💙 விஷ்வ மித்ரன்
அத்தியாயம் 04
“அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி.
அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.
“அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார்.
விழிகளில் வழியும் நீரைத் துடைக்கக் கூட மறந்து தன்னையே மறந்து எங்கோ சலனமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.
அதைக் கண்டு “அக்ஷும்மா என்னாச்சு டா?” என பதற்றமாய் கேட்டு அவளருகில் அமரந்து கொள்ள, அவரை ஏறிட்ட அக்ஷு சட்டென அவர் மடியில் தலை வைத்து விசும்பத் துவங்கினாள்.
எப்பொழுதும் சிரிப்பும், துள்ளலுமாக வலம் வரும் மகளை இந்நிலையில் காண மனம் வலிக்க, அவளே பேசுவாள் என்று எதிர்பாரத்துக் கொண்டு கூந்தலை மென்மையாகத் தான் வருடிக் கொடுத்தார் தாய்.
“ம்மா! எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா. விஷுண்ணாவ இப்படி பார்க்க முடியல. நான் என்னம்மா தப்பு பண்ணினேன்? எதுக்காக என்னை வெறுக்குறாரு?” என்று அழ, “என்னடா இது? அவன் உன் அண்ணா அவன் போய் உன்ன வெறுப்பானா? நீ எது எதையோ போட்டு மனச குழப்பிட்டு இருக்க. ப்ஃரீயா விடு அக்ஷு” சமாதானம் செய்ய முயன்றார் நீலவேணி.
அதைக் கேட்டு மறுப்பாக தலையை இடம் வலம் ஆட்டிய அக்ஷரா “இல்லம்மா. எனக்கு தெரியும் அண்ணா என் மேல கோவமா இருக்கான். பட் நான் எதுவுமே பண்ணலயே. மித்து தான் அவன விட்டுட்டு போனான். அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? என்னைப் பார்த்தா தூரமாகி பேசக் கூட பிடிக்காம போறான். முன்னெல்லாம் அவன் கூட ஜாலியா பேசிட்டே இருப்பேன் தெரியுமா? ஐ மிஸ் மை விஷு” அழுகையில் கரைந்தது அவள் குரல்.
அவள் சொன்னதில் கண் கலங்கினாலும் அதை மறைத்துக் கொண்டு “நீ தானேமா அன்னிக்கு சொன்ன அவன் மாறும் வரைக்கும் டைம் கொடுக்கலாம்னு. எங்களுக்கு ஆறுல் சொல்லிட்டு நீயே அழலாமா கண்ணு?” என்று அன்பொழுகத் தான் வினாத் தொடுத்தார்.
“நீங்க கேட்குறது சரி தான். ஆனா என்னால முடியலயே மா. நாளாக நாளாக அண்ணா அப்படியே தான் இருக்கான். எனக்கு என் கூட சண்டை போட்டு, டீஸ் பண்ணி, அடிக்க துரத்திட்டு வந்து, ஸ்நாக்ஸ் பறிச்செடுத்து கடுப்பேத்துற டாம் அன்ட் ஜெர்ரியா இருக்குற விஷு வேணும். என்னனு தெரில மம்மி இன்னிக்கு ரொம்பவே பீலிங்ஆ இருக்கு. என் விஷு பழையபடி மாறுவான்லே..? என் கூட பேசுவான்ல..? என் கூட ஒரு வார்த்தை பேசிட்டா அதுவே போதும் மா” என்றாள் அவள்.
“கண்டிப்பா விஷு பழையபடி வந்து உன் கூட பேசுவான் சண்டை போடுவான் சரியா? அழாத தங்கம்” என்று உச்சியில் முத்தமிட்டாலும் அவளின் அழுகை குறைந்தபாடில்லை.
கார்டனுக்கு சென்று டீ குடிக்கலாம் என்று வந்த விஷ்வா இவையனைத்தையும் கேட்டு உறைந்து போய் சிலையென சமைந்தான். எப்பொழுதும் குறும்புடன் புன்னகை மாறா முகத்துடன் இருக்கும் தங்கள் வீட்டின் இளவரசி கண்ணீருடன் இருக்கிறாள், அதுவும் தன்னால் எனும் போது யாரோ ஈட்டியால் குத்திக் கிழிப்பது போல் வலித்தது இதயம்.
