5, 6, 7. சத்திரியனா? சாணக்கியனா?

5
(33)

அத்தியாயம் 5

 

விக்ரமும் மைத்திரியும் வெளியே வர, அங்கே வேதாந்தத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

மைத்திரியின் இதழ்களில் இன்று காயம் இருந்தது.

லிப்ஸ்டிக் சமஜ் ஆகவில்லை தான். ஆனால் இதழின் காயம் காட்டி கொடுத்து விட்டதே!

“என்ன பா நீயும் உன் அப்பா மாறி வாழற போல?”, என்று விக்ரமை பார்த்து கேட்கவும், விக்ரமோ மைத்திரியை தான் முறைத்தான்.

அவளின் தலை தாழ்ந்து தான் இருந்தது.

இதே சமயம் அங்கே வந்தான் விஜய்.

அவனின் கண்களோ வர்ஷாவை தேட, அங்கிருந்தவரிடம், “வர்ஷா எங்க?”, என்று கேட்க, அவரோ, “விக்ரமோட பார்த்தேன்”, என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

அவனோ விக்ரமை தேடி வந்த சமயம் இந்த உரையாடல் அவனின் காதுகளிலும் விழுந்தது.

விஜயோ குரலை செருமிக்கொண்டு, விக்ரமை பார்த்து, “வர்ஷா எங்க?’, என்று உணர்ச்சியற்ற தோணியில் கேட்க, “வீட்டுக்கு அனுப்பிட்டேன்”, என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அவனின் பின்னாலேயே மைத்திரியும் சென்று விட்டாள்.

காரில் மைத்திரி ஏறிய உடன் மின்னல் வேகத்தில் வாகனத்தை அவன் செலுத்த, அவளுக்கோ கிலி எடுக்க துவங்கியது.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் “சார்”, என்று சொன்ன தருணம் அவளின் அபார்ட்மெண்ட் வந்து விட்டது.

காரை நிறுத்தியனின் கைகள் ஸ்டேரிங்கை அழுந்த பிடித்து இருந்தது.

“சார்”, என்று அவள் திரும்பவும் ஆரம்பிக்க, “கெட் அவுட்”, என்று ஆங்காரமாய் ஒலித்தது அவனின் குரல்.

ஒரு வருடத்தில் முதல் முறையாக அவன் கத்துகிறான். அவள் அரண்டு விட்டாள்.

அப்படியே கீழே இறங்கி அவள் அபார்ட்மென்ட்டினுள் சென்றதை உறுதி படுத்தி கொண்டவன், பின்பு தான் அவனின் வீட்டை நோக்கி சென்றான்.

இங்கோ அபார்ட்மெண்டை திறந்து உள்ளே வந்தவளுக்கு மனமே ஆற வில்லை.

முதல் முறையாக விக்ரமிடம் இருந்து இப்படி ஒரு அதட்டல், அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

இதே சமயம் அவளின் கைபேசி அலறியது, எடுத்து பார்த்தவளுக்கு அவள் திட்டுவாங்க காரணமானவன் தான் அழைத்து இருந்தான்.

அழைப்பை எடுத்தவளிடம், “என்ன அபார்ட்மெண்ட் போய்டியா மைத்து?”, என்று கேட்டவனிடம், “உங்களுக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? எவளோ சொன்னேன் லிப்சை கடிக்காதிங்கனு”, என்று அவள் கத்தவும், “ஹே ஸ்ட்ரெஸ்ல அப்படி பண்ணிட்டேன் டி”, என்றான்.

“உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இல்ல விஜய்! விக்ரம் சார பழி வாங்கணும் அதான்”, என்று ஆதங்கத்துடன் அவள் சொல்ல, “ஆமா அப்படி தான், அவன் எதுக்கு உன்ன ஸ்மஜ் ஆகாத லிப்ஸ்டிக் போட சொல்றான்?’, என்று அவனும் கடுப்பாக பேச, “பிகாஸ் எல்லா பிசினஸ் மீட்டிங் அப்பவும் நீங்க என்ன இழுத்து கிஸ் பண்றீங்க, பட் விக்ரம் சார் மேல தான் பழி போகுது. பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா?”, என்று அவளும் சீறினாள்.

