும் அவள் அழைக்கவில்லை என்றதும் பயம் வந்து விட்டது ராஜேஷிற்கு.

உடனே ஷிவாவிற்கு அழைத்தான். மதனின் மாமாவிற்கு இன்னும் இரண்டு நாள் கழித்து ஹார்ட் சர்ஜரி, அவர்களுடன் தங்கி இருக்கிறான் மதன். அதனால் அவனை தொந்திரவு செய்ய முடியாது.

“ஷிவா, அஸ்வினி போன் எடுக்கலை…. தெய்வா கிட்டே எதுவும் பேசினாளா மார்னிங்….? கேட்டு சொல்ல முடியுமா?” அவள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவளிடம் நேரிடையாக கேட்டால் டென்ஷன் ஆகி விட போகிறாள் என்று நினைத்தான் ராஜேஷ்.

“ஓ…. அது….” என்று பதில் சொல்ல ஷிவா தயங்குவதை போல் இருக்கவும்,

“ப்ளீஸ் எதுனாலும் சொல்லு ஷிவா…. அவள் ஓக்கே தானே….?”

“ஓக்கே தான் ராஜேஷ், கொஞ்சம் பீவர், வேற ஒன்னுமில்லை! ட்ரிப்ஸ் போகுது, நாங்க பார்த்துகிறோம்…. நீ பத்திரமா போயிட்டு வா….” என்றான் ஷிவா.

“ஓ! எப்போ இருந்து….?”

“மூணு மணி இருக்கும், அஸ்வினி எனக்கு கால் பண்ணா…. நான் போய் தான் ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனேன். ரொம்ப ஹை பீவர், அதனால ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க…. வேற ஒன்னுமில்லை. இது முடிஞ்ச உடனே எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக போறேன்…. நீ ஒன்னும் கவலைப்படாதே….”
என்றான்.

“தெய்வா பிரெக்னென்ட்டா இருக்காளே…. அங்கே எப்படி….?”

“இது வைரல் பீவர் இல்லைனு நினைக்கிறார் டாக்டர், அஸ்வினி ரெண்டு நாளா சரியா சாப்பிடாம, தூங்காம இருந்து இருக்கா. சோ தெய்வா தள்ளி இருந்துகிட்டா போதும்னு சொல்லிட்டார்.”

“ஓக்கே ஷிவா….” என்றவன் அழைப்பை துண்டித்து வைத்தான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், தெய்வாவின் வீட்டில் இருந்தான் ராஜேஷ். அவனை கண்ட மூவருக்கும் பயங்கர அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம்.

“ஹேய் என்னடா….? ட்ரிப் என்ன ஆச்சு? போகலையா….?” ஷிவா கேட்க,

“போக மனசில்லை…. அதான் வந்துட்டேன்….” கண்களால் அஸ்வினியை தேடி பார்த்தபடி சொன்னான் ராஜேஷ். அந்த அறையில் இருந்த கட்டிலில் படுத்து இருந்தாள் அஸ்வினி. சற்று தள்ளி இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள் தெய்வா.

“ஆனா நீ கிளம்பிட்டே தானே….?” இழுத்தான் ஷிவா.

“ம்ம்…. ஸ்ரீபெரும்புதூர் கிட்டே இருந்தோம்…. அவங்களை அனுப்பிட்டு நான் பஸ் பிடிச்சு வந்துட்டேன்.” பேச்சு பேச்சாக இருக்க பார்வை அஸ்வினியை விட்டு அகலவில்லை. ஓரே இரவில் ஓய்ந்து போய் இருந்தவளை யோசனையாக பார்த்தான் ராஜேஷ்.

“இவ ஜுரத்துக்காக நீ ட்ரிப் கேன்சல் செஞ்சது எல்லாம் கொஞ்சம் ஓவர் டா….” தெய்வா கலகலத்து சிரிக்க,

ஒருநிமிடம் கணவன் மனைவியை பார்த்தவன்,

“ஷிவாவுக்கு உடம்பு சரியில்லைனா, எப்படியோ போன்னு நீ என்ஜாய் பண்ணுவியா….?” என்றான் வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி.

“ஓஹோ…..!” விஷயம் ஏற்கனவே தெரியும் என்பதால் ஷிவா சின்ன எக்ஸைட்மெண்ட்டோடு நிறுத்தி கொண்டான்.

“அப்பாடா ஒரு வழியா சொல்லிட்டான்….!” என்று தெய்வா கத்தினாள்.

ராஜேஷ் சொன்னதை கேட்டு அந்த களைப்பிலும் வெட்கப்பட்டாள் அஸ்வினி. அவளின் அகமும் முகமும் மலர்ந்து போனது. இதை விட வேறென்ன வேண்டும் என்ற நிறைவு வந்தது அவள் உள்ளத்தில்.

