விஷ்வ மித்ரன்
நட்பு 37
கண்களை மூடி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. மெல்லிய இசையோடு கூடிய அந்தப் பாடலில் கூட லயிக்க முடியாது போயிற்று அவளுக்கு.
“இன்னிக்கு விஷ்வா கிட்ட ஆரா பற்றி கேட்டே ஆகனும். மனசுல போட்டு புழுங்கிட்டு இருக்கிறதால எதுவும் ஆகப் போவதில்லை. கேட்டுட்டேனா ஒரு முடிவு கிடைக்கும்” என நினைத்துக் கொண்டவளுக்கு ஆராவை விச்சு காதலித்து இருக்கக் கூடாது என்று மனம் தவித்தது.
“ஓய் நவி” என அவளிடம் வந்து அமர்ந்தவன், “எனக்கு இப்போல்லாம் உன் கூட அதிகதிகமா பேசிட்டே இருக்கனும்னு தோணுது” என்றான்.
“இல்லனா மட்டும் யோசிச்சு யோசிச்சு கொஞ்சமா பேசிடுவீங்களா? பேசுறதே அதிகம். இதுல இன்னும் அதிகமா பேச போறீங்களா? என் காது ஜவ்வு கிழியுறது கன்பார்ம்”
“அப்படினா இந்த நேரத்திற்கு என் வீட்டு ஆட்களுக்கு காது இல்லாமலே போய் இருக்கனும். சரி உன் ஆசைப்படி நான் பேசாம இருக்கேன். பட் அதுக்கு பதிலா நீ பேசு”
“நானா? என்னால முடியாது” என நகத்தைக் கடிக்க, “இதென்ன புதுப் பழக்கம்? நகம் கடிக்காத” கையை வாயில் இருந்து எடுத்து விட்டான்.
“சும்மா சார் மாதிரி அதைப் பண்ணாத இதைப் பண்ணாதனு சொல்லாதீங்க” இதழ் வளைத்தாள் அவள்.
“அச்சோ! கடனை மறந்தே போயிட்டேன். எங்கே திருப்பிக் கொடுக்குற மாதிரி தெரியலையே” என்று புருவம் தூக்க,
‘ஆரம்பிச்சுட்டான் யா! இனி கடன் கடன்னு அதைப் பிடிச்சுக்கிட்டு தொங்க துவங்கிடுவான்’ என தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“நான் என்னவோ மலையைத் தூக்கிக் கொண்டு வர சொன்ன மாதிரி ரியாக்ட் பண்ணுற? இப்படி ஈசியான கடனை யாரும் தர மாட்டாங்க”
“அதே அதே தான்! அவ்வளவு ஈசியான ஒன்னைத் தந்துட்டு ஓவரா லொள்ளு விடாதீங்க. அப்படியே வெச்சுக்கட்டும்னு விட்றுங்க”
“உன் கிட்டயே பத்திரப்படுத்தி வெச்சுக்க ஆசைப்படுற. சரி நீயே வெச்சுக்க. பட் நான் என்ன ஹெல்ப் கேட்டாலும் உடனே உதவனும்” என்று சொன்னான் விஷு.
“அப்பாடா! பெரிய மனசு பண்ணி கடன் தொல்லையில் இருந்து என்னை விடுவிச்சுட்டீங்க. சோ அதுக்கு பதிலா எப்போ என்ன ஹெல்ப் கேட்டாலும் பண்ணுறேன்” பெருமூச்சு விட்டாள் அவள்.
ஆனாலும் அவன் இனிமேல் முத்தம் கேட்டு அன்புத் தொல்லை செய்ய மாட்டான் என நினைக்கும் போது ஒரு வித ஏக்கம் இருதயத்தில் படர்ந்தது.
“உன் முகத்தைப் பார்க்கும் போது என்னவோ கடனை கொடுக்க முடியலையேங்குற ஏக்கம் இருக்கிற மாதிரி தெரியுது. அப்படி ஒரு கில்ட்டி ஃபீலிங்ல உன்னை தள்ள விரும்பல. சோ உனக்கு திருப்பி தந்தே ஆகனும்னு தோணுச்சுனா தா. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” பெரிய தியாகச் செம்மல் போல் பேசினான் அவன்.