“அவனுக்கு தப்பிக்க திறமை பத்தல”, என்று அவன் நக்கலாக சொல்ல, “திறமை இல்லாதவன் கிட்ட கூட உங்களால ஒரு காண்ட்ராக்ட் ஜெயிக்க முடியல அப்போ”, என்று அவளும் எள்ளலாக பேசினாள்.

“மைத்திரி”, என்று அவன் கர்ஜிக்க, “ஜஸ்ட் ஷட் அப்! எதுக்கு கத்துறிங்க? உங்களால என்ன லவ் பண்றத கூட வெளிய சொல்ல முடியல? நீங்க எங்க இருந்து என்ன கல்யாணம் பண்ணிக்க போறீங்க?”, என்று அவள் பேசவும், “உன்ன ஏமாத்திருவேன்னு நினைக்கிறியா?”, என்று அவன் நேரடியாக கேட்கவும், “மாட்டீங்கனு தெரியும் ஆனாலும் நீங்க பண்றதெல்லாம் கடுப்பா இருக்கு விஜய்”, என்றவுடன் அவனும் சற்று தாழ்ந்து தான் போனான்.

“ஹே சீரியசா அப்போ வர்ஷா எங்கன்னு தேட தான் டி போனேன்”, என்று அவனும் கொஞ்சம் இறங்கி வர, “உங்க தங்கச்சிய கூட்டிட்டு வர தெரிஞ்ச உங்களுக்கு அவளை கூட பார்த்துக்க முடியல”, என்றவளிடம், “அவ ஒன்னும் குழந்தை இல்ல”, என்று அழுத்தமாக சொன்னான்.

பின்பு அவனே, “ஓகே லீவு இட்! அண்ட் மோர்னிங் கொடுத்த ரசமலாய்க்கு தேங்க்ஸ்”, என்று அவன் சொல்லவும், அவள் பதில் அளிக்க வில்லை.

கோவமாக இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

“சரி நாளைக்கு மீட் பண்லாம்’, என்று அவன் சொல்லவும், “எனக்கு ஒர்க் இருக்கு”, என்று அவள் பதிலளிக்க, “டின்னருக்கு பார்க்கலாம் டி”, என்று சொல்லவும், விட மாட்டான் என்று அவளுக்கும் தெரியும், “ஓகே”, என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

அப்படியே அமர்ந்தவளுக்கு முன் தண்ணீர் கோப்பையை நீட்டியது ஒரு கரம்.

சாதனா தான் நின்று இருந்தாள். சாதனாவும் மைத்திரியும் வேதாந்தத்தின் காப்பகத்தில் தான் வளர்ந்தார்கள்.

இருவருமே அப்போதில் இருந்து நெருங்கிய தோழிகளும் கூட!

விஜயிடம் சாதனாவிற்கு வேலை கிடைத்து விட்டது. இருந்தாலும் ஒரே அபார்ட்மெண்டில் தான் இருந்தார்கள்.

“என்ன டி விஜய் சார் கூட சண்டையா?”, என்று கேட்கவும், “சார் ஒன்னு தான் கேடு! ஏன் தான் இவன போய் லவ் பண்ணேனோ”, என்று தலையில் அடித்து கொண்டாள்.

ஆறு மாதங்களாக இருவரும் காதலிக்கிறார்கள். சாதனாவிற்கும் தெரியும் தான்.

விக்ரமிற்கு தெரியும் தான். விஜய்க்கு சரி என்று சொன்னவள், நேராக வந்து விக்ரமின் முன் நின்று உண்மையை சொல்ல, “உன் பர்சனல்ல நான் தலையிட மாட்டேன் அன்டில் யு ஸ்டே லோயல்”, என்று ஒரே வரியில் முடித்து விட்டான்.

