கரம் விரித்தாய் என் வரமே – 23
மெத்தையின் மற்றொரு பக்கத்தில் படுத்தவன் மனதில் ஏதேதோ சலனம். அவளின் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் ஒரு விதமான திகைப்பில் இருந்தான் ராஜேஷ். அவன் மனதில் அவர்களின் தனிமை குறித்த சலனம் இல்லாமல் இல்லை, ஆனால் அதை அவன் முன்னெடுக்க நினைக்கவே இல்லை. ஆனால் அவள் அனைத்திற்கும் தயார் என்றது அவனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம் தந்தாலும் இன்னொரு பக்கம் மெல்லிய கோபமும் எட்டி பார்த்தது. என்னை என்னவென்று நினைத்தால்?
அவன் அமைதியாக இருப்பதை கண்டவள், அதற்கும் அவனின் மனதை உணர்ந்து பதில் சொன்னாள்.
“உன்னை தப்பா நினைச்சு நான் அப்படி சொல்லலை டா…. கோபப்படாதே….”
இப்போது உண்மையிலேயே ஆச்சர்யத்தில் சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு.
“ஏண்டி, மனசில கூட கோபப்பட கூடாதா….?”
“கோபம், வருத்தம் எல்லாம் மத்தவரோட தப்புக்கு நமக்கு நாமே கொடுத்துகிற தண்டனை…. அதனால் தான் வேண்டாம் சொன்னேன். நான் பேசினதுக்கு நீ ஏன் கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்கணும்?”
“உன்னை என்கிட்ட அப்படி பேச வைச்சுது எது? என் நடத்தை தானே? ஏதோ விதத்தில் உனக்கு நான் இப்படி பேச இடம் கொடுத்துட்டேன் தானே….?”
“உன்னால தான் நான் அப்படி பேசி இருக்கணுமா என்ன? எனக்கே அப்படி ஒரு எண்ணம் இருந்து நானே சொல்லி இருந்தா…. நீ எப்படி பொறுப்பாவே….?”
“சரி இப்போ என்ன தான் சொல்ல வர்றே….?” ராஜேஷ் அலுத்து கொள்ள,
ஒன்னுமில்லை தூங்கலாம் என்றவள் அவன் பக்கம் திரும்பி கைகளை கட்டி கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள்.
“எனக்கே தோணுச்சு…. அது…. இதுன்னு…. மனுஷனை உசுப்பேத்தி விட்டுட்டு தூங்குறா பாரு…. என்று முணுமுணுத்தபடி அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான் ராஜேஷ்.
சற்று நேரத்தில் எல்லாம் அவன் முதுகின் மேல் அவளின் மென்மைகள் அழுந்த அவனை இறுக்கி அணைத்து கொண்டாள் அஸ்வினி. அவளை உணர்ந்த அவன் தேகம் விரைத்தது…. ஆனால் நேர்மாறாக உள்ளம் உருகியது.
திரும்பாமலே, “என்ன தூக்கம் வரலையா?” என்றான் மென்மையிலும் மென்மையாக.
“ம்ம்….” என்றவளின் குரலில் இருந்த எதிர்பார்ப்பு புரிய, மெதுவாக அவள் பக்கம் திரும்பியவன் அவளை அணைத்து கொண்டு, தூங்கு என்றான்.
பூனைக்குட்டி போல் அவன் நெஞ்சில் உரசிய அவளை என்னென்னவோ செய்ய ஆசை வந்தாலும் அடக்கி கொண்டு, வெறுமனே அணைத்து கொண்டு படுத்து இருந்தான் ராஜேஷ். கண்களை மூடியபடி இருந்தாலும் அவன் அகம் விழித்துக் கொண்டு, அவனின் மேல் படும் அவளின் தேகத்தை நன்றாக உணர்ந்தது. அதற்கே மயங்கியது ராஜேஷின் உள்ளம்!
சற்று நேரம் மனதுடன் போராடி பின் ஒருவழியாக எப்படியோ கண் அயர்ந்து விட்டு இருந்தான் ராஜேஷ்.
