விஷ்வ மித்ரன்
💙 அத்தியாயம் 26
அனைவரும் வெளியேறிய மறு நொடி தன்னவனை அணைத்துக் கொண்டாள் அக்ஷரா. அவள் உள்ளத்தில் மித்ரன் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருந்த காட்சியே தோன்றி மறைந்தது.
இன்னும் அவள் நடந்து முடிந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை என்று புரிந்து கொண்டான் ஆடவன்.
“அம்முலு! உன் அதிரடிக் காதலை தாங்குற சக்தி இப்போ எனக்கு இல்ல டி. ரொம்ப வீக்கா இருக்கேன். இது வேற நேரமா இருந்தா உனக்கு சேதாரம் பலமா இருந்திருக்கும்” உள் அர்த்தத்துடன் கூறிட, மெல்ல விலகி அவன் முகம் பார்த்தவளோ “இருக்கும் இருக்கும். இப்போ கூட உன் வாய் குறையலல?” அவனைச் செல்லமாக அடித்தாள்.
“இப்போ தான் நீ என் அம்முலுவாக இருக்க. நீ இப்படி சண்டைக் கோழி மாதிரி சண்டை போட்டுட்டு சண்டி ராணியா கோபப்பட்டு இருக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் திமிரழகி டி நீ. அழுகாச்சி ரியாக்ஷன் எல்லாம் உனக்கு செட்டாகாது” என அவள் மூக்கைக் கிள்ளி விட்டான் அருள்.
“நீயே என்னை சண்டக்காரியா மாத்திடுவ போலிருக்கே டா க்யூட்டு பாப்பா”
“சரி விடு. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான் அவன்.
“நாம எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்? நமக்குள்ள என்ன இருக்கு?” பொய்யாக நாடியில் விரல் தட்டி யோசித்தாள் அக்ஷு.
“ஓஓ இல்லையா? அப்போ நல்லதாப் போச்சு “என்றவன் விழிகளை அங்கும் இங்கும் சுழற்றினான்.
“என்னடா இப்படி அசால்டா சொல்லிட்டே? இப்போ எதை தீவிரமா தேடிட்டு இருக்க?” என வினவினாள் பெண்.
“என் செல்போனை தேடுறேன். நீ கண்டியா டி? அப்படி கண்டா அதுல இருக்கிற மீனாங்குற நம்பருக்கு போன் போட்டு தா” என்றான் மித்து.
“ஏன்? எதுக்கு?” என அவள் கேட்க, “வேற எதுக்கு அவளை கரெக்ட் பண்ண தான். நமக்குள்ள ஒன்னுல்லனு நீயே சொல்லிட்ட. நான் தனிமரமா இருந்தா நல்லா இருக்குமா சொல்லு” தோளைக் குலுக்கி கண்ணடித்தான் அவன்.
“என்னாது..? கரெக்ட் பண்ணவா. அது யாரு மீனா?” குழப்பமாக கேட்டாள் அக்ஷு.
“என் கூட வேலை பாக்குறவ. அவள் மீனா இல்ல மஞ்ச காட்டு மைனா! போதை ஏத்துறா வைனா என் நெஞ்சுல இருக்குறா குயின்னா” கண்களில் கனவு மின்னிற்று அவனுக்கு.
“இதை என் கிட்ட சொல்ல கொஞ்சமும் இல்லையா பயமா..? உன்ன பண்ணிடுவேன் கைமா” கைகளை முறுக்கிக் கொண்டு சண்டைக் கோழியாக சிலிர்த்தெழுந்தாள் அவள்.
“ஹே ஹே! நோ வயலன்ஸ் மா. மீ பாவம்” என உதடு பிதுக்கினான்.
“என் கூட பேசாத இனிமேல். உன் மேல நான் கோவமா இருக்கேன். உன் மீனா கூடவே போ. இல்லன்னா பூரி சூரி கூட போ”
“அடியே இப்போ எதுக்கு பூரிய இழுக்குற? பாவம் அவள்”
“ஹோ பாவமாமே. பாவமும் புண்ணியமும். போடா போ” என முறைத்தாள்.