ஆம்! அவள் சொல்வது முற்றிலும் சரியே. மித்ரன் தன்னை விட்டுச் சென்றதற்கு இவள் என்ன செய்வாள்!? இதில் அவளது தவறு எதுவுமே இல்லையே. தனது முட்டாள்தனத்தினால் தன் குடும்பத்தினை இவ்வளவு காலம் கஷ்டப்படுத்தி இருப்பதை இப்போது புரிந்து கொண்டவனுக்கு தன் மீதே கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டவனின் காதில் தாயின் வார்த்தைகள் விழ அப்படியே நின்றான்.
மகள் அழுவது பொறுக்காமல் “எல்லாம் அந்த மித்து பயலால தான். எப்படி இருந்த என் பையன் உடைஞ்சு போயிட்டான்? என் பொண்ணு அழுது கரையிரா. அவன் நல்லாவே இருக்க மாட்டான்” என்று புலம்பினார் நீலவேணி.
மித்ரனுக்கு சாபம் விட்டதில் விஷ்வா கோபமாய் அவர்களை நோக்கி வரப் போக அதற்குள் “அம்மா” என ஆக்ரோஷமாகக் கத்தினாள் அக்ஷரா.
அவரோ என்ன என்பது போல் பார்க்க “ப்ளீஸ் மா நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்குறேன். பட் மித்துவ பத்தி மட்டும் தப்பா பேசாதீங்க. நீங்க மித்துக்கு ஏதாவது சொல்லுறது விஷுக்கு சொல்லுறதுக்கு சமன். இத அண்ணா கேட்டிருந்தா நிச்சயம் தாங்க மாட்டான். ஏன்னா மித்து தான் அவனுக்கு எல்லாமே” என்று தெளிவாக சொல்லி விட்டுச் சென்றாள்.
அவளுக்குத் தன் மீதுள்ள பாசத்தில் பூரித்து “சாரி குட்டிம்மா! நீ என்னைப் புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு நான் உன்ன புரிஞ்சுக்காம கஷ்படுத்திட்டேன். எப்படியாவது பழைய விஷுவா மாறுவேன், உனக்காக” அவளிடம் மானசீகமாக உரையாடினான் விஷ்வஜித்.
………………..
@ ஆசிரமம்
இடையினைத் தொட்டுத் தீண்டி நர்த்தனமாடிய முடியை க்ளிப்பினுள் அடக்கிக் கொண்டாள் வைஷ்ணவி. யெல்லோ சுடி க்ரீன் ஜீன்ஸில் அழகாக இருந்தாள்.
கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை பார்க்க அதில் ஓர் ஆடவனின் முகம் தெரிய “பனைமரம்” என்று உச்சரித்தன அவளது செவ்விதழ்கள்.
கலைந்த முடி, சிவந்த அதரங்கள், பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் மீசை, வில்லாக வளைந்த புருவங்கள் என ஆறடி அழகனாகத் தான் அவன் திகழ்ந்தான்.
அவனையே பார்த்தபடி விழி மூடிய பெண்ணவளின் நினைவுகள் சற்றே பின்னோக்கி நகரந்தன.
நேற்றிரவு ரேகாவிடம் அனுமதி கேட்டுக் கொண்டு ஆசிரமத்தில் இருந்து வெளியே சென்றாள் வைஷு. எங்கே செல்வது என்று தெரியவில்லை கால் போன போக்கில் நடக்கலானாள் அவள்.
கையைத் திருப்பி வாட்சைப் பார்க்க நேரம் இரவு 11.45 என்று காட்ட, அவள் மனதில் சட்டென மின்னல் வெட்டினாற் போல ஏதோ தோன்ற அப்படியே நின்றாள்.
நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள். அதாவது இன்று பன்னிரண்டு மணிக்கு அந்த இனிய நாள் பிறக்கின்றது. அவள் பிறந்து இருபது வருடங்கள் என்பதில் சிறு சந்தோஷம் மனதில் தூறலாய் விசிறினாலும் பெரும் கவலையும் தான் ஆட்கொள்ளலானது.
இன்றைய நாளைக்குப் பிறகு ஆசிரமத்தை விட்டும் சென்று விட வேண்டும். தன்னைப் போல் ஒரு அநாதைக்கு பிறந்த நாள் தான் ஒரு கேடா என பெருமூச்செறிந்தாள்.
