4. இதய வானில் உதய நிலவே!

5
(5)

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍

நிலவு 04

 

ஷாலுவைத் தூங்க வைத்து விட்டு பிறந்த நாளன்று உதய் சிறுவர்கள் மூலமாகத் தந்த நாவலை எடுத்தாள் அதியா.

 

“உதய நிலவே! காதல் கொள்ள வருவாயா?” என்ற நாவலின் தலைப்பைப் பார்த்தாள்.

 

“உதய் ப்ளஸ் நிலா உதய நிலவு. ம்ஹூம் இதைக் கூட மூளையாத் தான் எடுத்திருக்கான் பயபுள்ள” என்று நினைத்தவளுக்கு இப்பொழுது கோபம் வரவில்லை. அந்த நாவலில் கதாநாயகன் உதய்! அவனோ குடும்பம் நண்பர்கள் என்று வாழும் ஹை க்ளாஸ் ஃபேமிலி.

 

“இந்த உதய்யும் அப்படித் தான் இருப்பான். சம் டைம்ஸ் அவனோட பேச்சுல உறவுகளுக்கான ஏக்கம் இருக்குறா மாதிரி எனக்குத் தோணும். அது நிச்சயம் பிரம்மை தான். ஏன்னா அவன் அப்பாம்மா தம்பி தங்கச்சினு சந்தோஷமா வாழுறவன் தான். யாருமில்லாதவன்னா அவன் முகத்துல இப்படி எந்த நேரமுமே சிரிப்பு இருக்குமா?” நாவலை மூடி வைத்து விட்டு தானாகவே ஒரு கற்பனையைச் செய்து கொண்டாள் அதிய நிலா.

 

யாருமற்ற ஏக்கத்தையும் தன்னை வருத்தும் தனிமையையும் மறக்கவே அவன் புன்னகைக்கிறான் என்பதை பாவம் அவள் அறியவில்லை.

 

தனது மனம் அவன் பால் சாய்வதை அறிந்து “ப்ச் என்ன இது? நான் எதுக்கு இப்போ அவனை பற்றி ஓவரா நினைக்கிறேன்? இது தப்பு” என தலையை சிலுப்பிக் கொண்டு கட்டிலில் சரிந்தவள் அப்படியே தூங்கியும் போனாள்.

 

இங்கோ ஃப்ளாட்டில் தனதறை யன்னல் வழியாக வானில் உதித்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய வர்ஷன்.

 

“ரெண்டு நாளா இதயாவை பார்க்க முடியாமல் போச்சு. அவ குரல் கேட்காம என்னால இருக்க முடியல. அவங்க முகம் பார்க்காம பைத்தியமே பிடிக்க போகுது. நாளைக்கே போய் அவங்களை பார்க்கனும்” கண்களை மூடியவனின் விழித்திரைக்குள்ளும் கண் சிமிட்டிச் சிரித்தாள் இதயா.

 

“என்னைத் தூங்க விடாம பண்ணிட்டு நீங்க ஹாயா தூங்கிட்டு இருப்பீங்க தானே? நாளைக்கே வரேன். உங்களை டாச்சர் பண்ணுறேன் மை பியூட்டி ஏன்ஜல்!”

 

“உங்களை காணும் போது காதல் பொங்கி வழியுது. பக்கத்துல இருக்கும் போது உங்க கையை எடுத்து என் கைக்குள்ள சிறைபடுத்தி நெருக்கி அது மூலமா என் காதலை உணர்த்த நாடி நரம்பெல்லாம் துடிக்கும். உங்க பக்கத்துல இருக்கும் போது மட்டுமே என் ஹார்ட் பீட் நார்மலா இருக்கும். உங்களை தினமும் பார்த்து கண்ணு வழியா இதயத்தில் சேமிக்கனும்.