“இல்லை. எனக்கு எந்த கவலையும் இல்லை. இப்போ கடனை வாபஸ் வாங்கி எனக்கு அதை உதவியாக நெனச்சுக்க சொன்னீங்க தானே? இனிமேல் கடன் பத்தி பேசக் கூடாது” என ஆர்டர் போட்டாள்.
“அப்படியே ஆகட்டும் அம்மணி” இடை வரை குனிந்து வணங்கினான் விஷ்வா.
“விஷு நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்”
“கேட்கனும்னா சட்டு புட்டுனு கேட்டுரனும். கேட்கனும்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கக் கூடாது”
கேட்டு விட நினைத்தவளுக்கு இப்பொழுது வாய் வரை வந்த வார்த்தைகள் வந்த வேகத்தில் உள்ளிறங்கி செல்ல ஆரம்பிக்க, “அ…அது” என தடுமாறினாள்.
“எ…எது?” என யோசனை செய்வது போல் பாவனை செய்தவன் கன்னத்தைக் காட்டி, “இ…இதுவா? இதுன்னா ரொம்ப யோசிக்காத. சூடு இறங்க முன்னாடி டக்குனு தந்துரு” முத்தம் தா என்பதாக செய்கை செய்தான்.
“நீங்க என்னைக் கேட்க விடாம சும்மா முத்தம் பத்தியே பேசாதீங்க. எப்போவும் அதே நினைப்பு தானா?”
“எப்போவாவது நீ ஆசையா எனக்கு தந்து இருக்கியா? தந்தா எங்கே நான் அதே நினைப்புல இருக்க போறேன்?”
“கடவுளே கடவுளே! கொஞ்ச நேரம் என்னை பேச விடுங்க” என அவள் கத்த, பேசு என்பதாக அமைதியானான்.
“ஹனினு யாரையாவது உங்களுக்கு தெரியுமா?” இல்லை என்று விட வேண்டும் என இல்லாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள் வைஷு.
இவளுக்கு எப்படி ஹனி மேட்டர் தெரியும்? நான் ஃபோன்ல இவ பெயரை ஹனினு சேவ் பண்ணத பார்த்திருப்பாளோ? இல்லை நான் தூக்கத்தில் எதுவும் உளறிட்டேனா? என யோசித்தவனுக்கு அவள் முகம் சொன்னது எதுவும் தெரியவில்லை என்று.
“எஸ்! தெரியுமானு எப்படி ஒரு வார்த்தையில் கேட்டுட்ட? வார்த்தைகளால் சொல்ல முடியாத உறவு என் ஹனி” அவன் முகத்தில் அத்தனை பிரகாசம்.
“அவ உங்களுக்கு யார்? நீங்க அவளை லவ் பண்ணுனீங்களா?” தனது அதிர்வை மறைத்துக் கொண்டு கேட்டாள் அவள்.
“ஆமா. லவ் பண்ணேன். ஹனி! அவள் உண்மைக்குமே ஹனி மாதிரி அப்படி இருப்பா. அவளைப் பற்றி நினைக்கும் போதே மனசு தித்திக்குது” அவன் கூறிய ஹனி அவன் மனதில் இருக்கும் நவியை.
ஆனால் அந்த நவியோ அது வேறு ஒருத்தி என்று புரிந்து கொண்டாள்.
“அவ பெயர் என்ன?” கண்கள் கலங்கிப் போனது கேட்கும் போது.
“அதை சொல்ல முடியாது. என் ஹனியை மட்டும் தான் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணுனேன். அவளைத் தான் இப்போதும் லவ் பண்ணுறேன். இனியும் இந்த உயிர் இருக்கும் வரை லவ் பண்ணுவேன்” என்று விட்டுச் சென்றான் விஷ்வா.
அவன் மனமோ, ‘கொஞ்ச நாளைக்கு ஹனி யாருனு சொல்லாமல் உனக்குள்ள என் மேல இருக்கும் காதலை அதிகமாக்குறேன். அப்பறமா அது நீ தான்னு உனக்கு தெரிய வைக்கிறேன். கொஞ்சம் காத்திரு ஹனி’ என தன் நவியைக் கொஞ்சிக் கொண்டது.