ஆனால் அவளை பார்க்கும் போதெல்லாம் அவளை முத்தம் இடுவதால் விக்ரமிற்கு தான் பிரச்சனையாக இருந்தது.

இன்றைக்கு அதற்காகவே, அவளிடம் வெளிப்படையாக பேசியும் இருந்தான்.

அப்போதும் அவன் செய்ததை என்ன வென்று சொல்வது என்று அவளுக்கு தான் தெரியவில்லை.

சாதனாவோ, அவன் கொடுத்த வாட்சை கொடுக்க, “இது ஒன்னு தான் கேடு”, என்றவள் அதை அப்படியே வைத்து விட்டாள்.

“ஏன் டி இவளோ டென்ஷன் ஆகுற? ரிலாக்ஸ்”, என்று சொல்லவும், “உனக்கு தெரியாது டி, விக்ரம் சார் என்ன முதல் முறையா திட்டு இருக்காரு”, என்று அவள் சொல்லவும், “விடு டி எல்லாம் சரி ஆகிரும்”, என்று சொன்னாலும் அவளுக்கு தான் உறக்கம் தொலைந்து போனது.

இங்கோ விஜய் வானத்தை வெறித்து கொண்டு இருந்தான். ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான்.

“அவனுக்காக என்கிட்ட சண்டை போடுறா”, என்று மைத்திரியை அவன் வறுத்தாலும், “உன்னால் தானே அவள் திட்டுவாங்கினாள்”, என்று அவன் மனசாட்சி அவனை காரி துப்பியது என்னவோ உண்மை தான்.

அவனின் தலையை அழுத்த கோதிக்கொண்டான்.

இங்கோ விக்ரமிற்கு அழைத்து இருந்தான் பிரணவ்.

“என்ன டா எப்படி போச்சு பார்ட்டி? வர மொளகா உன்ன வச்சி செஞ்சிட்டானு கேள்வி பட்டேன்?”, என்று பிரணவ் கேட்கவும், “அக்கா சொன்னாளா?’, என்று புருவம் உயர்த்தி கேட்க, “ஆமா உன்ன புகழ்ந்து தள்ளிட்டாங்க”, என்று அவன் சொல்லவும், அதற்கு அர்த்தம் நாளைக்கு அவனுக்கு அர்ச்சனை என்று விக்ரமிற்கு தெரியும்.

“நாளைக்கு சீக்கிரம் ஆபீஸ் போயிரணும்”, என்று அவன் சொல்லவும், “இன்னும் அண்ணினா உனக்கு பயம் போல”, என்றவனிடம், “நீங்க ரொம்ப தைரியசாலி தான? காலைல அவ கிட்ட வம்பு இழுத்தது சொல்லுங்க பார்ப்போம்”, என்றவுடன், அவனோ தலையில் தட்டி கொண்டான்.

“ஏன் இல்ல ஏன்னு கேட்குறேன்? உனக்கு நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா?”, என்று அவன் கேட்கவும், “பிடிக்கல தான்! நான் இப்படி இருக்கும் போது நீ மட்டும் எப்படி நல்லா இருக்கலாம்”, என்று விக்ரம் கேட்கவும், “ரொம்ப நல்ல எண்ணம் டா உனக்கு”, என்று சொல்லிவிட்டு பிரணவ் போனை வைத்து விட்டான்.

இங்கோ ஆத்விக்கை தூங்க வைத்து கொண்டு இருந்தால் வாகினி.

அவனோ, “அம்மா நாளைக்கு டின்னர் போலாம் ப்ளீஸ்”, என்று சொல்லவும், “நாளைக்கு கொஞ்சம் ஷாப்பிங் போனோம் முடிச்சிட்டு அப்படியே போகலாம்”, என்று அவள் சொல்லவும், அவனோ குதூகலிக்க துவங்கி விட்டான்.