வைஷ்ணவி “ஏன் கடவுளே என்ன படைச்ச? நானும் ஒரு மனுஷி தானே? எனக்கும் ஆசைகள் இருக்க கூடாதா? வேற எல்லோருமே பர்த்டே அப்போ இந்த நேரத்துக்கு கேக் கட் பண்ணி அவங்க பேஃமிலி கூட ஜாலியா இருப்பாங்க. ஆனா நான் இப்படி அநாதையா இந்த ரோட்டுல நடந்து போயிட்டு இருக்கேன்” என்றவள் கண்களில் அவள் அனுமதியின்றியே கண்ணீர் வழிந்தது.
ரேகா பன்னிரண்டு மணிக்குள் வந்து விடச் சொன்னது நினைவுக்கு வந்திட ஒரு அடி முன்னே வைத்தவள் எது மேலோ மோதி நின்றாள்.
“ஆஆ” என்று கேட்ட அலறலில் பயந்து போய் தலை தூக்கிப் பார்க்க அங்கு ஆணழகனாய் நின்றிருந்தான் ஒருவன்.
அவனது கை நெஞ்சைத் தடவிக் கொண்டிருக்க “என்னாச்சு சார்?” என்று பதற்றமாகக் கேட்டாள்.
“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு என்னாச்சுனு கேக்குற? நீ முட்டி மோதி என் ஹார்ட் ஓட்டையாகிடுச்சு. எல்லாருமே ஹார்ட்டுல அவங்க லவ்வர சுமப்பாங்க. என் ஹார்டுக்குள்ள யார சுமக்குறேன் தெரியுமா? ” என்று குழறியவனின் தள்ளாட்டத்தில் அவன் குடித்திருக்கின்றான் என்பது புரிபட சிறு பயமும் அவளைச் சூழ்ந்தது.
அவசரமாக நகரப் போனவளின் கையைப் பிடித்தவனோ “நீ கேட்டா தான் விடுவேன். இல்லனா என் ஹார்ட்ட உடைக்க வந்தன்னு பொலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்” சிறு பிள்ளையாக எச்சரித்தான்.
அவனைப் பார்த்த பெண்ணுக்கு அவன் குடிகாரன் போலத் தெரியவில்லை. பேரழகனாகத் தான் தெரிந்தான்.
“ம்ம் சொல்லித் தொலை” என்று கடுப்புடன் கையை உருவப் போக அது முடியாது தான் போனது. அந்த அளவுக்கு அவனின் பிடி இறுக்கமாக இருந்தது.
“அய்ய் சொல்லுறேன். என் ஹார்ட்டு புஃல்லா இருக்குறது மித்து தான். மித்துனா எனக்கு உயிரு” என்று தன் இதயத்தைச் சுட்டிக் காட்டி சொன்னவன் நம் நாயகன் விஷ்வாவே! ஏனோ அவன் அவ்வாறு சொன்னதும் அவளே அறியாமல் அவளுள் ஒருவித ஏமாற்றம் ஊடுறுவியது.
அவனிடமிருந்து கையை விலக்க முயற்சித்தவாறு “சரி சொல்லிட்டீங்கள்ள. இப்போ கை விடுங்க நான் போகனும்” என்று கூற அவ்வேளையில் 12 மணி என்பதற்கு அறிகுறியாய் வைஷுவின் வாட்சில் மணியொலிக்க, எதிர்பாராத ஒரு சம்பவமும் தான் அரங்கேறியது அங்கே!
ஆம். அதே நேரம் விஷ்வாவின் கைப்பேசி ஹேப்பி பர்த்டே டு யூ பாடலுடன் அலற, உடனே அங்கு முட்டி போட்டு அமர்ந்து “ஹேப்பி பர்த்டே மா” என்றவாறு அவள் கையில் தன் முரட்டு இதழை அழுத்தமாகப் பதித்தான் விஷ்வஜித்.
தெறித்து விடும் படியாக விழி விரித்த வைஷுவிற்கு ஏதேதோ சொல்ல முடியாத உணர்வுகள். யாருமில்லாத அநாதை என்று கவலையுற்றவளுக்கு சரியாக அதே நேரத்தில் யாரென்றே தெரியாத ஒருவனால் முதல் பிறந்த நாள் வாழ்த்து கிடைத்தது!
