அத்தியாயம் 41
ஜெய் ஷங்கர் விஜய் தான் சான்விக்கு அவர் பார்த்த மாப்பிள்ளை என்று சொன்னதும், அதிர்ந்து விட்டனர் அனைவரும்!
விக்ரமின் மனைவி அவள், அதுவும் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டவன் அவர்களுக்கு காலனாக வந்துள்ளான்.
நினைக்கவே அனைவருக்கும் உடம்பே பற்றி எரிந்தது.
“ச்ச விஜய் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல”, என்று பிரணவ் பேசவும், “இப்போ என்ன பண்றது விக்ரம்?”, என்ற பார்த்தீவை பார்த்தவனின் கண்களில் என்ன உணர்வு என்றே தெரியவில்லை.
வர்ஷாவோ, “என்னால நம்பவே முடியல! எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டாருனு எனக்கு தெரியல”, என்று கேட்கவும், வாகினியோ அமைதியாக இருந்தாள்.
இங்கு அடுத்த அதிரிச்சி ராகவிற்கு தான்! அவனுக்கு சான்வி விக்ரமின் விடயம் தெரியாது, ஆனால் விஜய் மற்றும் மைத்திரியின் காதல் விடயம் தெரியுமே!
அவர்களை இன்று ஒன்று சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து இருந்தவனுக்கு விஜய் சான்வி திருமணம் இடியாக தலையில் இறங்கியது என்றால், அதற்கு விஜய் ஒப்புக்கொண்டு இருக்கிறான் என்று நினைக்கும் போதே இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது.
“என்ன டி விஜய் சார் இப்படி… “, என்று சாதனா துவங்கும் போதே, அவனை மொத்தமாக வெறுத்து விட்டு இருந்தாள் மைத்திரி.
“அடுத்தவன் பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டாரு சார்”, என்று கோவமாக வந்தது அவளின் வார்த்தைகள். சாதனாவிற்கு அடுத்த அதிர்ச்சி.
“என்ன டி சொல்ற?”, என்று கேட்டவளிடம், “ஆமா டி சான்விக்கும் விக்ரம் சாருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகிருச்சு.. அதுக்கு சாட்சி கையெழுத்து போட்டதே மிஸ்டர் விஜய சாணக்கியன் தான்… அன்னைக்கு சொன்னான் விக்ரம் சார்ர தோற்கடிக்க எந்த எல்லைக்கும் போவாருனு. ஆனா அவர் பொண்டாட்டி மேல கை வைப்பானு நான் நினைக்கல”, என்று முடித்து இருந்தவள் மனதில் விஜய் மேல் இருந்த காதல் மொத்தமாக மறித்து விட்டது.
இங்கோ சான்வி தான் தீயில் நிற்பது போல் நின்று கொண்டு இருந்தாள். திருமணம் நடந்து விட்டது. நேற்று தான் விக்ரமின் கையால் பொன்தாலி வாங்கி இருந்தாள். அவளை மொத்தமாக அவனுக்கு விருந்தாக்கி அவனை மொத்தமாக உள்வாங்கி இருந்தாள்.
இன்று இன்னொருவனுக்கு மனைவி ஆக வேண்டும் என்று அவளின் தந்தை கூறுகிறார். அதுவும் கணவனின் தமயன், அவளின் உடல் கூசியது.
விக்ரமை தான் அவளின் கண்கள் பார்த்தன. கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.
ராகவை திரும்பி பார்த்தாள். அவனோ, விஜய் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதால் தான் சான்வி அழுகிறாள் என்று நினைத்து கொண்டான்.
“விக்ரம் டூ சம்திங்”, என்று பார்த்தீவ் சொல்லவும், விக்ரம் இறுக்கமாக நின்று இருந்தான்.
“என்ன மா சான்வி உனக்கு ஓகே தான?”, என்று ஜெய் ஷங்கர் பார்க்கவும், சான்வியின் கண்களில் வழிந்த கண்ணீரே அவருக்கு நிறைய உணர்த்தி விட்டது.
“என்ன மா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா? நீ விஜய லவ் பண்ற தான?”, என்றதும், அதிர்ந்து விட்டாள்.
“என்ன அப்பா சொல்றிங்க நான் எப்போ விஜய காதலிக்கறதா உங்க கிட்ட சொன்னேன்?”, என்று கேட்டவளை பார்த்து, “நீயும் விஜயும் டேட்டிங்லாம் போறதா ஸ்ரீதர் தான் சொன்னான் மா.. அன்னைக்கு கூட நீங்க இரண்டு பேறும் ஹோட்டல் போனீங்களாமே”, என்று அவர் சொல்லவும், “அப்பா ஹோட்டல் போனா காதலிக்குறேனு அர்த்தமா?”, என்று சீறினாள்.
“சரி மா உனக்கு விஜய பிடிக்கலையா?”, என்று கேட்டது தான் தாமதம், பொங்கி எழுந்து விட்டாள்.
