விக்ரம் தான் சட்டென அவதானித்து, அவளை அவனிடம் இருந்து பிரித்து எடுக்க, “இது உன் ஸ்கூல் சான்வி”, என்று அவன் சொல்லவும், “சோ வாட்?”, என்று அவள் தோள்களை உலுக்க, “ஹெட் மிஸ்டர்ஸ் மாறி பிஹேவ் பண்ணு”, என்றான்.
“கிஸ் அடிக்கும் போது சாரும் கம்பெனி தான் கொடுத்தீங்க”, என்று அவள் சொல்லவும், அவனோ தலை கோதிக்கொண்டு, “நானும் ஆண் தானே! ஒரு அழகான பொண்ணு கிஸ் பண்ணதும் மயங்கிட்டேன்”, என்று சொல்லி அவன் எழ, “திருப்பி எப்போ பார்க்கலாம்?”, என்றவளை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தான்.
“உன் அண்ணாக்கு மட்டும் நீ என்ன லவ் பண்றது தெரிஞ்சிதுன்னு வச்சிக்கோ…”, என்று அவன் சொல்லும்போதே, உள்ளே நுழைந்து இருந்தான் ராகவ்.
ராகவோ விக்ரமை பார்த்து புருவம் சுருங்க, “நான் அப்போ கிளம்புறேன் மேடம் “, என்று சொல்லிவிட்டு விக்ரம் நகர்ந்து விட்டான்.
“இவன் எதுக்கு இங்க வந்தான்?”, என்று ராகவ் சான்வியை பார்த்து கேட்க, “ஆத்விக் பேரெண்ட்ஸ் வரல அதான் விக்ரம் வந்தாரு”, என்று சொல்லவும் அமைதி ஆகி விட்டான்.
ஆத்விக் வெளியே நிற்பதை அவனும் பார்த்தான் தானே!
“அவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கு சான்வி”, என்று ராகவ் சொல்லவும், “நான் ஏன் அவன் கிட்ட போ போறேன்?”, என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற ரேஞ்சில் தான் இருந்தது அவளின் முக பாவனை.
நண்பனின் எதிரி அல்லவா ஆகையால் தான் ராகவிடம் இவ்வளவு கண்டிப்பு.
“சரி நானும் கிளம்புறேன்”, என்று அவள் சென்றுவிட, ராகவ் சிறிது வேலை இருப்பதாக சொல்லி விட்டான்.
பார்க்கிங்கில் தான் ஆத்விக்குடன் நின்று இருந்தான் விக்ரம்.
“டெவில் வந்துட்டா”, என்று ஆத்விக் சொல்ல, “நான் டெவில்லா?”, என்று சான்வி கேட்க, “அப்படி தான் மாமா சொன்னார்”, என்று சொல்லவும், அவனை முறைக்க, அவனோ இதழ் கடித்து சிரிப்பை அடக்கி கொண்டான்.
விக்ரமோ, “ஆத்விக் நீ கார் உள்ள ஏறு”, என்று கதவை திறந்து காட்ட, அவனும் உள்ளே ஏறிக்கொண்டான்.
ஆத்விக் ஏறிக்கொண்டதை உறுதி செய்து கொண்டு, அவளின் இடையை பற்றியவன், அவளை காரின் பின்னே இழுத்து சென்று, அங்கே சிசிடிவி இல்லாததை உறுதி செய்து கொண்டு, “எனக்கு எதையும் பிரீயா வாங்கி பழக்கம் இல்ல”, என்று சொன்னவன், அவளின் இதழை கவ்விக்கொண்டான்.
வன்மையான முத்தம் அது! மெல்லிடையாளின் இடையை பிடித்து வளைத்து அவளின் இதழை சுவைத்து கொண்டு இருந்தான் அந்த சத்திரியன்.
அவளின் கைகளோ தாமாக அவனின் அடர்ந்த கேசத்தை பற்றி கொள்ள, இரண்டு நிமிடங்கள் கழித்து பிரிந்து விட்டனர்.