அவன் முத்தமிட்ட கையைப் பார்த்தவள் மெல்லமாய் தலை தூக்கி அவனை நோக்க அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்காது தடுமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான். போகும் அவனை இமைக்கவும் மறந்து தான் பார்த்தாள் காரிகை.
அந்நிகழ்வை நினைத்த வைஷுவிற்கு இப்போதும் கூட அது கனவு போலத் தான் தோன்றியது. ஏனோ அவன் முகமே மீண்டும் மீண்டும் தோன்றி இம்சிக்க “ச்சே என்ன இது? அவனுக்குத் தான் ஆல்ரெடி மித்துன்னு ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருக்காளே. இருந்தா என்ன இல்லனா என்ன? இட்ஸ் அன் கோ இன்சிடன்ட். இனி இத பற்றியும், அவனையும் நினைக்கவே கூடாது” என்று உறுதியெடுத்தவள் அறியவில்லை இனி அவனையே வாழ்நாள் முழுவதும் உயிர்மூச்சாக நினைத்து வாழப் போவதை!
………………
காபி ஷாப் அருகில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு தன் தோழியுடன் கால் பேசிக் கொண்டிருந்தாள் அக்ஷரா.
“ஓகே பைஃன். பை டி” என கட் பண்ணி ஹெல்மெட்டை எடுத்து போடப் போனவளின் கை அந்தரத்தில் நின்றது.
அவளின் அத்தனை அணுக்களும் உயிர்த்தெழ, இதயமும் புது உத்வேகத்துடன் துடிக்க விழிகளோ ஓரிடத்தில் நிலைக்குத்தித் தான் நிற்கலாயின.
அங்கே! அங்கே, முத்துப் பற்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தான் அவளின் உயிர்க் காதலன் அருள்! அருள் மித்ரன்.
எட்டு மாதங்களுக்குப் பின் அவனைக் காண்கின்றாள். சொல்லுவதற்கு என்று எவ்வித மாற்றமும் அவனிடம் இல்லை. ஆனால் சிறிது மெலிந்து இருந்தான். ஆனந்தக் கண்ணீர் சொரிய அவனது தோற்றத்தை விழிகளினூடாக மனதினுள் நிரப்பிக் கொண்டாள் பாவை.
அவளுக்கு விஷ்வாவின் நினைவு தோன்ற, அது பற்றி பேச இதுவே சரியான தருணம், எப்படியாவது மித்ரனுடன் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு ரோட் க்ராஸ் பண்ணினாள். அவளைக் காணாத மித்ரனோ காபி ஷாப்பினுள் நுழைய அவனின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாது கிட்டத்தட்ட ஓடினாள் அக்ஷு.
ஆனால் அவன் முன் சென்று விட முடியவில்லை. தன் மித்ரனுக்கு அருகில் ஒரு பெண் இருப்பதைக் கண்டு ஷாக் அடித்தது போல் தான் நிற்கலானாள். அது வேறு யாருமல்ல பூர்ணியே!
அவளுக்கு பூர்ணியின் பெயர் தெரியுமே தவிர அவளைக் கண்டதில்லை. இவள் அருளின் காதலியாக இருப்பாளா என நினைத்தவளுக்கு மேலும் நடக்க முடியாது கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டன.
மித்ரனைக் கண்ட பூர்ணி “வா மித்து எங்க போன” என்று கேட்க, “முக்கியமான ஒருத்தவங்க கால் பண்ணாங்க. இங்க நெட்வொர்க் ப்ராப்ளம்னு வெளிய போனேன். உனக்கு ஏதாச்சும் ஆர்டர் பண்ணவா பூரி?” பதில் வேண்டி அவள் முகம் நோக்கினான் மித்ரன்.
“ஓகே டா” என்று மெனு கார்டை சுழற்றியவாறு சிந்தனையில் மூழ்கினாள். மித்ரன் பேரரை அழைத்து “டூ ஸ்ட்ரோபெரி ஐஸ்கிரீம்ஸ்” என்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் பூர்ணி.
அவளின் முகபாவனையில் சிரித்தவனோ “என்ன லூசு அப்படி பார்க்குறே? முட்ட கண்ணு வெளில வந்துட போகுது” என்றான்.
பொய்யாக முறைத்து வைத்த பூர்ணி “எனக்கு ஸ்ட்ரோபெரி ப்ளேவர் தான் பிடிக்கும்னு ஞாபகம் வெச்சிருக்கியா மித்து பேபி?” அவன் கன்னத்தை கிள்ளி வைத்தாள்.
