35. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன்

 

நட்பு 35

 

“துணி துவைக்க தெரியலையே. சொல்லி தர வா பூர்ணி” என பாத்ரூமில் துணி துவைத்தவாறு பாவமாகப் பாடிக் கொண்டிருந்தான் ரோஹன்.

 

“சேர்த்து வெச்ச துணியை எல்லாம் அள்ளித் தரேன் வா ரோஹி” என பதிலுக்குப் பாடியவாறு இன்னும் இரண்டு சர்ட்டைக் கொண்டு வந்து அவன் மேல் போட்டாள் பூர்ணி.

 

“ஏன்டி இந்தக் கொலை வெறி? இன்னிக்கு ஒரு நாள் வீட்டில் இருக்கேன். இப்படி வேலைக்காரன் மாதிரி ட்ரீட் பண்ணுற” 

 

“மடிக்க வெச்ச துணி மேல எதுக்கு டான்ஸ் ஆடிட்டு வந்து ஜூஸைக் கொட்டின?” பதிலுக்கு கேட்டாள் அவள்.

 

“என் வீட்டுல ஆடாமல் ஆபீஸ்ல இருக்கும் மேக்னா கூடவா கப்பிள் டான்ஸ் ஆட முடியும்?” என்று வினவினான் ரோஹன்.

 

“எங்கே கப்பிள் டான்ஸ் ஆடிடுவீங்களோ சார்? மேக்னாவாம் மேக்னா. அது யாரு மேனா மினுக்கி?”

 

“எம்.டியோட ரிலேடிவ். நேற்று அவரை மீட் பண்ண வந்தாங்க. ரொம்ப நல்ல குணம். அழகா இருப்பாங்க ” என அவன் துணியைக் கழுவி வாளியில் அனைத்தையும் போட்டான்.

 

“அழகா இருப்பாங்களா? நீ நல்லா பேசி இருப்ப போலிருக்கே” கோபமாகக் கேட்டாள் பூர்ணி.

 

“ஆமா பேசினேன். அவங்களாகவே என் கூட வந்து பேசினாங்க. மேக்னாவை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு” என்று சொல்ல,

 

“பிடிச்சா அவ கூடவே போய் பேசிட்டு இரு. எதுக்கு என் கூட பேசுற?” என்று ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு விறு விறுவென அறையினுள் நுழைந்து கொண்டாள்.

 

“ஹேய் பூ” இப்பொழுது குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவனாக அவள் பின்னால் ஓடினான்.

 

கட்டிலில் அமர்ந்தவளைக் கண்டு, “பூ எதுக்கு கோபம்?” அவள் கையைப் பிடிக்க,

 

“நான் கோபமா இருந்தால் உனக்கென்ன? அந்த மேக்னாவையே நல்லவ வல்லவ அழகானவன்னு புகழ்ந்துக்க” லேசாக கண் கலங்கினாள் காரிகை.

 

“என்ன டா சின்ன பிள்ளை மாதிரி? யாரைச் சொன்னாலும் அவங்களை புடிச்சிருக்குனா உன்னைப் பிடிக்கலைனு ஆயிடுமா?” என்றான் தலை வருடி.

 

“எந்தப் பொண்ணுக்குமே இன்னொரு பொண்ணை புடிச்சிருக்குனு சொன்னா கோவம் வரத் தான் செய்யும்”

 

“அய்யோ நீ ஓவரா நினைச்சுட்ட டி. இங்கே பார் நான் அவங்க கூட எடுத்துக்கிட்ட செல்ஃபீ” என்று எட்டி ஃபோனை எடுத்துக் காட்ட,

 

“எனக்கு ஒன்னும் பார்க்க அவசியம் இல்லை. காட்டாதே” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூர்ணி.

 

“அடியே இதைப் பார்த்துட்டு பேசு” என்று வலுக்கட்டாயமாக முகத்தைத் திருப்பிக் காட்ட, அதைப் பார்த்து, “இது யாரு?” என்று கேட்டாள்.

 

“இது மேக்னா. இவங்களைப் பற்றி தான் இவ்வளவு நேரம் சொன்னேன். அழகா இருக்காங்களா இல்லையா?” 