இதே சமயம் பார்த்தீவ் உள்ளே வர, “என்ன சார் ரொம்ப குஷியா இருக்காரு?”, என்று கேட்கவும், “அப்பா நாளைக்கு நம்ப ஷாப்பிங் அண்ட் டின்னர் போறோம்”, என்று அவன் சொல்ல, “முதல்ல ஸ்கூல்க்கு போ டா”, என்று அவனை உறங்க செய்தான்.

ஆத்விக் உறங்கியவுடன், “என்ன மேடம் என்ன யோசனைல இருக்கீங்க?’, என்று கேட்கவும், “அதெல்லாம் ஒன்னும் இல்ல, விக்ரம் இன்னைக்கு வர்ஷாவை டிரைவர் மூலமா வீட்டுக்கு அனுப்பி வச்சானாம்”, என்று அவள் சொல்லவும், “எதுக்கு”, என்றவனிடம், “அவ ட்ரின்க் பண்ணிருக்கா போல”, என்று முடித்து கொண்டாள்.

அதற்கு மேல் பார்த்தீவும் எதுவும் பேசவில்லை.

அடுத்த நாள் விடிய, வர்ஷாவால் எழுந்திரிக்க முடியவில்லை. தலை வின் வின் என்று வலித்தது.

“ஐயோ தலை என்ன இப்படி பாறாங்கல் தூக்கி வச்ச மாறி வலிக்குது, நேத்து என்ன ஆச்சு”, என்று யோசித்தவளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஜூஸ் என்று நினைத்து குடித்ததும் அதற்கு பிறகு அவள் அடித்த கூத்தும் நினைவிற்கு வந்தது.

“போச்சு போச்சு, அப்போ டிரைவர் தான் என்ன கொண்டு வந்து விட்டாரா, கீழ போனா இன்னைக்கு கலா என்ன காலாவதி ஆக்க போறாங்க”, என்று நினைத்து கொண்டவளுக்கு, விக்ரம் அவளை சமாளித்து தான் நினைவிற்கு வந்தது.

அதை நினைத்ததும் அவளின் இதழ்கள் தானாக விரிந்தது.

விக்ரமோ எழுந்து அவனின் ஆபீஸ் போய்விட, சொன்னது போல் வாகினியிடம் இருந்து தப்பித்து தான் விட்டான்.

இங்கோ குளித்து முடித்து தயாராகி கீழே வந்தால் வர்ஷா.

கலா இல்லை அவளுக்கோ அப்போது தான் உயிரே வந்தது.

காலை உணவு சாப்பிட உணவு மேஜையில் அமரவும், அவளின் அருகில் வந்து அமர்ந்தான் விஜய்.

வர்ஷாவின் உடல் இறுகியது.

அவள் எழுந்து மற்ற சேரில் சென்று அமர முற்பட, அவளின் கையை பிடித்து விட்டான்.

சட்டென அதை உதறினாள்.

அவனுக்கோ சுள்ளென்று கோவம் எகிறி விட்டது.

“என்ன டி உன் அண்ணன் தான நான் கைய பிடிச்சா உனக்கு வலிக்குதா?’, என்று அவன் கேட்கவும், “வலிக்கல, அருவெறுப்பா இருக்கு! நான் ஒன்னும் மைத்திரி இல்ல! உன்னோட உண்மை முகம் தெரியாம இருக்க, வர்ஷா நினைவு இருக்கட்டும்”, என்று சொன்னவள், காலை உணவு சாப்பிடாமலேயே அவளின் காரை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

அவனுக்கோ அவ்வளவு ஆத்திரம், ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே ஆளுபவன் அவன், அவனின் தங்கை அவனை மதிக்க கூட வில்லை என்பது அவனுக்கு அவமானமாக தான் இருந்தது.

விக்ரமின் முன் வந்து நின்றாள் மைத்திரி.

