விஷ்வ மித்ரன்
நட்பு 34
ஆகாயப் பெண்ணின் மடியில் தாரகைகள் சிணுங்கிக் கொண்டிருந்தன.
முதலிரவிற்காக பொம்மை போல் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. இளம்பெண்கள் அவளை கிண்டல் செய்ய, அதில் சிறிதும் ஈடுபடப் பிடிக்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.
எரிமலையாக தீச்சுவாவைகளின் தாக்கத்தில் குமுறிக் குமுறி வெடித்துக் கொண்டிருந்தது அவள் மனம். விஷ்வா தான் விச்சு என்பதை அவளால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வாறு இருக்காது என்றே அடித்துக் கூறியது காதல் கொண்ட மனம்.
“ஜித்து! அது நீயாக இருக்காதுனு மனசு அடிச்சுக்குது. ஆனால் ஆரா உன்னை விச்சுனு கூப்பிட்டதைக் கேட்டேனே. அதற்கு என்ன பதில்..?”
திருமண நாள் என்பது புதுமணத் தம்பதியினருக்கு மகிழ்வை அளிக்கும். அந்நாளில் அவர்கள் எல்லையில்லா சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
ஆனால் தனக்கு மட்டும் ஏன் இப்படி ஆனது? துளி கூட மகிழ்வு அவளிடத்தில் இல்லை.
வரமாக தன்னவன் கணவனாக தன் வாழ்வினுள் நுழைந்த நாள் சாபமாக மாறியது ஏனோ? பொங்கி எழுந்த அழுகையை தொண்டைக்குழிக்குள் அடக்கி மனதினுள் ஆழப் புதைத்துக் கொண்டாள் மங்கையவள்.
நீலவேணி மருமகளை அழைத்துச் சென்று மகனின் அறைக்கருகே விட, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளை, “வெல்கம் டு மை ரூம் என்ட் வேர்ல்ட் நவிமா” என முறுவலுடன் எதிர்கொண்டான் ஜித்து.
வழக்கம் போல் அவன் புன்னகையில் தன் வசம் இழக்கலானாள் காரிகை. அதை உணர்ந்தவனின் இதழ்கள் இன்னும் பெரிதாக விரிந்து கொண்டன.
“ஓய் கடன்காரி” என அவன் சொடக்கிட, “கடன்காரியா? எத்தனை பேரை டா எனக்கு வைப்ப? திருடி,குடிகாரி,ரவுடி இப்போ புதுப் பெயரா?” தலையில் கை வைத்தாள் அவள்.
“உன்னை மட்டும் தானே எனக்கு அத்தனை பெயர் சொல்லிக் கூப்பிட முடியும். ஏன்னா நீ எனக்கு உரிமையாகிட்ட” அவளது தாலியைத் தொட்டுக் காட்டி உரிமையை நிலை நாட்டியவனின் செயலில் அவன் ஆராவோடு இருந்தது மனதில் உதிக்க,
“ப்ச்! பக்கத்துல வராதீங்க” என பட்டென விலகிக் கொண்டாள்.
“ஏய் கோவக்காரி! இனிமேல் நீ எங்கே போயிடப் போற? வராதன்னு சொன்னாலும் வருவேன்” அவளை ஒட்டிக் கொண்டு வர,
“என்னை டென்ஷன் பண்ணாதீங்க விஷ்வா” நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டாள் அவள்.
“நீ தான் மனுஷனை டென்ஷன் பண்ணுற. உன் கிட்ட கடனை வாங்கலாம்னு வந்தா இப்படி பண்ணுறியே” பாவமாகப் பார்த்தான் ஆணவன்.
“கடன் தாங்கனு நான் கேட்டேனா? நீங்க வழிய வந்து தந்தால் அதற்கு நான் என்ன பண்ணுறது?”
“நீ சீக்கிரமா திருப்பித் தருவனு நெனச்சு தந்தேன். அதுவும் எவ்ளோ பெரிய மனசு பண்ணி தந்திருக்கேன். என் தாராள மனசைப் புரிஞ்சுக்காம கஞ்சப் பிசினாரியா இருக்கியே? இது நியாயமா?” அவளைக் குறும்பு மிளிரும் பார்வையால் தழுவினான்.