‘அடேய் மித்து! உனக்கு உன் வாயில தான் சனி. இந்த காவாயை முதல்ல பிளாஸ்டர் போட்டு ஒட்டிடனும். சும்மா இருந்தவளை மீனாவோட சீனை சொல்லி லயனா மாத்திட்டேனே. என்ன பண்ணப் போறாளோ’ மனதினுள் புலம்பித் தள்ளினான் மித்ரன்.
“என்ன சார் அமைதியாகிட்டீங்க? மீனா கூட டூயட் பாடுறீங்களோ?” என்று கேட்க, “எப்படி செல்லக்குட்டி கரெக்டா கண்டுபிடிச்ச?” இளித்துக் கொண்டு கேட்க வந்தவன் கப்பென வாயை மூடிக் கொண்டான்.
“என்ன சொன்ன? திரும்ப சொல்லு” அதிகாரமாகக் கேட்டாள் அக்ஷு.
“எனக்கு மட்டும் எழுந்து நிற்க முடியும்னா உன்னை சமாதானப்படுத்தி இருப்பேன்” என கவலைப்பட்டான்.
“எப்படி சமாதானப்படுத்தி இருப்ப. சும்மா கதை விடாதே”
“நெஜமாவே அம்முலு. உன் காலுல விழுந்திருப்பேன் அது முடியாம போச்சு”
“அதுக்கு என்ன மித்ரனே? நான் காலை காட்டுறேன் நீ சாரி கேளு”என்ன காலைத் தூக்கிக் காட்டினாள்.
“ஆத்தீ. விவகாரமாத் தான் இருக்காள்” நெஞ்சில் கை வைத்தான் அவன்.
“சரியான களவாணிப் பய டா நீ” என அவள் சிரிக்க, “பசிக்குது அம்முலு” என்று அவளிடம் சொன்னான் மித்து.
“அச்சோ பசிக்குதா? என்ன வேணும். ஹான் உனக்கு லிக்குவிட் ஃபுட் தான் கொடுக்க சொல்லி இருக்கார் அப்பா. சோ சூப் கொண்டு வந்திருக்கேன்”
“எனக்கு சூப் வேண்டாம். பன்னு தான் வேணும்” என்றவனின் பார்வை அவளது பஞ்சுக் கன்னத்தில் நிலைத்தது.
“பன்னா? நல்லா வருவ நீ. அதெல்லாம் சாப்பிடக்கூடாது. ஒன்லி லிக்விட் ஃபுட்” என்று கொண்டு நிமிர்ந்தவள் அவன் பார்வையில் சிவந்து போனாள்.
“அந்த பன்னு இல்லை. இந்த பன்னு” என அவள் கன்னத்தைக் கிள்ளி வைத்தான் மித்து.
“பன்னு வேணுமா பன்னு? உன் நெற்றியில வெச்சுடுவேன் gகன்னு” அவன் நெற்றியில் இரு விரல்களை வைத்து சுடுவது போல் காட்டினாள் அக்ஷரா.
உதட்டோரம் குறும்பு நெளிய “அச்சோ என் பட்டுக்குட்டி! இன்னிக்கு ரைமிங்கா பேசியே கொல்லுறியே” என்க, “தலையில அடி கிடி ஏதாவது பட்டுச்சா? உனக்கு இன்னைக்கு ஓவரா தான் காதல் மழை பொழியுது. பட் இதுவும் பிடிக்குது ஐ லவ் யூ அருள்” என்றாள் பாவை.
“லவ் யூ டூ அம்முலு பேபி. வெறும் லவ் யூ மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா” என்று கேட்க,
“நீ முதல்ல சூப் குடி. அப்பறமா தரதா இல்லையானு நான் டிசைட் பண்ணிக்கிறேன்” என்கவும், பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவனைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் அவனுக்கு கரண்டியால் சூப்பை ஊட்டினாள்.
