Home Novelsஇதய வானில் உதய நிலவே...!!23. இதய வானில் உதய நிலவே!

23. இதய வானில் உதய நிலவே!

by Shamla Fasly
5
(2)

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️

 

நிலவு 23

 

“அதிம்மா! ஏன் பேசாம இருக்கீங்க?” இத்தோடு பத்தாவது முறையாகக் கேட்டான் உதய்.

 

அவளோ பதில் சொல்லவும் மாட்டாது அலைபேசியில் மூழ்கிக் கிடந்தாள். அதைப் பிடுங்கி எடுத்தவன் தன்னை முறைப்புடன் பார்த்தவளைக் கண்டு, “ப்ளீஸ் நிலா என்ன கோபம்னு சொல்லுங்க. நேத்து கூட நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ எதுக்கு திடீர்னு மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கீங்கன்னு புரியல” என்று கூறினான் கெஞ்சுதலுடன்.

 

“நீ பண்ணுற வேலைக்கு மூஞ்ச தூக்கி வைக்காம உன்னை மடியில தூக்கி வச்சு கொஞ்சனுமாக்கும். இன்னுமே நீ எங்கே போறன்னு சொல்லல. கேட்டா இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லுற. நீ எதையோ மறைக்கிறேன்னு நல்லாத் தெரியுது. அது என்னன்னு தெரியாமல் என்னால நிம்மதியா இருக்க முடியலடா” தலையில் கை வைத்துக் கொண்டாள் அதி.

 

அவளை நெருங்கி அமர்ந்தவன், “எனக்கு உங்க நிலைமை புரியுது. பட் இன்னும் ஒன்லி டூ டேஸ் வெயிட் பண்ணுங்க. எனக்காக அம்முக் குட்டி” என்று கூற,

 

“என்னவோ போ” என முறுக்கிக் கொண்டாள் மங்கை. அவளைச் சமாதானம் செய்யும் நோக்கில் இறங்கியவன் அவளிடம் வஞ்சகம் இன்றி பல நூறு அடிகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

 

இரண்டு நாட்கள் காத்திருப்பது பெரும் சவாலாக இருந்தது அதியாவுக்கு. எங்கே செல்கிறான் என்பதற்கு பதில் கூறுகிறான் இல்லை. இரண்டு நாட்கள் பொறுமை காக்க சொல்கிறான்.

 

‘என்னவாக இருக்கும்?’ இல்லாத கற்பனைகள் மனதில் முளை விடத் துவங்க அவற்றை வேரோடு பிடுங்கி எறிந்தவள் “அவன் என் உதய். எதுவும் தப்பு பண்ண மாட்டான்” என மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

 

அவன் கூறிய நாளும் வந்தது. காலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் நம் நாயகன். குளியலறையில் இருந்து வந்த அதி கட்டிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியைக் கண்டு புருவம் சுருக்கினாள்.

 

அதன் உள்ளிருந்த ஆகாய நீல நிற சாரி கண்களைக் கவர்ந்தது. “வாவ்…!! எனக்காகவா வச்சிருக்கான்? என்ன பண்ணுறன்னே புரிஞ்சுக்க முடியல. என்னைப் படுத்துற டா மாயக்காரா” செல்லமாக தன்னவனைக் கடிந்து கொண்டாள் மங்கை.

 

வெளியே வந்தவளின் விழிகள் எதிரில் நின்றவனைக் கண்டு பெரிதாக விரிந்தன. கருப்பு பேண்டும் ஆகாய நீல நிற ஷர்டை டக்கின் செய்து அணிந்திருந்தவனது கம்பீரம் இப்பொழுதும் அவளை ரசிக்க வைத்தது.

 

அவன் கைகளில் வீற்றிருந்தாள் அவர்களை ஒத்த நிறத்தில் கவுன் அணிந்திருந்த ஷாலு.