“லிப் பாம் என்ன பிளவர்?”, என்று கேட்க, “ப்ளாக் செர்ரி”, என்று சொன்னவளிடம், “நல்லா இருக்கு இதையே கண்டின்யு பண்ணிக்கோ!”, என்று சொன்னவன், அவளின் இதழை வருடி விட்டு சென்று விட்டான்.
அவளுக்கோ அவனின் இந்த அதிரடியில் அதிர்ந்து தான் நிற்க வேண்டியதாக போனது.
அவனின் காரை எடுத்து கொண்டு அவன் கிளம்ப, அவளும் அவளின் காரை உயிர்ப்பித்து சென்று விட்டாள்.
ஆத்விக்கை அவனது வீட்டிற்கு தான் அழைத்து வந்து இருந்தான்.
“உன் சித்தப்பா இருக்கான் போல?”, என்று ஆத்விக்கை பார்த்து கேட்கவும், “ம்ம் பைக் நிக்குது”, என்று ஆத்விக் சொல்ல, காரை நிறுத்தி விட்டு, இருவரும் உள்ளே நுழைந்தனர்.
ட்ராக்ஸ் மற்றும் ட்ஷர்ட்டுடன் சமையல் அறையில் சமைத்து கொண்டு இருந்தான் பிரணவ்.
“சித்தப்பா”, என்று அவன் சொல்லிக்கொண்டே அவனின் அருகில் செல்ல, “ஹலோ சாம்ப்! போய் டிரஸ் செஞ் பண்ணிட்டு வா, நான் உனக்கு பிடிச்ச ரெட் சாஸ் பாஸ்தா செஞ்சி இருக்கேன்”, என்று அவன் சொல்லவும், துள்ளி குதித்து கொண்டு ஓடினான்.
பிரணவ்வும் விக்ரமும் தான் மிஞ்சி இருந்தன.
“என்ன சார் இன்னைக்கு கட்டி எல்லாம் பிடிச்சி யாரோ விஷ் பண்ணாங்க போல”, என்று நக்கல் தொனியில் பிரணவ் புருவம் உயர்த்தி கேட்க, “என்ன டா திமிரா?”, என்று அவனது கோர்ட்டை கழட்டி கொண்டு கேட்டான் விக்ரம்.
“உங்க கிட்டலாம் நக்கல் பண்ண முடியுமா? நீங்க எவளோ பெரிய பிசினெஸ் மென்”, என்று அவன் சொல்லவும், “சார் நீங்க எசிபி நினைவு இருக்கா?’, என்று விக்ரம் அவனை பார்க்க, “ம்கூம் என்ன எல்லாம் எவன் டா மதிக்கிறா? இன்னைக்கு அந்த வர மொளகா கூட உன்ன வச்சி என்ன ப்ளாக் மெயில் பண்ரா”, என்று அவன் சொல்லி முடித்தான்.
“அவளை வர மொளகானு சொல்லதான்னு எத்தனை தடவ சொல்லிற்கேன்”, என்று விக்ரம் கடுமையாக சொல்லவும், “பாத்தியா? அவளை பேசுனா உனக்கு எரியுது”, என்றவனை பார்த்து, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல”, என்றவன் அவன் அருகில் வந்து அவனுக்கு உதவி செய்ய துவங்கினான்.
பிரணவ்வும் விக்ரமும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.
“பாஸ்தா ரெடியா?’, என்று ஆத்விக் கேட்டுக்கொண்டு வர, “ரெடி”, என்று விக்ரம் மற்றும் பிரணவ் ஒரு சேர கூற, மூவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டு சாப்பிட துவங்கினர்.
மணி ஐந்து ஆகி விட்டது.
“சரி நான் கிளம்புறேன்! இன்னைக்கு ஒரு பார்ட்டி இருக்கு”, என்று அவன் சொல்லவும், பிரணவ் சிரித்து விட்டான்.
விக்ரம் அவனை முறைக்க, “மைத்திரியோட தான போற?”, என்று புருவம் உயர்த்தி கேட்க, ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
“வாழற டா மச்சான்”, என்று அவன் சொல்லவும், “சாவடி வாங்க போற”, என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அடுத்து அவனின் வீட்டிற்கு சென்று குளித்து பார்ட்டிக்கு தாயாரானவன், நேரே சென்றது என்னவோ மைத்திரியின் அபார்ட்மெண்டிற்கு தான்.