“விஷு ஏதாவது சாப்பிட்டானா? “என்று கேட்க, தலையில் தட்டிக் கொண்டவளுக்கு அப்போது தான் விஷ்வா சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.
“இல்ல அருள். நான் வைஷு கிட்ட சொல்லிடறேன். சாரி டா! இருந்த டென்ஷன்ல மறந்தே போயிட்டேன்” என கூறினாள்.
“சரிடா” என்று அருகில் இருந்தவளை ரசித்துக் கொண்டே சூப்பை ருசித்துக் குடித்தான் அருள் மித்ரன்.
………………
இருக்கையில் சாய்ந்திருந்தவனை “விஷ்வா” என அழைத்தாள் வைஷ்ணவி.
“சொல்லு நவி!” அவள் பக்கம் திரும்பினான்.
“வாங்க கேண்டீன் போயிட்டு வரலாம்” என்றவளைப் பார்த்து அவளுக்கு பசிப்பதாக நினைத்து அவளுடன் எழுந்து சென்றான்.
கையில் இருந்த பையை நீட்டி “இதுல டி-ஷர்ட் இருக்கு போட்டுட்டு வாங்க. உங்க மேலே இருக்கிறதில் இரத்தக் கறையா இருக்கு” என்றவளது அக்கறையில் நெகழ்ந்து போனான் அவன்.
“எப்படி சேஞ்ச் பண்ணுறது?” என்று கேட்க, “இது என்ன கேள்வி? இப்போ போட்டிருக்கிறத கழற்றிட்டு இதை போட்டுக்கோங்க” என்றாள்.
“அது சரி தான். நீ இருக்கியே என்னைப் பார்த்தா என் கற்பு போய்டாதா” என்றவனை பார்த்து, “ஓஹோ நான் பார்க்கிறதால நீங்க கட்டிக் காத்த கற்பு பறந்து போயிடுமோ? நான் ஒன்னும் உங்களை பார்க்க மாட்டேன். சும்மா சீன போடாம குயிக்கா வாங்க” என மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“பிராமிஸா திரும்ப மாட்டீல? பொண்ணுங்க என்னை பார்த்தா ஷையாயிடுவேன்”
“நீ இப்படியே வள வளன்னு பேசிட்டு இருந்தா நான் கொலைகாரி ஆயிடுவேன். இன்னும் டூ மினிட்ஸ் டைம். அதுக்குள்ள வரலைன்னா நானே சேஞ்ச் பண்ணி விட வேண்டியிருக்கும்” கடுப்பாகினாள் அவள்.
“ஐயோ அப்படிலாம் அவசர முடிவு எடுத்து ஒரு கன்னிப் பையனுடைய சாபத்துக்கு ஆளாகிடாதம்மா” டீசர்டை அணிந்து கொண்டவன் “ஓகே நவி. இப்போ திரும்பு” என்று சொல்ல,
“ஒரு டி-ஷர்ட் போட எவ்வளவு அலப்பறை? உங்களை கட்டிக்கிட்டு எவள் பாடுபடப் போறாளோ” என ஒரு ப்ளோவில் உளறி விட்ட வைஷு விஷ்வாவின் சிரிப்பில் அது தான் தானே என்பதை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
அவளது செயலில் தன்னிலை மறந்து போய் நின்றான் ஆணவன்.
“வாங்க கேண்டீன் போலாம்” என்றவள் முன்னே நடக்க, அவளோடு இணைந்து நடந்து சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றான்.
“என்ன ஆர்டர் பண்ணட்டும் நவி?” என்று கேட்பவனை ஏறிட்டு, “ஹலோ சார் ஆர்டர் பண்ண வேண்டியது நான் இல்லை நீங்க தான். நேத்தேல இருந்து எதுவுமே சாப்பிடல. அதனால தான் கூட்டிட்டு வந்தேன்” என கூறியவள் நூடுல்ஸ் வாங்கி வந்தாள்.