“பிடிக்கலையாவா? மனுஷனா இவன் எல்லாம்! ச்சீ எனக்கு அருவெறுப்பா இருக்கு ப்பா.. இவன போய்யா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்க?”, என்று கர்ஜித்தவளை பார்த்து அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து விட்டனர்.
சான்வி சாந்தமானவள். இது அவளின் புது ரூபமாக அவர்களுக்கு தெரிந்தது.
கலாவதிக்கு தான் ஆத்திரம் வந்து விட்டது. அவரது மகனை பற்றி இப்படி ஒருத்தி பேசுவதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“சான்வி மைண்ட் யுவர் ஒர்டஸ்… என் பையன பத்தி இப்படி பேச நீ யாரு?”, என்று அவர் சீறி கொண்டு வரவும், “இன்னைக்கு வேர்ல்ட் வார் த்ரீ தான்”, என்று பிரணவ் சொல்லிருந்தான்.
“என்ன மைண்ட் யுவர் ஒர்டஸ்? இவன் எல்லாம் என்ன மனுஷன்? காதலிச்சவள பத்தி அவங்க அம்மா கிட்ட சொல்ல திராணி இல்ல.. நேர்வழியில போய் ஒரு ப்ராஜெக்ட் வாங்க துப்பு இல்ல.. லவ் பண்ண பொண்ண நிர்கதியில விட்டுட்டு போன பெரிய மனுஷன்.. இதெல்லாம் விட..”, என்று ஒரு நொடி நிறுத்தியவள், விஜயின் முன் வந்து நின்று, “இவனோட அண்ணன் பொண்டாட்டியாவே தான் பொண்டாட்டியா ஆக்கிக்கனனும்னு நினைக்கிற ஈன பிறவி”, என்று முடித்து இருந்தாள்.
அவள் இறுதியாக சொன்னதில் அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
“என்ன சொல்ற சான்வி?”, என்ற ஜெய் ஷங்கருக்கு, அவரின் புறம் திரும்பி, “ஆமா ப்பா, எனக்கும் விக்ரம்க்கும் கல்யாணம் ஆகிருச்சு.. அதுக்கு சாட்சி கையெழுத்து கூட இதோ இங்க நிக்குறாரே தி கிரேட் விஜய சாணக்கியன் தான் போட்டாரு”, என்று சொல்லவும், “உனக்கு எவளோ தைரியம் இருந்தா எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்குவ?”, என்று கையை அவர் ஒங்க, அவரின் கையை பிடித்து இருந்தான் விக்ரம்.
“என்ன அடிங்க”, என்று அவரின் முன் கம்பீரமாக நின்று இருந்தான்.
“என் பொண்ண மயக்கிட்டயா டா? உன் அப்பன் மாறி தான் நீயும் இருப்ப… இவன நம்பி போறியா?”, என்று சான்வியை பார்த்தும் அவர் சீற, விக்ரமை தாங்கி வந்தாள் சான்வி.
“விக்ரம் அவர் அப்பா மாறியா இல்லையானு எனக்கு தெரியாது… ஆனா நீங்க இப்போ எனக்கு பாத்து இருக்கீங்களே விஜய் .. இவன விட ரொம்ப ரொம்ப நல்லவரு.. பெண்களை மதிக்க தெரிஞ்சவரு.. தப்பு என் மேல தான் ப்பா.. உங்க மேலயும் தான்.. நீங்க உங்க பொண்ணுக்கு தைரியம் கொடுக்கல அதான் நான் உங்க பொண்ணா இருக்கும் போது என் காதலை சொல்ல எனக்கு தைரியம் இல்ல.. நான் இப்போ விக்ரமோட மனைவி.. எனக்கு நிறைய தைரியம் இருக்கு ஏனா என் புருஷன் என் கூட இருக்காரு.. தப்பு என் மேல தான்.. உங்கள அவமானப்படுத்தி இருந்தா சாரி ப்பா”, என்று அவள் தலை குனிந்து அவரின் முன் நின்று இருந்தாள்.
ராகவிற்கோ ஆத்திரம் நண்பனின் துரோகம் வலித்தது. அவன் சான்விக்கு பதிவு திருமணத்திற்கு கையெழுத்து போட்டது கூட அவனுக்கு இப்போது பெரிதாக தெரியவில்லை. ஆனால் அடுத்தவன் மனைவியை அவன் விவாகம் செய்ய வந்துள்ளான்.
“இவனா என் நண்பன்?”, என்று இருந்தது. அவனுக்கு சான்வி மேலும் கோவம் தான். அவள் ஒரு வார்த்தை அவனிடம் சொல்லிருக்கலாம். அவனுக்கு விக்ரமை பிடிக்காது என்று இல்லை. அவனின் தந்தை கொஞ்சம் முரண்டு பிடித்து இருந்தாலும், அவனும் பேசிருப்பான் தான்.