அவளின் செய்கையில் இதழில் பூத்த நகையுடன் “அதெல்லாம் ஞாபகம் இருக்கு. நீ ரொம்ப ஐஸ் வெக்காத ஏன்னா ரெண்டுமே உனக்கு தான்” என்றான் மித்ரன்.
பூர்ணி குதூகலித்துக் கொண்டு “அப்போ உனக்கு வேணாமா” என்று வினவ, “வேணுமானு கேட்காம வேணாமானு தான் கேட்கேற தீணி மூட்டை. நீ அழுதுடுவல்ல நான் கேட்க மாட்டேன். சோ நீ பயப்படாம ரெண்டையும் கொட்டிக்க” பெரிய மனது பண்ணி சொல்வது போல் தான் சொன்னான்.
மித்ரனின் அருகில் ஒரு கப்பை தள்ளி விட்டு சாப்பிடு என்பது போல் கண்ணசைக்க “லூசு வேணாடி. கையில காயம் இருக்கும் போது எப்படி சாப்பிடுறது” பாவமாக சொன்னான்.
அவனை முறைத்து “அதானே பார்த்தேன். உனக்கு ஐஸ்கிரீம்னா அவ்ளோ இஷ்டம் எதுக்காக வேணானு சொல்றேனு. காயத்த மறந்துட்டேன் டா. நானே ஊட்டுறேன்” என ஸ்பூனை வாயருகில் நீட்ட அதை வாங்கிக் கொண்டவன், “போதும் டி. நீயே சாப்பிடு” என்க அவளும் தலையசைத்து ரசித்து ருசித்து உண்டாள்.
பூர்ணி மற்றும் மித்ரனின் நெருக்கம், அவள் கன்னம் கிள்ளியது, ஊட்டி விட்டதை சிரித்துக் கொண்டே சாப்பிட்டது எல்லாவற்றையுமே பார்த்து உடைந்து போனாள் அக்ஷரா.
ஆனாலும் இருவரும் நண்பர்களாகக் கூட இருக்கலாமே என நினைத்தவளுக்கு சிறு சந்தோஷமும் தோன்ற மீண்டும் அங்கு பார்த்தவளின் முகம் அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்டியது.
துப்பட்டாவில் செய்ன் மாட்டிப்பட அதை விடுவிக்கப் போன பூர்ணியின் கழுத்தில் இருந்து தென்பட்டது தாலி. அதைக் கண்டு உலகமே இருண்டு விட்டதாக உணர்ந்தாள் அவள்.
இதயமோ சுக்கு நூறாக உடைந்து இரத்தக் கடலில் மூழ்கியது. விஷ்வாவுக்காக அவனுடன் பேச வந்தவள் பெரும் ஏமாற்றத்தையும் வலியையும் சுமந்து கொண்டு உயிரற்ற ஜடமாய் வெளியேறினாள்.
………………..
தனது அறைக் கதவை மூடி பூட்டை எடுத்துக் கொண்டு திரும்பிய வைஷ்ணவி சிட்டுவைக் கண்டு ஓடி வந்தாள். “அக்கா!” என்று உதடு பிதுக்கி அழுகையுடன் அழைக்க, அவளின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள் “சிட்டுக் குருவி” என்றாள்.
அவள் கழுத்தைக் கட்டிக் கொண்ட அப்பிஞ்சு “வைஷுக்கா நீ என்னை விட்டு போறியா? எனக்கு யாருக்கா கதை எல்லாம் சொல்லுவா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. நீ இங்கயே இருந்துடறியா ப்ளீஸ்கா” என்று அழுதிட,
வெளிவரத் துடித்த கண்ணீரை முயன்று உள்ளிழுத்துக் கொண்டு தன் வலியை மறைத்து லேசான புன்னகையை சிந்தினாள் வைஷு.
“என்னக்கா சரிக்கிற? நான் அழுறத பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா” என்று சிட்டு மீண்டும் கேட்க, “இல்லடா நான் போய் தான் ஆகனும். அக்காவுக்கு இங்கே இருக்குறத விட வெளில போறது தான் சந்தோஷம். நான் சந்தோஷமா இருக்குறது உனக்கு பிடிக்குமா இல்லையா?” தானும் சிறு குழந்தை போலத் தான் மாறிப் போனாள் அவள்.