 

என்னை உங்களுக்கு ஒரு நாள் கண்டிப்பா பிடிக்கும். அது வரைக்கும் இதே மாதிரி தவிப்போட துடிப்போட, இதை விட பல மடங்கு காதலோட கையேந்தி நிற்பேன்” தலையணையை இறுக்கிக் கட்டிக் கொண்டான் தன் இதய தேவியாக நினைத்து.

 

அடுத்த நாள்,

 

நிறைய பாலர் பாடசாலைகளை அழைத்து கிட்ஸ் கமிட்டி நடாத்தும் கிட்ஸ் ஷோவிற்கு தானும் செல்ல வேண்டுமென வளவளத்துக் கொண்டிருந்தாள் ஷாலு.

 

“அத்துக் குட்டி…!! கிட்ஸ் ஷோக்கு போயாகனும். எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. கூட்டிட்டு போறியா?” என்று அவளது சுடிதார் நுனியைப் பிடித்து இழுத்தாள் ஷாலு.

 

“கூட்டிட்டு போகக் கூடாதுன்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன? எங்க ஆபீஸ்ல லீவ் எடுக்க முடியாது டா. எம்.டி அத்துவை திட்டுவார்” சான்விச் துண்டில் ஜாம் பூசினாள் அதி.

 

“போ என் கூட பேசாத” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது சின்னஞ்சிட்டு.

 

“புரிஞ்சுக்கோ செல்லம்” அவளிடம் அமர்ந்து தலையைத் தடவ கையைத் தட்டி விட்டாள்.

 

“உனக்கு என் கூட பாசம் இல்லை. வர்ஷு அங்கிள் கிட்ட சொன்னா உடனே கூட்டி போயிடுவார். என் கூட ரொம்ப பாசம்” என்று ஷாலு சொல்ல,

 

“என்ன டி வர்ஷு? என்னை விட உனக்கு அவன் முக்கியமா போய்ட்டான்ல?” கோபமாகப் பேசியவளின் குரல் உடைந்தது.

 

அத்துவின் இந்தக் கோபம் அண்ணன் மகளுக்குப் புதிது, அதிர்ந்து நின்றாள் ஷாலு. பின்னர் “சாரி அத்து!” தன் மீது தவறிருக்கிறதாக உணர்ந்தாளோ என்னவோ விசும்பலுடன் பெரியவள் முகத்தை அண்ணாந்து ஏறிட்டாள் சின்னவள்.

 

அவளை வாரியணைத்து “நானும் சாரி தங்கம்! உன் கிட்ட கோபப்பட்டுட்டேன். சாரி டா. அத்து சாரி” அவளது குண்டுக் கன்னங்களில் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள்.

 

அதிக்கு மனம் பிசைந்தது. இது வரை அவள் ஷாலுவிடம் கோபப்பட்டதே இல்லை. இன்று அவள் வர்ஷனை முதன்மைப்படுத்திய அதிர்வும் தாக்கமும் கோபமாக மாறி விட்டிருந்தது. ஆனால் உதய்யால் அவள் தன்னை விட்டும் பிரிந்து விடுவாளோ என்ற அச்சம் அவள் மனதில் கிஞ்சித்தும் ஏற்படாமல் போனது ஆச்சரியமே!

 

ஷாலுவை கிட்ஸ் ஷோ அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவளின் அலைபேசி டிங் டிங் மணியடித்தது.

 

இன்று எம்.டி மகனின் பர்த்டே பார்ட்டி அர்ரேன்ஜ் செய்திருப்பதாகவும் ஆபீஸ் லீவ் என்றும் மெயில் வந்திருக்க “ஹூர்ரே” என்று கத்தியவாறு ஷாலுவின் கையைப் பிடித்து சுற்றியவளுக்குத் தெரியவில்லை, இன்று எம்.டி மகனுக்கு பிறந்த நாளும் அல்ல. தனக்கு மிகவும் தெரிந்தவரான எம்.டி சந்திரனிடம் சொல்லி அவளுக்கு  மெயில் அனுப்பியது அவளின் அன்பு உதயா என்று.

