எதிரே இருப்பவனை முறைத்து கொண்டு நின்று இருந்தால் வர்ஷா.
அவனும் அப்படியே நின்று இருந்தான்.
அவனோ முக்கால் வாசி தூரம் வந்து விட்டான். அவளோ காரை உள்ளே எடுத்து வந்ததால் பின்னால் பார்த்து திரும்பி செல்வது கடினம்.
அவனுடையது இருசக்கர வாகனம் தானே!
“கொஞ்சம் பின்னால போலாமே எசிபி சார்”, என்று அவள் சொல்லவும், காக்கி சீருடையில், போலிஸிற்கே உரிய திமிருடன் நின்று இருந்தான் அவன்.
“நீங்க ரிவர்ஸ் எடுங்க நான் போகணும்”, என்று அவன் சொல்ல, “இங்க பாருங்க பிரணவ் எனக்கு இப்போ மீட்டிங் இருக்கு நான் போய் ஆகணும்”, என்றவளை பார்த்து, “நான் ஒன்னும் உங்க கைய பிடிச்சிக்கிட்டு இல்லையே மிஸ் வர்ஷா”, என்று அவனும் கையை கட்டி கொண்டு நிற்க, அவளுக்கு தான் எரிச்சலாக இருந்தது.
“பிரணவ் ஐ அம் சீரியஸ்”, என்று அவள் மேலும் அழுத்தி சொல்லவும், “நீ மீட்டிங் போறியா? இல்ல யாராச்சு பார்க்க போறியா?”, என்றவனை பார்த்து, “தட் இஸ் நன் அப் யுவர் பிசினஸ்”, என்று சீறினாள்.
“அப்போ போக முடியாது”, என்றவுடன், அவள் தான் கொஞ்சம் இறங்கி வர வேண்டியதாக இருந்தது.
“உனக்கு தெரியும் தானே யாரை பார்க்க போறேன்னு! நீ இப்போ விடலானா நானே அவருக்கு கால் பண்ணிருவேன்”, என்று அவனை மிரட்ட, அதற்கெல்லாம் மிரளுபவனா அவன்!
“நான் வேணா நம்பர் தரேன் கால் பண்ணு”, என்றவுடன், “நான் யாருனு தெரியும்ல? அப்புறம் யாரு கிட்ட பேசுனமோ பேசுவேன்”, என்று இப்போது அவள் சொல்லவும், அவன் இறங்கி வர வேண்டியதாக போனது.
“சரி சரி பொழச்சி போ”, என்று சொன்னவன், அவனின் பைக்கை ரிவர்ஸ் எடுக்க, அவளும் அந்த சாலையை கடந்து போய் விட்டாள்.
பிரணவ் அவன் சென்ற திசையை நோக்க, “அவன் இருக்கறதுனால நீ தப்பிச்சிடற டி வர மொளகா”, என்று நினைத்து கொண்டு அவனின் வேலையை பார்க்க சென்று விட்டான்.
இங்கோ வலது பக்க இருக்கையில் விக்ரம் மற்றும் அவனது பிஎ மைத்திரி அமர்ந்து இருக்க, இடது பக்க இருக்கையில் விஜய் மற்றும் சாதனா அமர்ந்து இருந்தனர்.
ப்ராஜெக்ட் யாருக்கு என்று இன்னும் சில வினாடிகளில் அறிவிக்க போகிறார்கள்.
விக்ரம் அவனின் ஓரக்கண்ணால் விஜய்யின் அருகில் உள்ள சீட்டை பார்த்தான்.
விஜய்யோ வர்ஷாவிற்கு கால் செய்து ஓய்ந்து போனான். அவள் எடுக்கவே இல்லை.
அதே சமயம் உள்ளே நுழைந்து இருந்தால் வர்ஷா.
உள்ளே வந்தவளின் விழி முழுவதும் விக்ரமை தான் பார்த்து கொண்டு வந்தன!
அவனை விட்டு கண்ணை அகற்றவே இல்லை.
விஜய்க்கோ ஆத்திரமாக வந்தது.
அவனின் அருகில் வந்து அமர்ந்தவளிடம், “ஏன் டி இப்படி பாக்குற அவனை?”, என்று அவன் கேட்க, “உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் விஜய சாணக்கியன்?”, என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, அவனுக்கு தான் கடுப்பாக இருந்தது.