தலையை மேலும் கீழுமாக உருட்டி “சந்தோஷமா இருக்குறது தான் பிடிக்கும். நீ போக்கா” என்று சொல்ல, அவள் மூக்கைக் கிள்ளி “எனக்கும் நீ ஹேப்பியா இருந்தா தான் புடிக்கும் பாப்பா. என் சிட்டுக்குருவி சிரிச்சுட்டு ஜாலியா அழாம இருக்கனும். சமத்தா இருப்பல்ல” கொஞ்சலுடன் மொழிந்தாள் வைஷு.
“இருப்பேன் இருப்பேன். நீ என்னைப் பார்க்க வருவியா?” ஏக்கமாக வெளிவந்தது பிஞ்சுக் குரல்.
“என்னடா இப்படி கேட்டுட்ட? கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்” என்றவள் எழ முற்பட அவள் கன்னத்தில் முத்தமிட்டு “ஹேப்பி பர்த்டே டு யூ வைஷுக்கா” என்று ஓடினாள் சிட்டு.
“தாங்க் யூ சிட்டுக்குருவி” என வாழ்த்தை ஏற்றுக் கொண்டவளின் மனதில் இதைப் போலவே முத்தமிட்டு ஏனென்றே தெரியாமல், யாரென்றே அறியாமல் தனக்கு வாழ்த்துக் கூறிய வளர்ந்த குழந்தை விஷ்வாவின் நினைவு வர “போடா பனைமரம்” முறுக்கிக் கொண்டு போனாள்.
ரேகா வரவும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு ஒரு முறை தான் வளர்ந்த ஆசிரமத்தை திரும்பிப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் மல்க அதைப் புறங்கையால் துடைத்தவள் பாதையோரம் நடந்தாள்.
இருளும் சூழ்ந்திட யாருமற் வீதியில் தனியாக எங்கே செல்வது என்று தெரியாதவளாக கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் கால் கடுக்க நடக்கலானாள் வைஷ்ணவி.
ஏதோ சத்தம் கேட்க இரண்டு ரௌடிகள் கையில் சரக்கு பாட்டிலுடன் குடி போதையில் அவளைத் தவறாகப் பார்த்தபடி நெருங்கி வந்தனர். உள்ளுக்குள் உதறல் எடுத்திட அவர்களின் துகிலுரிக்கும் பார்வையில் கூசிப்போனாள் பாவையவள்.
ரௌடி 1 “பாருடா பார்க்க பள பளன்னு பப்பாளிப்பழம் மாதிரி இருக்கா. இன்னிக்கு நமக்கு விருந்து தான் சகலை” என்று சொல்ல, ஆமோதிப்பாக தலையசைத்த மற்றவனும் “ஆமா சகலை! கல்யாணம் பண்ணி கந்தலான பொண்ணுங்கள கூட விட மாட்டோம். ஃப்ரெஷ்ஷா ஒரு கிளி கிடைச்சிருக்கு விட்றுவோமா?” என்று பேசிக் கொண்டே அருகில் வந்தான்.
அருவெறுத்துப் போன வைஷு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ஏய் மரியாதையா போயிடுங்க. கலாட்டா பண்ண வந்தா நடக்குறதே வேற” விரல் நீட்டி எச்சரித்தாள்.
அதில் பெரும் குரலில் சிரித்தவன் “பாப்பா மிரட்டுது அது கூட காதுக்கு இனிமையா இருக்குல்ல” என்றான்.
மற்றவன் “இங்க நீ சொன்ன மாதிரி வேற ஒன்னு தான் நடக்க போகுது. அது என்னனு நீயே பார்ப்ப” என சொல்லி அவளின் துப்பட்டாவில் கை வைக்க எத்தனிக்க, “அம்மாஆ” எனும் அலறலுடன் ஐந்தடி தூரச் சென்று சுருண்டு விழுந்தான்.
பயத்தில் வெடவெடத்துப் போயிருந்த வைஷு மிரண்ட விழிகளுடன் பின்னால் பார்க்க, சர்ட் கைகளை மேலேற்றியவாறு கோபத்தில் கண்கள் சிவப்பேற ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் அவன்!
அவன் யாரோ……??
நட்பு தொடரும்………!!
ஷம்லா பஸ்லி