 

“க்யூட்டி எப்படி இருக்கா வர்ஷ்?” என்று கேட்ட சின்னவளிடம்,

 

“கியூட்டி க்யூட்டா, ஸ்வீட்டா, ரொம்ப அழகா இருக்கா. அந்த அழகை ரசிக்க ரெண்டு கண்ணு பத்தல செல்லம்” என அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான் ஆடவன்.

 

“அதை விட என் வர்ஷு சூப்பரா இருக்கார். சினிமாவில் வர்ற ஹீரோவை விட அழகு” அவனைக் கொஞ்சினாள் ஷாலு.

 

இருவரின் பாசப்பிணைப்பை நெகிழ்வுடன் பார்த்து இருந்தவளைக் கண்டு கொண்டான் கணவன். விரிந்த இமைகள் மூட மறுத்திட “ப்பாஹ்! மை ஏஞ்சல்” புன்னகையுடன் இதழ்கள் விரிய சொன்னான் அவன்.

 

“அங்கிள் இப்போ என் அத்து எப்படி இருக்கான்னு சொல்லுங்க” அவனிடம் சிணுங்கினாள் ஷாலு.

 

“நீல வானம் மாதிரி டிரஸ். அவ நடந்து வர்ரது மேகங்கள் அங்கும் இங்கும் துள்ளிப் பாய்ந்து அசைஞ்சு விளையாடுற மாதிரி இருக்கு. வானத்தில் வட்டமா பிரகாசிக்கிற நிலாவை செதுக்கின மாதிரி முகம். இதுக்கு மேல சொல்லத் தெரியல. அவ்ளோ பேசுற என் வாயை ஒரு செக்கன்ல கட்டிப் போட்டுட்டா உன் அத்து” தன் தேவதையை பார்வையால் பருகினான் உதய வர்ஷன்.

 

“அப்போ நான் அழகா? அத்துக் குட்டி அழகா?” எனக் கேட்டு அவனைத் திக்கு முக்காட வைத்தாள் சிறுமி.

 

“அங்கிளோட ரெண்டு கண்ணையும் பாரு. எது அழகுனு சொல்லு பார்க்கலாம்” என்று பதிலுக்கு அவளிடம் வினவியவனிடம்,

 

“இரண்டுமே ஒரு மாதிரி தானே வர்ஷு. எப்படி ஒன்னு அழகுன்னு சொல்லுறது?” எனப் பதிலளித்தாள் ஷாலு.

 

“அதே! அதே மாதிரி தான் என் க்யூட்டி ஒரு கண்ணுனா என் பெண்டா பேபி அடுத்த கண்ணு. ஷாலு எவ்வளவு அழகோ அத்துவும் அவ்ளோ அழகு. சோ என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க ரெண்டு பேருமே பியூட்டிஸ் தாண்டா” சின்னவளைக் கொஞ்சியவனின் பேச்சில் மேலும் மயங்கிப் போனாள் அதிய நிலா.

 

“ஓகே போகலாமா?” என்று கேட்டு இருவரையும் காரில் அழைத்துச் சென்றான் அவன். கார் நிறுத்தப்பட்ட இடத்தை கண்டு திகைப்புடன் நின்றாள் அதி.

 

அது மிகப் பிரமாண்டமான ஒரு மண்டபம். திரைப்பட விருதுகள் கூட இங்கு வழங்கப்படும் அளவுக்கு பிரசித்தி பெற்ற இடம் அது. தற்பொழுது வெல்லத்தை மொய்க்கும் எறும்புகளாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க இங்கு எதற்காக அழைத்து வந்தான் எனும் கேள்வி அவளுள் எழுந்தது.

 

“இன்னைக்கும் ஏதாவது அவார்ட் கொடுக்குற பங்க்ஷன் நடக்குதா? யாருக்கு அவார்ட்? நமக்கு தெரிந்த யாருக்காவது கொடுக்குறாங்களா?” கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் காரிகை.

