31. ஜீவனின் ஜனனம் நீ

0
(0)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 31

 

தேவனின் வீட்டைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டு நின்றாள் வினிதா.

 

“இங்கே தானே இருக்கப் போற. அப்பறமா வீடு முழுக்க பார்த்துக்கலாம்” அவளைத் திருமணம் செய்து வீட்டில் வைத்துக் கொள்வதை இரட்டை அர்த்தத்தில் சொல்ல, இது அறியாதவளோ சரியென தலையாட்டி வைத்தாள்.

 

உள்ளே சென்றதும் வீட்டில் எவரும் இல்லாமல் திகைத்துப் போனவனுக்கு சாரதி மூலம் அறியக் கிடைத்த தகவலில் உலகமே இருண்டு போனது.

 

“மகேந்திரன் ஐயா ஆக்சிடன்ட் ஆகிட்டார்” அவ்வார்த்தையைக் கேட்டதும், “அப்பாஆஆஆ” என்று கதறியவனை எப்படி சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் பார்த்தாள் வினி.

 

“வினி! எங்கப்பா. எனக்கு அவர் வேணும் வினி. அவர் இல்லாம நாங்க எப்படி இருக்கிறது? நான் அவரைப் பார்க்கனும்” அவளை அணைத்துக் கொண்டு கதறினான்.

 

“அழாதீங்க தேவ்! ரிலாக்ஸ். அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. அழ வேணாம். நாம ஹாஸ்பிடல் போகலாம்” அவனது தலையை அனிச்சையாக வருடி விட்டன, அவள் கரங்கள்.

 

ஹாஸ்பிடல் சென்றனர் இருவரும். ஆனால் மகேந்திரனைக் காப்பாற்ற இயலாமல் போயிற்று. அந்நேரம் தேவனுக்கு துணையாக இருந்தது வினிதா தான். உடைந்து போன சமயம் அவள் தந்த ஆறுதல் தேவனை அவள் பக்கம் அடியோடு சாய்த்தது.

 

சிறிது நாட்கள் கழித்து, மேகலையிடம் அவளைப் பற்றி சொன்னான். 

“எனக்கு அந்த பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு டா. அமைதியான அழகான பொண்ணு‌. எனக்கு இதில் சம்மதம்” தனது சம்மதத்தை வெளிப்படையாகச் சொன்னார் அவர்.

 

“டேய்! வினி கூட பைக்ல போகும் போதே நெனச்சேன். அவளை நீ பொண்டாட்டியா ஏத்துக்கிட்டேனு” என்று சத்யா சிரிக்க, “என்னை விட்டுப்புட்டு நீ மட்டும் கமிட் ஆகப் போறியா? ஐ ஹேட் யூ தேவா” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் ரூபன்.

 

“ஐ லவ் யூ டா” தேவன் அவன் கழுத்தில் கை போட, “சில்லி மேன்! இந்த ஐ லவ் யூவை அந்த பொண்ணுக்கு சொல்லு” என்றதும் நொடியும் தாமதிக்காமல் பைக் சாவியை எடுத்துக் கொண்டு சென்றான்.

 

வினிதா ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தாள். இனியாவைப் பார்க்க அடிக்கடி வருவாள். வரும் போதெல்லாம் அவள் பார்வை தன்னை குட்டி போட்ட பூனை போல சுற்றி வரும் தேவன் மீதே நிலைத்திருக்கும்.

 

ஹாஸ்டல் பின் வாயில் வழியே வந்தவளை ஏற்றிக் கொண்டு பயணித்தான் தேவன்.

 

“என்னாச்சு தேவ்? திடீர்னு கூப்பிட்டீங்க?” சற்றே படபடப்புடன் கேட்டாள் அவள்.

 

“டென்ஷன் ஆகாத. நாம பீச் போறோம்” என்றிட, முகம் மலர்ந்து போனாள்.

 

கடற்கரையில் கால் தடம் பதித்து நடந்தனர் இருவரும். அவள் கைகளை எட்டிப் பிடித்தவனை தலை தூக்கிப் பார்த்தாள் தாரகையவள்.

