29. சத்திரியனா? சாணக்கியனா?

4.9
(32)

அத்தியாயம் 29

 

இங்கோ வர்ஷா வெளியே வர, அவளை இன்னொரு கை இழுத்து எதிரில் இருந்த அறையில் அடைத்து இருந்தது. பிரணவ் தானே நின்று இருந்தான்.

ஒரு வருடமாக யுபிஎஸ்சி படித்து தேர்வு எழுதியவனுக்கு அவளை பார்க்க நேரமே கிடைக்க வில்லை.

“என்ன டா போண்டா?”, என்று அவள் சீறி கொண்டு கேட்க, அவன் எங்கே அவளை பேச விட்டான். அதற்குள் தானே அவளின் இதழ்களை மொத்தமாக கவ்வி இருந்தானே கள்வன்.

அவளோ திமிர, அவளின் இடையை பிடித்து நிறுத்தி இருந்தான். அவளது லெஹங்காவில் அவளது இடை பளிச்சென்று தெரிய, அது அவனுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது.

ஒரு கட்டத்தில் அவளும் அடங்கி விட்டாள்.

“இப்போ போ”, என்று அவன் சொல்லவும், அதே சமயம் உள்ளே வந்தான் விஜய். இப்போது அவளால் எதுவும் பேசவும் முடியாது.

உதடுகளை துடைத்து கொண்டு, பிரணவ்வை முறைத்து விட்டு சென்று விட்டாள் வர்ஷா.

பின்பு வர்ஷா, சான்வி இருவரும் மெஹந்தி வைத்து கொண்டனர். வர்ஷாவுக்கே தெரியாமல் அவளது கையில் பி என்று எழுத சொல்லிருந்தான் பிரணவ்.

சான்வியோ வி என்று எழுதி இருந்தாள்.

அடுத்த நாள் ரிசெப்ஷனும் நன்றாக சென்றது.

விருந்துக்கு குறைவே இல்லாமல் நடத்தி இருந்தார் வேதாந்தம்.

மறுநாள் முகுர்த்தத்திற்கு ஸ்ரீதர் மட்டுமே வந்தார், கலா வரவில்லை.

அதற்காக வாகினி அலட்டிக்கொள்ளவும் இல்லை.

விஜய் கூட கேட்டான் தான், “அம்மா ஏன் வரல?”, என்றவனிடம், அவர் எதுவும் சொல்லவில்லை.

தாமரையோ, “அப்படி என்ன தான் கோவமோ, அவங்க பெத்த பொண்ணு தானே?”, என்று வாயை திறந்து கேட்டே விட்டார்.

“விடுங்க ஆண்ட்டி”, என்று வாகினி சொல்லவும், நல்ல நேரத்தில் பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் மேல வாத்திய முழங்க மங்கள நாண் பூட்டி வாகினியை தனது சரிபாதி ஆக்கி கொண்டான் பார்த்தீவ்.

வாகினியின் கண்களில் இரு துளி கண்ணீர் உருண்டு ஓடியது.

பிரணவ், விக்ரம், விஜய், ராகவ், வர்ஷா மற்றும் சான்வி என்று பட்டாளமே, “ஊஊ ஊஊ”, என்று கத்தினார்கள்.

எப்படி பட்ட காதல் அவர்களுடையது. அவர்களின் கனவை நினைவாக்கி, இன்று திருமண பந்தத்திலும் இணைந்து விட்டனர்.

பார்த்தீவ் அவளின் நெற்றியில் குங்குமம் வைக்க, அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் நடந்து ஏறியது.

அன்றைய நாள் இரவில் பார்த்தீவ் மற்றும் வாகினியின் சாந்தி முகுர்த்தம் நடத்த ஏற்பாடுகள் நடத்த பட்டு இருந்தது.

வாகினியிடம் க்ளாசில் பால் கொடுத்து அனுப்பி வைத்து இருந்தார் விசாலாச்சி. அவள் உள்ளே வர, பார்த்தீவின் கண்கள் அவளை முழு உரிமையுடன், இன்ச் பை இன்ச்சாக அளவெடுத்தது.