அவளும் அழகா தயாராகி இருக்க, அவனுடன் காரில் ஏறி கொண்டாள்.
“அழகா இருக்க மைத்திரி”, என்று அவன் சொல்ல, “தேங்க யு சார்”, என்றவளை பார்த்து, “லிப்ஸ்டிக் ஸ்மாட்ஜ் ஆகாதுல?”, என்று புருவம் உயர்த்தி கேட்க, அவளோ தலையை குனிந்து கொண்டு இல்லை என்று தலையசைத்தாள்.
பார்ட்டியை அடைந்து விட்டார்கள்.
அவர்கள் இறங்கும் அதே சமயம், வர்ஷாவும் அவளது காரை பார்க் செய்ய வந்து இருந்தாள்.
அடுத்த சில வினாடிகளிலேயே விஜயும் சாதனாவும் வந்து இருந்தார்கள்.
அனைவரும் உள்ளே செல்ல, அந்த பார்ட்டியை நடத்துபவரோ விக்ரமை பார்த்து, “அப்பா எப்படி இருக்காரு பா?”, என்று கேட்கவும், “நல்லா இருக்காரு அங்கிள்”, என்று சொன்னவன் மைத்திரியுடன் கடந்து விட்டான்.
அடுத்து விஜய், வர்ஷா வர, “அம்மா அப்பா எப்படி இருக்காங்க?”, என்று கேட்க, “நல்லா இருக்காங்க அங்கிள்”, என்று விஜயும் பதில் அளித்து உள்ளே சென்று விட்டான்.
பார்ட்டியும் துவங்கியது.
மது, மாது என்று அனைத்தும் கிடைக்குமே! அதுவும் இப்படி பெரிய இடம் என்றால் சொல்லவும் வேண்டுமா?
ஆட்டம் பாட்டம் என்று அனைத்தும் இருந்தது.
விஜயோ அவனது பிசினஸ் கிளைன்ட் ஒருவருடன் பேச சென்று விட, பெரெர் ஒருவன் கொடுத்ததை அப்படியே குடித்து விட்டாள் வர்ஷா.
அதை பார்த்த விக்ரமோ, விரைந்து அவளிடம் செல்ல, “லூசு, அது அல்கொஹோல் டி”, என்று சொல்லவும், அது வேறு ரா வோட்கா என்பதால் அவளுக்கு சுர்ரென்று ஏறி விட்டது.
அவளுக்கு மது பழக்கமே தெரியாது.
தள்ளாட ஆரம்பித்து விட்டாள்.
அவனின் சட்டையை பற்றி, “ஏன் என்கிட்ட பேசவே மாற்றிங்க? நான் என்ன தப்பு பண்ணேன்?”, என்று அவள் கேட்கவும், அவளின் கையை எடுத்து விட்டான்.
அவளோ மீண்டும் அதையே பற்ற, “அவனுக்கும் உங்களுக்கும் தான பிரச்சனை நான் என்ன பாவம் பண்ணேன்? என்ன ஸ்வீட் ஹார்ட்னு கூப்பிடவே மாட்டிங்களா?”, என்று அவள் கேட்கவும், அவனோ இதழ்களை குவித்து ஊதிக்கொண்டு, அவளின் கையை எடுக்க, அவளோ ஆட ஆரம்பித்தாள்.
“மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா”, என்று கண்ணதாசன் பாடலை நாகுழற பாட, “உனக்கு என்ன டி குழப்பம்?’, என்று அவனும் அவளை பிடித்து கொண்டு கேட்க, “நிறைய நிறைய குழப்பம்…”, என்றவள் அவனின் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டு, “உங்களுக்கு என்ன பிடிக்குமா? பிடிக்காதா?”, என்று கேட்கவும், “இப்போ எதுக்கு அதெல்லாம்”, என்றவன் அவளை நேராக நிற்க முயற்சிக்க, அவளால் நிற்க முடிந்தால் தானே!