“இன்னைக்கு என்ன மீட்டிங் இருக்கு?’, என்று அவன் கேட்கவும், அவள் பதில் பேசவில்லை.

அவளை நிமிர்ந்து அவன் பார்க்க, அவளின் கண்களில் கண்ணீர்.

அவனோ அவனின் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டலை அவளின் புறம் தள்ளினான்.

அதை எடுத்து பருகியவள், “சாரி சார்”, என்று சொல்லளவும், “இட்ஸ் பைன், என்ன மீட்டிங்?’, என்று கேட்கவும், “மோர்னிங் டென்க்கு ஒரு கிளைன்ட் கூட மீட்டிங் இருக்கு”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவனின் அலுவலக அறையில் நுழைந்து இருந்தால் சான்வி, சான்விகா.

 

 

அத்தியாயம் 6

 

சான்வி உள்ளே வர, விக்ரம் மைத்திரியை பார்க்க அவளும் வெளியே சென்று விட்டாள்.

போகும் போது சான்விக்கு ஒரு புன்னகையை கொடுக்கவும் மைத்திரி தவற வில்லை.

“என்ன ஹெட் மிஸ்டர்ஸ் இங்கயே வந்து இருக்கீங்க?’, என்று கேட்கவும், “விக்ரம சத்திரியன் எப்படி இருக்காருன்னு பார்த்துட்டு போக வந்தேன்”, என்று வந்தவள் அவனின் மடியிலேயே அமர்ந்து விட்டாள்.

அவனோ அவளின் இடையை வளைத்து, “உனக்கு வர வர தைரியம் அதிகமா ஆகிருச்சு! இப்படியே மிஸ்டர் ஜெய்ஷங்கர்க்கு ஒரு செல்பி அனுப்பலாமா?’, என்று அவன் கண்சிமிட்டவும், அவளோ எழ முற்பட, அவன் விட்டால் தானே!

“இதுக்கே இவளோ பயப்படற இதுல எங்க இருந்து நீ அவரு கிட்ட பேச போற?”, என்று புருவம் உயர்த்தி கேட்கவும், “நீங்க லவ் சொன்னதும் பேசலாம்”, என்று அவள் சொல்ல, “அப்போ நடக்கவே நடக்காது”, என்று அவன் சொல்லவும், அவனின் கையை பிடித்து கடித்து விட்டாள்.

“ராக்ஷஸி”, என்று அவன் திட்டவும், “நீயும் தான் டா ராக்ஷஸா”, என்று சொல்லி அவனின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவனின் பிடி இறுகியது.

“நான் கிளம்புறேன்”, என்று அவள் சொல்லவும், “எதுக்கு வந்த?”, என்று கேட்கவும், “இன்னும் ஒன் வீக்ல மிஸ்டர் கவின் வீட்டு ரிசெப்ஷன் இருக்கு வருவீங்க தானே?’, என்று கேட்கவும், “ம்ம் வருவேன், நான் மட்டும் இல்ல, அக்கா மாமா எல்லாரும் வருவாங்க”, என்று சொல்லவும், “அதுக்கு நேவி ப்ளூ சூட் போடுங்க”, என்று அவள் சொல்லவும், “ஏன்?”, என்றவனிடம், “நான் நேவி ப்ளூ சாரீ தான் கட்டுறேன்”, என்று கண்சிமிட்டினாள்.

அவனும் சரி என்று தலையாட்ட, அவளும், “பை”, சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

விக்ரம் அடுத்து மீட்டிங் செல்ல சென்று விட்டான்.

அன்றைய நாள் அப்படியே செல்ல, மாலை வாகினி, பார்த்தீவ், பிரணவ் மற்றும் ஆத்விக் ஷாப்பிங் சென்றனர்.

“அடுத்த வாரம் வர ரிசெப்ஷன்க்கு தான் டிரஸ் எடுக்கணும்”, என்று சொல்லி அவர்கள் ஒரு போட்டிக் உள்ளே சென்றனர்.