பேசினால் அவள் ஏதாவது பதில் அளிப்பாள் இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் தான் ஏற்படும்.
“ஹலோ எவ்ரிவன்”, என்று அந்த ப்ரொஜெக்ட்டின் டைரக்டர் பேச்சை துவங்கினார்.
“இது முன்னூறு கோடி ருபாய் ப்ரொஜெக்ட்ன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்! அதனால தான், இந்த ப்ரொஜெக்ட்டை யாரு கிட்ட கொடுக்கறதுனு ரொம்ப மைன்யூட் லெவல் வரைக்கும் நீங்க கொடுத்த ப்ரோபோசல்ல அனலைஸ் பண்ணிருக்கோம்”, என்று அவர் சொல்லவும், விக்ரம் விஜய் இருவருமே அவரை தான் பார்த்து கொண்டு இருந்தது.
“அது மட்டும் இல்லாம உங்க கொட்டேஷனையும் கான்சிடெர் பண்ணிருக்கோம்”, என்று சொன்னவர், “இருக்கறதிலேயே கம்மியா கோட் பண்ணது”, என்று அவர் ஒரு கணம் நிறுத்த, விஜயும் விக்ரமும் அதே இடத்தில தான் அமர்ந்து இருந்தனர்.
வர்ஷாவும் கூட அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தாள். மைத்திரியும் சாதனாவும் தான் சீட்டின் நுனிக்கு வந்து விட்டனர்.
“ஸ்ரீகலா குரூப்ஸ்”, என்று அவர் சொல்லவும், விஜயின் இதழில் புன்னகை மலர்ந்ததோ இல்லையோ விக்ரமின் இதழில் கீற்று புன்னகை. அது எதற்காக என்று அவன் மட்டுமே அறிவான்!
சாதனாவோ, “காங்கிராட்ஸ் சார்”, என்று சொல்ல, விஜயின் புருவங்கள் இடுங்கியது. அவன் இன்னும் புன்னகைக்க வில்லை.
ஏதோ தவறாக பட்டது.
அவரே மேலும் தொடர்ந்தார்.
“வேதாந்தம் குரூப்ஸ்க்கும், ஸ்ரீகலா குரூப்ஸ்க்கும் டிஃபரென்ஸ் வெறும் பத்தாயிரம் தான்! ஆனா இந்த ப்ராஜெக்ட் நாங்க வெறும் கொட்டேஷன் பேஸ் பண்ணி மட்டும் எடுக்கல ஆல்சோ அவங்க ப்ராஜெக்ட் டிசைன்! அப்படி பார்த்தா, வேதாந்தம் குரூப்ஸ் ஸ்டாண்ட்ஸ் டால்! இந்த ப்ராஜெக்ட் வேதாந்தம் குரூப்ஸ்க்கு தான் நாங்க கொடுக்கறதா நாங்க முடிவு பண்ணி இருக்கோம்”, என்று அவர் சொல்ல, மைத்திரி இதழ்கள் விரிய புன்னகைத்தாள்.
சாதனாவின் இதழ்களில் இருந்த புன்னகை மறைந்தது. வர்ஷாவின் இதழ்கள் தானாக விரிந்தன.
விக்ரம் அதே நிலையில் தான் அமர்ந்து இருந்தான். விஜயின் கை முஷ்டிகள் இருகின!
இந்த தடவையும் தோல்வியா? அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
கடுப்பாக எழுந்து வெளியே சென்று விட்டான்.
சாதனாவும் அவனின் பின்னாலேயே சென்று விட, வர்ஷா மட்டும் அங்கேயே தான் நின்று இருந்தாள்.
“மிஸ்டர் விக்ரம், ப்ளீஸ் கம் அண்ட் சைன் தி காண்ட்ராக்ட்”, என்று சொல்லவும், அவன் எழுந்து சென்று கான்ட்ராக்ட்டில் சைன் செய்தான்.
மைத்திரியும் வர்ஷாவும் கை தட்டினர். அங்கிருந்த அனைவரும் தட்டினார்கள் தான்.
அப்படியே வர்ஷா மைத்திரியை பார்க்க, அவளும் வர்ஷாவை பார்க்க இதழ்களில் இருந்த புன்னகை மறைந்தது.