 

“ம்ம் இத்தனை வயசு போனாலும் கம்பீரமா அழகாக இருக்காங்க” என்ற பெண்ணின் விழிகள் புகைப்படத்தில் புன்னகையுடன் இருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியின் முகத்தில் படிந்தது.

 

“பார்த்தியா? இதுக்கு போய் சும்மா கண்ணு கலங்கிட்ட? எங்கே சிரியேன்”

 

“முடியாது. உனக்கு அப்போவே வயசையும் சொல்லி இருக்கலாமே. அது எதுக்கு இந்தம்மாவை மரியாதை இல்லாமல் பெயரை சொல்லிக் கூப்பிடற?” முறைப்புடன் நின்றாள் பூரி.

 

“அவங்க பெயர் மேனகா. அது மார்டனா இல்லைனு மேக்னா அப்படினு மாத்திட்டாங்க. அவங்களை மரியாதையா மேக்னாம்மானு கூப்பிடவும், அப்படிக் கூப்பிடாத மேன்! என்னை மேகினு செல்லமா கூப்பிடு இல்லைனா மேக்னானு அழகா கூப்பிடு அப்படினாங்க” சிரிப்புடன் சொன்னான் ரோஹன்.

 

“இந்த வயசுல மேகினு ஒரு செல்லப் பெயர் கேட்குது இந்த அம்மாவுக்கு”

 

“அதைக் கேட்டுத் தானே நீயும் கடுப்பாகின?”

 

“ஹூம் இப்போ கோபம், கவலை, எமோஷனல் எல்லாம் அளவுக்கதிகமா வருது ரோஹி” அவனை உதடு கடித்துப் பார்த்தாள்.

 

அவனோ அவளைப் பார்ப்பதைத் தவிர்க்க, “ரோஹி! கோபமா டா. ஏன் என்னைப் பார்க்க மாட்டேங்குற” என்றாள்.

 

“உன் லிப்ஸ் பார்க்கும் போது என்னென்னமோ ஆகுது. என்னால.. என்னால உன்னை பார்க்க முடியல. அப்படி பண்ணாத பூ” என்றான் மறு பக்கம் திரும்பி.

 

“இங்க பாரேன் டா. சொல்லுறேன்ல பாரு” அவனது தாடை பற்றி தன்னை நோக்கித் திருப்பினாள்.

 

“என்னால என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிரும் டி வேணாம்”

 

“யார் உனக்குக் கட்டுப்படுத்திக்க சொன்னது? நான் சொன்னேனா இல்லையே?”

 

அவன் அவளை ஏறிட பற்களால் கீழுதட்டைச் சிறை செய்தாள். “நீ வேணும்னே என் கவனத்தை ஈர்க்குற” என்றவனுக்கு அவள் முகத்தில் இருந்து பார்வையை அகற்ற முடியாது போயிற்று.

 

“ஈர்க்குறதுக்கு நான் காந்தமா?” என அவனை நெருங்கி வந்தாள்.

 

“இல்லை! உன் கிட்ட இருக்கும் ஈர்ப்பு சக்திக்கு காந்தமும் கூட தோற்றுப் போயிடும். அப்படி ஒரு காந்த சக்தி” என இரகசியக் குரலில் பேசினான் ஆடவன்.

 

அவனை நெருங்கியவளை மேலும் அண்மித்து அவள் இதழைச் சிறை செய்தான் கணவன். மூச்சுக் காற்றுகள் ஒன்றையொன்று கட்டித் தழுவ, கைகளும் ஒன்றோடொன்று பிணைந்து கொள்ள, இதழ்களும் தத்தம் இணையோடு உறவாட அவ்வுரசலில் சுடர் விட்டு ஒளிர்ந்தது காதல் தீ.

 

பல மாத கால பிரிவுக்குப் பின்னால் ஒரு இதழ் முத்தம் வன்மையும் மென்மையும், காதலும் நாணமுமாக இனிமை கொடுத்தது.