 

அவள் கண்களில் காதல் வழிந்தது. ஆம்! காதல் தான். அவளுக்கு தேவனைப் பார்த்தவுடன் எல்லாம் காதல் வரவில்லை. இருப்பினும் பழகப் பழக அவனைப் பிடித்துப் போனது. அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் தயக்கம் அணை கட்ட, அமைதியாக இருந்தாள்.

 

“வினி! இப்போ பிடிச்சிருக்கிற இந்தக் கையை வாழ்க்கை முழுக்க பிடிச்சிட்டு இருக்கனும்னு ஆசைப்படுறேன். என்னிக்கும் விடாம, கஷ்டமோ சந்தோஷமோ எது வந்தாலும் உன் கூடவே இருந்து வாழ நினைக்கிறேன். என் காதலை ஏத்துப்பியா வினி?” 

 

அவன் இப்படிக் கேட்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனந்த அதிர்ச்சி தான். கண்கள் கலங்க அவனையே நோக்கினாள் வினிதா.

 

“உன் கூட எப்போவும் இருப்பேன். உன்னை பத்துரமா பார்த்துப்பேன். நீ என் குழந்தை டி. உன்னை அவ்ளோ அழகா வெச்சுப்பேன். ஐ லவ் யூ வினி” அவளது கையில் முத்தமிட்டான் தேவன்.

 

“தேவ்” எனும் கதறலோடு அவளை அணைத்துக் கொண்ட வினிதாவுக்கு தன் உணர்வுகளை கட்டுப்படுத்தத் தெரியவில்லை.

 

“நானும் உங்களை லவ் பண்ணுறேன் தேவ். எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். லவ் யூ டூ தேவ்” அவனை இறுக அணைத்துக் கொள்ள,

 

காற்றும் இடைப்புக முடியாதளவு இறுக்கத்தோடு அவளைத் தன் அணைப்பில் சிறைப்படுத்தினான் காதல் தேவன்.

 

அன்றிலிருந்து அவர்கள் இணைபிரியாக் காதலர்கள். சண்டை என்று கூட இருவரிடையேயும் வந்ததில்லை. தேவனின் கோபத்தைக் கண்டால் அவளுக்கு உள்ளம் நடுங்கும். இருப்பினும் அவளிடம் ஒரு போதும் அவன் கோபப்பட்டது இல்லை‌.

 

மற்ற பெண்களிடம் ஒதுங்கியே நிற்கும் இவன் தன்னிடம் மட்டும் அன்பை அள்ளிக் கொட்டுவது அவளுக்கு ஆச்சரியமே. அவ்வாறிருக்க, அவளிடமும் அவன் கோபப்படும் ஒரு நாள் வரத் தான் செய்தது.

 

இனியா சத்யாவைப் பிரிந்து சென்று ஒரு மாதம் ஆகியிருந்தது. அவள் பிரிவால் சத்யா முற்றிலும் உடைந்து போய் நின்றான். அவன் மீது கோபம் என்றாலும் தேவனால் அண்ணனை அப்படிப் பார்க்க முடியவில்லை.

 

சத்யாவுக்கு ஆறுதலாக ரூபனை இருக்கச் சொல்லி விட்டு கடற்கரைக்கு வந்தான். அவனைத் தேடி வந்த வினிதா “தேவ்” என்றழைக்க, தலை தூக்கிப் பார்த்தான்.

 

தன் பெற்றோரைப் பார்க்க மலேசியா சென்றவள் ஒரு மாதம் கழித்து இன்று தான் அவனைச் சந்திக்க வந்தாள்.

 

“சத்யா மாமா ஏன் அப்படி பண்ணுனார்?” அவள் கேட்ட கேள்வியில் உறுத்து விழித்தான் தேவன்.

 

“என்ன? என்ன பண்ணுனார்? ஓஓ! நீ உன் அக்காவுக்கு சப்போர்ட் பண்ண வந்தியா? உங்க குடும்பம் முழுக்க அவனையே தப்பு சொல்லுறீங்க. நடந்தது என்னனு உங்களுக்கு தெரியுமா?” அவன் கண்களில் தீப்பொறி.