 

ஷாலுவுடன் கிட்ஸ் ஷோவுக்குச் செல்ல வாயிலில் சிறுவர்களுக்குக் கொடுத்த பலூன் ஷாலுவுக்கும் கிடைக்க  சிரித்த முகமாகவே சிறுமி உள்நுழைய அதியின் கண்கள் தன்னையே அறியாமல் அவளவனைத் தேடின.

 

மேடையில் சிறுவர்களை மகிழ்வூட்டுவதாய் நிறைய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அடுத்ததாக ஒரு பெண்டா ஆடி அசைந்து நடனம் பயின்று அனைவரையும் சிரிக்க வைத்தது.

 

“அத்து! அந்த பெண்டா நம்ம வர்ஷு அங்கிளா இருக்குமோ?” என்று ஷாலு சந்தேகமாகக் கேட்க,

 

“அவனே தான்னு நினைக்கிறேன் பாப்பா” என்ற மங்கையின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

 

“பாப்கோர்ன் வேணும்” என்று சிறியவள் அதியின் கையைச் சுரண்ட “பாப்பு டொன்டடோய்ங்” என்று ஷாலுவின் மறுபுறத்தில் காலியாக இருந்த கதிரையில் வந்து அமர்ந்தான் வர்ஷன்.

 

“தேங்க்யூ சோ மச் அங்கிள்” பார்ப்கானைக் கண்ட சந்தோஷத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

“ஹலோ பெண்டா பேபி! மேடையில் ஆடுன பெண்டா நான் தான்னு கண்டுபிடிச்சிட்டீங்க போல” அதியை எட்டிப் பார்த்தான் அவன்.

 

“ச்ச ச்ச! நான் எதுக்கு உன்னை கண்டுபிடிக்கனும்? எனக்கு வேற வேலை இல்ல பாரு”

 

“பொய் சொல்லும் போது உங்க முகமே காட்டிக் கொடுக்குது. என்னை நீங்க கண்டுட்டீங்கன்னு உங்க கண்ணுல ஒரு செகண்ட் பளிச்சுன்னு வெட்டின மின்னலே சொல்லுச்சு. மேடையில நான் உங்களை மட்டும் தான் பார்த்திருந்தேன். நீங்களும் என்னை சைட் அடிச்சீங்க. ஒரு வயசுப் பையனை பச்சையா சைட் அடிக்க கூடாதுன்னு தெரியாதா? பொங்கி வந்து வெட்கத்தை அடக்கப் படாத பாடுபட்டேன் இது மா” இதயத்தைத் தடவினான் வேங்கை.

 

“எதுக்கு எப்போ பாரு நெஞ்சை தடவிட்டு இருக்கே? ஹார்ட்டுல ஓட்டை இருக்கா?” சிறு முறைப்போடு கேட்டாள்” அதி.

 

“நோ நோ! ஹார்ட்டுல ஓட்டை இல்ல! காதல் கோட்டை இருக்கு. அவ்வளவு ஸ்ட்ரோங்கா கட்டுன கோட்டைக்குள்ளே என் இதய ராணி சிம்மாசனம் போட்டு கம்பீரமா உக்காந்து இருக்கா. அவங்களைத்தான் பாசமா, நேசமா, காதலா தடவினேன்” சிரிப்போடு சொன்னான் அவன்.

 

“அப்பப்பா பேசாம நீங்க கவிஞனாகி இருக்கலாம். அதற்கான பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்கு”

 

“நான் கவிஞனாகினால் அதற்கு முழுக் காரணமும் நீங்க தான் அதி” என்று அவளை நோக்கி விரல் சுட்டிவிட்டு,

 

“ரதியாக என்னுள் நுழைந்து பேதையாய் இருந்த என்னையும் பெரும் கவிஞனாக்கி வைத்தாயே காதல் கவியே!” எனக் கவி பாடினான் அக்காதல் கவிஞன்.