 

………………

உறக்கம் கலைந்து எழுந்த மித்து வழக்கம் போல் தலையை வலப்பக்கமாகத் திருப்பி, கண்களைத் திறக்க அவனைப் புகைப்படத்தில் பார்த்துப் புன்னகைத்தான் விஷ்வஜித்.

 

“குட் மார்னிங் மாப்ள” எனக் கூறியவனுக்கு அறையில் கலைந்து கிடந்த மல்லிகைப் பூ இதழ்களும், பூ அலங்காரங்களும், மங்காத வாசனைத் திரவிய நெடியும் தனக்குத் திருமணம் நடந்து முடிந்ததை நினைவூட்டின.

 

அவனவளை நினைத்துப் பார்த்தவனுக்கு முகத்தில் மெல்லிய நாணம் ஒட்டிக் கொள்ள, குளியலறையில் இருந்து வெளி வந்தாள் அக்ஷரா.

 

அவன் எழுந்ததை காணாது கண்ணாடி முன் நின்று தவையைத் துவட்டத் துவங்கினாள் அவள். அவளது அழகு முகத்தை ரசித்துப் பார்த்தான் அவன்.

 

ஆளைத் துளைக்கும் பார்வை தன் மீது வீசப்படுவதை உள்ளுணர்வு மூலம் அறிந்து திரும்பிப் பார்க்க, மல்லாக்கா புரண்டு நாடியில் கை வைத்து அவளையே பார்த்திருந்த கணவனைக் கண்டு பட்டெனத் திரும்பிக் கொண்டாள் வெட்கம் தாளாமல்.

 

அவள் செயலில் சிரிப்புத் தோன்ற, எழுந்து அருகில் வந்து பின்னாலிருந்து அவளது தோளில் நாடி குற்றி நின்றான் மித்ரன்.

 

“அருள்…!! எதுக்கு வந்தே?” குனிந்து கொண்டு கேட்டாள் பெண்.

 

“இன்னிக்கு முதல் தடவை எழுந்த உடனே என் பொண்டாட்டி தரிசனம் கிடைச்சிருக்கு. அவளை ஆசை தீர ரசிக்க வேண்டாமா?” அவன் விரல்கள் கள்ளத்தனமாக அவளது முகத்தைத் தொட்டுத் தீண்டி சில்மிசம் புரிந்தன.

 

“கையை சும்மா வெச்சுக்கனும். இல்லனா கடிச்சு வெச்சுருவேன்” நிமிர்ந்து கண்ணாடி வழியே முறைத்தாள் முறைப்பழகி.

 

“நானும் சும்மா வெச்சுக்கனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் இந்த மனசு உன்னைப் பாரு பாருனு தொல்லை பண்ணுது. கண்ணும் அது பேச்சைக் கேட்டு ஒரு இடத்தில் நிற்க மாட்டேங்குது. பார்வைக்கு கை உற்ற நண்பனாம். அதனால பார்வை போகும் இடத்திற்கு கையும் போகத் துடிக்குது” அவனது பார்வை அவள் மதி வதனத்தில் படிந்தது ரசனையாக.

 

“முதல்ல உன் மனசை அடக்கு. அப்பறம் தானாவே மத்த எல்லாம் அடங்கிரும். கை பேசக் கூடாது”

 

“இனிமேல் கை பேசவே பேசாது. ஒன்லி திஸ் வன்” அவனது முரட்டு அதரங்கள் கன்னத்தில் உரசிக் கொண்டு நின்றன.

 

“நான் குளிச்சுட்டு வந்திருக்கேன். என் கன்னத்தை எச்சி பண்ணாமல் கிளம்பு” கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள் காரிகை.

 

“சரி போறேன்” என சென்றவனைக் கண்டு, “பயபுள்ள சொல்லுற பேச்சைக் கேட்டுட்டான். ஆச்சரியம்” என நெஞ்சில் கையை வைத்தாள் அக்ஷு.

 

யூடர்ன் அடித்துத் திரும்பியவன், அடுத்த கன்னத்திலும் பச்சக்கென முத்தமிட, “உன்னைப் போய் நல்லவன்னு நெனச்சேன் பார் என்னை சொல்லனும்” என முறைத்தாள் அவள்.

