29. விஷ்வ மித்ரன்

5
(1)

 விஷ்வ மித்ரன் 

 

 நட்பு – 29

 

பூர்ணி அழைத்திருக்க, அவளோடு பேசியவாறு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

 

“உள்ளே வரலாமா அண்ணியாரே?” என்ற குரலில் நிமிர்ந்தவள் வாயிலில் நின்றிருந்த அக்ஷராவைக் கண்டு,

 

“ஹேய் அஷு! வா வா” என ஓடிச் சென்று உள்ளே அழைத்து வந்தாள்.

 

“உட்காரு அக்ஷு” அவளை அமருமாறு பணிக்க, “நான் உட்கார வரலை. உன் கூட சேர்ந்து வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்ண வந்தேன்” என்றாள் அக்ஷு.

 

“அது எதுக்கு அண்ணி? நானே பண்ணிருவேன்” அவளை வேலை வாங்குவது சரியல்ல என்று தோன்றியது வைஷுவிற்கு.

 

“அப்படிலாம் சொல்லக் கூடாது வைஷு! இது நம்ம வீடு. சோ நாம சேர்ந்தே பண்ணுவோம்.

 

அது மட்டுமல்ல விஷு தான் என்னைக் கூப்பிட்டு வைஷு தனியா இருக்கா. அவளுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுனு சொன்னான்”

 

“யாரு உன் அண்ணனா?” நம்பாத பார்வை பார்த்தாள் நவி.

 

“அந்த லூசுப்பயலே தான். வந்து என்னைக் கலாய்ச்சி உசுரை வாங்கிட்டு போனான் டி” தானும் சிறு சிறு வேலைகளை செய்யலானாள் அக்ஷரா.

 

“ஏன் அக்ஷு? அவர் எப்போவும் அப்படித் தானா? கடுப்பாக்கிட்டே இருக்கார்?” மெதுவாக விசாரித்தாள்.

 

“எப்போவும் இல்லை சின்ன வயசுல இருந்தே அப்படித் தான். ஸ்கூல் டீச்சர்ஸை கூட விட்டு வைக்காமல் அந்தளவுக்கு வம்பு பண்ணி மாசத்துக்கு ஒரு ஸ்கூல் மாறுவான் அப்பப்பா” தலையில் கை வைத்தாள் விஷ்வாவின் தங்கை.

 

“அப்படியா? பாவம் தான் அந்த டீச்சர்ஸ்” உச்சுக் கொட்டினாள் வைஷு.

 

“மித்து இருக்குற ஸ்கூல் போனதும் அவன் ப்ரெண்ட் ஆனான். அப்பறம் தான் சேட்டை எல்லாம் ரொம்ப குறைந்தது. ஆனாலும் முழுசா விடாம யாரையாவது வம்பிழுத்துட்டே இருக்கான். அது பிறவிக் குணம்” கடுப்புடன் கூடவே அவளிதழில் புன்னகையுடன் நெளிந்தது.

 

“ஆனா ஒன்னு வைஷு! அவன் எல்லார் கூடவும் ஓவரா வம்பு பண்ண மாட்டான். அப்படி பண்ணுனா அவனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு இருக்குனு அர்த்தம். ரொம்ப பாசக்காரன் அவன்” அண்ணனின் நினைவில் அவள் முகம் விகசித்தது.

 

‘அப்படினா ஜித்துக்கும் என்னை ரொம்ப பிடிச்சு இருக்கு. அவனுக்கும் என் மேல காதல் இருக்குமா?’ மனதினுள் தான் கேட்டுக் கொண்டாள் காரிகை.

 

கார் சத்தம் கேட்கவுமே இருவரும் எட்டிப் பார்க்க மித்து, விஷ்வா மற்றும் ஹரிஷ் வந்திறங்கினர்.

 

மித்துவின் தோளில் கை போட்டு அவனை மறு கையால் பிடித்தவாறு வந்தான் தோழன்.

 

“ஹே அம்முலு நீயா?” தன்னவளின் தரிசனத்தில் வியப்புடன் வாயைப் பிளந்தான் அவளின் அருள்.

