28. காயமின்றி வாழும் காதல்

4.9
(10)

காயமின்றி வாழும் காதல் – 28

வீட்டினுள் தனியே நுழைந்த ரவியிடம், “எங்க டா வள்ளி?” என்றார் மேகலா.

அவளை அவங்க அப்பாவோட அனுப்பிட்டேன் என்று சொல்லி விட்டு நிற்காமல் அவன் அறைக்கு சென்றான் ரவி.

அவன் பின்னேயே செல்ல போன மேகலாவை தடுத்த மூர்த்தி, “அவனுக்கு கொஞ்சம் தனிமை கொடு மேகலா. அவன் பொண்டாட்டி செய்றது பத்தி அவனுக்கு எதுவுமே தெரியலைனா எப்படி இருக்கும்?” சரி ஆய்டுவான் என்றார்.

பின் அவரும் மேகலாவும் குறிஞ்சியை பார்க்க எதிர்வீட்டிற்கு சென்றனர். மூர்த்தி வந்ததும், பதறி,

“நானே வந்திருப்பேன் மாமா உங்களை பார்க்க, அத்தான்….” என்று வார்த்தையை முடிக்க முடியாமல் அழுதாள் குறிஞ்சி.

“இன்னைக்கு போலீஸ் உங்க வைப் இந்த ஒரு வாரமா புதுசா யாரெல்லாம் பார்த்தாங்க? எங்கெல்லாம் போனாங்கனு? கேட்டப்போ அவனுக்கு எதுவுமே தெரியலை மா! அவர் அவனை ரொம்ப கேவலமா பார்த்தார்! அந்த கோபமா இருக்கும்! சரி ஆய்டுவான். உனக்காக வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துடுவேன்னு சொன்ன பையன் மேல் உனக்கு இன்னும் என்ன கோபம்? எங்க கிட்ட சொல்லு! நாங்க எதுக்கு இருக்கோம்! உங்க சந்தோஷமான வாழ்க்கைக்கு நீங்களே இப்படி தடையா இருக்கீங்க!” என்றார் மூர்த்தி. அவருக்கு மிகவும் வருத்தமாகி விட்டது குறிஞ்சியின் நடவடிக்கை. கணவனிடம் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா?

“என்ன? இவங்களுக்கு உள்ள என்ன பிரச்சனை?” மற்ற மூவரும் பதறினார்கள். அவர்களுக்கு இது வரை தெரியாதே எந்த விஷயமும்.

“அப்போ நீ சென்னையில் இருந்து மாப்பிள்ளையோட பிரச்சனை பண்ணிட்டு தான் வந்தியா?” என்று கேட்டு பட்டு பட்டு என்று அவள் முதுகில் ஓங்கி ஓங்கி அடித்து விட்டார் கோகிலா.

ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவள் ஒரேடியாக அழ ஆரம்பித்தாள். எதுவுமே சொல்லாத மூர்த்தியே அவளை குறை சொன்னதும் அவளுக்கு தன் தவறு புரிந்தது. அறிவழகனும் கோகிலாவும் வேறு,

“தெரியாம உங்க வீட்டில் கட்டி கொடுத்து உங்களுக்கு இன்னும் தொல்லை தந்துட்டோம். இவளால் தான் வேற உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சு” என்று சொல்ல இன்னும் உடைந்து போனாள் குறிஞ்சி.

“அறிவு என்ன பேசுறே நீ? என் மருமக பா அவ! எங்க வீட்டு சந்தோஷம் எங்க மருமக! உனக்கு புரியாது விடு. இனி இப்படி ஒரு வார்த்தை சொல்லாதே! குடும்பம்னா பிரச்சனை வர தான் செய்யும்.” என்று அவரை கடிந்தார் மூர்த்தி.

“நீ வா நம்ம வீட்டுக்கு போவோம்! என் மருமகளை என் கண்ணு முன்னாடியே அடிக்கிறா இந்த கிறுக்கி” என்று குறிஞ்சி கையை பிடித்து இழுத்து சென்றார் மேகலா. தயக்கமாக இருந்தாலும், அல்லாடும் தன் மனதிற்கு ரவியின் அருகாமை வேண்டும் என்று தவிப்பாக இருக்க, எந்த மறுப்பும் சொல்லாமல் அவருடன் கிளம்பி விட்டாள்.