ஷிவா உடனே மதனை அழைத்து ஸ்பீக்கரில் போட்டு சொல்ல,

“இந்த கதை இப்படி தான் முடியும்னு எனக்கு முன்னாடியே தெரியும்! ரொம்ப சந்தோஷும் நண்பா!” என்று வாழ்த்தி வைத்தான் மதன்.

ட்ரிப்ஸ் போட்ட பின் ஜுரம் விட்டு இருக்க, களைப்பு மட்டும் இருந்தது அவளுக்கு. இருவரையும் அந்த அறையில் ஓய்வு எடுக்க சொல்லி, தனிமை கொடுத்து சென்றனர் தெய்வா தம்பதியினர்.

“தூக்கம் வந்தா தூங்கு….” என்றவனை அருகில் அழைத்தாள் அஸ்வினி. அவனை கட்டி கொள்வது போல படுத்தவாறே அவளுடன் சேர்த்து அவனை அணைத்தாள். அவள் விடுவதாக இல்லையென்றதும் அப்படியே அவளை அணைத்தவாறு அவள் அருகில் படுத்தான் ராஜேஷ்.

“எதுக்குடி சாப்பிடாம தூங்காம உடம்பை கெடுத்து வைச்சே….? அப்படி என்ன பிரச்சனை….?” அன்பும் ஆத்திரமும் சரி விகிதமாக ஒலித்தது அவன் குரலில்.

“ஒன்னுமில்லை டா…. இனிமே இப்படி செய்ய மாட்டேன்…. ஸாரி….”

“ஒழுங்கா சொல்லு…. என்றவன் பதறி எழுந்து ஊரில் எதுவும் ப்ரஷர் பண்றாங்களா….? பயந்துட்டியா….? நான் பேசுறேன் டா…. நாம வேணா ஒரு தடவை ஊருக்கு போயிட்டு வருவோமா….? வேக வேகமாக கேட்டான்.

“இல்லை டா… அதில்லை….”

“ஒழுங்கா சொல்லுடி….” அவன் பொறுமை பறக்க,

“இல்லை…. ஆன்ட்டி, நம்ப விஷயம் என்னாகுமோனு….”

நான் தான் சொன்னேனே…. இப்போ எதுக்கு அதை பத்தி….? எங்க அம்மா பேசினது ஒரு வலினா…. இதை எங்க அம்மா கிட்டே கொண்டு போன அவளை…. கைகள் இறுகின ராஜேஷிற்கு.

“ப்ளீஸ் டா ரிலாக்ஸ் ஆகு…. ஸாரி டா…. இதை நான் ஆரம்பிச்சு இருக்கவே கூடாது….” கலங்கினாள் அஸ்வினி அவன் நிலை கண்டு.

“இல்லைடி…. எங்க அம்மா டெய்லி என்னை பார்க்கிற பார்வை எப்படி இருக்கு தெரியுமா? அவமானம், அசிங்கம், இப்படி அவகிட்ட ஏமாந்தியேன்னு என்னையே நான் கேவலமா நினைக்கிறேன்…. யாரோ அவ, நான் அவளுக்குனு கொடுத்த முக்கியத்துவம் என் வாழ்க்கையை எப்படி மாத்திடுச்சு பார்…. அவ போயிட்ட்டான்னு சந்தோஷ பட முடியாம, அவளை ஏன் என் வாழ்க்கையில் வர விட்டேங்கிற எண்ணம் என்னை கொல்லுதுடி….இப்படி பண்ணியே….சே…. இப்படி பண்ணிட்டியேன்னு அசிங்கமா இருக்குடி….” என்று நெஞ்சில் இருந்து கலங்கி போய் பேசியவனை இழுத்து அணைத்து கொண்டாள் அஸ்வினி.

அவளின் இறுகிய அணைப்பில், தன்னை சமாளித்து கொண்டவன்,

“விடு கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்…. இப்போ ஓக்கே….” என்று அவளிடம் இருந்து விலகி படுத்தான். அவனையே பார்த்தவளிடம்,

“ஒழுங்கா தூங்கு…. நானும் தூங்குறேன்…. டையர்ட்டா இருக்கு….” என்றபடி அவளை அணைத்து கொண்டு உறங்க முற்பட்டான் ராஜேஷ். அவளும் களைப்பாக தானே இருந்தாள், அதனால் இருவரும் நன்றாக உறங்கி விட்டனர்.

மூன்று மணி நேரம் கழித்து உறக்கம் கலைந்து எழுந்த ராஜேஷ் அஸ்வினியை தொட்டு சோதித்து பார்க்க, நார்மலாக இருந்தாள் அவள். மெதுவாக அவளை எழுப்பியவன்,

“எழுந்துக்கோ டா, கொஞ்சமா ஏதாவது சாப்பிடு…. நான் போய் தெய்வா கிட்டே வாங்கிட்டு வரேன்” என்றபடி எழுந்து போனான்.