 

“அக்கா நிறைய சொல்லுச்சு. ஒரு பொண்ணு மனசு அப்படி தான் சொல்லும். வேணாம்னு சொன்னா அவங்க கிட்ட இருந்து விலகி இருந்து இருக்கலாம். அதை விட்டுட்டு அந்தப் பொண்ணோட உறவை அறுத்துக்க முடியாதுன்னு அக்காவை துரத்தி விட்டார்” என்று அவள் சொல்ல, “வில் யூ ஷட் அப்?” ஆக்ரோஷமாக சீறினான் தேவன்.

 

“என்னடி ஆளாளுக்கு சத்யாவை ப்ளேம் பண்ணுறீங்க? அவன் மேல சந்தேகப்பட்டு பெட்டியைத் தூக்கிட்டு கிளம்பினது அவ. அவ வந்தது உங்களுக்கு பெரிசில்ல. அவன் பண்ணுனது தப்பா இருக்கா?” 

 

“தேவ்! ப்ளீஸ் கோபப்படாதீங்க. நான் அவரைத் தப்பு சொல்லல. இப்படி நடந்திருக்க வேணாமே என்று ஆதங்கத்தில் சொல்லுறேன். நான் யாரையும் தப்பு சொல்லல. அவங்க திரும்ப சேர்ந்து வாழனும்னு நினைக்கிறேன்” அவளுக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க,

 

“என்னடி மாத்தி மாத்தி பேசுற? இவ்ளோ நேரம் நீ சத்யாவை தப்பா பேசின. ஆனால் இப்போ வேற மாதிரி சொல்லுற. அவ கூட வாழ முடியாதுன்னு சத்யா சொல்லல. உங்கக்கா சொல்லிட்டு போனா” கோபப் பெருமூச்சுகளை வெளியேற்றினான் அவன்.

 

“சரி. கோபப்படாதீங்க தேவ்” அவனது கையைப் பிடிக்க, தட்டி விட்டான்.

 

“உன் மேல கோபப்படவே கூடாதுனு இருந்தேன். ஆனால் நீ அதை செய்ய வெச்சுட்ட வினிதா. எனக்கு உன்னைப் பார்க்கவே பத்திக்கிட்டு வருது. உன்னைப் பார்க்குறப்போ சத்யாவை தப்பா பேசினது தான் ஞாபகம் வருது”

 

அவன் சொன்னதைக் கேட்ட வினிதா, “என்னமோ சத்யா சத்யாங்குறீங்க. அவர் மேல உங்களுக்கு கோபம் தானே? அவரைத் தப்பா பேசிட்டேன்னு என் மேல இவ்ளோ கோபத்தைக் காட்டுறீங்க” என்று சத்தமிட,

 

“ஆமா எனக்கு சத்யா மேல கோபம் தான். ஆனால் அவன் என் கூடப் பிறந்தவன். அந்த உறவு என்னைக்கும் மாறாது. உனக்கு நான் சத்யா மேல கோபப்படுறது இனிக்குமா? உனக்கும் அந்த இனியா குணம் தானா?” என்று வெறுப்போடு கேட்டவன், “இது தான் உன்னோட ஒரிஜினல் மூஞ்சு. இவ்ளோ நாள் சத்தமே இல்லாம பேசிட்டு இருந்த. இப்போ இவ்ளோ சீறுற. ஊமையா இருக்கிற பொண்ணுங்க கிட்ட தான் நிறைய கோபம் பொறாமை எல்லாம் இருக்கும்னு சொல்லுறது உண்மை தான் போல” என்றான்.

 

அவன் பேச்சில் உடைந்து போனாள் வினிதா. அவன் தன்னை இப்படிப் பேசியதை ஏற்க முடியவில்லை.

 

“தேவ்! நீங்க எப்படி இவ்ளோ மாறினீங்க? என் மேல இவ்ளோ கோபம்”

 

“நான் மாறல. எப்போவும் போலத் தான் இருக்கேன். ஆனால் உன் பேச்சு என்னை இப்படி மாத்துது. வந்ததும் வராததுமா என்ன நடந்ததுனே தெரியாம இப்படி பேசினா கோபம் வராதா?” கோபம் கண்ணை மறைத்தது அவனுக்கு.