அவளோ சந்தன நிற புடவையில் மிதமான ஒப்பனையில், காலையில் அவன் கட்டிய மஞ்சள் தாலியுடன் ஒரே ஒரு செயின் மற்றும் காதில் கம்பலுடன், தேவதை போல் வந்தவளை அல்லி அணைத்து அவளை ஆண்டு விட அவனின் மனம் ஏங்கியது.

குரலை செறுமியவன், “ரொம்ப அழகா இருக்க”, என்று அவளை நெருங்க, அவளோ எச்சில் விழுங்கினாள்.

அவளின் கைகளில் இருந்த கிளாஸை எடுத்து வைத்தவன், “டாக்டர் அம்மா தான் எனக்கு சொல்லி தரணும்”, என்று அவன் சொன்னதும், அவனை விழி விரித்து பார்த்து இருந்தாள்.

“என்ன டி? நீ தானே பயோ ஸ்டுடென்ட்”, என்று அவன் அவளை சீண்ட, அவளோ, “ஆமா… ஆனா இதுலலாம் பசங்க தான் ரொம்ப ஸ்மார்ட் ஆச்சே”, என்று அவளும் புருவம் உயர்த்தி பேசவும், அவனுக்கோ சிரிப்பு தான் அடக்கி கொண்டான்.

“அப்படினு சொல்ல முடியாது… ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் ஸ்மார்ட் தான்… ஆரம்பிக்கலாமா?”, என்றவனின் குரலே அவன் எவ்வளவு மோகத்தில் இருக்கிறான் என்பதை எடுத்து உரைத்தது.

அவளின் கண்கள் ஆமோதிப்பாக விழி அசைக்க, அடுத்த நொடி பார்த்தீவின் கைகளில் காண்டீபமாக வாகினியை ஏந்தி இருந்தான்.

படுக்கையில் கிடத்தியவன், அவளின் இதழை சிறை எடுத்து, அவளின் முந்தியில் கை வைக்க, அவளோ, “லைட் ஆப் பண்ணு பார்த்தீவ்”, என்றவளை பார்த்தீவ், “நோ வெ… உன்ன முழுசா பார்க்கணும்”, என்றவன் அவளை ஆளத்துவங்கினான்.

முதலில் திமிறியவள், பின்பு அவனின் அன்பிற்கு அடங்கினாள். ஆளுமையானவள் அவளும் தான் பார்த்தீவின் கைகளில் அடைக்கலமானாள்.

விடிய விடிய கொண்டாண்டி தீர்த்து விட்டான். இருவருக்குமே முதல் தாம்பத்தியம் திகட்டவே இல்லை.

அவர்கள் எழவே காலை பத்தரை மணி ஆகிவிட்டது. ஒன்றாக எழுந்தவர்கள் ஒன்றாக குளிக்கவும், நேரம் இன்னும் நீண்டது.

பன்னிரெண்டு மணிக்கு தான் வெளியே வந்தார்கள்.

“நைட் டின்னர்க்கு வருவீங்கன்னு நினைச்சேன்”, என்று விக்ரம் அவர்களை சீண்ட, “நீ உன் பர்ஸ்ட் நைட் முடிச்சிட்டு வரும் போது இருக்கு டா”, என்று பார்த்தீவ் அவனை சீண்ட, அவனோ குரலை செருமி கொண்டு, “நடக்கறது தெரிஞ்சா தானே”, என்று விளையாட்டாக சொன்னானோ வினையாக சொன்னானோ, உண்மையாகவே அவனின் முதலிரவு நடக்கப்போவது யாருக்கும் தெரியாமல் தான் இருக்க போகிறது.

அடுத்த ஒரு வாரத்திலேயே நல்ல நாளில் வாகினிக்கு தாலி பிரித்து கோர்த்து விட்டார்கள்.

விக்ரமுக்கு இன்னும் இரு வாரங்கள் அவன் இருப்பதற்கான விடுமுறை நாள் இருந்தது.

“எல்லாரும் ட்ரிப் போலாமா?”, என்று பிரணவ் கேட்க, “அவங்கள வேணா நம்ப ஹனிமூன் அனுப்பலாம்”, என்று சொன்ன விக்ரம் அப்படியே அவர்களுக்கு பாரிஸ் போக ஹனிமூன் பேக்கேஜை கையில் திணித்து இருந்தான்.