“எல்லாம் சரியா போகும்” என்று சொல்லி விட்டு மூர்த்தியும் கிளம்பினார்.

அவர்கள் வீட்டிற்கு வந்தவளுக்கு அவர்கள் அறைக்கு செல்ல மிகவும் பயமாக இருந்தது. இருந்தாலும் அதற்கு தானே வந்தாள். மெதுவாக மாடி ஏறியவள், அறை கதவை தள்ள, அது திறந்து கொண்டது. பார்த்தால் கட்டிலில் அமர்ந்து இருந்தான் ரவி. அவன் முகம் மிகுந்த வேதனையை காட்டியது. இவளை கண்டதும்,

“இங்க என்ன பண்றே நீ?” என்றான்.

“நீங்க எதுவுமே பேசாம வந்துட்டீங்க! எனக்கு கஷ்டமா இருந்துச்சு!” என்றாள்

“உனக்கு டயர்ட்டா இருக்கும்! இன்னைக்கு எதுவும் பேச வேண்டாம்னு தான் நான் உன்னை அங்கே இருக்க சொன்னேன்! எதையுமே யோசிக்க மாட்டியா? உனக்காக தான் சொன்னேன்! இவன் என்ன சொல்றது? நம்ம என்ன கேட்கிறதுனு வந்து இருக்கே?”

“எப்படியும் தூக்கம் வராது. என் மனசெல்லாம் பாரமா இருக்கு!” என்றவள் மெதுவாக சென்று அவன் அருகில் அமர போனாள். அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன்,

“இன்னைக்கு நான் எதுவும் சொல்லலைங்கிறதினால உன் பக்கத்தில் வர்றதுக்கு படுக்கிறதுக்கு எனக்கு தகுதி வந்துருச்சா? என்றான் சுள்ளென்று.

உட்காராமல் மீண்டும் நின்று விட்டாள் குறிஞ்சி.

“என்கிட்ட வெளியில் மட்டும் நல்லா பேசின நீ, ரூமுக்குள்ள ஒதுங்கி போனதுக்கு காரணம், நான் உன் உடம்புக்காக உன்கிட்ட வருவேன் அப்படிங்கிற என்னை பத்தின கேவலமான எண்ணம் தானே?” என்றான் வருத்தமாக.

இத்தனை நாள் அவள் தானே அவனை ஒதுக்கி, ஓதுங்கி இருந்தாள். அவனாக வந்தால் மறுத்து இருக்க மாட்டாள் என்றாலும் அவள் செய்ததற்கு அர்த்தம் அது தானே?

அவனின் வலி வார்த்தையில் புரிய, பிரச்சனை என்பது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான். அவன் அவளை திட்டியது எல்லாம் தவறு தான், ஆனால் அதை உணர்ந்து அவன் வரும் போது, நான் உன்னை நம்ப மாட்டேன் என்று இவள் சொல்லியதும் தவறு தானே! அவனை ஏற்று கொண்டு இருக்க வேண்டும் அல்லவா? இப்போது இவள் பக்கம் தராசு தாழ்ந்து கொண்டே சென்றது. பதில் சொல்ல முடியாமல்,

“மன்னிச்சுடுங்க அத்தான்!” என்றாள் முகம் மொத்தம் அழுகையில் துடிக்க.

அவன் பதில் பேசாமல் படுக்க, “ப்ளீஸ் அத்தான், ஏதாவது பேசுங்க. எனக்கு மனசே சரியில்லை…. என்னை நல்லா திட்டுங்க” என்றாள்.