**************
விடியற்காலையில் முழிப்பு வர, மெதுவாக கண் விழித்தாள் அஸ்வினி. இரவு அவன் அணைத்து பிடித்த சற்று நேரத்திற்கு எல்லாம் நன்றாக உறங்கி விட்டாள் அஸ்வினி. இப்போது அவன் அணைப்பில் இல்லை, சற்று அருகில் தான் படுத்து இருந்தாள். இரவில் தான் பேசியது எல்லாம் நினைவிற்கு வர, இவன் கிட்டே நான் ஏன் தான் இப்படி உருகி போறேனோ தெரியலை…. என்ன நினைச்சு இருப்பான் என்று தனக்குள் சிரித்து கொண்டவள், அவனை கொஞ்ச சொல்லிய மனதை கட்டுப்படுத்த முடியாமல், மெதுவாக அவனை நெருங்கி அவன் முகத்தை ஆசையாக பார்த்தபடி அவன் கேசத்தை விரல்களால் அளந்தாள். தாமதமாக உறங்கியதால், அவளின் ஸ்பரிசத்தை உணர்ந்து முழிப்பு வந்தாலும் சட்டென்று கண்களை திறக்க முடியவில்லை அவனால். அவன் அரைகுறையாக கண்களை திறக்க முயற்சிக்க, அய்யோ அவன் தூக்கத்தை கெடுக்கிறோம் என்று எண்ணி அவள் விலக முயற்சிக்க, கண்களை திறக்காமல் அவள் விலகி போவதை தடுக்க வேண்டும் என்று வேகத்தில் அவளை பிடித்து இழுக்க முயற்சிக்க, அவள் கைகளை பிடிக்கும் முன் அவன் கைகள் ஏடாகூடமாக அவள் மேல் பட்டது. அதில் வேகமாக கண் விழித்தவன், ஒரே இழுப்பில் அவளை தனக்கு கீழே கொண்டு வந்தான்.
“ஸாரி டா, நீ தூங்கு….” என்று அவள் நழுவ நினைக்க, சிவந்த கண்களால் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தான் ராஜேஷ். பார்த்தவன்,
“இதை ஏன் மேல் சாய்ஞ்சு, என் தலை கோதுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்! ஒய்யாரமா என் மேல் சாய்ஞ்சு, அழுத்தி, என்னை கிளப்பி விட்டுட்டு இப்போ நீ எங்கேயும் போக முடியாது பூனைக்குட்டி….” என்றான்.
“உன்னை பார்த்தாலே எனக்கு உன்னை கட்டிக்கணும், கொஞ்சணும்னு தான் தோணுது டா…. நான் என்ன பண்ண?”
“நான் என்ன வேணாம்னா சொன்னேன்…. இப்போ கொஞ்சு….” என்றவன் அவள் கொஞ்சும் வரை காத்திருக்காமல் அவள் கழுத்தில் புதைந்தான். அவன் இதழ்கள் செய்த மாயாஜாலத்தில், அவளே அவனுக்கு வழி செய்து கொடுத்தாள். அவளின் அந்த வழியில் அவன் விரல்களும் இதழ்களும் வேக வேகமாக முன்னேறின. வேகமாக செல்லும் வழியில் தாகத்தை தீர்க்க ராஜேஷ் செய்த முயற்சியில் மயங்கி கிறங்கினாள் அஸ்வினி. அவளின் மயக்கத்தில் அவனின் வேலை சிறப்பாக இருப்பது புரிய, இன்னும் சிறந்த வேலைக்காரன் ஆனான் ராஜேஷ். முழுவதுமாக அவளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன், இறுதியில் தயங்கினான். தயங்கி அவள் முகம் பார்க்க, ஒன்னும் பயமில்லை என்றாள் அஸ்வினி. அதன் பின் அஸ்வினிக்கு ஒன்றும் புரியாத நிலை தான். அவளை காட்டற்று வெள்ளம் போல் எங்கெங்கோ இழுத்து சென்றான் ராஜேஷ். அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் மிகுந்த விருப்பமுடன் சென்றாள் அஸ்வினி. விருப்பத்தோடு அஸ்வினி இருக்க, ராஜேஷ் கொஞ்சமும் நிறுத்த விரும்பவில்லை, எந்த தயக்கமும் இன்றி அவன் ஆசை அடங்கும் வரை அவளோடு சுகித்து இருந்தான்.