 

“சின்ன கரெக்ஷன்! நமக்கு இல்லை உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் நடிச்ச ஷார்ட் பிலிம்கு அவார்ட் கிடைக்குது” என்று கூறியவனின் பேச்சு அவளுக்குப் புரியவில்லை.

 

“எனக்கு தெரிந்தவங்களா? அது யாரு டா? இதுக்கும் நீ வெளியில அடிக்கடி போயிட்டு வர்றதுக்கு என்ன சம்பந்தம். எனக்கு ஒண்ணுமே புரியல” புருவத்தை ஒற்றை விரலால் நீவிக் கொண்டாள் மாது.

 

“நோ டென்ஷன் இது டார்லிங்! உங்க அத்தனை கேள்விகளுக்கும் உள்ளே போனதும் பதில் கிடைச்சுடும். ஷெல் வீ கோ?” உள்நோக்கி கைகாட்ட தலையசைப்புடன் ஷாலுவின் கைப்பிடித்து உள்ளே நுழைந்தாள்.

 

வண்ண மின்குமிழ்கள் ஒளிர டிஜே சவுண்ட்டில் களை கட்டியிருந்தது அரங்கம். ‘சகலகலா வல்லவன்’ எனும் பெயருடன் ஒரு ஆடவன் பின்னால் திரும்பி இருக்கும் போட்டோவுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

 

ஒன்றும் புரியாத நிலையில் அதி! அவளையே உள்ளுக்குள் பூத்த புன்னகையுடன் பார்த்திருக்கும் அவளின் உதி! இவ்வாறு இருவரது நிலமையும் இருக்க பல குறும் படங்களுக்கான விருது வழங்கப்பட்டது.

 

இறுதியாக குறுகிய காலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற குறும்படத்திற்கான விருது அறிவிக்கப்படும் தருணமும் வந்தது. “தி பெஸ்ட் ஷார்ட் ஃபில்ம் இஸ் சகலகலா வல்லவன். திஸ் அவார்ட் கோஸ் டு சகலகலா வல்லவன் ஹீரோ உதய வர்ஷன்” என்று அறிவிப்பு காதைக் கிழிக்க விசில் சத்தங்கள் விண்ணைப் பிளந்தன.

 

கரகோசங்களால் அரங்கமே அதிர தன் காதில் கேட்ட பெயர் உண்மையா என சோதிக்கும் போதே, “சப்ரைஸ் டு யூ மை லவ்” என்று அவள் காதில் கேட்டது அவளவனின் குரல்.

 

காதோரம் ஸ்பரிசித்த உஷ்ண மூச்சுக் காற்றில் சுற்றம் உணர்ந்தவள் அவனை இனம் புரியாத உணர்வுடன் நோக்கினாள்.

 

கண்ணடித்து விட்டு எழுந்து மேடைக்குச் சென்றான் உதய் அவனைப் பலர் பாராட்டினார்கள். அதையெல்லாம் கேட்டு அதி அகம் மகிழ, அவனது பார்வையோ அவள் மீது மட்டுமே நிலைத்திருந்தது.

 

படத்தில் வக்கீலாக நடித்திருந்தான். அவன் கவிதைகள் எழுதக்கூடியவனாக இருந்தான். முதல் படம் என்றாலும் மிக அழகாக ஹீரோயின் யாரும் இன்றி நடித்திருந்தான் என்று பேசப்பட்டது. அதிலும் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் அதில் இடம்பெற்ற பாடலைக் கூட உதய்யே பாடியிருந்தான். இது அனைத்தையும் கூறி பாராட்டப்பட்டான் அதியின் யஷு.

 

அவன் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக  எங்கு சென்றான் என்பதற்குப் பதில் கிடைத்தது. அவள் முற்றிலும் எதிர்பார்க்காத பதில்! இன்பமான பதிலைக் கொடுத்திருந்தான் அவளின் மாயவர்ஷன்.