விக்ரம் நியமனவன், அவனின் மீது என்றைக்கும் ராகவிற்கு மரியாதை இருந்தது. நிச்சயமாக விஜயை விட ஒரு படி நல்லவன் தான். அதையும் விட வாகினியின் நிழலில் வளர்ந்தவன். இதற்கு மேல் அவன் என்ன எதிர் பார்க்க முடியும்? தந்தைகளின் விரோதத்திற்கு இவர்கள் என்ன செய்ய முடியும்?
தாமரை கூட ராகவிடம் சொல்லி இருக்கிறார் தான். “சான்விக்கு மாப்பிள்ளைன்னா முதல்ல நீ விக்ரம தான் பார்க்கணும்”, என்று அவர் சொன்னது இன்றும் அவனின் செவிகளில் ஒலித்தது.
அப்போது அவன் அதை எல்லாம் அசட்டை செய்து விட்டான்.
“அப்பா தப்பு உங்க மேல.. நீங்க அவளை கேட்காம எப்படி திடீர்னு கல்யாணம் அனௌன்ஸ் பண்ணலாம்?”, என்று ராகவ் ஜெய் ஷங்கர் முன் வந்து நிற்கவும், “என்ன டா நீயும் உன் தங்கச்சிக்கு சப்போர்ட்டா?”, என்று அவனிடமும் எகிறிக்கொண்டு வர, “அப்பா ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க.. இப்போ என்ன பண்ண முடியும்? அவ கல்யாணம் பண்ணிட்டா.. நீங்களும் அவளை கேக்கவே இல்ல.. இரண்டு பேறு மேலயும் தப்பு இருக்கு… அண்ட் விக்ரம்க்கு என்ன குறை? வேதாந்தம் அங்கிள் பையன்னு பார்க்கமா நீங்க அவனை ஒரு பிசினெஸ் மேன்னா பாருங்க… ஹி இஸ் எ ஜெம்”, என்று அவன் சொல்லவும், “டேய் அவன் மைத்திரியை லவ் பண்ரான்னு ஊருக்கே தெரியும்… எப்போ பார்ட்டி போனாலும் அந்த பொண்ணோட போறான்.. அப்போ அவங்க ஒண்ணா வரும் போது அந்த பொண்ணோட லிப்ஸ்ல காயம் இருக்கறத நானே பார்த்து இருக்கேன்”, என்று பற்களை கடித்து கொண்டு கூறினார்.
ராகவ் பேசுவதற்கு முன், “என்ன கிஸ் பண்ணது நீங்க உங்க பொண்ணுக்கு பார்த்த உத்தம மாப்பிள்ளை மிஸ்டர் விஜய சாணக்கியன் தான்”, என்று எல்லாருக்கும் கேட்கும் படி சொல்லி இருந்தாள் மைத்திரி.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளால், அவளின் பெயரை விக்ரமுடன் சேர்த்து பேசும் போது அமைதியாக இருக்க முடியவில்லை. அதுவும் அவளால் தான் அனைவரும் விக்ரமை இப்படி நினைக்கிறார்கள், அதுவும் அவனின் மனைவியின் தகப்பன் இப்படி நினைப்பது அவளுக்கு கோவத்தை கொடுத்தது.
எத்தனை முறை விஜயிடம் கெஞ்சி இருப்பாள், இப்போது எங்கு வந்து நிற்கிறார்கள் அவர்கள் அனைவரும்? இதெல்லாம் தேவையா என்று தோன்றியது.
இன்று கொதித்து எழுந்து விட்டாள்.
கலாவதியோ, “டேய் விஜய் அவ என்ன டா சொல்றா?”, என்று கேட்டு விட்டு மைத்திரியின் புறம் திரும்பியவர், “ஹே என்ன உன் பாஸ் பண்ண தப்ப மறைக்க என் புள்ளய மாட்டி விடுறியா? அனாதை கழுதை.. உன்ன என் மகன் லவ் பன்றானா?”, என்று அவர் பேசவும், “மிஸஸ் கலாவதி, வாய அடக்கி பேசுங்க.. உங்க மகன் இந்த பொண்ண லவ் பன்றான் அத நாங்க எல்லாருமே எங்க கண்ணால பார்த்து இருக்கோம்”, என்று வாகினி மைத்திரியின் அருகில் சென்று நின்றாள்.
மைத்திரியின் கண்களில் கண்ணீர். அனைவரின் முன்னிலையில் அவளை அவமானப்படுத்தி இருக்கிறார்.
“உங்க மகன் தான் மேம் எங்க அபார்ட்மெண்ட்க்கு வந்து இவ கூட இருப்பாரு”, என்று சாதனாவும் சொல்ல, கலாவதி இன்னும் வசைபாட ஆரம்பிக்கும் போதே, வாயை திறந்து இருந்தான் சாணக்கியன்.
Super sis 💞