“உனக்கு மெரூன் கலர் நல்ல இருக்கும் ட்ரை பண்ணு”, என்று ஒரு டிசைனர் சாரீ எடுத்து கொடுத்தான்.

அவளும் வாங்கி அதை அவளின் மேலே வைத்து பார்க்க, அவ்வளவு அழகாக இருந்தாள்.

பார்த்தீவின் விழிகள் அவளை கண்கலேயே பருகின!

பிரணவ் மற்றும் ஆத்விக்கின் சத்தத்தில் சட்டென அவனின் மோன நிலை அறுபட, “என்ன டா?”, என்றவனிடம், “அண்ணிய அப்படி சைட் அடிக்கிற?’, என்று பிரணவ் சொல்லவும், வாகினி அவனை பார்த்து, “உனக்கு கல்யாணம் ஆகும் போது தெரியும்”, என்று சொல்லிவிட்டாள்.

அடுத்து பார்த்தீவிற்கும் அதே மெரூன் கலர் சட்டை எடுத்து கொண்டான்.

வாகினியின் கண்கள் அங்கே பிங்க் கலர் பிராக் ஒன்றில் படிந்தது.

அழகாக மெல்லிய வேலைப்பாடுகளோடு இருந்தது. பார்த்ததும் அவளுக்கு பிடித்து விட்டது.

“இதையும் பெக் பண்ணுங்க”, என்று அவள் சொல்லவும், “உனக்கு பிங்க் பிடிக்காதே”, என்று பார்த்தீவ் சொல்லவும், “சும்மா தான்”, என்று அவள் தோள்களை உலுக்க, அதே சமயம் அந்த கடையில் நுழைந்து இருந்தாள் வர்ஷா.

அவளுக்கு தான் நாளை பிறந்த நாள் ஆயிர்றே!

அதற்காக ஒரு உடை எடுப்பதற்காக வந்து இருந்தாள்.

அவளின் கண்கள் வாகினியை பார்க்க, வாகினியோ சட்டென முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளை பார்த்ததும் ஆத்விக் அவளிடம் சென்று, “ஹே வர்ஷு எப்படி இருக்க?’, என்று கேட்கவும், “நல்ல இருக்கேன் அமுல் பேபி”, என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளி விட்டு, அவளின் ஹேண்ட் பேகில் இருந்த ஒரு சாக்லெட்டை எடுத்து அவனிடம் நீட்ட, அவனும் வாங்கி கொண்டான்.

“அந்த சாணி உண்மையாவே உன் அண்ணா தானா?’, என்று கேட்கவும், “என்ன பண்றது அமுல் பேபி என் கூட பொறந்து தொலச்சிட்டான்”, என்று சொல்லவும், “அப்போ நீ தான் அவனுக்கு விஜய சாணினு சொல்ல ட்ரெயின் பண்ணிருக்க?’, என்று பார்த்தீவ் கேட்டுக்கொண்டு வரவும், அவள் எதுவும் சொல்லவில்லை.

“இந்த வர மொளகாவ என்னனு நினைச்சீங்க”, என்று பிரணவ் சொல்ல, அவனை முறைத்தாள்.

“கிளம்பலாமா?’, என்று வாகினி வந்து கேட்கவும், “நான் வரல அண்ணி நீங்க போயிடு வாங்க, கொஞ்சம் வேலை இருக்கு”, என்று பிரணவ் நின்று விட, வாகினி, பார்த்தீவ் மற்றும் ஆத்விக் மட்டும் ஹோடேலிருக்கு சென்றனர்.

பிரணவ் வர்ஷாவுடன் இருக்க, “என்ன மென் அப்படி பார்க்குற?’, என்று கேட்கவும், “வர மொளகா என்ன பண்ற இங்க?’, என்று கேட்க, “கலி கிண்ட வந்தேன்”, என்று அவள் சொல்லவும், “அப்போ எங்க ஜெயில்ல உன்ன ஹேர் பண்ணிக்குறேன்”, என்று சொல்லவும், அவனை முறைத்தவள், அவளிற்கான உடையை தேர்வு செய்ய கிளம்பிவிட்டாள்.