“சொல்லுங்க”, என்பவள் மீண்டும் சாய்ந்து கொள்ள, “ரொம்ப ரொம்ப பிடிக்கும்”, என்று அவன் சொல்லவும், அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளின் உச்சந்தலையில் முத்தம் பதிக்க, அவளின் விழிகள் மூடிக்கொள்ள, தாமாக அவளின் கண்களில் இருந்து கண்ணீர்.
“எனக்கு மயக்கமா வருது”, என்று அவள் சொல்லவும், அவன் அவளை ஒருவழியாக ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து வந்து விட்டான்.
மைத்திரிக்கு அழைக்க, அவளின் போன் அடிக்கவே இல்லை.
“இங்கயே நில்லு”, என்று அவன் சொல்லவும், “இல்ல நான் ஓடி போயிருவேன்”, என்று அவள் போதையில் உலர, அவனுக்கு அவன் பிரம்மாஸ்திரத்தை பயன் படுத்த வேண்டிய நிலை.
“ஸ்வீட் ஹார்ட்”, என்று அவளை மென்மையாக அழைக்க, அவளும் அவனை உணர்வோடு பார்த்தாள்.
“நான் வர வரைக்கும் எங்கையும் போக கூடாது”, என்று அவளின் கண்களை பார்த்து கொண்டு கூற, அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
அவன் வெளியே வந்து லெமன் ஜூஸ் எடுத்து கொண்டு வரவும், அது வரைக்கும் அமைதியாக அங்கே நின்று கொண்டு இருந்தாள் வர்ஷா.
“இத குடி”, என்று அவன் கொடுக்க, அவளோ, மறுப்பாக தலையசைத்து, “நீங்க குடிபாட்டி விடுங்க”, என்று சொல்லவும், அவனுக்கோ கடுப்பாக இருந்தது.
இவளை இப்படியே இங்கு வைத்து இருப்பதும் அவனுக்கு நல்லதாக தெரியவில்லை.
இதே சமயம் சாதனா உள்ளே வர, விக்ரமிற்கோ அப்போது தான் கொஞ்சம் மூச்சே வந்தது.
“விஜய் எங்க?”, என்று அவன் சாதனவை பார்த்து கேட்கவும், “சார் கிளைண்ட்ஸ் ஓட பேசிட்டு இருந்தாரு சார்”, என்று அவள் சொல்லவும், வர்ஷாவை அவள் பார்க்க, அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டு, “இவளை புடி”, என்றவன், அவனது டிரைவருக்கு அழைத்து இருந்தான்.
மைத்திரியை விடுவதற்காக வர சொல்லிருந்தான். ஆனால் இப்போது வர்ஷாவை அழைத்து செல்லு மாறு கூறவும், அந்த டிரைவரும் சரி என்று சொல்லிவிட்டான்.
“இவளை அப்படியே கூட்டிட்டு போக முடியாது, வெளியே மீடியா இருக்கும்”, என்றவன் அங்கே பார்க்க, மற்றொரு வழி இருந்தது.
“இந்த வழியா போயிரு”, என்று சாதனவையும் வர்ஷாவையும் அனுப்ப, வர்ஷாவோ, “உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்”, என்று சொன்னவள், அவனின் கன்னத்தில் முத்தம் பதிக்க, சாதனவுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.
“சார்…”, என்று அவள் சொல்லவும், “டேக் ஹேர்”, என்று சொன்னவன், அவர்கள் சென்றதை உறுதி செய்து கொண்டு தான் வெளியே வந்தான்.
அவனது டிரைவரும் அவனிற்கு வர்ஷாவை ஏற்றி கொண்டதாக கூறிவிட, அப்போது தான் அவனுக்கு மூச்சே சீராக வந்தது.
அதே சமயம் மைத்திரி ரெஸ்ட் ரூமிற்குள் செல்வதை பார்த்தான் விக்ரம்.
அவனும் பின்னே செல்ல, சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வர, இருவருக்கும் மூச்சே அடைத்து விட்டது.
Sutthama puriyalai