சாப்பிடாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்த விஷ்வாவிடம் “எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு தீவிரமா யோசிக்குறீங்க..?” என்று வைஷ்ணவி கேட்க,
சிந்தை கலைந்து “மித்து சாப்பிட்டானானு யோசிக்குறேன். அவனும் கூட நேத்துல இருந்து வெறும் வயித்தோட இருக்கான்” என பதிலளித்தான்.
“அண்ணாவுக்கு சூப் செஞ்சு கொண்டு வந்திருக்கோம். அண்ணி கொடுத்திருப்பா. நீங்க சாப்பிடுங்க” என்றவளுக்கு அப்போதும் கூட மித்ரனின் மேலான அவனது அன்பை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
வைஷ்ணவியின் உதட்டில் காயம் இருப்பதை அப்பொழுது தான் கண்ணுற்றவன் “நவிமா! என்னாச்சு?” என அவள் முகம் பார்த்து பதறித் துடிக்க,
“பெருசா ஒன்னும் இல்லங்க. என்ன கடத்திட்டு போனாங்கள்ள. அக்ஷுவ கால் பண்ணி வர சொல்ல சொன்னான். நான் முடியாதுன்னு மறுக்கவும் அந்த பொறுக்கி அடிச்சிட்டான்”
“சாரிடி..! எங்களால நீ அடிப்பட்டு இருக்க. உனக்கு எவ்வளவு கஷ்டம்” மனம் வருந்தினான் விஷ்வா.
“விஷு டோன்ட் வொரி! எங்கள உங்களனு பிரிச்சு பேசுறீங்களா. அப்போ நான் உங்க குடும்பத்துல ஒருத்தி இல்லையா?” என ஒரு மாதிரியாகக் கேட்டாள்.
“ஹே எதுக்கு இப்படி பேசுற? நான் அந்த அர்த்தத்துல சொல்லல. நீ எங்க குடும்பத்துல ஒருத்தி டா. அக்ஷு எப்படியோ அதே மாதிரி நீயும் எங்க வீட்டு ராஜகுமாரி” என்று அவள் கையைப் பற்றி கொண்ட விஷ்வா, ‘என் மனசுல நீ மகாராணி நவிமா! கூடிய சீக்கிரமே உன் கிட்ட என் காதலை சொல்லுவேன். உனக்கும் என் மேல காதல் இருக்குமா? இல்ல அன்பு தானா? என்ன இருந்தாலும் பரவாயில்லை உனக்கும் இந்த விஷ்வா மேல காதல் வரும்னு நம்புறேன். உண்மையாவே நீ திருடி தான். என் இதயத் திருடி. அதே மாதிரி உன் இதயத்தை எனக்காக தருவியா நீ?’ என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
உள்ளத்தில் காதலைப் பூட்டி வைத்து அவளுக்கே தெரியாமல் அவளை சைட் அடித்து ரசிக்கும் இந்த ஒரு தலைக் காதலும் கூட மிக்க சுகமானது என்பதை உணர்ந்தான் வேங்கை.
காலேஜில் ரோஜா பூவை நீட்டி ஐ லவ் யூ சொல்லும் காதல் மாதுகள்! அவனது பைக்கில் சாக்லேட் வைத்து விட்டு மறைந்து நிற்கும் பசுங்கிளிகள்! எனக்கு நீ வேணும் விஷ்வா! ‘ஐ ஆம் மேட்லி லவ் வித் யூ’ என்று சொல்லும் காதல் பைத்தியங்கள் என்று பற்பல பெண்கள் அவனது வாழ்க்கை டயரில் வந்து போயினர்.
அவை எதுவும் அவனுள் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. ஆனால் கண்டவுடன் அவனுடன் மோதி, மோதலும் இறுதியில் காதலாகிக் கரை சேர்ந்தாள் வைஷ்ணவிப் பெண்ணவள்.