“உங்களுக்கு என்னோட மேரேஜ் கிபிட்”, என்று அவன் கொடுக்கவும், அவர்களும் வாங்கி கொண்டனர்.

இந்த இரண்டு வாரத்தில் தான் அவர்களின் வாழ்வையே மாற்றி அமைக்கும் தருணமாக இருக்கப்போவதை அனைவரும் அறியாமல் போய் விட்டனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு, வர்ஷா, வாகினி, பிரணவ், பார்த்தீவ், விக்ரம், சான்வி, விஜய், மற்றும் ராகவ் அனைவரும் மாலில் சந்தித்து இருந்தார்கள். பார்த்தீவ் தான் வர சொல்லி இருந்தான்.

அவர்களின் திருமணம் முடிந்து அவர்களை சரியாக பார்க்கவில்லை என்று அவனுக்கு தோன்றியது.

“என்ன கேப்டன் எல்லாரையும் கூப்பிட்டு இருக்கீங்க?”, என்று ராகவ் கேட்கவும், “சும்மா தான் டா”, என்று சொன்னவனின் கண்களில் மைத்திரி மற்றும் சாதனா தென்பட்டனர்.

அவர்களின் திருமணம் முடிந்து அந்த காப்பகத்திற்கு சென்ற போது அவர்களை பார்த்து தான் இருந்தான்.

“அது மைத்திரி, சாதனா தானே?’, என்று வாகினியை பார்த்து கேட்கவும், “ஆமா அவங்க தான்”, என்று அவளும் பார்த்து உறுதி படுத்த, அவர்களை அழைத்து இருந்தான் பார்த்தீவ்.

விஜய் மற்றும் ராகாவின் கண்கள் பளிச்சிட்டது.

இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறார்கள். பள்ளி செல்லும் பிள்ளைகளாக பார்த்தவர்கள் இன்று கல்லூரி செல்லும் குமரிகளாக பார்ப்பதர்கே அத்தனை அழகு.

“எப்படி இருக்கீங்க அண்ணா?”, என்று மைத்திரி சிரித்து கொண்டு கேட்கவும், “நான் நல்லா இருக்கேன் மா.. என்ன ஷாப்பிங்கா?”, என்று அவன் கேட்கவும், “இல்லைங்க அண்ணா சும்மா தான் சுத்தி பார்க்க வந்தோம்’, என்று சாதனா தான் முடித்து இருந்தாள்.

“நல்லா படிக்கணும்”, என்று வாகினி இருவரையும் பார்த்து சொல்ல, “கண்டிப்பா மேம்… உங்க கம்பெனில வேலை வாங்கணும் அது தான் என் ட்ரீம்”, என்று மைத்திரி சொல்லவும், “உனக்கு டாலேண்ட் இருந்தா விக்ரமகே உன்ன பிஏவா ஆக்கலாம்”, என்று வாகினி சொல்ல, “நான் என் புள் எபர்ட்ஸ் போடுவேன்”, என்று அவள் சொல்லவும், இங்கோ ஒருவனுக்கு வயிற்றில் புகை வரதா குறை தான்.

விக்ரமுடன் வேலை செய்வதற்கு ஆசைப்படுகிறேன் என்கிறாள், என்கிற கோவம் விஜய்க்கு வந்தது.

அவனின் பார்வை அவளை தான் ஊடுருவின! அவளை விட்டாள் பார்வையாலேயே கவர்ந்து சென்று விட்டு இருப்பான் இந்த சாணக்கியன். விக்ரமின் கண்களும் விஜயை தான் அளந்தன.

மைத்திரியோ அவளை பார்ப்பதை போல் தோன்ற அவளின் விழிகள் நிலைத்து நின்றது என்னவோ விஜயிடம் தான், என்ன பார்வை அது, அவளின் உயிர் வரை ஊடுருவி விட்டு சென்று இருக்கும்.

அவளின் தலையை திருப்பி, “நாங்க கிளம்புறோம் அண்ணா”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

“நல்ல பொண்ணுங்க”, என்று பிரணவ் சொல்லவும், “ம்ம் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?”, என்று சான்வி சொல்லவும், விஜய் மற்றும் ராகவ் குரலை செருமிக்கொண்டனர்.

இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. பார்த்தீவிற்கு தான் அழைத்து இருந்தார்கள்.