அவளோ வேதனை நெஞ்செங்கும் பெருக நிற்கலானாள். அவன் மனதில் இருப்பது ஹனி தானா? ஆரா எனும் ஹனி. அப்போது இந்த நவிக்கு இடமில்லையா என ஏக்கத்தில் துவண்டு போனாள்.
“ஏன் விஷு இப்படி சொல்லிட்டீங்க? ஹனி உன் மனசுல இருக்கான்னு எப்படி உங்களால என் கிட்டேயே சொல்ல முடிஞ்சது? அப்போ நிஜமாவே ஆரா கூட என்னை விட்டுட்டு போயிருவீங்களா?
அவளைத் தான் பிடிச்சிருக்குனா ஏன் இந்தக் கல்யாணம்? ஏன் இந்த நெருக்கம், பாசம் எல்லாம்? அப்போது அவன் தந்த முத்தங்கள் எல்லாம் பொய் தானா?
“நோஓஓ! விஷு கண்ணுல நான் காதலைப் பார்த்திருக்கேன். அவன் தந்த முத்தத்தில் அன்பை உணர்ந்திருக்கேன். அவன் பேச்சுல உரிமை இருக்கும். நெருக்கத்தில் கூட ஒரு சுகம் இருக்கும்” அவளால் இப்பொழுது கூட விஷ்வாவை ஆராவுக்குரியவன் என ஏற்க முடியவில்லை.
“நீ என் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாமே? ஏன் என்னை இப்படி படுத்துறே? விஷ்வா எனக்கு வேணும். அவன் என் விஷ்வா! எனக்கானவன்! என் ஜித்து” கண்களில் கண்ணீர் வழிந்தது பாவைக்கு.
பாதி நம்பினாலும், மீதி எண்ணங்கள் விஷ்வாவை கெட்டவனாகக் காட்டவில்லை. ஆகையால் இறுதியாக அவனது அலைபேசியைப் பரிசோதிக்க முடிவெடுத்தாள்.
மேசையில் இருந்த ஃபோன் கண்ணில் பட அதைக் கையில் எடுத்தவளுக்கு ஒரு வித நடுக்கம். அனுமதி இல்லாமல் அடுத்தவர் பொருளைத் தொடுகிறோம். தவறு செய்கிறோம் என மனம் குறு குறுத்தது. ஆனாலும் தனக்கு இருக்கும் சந்தேகத்துக்கு முடிவு கட்ட பார்த்தேயாக வேண்டும் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு லாக்கை உடைத்தாள்.
விரல்கள் நடுக்கத்தில் தந்தியடிக்க கான்டக் லிஸ்டுக்குள் நுழைந்து நம்பரைத் தேடியவள் காலடி ஓசையில் நிமிர்ந்து பார்க்க அவளை முறைத்துக் கொண்டிருந்தான் கணவன்.
“வி…விஷு… விஷு” என தட்டுத் தடுமாறி அழைக்க, “ஃபோனைக் கொடு டி” என வேகமாகப் பிடுங்கினான்.
“என் ஹனி யாருனு இதில் தேடப் போறியா? அதை உன் கிட்ட நானே சொல்லுவேன். அப்போ உனக்கு தெரியும். அது வரை வெயிட் பண்ணு பேபி” என கன்னம் தட்டினான்.
“ஆமா! ஹனி நம்பரை பார்த்துட்டியா?” அவன் குரலில் தெரிந்த பதற்றம் வைஷுவை கோபம் கொள்ள வைத்தது. ஆயினும் மறைத்துக் கொண்டு, “இல்லை” என்றாள்.
‘தாங்க் காட்! ஹனிங்குற அவளோட நேமை பார்த்தால் நான் பண்ண போற சப்ரைஸ்கே அர்த்தம் இல்லாமல் போயிரும். கொஞ்சம் பொறுத்துக்க ஹனி கியூட்” அவளை காதலுடன் பார்த்தான் கள்ளத்தனமாக.
“அப்பாடா! தாங்க் யூ நவி. நல்ல வேலை பார்க்கலை. லாக் மாத்தினால் தான் நீ அடங்குவ இல்லனா திரும்ப பார்க்க ட்ரை பண்ணுவியே” லாக்கை மாற்றி விட்டு வெளியேறினான் அவன்.