விக்ரம் கீழே இறங்கிய சமயம், வர்ஷா சென்று அவனை அணைத்து கொள்ள, அதிர்ந்து விட்டான் விக்ரம்.
அவள் மட்டும் தான் அணைத்து இருந்தான். அவன் கை முஷ்டிகள் இறுகி தான் இருந்தது.
அவனை விடுவித்தவள், “காங்கிராட்ஸ் மிஸ்டர் விக்ரம சத்திரியன்”, என்று சொல்லவும், அவன் தலையசைப்புடன் நகர்ந்து விட்டான்.
அவர்களின் தொழில் வட்டாரத்தில் அணைத்து விடுவிப்பது எல்லாம் சாதாரணம் என்று அவனுக்கும் தெரியும். அதுவும் இங்கிலாந்தில் படித்து விட்டு வந்தவனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன, ஆனால் அவள் ஏன் அணைத்தால் என்கிற காரணம் அவன் அறிவான் அல்லவா!
மைத்திரி அவனின் கையை குலுக்கி, “காங்கிராட்ஸ் சார்”, என்று சொல்லவும், அவனோ அவளை பார்த்து, “இன்னைக்கு ஈவினிங் இந்த கம்பெனி பார்ட்டி இருக்கு! எல்லாரையும் இன்வைட் பண்ணிருக்காங்க, நீயும் வரணும்”, என்று அவன் சொல்லவும், ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“அண்ட் ப்ளீஸ் ஸ்மேஜ் ஆகாத லிப்ஸ்டிக் போட்டுக்கோ, அப்புறம் ஸ்மேஜ் ஆனா என்னால எல்லாரு முன்னாடியும் விளக்கம் சொல்ல முடியாது”, என்று அவன் சொல்லவும், அவளுக்கு தான் நாணமாக போய் விட்டது.
இப்படி வெளிப்படையாக பேசுவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவன் ஏன் சொல்கிறான் என்று அவளுக்கும் தெரியும், ஆகையால் தலையை மட்டும் அசைத்து கொண்டாள்.
இப்போதே ஒரு மணி ஆகிவிட்டதால், “சரி லன்ச் சாப்டுட்டு நீ ஆபீஸ் போய்ட்டு நான் ஆத்விக் ஸ்கூல் போகணும்”, என்று அவன் சொல்லவும், மைத்திரியும் அவனும் அவனின் காரில் எற போகும் சமயம், “மிஸ்டர் விக்ரம சத்திரியன்”, என்கிற வர்ஷாவின் அழைப்பில் நின்று விட்டான்.
“இவ ஒருத்தி எனக்குன்னே எல்லாம் வராலுங்க”, என்று நினைக்கவும், அவளை திரும்பி பார்க்க, “ட்ரீட் இல்லையா?”, என்று கேட்க, “எதுக்கு ட்ரீட்?”, என்று மைத்திரி கேட்க, “உங்கிட்ட பேசல”, என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட்டாள்.
“இவளோ பெரிய காண்ட்ராக்ட் வின் பன்னிருக்கிங்க… இப்படி ட்ரீட் தராம போறீங்க?”, என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்கவும், இல்லை என்று சொன்னால் விட மாட்டாள் என்று தெறியும்.
“சரி உன் கார்ல வா”, என்று ஹோட்டல் ராயல் டி மெரிடியனிற்கு தான் வர சொன்னான்.
அவனும் மைத்திரியும் வர, வர்ஷாவும் வந்தாள்.
விக்ரம் ஒரு புறம் அமர அவனின் எதிரில் மைத்திரி அமர்ந்தாள்.
விக்ரமின் அருகில் வர்ஷா அமரவும், சட்டென திரும்பி விக்ரம் பார்க்க, அவளோ புன்னகைத்தாள்.
பெரெர் வந்து மெனு கார்டு கொடுக்க, “நீங்களே எனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிருங்க”, என்று வர்ஷா சொல்லவும், விக்ரமோ ஆழ்ந்த மூச்செடுத்து ஆர்டர் செய்தான்.
அவளுக்கும் சேர்த்து தான் செய்தான்.
மைத்திரி அவளிற்கான உணவை அவளே ஆர்டர் செய்து கொள்ள, மூவரும் அமைதியாக உண்டனர். ஒருவரும் வாய் திறக்க வில்லை.
இப்படியும் பேசாமல் உண்ண முடியுமா என்று அங்கிருந்தவர்கள் கூட ஆச்சர்யமாக தான் பார்த்தார்கள்.