“இந்த நாலு மாசமா எனக்கும் தான் மனசு சரியில்லை. எல்லாமே புதுசு. என் கஷ்டம், தப்பு, சரியா பண்ணா வர்ற சந்தோஷம்னு எதையும் ஷேர் பண்ண ஆளில்லாமல் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியும் தானே உனக்கு! தெரியாது மட்டும் சொல்லாதே! அந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் எல்லாம் உன்கிட்ட மட்டும் தானே சொல்ல முடியும்? நான் அப்படி நினைக்க, நீ என்னை சுத்தமா ஒதுக்கி வைச்சு இருக்கே! நான் உனக்கு தேவையில்லை, ஒரு யூஸ்லெஸ் புருஷன்னு பீல் பண்ண வைச்சுட்டே குறிஞ்சி என்னை! எப்போதும் நான் தானே உன்னை தேடுறேன், உனக்கு எப்போதும் எதுக்கும் யாரும் தேவையில்லை!!”

அவன் பேச பேச, “இல்லை இல்லை அத்தான், ஏதோ ஒரு கோபம்! நீங்க வேற பொண்ணை லவ் பண்ணி, முத்தம் கொடுத்தது எல்லாம் என் மனசில பெரிய அடி. உங்க மேல் அவ்ளோ அன்பு இருந்துச்சு எனக்கு. அதை எல்லாம் மனசில வைச்சுக்கிட்டு, நீங்க வேண்டாம் வேண்டாம்னு எனக்கே சொல்லி என்னை தேத்திக்கிட்டதால், ஒரு ஏமாற்றம் எப்போதும் இருக்கும். நம்ம கல்யாணமும் நீங்க வேற வழி இல்லாம பண்ணிக்கிட்ட மாதிரி தோண, நான், எனக்கு என் காதலுக்கு இந்த ஜென்மத்தில் அங்கீகாரம் கிடைக்காதுனு வருத்தத்தில் இருந்தேன். நீங்க எனக்காக வந்ததை எல்லாம் உணர முடியாத அளவு இந்த உணர்வுகள் என்னை கட்டி போட்டு இருந்துச்சு. அந்த பாதிப்பில் தான் நான் சரியா நடந்துக்கலை அத்தான். கல் மனசா இருந்துட்டேன்…. ஸாரி ஸாரி அத்தான்” அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து அழுதாள் குறிஞ்சி.

அதற்கு மேல் அவள் அழுவதை தாங்க இயலாமல் அவளை எழுப்பி, இறுக்கி அணைத்து கொண்டான் ரவி. சற்று நேரம் அப்படியே இருந்தவன், அவளை படுக்க சொல்லி, அவளிடம் இருந்து விலகி படுத்து கொண்டான். அவன் அந்த மெத்தையில் படுத்ததே போதும் என்று கண் உறங்கினாள் குறிஞ்சி. ரவி அருகில் இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரிய நிம்மதி கொடுக்க, ஆழ்ந்து உறங்கினாள் குறிஞ்சி.

அவளிடம் இன்று எதுவும் பேசக் கூடாது என்று தான் அவளை அங்கே இருக்க சொன்னான் ரவி. அந்த அளவிற்கு அவன் மனம் காயப்பட்டு கிடந்தது. அவளுக்கு என்ன ஆனது என்று தெரியாமலும், தெரிந்த பின்னர் அவள் நல்லபடியாக திரும்ப வர வேண்டுமே என்றும் மிகவும் அலமலந்து போய் இருந்தான் ரவி. அவனுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அந்த மூத்த காவல் துறை ஆய்வாளர் ரவிக்கு பல அறிவுரை வழங்கி இருந்தார். அனைத்தும் சேர்ந்தும் அவன் ஒரு வழி ஆகி இருந்தான்.

இவர்கள் உறவு ஏன் எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது? எப்படி இதை சரி செய்வது? இதற்கு மேல் எப்படி இறங்கி செல்வது என்று குழம்பி கொண்டு இருந்தவன், அவள் வந்ததும் மனதில் இருப்பதை கொட்டி விட்டான். அவளும் வருத்தப்பட இப்போது இவனுக்கு குற்றஉணர்வாகி விட்டது. பாவம், சிறு வயதில் இருந்து நான் என்ன திட்டினாலும் என்னுடன் இருக்க தானே விரும்புவாள்? இப்போதும் அறையில் என்னுடன் இருக்க தானே வந்தாள்? என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு உறக்கத்தை தழுவினான் ரவி. உஷராக தள்ளி படுத்து கொண்டான்.