 

“ஒரு கன்னத்தில் கிஸ் பண்ணுனா அடுத்த கன்னத்துக்கும் பண்ணனும் டி. இல்லனா தப்புனு சொல்லுவாங்க. நான் வேணும்னே கிஸ் தரலை நம்பு அம்முலு” என பாவமாகப் பார்த்தான் அருள்.

 

“பாரபட்சம் பார்க்காமல் கிஸ் பண்ணிட்டு பால்வாடிப் பாப்பா மாதிரி பார்க்காத படவா ராஸ்கல்” அவன் கன்னத்தில் அடித்தாள் மனைவி.

 

“ஹி ஹி” என அவன் இளித்து விட்டுச் செல்ல, “ஒரு கன்னத்தில் அடிச்சா அடுத்ததுக்கும் அடிக்கனுமாம் அருளு” என அவனது மறு கன்னத்தில் செல்லமாக அடித்தாள்.

 

“அடியைத் தவிர உனக்கு வேறு எதுவுமே தெரியாதா அராத்து?” கன்னத்தை வருடிக் கொண்டான் காளை.

 

“தெரியுமே! கடிக்க தெரியும், சாப்பிட தெரியும்”

 

“அரிசி மூட்டை. ஓகே இன்னிக்கு உனக்கு சாப்பிட பழக்கி தரப் போறேன்.ஓகேவா ரெடியாகி இரு” என்றவனைப் பார்த்து,

 

“அதுக்கு ஏன் சொல்லித் தரனும்? சாப்பிட வேறு ஏதாவது மெத்தட் இருக்கா?” என்று கேட்டவளுக்கு அவன் நேற்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட முறை நினைவில் உதிக்க கண்களைச் சுருக்கினாள்.

 

“ஞாபகம் வந்துருச்சா? இன்னிக்கு சாக்லேட் கொடுக்க போறேன். நீ அப்படித் தான் சாப்பிடனும்”

 

“ஏய் என்னால முடியாது டா” என அவசரமாக மறுத்தாள்.

 

“உனக்கு வேணாம்னா விடு நானே சாப்பிடறேன்” என அவன் சொல்ல, “இல்லை எனக்கு வேணும்” என கத்தினாள்.

 

“காதுக்குள்ள கத்தாத டி தரேன்”

 

“ஆனால் என்னால அப்படிலாம் சாப்பிட முடியாது”

 

“சரி அதை அப்பறம் பார்த்துக்கலாம்” என கூறியவன் குளியலறைக்குள் நுழைய கீழே இறங்கிச் சென்றாள் அவள்.

 

உடை மாற்றி வந்த மித்து அவளைத் தேடிச் செல்ல ஹரிஷுடன் இணைந்து காஃபி குடித்துக் கொண்டிருந்தாள்.

 

“வா டா மித்து” என மகனை அழைத்தார் ஹரிஷ்.

 

“என்ன டாடி ஒரே ஜாலியா இருக்கீங்க போலிருக்கு. ஹாஸ்பிடல்கு புது நர்ஸ் வந்திருக்காங்கன்னு கால் வந்துச்சா?” எனக் கேட்டவாறு காபி அருந்தினான்.

 

“புது நர்ஸ் பத்தி நானே நினைக்கல. உனக்குத் தான் ஆசையா இருக்குல்ல. அக்ஷு உன் புருஷன் ரொம்ப மோசம்” என்று அக்ஷுவிடம் போட்டுக் கொடுக்க,

 

“நான் பார்த்துக்கறேன் பா. அவனுக்கு விஷு கூட சேர்ந்து வாய்க் கொழுப்பு கூடிப் போயிருக்கு” என்று மாமனாருடன் ஹைஃபை கொடுத்தாள் அவள்.

 

“ஏன் டா நீ எனக்கு இந்த மாதிரி சூப்பரா காஃபி போட்டுக் கொடுத்து இருக்கியா? என் மருமக எவ்ளோ அன்பா போட்டுக் கொடுத்தா?” என்றதும்,

 

“இவள் போட்டாளா?” என வாயில் இருந்ததை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நின்றவனின் செய்கையில் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது இருவருக்கும்.