போட்ட ஆட்டம் கொஞ்சமா என்ன? எனும் படியாக இருவரும் தூங்கி எழும் போது பிற்பகலையும் தாண்டி இருந்தது நேரம். எழுந்த இருவருக்கும் மிகுந்த பசி. முதல் நாளும் சரியாக சாப்பிடாமல் இருந்ததால், மெத்தையில் இருந்து எழுந்தவளுக்கு தலை சுற்றி கொண்டு வந்தது. பதறி விட்டான் ராஜேஷ்.
“ஸாரி ஸாரி டா, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா…. இரு வரேன்….” என்றவன், வேகமாக பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தான். பாலை குடித்தவுடன் கொஞ்சம் தெம்பு வர, கவலையாக இருந்த அவன் முகத்தை கண்டு, “உன்னால இல்லை டா…. ரெண்டு மூணு நாளா சரியா சாப்பிடலை இல்லை…. அதனால் தான்….” என்றாள் சிரித்துக் கொண்டே.
அவள் சிரிக்கவும், அவனும் சகஜமாகி, “எந்திரிச்சு நிற்கவே தெம்பில்லை…. ஆனா காலையில் என்ன ஆட்டம் போட்டே நீ….?” என்றான் அவளை பார்வையாலே பருகுவது போல் பார்த்து.
“ஷ்ஷ்…. அது வேற, இது வேற பங்கு…. கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லாதே….” என்று சிரித்தாள்.
“என்ன பங்கு ஆ….?” அவளின் அழைப்பில் அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.
“ஆமா…. நீதானே என் பங்கு! பார்ட்னர்…. அதான்….” அவள் சிரிக்க, அவனும் அதை ஆமோதித்து அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
அதன் பின் அவர்களின் சிரிப்பு சத்தம் அன்று மட்டுமில்லை அடுத்த நான்கு நாட்கள் அவர்கள் மனதையும் நிறைத்தது. இந்த நான்கு நாட்களையும் அவர்கள் வாழ்வில் அவர்களால் என்றுமே மறக்க முடியாது! அந்த அளவிற்கு இருவரும் ஒர் உயிராக வாழ்ந்தனர்.
அவர்களுக்குள் ஏற்கனவே நல்ல புரிதல், நட்பு இருந்ததால் இயல்பான பேச்சு வார்த்தை இருந்தது. தான் பேசி எதுவும் தவறாக நினைத்து விடுவார்களோ என்று இருவருமே யோசிக்காமல், மனதை மறைக்காமல் பேசினார்கள். ஏற்கனவே மனதளவில் நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது மொத்தமாக நெருங்கி விட அவர்களுக்குள் இருந்த நெருக்கம் இப்போது வெளிப்படையாக தெரிய தொடங்கியது! அன்யோனியமான தம்பதிகள் போல் மற்றவர் முகம் பார்த்து நடந்து கொள்ள தொடங்கினார்கள்.
தெய்வா இரண்டாம் நாளில் இருந்து அடிக்கடி அழைத்து அஸ்வினியுடன் பேசிக் கொண்டு தான் இருந்தாள். அப்போது எல்லாம் அவளிடம் சொல்லவில்லை அஸ்வினி. இன்று ராஜேஷ் அவன் வீட்டிற்கு கிளம்புவதால் அனைவரும் ஷிவாவின் வீட்டருகே உள்ளே ஹோட்டலில் சந்தித்தனர். அவர்களின் நெருக்கத்தை அதிர்ச்சியாக பார்த்த தெய்வா அவளிடம் கேட்க, அவளிடம் திக்கி திணறி விஷயத்தை சொல்லிவிட்டாள் அஸ்வினி.