மறுநாள் காலையிலே வந்த ஷ்யாமளா,

“உனக்குனு மட்டும் எங்க இருந்து தான் பிரச்சனை எல்லாம் தேடி வருதோ தெரியலை!” என்று கிண்டல் செய்தாள். அதிகாலையிலேயே எழுந்து இறுக்கமாக வேலை பார்த்து கொண்டு இருந்த குறிஞ்சிக்கு ஷ்யாமளா வந்ததும் தான் முகத்தில் சிரிப்பே வந்தது.

அறையை விட்டு வெளியே வரும் போதே, கடைக்கு கிளம்பி தயாராக தான் வந்தான் ரவி. அக்காவுடன் புன்னகை முகமாக வேலை பார்த்த பொண்டாட்டியை கண்டவனுக்கு நிம்மதி ஆக இருந்தது.

ரவிக்கு காலை உணவை பரிமாறி கொண்டு இருந்தாள் குறிஞ்சி.

அடுப்படியில் இருந்து “அப்படியா?” என்று கேட்டு கொண்டே வந்தாள் ஷ்யாமளா.

ரவியும் குறிஞ்சியும் கேள்வியாய் அவளை பார்க்க,

“வாழ்க்கையிலே கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா கிட்ட முதல் அடி வாங்கின பெருமை உனக்கு தான் கிடைக்கும்!” சிரித்து கொண்டே குறிஞ்சியிடம் சொன்னாள் ஷ்யாமளா.

“உங்களுக்கு அதில இவ்ளோ சந்தோஷமா மதினி? போங்க மதினி” என்று முகத்தை சுருக்கினாலும் சிரித்தாள் குறிஞ்சி.

“அடிச்சாங்களா அத்தை? உன்னை?” அதிர்ச்சியாக கேட்டான் ரவி.

“சிரிக்கிறா பாரு உங்க அக்கா. எனக்கு எவ்ளோ கஷ்டமா போச்சு தெரியுமா? அவங்க அப்பாவும் நல்லா திட்டி, உங்க அப்பா கிட்ட வேற நம்மளை கஷ்டப்படுத்திட்டோம்னு எல்லாம் சொன்னார்” என்று வருத்தப்பட்டார் மேகலா.

அவன் அம்மா சொல்ல, குறிஞ்சியை பார்த்தான் ரவி. தலை குனிந்து நின்றிருந்தாள் அவள். சாப்பிட்டு முடித்தவன் அவளை அழைத்து கொண்டு அவள் வீட்டிற்கு சென்றான். வேற பேச்சு எதுவும் பேசாமல்,

“அம்மா அப்பா கூட இருந்தா என் பொண்டாட்டிக்கு ஆறுதலா இருக்கும்னு தான் நேத்து இங்க விட்டுட்டு போனேன்! நீங்க அவளை அடிச்சு, அழ வைச்சு இருக்கீங்க. எப்படி அப்படி பண்ணலாம் நீங்க? நான் இதை எதிர்பார்க்கலை உங்க ரெண்டு பேர்கிட்டயும்! நான் உங்ககிட்ட வந்து சொன்னனேனா மாமா? எனக்கு கஷ்டமா இருக்குனு? நீங்க எப்படி அப்படி சொல்லலாம்?” என்றான் கோபமாக.

நேற்று அவன் எதுவுமே பேசாததின் விளைவு தான் அவர்கள் அப்படி வருத்தப்பட்டு இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு.

அவன் அப்படி கேட்டதும் அவர்கள் இருவருக்கும் புன்னகை வந்தது.

“தப்பு தான், இனி உங்க பொண்டாட்டியை நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்!” சிரித்தார் அறிவழகன்.

கோகிலா முன்னே வந்து மகளை கட்டியணைக்க,

“பாருங்க அத்தான், உங்க கூட வந்தவுடனேயே மட்டும் கட்டி பிடிக்கிறாங்க!” சலுகையாக அவனிடம் புகார் சொன்னாள் குறிஞ்சி. அவர்கள் இருவரும் நன்றாக தான் இருக்கிறார்கள் என்று காட்டுவது போல்.