 

“டேய் டேய் குடி. நான் தான் போட்டேன்” என தந்தை சிரிக்க, “அப்பாடா போன உசுரு வந்துருச்சு” என குடித்து முடித்தான் மித்து.

 

“எனக்கும் இப்போ காஃபி போட கொஞ்சம் தெரியும். இன்னும் ப்ராக்டிஸ் பண்ணிட்டு உனக்கு ஊத்தி தரேன்” என்று அவள் சொல்ல,

 

“வேணாம் பரதேவதையே! நீ நல்லா இருப்ப” என அவன் கிண்டலடிக்க, “போடா” என அவனுக்கு அடித்தாள் அக்ஷு.

 

“சிவா அழைச்சு நாளைக்கு உங்களை மறு வீடு கூட்டிட்டு வர சொன்னான்” என ஹரிஷ் கூற, இருவர் முகத்திலும் புன்னகை.

 

“ஓகே டாடி! அப்போ வைஷுவும் மாப்ளயும் இங்கே வர மாட்டாங்களா?” என வினவினான் மித்ரன்.

 

“இல்லை கண்ணா! டுமோரோ நீங்க போனா அவங்க இங்கே வர முடியாதுல்ல. அவங்க அடுத்த நாளைக்கு வருவாங்க” என்று தம் முடிவைச் சொன்னார் அவர்.

 

“அப்போ நாளைக்கு போறோம். எங்க வீட்டை ஒரு கலக்கு கலக்குறோம்” என்றான் மித்து.

 

“அன்னிக்கு ஃபோன்ல பண்ண மாதிரி விஷுக்கு நேரடியாகவே கிஸ் பண்ண போறியா செல்லம்?” தன்னவனிடம் ஹஸ்கி வாய்சில் மொழிந்தாள் மங்கை.

 

“அடியே டாடிக்கு கேட்டுட போகுது” என அவள் வாயைப் பொத்தினான் ஆடவன்.

 

……………..

கரம் கூப்பி மனமுருக முருகனை வணங்கும் தன் மனையாட்டியை மார்புக்குக் குறுக்காக கை கட்டி நோக்கினான் விஷ்வா.

 

மாம்பழ வண்ண பிடவை அவளுக்கு எடுப்பாக இருக்க, கழுத்தில் தொங்கிய ஈரம் காயாத தாலியுடன் ஒரு மெல்லிய செய்ன், கழுத்தில் குடை ஜிமிக்கி நர்த்தனம் ஆட, க்ளிப்பிற்குள் அடக்கிய கூந்தலில் சில அவள் கழுத்தில் தீண்டி முன்னால் விழ நின்ற தன் மஞ்சள் அழகியை இமை சிமிட்டாமல் தான் ரசித்தான் காதல் கண்ணன்.

 

கண்களைத் திறந்த வைஷு அவனது பார்வையில் சிவந்து போனாள். அவனது பார்வை உள்ளுக்குள் சில்லிட வைத்தாலும் அதனை முழு மனதோடு ரசிக்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

 

‘ஆரா’ விஷயத்தில் ஒரு தெளிவு கிடைக்காத வரையில் அவளால் நிம்மதியாக சுவாசிக்க முடியாது. அவனோடு சகஜமாக பழகவும் முடியாது.

 

“ஹல்லோ மிஸ்ஸிஸ் விஷ்வஜித்! கடனைப் பற்றி கோயில்ல வெச்சு நினைக்காத. நான் இன்னிக்கு நைட்டு வாங்கிக்கறேன்” என்று கண் சிமிட்டினான்.

 

“நான் சொன்னேனா கடன் பற்றி நினைக்குறேன்னு. இல்லை என் மனசுக்குள் புகுந்து பார்த்தீங்களா? எப்போ பாரு தேவையில்லாமல் கடன் கடன்னு டாச்சர் பண்ணாதீங்க” எரிச்சலுடன் சொன்னாள் வைஷ்ணவி.