 

“உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கல. ஏதாவது பிரச்சினை வந்தாலும் இப்படி தான் பேசுவீங்களா? இப்போவே என்னை விட்டுக் கொடுத்துட்டீங்க உங்க அண்ணாவுக்காக. இப்படிப்பட்ட நீங்க என்னை கை விட மாட்டீங்கனு எப்படி நம்புறது?” 

 

அவளது வார்த்தைகளைக் கேட்ட தேவன் சிதைந்து போனான். அவளிடம் கோபப்பட்டான். இருப்பினும் அவள் மீது நேசம் உள்ளது அல்லவா? இவளோ விட்டு விலகி விடுவேன் என்கிறாளே.

 

“அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” அவள் விழிகளை ஊடுறுவிக் கேட்க, “இல்ல! உங்க மேல நம்பிக்கை இல்லை” என்றாள் அழுத்தமாக.

 

“அப்போ நீ போகலாம். நம்பிக்கை இல்லாத காதல் செல்லாக்காசு தான். என்னை விட்டுப் போயிடு” என்றவன் விழிகளில் உயிரில்லை.

 

“விளையாடாதீங்க தேவ். நம்பிக்கை இல்லன்னா நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்க ட்ரை பண்ணுங்க. என்னை விட்டுக் கொடுக்காம இருங்க”

 

“நீ என் காதலையே விட்டுக் கொடுத்துட்ட டி. என் மேல நம்பிக்கை இல்லனு சொல்லி எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சிட்ட. இப்போ கூட என்னை மட்டுமே குற்றம் சொல்லுற உனக்கு நீ செஞ்சது எதுவும் புரியலல்ல?

 

உன்னை நான் புரிஞ்சுக்கிட்டேன் வினிதா. நல்லாவே புரிஞ்சு போச்சு. ஏதோ ஒரு பிரச்சினையை உள்ளார கொண்டு வந்து ஒரு நிமிஷத்தில் உறவை அறுத்துட்ட. சத்யாவைப் போல எனக்கு நடந்திருந்தா நீ இனியாவை விட கேவலமா நடந்து இருப்ப போல” அவன் குரலில் அத்தனை வெறுப்பு.

 

“போதும் தேவ்! என் அக்காவைப் பற்றி பேசாத. நம்மளைப் பற்றி பேசு”

 

“நமக்குள்ள பேச என்ன இருக்கு? எல்லாமே போச்சு வினிதா. என்னை விட்டுப் போயிடு. அது ஒன்னு தான் பிரச்சினைக்குத் தீர்வு” என்று அவன் சொல்ல திரும்பி நடந்தாள் வினிதா.

 

அவள் சண்டை போடுவாள், முடியாது என்பாள் என்று எதிர்பார்த்த மனம் விரக்தியில் நொந்து போனது. அன்று நாள் முழுக்க பைத்தியமாகத் திரிந்தான் தேவன்.

 

சத்யாவை விட அவன் நிலை மோசமாக இருந்தது. 

“சாரி வினி! நான் தப்பு பண்ணிட்டேன். அவசரப்பட்டுட்டேன் டி. ரியல்லி சாரி டி. என்னால நீ இல்லாம முடியல வினி” அவளை நினைத்து நினைத்து அழுது தீர்த்தான்.

 

அடுத்த நாளே அவள் காலில் விழுந்தாவது சமாதானம் செய்யும் எண்ணத்தோடு ஹாஸ்டல் சென்றவனுக்குக் கிடைத்தது அவள் மலேசியா சென்று விட்ட செய்தி.

 

அதன் பிறகு அவளைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வினி வினி என்று அழுதவனுக்கு காலப்போக்கில் அழுகை வெறுப்பாக மாறிப் போக, இன்னும் கோபக்காரனாய் உருவெடுத்தான் தேவன்.

 

பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்த தேவன் கண்களை மூடித் திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வீடு செல்ல, அங்கு கண்ட காட்சியில் “சத்யா…!!” என்று சீறினான்.

தொடரும்….!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!