 

வர்ஷனிடம் மைக் வழங்கப்பட்டது. “சார் நீங்க ஒரு டாக்டர்! அப்படி இருக்கும் போது இந்த ஃபில்ம் நடிக்க எப்படி இன்ட்ரஸ்ட் வந்துச்சு?” எனும் கேள்வி அவனிடம் முன்வைக்கப்பட்டது.

 

“இன்டரஸ்ட் என்று பெருசா சொல்ல முடியாது. இப்படி ஒரு ஷார்ட் ஃபிலிம் நடிக்க எனக்கு எண்ணம் வரக் காரணம் என் நிலாம்மா! எஸ் அதியநிலா…!! ஷீ இஸ் மை வைஃப்” அவன் இதழில் கீற்றுப் புன்னகை மின்னலாய்ப் பளிச்சிட்டது.

 

அதிர்ந்து நின்றாள் பெண். “நான் காரணமா? இப்படி ஒரு ஐடியாவை நான் கொடுத்தேனா? எனக்கு இவ்வளவு நடந்திருக்குன்னு இப்போ தானே தெரியும்?” புரியாமல் பார்த்தாள் பாவை.

 

“நான் ஷார்ட் பிலிம் நடிக்கணும்னு அவ என் கிட்ட சொன்னது இல்ல. பட் அவ உணர்ந்து சொன்னதை நான் செய்ய நினைச்சேன். என்னை முதல் தடவை பார்த்தப்போ நான் பேசியதைக் கேட்டு பேசாம நீ வக்கீலாகி இருக்கலாம்னு சொன்னா. இன்னொரு நாள் நீ கவிஞனாகி இருக்க வேண்டியவன்னு சொன்னா.

 

அப்புறம் பாடகனாகி இருக்கலாம் என்று சொன்னா. அதையெல்லாம் புன்னகையோட கடந்து வந்தேன். அப்படி இருக்கும் போது நீ நடிகனாகி இருந்திருக்கலாம் டா அப்படின்னா. அப்போ தான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோணுச்சு. ஏதாவது ஒன்னுல நடிக்க விரும்பினேன்.

 

அப்போதான் ஷார்ட் பிலிம் டைரக்டரா இருக்குற என் பிரண்டு ஞாபகம் வந்துச்சு அவன் என்னை இந்த ஷார்ட் பிலிம்ல செட் பண்ணி விட்டான். சோ அதி சொன்ன மாதிரி நிஜத்துல நான் வக்கீலா கவிஞனா பாடகனா ஆக முடியல. அதையெல்லாம் நடிகனாகி பண்ணியிருக்கேன். சோ இந்த அவார்ட் அவங்களுக்கு தான் சொந்தம்” என்று கூறி தன் இதய நிலாவாக நினைத்து அந்த விருதிற்கு முத்தமிட்டவனின் செய்கையில் கைத்தட்டல்கள் எங்கும் எதிரொலித்தன.

 

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றையும் மெது மெதுவாக உள்வாங்கினாள் மனைவி.

 

மேடையில் இருந்து இறங்கி அவன் தனது அருகில் அமர்ந்ததைக் கூட உணராதவளாய் பிரம்மை பிடித்தவள் போல் நின்றாள் அதியா. நிகழ்ச்சி முடிந்து வரும் போது உதய்யிடம் எல்லோரும் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூற அதை மறுத்தவன் அதியின் கையைப் பிடித்து மறு கையால் ஷாலுவைத் தூக்கி ஒரு ஃபோட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

 

காரில் செல்லும் போது கூட எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தாள் அவள். ஷாலுவும் உதய்யும் வழக்கம் போல் வளவளத்துக் கொண்டு வந்தனர். ஷாலு இருந்த களைப்பில் அப்படியே உறங்கி விட அவளைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தான் உதய்.