“பெரிய தாராள பிரபு! வள்ளல் சீதாக்காதினு நினைப்பு” உதட்டை வளைத்தாள் வைஷு.
“அது யாரு சீதாக்காதி? கடன் அடைக்க வேண்டிய காலக்கெடுவை நாளை வரைக்கும் தள்ளிப் போடுறேன். இப்போ அதற்குப் பகரமாக எனக்கு சீதாக்காதி பற்றி சொல்லு” அப்படியே கால்களை கட்டிலில் தூக்கி வைத்தவன் அவள் மடியில் படுத்தான்.
அவனது திடீர் செயலில் அதிர்ந்து போனாள் பெண். தன் மடியில் குழந்தையாக மாறியவனின் தலை கோதத் தான் அவளது நெஞ்சம் துடியாய்த் துடித்தது.
ஆனால்! அவன் முகம் காணும் போதெல்லாம் ஆராவின் முகமும் அவளது ‘விச்சு’ எனும் உருகும் அழைப்புமே கண் முன் வந்து நிற்க அவனோடு சகஜமாக நடக்க முடியவில்லை.
“நவிமா….!!” எனும் அழைப்பில் குனிந்து அவனை அளவிட்டாள்.
கரும்பை வளைத்து வைத்தது போன்ற புருவங்கள், வாய் திறக்கும் முன் ஓராயிரம் கதைகளைப் பேசி விடும் விழிகள், அவற்றை கோட்டையைக் காக்கும் அரணாகக் காத்து நிற்கும் வடிவான இமைகள், எப்பொழுதும் குறும்புடன் புன்னகையையும் குழைத்து ஒட்ட வைத்திருக்கும் உதடுகள், அதற்கு மேல் அழகான மீசை, ட்ரிம் செய்யப்பட்ட தாடி என்று தன் கோகுலக் கண்ணனை ரசனை வழியும் கயல் விழிகளால் வருடினாள் ராதையவள்!
அவனது அழகான முகத்தைப் பார்த்தவளுக்கு, அவன் ஆராவைக் காதலிக்கவில்லை என்றே தோன்றியது. ஒரு கணமாவது அவன் இப்படி ஒரு பெண்ணிற்கு துரோகம் செய்து விட்டு அந்த குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றி தன்னோடு வாழ்க்கை நடத்தத் துணிந்து இருப்பான் என்று அவளால் நம்ப முடியவில்லை.
அப்படி என்றால் ஆராவுக்கும் விஷ்வாவுக்கும் என்ன தொடர்பு? கண்ணீரைத் துடைத்து விடுகின்றான் என்றால் அவனோடு மிகவும் நெருக்கமானவள் அவள் என்பது புரிந்தது.
அவனை விட நான்கைந்து வருடம் இளையவள் போல் இருப்பதால் தோழியாக இருக்க வாய்ப்பில்லை!? அப்படி என்றால் ஆராவுக்கு விஷ்வா யார்? விஷ்வாவை பொறுத்தவரையில் ஆரா யார்? புரியாத புதிராக இருந்தது அனைத்தும்.
“சீதாக்காதி மன்மதன் மாதிரி அவ்ளோ அழகான ஒருத்தரா?” அவள் சிந்தனையைக் கலைத்தது கணவனின் கேள்வி.
“ஏன் அப்படி கேட்குறீங்க?” தன்னை சமப்படுத்திக் கொண்டு வினவினாள்.
“என்னை அவ்ளோ இன்டரெஸ்டா மயங்கிப் போய் ரசிக்கிற? அதான் மன்மதனை நினைத்து அவனின் மறு உருவமா இருக்கிற என்னை பார்க்குறியோனு கேட்டேன்”
“உங்களால சீதாக்காதி லெவலுக்கே இருக்க முடியாதாக்கும். இதுல மன்மதனோட அழகுக்கு உங்களை ஒப்பிடுறீங்களா? மன்மதன் எங்கே நீங்க எங்கே?”