***************

அன்று மாலை,

நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

“நான் திரும்ப வீட்டுக்கு போக முடியாது. போனா எங்கம்மா, ஏன் வந்தே? எதுக்கு வந்தேன்னு என்னை துளைச்சு எடுத்துடுவாங்க. ஒரு நாலு நாள் நான் இங்கேயே தங்கிக்கலாமா ஷிவா?” என்றான் ராஜேஷ்.

“டேய், இப்படி எல்லாம் கேட்பியா? உதைக்க போறேன் பார்!” கோபப்பட்டான் ஷிவா.

“நான் இப்போ நல்லா தான் இருக்கேன்…. என் வீட்டில் போய் இருப்போமே ராஜேஷ்?” என்றாள் அஸ்வினி பட்டென்று.

“என்ன விளையாடுறியா….? இங்க சமையலுக்கு ஆள் இருக்கு….உனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு வந்திரும்…. இப்போ உன் உடம்பு இருக்க லட்சணத்தில் நீ சமைக்க எல்லாம் முடியாது, வெளில வாங்கி சாப்பிடவும் முடியாது…. பேசாம இங்கேயே இருங்க…. நாலு பேரும் இல்லை இல்லை அஞ்சு பேரும் ஜாலியா இருக்கலாம்!” என்றாள்.

“பாப்பா வெளில வந்தவுடனே இன்னும் ஜாலியா இருக்கலாம். இப்போ எனக்கு ராஜேஷ் கூட அங்க இருக்கணும்னு ஆசையா இருக்குடி. அவன் சீக்கிரம் யூஎஸ் போக போறான்…. ப்ளீஸ்…. நாங்க சிம்பிள் அண்ட் ஹெல்தியா ஏதாவது செஞ்சு சாப்பிட்டுக்கிறோம்…. சொல்லு ராஜேஷ்….” பிடிவாதமாக பேசினாள் அஸ்வினி.

“ராஜேஷ் சங்கடமாக தெய்வாவை பார்க்க, அவள் போய் தொலை! ஆனா உடம்பை பார்த்துக்கோ…. பார்த்துக்கோ ராஜேஷ்….” என்றாள்.

டின்னர் முடித்து கொண்டு, மறுநாள் காலைக்கு தேவையான மாவு, சட்னி எல்லாம் பேக் செய்து எடுத்து கொண்டு அஸ்வினியின் வீட்டிற்கு வந்தனர். வந்து செட்டில் ஆன பின்,

“எதுக்குடி உனக்கு இவ்ளோ பிடிவாதம்? பேசாம அங்கேயே இருந்து இருக்கலாம்….” என்றான்.

“எனக்கு உன்கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும் போல் இருந்துச்சு….உன்னால அங்கே ப்ரீயா இருக்க முடியலைனு தெரிஞ்சுது…. எல்லாம் சேர்த்து தான்!”

உண்மை தான்! ராஜேஷிற்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது. அவளின் புரிதலில் வழக்கம் போல் நெகிழ்ந்தவன்,

“தனியானா எப்பிடி டைம் ஸ்பெண்ட் பண்ண போறீங்க மேடம் என்கூட? ஏதாவது ஸ்பெஷல் பிளான் வைச்சு இருக்கீங்களா?” என்று விளையாட்டாக அவளை சீண்டினான் ராஜேஷ்.

“ம்ம்….” என்றவள் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தபடி உறங்க தயாராகி மெத்தையில் படுத்தாள்.

மெத்தையின் அருகே நின்றபடி போன் பார்த்தபடி பேசிக் கொண்டு இருந்தவன் அவளின் சத்தமே இல்லையே என்று திரும்பி பார்த்தான்.

“ஓ! படுத்துட்டியா…. சரி தூங்கு, நான் அந்த ரூமில் தூங்குறேன்…. ஏதாவதுனா கால் பண்ணு….”

“வேண்டாம் அவ இருந்த ரூமில் நீ தூங்க வேண்டாம்…. இங்கேயே என் பக்கத்தில் படு. காலையில் தான் தூங்கினோமே….”

“அது…”

ஏதாவது தவறு நடந்து விடுமோ என்ற அவனின் தயக்கம் புரிய, ” எடுத்துக்க போறது நீன்னா…. நான் என்கிட்ட இருக்க எதையும் தயங்காமல் கொடுப்பேன் ராஜேஷ்….”

அவளின் பிசிறு இல்லாத குரலில், அறிவிப்பில் அவன் மனதும் மூளையும் காலியான உணர்வு! உடலுக்கும் உள்ளதுக்குமான போராட்டம் ஆரம்பித்தது ராஜேஷிற்கு!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!