 

அறையினுள் நுழைந்து அவளைத் தேட கட்டிலில் அமர்ந்து கைகள் இரண்டையும் பிணைத்துக் கொண்டிருந்தாள் அவள்  தன்னவளின் அருகில் சென்று “இதயா….!!” என மெதுவாக அழைக்க விருட்டென எழுந்து அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் காதலி.

 

“ஏன்டா இப்படி பண்ண? எதுக்காக என் மேல இவ்ளோ பாசத்தைக் கொட்டுற? என்னை ஏன்டா உனக்கு அவ்ளோ பிடிக்குது” அவன் மார்பில் அடித்தவாறு கேட்டவளின் உணர்ச்சிகள் ததும்பிற்று.

 

“அடிக்காதீங்க!” நெஞ்சைத் தடவியவனை, “ஏன் உனக்கு வலிக்குதா?” எனும் கேள்வியுடன் பார்த்தாள்.

 

“நோ! என் இதயத்தில் இருக்கிற நிலாவுக்கு வலிக்கும் இல்லையா?” அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டினான்.

 

“நெஜமா நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. சும்மா பேச்சுக்கு சொன்ன விஷயங்களை நீ ஒன்றாக கோர்த்து இப்படி செஞ்சது அவ்ளோ சந்தோஷமா இருக்கு. உண்மைய சொல்லுறேன் டா. நான் என் அப்பாம்மா கூட இருக்கிறப்ப கூட இவ்வளவு சந்தோஷத்தை உணர்ந்ததில்லை.

 

உன்னால எனக்கு சந்தோஷம் மட்டும் கிடைக்குது. நீ எனக்கு கிடைத்த வரம் கண்ணா! இதற்கு கைம்மாறா என்னால எதுவும் செய்ய முடியாது” கண்கள் கலங்க உரைத்தாள் ஊர்வசியவள்.

 

“நீங்க அப்பா அம்மா கூட இருக்கும்போது இவ்வளவு சந்தோஷத்தை அனுபவிச்சது இல்லைங்குறது சரி. ஆனால் நான் என் லைஃப்ல சந்தோஷத்தையே உணராமல் இருந்தேன். ஆனால் நீங்க அப்படி இல்லை இதே அளவு இல்லனாலும் ரொம்ப ஹேப்பியா உங்க பேமிலி கூட இருந்தீங்க.

 

நீங்க என் லைஃப்ல வரும் வரைக்கும் சந்தோஷத்தை நிலையாவே உணர்ந்ததில்லை. எனக்கே எனக்கென்று அழியாத சந்தோஷத்தை குறையாமல் தந்தது நீங்க தான். உங்க உறவு தான் எனக்கு உண்மையான சந்தோஷம்னா என்னனு உணர்த்திச்சு. இந்த உதட்டில் பூக்கும் புன்னகை போலியாகவே இருந்தது. ஆனால் அதை உணர்வு பூர்வமாக உள்ளத்தில் தோன்றி உதட்டுல உறைகின்ற மாதிரி உருவாக்கினது நீங்க.

 

உண்மையான என் புன்னகையோட முகவரி என் நிலா! எனக்கு இந்த வாழ்க்கையில பிடிச்சது சந்தோஷமும் சிரிப்பும் மட்டுமே. அதை எனக்காக தந்த உங்க அன்பைத் தவிர எனக்கு வேறு எந்தக் கைமாறும் எனக்குத் தேவையில்லை” அவள் கைகள் இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்டவனின் கைச்சிறைக்குள் கைதாகி அவன் மார்பில் தலை சாய்த்தாள் டாக்டர் உதயவர்ஷனின் செல்ல மனையாட்டி.

 

இப்படியே நாட்களும் இவர்களின் அழகிய காதலுடன் அழகாகச் சென்றன.

 

“பாப்பா எங்க போயிட்டே? டைம் ஆச்சு டா” காலையிலே அதியின் சத்தம் வீடெங்கும் ஒலித்தது.