“அந்தளவுக்கு புகழாத டி. எனக்கு வெட்க வெட்கமா வருது” என்று முகத்தை மூடி வெட்கம் எனும் பெயரில் ஏதோ செய்தவனை மூக்கு முட்ட முறைத்தாள்.
“உங்களுக்கு புகழுறதுக்கும் இகழுறதுக்கும் வித்தியாசம் தெரியாதா? நான் மன்மதன் பக்கத்தில் உங்களால இருக்க முடியாதுனு சொன்னேன்” என்றாள் சேலை நுனியை திருகிக் கொண்டு.
“நீ என்ன சொன்னாலும் இந்த மன்னவன் பக்கத்தில் அந்த மன்மதனுக்குக் கூட நிற்க முடியாது. ஏன்னா மன்மதன் பக்கத்தில் ரதி தான் இருக்கனும். என் பக்கத்தில் என் மதி தான் இருக்கனும்”
“மதியா அது யாரு?” கடுப்புடன் கேட்டாள் அவள்.
“மதி மீன்ஸ் சந்திரன் மா! என் அழகு மனைவியை மதியாக உருவகித்து வர்ணித்தேன்” அவளது அருகாமையில் கம்பனாக மாறிடவும் செய்தான் விஷ்வஜித்.
“பேசாமல் மூவி டைரக்டரா மாறிடுங்க. நல்லா வர்ணிச்சு ஸ்க்ரிப்ட் எழுதி கொடுக்கலாம். அப்போ உங்களை ஆஹா ஓஹோன்னு புகழுவாங்க” என அதீத கடுப்புடன் மொழிந்தாள் மங்கை.
“எனக்கு யாரோட புகழும் தேவையில்லை. உன் வார்த்தைகளும், நீ திட்டுறதுமே என் மேல புகழ் மழையை பொழியுற மாதிரி இருக்கு” என்று புருவம் தூக்கியவனிடம்,
“உங்க கூட பேசி ஜெயிக்க முடியாது. பேசினால் பேசிட்டே இருப்பீங்க. முதல்ல எழுந்திருங்க”
“இன்னிக்கு முழுக்க பேசிட்டே இருக்க போறேன்னு யார் சொன்னது? இனிமேல் பேச்சுக்கே இடமில்லை. ஒன்லி ஆக்ஷன்” என்றவாறு துள்ளி எழுந்து அமர்ந்தான்.
“ஆக்ஷனா? என்ன பண்ணப் போறீங்க?” உள்ளுக்குள் படபடப்பு துளிர்த்தது.
“அதை சொல்லிட்டு இருக்க மாட்டேன். செயல்லயே காட்டுறேன்” அவளருகே நெருங்கி வர, அவளுக்கோ இதயம் வேக வேகமாக அடித்துக் கொண்டது.
“வி..விஷு கிட்ட வராதீங்க” முழங்கையைப் பின்னால் குற்றி அப்படியே பயத்துடன் சாய, “நா…நான் வருவேன்” அவளைப் போலவே வார்த்தைகள் தடுமாறப் பேசிக் கொண்டு இன்னும் நெருங்கி அவள் மேல் முழுதாக சாய்வது போல் வந்தான்.
“எனக்கு பயமா இருக்கு” அவனது அருகாமையில் அனைத்தும் மறந்து போனது அவளுக்கு. அவன் மட்டுமே அவளது சிந்தை முழுதையும் ஆக்கிரமித்து இருந்தான்.
ஆராவை மறந்தாள்; கல்யாண மண்டபத்தில் கண்ட காட்சியை மறந்தாள்; இது வரை மனதை அரித்துக் கொண்டிருந்த எண்ண அலைகளை மறந்தாள். தன் காதல் கண்ணாளனைத் தவிர சகலமும் மறந்தது பாவைக்கு.
“படபட பட்டாசுக்கு பயம் கூட வருமா? ஆச்சரியக் குறி” என்றவனின் குரலில் அவனை நோக்க, அவளது அருகில் இருந்த தலையணையை எடுத்தான்.