காதலைக் கூறி காதலியின் கரம் பிடித்து கடலோரம் நடக்க ஆசைப்பட்ட காதலன் அறியவில்லை, ஒரு சில தடங்கலும் அவனது காதல் பாதையில் தடுக்க வைக்கப் போகின்றன என்று.
…………………
ரோஹன் வேலை விடயமாக வெளியில் செல்ல, பக்கத்து வீட்டு மாலதியுடன் மார்க்கெட்டிற்கு வந்திருந்தாள் பூர்ணி.
“பூர்ணி! நான் பில் பே பண்ணிட்டு வரேன் நீ இப்படி ஓரமா நில்லு” என கூறிவிட்டு உள்ளே புகுந்தாள் மாலதி.
அங்குமிங்கும் விழிகளை சுழல விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். தூரத்தில் துர்காவும் ரோஹனின் தாய் காமாட்சியும் நிற்பதைக் கண்டவளோ சட்டென திரும்பிக் கொள்ள, அதற்குள் அவளைக் கண்டு விட்டாள் துர்கா.
“அண்ணி” என்றவாறு ஓடி வர, “துர்கா! ஓடாத. மெதுவா போ” என குரலை உயர்த்திக் கொண்டு அவள் பின்னே வேகமாக நடந்தார் காமாட்சி.
“அண்ணி! எப்படி இருக்கீங்க அண்ணி?” துர்கா பூர்ணியின் கையைப் பிடிக்க, காமாட்சி அவள் கையைப் பட்டெனத் தட்டி விட்டாள்.
பூர்ணியோ அமைதியாக நிற்க, “யாருடி அண்ணி? இந்த கூறு கெட்டவ கூட பேச ஓடி வரனுமா? நம்ம முன்னால நிக்க கூட தகுதி இல்லாத பாவி” என கடுமையாக சொன்னார் காமாட்சி.
“ஹலோ மைன்ட் யூவர் வர்ட்ஸ். பப்ளிக்ல வந்து இப்படித்தான் ஒரு பொண்ண தரக்குறைவா பேசுவீங்களா.? கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல..?” அனல் தெறிக்கப் பார்த்தாள் பூர்ணி.
“ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு இன்னொருத்தன மனசுல வச்சுட்டு இருந்த நீ எல்லாம் இப்படி தொண்டையை கிழிக்கக் கூடாது” நக்கல் பார்வையை வீசினார் மாமியார்.
“அம்மா என்ன பேச்சு பேசுற? வாயை வச்சுட்டு இருக்க மாட்டியா. அண்ணாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்” பதறினாள் துர்கா.
மகளை முறைத்து விட்டு “அவன் கிடக்கிறான். இருந்தாலும் பாவம் என் பையன். என் கூட எவ்வளவு பாசமா இருந்தான். அவனை வசியம் பண்ணி என்னை விட்டு பிரிச்சு வேற வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டேல்ல. உனக்கு மனசாட்சியே இல்லையா..?” காமாட்சி ருத்ரதாணாடவம் ஆடினார்.
“எப்படிமா இருக்கும்? எப்படி இருக்கும்?” என கேட்டுக் கொண்டே வந்தாள், ரோஹனின் மூத்த தங்கை வனிதா. நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவள் இவள். ஆரம்பத்தில் இருந்தே பூர்ணியைக் கண்டாள் ஆகாது இவளுக்கு.
“வாம்மா வனி! பண்ணுற தப்பெல்லாம் பண்ணிட்டு எனக்கே சவுண்டு விடுகிறாள். இங்கிலீசுல நாலு வார்த்தைய பேசினா நான் பயந்துடுவேன்னு நினைச்சிட்டாள் போல” மகளிடம் முறையிட்டார் காமாட்சி.