 

“என்னாச்சு அதி? காலையிலே இந்த சத்தம் போடுறீங்க?” என கேட்டவாறு குளித்து முடித்து விட்டு வந்தான் கணவன்.

 

“உன் கியூட்டியைக் காணோம் டா. நர்சரிக்கு வேற டைம் ஆச்சு. எங்க இருக்கான்னு தெரியல” என்றாள் பாவமாக.

 

“அங்க போக கள்ளத்தனத்துல எங்கயாச்சும் ஒளிஞ்சிக்கிட்டு இருப்பா. பாவம் இன்னைக்கு மட்டும் இருக்கட்டும்”

 

“உன் பாவ புண்ணியங்களை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுடு. இன்னிக்கு அவங்க ஃபங்ஷன்கு பிராக்டிஸ் பண்ணுறாங்க. சோ கண்டிப்பா அனுப்பியே ஆகணும்” அவனை மூக்கு விடைக்க முறைத்தாள் அதி.

 

“ஓஓ! அப்படியா. சரி நாம ரெண்டு பேரும் சேர்ந்து எங்க இருக்கான்னு தேடலாம்” இருவரும் சேர்ந்து தேடியும் ஷாலு கிடைக்கவில்லை.

 

ஓய்ந்து போன அதியா காஃபி போடலாம் என நினைத்து சமையலறைக்குச் சென்று கபோர்டைத் திறக்க அதனுள் உட்கார்ந்து பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அவளது இத்தனை நேர தேடலுக்கும் காரணமான ஷாலு.

 

“அடிக்கள்ளி! இங்கேதான் இருக்கியா? வெளில வா” என அண்ணன் மகளின் காதைத் திருகி வெளியே இழுத்து எடுத்தாள்.

 

“அத்துக் குட்டி! என் செல்ல குட்டில்ல. உனக்கு என் மேல ரொம்ப பாசம் தானே?” என்று அத்தையைக் கொஞ்சினாள் அவள்.

 

“நீ ஒன்னில்ல ஆயிரம் குட்டி போட்டாலும் இன்னிக்கு வீட்டில் இருக்க முடியாது. சீக்கிரமா வா” அவளது கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, உதய்யைக் கண்டு “வர்ஷு! அத்துக்கு என் மேல பாசம் இல்லை. உங்களுக்கு பாசம் இருக்குல்ல” என உதடு பிதுக்கிக் கேட்டாள் அவள்.

 

“எஸ்! நிறைய பாசம் இருக்கு. அதனால தான் உன்னை நர்சரிக்கு அனுப்புறோம். சோ சமத்துப் பொண்ணா அடம்பிடிக்காம போயிட்டு வருவியாம்”

 

“ப்ளீஸ் அங்கிள்! இன்னைக்கு மட்டும்” பாவமாக வேண்டி நின்றாள் ஷாலு.

 

“நோ டா! இன்னிக்கி போகணும். போனால் உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தருவேன்” என்று சொன்னதும் கூம்பியிருந்த முகம் அழகாக விரிய நாடியில் விரல் தட்டி யோசித்து விட்டு, “எனக்கு ஐஸ்கிரீம் வேணும்” எனக் கூறினாள்.

 

“ம்ம் கண்டிப்பா வாங்கி தருவேன். இப்போ ரெடி ஆகலாமா?” என்று கேட்க, அவனுக்கு முன்பாகவே அறைக்குள் ஓடியவளைப் புன்னகையுடன் தொடர்ந்து சென்றான்.

 

அவளுக்கு அதி உடை மாற்றி விட்டு காபி போடச் செல்ல தலை சீவி பவுடர் போட்டு ஆயத்தமாக்கி அவளைப் பாடசாலையில் விட்டு வந்தான் ஷாலுவின் பாசக்கார வர்ஷு அங்கிள்.