அவளிற்கு பிடித்த எந்த உடையும் கிடைக்க வில்லை.

இந்த கடையின் வெப்சைட்டில் ஒரு பிங்க் உடையை பார்த்து தான் வந்து இருந்தாள்.

அந்த கடையின் ஊழியரிடம் அதை காட்ட, “மேம் அது ஒரு பிஸ் தான் இருந்தது, இப்போ தான் சேல் ஆச்சு”, என்று சொல்லவும் அவளின் முகம் வாடி விட்டது.

அடுத்து அவள் அடுத்த வாரம் வரும் திருமண அழைப்பிற்காக புடவை பார்க்க, “இத எடுத்துக்கோ”, என்று பேபி பிங்க் நிற டிசைனர் புடவை ஒன்றை எடுத்து வைத்தான் பிரணவ்.

அவளுக்கும் பிடித்து தான் இருந்தது.

“நைஸ் சாய்ஸ்”, என்று சொன்னவள் அதையே எடுத்து கொள்ள, “பர்த்டே டிரஸ் எடுக்கலயா?’, என்று கேட்டவனிடம், “எதுவும் பிடிக்கல”, என்று பில் கவுண்டரில் கார்டு கொடுத்து பெ செய்து விட்டவளிடம், இரண்டு பைகள் நீட்ட பட்டது.

“நான் ஒரு டிரஸ் தான் எடுத்தேன்”, என்றவளை பார்த்து, “மேம், இவரோட வந்தவங்க இதையும் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க”, என்று சொல்ல, அதை பிரித்து பார்த்தவள் கண்கள் விரிந்தன.

ஆம், அவள் வாங்க வேண்டும் என்று நினைத்த உடையை தான் வாகினி அவளுக்கு எடுத்து கொடுத்து இருந்தாள்.

“அண்ணி நீ நினைச்சதை செஞ்சிட்டாங்க போல”, என்று புருவம் உயர்த்தி கேட்கவும், அவளின் கண்கள் கலங்கி விட்டது.

“ரொம்ப எமோஷனல் ஆகாத வர மொளகா, வா வந்து எனக்கு உன் பர்த்டே ட்ரீட் வை”, என்று அவளின் தோளை பற்றி கொண்டு அவளை அங்கிருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்று விட்டான்.

இங்கோ ஹோட்டலில் அமர்ந்தவர்களுக்கு உணவு வந்து விட்டது.

“ஓழுங்க எல்லாத்தையும் சாப்பிடணும்”, என்று வாகினி ஆத்விக்கிடம் சொல்ல, அவனும் தலை அசைத்தான்.

அனைத்தும் சாப்பிட்டு முடிந்த சமயம், மைத்திரி உள்ளே வந்து இருந்தாள்.

வாகினியின் கண்கள் அவளை பார்க்க, அவளும் பார்த்து விட்டாள்.

“ஹை மேம்”, என்று அவளின் அருகே வந்து சொல்லவும், “தனியாவா வந்து இருக்க?”, என்று கேட்கவும், மைத்திரி எச்சில் விழுங்கினாள்.

“அது…”, என்று அவள் தயங்க, “அவ பாய் பிரண்ட் கூட வந்து இருப்பா, விடு”, என்று பார்த்தீவ் சொல்லவும், வாகினி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“கிளம்பலாம்”, என்று வாகினி சொல்லிவிட்டு அவளை பார்த்து, “வீட்ல ஓழுங்க ட்ரோப் பண்ண சொல்லு”, என்று அங்கிருந்து சென்று விட்டாள்.

இதே சமயம் வெளியே ஓடி வந்தான் ஆத்விக்.