“இதை எடுக்கத் தான் வந்தேன்” சாதாரணமாக தோளைக் குலுக்க, “சொல்லி இருந்தால் நானே எடுத்து தந்து இருப்பேனே. ஒரு நிமிஷத்தில் என்னமோ நினைக்க வெச்சுட்டீங்க” நெஞ்சில் கை வைத்தாள் வைஷ்ணவி.
“என்ன நினைச்சீங்க மேடம்?” என்று கேட்டவன், “ஒவ்வொரு தடவையும் நீ என்னை தப்பாவே புரிஞ்சுக்குற தானே? பொண்டாட்டியா ஆகிட்டாலும் உனக்குனு ஒரு மனசு இருக்கு இல்லையா? ஒரு பொண்ணோட உணர்வுகளைப் புரிஞ்சுக்காமல் அவளை அதிரடியா அவ அனுமதி இல்லாமல் அடையுற ஆள் நான் இல்லை” என்றான் சற்று கடுமையாக.
“அது இல்லை விஷு”
“வேண்டாம் நவி! எந்த விளக்கமும் சொல்லாத. நீ இப்படிலாம் நினைக்கும் போது எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரியுது. அது என்னன்னா நீ என்னை முழுசா புரிஞ்சுக்கலை. எப்போ என்னை முழுசா புரிஞ்சுக்கிட்டு வருவியோ அப்போ நீ நெனச்சது நடக்கும், ரெண்டு பேர் சந்தோஷத்தையும் சேர்த்து” என்றவன் தலையணையை கீழே போட்டு சாய்ந்து கொண்டான்.
அவனது வார்த்தைகள் ஏனோ அவளுள் சுருக்கென வலித்தது. ஆராவோடு சேர்த்து இவனை நினைத்தது ஒரு வேளை பிழையாகினால், அதை அறிந்தால் விஷ்வா எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்பதை நினைக்க உடல் நடுங்கியது.
கண்களை திறந்து அவளை எட்டிப் பார்த்து, “எதைப் பற்றியும் நினைக்காமல் தூங்கு. அப்பறம் உன்னை மாதிரி தூங்க விடலைனு யாரும் நினைத்து விடுவாங்க” என்று லேசாகச் சிரித்து விட்டு கண்களை மூடிக் கொண்டான் விஷ்வா.
இம்முறை அவனோடு வாய்க்கு வாய் பேச நினைக்காமல் கட்டிலில் சாய்ந்தவளுக்கு அவன் கீழே உறங்குவது ஒரு மாதிரி இருந்தாலும், மேலே வா என்று உரிமையாக அழைக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை.
வெகு நேரம் கழித்து அவனைப் பார்த்துக் கொண்டே கண் அயர்ந்தாள் வைஷு.
…………….
கட்டிலில் அமர்ந்திருந்தான் மித்ரன். அறையில் செய்யபட்டிருந்த அலங்காரங்களும் அதிலிருந்து வீசிய வாசனையும் அவனை அக்ஷராவை நினைக்க வைத்தது.
“எங்கே டி போய்ட்ட?” என அவளுக்கு மேசேஜ் அனுப்ப அவளிடம் ரிப்ளை இல்லை.
அவளுக்கு அழைப்பு விடுக்க அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “அம்முலு இன்னும் என்ன பண்ணுற? சீக்கிரம் வா” என வைத்து விட்டான்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது அவள் முகத்தில் இருந்த வெட்கச் சிவப்பு.
“மாமாஹ்…!!” என்ற அழைப்பில் புது மாதிரி உணர்வு எழ, “என்னையா மாமானு கூப்பிட்ட? அச்சோ செம ஃபீல் டி. இன்னொரு தடவை கூப்பிடு. ஒன்ஸ் மோர் செல்லம்” என்று கேட்டான் அவன்.
“உனக்கு இல்லாததா? ஒரு தடவை என்ன? நூறு தடவை கூப்பிடுவேன். மாமா மாமா ஐ லவ் யூ மாமா” என்று அழைக்க அவளது அழைப்பில் மதி மயங்கிப் போனான் அருள்.
“லவ் யூ டூ தங்க குட்டி” என்று அவளை அணைத்துக் கொண்டான் அவன்.