“அடிப்பாவி, ஏண்டி அவ்ளோ அவசரம்? ஏதோ கொஞ்சம் கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும்னு தான் அனுப்பி வைச்சேன்…. இவ்ளோ தூரம் நீ போவேனு எதிர்பார்க்கலை டி….” என்றாள் தெய்வா ஆற்றாமையுடன்.
“இல்லை…. டி…. அது….”
“சரி சேப்(safe) தானே….?”
“ம்ம்…. லாஸ்ட் வீக் தான் இது….!”
“போதும் இதோட விட்ரு, அவன் ஊருக்கு போற வரை வேற எதுவும் வேண்டாம்….” ஏனோ தெய்வாவிற்கு நெஞ்சுக் கூடு காலியானது போல் இருந்தது.
அடுத்த மாதம் வேகமாக ஓட, இரு வாரங்கள் கழிந்த நிலையில், தெய்வாவை அழைத்தாள் அஸ்வினி.
“தெய்வா, ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வாடி”
தன்னை வரச்சொல்கிறாள் என்றாள் தன்னுடன் நேரம் செலவழிக்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்ட தெய்வாவும் அஸ்வினியின் வீட்டிற்கு வந்தாள். அவளுக்கு மூன்று மாதம் முடிந்து நான்காம் மாதம் நடக்கிறது. அலுவலகம் செல்கிறாள் இப்பொழுது தெய்வா.
அலுவலகம் செல்லாமல், குளிக்காமல் இரவு உடையுடன் இருந்தவளை கண்ட தெய்வாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.
“என்னடி? என்ன கோலம் இது? ராஜேஷ் கூட சண்டையா?” என்றாள்.
“இல்லை….அதெல்லாம் ஒன்னுமில்லை, இது வேற….!”
“ஏய், என்னை டென்ஷன் பண்ணாம விஷயத்தை சொல்லு சீக்கிரம்.”
“எனக்கு இரண்டு வாரம் ஆகியும் இன்னும் பீரியட்ஸ் வரவே இல்லைடி.”
“என்னடி சொல்றே….?அப்போ நான் கேட்டப்போ லாஸ்ட் வீக் அதனால் சேப்னு தானே சொன்னே….?”
“ஆமா ஆமா, கிட் வாங்கி டெஸ்ட் பண்ணி பார்த்துட்டேன்…. நெகட்டிவ் தான்…. ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்குடி…. டாக்டர் கிட்டே போய் காட்டிடலமா….?”
அசிங்க அசிங்கமாக அவளை திட்ட தோணியது தெய்வாவிற்கு. ஆனால் ஏற்கனவே பயத்தில் பதட்டத்தில் இருப்பவளை ஒன்றும் சொல்ல முடியாமல், தெய்வா பார்க்கும் கைனிக்கிடமே அழைத்து சென்றாள். தெய்வாவின் உறவினர் அவர். அதனால் உடனே உள்ளே சென்று விட்டனர்.
நாட்கள் குறித்து அவள் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டவர், “பர்ஸ்ட் ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம். அப்புறம் பேசலாம்….” என்றவர் துரிதமாக இதற்கு ரிப்போர்ட் வாங்கி வாருங்கள் என்று நர்ஸை அனுப்பி வைத்தார். இருவரையும் காத்திருக்க சொல்லி விட்டு மற்ற கேஸ்களை கவனிக்க ஆரம்பித்தார்.
அந்த அரைமணி நேரத்தில் அஸ்வினியும் தெய்வாவும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. தோழியின் மீது தீராத ஆத்திரத்தில் இருந்தாள் தெய்வா. ரிசல்ட் என்னவாக போகிறதோ என்ற பயம் இருவருக்கும் இருந்தது.