அவனோ பார்க்கவில்லை என பெருமூச்சு விட, இவளோ ஹனி எனும் பெயரில் ஆராவின் பெயரைப் பார்த்து உஷ்ணப் பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்தாள்.
தனது நம்பிக்கை பொய்யாகிப் போன இயலாமையிலும், காதல் தோற்றுப் போன வலியிலும் மனம் வெந்து துடித்தது. அனைத்து உணர்வுகளும் கோபமாக உருவெடுத்தது.
“என்னை ஏமாத்திட்டல்ல விஷ்வா! என்ன தைரியம் இருந்தா என் கிட்டயே ஹனி பத்தி சொல்லுவ? ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டு என் கூட நெருங்கிப் பழகி கல்யாணமும் பண்ணுன. இப்போ எனக்கு துரோகம் பண்ணிட்டு அவளை மனசுல வெச்சுக்கிட்டு இருக்கே.
உனக்கு ஐ லவ் யூ சொல்லி காதலை அள்ளிக் கொட்ட இருந்தேனே. உன்னை நம்பிய என் அண்ணனுக்கும் எனக்கும் துரோகம் பண்ணிட்ட. அண்ணா கிட்ட உன்னை பத்தி சொன்னா உடைஞ்சு போயிடுவாரே? நான் எப்படி சொல்லுவேன்? என்னை இக்கட்டில் தள்ளிட்டியே! ஐ ஹேட் யூ டா. ஐ ஹேட் யூ” கோபத்தில் பொங்கியளுக்கு அவனது நவி எனும் மென்மையான அழைப்பு செவியில் கேட்க, உடைந்து அழுதாள் மெல்லியவள்.
…………….
அக்ஷராவை சந்திக்க வந்திருந்தாள் அவளது நண்பி த்ரிஷா. அவளைக் கண்டதும் ஓடோடி வந்து அணைத்துக் கொண்டாள் அக்ஷு.
“ஹேய் நீ வருவேன்னு சொன்னப்போ நம்பல. நிஜமாவே வந்துட்டியே” என்றாள் அக்ஷரா.
“நான் சொன்னா செய்வேன் டார்லிங். எங்கே டபுள்ஸ்?” என நண்பர்களைத் தேட, “இதோ வந்துட்டோம் ஓட்டைப் பானை” என வந்தனர் நண்பர்கள் இருவரும்.
“விஷுண்ணா! ஒரு தடவை கீழே விழுந்து பானையை ஓட்டை போட்டுக் கொண்டு வந்ததுக்கு தினமும் ஓட்டைப் பானைனு சொல்லி கிண்டல் பண்ணுறது எல்லாம் ஓவர்” என சிணுங்கினாள் த்ரிஷா.
“அப்படித் தான் நான் சொல்லுவோம். எதுக்கு இந்த பக்கம்? கல்யாண வீட்டுப் பலகாரம் சாப்பிட வந்தியா?” என்று கேட்டான் விஷு.
“என்னைப் பார்த்தா அதுக்கு வந்த மாதிரியா தெரியுது? என் அண்ணனுங்களை, அண்ணியை, அக்ஷு கழுதையை பார்க்க ஆசையா வந்தேன்”
“ஏன்டி எருமை எல்லாரையும் அழகா பெயர் சொல்லிக் கூப்பிட்டு என்னை மட்டும் கழுதைனு கேவலப்படுத்துற” தோழிக்கு அடித்தாள் அக்ஷு.
“ஆமா! பாவம் என் பொண்டாட்டி. அவளை கழுதைனு கூப்பிடாத. வேணும்னா டொங்கினு கூப்பிடு” என மித்து உச்சுக் கொட்ட,
“போங்கடா லூசுங்களா. அடியே த்ரிஷு நீ மித்துவை அண்ணானு தானே கூப்பிடுவ. நான் அவனுக்கு வைஃப் அதனால என்னை இனிமேல் அண்ணினு மரியாதையா கூப்பிடு”
“என்னால முடியாது டி! வைஷு அண்ணி எங்கே?”
“நவி தூங்குறா த்ரிஷு” என்றான் விஷ்வா.