 

“அட கவிதை  பேஷா இருக்கு. அப்படியே ஒரு பாட்டையும் எடுத்து விடுறது” தன்னை அறியாமல் அவனோடு பேசிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

 

“ஒரு பொய்யாவது சொல் கண்ணே! உன் காதல் நான் தான் என்று. அந்தச் சொல்லில் உயிர் வாழ்வேன்” கண்களில் காதலைத் தேக்கிப் பாடினான் அவன்.

 

“அங்கிள்…!! எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ” பூவிதழ்களை விரித்துப் புன்னகை பூத்தாள் ஷாலு.

 

“லவ் யூ டூ கியூட்டி” அவளைப் பாசமாக நோக்கினான்.

 

“உனக்கும் வர்ஷுவைப் பிடிச்சிருக்குல்ல. நீயும் ஐ லவ் யூ சொல்லு அத்து” அலுங்காமல் குலுங்காமல் அணுகுண்டைத் தூக்கி வீசினாள் சின்னவள்.

 

“வாட்? நோ வே” எனப் பதறினாள் அதி.

 

“நீ சொல்லியே ஆகணும். ப்ளீஸ் அத்துக் குட்டி” என்று அடம்பிடித்தாள் ஷாலு.

 

செய்வதறியாது கையைப் பிசையும் தன் தேவதையை கள்ளச் சிரிப்புடன் பார்த்தான் உதய். ஷாலுவை அமைதிப்படுத்த வேறு வழி இன்றி “ஐ…” என ஆரம்பித்த அதியாவைக் கண்டு “ஸ்டாப் இட்” என்று கை நீட்டித் தடுத்தான்.

 

“ஏன் அங்கிள் ஸ்டாப் சொன்னீங்க?” இளஞ்சிட்டு பாவமாகக் கேட்க, “அவங்களுக்கு என்னைப் பிடிச்சா எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லுவாங்க. அதுவரைக்கும் நாம இரண்டு பேரும் வைட் பண்ணலாம். இப்படி மிரட்டுனா என் பெண்டா பயந்துருவாங்க” ஷாலுவிடம் கொஞ்சலுடன் கூறியவனுக்கு அவள் இப்படி ‘ஐ லவ் யூ’ சொல்ல வந்தது பிடிக்கவில்லை.

 

அவன் காதலை உணர்ந்து ‘ஐ லவ் யூ உதய்’ என்று சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான். நேரங்கள் கழிய அதி ஷாலுவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள். போகும் அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வர்ஷா.

 

இவ்வாறு உதய் அவள் செல்லும் இடமெல்லாம் வருவதும், வாய் ஓயாமல் பேசுவதும், ஷாலுவோடு சேட்டை செய்வதும், அதியிடம் காதல் வசனம் பேசுவதுமாக நாட்கள் நகர்ந்தன.

 

அதியின் மனதில் அவன் முன்பை விட சற்று இடம் பிடித்திருந்தான்.

 

அன்று விடுமுறை தினம் என்பதால் அதி சற்று தாமதமாகவே எழுந்தால். உதய்யின் நினைவு சற்று அதிகமாகவே வந்தது அவளுக்கு.

 

“அத்து” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு வந்தாள் ஷாலு.

 

“குட் மார்னிங், கியூட்டி” என்று அவளை மடியில் இருத்திக் கொள்ள “நீ அப்படி கூப்பிடக்கூடாது. நான் உன் பாப்பா! வர்ஷுக்கு மட்டும் தான் க்யூட்டி” பெருமையாக சொன்னாள் சிறுமி.

 

“ஓஓ! அந்த மாயக்கண்ணனுக்கு மட்டும் தான் கியூட்டின்னு கூப்பிட உரிமை இருக்கா? சரி சரி” என உதடு குவித்தவளுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. மாறாக செல்லமாக முறைத்தாள்.

 

ஷாலுவை அழைத்துக் கொண்டு பார்க் சென்று பெஞ்சில் அமர்ந்திருந்தவளின் கண்கள் அவனைத் தேடி அலைபாய்ந்தன.