 

“எஸ்! நானே தான். யேன் வரக் கூடாதா? வேணாம்னா சொல்லு போயிடறேன்” படபடவென பேசியவளை,

 

“யம்மா தாயே சும்மா கேட்டதுக்கு இவ்ளோ பேசிருவியா? வந்த உடனே சிலிர்க்குறியே சண்டைக் கோழி” என்று பாவமாகப் பார்த்தான் காதலன்.

 

“கொஞ்சம் நில்லுங்க” என ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வந்தவளிடம், “இது எதற்கு பாப்பா?” எனக் கேட்டான் மித்து.

 

“பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கீங்க. இனிமேல் எந்த ப்ராப்ளமும் வரக் கூடாதுனு வேண்டிக்கிட்டு இருக்கிற திருஷ்டி எல்லாம் கழியட்டும். ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க” என்றவள் நண்பர்கள் இருவருக்கும் சேர்த்தே ஆரத்தி எடுத்தாள்.

 

சோபாவில் அமர்ந்து கொண்டனர் அனைவரும். ஜூஸ் கொண்டு வந்தாள் அக்ஷரா.

 

“ஆத்தீ நான் இல்லை” விஷ்வா நெஞ்சில் கை வைத்து எழுந்தே விட,

 

“இப்போ தான் டி ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கேன். என்னைத் திரும்பவும் அடுத்த ரவுண்டுல அங்கே அனுப்ப போறியா?” என அலறிக் கொண்டு வாயைப் பொத்தினான் மித்ரன்.

 

“எதுக்கு ரெண்டு பேரும் ஓவர் சீன் போடுறீங்க?” புரியாமல் வினவினாள் வைஷ்ணவி.

 

“உங்க விளையாட்டுக்கு நான் வரலை” என ஹரிஷ் எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

“உன் ஜூஸ் நல்லா இல்லைனு கமண்ட் பண்ணதுக்கு இப்படியா என்னை பரலோகம் அனுப்ப பார்க்குறே? உனக்குப் பழி வாங்க வேற வழியே கிடைக்கலயா நவி” தன்னவளை கெஞ்சுதலுடன் நோக்கினான் விஷு.

 

“டேய் தடிமாடுங்களா! வந்த உடனே உங்க சேட்டையை ஆரம்பிச்சுட்டீங்களா? இந்த ஜூஸ் நான் போடலை. வைஷு தான் போட்டா” என்றாள் அக்ஷரா.

 

“ஓஓ! தாங்க் யூ பவுடர் டப்பா. என் காதில் தேன் ஊத்திட்டே” தங்கையின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினான் விஷ்வா.

 

“ஆமா அம்முலு. போன உசுரு இப்போ தான் திரும்பி வந்துச்சு” ஆசுவாசமாய் உதடு குவித்து பெருமூச்சு விட்டான் மித்துவும்.

 

ஒன்றும் புரியாத நிலையில் கெக்க பெக்கவென முழித்துக் கொண்டிருந்த வைஷுவைப் பார்த்து, “அது ஒன்னில்லை பாப்பா உங்க அண்ணிக்கு சமையலை விட்டு ஒரு காபி கூட போடத் தெரியாது. ஒரு நாள் டீத்தூளுக்கு பதிலா எதைப் போட்டிருந்தா தெரியுமா?” என்று கேட்டான் அண்ணன்.

 

“கோதுமை மாவைப் போட்டாங்களா? வழக்கமா நிறைய இடத்தில் இதைத் தானே போடுவாங்க” நாடியில் விரல் தட்டி யோசித்தாள் அவள்.

 

“அது தான் இல்லை. மூஞ்சுக்கு பூசும் பவுடரை போட்டா தெரியுமா? இதுல இன்னொரு விஷயம் என்னனா அவ கை பட்டதால் மேஜிக்கலா காபில ரோஜாப் பூ வாசனை வருதுனு பீத்திட்டு கொண்டு வந்து தந்தா. குடிச்சோமா விளங்கிருச்சு நல்லா” என்று மித்து விளக்கமளிக்க, சில்லறைக் காசுகள் சிதறியதைப் போல் நகைத்தாள் நவி.

 

“ஹா ஹா அக்ஷு! ரோஸ் பவுடரா? அதையெல்லாம் யாரு கிட்சனுக்கு கொண்டு போய் டப்பாவுல வெச்சது” சிரிப்பினூடே கேட்டாள் அவள்.