 

மாலையும் ஆனது. “அத்து! வர்ஷு ஐஸ்கிரீம் கொண்டு வரலையா?” ஃப்ரிட்ஜை அலசி ஆராய்ந்தாள் சிறுமி.

 

“எனக்கென்னடி தெரியும்? நீயாச்சு உன் வர்ஷுவாச்சு. அவன் கிட்டயே கேளு” என்று தோளைக் குலுக்கினாள் அத்து.

 

அந்நேரம் வந்த உதய் “ரெண்டு பேரும் ரெடியாகுங்க. வெளியில போகலாம்” என்றதும் ஷாலு துள்ளிக் கொண்டு ஓடினாள்.

 

ஐஸ்கிரீம் ஃபார்லருக்கு அழைத்து சென்றான் உதய். விரும்பிய ஐஸ்கிரீமை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லவும் ஷாலு பாய்ந்து மெனு கார்டை எடுத்து எந்த ஐஸ்கிரீம் வாங்கலாம் என தீவிரமாக யோசிக்கத் துவங்கி விட்டாள்.

 

ரோட்டுக் கடையில் குச்சி ஐஸ்கிரீம் வாங்குவதோடு சரி! இவ்வளவு பெரிய ஐஸ்கிரீம் கடைக்கெல்லாம் வந்ததே இல்லை என்பதால் சின்னவள் முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.

 

அவளையே பார்த்திருந்த உதய் தன்னவள் பக்கம் திரும்ப அவளின் பார்வை தன் மீது நிலைத்திருப்பதைக் கண்டு புருவம் உயர்த்தினான். அவளுக்கு அதெல்லாம் விளங்கவில்லை.

 

“ஹோய் பெண்டா பேபி!” என அவள் முகத்தின் முன் சொடக்கிட சிந்தை கலைந்து அவனை ஏறிட்டாள் நிலா.

 

“என்னங்க அப்படி பார்க்கிறீங்க…??”

 

“ஏன் பார்க்க கூடாதா? என் புருஷன் நான் பார்ப்பேன், ரசிப்பேன், அடிப்பேன் ஏன் கடிக்கக் கூட செய்வேன்” கடிப்பது போல் செய்கை செய்தாள்.

 

“கடிப்பீங்களா? ஆத்தே என்னை ஆள விடுங்க” என அரண்டான் கண்களைச் சுருக்கி.

 

அவனது முக பாவனைகளில் சிரித்து விட்டவள், “டேய்! எனக்கு உன்னைக் கண்ட நிமிசத்துல இருந்து இப்போ வரைக்கும் உன்னைப் பார்க்குறப்போ ஆச்சரியமா இருக்கு. நீ ரொம்ப வித்தியாசமானவன். எனக்கு ஒரு ஹஸ்பண்டா, பாப்பாவுக்கு ஒரு அப்பாவா எங்களை சந்தோஷப்படுத்தி மட்டுமே நீ இன்பம் காணுற.

 

உன் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஷாலு முகத்தில் தோணுற பிரகாசத்தைக் காணும் போது எனக்குக் கிடைக்கிற ஆனந்தத்துக்கு அளவே இல்லை. உன் மேல எனக்கு காதல் கூடிட்டே போகுது. உன்னை சதோஷப்படுத்த நான் என்ன செய்யனும்னு தெரியல யஷு ” மேசையில் இருந்த அவன் கை மீது தனது கையை வைத்தாள் அதிய மங்கை.

 

“என்னை மகிழ்விக்க உன் அன்பான பார்வையும், மென்மையான ஸ்பரிசமும் போதும டி  வெண்ணிலவே” தன் கையில் பதிந்த பெண் நிலவின் வெண்பஞ்சுக்  கை மீது தனது அடுத்த கையை வைத்து லேசாக அழுத்தினான் இனிய வர்ஷன்….!!

 

நிலவு தோன்றும்…..!!🌛

 

✒️ ஷம்லா பஸ்லி ❤️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!