பூர்ணிக்கு கடுப்பாகியது. மாலதி வரும் வரையில் இழுத்துப் பிடித்திருந்த பொறுமை காற்றில் பறக்க, “என் பொறுமையை ரொம்ப சோதிக்க வேண்டாம். நான் என் பாட்டில் தானே நிற்கிறேன். எதுக்கு கலாட்டா பண்ணுறீங்க.? எனக்கும் வாய் இருக்கு. கத்தினா முழு மார்க்கெட்டும் திரும்பி பார்க்கும். அப்புறம் உங்களுக்கு தான் அசிங்கமாயிடும் சொல்லிட்டேன்” அடிக் குரலில் சீறினாள், பெண் புலியாக.
“யாருக்கு அசிங்கம்? நீ தான் டி பொல்லாத அசிங்கம் புடிச்சவ. எங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிட்டு மித்து பையன் கூட கூத்தடிச்சவ” என்று வனிதா வன்மத்துடன் சொன்னாள்.
அந்த வார்த்தையில் கோபம் தலைக்கேற, அவள் கன்னத்தில் பளாரென ஒன்று விட்டாள் பூர்ணி.
“என்ன பத்தி என்ன வேணா பேசு. ஆனா மித்துவ ஏதாவது பேசுனா கொன்னுடுவேன். உனக்கென்னடி தெரியும் அவன பத்தி? எனக்கு அப்பா மாதிரி அவன். எனக்காக அவனோட வாழ்க்கையை தியாகம் பண்ண போனவன். இனி ஒரு தடவை அவனுக்கு ஏதாச்சும் சொன்ன மரியாதை கெட்றும்” என விரல் நீட்டி எச்சரித்தாள்.
“என்னையே அடிச்சுட்டல்ல. நீ என்னம்மா சும்மா இருக்கே?” எரிச்சலுடன் வனிதா காமாட்சியைப் பார்க்க,
“இருடி உன்ன ரோஹன் கிட்ட சொல்லிக் கொடுக்கிறேன்” என முந்தானையை உதறினார் காமாட்சி.
“உனக்கும் இந்த அடி கிடைக்காமல் போச்சேனு சந்தோஷப்பட்டு வா. அண்ணி அடிச்சா தாங்க மாட்ட! இன்னிக்கு நைட் தூங்க மாட்டே! கன்னம் எல்லாம் வீங்கி போய் சாப்பிட மாட்ட” பாட்டாகப் பாடினாள் துர்கா.
காமாட்சியும் வனிதாவும் கடுப்பின் உச்சத்திற்கே சென்று துர்காவை முறைத்துக் கொண்டே சென்று விட்டனர்.
பூர்ணி துர்காவை நோக்க, “நீங்க எதுக்கு அப்படி பாக்குறீங்கனு புரியுது. அன்னைக்கு நானும் கூட மனசாட்சி இல்லாம உங்கள வார்த்தையால நோகடிச்சிட்டேன். அண்ணாவை நீங்க ஏமாத்திட்டீங்கன்னு அம்மா கதறி அழுறதைப் பார்த்து ஒரு நிமிஷம் எதுவுமே புரியல. அவங்க அழுவதை பார்த்து அது உண்மைன்னு நினைச்சிட்டேன். இது தெரிஞ்சா அண்ணா எவ்வளவு பாடு படும்னு தான் உங்களை திட்டிட்டேன். அப்புறம் யோசிச்சு பார்த்ததும் எனக்கு என் மேலேயே அருவருப்பா இருந்துச்சு அண்ணி. உங்க மனசு எவ்வளவு தவிச்சி இருக்கும்? நான் பண்ணுன தப்பு மன்னிக்க முடியாதது. இருந்தாலும் ஒரு சுயநலவாதியா கேட்கிறேன். முடிஞ்சா என்ன மன்னிச்சிடுங்க” என்று கலங்கிய குரலில் கூறிவிட்டு நகர்ந்தாள் துர்கா.