 

“நானே தான் டி. விஷு என்னை பவுடர் டப்பானு கலாய்க்கிறதால அவன் டாச்சர் தாங்க முடியாம கிட்சன்ல ஒரு டப்பாவில் போட்டு மறைச்சு வெச்சிருந்தேன். முதல் தடவை காபி போட்டேன்ல அதான் ஆர்வக்கோளாறில் அதை மறந்து போட்டுட்டேன்” முப்பதத்திரெண்டு பற்களும் பளிச்சிட இளித்து வைத்தாள் அக்ஷரா.

 

“எங்களை கொல்ல பார்த்துட்டு நீ இளிக்கிறியா குள்ளச்சி” அவள் தலையில் விஷு கொட்ட, “போடா நெட்டைக் கொக்கு” என அவனது முடியைப் பிடித்து இழுத்தாள் அவள்.

 

“அதனால தான் இப்படி பயந்து நடுங்கினீங்களா? என்னால நிஜமாவே சிரிப்பை அடக்க முடியல” கடினப்பட்டு சிரிப்பை இதழுக்குள் அடக்கி நிமிர்ந்த தன்னவளை அன்பு நிறையப் பார்த்தான் விஷ்வா.

 

திடீரென மித்துவின் கண்களை இரு கரங்கள் மூட அதைத் தொட்டுப் பார்த்தவனின் இதழ்கள் “அம்மா…!!” என அசைந்தன.

 

கைகளை விலக்கி தான் பெறாத மகனைப் பார்த்தார் நீலவேணி.

 

“எப்படிடா இருக்கே?”

 

“நான் நல்லா இருக்கேன்மா. இனி நீங்க வந்துட்டீங்கள்ள. இன்னும் செமயா இருப்பேன்” என்றான் அவன்.

 

“அப்போ நான் இருந்தா செமயா இருக்க மாட்டியா?” சட்டென கோபமாகக் கேட்டான் நண்பன்.

 

“நீ இல்லைனா நான் இருக்கவே மாட்டேன் டா. கொஞ்ச நேரம் பாசசிவ்ல பொங்காம இரியேன்” அவன் தோளில் அடித்தான் மித்ரன்.

 

“ஓகே பாஸ்! யூ கன்டினியூ தி லவ் ரெய்ன். இட்ஸ் மீன் பாசமழை” கை கட்டி தொடரு என்பதாய் சைகை காட்டினான் விஷ்வா.

 

நீலவேணியை அமர வைத்து அனைத்தும் மறந்தவனாய் கதை பேசினான் அவன். யூ.கேவில் இருக்கும் போது நடந்த விடயங்களைக் கூட பகிர்ந்து கொண்டான்.

 

“அம்மா! நான் உங்க மடியில் சாஞ்சுக்கவா?” சிறு ஏக்கமும் துளிர்த்தது அவன் குரலில்.

 

“இது என்ன கேள்வி கண்ணா? இப்படி கேட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்” பொய்யாக முகம் திருப்பிக் கொண்டவரின் மடியில் தலை வைத்தான் மித்து.

 

நெடு நாள் கழித்து தன் தாயானவளின் மடியில் தலை சாய்த்ததில் அவன் உள்ளம் பெருமகிழ்வில் விம்மித் தணிந்தது. தாய் மடி தரும் சுகம் எல்லையற்றது அல்லவா?

 

அவன் முகத்தில் ஜொலிக்கும் பூரிப்பில் அக்ஷு மகிழ, விஷ்வாவோ இன்னும் ஒரு படி மேலாக அகம் குளிர்ந்து போனான்.

 

“தாங்க் யூ மாம்! என் மாப்ளயோட முகத்தில் இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷத்தைப் பார்க்குறேன். எனக்கும் சந்தோஷமா இருக்கு” அளவில்லா ஆனந்தத்துடன் தாயின் அருகே அமர்ந்தான் விஷ்வா.

 

“இன்னிக்கு மட்டுமல்ல டா இனி எப்போவுமே உங்க லைஃப்ல சந்தோஷம் மட்டுமே நிலைச்சிருக்கும்” மகனைத் தோளோடு சாய்த்துக் கொண்டார் நீலவேணி.

 

……………..

மித்து அழைக்கவும் அவனோடு அறைக்குச் சென்றான் விஷு.

 

“நான் ப்ரெஷ்அப் ஆகிட்டு வரேன் டா” என்று குளியலறைக்குள் புகுந்தான் மித்ரன்.