 

“வை திஸ் எங்க்ரி? நான் தான் இப்போவே வேணானு சொல்லுறேனே. எதுக்கு அவசரப்படுற?” என அவன் சொல்ல,

 

“டேய்ய்ய்! வேணாம் இங்கே வெச்சு என் கிட்ட வாங்கி கட்டிக்காத” அவன் கழுத்தை நெரிப்பது போல் செய்கை செய்தாள்.

 

“சரி சரி! வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம். வா போகலாம்” என அழைத்தான் அவன்.

 

“உங்களுக்கு ஆஃபீஸ் போகனும்னா போயிட்டு வாங்க. நான் கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்துட்டு வரேன்” என்றாள் அவள்.

 

“எதுக்கு டி? நான் இருந்தே உன்னைக் கூட்டிட்டு போறேன்” என அவன் இருக்க, “வேண்டாம் நான் தனியா வீட்டுக்கு போய்க்குறேன்” என பிடிவாதமாக மறுத்தாள் அவள்.

 

“என்னவோ சொல்லுற. பத்திரமா போ நவி! நான் போய்ட்டு வரேன். வீட்டுக்கு போனதும் கால் பண்ணு” என அன்பாக அக்கறையாக சொல்லிச் சென்றான்.

 

போகும் அவன் முதுகை வெறித்து நோக்கினாள் அவள். இவ்வளவு அன்பு நிறைந்தவனா ஒரு பெண்ணின் மனதை நோகடித்திடுவான்? ஏமாற்றுவான்? என யோசித்தவளுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம்.

 

தூணில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள, “அக்கா!” எனும் குரலில் விழி திறந்தவள் முன்னால் வந்து அமர்ந்தாள் ஆரா.

 

“ஆரா நீயா?” அவளைக் கண்டதும் ஒரு வித தடுமாற்றம் அவளுக்கு.

 

“நானே தான். உங்க புருஷன் தான் என் விச்சுனு தெரிஞ்சிருச்சா?” என்று அவள் கேட்க தலையை ஆட்டினாள் வைஷு.

 

“அவனைத் தேடி போகக் கூடாதுனு தான் நெனச்சேன். ஆனாலும் அவனை மறைந்து நின்னு பார்க்கலாம்னு மண்டபத்திற்கு போனேன். அப்போ விச்சுக்கு பக்கத்துல உங்களை கண்டதும் ஷாக் ஆகிட்டேன்.

 

அவன் உங்க கூட என்னை மறந்துட்டு நல்லா இருக்கட்டும்னு நான் போகும் போது என்னை கண்டுட்டான். என்னைக் கண்டதும் அவனுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. என் கிட்ட ஓடி வந்து ‘உன்னை மறக்க முடியும்னு நெனச்சேன். ஆனால் தாலி கட்டுனதுக்கு அப்பறமா என் மனசுல உன் ஞாபகம் வந்துருச்சு ஹனி’ அப்படினு சொன்னான்.

 

எனக்கு கண்ணீரே வந்துருச்சு. என் கண்ணீரைத் துடைச்சு விட்டு அவன் லாயரை வெச்சு முடியுமான அளவுக்கு சீக்கிரமா டிவோஸ் வாங்கிட்டு என் கூட வந்துருவேன்னு சொன்னான். என்னால அப்போ இருந்த மனநிலையில் எதுவும் பேச முடியாமல் வந்துட்டேன்”

 

ஆராவின் பேச்சில் அதிர்ந்தவளுக்கு “டிவோஸ்” எனும் வார்த்தையில் உயிரே போனது. தன்னைப் பிரிந்து விடுவானோ என்ற நினைப்பே ஆயிரமாயிரம் அதிர்வலைகளை அவளுள் ஊடுறுவச் செய்தது.

 

“ஆரா! கடவுள் மேல் ஆணையா உண்மையை சொல்லு. உன் விச்சு என் விஷ்வாவா? என்னால இதை நம்ப முடியாது” குரல் கம்மக் கேட்டாள் நவி.