“டேய் காட்டெருமை” என்ற குரலில், “இது யாரு டி நம்ம ரொமான்ஸை கெடுக்க வந்த கரடி?” எனக் கேட்க,
“இப்போ பாரு டா மென்டல் மங்கி” என்று தலையில் நங் நங் என்று கொட்டு விழுந்திட, கண்களைத் திறந்து முன்னே பார்த்தவன், “அம்முலு நீயா? அப்போ என்னை ஹக் பண்ணது யாரு?” என அதிர்ந்தான்.
“அதை நீயே பாரு வாத்து வாயா” என அவள் பல்லைக் கடிக்க, திரும்பியவனோ தன் அணைப்பில் இருந்த தலையணையைக் கண்டு, “ச்சே கனவா?” என முழி பிதுங்கி நின்றான்.
“ஹக் மட்டும் தானா? இல்ல இச்சு இச்சும் கொடுத்துட்டியா?” கடுப்புடன் கேட்டாள் அக்ஷரா.
“நல்ல வேளை நீ வந்துட்ட. ஆமா இப்போ எதுக்கு கொதிக்குற?” என வினவினான் அவன்.
“நான் வரும் போது வருவேன் தானே? அதுக்குள்ள நீ அவசரக்குடுக்கை மாதிரி ஃபோன் போட்டு வரச் சொல்லுற. உன் வீட்டுல இருக்குற குட்டி பிசாசுங்க உன் கால் வந்ததும் ஸ்பீக்கரில் போட்டுட்டாங்க.
மாப்பிள்ளைக்கு இருக்கிற அவசரத்தைப் பாரு, உங்களை கடிச்சு தின்னுடப் போறார் அப்படினு கிண்டல் பண்ணி படுத்தி எடுத்துட்டாங்க. எனக்கு வெட்கமா போச்சு தெரியுமா?” கடுகாக பொரிந்து தள்ளினாள் தாரகை அவள்.
“நான் உன்னை கடிச்சு தின்ன மாட்டேன். நீ தான் என்னை கடிச்சுக் குதறுவன்னு சொல்ல வேண்டியது தானே?” என்று அவளைப் பார்த்தான் மித்ரன்.
“எதுவும் பேசாத! வாயிலே ஒன்னு குத்திருவேன்” கையைப் பொத்தி குத்துவது போல் செய்கை செய்தவளின் கையைப் பிடித்து,
“எப்போ பாரு அடியும், குத்தும் தான் என் ராட்சசிக்கு. இந்தக் கையைப் பிடிச்சு அப்படியே என் கிட்ட இழுக்க தோணுது” என்று கூறி இழுக்க அவனது திண்ணென்ற மார்பில் மோதி நின்றாள் அவள்.
“உனக்காக ஒன்னு இருக்கு” என்றவன் ட்ரெஸிங் டேபிளில் வைத்திருந்த ஐஸ்கிரீம் பெட்டியைக் கொண்டு வந்து கொடுக்க, அதைக் கண்டு துள்ளிக் குதித்தாள் அவள்.
“அருள் எனக்காகவா? தாங்க் யூ டா தாங்க் யூ” என அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க, “ஐஸ்கிரீம் தந்தால் தான் முத்தம் தருவல்ல?” என சிரித்தான்.
“ஏய்! இன்னொரு கிஸ் கொடுடி” என்று அவன் கேட்க, “நான் பிசி ஆகிட்டேன்” என தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு அதை சாப்பிடத் துவங்கினாள்.
“விஷு சொல்லுற மாதிரி தீனிப் பண்டாரம் தான் நீ” என அவன் தலையில் தட்டினான்.
“பரவாயில்லை. சாப்பாடு விஷயத்தில் என்ன பெயர் சொன்னாலும் நான் கேட்டுக்குறேன்” என்று பெட்டியின் மூடியையும் எடுத்து நக்கினாள்.
“அடியே மூடியை மிச்சம் வை. அதையும் சேர்த்து சாப்பிடுவ போலிருக்கே”
“சாப்பிடுறதைப் பார்த்து கண்ணு வைக்காத. உனக்கும் வேணுமா?” என்று கொடுக்க, “நான் அப்படிலாம் சாப்பிட மாட்டேன். நீ சாப்பிட்டுட்டு வா. அப்பறம் நான் சாப்பிடுறேன்” என்று கள்ளப் புன்னகையுடன் கூறினான்.