 

அவன் செல்லவும் அவனது அறையை சுற்றி விழிகளை சுழல விட்டான் விஷ்வா. முன்பு எப்படி இருந்ததோ அவ்வாறே இருந்தது அவனறை.

 

எங்கும் விஷ்வ மித்ரர்களின் ஃபோட்டோ. அவற்றைப் பார்க்கும் போது மனம் மகிழ்ந்தது. அவற்றை எடுத்த தருணங்களையும் அதன் போது செய்த சேட்டைகளையும் நினைக்கையில் அவனது முரட்டு அதரங்கள் நெஞ்சத்தில் முகிழ்த்த சிரிப்பை தம்மில் இழுத்துப் பொருத்திக் கொண்டன.

 

“விஷு! இந்த ஃபோட்டோஸ் எடுத்த டைமை நினைச்சு பார்க்குறியா?” எனக் கேட்டவாறு வந்தான் மித்ரன்.

கடும்நீல நிற டீசர்ட் அணிந்திருந்தான் அவன்.

 

“ஆமாடா. அதெல்லாம் ரொம்ப சூப்பரான மெமரிஸ்ல? திரும்ப பெற முடியாத அழகான நிமிடங்கள் இல்லையா?” மென்னகையுடன் பேசினான் விஷ்வா.

 

“ம்ம்! இந்த ஃபோட்டோ ஞாபகம் இருக்கா நாம bபோர்ட் ரைட் போகும் போது எடுத்தது. இதை எடுத்த கிஷோரை என்ன பாடுபடுத்தின? உன் அலப்பறை தாங்காமல் இந்தப் பக்கமே வராமல் சிங்கப்பூர்கு எஸ் ஆகிட்டான்” கேலி கலந்த சிரிப்பு தோழனிடம்.

 

“பின்ன என்னடா? இது எடுக்குறது வாழ்க்கையில் ஒரு தடவை. திரும்ப போட் ரைட் போனாலுமே அதே நிமிஷம் திரும்ப வராதுல்ல. அந்த நினைவுகளை மீட்டிப் பார்க்க இந்த போட்டோஸ் உதவியா இருக்கும் தானே” என்றவனிடம்,

 

“யூர் கரக்ட் மாப்ள” என்று அவன் கருத்தை ஆமோதித்தான்.

 

“இந்த…” என ஆரம்பித்தவனைத் தடுத்து, “இதைப் போய் போட்டுக்கிட்டு வா” என்று கையில் ஒரு பையைக் கொடுக்க,

 

“இது என்ன மித்து?” என்று வினவியவாறு அதைத் திறந்தவனின் விழிகள் அழகாக விரிந்தன. அவன் அணிந்திருக்கும் அதே டிசர்ட்டில் ஒன்று இருந்தது.

 

“எப்படி?” என ஒற்றைப் புருவத்தை அழகாக ஏற்றி இறக்கியவனான் ஸ்டைலாக.

 

“சூப்பர் டா! இந்த கலர் தூக்கலா இருக்கு. யூ.கேல இருக்கும் போது வாங்குனியா?”

 

“எஸ்! எனக்கு வாங்கும் போது உனக்கும் எடுத்தேன். இதை நான் இன்னிக்கு தான் போட்டேன். நீயில்லாமல் எதுவும் போட பிடிக்கல”

 

“அப்படினா நீ புது ட்ரெஸ் எதுவுமே வாங்கலையா?” விழி விரித்தான் வேங்கை.

 

“இல்லை விஷு. நீயில்லாம நான் எப்போ ட்ரெஸ் எடுத்திருக்கேன். எப்போதும் ஒரே மாதிரி தானே வாங்குவோம். உன் கூட இருக்கும் போது எடுத்த டிசர்ட்ஸை தான் நான் அங்கே போயும் உடுத்தேன்”

 

“போடா ராஸ்கல்” என வழமை போல் அவன் வயிற்றில் செல்லமாக குத்த நினைத்தவனுக்கு அவனுக்கு ஆப்பரேஷன் செய்தது நினைவு வரவும் சட்டென கையை இழுத்துக் கொண்டான்.

 

“ப்ரெண்ட் இப்படிலாம் சொன்னா அவனவன் பாசத்தில் உருகி அணைச்சுக்குவான். நீ என்னனா குத்தப் பார்க்குறே” வாய் பிளந்தான் மித்து.