இறுதியாக அனைவருக்கும் ப்ரூட் சாலட் சொல்ல, “டோன்ட் அட் பைன் ஆப்பிள் இன் ஒன் பிளேட்”, என்று சொல்லவும், “பாரவலயே சாருக்கு இன்னும் நினைவு இருக்கா?”, என்று அவனின் காதுகளை வர்ஷா கடிக்க, அவளை பார்த்து முறைக்க மட்டும் தான் முடிந்தது.
சாப்பிட்டு முடித்து, வர்ஷாவும், “ரொம்ப தேங்க்ஸ்”, என்று கட்டி அணைக்க வர, “ஸ்டே இன் யுவர் லிமிட்ஸ்”, என்று விக்ரம் சொல்லவும், அவள் கேட்பாளா என்ன?
அவனை கட்டி அணைத்து விடுவித்து விட்டு மைத்திரியை பார்க்க, அவளின் கண்களில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“பை”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
விக்ரமோ மைத்திரியை பார்த்து, “வா உண்ண ஆபீஸ்ல ட்ரோப் பண்ணிட்டு நான் போறேன்”, என்று சொல்லவும், அவளும் அவனின் காரில் ஏறிக்கொண்டாள்.
அவனை ஆஃபிஸில் இறக்கி விட, “நானே உண்ண வந்து பிக் அப் பண்ணிக்குறேன்”, என்று அவன் சொல்ல, “எத்தனை மணிக்கு?”, என்று கேட்க, “ஷார்ப் சிக்ஸ்”, என்று சொல்லவும், அவனின் காரை கிளப்பி கொண்டு ஆத்விக்கின் பள்ளியை நோக்கி கிளம்பிவிட்டான்.
பெரிய இடத்து பிள்ளைகள் படிக்கும் பள்ளி அது.
இரண்டு ஐம்பத்தி ஐந்து என்று காட்டியது.
அவனும் ஹெட் மிஸ்டர்ஸ் அறையை நோக்கி செல்ல, அங்கே ஆத்விக் நின்று கொண்டு இருந்தான்.
“என்ன டெவில் உள்ள இருக்காளா?”, என்று அவன் ஆத்விக்கை பார்த்து வினவ, “ஷ்ஷ்ஷ் மாமா இங்க சுவருக்கும் காது கேட்கும்”, என்று சொல்ல, அவனும் சிரித்து கொண்டான்.
அறையின் கதவை ஒருமுறை தட்ட, “கம் இன்”, என்கிற வார்த்தையில் அவனும் உள்ளே செல்ல, அங்கே அழகாக புடவை கட்டி அமர்ந்து இருந்தாள் இருபத்தி நான்கு வயது பாவை அவள்.
“ஆத்விக் பேரெண்ட்ஸ் வரலையா?”, என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க, அவளை கண்களாலேயே அளந்து கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தான் விக்ரம்.
“தே ஆர் பிசி… என்கிட்டயே சொல்லுங்க என்ன விஷயம்?’, என்று கால் மேல் கால் போட்டு கொண்டு அவன் கேட்க, அவளும், “ஆத்விக் இஸ் சோ அடமென்ட் அண்ட் ரொம்ப குறும்பு பன்றான்”, என்று அவள் சொல்ல, “குழந்தைங்க குறும்பா இருக்கறது தப்பு இல்லையே”, என்று தோள்களை உலுக்கி சொல்லவும், அவளோ, “குறும்பா இருக்கறது தப்பு இல்ல, பட் தேர் இஸ் எ லிமிட் இல்லையா?”, என்று அவளும் பதில் கேள்வி கேட்டாள்.
“சரி இப்போ என்ன பண்ணான்?”, என்று அவன் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, “என்ன பண்ணல?”, என்றவள் ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருந்தாள்.
அவனோ குரலை செருமி கொண்டு, “சரி இதெல்லாம் நெஸ்ட் டைம் ரிபீட் பண்ணமா நான் பார்த்துக்குறேன்”, என்று அவன் சொல்லவும், “ஓகே குட்”, என்றவள் சட்டென அவனின் டையை பிடித்து இழுத்து அவனின் இதழ்களை சிறை எடுத்து இருந்தாள்.
Kulappama irukku sis yaaru yaarukku jodi puriyala