 

ஒரு பட்டம் அவள் மீது விழுந்தது. அதை தன் மீதிருந்து எடுத்து ஏதோ எழுதப்பட்டிருப்பதைக் கண்டாள்.

 

“உதயனைத் தேடித் தடுமாறும் இதயத்தில் அவனுக்கு இடம் தருவாயோ அதிய நிலவே?” என்றிருந்தது.

 

“இந்தக் கேடி இங்கே தான் எங்கோ இருக்கான்” என்று விழிகளைச் சுழற்ற “இதய நிலா” என்று சிரிப்புடன் வந்தமர்ந்தான் வர்ஷன்.

 

“அதிய நிலா” இதழ் வளைத்துச் சொன்னாள் செவ்வந்தியாள்.

 

“நோ நோ! மை உதய நிலா” கண்சிமிட்டினான் ஆனவன்.

 

“எதுக்கு பட்டம் விட்ட? உனக்கு சின்னப் பாப்பானு நினைப்பா?”

 

“புறாவில் தூது அனுப்புறது பழைய ஸ்டைல். அதான் ஒரு சேஞ்சுக்கு பட்டத்துல விட்டேன். பாருங்க என்னைத் தேடித்தேடி உங்க கண்ணும் மனசும் களைச்சு போச்சு. எதுக்கு வீணா தேடுறீங்க? டேய் உதய்னு ஒரு வார்த்தை சொன்னா உங்க முன்னால ‘சொல்லுங்க மகாராணி’ என்று வந்து நின்றிருப்பேன்” கண்களில் நவரசங்களும் தொனிக்கப் பேசினான்.

 

“ஓவர் இமேஜினேஷன் பண்ணாத மேன்….!! நான் உன்னைத் தேடினேனா? எதுக்கு தேடணும் எனக்கு வேற வேலை கிடையாதா” கடுகாகப் பொரிந்தாள் அதியநிலா.

 

“இருக்கு வேலை இருக்கு! என் காதலியா வர வேலை இருக்குங்க” பவ்யமாக கூறினான்.

 

வர்ஷுவை கண்ட ஷாலு கண்களில் மின்னலுடன் வந்து அவன் மடியில் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.

 

“என் செல்ல பாப்பா” உதய் அவள் கன்னத்தைக் கிள்ள களுக்கென நகைத்தாள்.

 

“ஏய் குட்டிக் குரங்கே! உன்னை வர்ஷு மட்டும் தான் க்யூட்டின்னு சொல்லணும்னு என்னைத் திட்டினல்ல. இப்போ அவன் நான் சொல்லுற மாதிரி பாப்பா சொல்லுறான். நீ சும்மா இருக்க?” சிறு பிள்ளையாகக் கேட்டாள் அதி.

 

“அது அப்படித்தான்” பழிப்பு காட்டினாள் ஷாலு.

 

“சரி கியூட்டி! நான் இனிமேல் உன்னை பாப்பா சொல்லல. பட் உன் அத்துக்கு சொல்லுவேன். ஏன்னா அவங்க தான் பாப்பா மாதிரி இருக்காங்க” முத்துப் பல் தெரிய சிரித்தவனை முறைப்புடன் பார்த்தாள் பாவை.

 

உதய்யின் பர்சை ஆராய்ச்சி செய்த ஷாலு அதன் உள்ளிருந்து சிறிய அளவிலான போட்டோ ஒன்றை எடுத்து “அத்து இங்க பாரு. நிறைய குட்டீஸ்” என்று அத்தையிடம் கொடுத்தாள்.

 

“அம்மு அனாதை ஆசிரமம்” என்ற பதாகையைப் பிடித்தவாறு பத்து சிறுவர்கள் இருந்தனர். 16 வருடங்களுக்கு முன்பு எடுத்ததாக அந்த போட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்தது.

 

அனைவர் முகத்திலும் கவலை வர்ணம் தீட்டியிருக்க ஒரு பையன் மட்டும் கண்களில் வலியுடனும் உதட்டில் சிரிப்புடனும் நின்றிருந்தான்.