 

“நானும் எல்லாரும் ஒன்னா? நான் எப்போதும் ஸ்பெஷலா டிப்ரெண்டா தான் எல்லாம் செய்வேன். நீ இவ்ளோ பண்ணிருக்க. எனக்கு அப்படி தோணுனதே இல்லை. நான் நிறைய ட்ரெஸ் வாங்கினேன் தெரியுமா?

 

நீ இப்படி சொன்னதை கேட்கும் போது ஒரு மாதிரி இருக்கு. நீ என்னை கடன்காரனாக்குற மித்து! பதிலுக்கு நான் என்ன பண்ணுறதுனு தெரியல?” ஒரு மாதிரி குரலில் சொன்னான் விஷு.

 

“பதிலுக்கு எதுவும் பண்ணாத. நான் எதிர்பார்க்குறது உன்னோட அன்பை மட்டும் தான். நீ எப்போவும் என் கூட இருக்கனும். விஷ்வாங்குற பெயரே எனக்கு யானை பலத்தைக் கொடுக்கும். இப்படி என்னோட நீ இருந்தால் அதுவே போதும் மாப்ள” நண்பனின் தோள் சாய்ந்தான் மித்து.

 

“கண்டிப்பா நான் உன் கூட இருப்பேன் மித்து. உன் மேல இதே மாதிரி இல்லை, இதை விட அன்போட இருப்பேன். எதுக்காகவும் உன் நட்பை விட்டுக் கொடுக்க மாட்டேன். இது நம்ம நட்பு மேல சத்தியம்” அவன் தலையில் கை வைத்து சத்தியம் செய்தான் தோழன்.

 

“இது போதும் எனக்கு. ஓகே போய் டிசர்ட்டை மாத்திட்டு வா” என்றதும் உடை மாற்றி வந்தான் விஷு.

 

“ஒரு செல்ஃபீ” என்ற விஷ்வா நண்பனோடு சேர்ந்து செல்பீ எடுத்தான். ஒன்று பன்னிரெண்டாகிப் போனதை இருவரும் அறியாது அதில் மூழ்கினர்.

 

……………..

தன்னவனைத் தேடி வந்த அக்ஷராவைக் கண்டு நாசூக்காக விலகிச் சென்றான் விஷு.

 

“வாங்க மேடம் இப்போ வர தான் வழி தெரிஞ்சுதா?” தன்னவள் அமர கதிரையை இழுத்துப் போட்டு விட்டுக் கட்டிலில் அமர்ந்தான் மித்ரன்.

 

“வழி எப்போவோ தெரியும். வரத் தான் முடியலை”

 

“ஏன்டி? கால் வலியா? அதுக்குள்ளே கிழவி ஆயிட்டியா?” கிண்டலாக மொழிந்தான் ஆணவன்.

 

“கிழவியாகினாலும் நீ தான் என்னைக் கட்டிக்கனும். இல்லைனா உன் குரல்வளையை நசுக்கிருவேன்”

 

“என்னை பயம் காட்டாதே பேபி!” பயந்தது போல் சொன்னான்.

 

“அதென்ன புதுசா பேபி? காதல் பொங்குதோ?”

 

“இல்லை பேபி. நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதனால தான் அப்படி ஈசியா கூப்பிடறேன்” என்றவனைப் பார்த்து,

 

“ஈசியா? எனக்குப் புரியலடா” தலையைச் சொறிந்தாள் அவள்.

 

“பேய் பிசாசு இந்த ரெண்டு வார்த்தைகளினதும் முதல் எழுத்து அதாவது பே,பி என்பதை சேர்த்து தான் பேபினு கூப்பிடுறாங்களாம். அதான் நானும் பேய் பிசாசுனு கூப்பிடாமல் பேபினு சட்டுனு கூப்பிட்டேன்” அவனது விளக்கத்தில் மதுரையைப் பொசுக்கிய கண்ணகியாய் மாறிப் போகலானாள் மங்கை.

 

“ஏன்டா உனக்கு என்னைப் பார்த்தால் பேய், பிசாசு மாதிரி தெரியுதா? நானும் ஆசையா பேபினு கூப்பிடுறனு பார்த்தால் இவ்ளோ கேவலமாக விளக்கம் தர்ற” பாப்கார்ன் போல் படபடவென வெடித்தாள் அக்ஷரா.