அவனோ புருவன் சுருக்கி எடுத்து பார்த்தவனின் விழிகள் விரிய, அழைப்பை துண்டித்து விட்டு, சான்வி வர்ஷா இருவரையும் பார்த்தான். விக்ரம், வாகினி மற்றும் விஜயின் கண்கள் சுருங்கின.

“யாரு?”, என்று வாகினி நேரடியாக கேட்கவும், அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், “எல்லாரும் கிளம்புங்க…ஹாஸ்பிடல் போகணும்”, என்று அவன் சொல்லவும், “யாருக்கு என்ன ஆச்சு?”, என்று பதட்டமாக கேட்டு இருந்தாள் வர்ஷா.

“வா”, என்று மட்டும் சொன்னவன் மருத்துவமனை வரும் வரை அனைவரும் எவ்வளவு கேட்டும் வாயை திறக்கவே இல்லை.

மருத்துவமனை அடைந்ததும், அங்கே கலா, ஸ்ரீதர், வேதாந்தம் மற்றும் ஜெய் ஷங்கர் என்று அனைவரும் இருப்பதை பார்த்தவர்கள் அப்படியே திரும்ப, விஸ்வநாதன் இருப்பதையும் பார்த்தார்கள். அவரின் காக்கி சீருடையில் இருந்தார்.

சான்வி மற்றும் ராகவ் ஜெய் ஷங்கரிடம் என்று, “என்ன பா ஆச்சு?”, என்று கேட்கவும், அவரோ கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு, “உங்க அம்மா நம்பள விட்டுட்டு போய்ட்டா”, என்று சொன்னதும் சான்வி தான் கதறி விட்டாள்.

“அம்மாஆ… அப்பா பொய் சொல்லாதீங்க… அம்மாக்கு ஒன்னும் இல்ல…”,என்று அவள் கதரவும், ராகவோ அவளை தாங்கி பிடிக்க, அவளால் அவளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதே சமயம், விக்ரமிற்கு தன்னவளை கையில் ஏந்த கைகள் பரபரத்தன. ஆனால் அனைவரின் முன்னாலும் அவனால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று அவனுக்கு தெரியும்.

“என்ன பா ஆச்சு?”, என்று வாகினி அழுகையை இழுத்து பிடித்து கொண்டு வேதாந்தத்திடம் கேட்க, “உங்க தாத்தா இப்போ இல்ல”, என்று சொல்லவும், வாகினி, விக்ரம், வர்ஷா, விஜய் நால்வருமே ஸ்தம்பித்து நின்று விட்டனர்.

“என்ன சொல்றிங்க?”, என்று வர்ஷா அவரிடம் போய் நிற்க, “அவரும் தாமரையும் தான் எங்கயோ ஒண்ணா போய்ட்டு வந்து இருகாங்க.. வர வழில கார் ஆக்சிடென்ட்… ஸ்பாட் அவுட்”, என்று அவரும் அழுகை வேண்டாம் என்று அழுகையை இழுத்து பிடித்து கொண்டு பேசினார்.

“தாத்தா… இல்ல இல்ல தாத்தா வேணும்.. எனக்கு தாத்தா வேணும்… அப்படி இல்லனா நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்…”, என்று பைத்தியம் போல் பிதற்ற ஆரம்பித்தவள், விக்ரமிடம் சென்று, “அண்ணா ப்ளீஸ் தாத்தாவை வர சொல்லுங்க அண்ணா… அவரு இல்லாம என்னால அந்த வீட்ல இருக்க முடியாது… இல்லனா நானும் உங்க கூடவே வந்துடறேன் அண்ணா..’, என்று அவனை அணைத்து கொண்டு அழ ஆரம்பிக்க, அவனுக்கே எப்படி அவளை தேற்றுவது என்று தெரியவில்லை.

இதே சமயம் இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த கலாவதி, வர்ஷாவிடம் வந்தவர் ஓங்கி அவளை அறைந்து இருந்தார்.

அங்கு இருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

அடுத்து அவர் விக்ரமை பார்த்து பேசிய சொற்கள் யாவும் சத்திரியனை மொத்தமாக அவனின் ஸ்வீட் ஹார்ட்டை விட்டு பிரித்து விட்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

1 thought on “29. சத்திரியனா? சாணக்கியனா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!