“நீ என்கிட்ட வா! அடிச்சிட்டு என்ன கட்டிபிடிக்கிறது? நான் உன்னை கட்டிபிடிச்சுகிறேன்!” புரிந்து கொண்டு அவளுடன் இணைந்து பேசினான் ரவி. வம்பிற்கு கோகிலாவிடம் இருந்து அவளை இழுக்க, அங்கே சிரிப்பு பொங்கியது.

*********

இரு குடும்பமும் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நிம்மதி ஆனார்கள். வழக்கம் போல் நாட்கள் நகர ஆரம்பிக்க, குறிஞ்சி மட்டும் குழப்பத்தில் சுற்றினாள். ரவியிடம் கேட்பதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது.

ரவி அவளுடன் நன்றாக தான் பழகினான். இருவரும் இப்போது அவர்களின் அன்றைய நாளை பற்றி பேசி கொள்கிறாள். சில சமயம் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கிண்டல் கேலி கூட செய்தார்கள். மேகலா, மூர்த்தி, குறிஞ்சி எல்லாரும் ஒரு பக்கம் இருந்து கொண்டு ரவியை வம்பு இழுப்பார்கள். அவர்கள் மூவரையும் அவனே சமாளித்து ஜெயிப்பான் ரவி.

இவ்வளவும் இயல்பாக இருந்தும் கணவன் மனைவிக்குள் இயல்பாக இருக்கும் நெருக்கம் மட்டும் இருவருக்கும் இடையில் இல்லை. ரவி நன்றாகவே அந்த விஷயத்தில் ஒதுக்கம் காட்டினான். குறிஞ்சிக்கு வருத்தமாக இருந்தது. முதலில் தான் ஒதுக்கியதால் இப்போது அவன் இப்படி இருக்கிறானா? நானே கேட்க வேண்டுமா? என்றெல்லாம் எண்ணி குழப்பி கொண்டாள். அவனின் அணைப்பு வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும் அவ்வளவு தூரம் அவனை வருந்த செய்து விட்டு எந்த முகத்தோடு சென்று இப்போது அவனிடம் கேட்பது என்று தயங்கினாள்.

ஒரு வாரம் சென்றது,

ரவியின் துணிகளை துவைக்க எடுத்து செல்லும் போது, வழக்கமாக பார்ப்பது போல் அவன் சட்டை, பேன்ட் அனைத்தையும் செக் செய்தாள் குறிஞ்சி. அவன் பேன்ட் பேக்கெட்டில் ஏதோ இருக்க, அதை வெளியே எடுத்தாள். அதில் இருந்தது ஒரு காண்டம். அதை கண்டவன் முகத்தை சுளித்தவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. பின் இல்லை, நிச்சயம் தன்னை வம்பு செய்யவே ஏதோ செய்கிறான் என்று மனதை தேற்றி கொண்டாள்.

சட்டையை பார்க்கும் போது பட்டன் அருகே சின்ன முடிகள் இருந்தது. அதை கண்டவுடன் என்னடா இது? ஒன்றுமில்லை என்று நினைத்தாலும் அந்த காண்டம் பாக்கெட்டை விட முடி அவளை கொஞ்சம் சுணங்க வைத்தது. ஆனாலும் எதையும் அவனிடம் கேட்கவில்லை அவள்.

இரண்டு நாள் கழித்து, அனைவரையும் கோயிலுக்கு அழைத்து சென்றான் ரவி. காரில் ஏறிய மேகலா, அவர் காலடியில் கிடந்த டவலை எடுத்தார். பின் ரவியிடம்,

“என்னடா இது? ஒரே முடியா இருக்கு? பெண்களின் முடி போல் நீளமாக இருக்க, வள்ளி உன் துண்டா இது?” என்றார்.

“இல்லை அத்தை!”

“அதை கீழே போடுமா! துவைக்க போடுவோம். அன்னைக்கு பிரண்ட்சோட பாபநாசம் போனேன்!”

“சொல்லவே இல்லை?” என்றார் மேகலா.

“மறந்துட்டேன்!”

அவளின் நம்பிக்கை எல்லாம் ஆட்டம் காண, கண்கள் அவனை குற்றம்சாற்ற கலங்கிய விழிகளுடன் அவனை முறைத்தாள் குறிஞ்சி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!