 

“சும்மா சொன்னதுக்கு இப்படியா கோவிச்சுக்குவ. லீவ் இட்” சமாதானக் கொடியை பறக்க விட்டான் அவன்.

 

“உனக்கு அந்த அரைக் கிறுக்கனோடு சேர்ந்து கிறுக்கு முத்திருச்சு. வேறு ஒன்னில்லை” தங்கையிடம் ஏச்சைப் பெற்றுக் கொண்டான் பாவப்பட்ட அண்ணன் விஷ்வா.

 

“என்னை திட்டுறனா திட்டு. எதுக்கு என் விஷுவை இழுத்து விடுறே?” முறைப்புடன் நின்றான் அருள்.

 

“அவனை எதுவும் சொல்ல விடாத. நான் உன் கூட கோபம்” முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டாள் அவள்.

 

‘அச்சோ அவசரப்பட்டு பேபிக்கான விளக்கத்தைக் கொடுத்து மாட்டிக்கிட்டியே மித்து! உனக்கு தேவையா இது?’ உள்ளுக்குள் புலம்பித் தள்ளினான்.

 

“அம்முலு! என் செல்லமே” அவளது கையைப் பிடிக்க, “ப்ச்! போடா” என தட்டி விட்டாள்.

 

“நீ கோபப்படும் போது ரொம்ப அழகா இருக்கே. இந்த ஸ்டோபெரி மூக்கை கடிச்சு வைக்கனும்னு தோணுது” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

 

“எனக்கு வளவளனு பொய்யா பேசுற இந்த வாயைக் கடிச்சு வைக்கனும்னு தோணுது டா” நறநறவென பற்களை அரைத்தாள் அக்ஷு.

 

“நான் உன்னை மாதிரி மறுப்பு சொல்ல மாட்டேன். அவ்வளவு ஆசை இருக்குனா கடி பார்க்கலாம்” அவள் முகத்தின் முன் தன் முகத்தைக் கொண்டு செல்ல,

 

“அச்சோ!” என்று தான் சொன்னதை அவன் வேறு அர்த்தத்தில் பொருள் கொண்டதை நினைத்து அலறினாள்.

 

“பொய்யா வெட்கப்படாத டி. ம்ம் கமான் சொன்னதை செய் பார்க்கலாம்” அவள் முகத்தருகே இன்னும் நெருங்க,

 

“ப்ளீஸ் அருள்” அவன் முகம் பார்க்க முடியாமல் நாணம் தடுக்க மென்குரலில் முனகினாள்.

 

“ஆசை துடிக்கின்ற போதும் நாணம் தடுக்கின்றதா என் அன்பே?” அவள் காதோரம் கிசுகிசுக்க அவனது சூடான மூச்சுக் காற்றில் அவளுள் சிலிர்ப்பு.

 

“வேணாம் டா” வாய்க்குள் கரைந்தே போனது வார்த்தை.

 

“எனக்கு வேணுமே” மேலும் அருகில் வந்து இதழால் அவள் முகத்தில் ஓவியம் வரைந்தான்.

 

“அ… அருள்” உணர்வு மிகுதியில் அவனது டிசர்ட்டை இறுக்கிப் பிடித்துக் கசக்கினாள்.

 

“நீ தானே கடிக்கனும்னு சொன்னே. உனக்கு கஷ்டமில்லாமல் கிட்ட வந்திருக்கேன். ஹூம் பண்ணு” ஊக்கமளிக்க அவள் முகம் செந்தணலாக மாறியது.

 

“முடியல டா ஒரு மாதிரி வெட்கமா இருக்கு” மருண்டு விழித்தவளின் மான் விழிகளின் அலைபாய்தல் அவனைப் பித்துப் பிடிக்க வைத்தது.

 

“வாயாடிக்கு இப்போ மட்டும் ஒரு வார்த்தை பேசவே இவ்ளோ யோசனைல்ல?” அவள் இதழில் லேசாக இதழ் பதித்து விலகினான்.

 

“ஒரு நிமிஷம் என்னைப் பதற வெச்சுட்டல்ல போடா” அவன் மார்பில் முகம் புதைத்தாள் வஞ்சி.

 

 

நட்பு தொடரும்…..!!

 

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!