வீட்டுக்கு வந்த பூர்ணிக்கு மனம் ஆறவில்லை. தனது அறையில் விழி மூடி இருந்தவள் ரோஹனின் வருகையை அறிந்தும் சும்மா இருந்தாள்.
“கள்ளி! தூங்குற மாதிரி நடிக்காத” என அவள் காதருகே கிசுகிசுத்தான் ரோஹன்.
பட்டென எழுந்து அமர்நத்வள் “நிம்மதியாக இருக்க விட மாட்டியா என்ன? உங்க பேச்சுக்களை கேட்டுட்டு இருக்கிறதுக்கு பேசாம உன் கையாலே கொன்னு போட்று” கத்தினாள் அவள்.
அவளது ஆக்ரோஷத்தில் அதிர்ந்து “பூ என்ன ஆச்சுடி? என்ன நடந்தது?” என்று கேட்டான் ரோஹி.
“எனக்கு அதெல்லாம் என் வாயால சொல்ல முடியல. எதுக்கு டா அன்னைக்கு உங்க அம்மா என்ன சந்தேகப்பட்டு அந்த பேச்சு பேசும் போது கொழுக்கட்டையை முழுங்கினவன் கணக்கா இருந்த? என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவங்களுக்கு நல்லா படுற மாதிரி பதிலடி கொடுத்திருப்பேன். ஆனா நீ அதை பண்ணல. அதனால தான் ஒவ்வொருத்தர் கிட்டவும் கெட்டவ பட்டம் வாங்க வேண்டியிருக்கு” தலையில் கை வைத்துப் பேசினாள் அவள்.
“யார் என்ன சொன்னா உனக்கு? இப்போ சொல்லப் போறியா இல்லையா?” பதிலுக்குக் கத்தினான் ரோஹன்.
“சொல்ல மாட்டேன் போடா. எல்லாம் உன்னால தான். போ எனக்கு நீ வேண்டாம்” என பிதற்றியவளின் நிலையைப் பார்க்க முடியாமல் அவளைத் தன் மடியில் படுக்க வைத்தான் அவன்.
“எனக்கு நீ வேணான்னு சொன்னேன்ல. கிட்ட வராத” திமிறினாள்.
“பூ! நான் தப்பு பண்ணி இருந்தா எவ்ளோ வேணா அடி. ஆனா என்னை விட்டு தள்ளிப்போக மட்டும் நினைக்காத. கிட்ட இருந்து என்ன தண்டனை வேணாலும் கொடு” அவள் தலையை வருடி விட்டான் ரோஹன்.
“இப்போ இருக்குற மைன்ட் செட்டுல ஏதும் தோணல. அப்புறமா யோசிச்சு நல்ல பனிஷ்மென்ட்டா தரேன்” என முறைத்தாள்.
“அடிப்பாவி நான் சும்மா சொன்னேன். நீ நிஜமாவே பனிஷ்மென்ட் தந்துருவ போலயே” என்றவன் “யாரோ உன்னை தப்பா பேசி இருக்காங்கன்னு புரியுது. அவங்க யாருன்னு தெரிஞ்சா நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு தான் வருவேன். உன்னை இப்படி பார்க்க முடியல தங்கம். ப்ளீஸ் கொஞ்சம் தூங்கு டா” அன்போழுகத் தான் கூறினான்.
அவனது அன்பில் தோற்று உடைந்து போய் “அவங்க எல்லாம் ஏன் இப்படிலாம் பேசுறாங்க? என்னால தாங்க முடியல டா. அவங்களும் பொண்ணுங்க தானே இன்னொரு பொண்ணோட மனசு புரியாதா?” என புலம்பியவாறு இருந்தவள் அப்படியே தூக்கிப் போக, அவள் நுதலில் மென்மையாக முத்தமிட்டு “சாரி பூ! உன்னை இனிமேல் கஷ்டப்பட விட மாட்டேன்” என அவள் கூந்தலைத் தடவி விட்டான் கணவன்.
நட்பு தொடரும்………!!
விஷ்வ மித்ரன்