 

“அப்படி இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்னு நானும் கூடத் தான் நினைக்கிறேன். ஏன்னா எனக்கு இதையெல்லாம் சொல்லி உங்களை சங்கடப்படுத்த ஒரு மாதிரி இருக்குக்கா! ஆனால் உண்மையை யாரால் மாற்ற முடியும்? என் விச்சு உங்களுக்கு தாலி கட்டுன அதே விஷ்வஜித் தான். இது சத்தியம்.

 

கோயில்ல வெச்சு யாராவது பொய் சொல்லுவாங்களா? ஆனாலும் உங்களால நம்ப முடியலனு புரியுது. விச்சு ஃபோன்ல என் நம்பர் ஹனினு சேவ் செஞ்சிருக்கும். அதை வேணா செக் பண்ணி பாருங்க” என்று கூறியவளின் பேச்சு மற்றவளை கொன்று புதைத்தது.

 

‘கடவுளே இது பொய்யாகக் கூடாதா?’ என மனதினுள் ஓலமிட்டாள் அவள்.

 

“அக்கா! ஃபீல் பண்ணாதீங்க. விச்சு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தான்னா அவனுக்கு உங்களை கண்டிப்பா பிடிச்சு இருக்கும். ஏதோ ஃபீலிங்ல என் கூட வந்துருவேன்னு சொல்லிட்டான். நான் அவன் கூட சேர்ந்து வாழுற எண்ணத்தை நேற்றே அழிச்சுட்டேன்.

 

எனக்கு பழக்கப்பட்ட மூர்த்தி அங்கிள் அவர் மகனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க போறார். அநாதையாக இருந்த எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணவர் அவர். அதற்கு நன்றிக்கடனா நான் அவர் சொன்னதை செய்யப் போறேன். விச்சுவை என்னால நிச்சயம் மறந்திட முடியும்.

 

எல்லாருக்கும் முதல் காதல் ஜெயிக்குறது இல்லை. எனக்கும் அப்படி ஆயிடுச்சு. நான் நாளைக்கே அங்கிள் கூட கோயமுத்தூர் கிளம்புறேன். இனி உங்க லைஃப்ல ஆரா வர மாட்டா.

 

எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு தெரிந்தால் விச்சு உங்க கூட வாழ ஆரம்பிச்சுடுவான். நான் ஏதோ விட்டுக் கொடுக்கறேனு நினைக்க வேண்டாம். உங்களுக்கு என் மேல கொஞ்சமாவது பாசம் இருந்தால் அவன் கூட எல்லாம் மறந்துட்டு வாழுங்க அக்கா” வைஷுவை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் ஆரா.

 

“அழாத ஆரா. நீயே விஷ்வாவை மறக்க நினைச்சதுக்கு அப்பறம் என்னால எதுவும் பேச முடியாது. உன் மூர்த்தி அங்கிள் பையன் கூட சந்தோஷமா இரு” என்று அவள் தலையை வருடினாள் மாது.

 

“விச்சு கிட்டேயோ அவன் ப்ரெண்ட் மித்து கிட்டேயோ இதைப் பற்றி இனி பேச வேண்டாம் கா. இப்படி ஒன்னு நடந்ததையே மறந்துட்டு புதுசா வாழுங்க. நான் வரேன்” வலி நிறைந்த புன்னகையுடன் விடை பெற்றாள் ஆரா.

 

இன்னமும் கூட நம்ப முடியாது ஒரு மனம் துடிக்க, ஆராவின் கண்ணீரில் கரைந்து அதனை நம்பியது இன்னொரு மனம். மொத்தத்தில் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது அவள் நிலை.

 

“ஜித்து! உன் மேல வெச்ச என் காதல் குறைந்து போயிடுமோனு பயம்மா இருக்கு. இந்த தாலியை எந்த சந்தோஷமும், உரிமையும் இல்லாமல் சுமக்குறேனோனு தோணுது” நடுங்கும் விரல்களால் கழுத்தில் தொங்கிய தாலியை இறுகப் பற்றி மார்போடு சேர்த்துக் கொண்டாள் ஜித்துவின் நவியானவள்.

 

நட்பு தொடரும்…..!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!