“உங்க ஹனி கிட்ட லவ்வ சொல்லிட்டீங்களா அண்ணா? என் வைஷு அண்ணியை காக்க வைக்காமல் சீக்கிரம் சொல்லிருங்க” அவனது காதில் கேட்டாள் த்ரிஷா.
“இன்னும் இல்லை. கூடிய சீக்கிரமே சொல்லிருவேன்” என விஷு சொல்ல, “அங்கே என்னடி இரகசியம்?” என சண்டைக்கு வந்தாள் அக்ஷு.
“அது எனக்கும் என் விச்சுக்கும் இருக்கிற ரகசியம்” என்று த்ரிஷா கூற, நொடித்துக் கொண்டாள் நண்பி.
விஷுவும் மித்துவும் சென்று விட, “உன் லவ் மேட்டர் என்னாச்சு? லவ்வருக்கு ஏதோ ப்ராப்ளம்னு சொன்னியே. எல்லாம் ஓகே ஆகிருச்சா?” என்று வினவினாள் அக்ஷரா.
“சால்வ் பண்ணிருவேன். நானும் அவனும் பிரிய காரணமானவங்களை சும்மா விட மாட்டேன்” என்று வன்மத்துடன் கூறினாள் த்ரிஷா.
“நீ இப்படிலாம் டென்ஷன் ஆகாத. உன் லவ்வர் யாருனு சொன்னா விஷு கிட்ட சொல்லி ப்ராப்ளத்தை சால்வ் பண்ணி வைக்க ட்ரை பண்ணலாமே”
“இல்லை டார்லிங்! நான் பார்த்துக்கிறேன். உன்னையும் இதுக்குள்ள இழுத்து விட எனக்கு இஷ்டம் இல்லை. நான் போயிட்டு வரேன்” என அக்ஷராவை அணைத்து விடுவித்து விட்டுச் சென்றாள் த்ரிஷா.
……………..
மித்ரன் இல்லாமல் தூக்கம் வரவில்லை மனைவிக்கு. உருண்டு பிரண்டு கொண்டிருக்க உள்ளே நுழைந்தான் மித்து.
“எங்கே டா போன இவ்ளோ நேரம்? எங்கேயாவது போனா சட்டுனு கிளம்பி வராமல் அங்கேயே புதைஞ்சிருவியா?” படபடவென பொரிந்தாள் பெண்.
“வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா சரவெடி” என சிரித்தவாறு அறைக் கதவைத் தாழிட்டு விட்டு வந்தான்.
“நீ லேட் பண்ணிட்டு என்னை சரவெடி சரக்கு குடினு சொல்லாத”
“ஹா ஹா! என் சண்டைக் கோழிக்கு என்ன கோபமாம்? புருஷன் இல்லாமல் அவளால் இருக்க முடியாதாமா?” அவளிடமே அவளைப் பற்றிக் கேட்டான் கணவன்.
“இருக்க முடியும். ஆனால் தூங்க முடியாது” என அவள் பட்டென சொல்ல, “ஒஓ! அப்படியா? தூங்க முடியாதா? தூக்கத்தைத் தொலைக்க முடியாதா?” என்று கொண்டு அவளை நெருங்கி வந்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து, “உன்னை ஹக் பண்ணாம தூக்கம் போக மாட்டேங்குது. அதைத் தான் சொன்னேன். நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை” என விலகி ஓட,
அவளை இழுத்து, “நான் என்ன நினைச்சேன்?” இடையில் கை போட்டு தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான் ஆடவன்.
“ஒ..ஒன்னும் இல்லையே” அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் காரிகை.
“இப்போல்லாம் அதிகமா வெட்கப்படுற டி”
“யேன் உனக்கு பிடிக்கலையா?”
“ரொம்ம்ம்ம்ப பிடிச்சுருக்கு. வெட்கப்பட்டு என்னை மயக்குற டி மாய மோகினி” அவள் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து இணைத்துக் கொண்டான்.