“நான் எல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு தான் வருவேன். உனக்கு மிச்சம் வைக்க மாட்டேன்”
“அப்போ யேன் டி வேணுமானு கேட்ட?”
“கேட்கலனா நல்லா இருக்காதாம். பேச்சு வளர்க்காமல் இரு. எனக்கு டிஸ்டர்ப் ஆகுது” என சப்புக் கொட்டினாள்.
கொஞ்சமாக மீதம் வைத்து எழுந்தவள் கை கழுவச் செல்ல, “போகாத அக்ஷு” என நிறுத்தி அவளது கையை அவள் முகத்திலே பூசினான்.
“இதென்ன பண்ணப் போற டா?” என புரியாமல் நோக்க, “சொல்லிட்டு செஞ்சா கிக் இருக்காது பேப்ஸ்” பெட்டியையும் எடுத்து வழித்து அவள் முகத்தில் ஐஸ்கிரீமால் வண்ணம் தீட்டினான்.
“ஏதோ பண்ண போறான். என்னனு தான் தெரியல” அவன் செய்யப் போவது என்ன என்று அறியக் காத்திருந்தாள் காரிகை.
முகம் எங்கும் பூசி முடித்து அவள் பஞ்சுக் கன்னங்களைத் தன் கைகளில் ஏந்தினான் மித்ரன். அவள் முகம் நோக்கி குனிந்தவனைக் கண்டு அவனுக்கு ஏதுவாக கால் விரல்களால் எம்பி நின்றாள் மடந்தை.
அவள் செயலில் புன்னகைத்தவனின் இதழ்கள் கன்னத்தில் பதிந்து மீண்டன. பின் நாவால் அவளது முகத்தில் இருந்த ஐஸ்கிரீமை புது வகையில் ருசிக்கலானான் அக்காதல் ரசிகன்.
அவளவனின் செயலில் அவன் சர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள். கன்னத்தைக் கொஞ்சம் கடித்து, இமைகளில் இளைப்பாறி, நெற்றியில் ஆழப்புதைந்து மூக்கில் மெதுவாக உரசி தன் இதழ்களால் அவள் முகத்தில் இனிப்புடன் ஒரு ஊர்வலம் நடாத்தினான் அருள்.
ஐஸ்கிரீமையே விரும்பி ருசித்தவன், தித்திக்கும் தேனை விடுவானா என்ன? நிகரிலா அருஞ்சுவை தரும் அமுதசுரபியாகிய இனியவளின் தேனூறும் இதழில் மூழ்கி மதியிழக்க அவள் இதழைத் தன் இதழால் கவ்விக் கொண்டான் கணவன்.
உணர்வுகள் உச்ச கதியில் கொந்தளிக்க, அவனது முடியைக் கொத்தாகப் பற்றிக் கொண்டது பெண்புறா. தீஞ்சுவையை அள்ளித் தரும் இதழ்களில் இருந்து மீளவும் முடியாமல், இன்பம் தாளவும் முடியாமல் அதில் தேனை திகட்டத் திகட்ட அருந்திச் சுவைத்து அதில் இன்னுமின்னும் மூழ்கியது ஆண் சிங்கம்.
விலகவே மனமின்றி விலகி அவன் தன்னவள் முகம் பார்க்க, வெட்கம் பெருக அவனது முகத்திற்குள் தன் முகத்தைப் புதைத்தாள் அவள். மீண்டும் ஓர் இதழ் யுத்தம் அங்கே வெற்றியின்றி தோல்வியின்றி, படைபலமின்றி, ஆயுதங்கள் இன்றி, ஆயத்தங்கள் இன்றி ஆயிரம் கோடி உணர்வுகள் அழகாய் சங்கமிக்க நடந்து முடிந்தது.
“அம்முலு…” இன்று அவளை விடும் எண்ணம் இன்றி மித்து அழைக்க, “போடா” என அவனைத் தள்ளி விட்டு செல்ல எத்தனிக்க அவள் கையைப் பிடித்து இழுத்தான் அவன்.