ரிப்போர்ட் வந்து விட்டதாக சொல்லி அழைத்த டாக்டர், இருவரின் வேண்டுதல் அனைத்தையும் தவிடு பொடி ஆக்கும் வகையில்,
“நீ பிரெக்னென்ட்டா இருக்கே மா….” என்றார் உணர்ச்சி துடைத்த முகத்துடன். பின் அவரே,
“நீங்களா எப்போதும் எந்த விஷயத்திலும் எதுவும் முடிவு பண்ணக்கூடாது. நீ சொல்றதை பார்த்தா உன்னோட கரு முட்டை இருபத்தி அஞ்சு நாட்கள் கிட்டே தான் வெளியாகி இருக்கு. அது இருபத்தி நாலு மணி நேரம் வரை கர்ப்பமாக வாய்ப்பு கொடுக்கும் நமக்கு. அதில் தான் நீ மாட்டி இருக்கே…. நீங்க சேப்பா இருந்து இருந்தா இந்த பிரச்சனையே இல்லை! இப்போ என்ன பண்ண போறீங்க….?”
இருவரும் பேச்சிழுந்து உச்சகட்ட அதிர்ச்சியில் அசையாமல் இருந்தனர். அவர்களின் நிலை அவருக்கு புரிய, “என்ன முடிவுனாலும் உங்க பார்ட்னர் கிட்ட பேசி முடிவு பண்ணி அவரையும் அழைச்சிட்டு வாங்க….” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.
வெளியில் வந்த அஸ்வினி, அய்யோ! இதை நான் எப்படி ராஜேஷ் கிட்டே சொல்லுவேன்….? அன்னைக்கே அத்தனை தடவை கேட்டானே….? இப்போ இன்னும் ஒரு மாசத்தில் அவன் ஊருக்கு வேற போகணும்….!” வாய் விட்டு புலம்பினாள் அஸ்வினி.
தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த போது தானும் தங்கள் குடும்பமும் எவ்வளவு சந்தோஷப்பட்டோம்….இப்போது இவள் கர்ப்பமாக இருக்கிறாள், அதே விஷயம் தான்! ஆனால் இதை கேட்டால் யாராலும் சந்தோஷபட முடியாதே…. ஒரே விஷயம் ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அதன் போக்கையே மாற்றி விட்டதே! என்று வருத்தமாக நினைத்து கொண்டாள் தெய்வா.
தோழியே வருத்தத்தில் இருக்கும் போது தானும் முடிந்த விஷயத்திற்கு போஸ்ட்மார்ட்டம் செய்வது போல் அதையே நோண்டி நோண்டி பேசுவது வீண் என்று புரிந்து, இனி வரப் போவதை பற்றி கேட்டாள் தெய்வா.
“என்ன டா…. இப்போ என்ன பண்ணலாம்….? ராஜேஷை போன் பண்ணி வரச்சொல்லு….!” என்றாள்.
“பயமா இருக்குடி…. அவன் வீட்டிலே ஏகப்பட்ட பிரச்சனை….” என்று அவன் அம்மா பேசியது, அவன் வருந்தியது என அனைத்தையும் சொன்னாள் அஸ்வினி.
“அதுக்கும் இதுக்கும் என்ன? இது இப்போ உடனடியா முடிவு எடுக்க வேண்டிய விஷயம்னு உனக்கு புரியலை யா….?” கூர்மையாக கேட்டபடி அஸ்வினியை பார்த்து முறைத்தாள் தெய்வா.
அஸ்வினி பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.
“சொல்லுடி…. மூணு வருஷம் கழிச்சு தான் வருவேன்னு சொல்லிட்டு இருக்கான் அவன்…. இந்த விஷயத்துக்கு என்ன முடிவு….? வயிற்றில் குழந்தையை வைத்து கொண்டு தெய்வாவால் நெகட்டிவ்வாக பேசவே முடியவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது தான் நல்லது என்று நினைத்தாள்.
அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி அஸ்வினி எப்படி சொல்வாள்? அவன் அவ்வளவு தூரம் அவனின் வருத்தங்களை சொல்லி, அவனின் திட்டங்களை சொல்லி அது மட்டுமில்லாமல் அவர்களின் எதிர்காலத்திற்காக அவன் அவ்வளவு பிளான் செய்து இருக்கும் போது…. அதை எல்லாம் மொத்தமாக கெடுக்கும் விதமாக இதை எப்படி சொல்வாள்? அதுவும் முழுக்க முழுக்க இது அவளின் தவறு எனும் போது! நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது அஸ்வினிக்கு.