“அப்படியா? எப்படி மயக்குறேன்? கொஞ்சம் சொல்லு புருஷ்”
“மின்னி மின்னி பிரகாசிக்கின்ற இந்த விண்மீன் கண்கள் என்னை காந்தம் மாதிரி ஈர்க்குது. இந்த கன்னங்கள் கடித்து சாப்பிட சொல்லுது. மூக்கை கிள்ளி விடத் தோணுது. இந்த ஸ்ட்ரோபரி லிப்ஸ் அப்பப்பா! என் பார்வையை அங்கேயே கொண்டு போய் எதுவும் குடிக்காமலே முழுசா போதை ஏத்துது” அவளிதழை இரு விரல்களால் வருடி வித்தை காட்டினான்.
“எங்கே இருந்தாலும் லாஸ்டா லிப்ஸ்ல வந்து நிற்கிறியே கேடி” அவனது மீசையைப் பிடித்து இழுத்தாள் அவள்.
“இவ்ளோ பெருசா இல்லாமல் அரும்பு மீசை இருக்கிற அருள் மேல் தான் எனக்கு காதல் வந்தது. ஸ்மார்ட்டா, ப்ரைட்டா, ரொம்ப கியூட்டா இருப்பல்ல அப்போ. நீ காலேஜ் போய் வரும் போது கூட ரோட்டுல ஓரமா நின்னு ரசிப்பேன்” என்றாள் அவன் மீசை முடிகளை விளையாடிக் கொண்டு.
“அடிப்பாவி! நான் கூட நீ ஐஸ்கிரீம் சாப்பிட தான் தினமும் வரேன்னு நினைச்சேன். பார்த்தா என்னை சைட் அடிக்க வந்திருக்க” அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான் கணவன்.
“நோ நோ! ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டே உன்னை சைட் அடிக்க வந்தேன்” என கண்ணடித்தாள்.
“ஐஸ்கிரீமை விட்டுக் கொடுக்க மாட்டியே” என்றவன், “சொன்ன மாதிரி சாக்லேட் கொண்டு வந்திருக்கேன். சாப்பிடலாமா?” அவளது நெற்றி தீண்டிய முடிகளைக் காதோரம் சொருகி விட்டான்.
“சாக்லேட்டா? கொடு கொடு” என முகம் விகசிக்க அவள் பார்க்க, “அப்படி கொடுக்க மாட்டேன்” என கொண்டு வந்ததைக் காட்டினான்.
“டேய் ஹாட் சாக்லேட்! அய்ய் எனக்கு ரொம்ப பிடிக்கும்” அவள் கையை நீட்டினாள்.
“நான் அன்னிக்கு பண்ண மாதிரி ட்ரை பண்ணு. ம்ம் கமான்” ரகசியக் குரலில் அழைத்தான் அருள்.
“ம்ஹூம் சரி” என்றவள் அவன் முகத்தில் அதனைப் பூச எத்தனிக்க, “கையை யூஸ் பண்ணாமல் நீ என் முகத்தில் பூசனும்” என்றான்.
“இதெல்லாம் ஓவரு டா. என்னால முடியாது” என சிணுங்கி அவன் அசந்த நேரமாகப் பார்த்து சட்டென அதை எடுத்தவள் அதைக் குடித்து விட்டாள்.
“போங்காட்டம் டி. யூர் சீட்டிங்” என அவன் செல்லக் கோபத்தில் முகம் திருப்ப, “டேய் கோவக்காரா” அவன் பின்னந்தலையில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்து அவனிதழைத் தன் இதழால் சிறை செய்தாள்.
அவனோ இந்த அதிரடித் தாக்குதலில் விழி விரிக்க, கண்களால் சிரித்தவள் இதழ் வழியாக சாக்லேட்டைக் கடத்தத் துவங்கினாள்.
ஹாட் சாக்லேட் பெண்ணவளின் இதழ் வழியே வந்ததில் புது சுவை சேர்க்க, அவளிதழையும் அதனோடு சேர்த்து சுவைத்தான் காதலன்.
ஹாட் சாக்கலேட் ஹாட் முத்தங்களோடு, ஹாட் ஸ்பரிசங்களோடு சுடச் சுட பரிமாறப்பட்டது.
இன்று இவள் வன்மையோடு அதிரடியாய் அவனை ஆட்கொள்ள, அதில் மென்மையாய் மூழ்கி லயித்தான் மித்ரன்.
நட்பு தொடரும்…..!!
✒️ஷம்லா பஸ்லி