மென்மையான மலர்க்கொடி ஆடவனின் மேல் சரிய, அவளது இடையூடு கையிட்டு இறுகப் பிடித்தான் அவன்.
“என்ன பண்ணுற?” எனக் கேட்க, “எனக்குக் கிடைச்ச வீணையில் இசை மீட்டப் போறேன்” என்றவனின் விரல்கள் அவளது பிடவையை விலக்கி இடையில் கோலம் போட, “ஹாஹ்” என கூச்சத்தில் நெளிந்தாள் அக்ஷரா.
இடையில் இசை மீட்டிய இசைக் கலைஞன் அவளை அணைத்துக் கொண்டே பேசத் துவங்கினான்.
“எத்தனையோ வருஷம் உனக்காக காத்திருந்தேன். உன் மேல உள்ளுக்குள்ள காதலை பொத்தி வெச்சுட்டு என் முன்னாடி விஷு தங்கச்சியா நடமாடும் உன்னோடு பழகிட்டு இருந்தேன்.
உனக்கும் என்னைப் பிடிக்கும்னு நம்பிய என் நம்பிக்கை சிதறிப் போகல. பூர்ணி விஷயம், ஆறு மாத பிரிவு எல்லாம் தாண்டி என் காதல் கை கூடி இன்னிக்கு எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்க. எனக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் என் மாப்ளயும் நீயும். இனிமேல் என்னிக்கும் நீ என் கூட எனக்கானவளா இருக்கனும் ”
அவனது வார்த்தைகளில் கரைந்து போய், “இனிமேல் அம்முலு உன் கூட இருப்பாள் சரியா? நான் இன்னிக்கு மட்டுமல்ல சின்ன வயசுல இருந்து இனி வாழும் காலம் வரைக்கும் உன்னவளாக, உனக்கானவளாக மட்டுமே வாழுவாள். நீ என் மித்து” தனது நெஞ்சைத் தொட்டு அதே விரலால் அவன் நெஞ்சில் குத்திக் காட்டினாள் அக்ஷு.
“என் மித்து! இதே வேர்ட்டை சந்தித்த முதல் நாள் என்னைப் பார்த்து சொன்னா என் குட்டி அக்ஷரா. இப்போவும் அதே வார்த்தையை காதலா,உரிமையாக, உணர்ந்து சொல்லுற. உன்னைப் பார்க்கும் போது இன்னும் கூட என் மித்துனு விஷு கூட சண்டை போட்ட குட்டிப் பொண்ணா என் கண்ணுக்கு தெரியுற”
“நான் குட்டியாவா இருக்கேன்?”
“ஆமாடி. உன் வாய் நீளுது, வயசு போகுது, சேட்டை கூடுது. ஆனால் உயரம் மட்டும் அப்படியே தான் இருக்கு. வளராத குள்ளச்சி” அவள் தலையில் தட்டியவன்,
“ஆனால் நீ இன்னிக்கு வேற மாதிரி தோணுற. உன்னை புதுசா பார்க்குற மாதிரி இருக்கு. மனசுக்குள்ள ஏதோ மாற்றம், சொல்லத் தெரியாத உணர்வு, ஒரு மாதிரி நர்வசா, உல்லாசமா, இதுக்கு மேல சொல்லத் தெரியல” பிடரியை அழுத்தமாகக் கோதிக் கொண்டான் ஆடவன்.
“எஸ்! என்னால புரிஞ்சுக்க முடியுது. நான் உன் பெண்டாட்டி டா புருஷ்” என்று அவனை அணைத்து சம்மதம் சொல்ல,
“ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப் அம்முலு” என்றவாறு அவளை அணைத்து முத்தமிட்டவன் விடிய விடிய தனக்கெனக் கிடைத்த பொக்கிஷத்தை ஆளத் துவங்கினான்.
காதலுடன் மோகமும் ஊற்றெடுக்க, அழகிய கூடல் அங்கே நடந்தேறியது.
நட்பு தொடரும்….!
✒️ ஷம்லா பஸ்லி