 

“எனக்கு இந்த ஸ்மைலி பாப்பாவை ரொம்ப பிடிச்சிருக்கு. இது யாரு அங்கிள்?” அவனது முகத்தை ஷாலு வருட, அதியுமே அவனைப் பார்த்திருந்தாள்.

 

அவளுக்கு ஏதோ புரிவது போல் இருக்க “உ… உதய்”என அழைத்தாள் மெதுவாக.

 

“சொல்லுங்க தியா” அவளைக் குறுநகையுடன் பார்த்தான்.

 

“இவங்க யாரு…?” ஒருவாறு கேட்டே விட்டாள் அவள்.

 

“பதினாறு வருஷத்துக்கு முன்னால அம்மு ஆசிரமத்தில் வாழ்ந்த அனாதைப் பசங்க. அப்பா அம்மாவால உதாசீனப்படுத்தப்படும் ஏழ்மை நிலையாலேயும் கொண்டு வந்து விடப்பட்டவங்க. இவங்க கூட இருக்கிற இந்தப் பையன் அப்பா அம்மா முகத்தைக் கூட காணாத அவங்க கையால தொட்டுக் கூட பார்க்கப்படாத துரதிஷ்டசாலி” என்னும் போது அவன் முகத்தில் வலியின் சாயல்!

 

அதியாவின் இதயத்திலும் அந்தப் பையனை நினைத்து சுருக்கென வலி ஊடுருவியது.

 

“உன்னைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா சுமதி அக்கா கிட்ட கேட்டிருக்க முடியும். ஆனால் எனக்கு உன் கிட்ட கேட்கனும். என் மேல வச்சிருக்குற காதல் உண்மைனா உன்னைப் பற்றி என் கிட்ட சொல்லு. நீ யாரு? உன் அப்பாம்மா யாரு? உன் ஃபேமிலி எப்படி? எந்த மறுப்பும் சொல்லாம இப்போவே என் கிட்ட எல்லாம் சொல்லனும். சொன்னதுக்கு அப்பறம் ஒன்னு கொடுப்பேன்” தெரிந்து கொள்ளாமல் விடப் போவதில்லை என்பது போல் அவளில் அத்தனை உறுதி.

 

“மனசுல ஏக்கம், தனிமை, தவிப்பு அத்தனையையும் சுமந்திருந்தாலும் வெளியால சந்தோஷமா இருக்குற மாதிரி முகத்துல சிரிப்போட இருக்குற இந்த குட்டிப் பையன் வேற யாருமில்லை. நீங்க யாரை பத்தி தெரிஞ்சுக்க நினைக்கிறீங்களோ அதே உதய வர்ஷன் தான்! யாஹ் இட்ஸ் மீ” சாதாரணமாகக் கூறினான்.

 

பெரும் அதிர்வுடன் அவனை ஏறிட்டாள் ஏந்திழை. புகைப்படத்தில் இருப்பதைப் போலவே இப்பொழுதும் அவன் அதரங்களில் புன்னகை துள்ளி விளையாடியது.

 

தனது வாழ்வெனும் சோக சரிதத்தை கசந்த முறுவலுடன் கூறினான். அவனது புன்னகைத் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் கோடிக் கணக்கான கவலைகள் மெல்லியவளுக்குப் புரிந்தது.

 

பார்த்த நொடியிலிருந்து புதிராகவே தெரிந்த இவன் இன்று புதிதாகவும் புதுமையாகவும் தெரிய அவனையே இமை கொட்டாமல் பார்த்தாள் அந்த அதிசய வர்ஷனின் அதிய (நிலா) வர்ஷினி.

 

நிலவு தோன்றும்….!!🌛

 

✒️ ஷம்லா பஸ்லி🤍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

1 thought on “4. இதய வானில் உதய நிலவே!”

Leave a Reply to Kingston4082 Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!