விஜயும் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

போனை பார்த்து கொண்டு வந்தவன், யாரின் மேலோ மோதி நிற்க, “இப்படி தான் மேனர்ஸ் இல்லமா போனை பார்த்துட்டு வந்து மோதுவிங்களா?”, என்று அவனின் முன் நின்ற குட்டி உருவத்தை புருவம் உயர்த்தி பார்த்தான் விஜய்.

“ஆத்விக்”, என்ற குரலில் இருவரும் திரும்ப, அங்கே ஆத்விக்கின் அருகில் வந்து நின்றாள் வாகினி.

“பாருங்க மா! இந்த சாணி என் மேல மோதிட்டான்”, என்று அவனின் அன்னையின் முன் அவன் குற்ற பத்திரிக்கை வாசிக்க, விஜய்க்கோ அவன் சாணி என்று அவனை அழைத்ததிலேயே கோவம் தலைக்கு ஏறியது.

வாகினியின் கண்களோ விஜய்யை பார்த்து தீப்பிழம்பை கக்க, விஜய்யோ அவனின் பார்வையை சட்டென திருப்பி கொண்டான்.

அவனால் என்றுமே நேருக்கு நேர் பார்க்க முடியாத ஒரே பெண் வாகினி தானே!

“குழந்தையை கூட நல்லா ட்ரெயின் பண்ணி வச்சிருக்கான்”, என்று விஜயின் மனம் கொந்தளிக்க, “கிளம்பலாமா?”, என்று கேட்டுக்கொண்டே வாகினியின் அருகில் வந்தான் பார்த்தீவ்.

விஜயின் கண்கள் பார்த்தீவை பார்க்க, அவனின் இதழ்களில் புன்னகை.

பார்த்தீவும் புன்னகைத்தான்.

“ஆத்விக் சே சாரி”, என்று வாகினி சொல்ல, “நோ”, என்று கைகளை கட்டி கொண்டு நின்றான் அவன்.

“என்ன ஆச்சு?”, என்று பார்த்தீவ் கேட்க, “இவன் மாமா ட்ரெயின் பன்னிருக்கான், என்ன சாணினு கூப்பிட்றான்”, என்று விஜய் சொல்லவும், “மாமா சொல்லல வர்ஷு தான் சொன்னா”, என்று ஆத்விக் சொல்லவும், விஜய்க்கோ கோவம்.

அவனின் தங்கை அல்லவா அவனை அப்படி பேசியது.

“யாரா இருந்தாலும் பெரியவங்கள அப்படி பேச கூடாது”, என்று வாகினி சொல்லவும், அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நின்றான் ஆத்விக்.

“இட்ஸ் ஓகே”, என்று சொல்லிவிட்டு விஜய் நகர்ந்து விட்டான்.

“வா போகலாம்”, என்று பார்த்தீவ் சொல்லவும், இருவரும் கிளம்பி விட்டார்கள்.

உள்ளே நுழைந்தவனிற்காக அங்கே இருக்கையில் காத்து கொண்டிருந்தாள் மைத்திரி.

“வாகினி மேம் வந்திருந்தாங்க”, என்று அவள் சொல்ல, “பார்த்தேன்”, என்று எதிரில் அமர்ந்தான்.

இருவரும் அமைதியாக உண்டனர்.

ஐஸ் கிரீம் சாப்பிடும் சமயம், “சாரி”, என்றதும் அவனை நிமிர்ந்து பார்க்க, “உண்மையாவே சாரி டி”, என்று அவளின் கையை பற்றினான்.

“எனக்கு என்னவோ பயமா இருக்கு விஜய். உங்களுக்கு விக்ரம் சார் மேல இருக்க வன்மதுனால தான் லவ் பண்றிங்களோனு கூட தோணுது”, என்று சொல்லவும், “உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல அப்போ”, என்றவனின் குரலில் கோவம் எட்டி பார்த்தது.

“நான் அப்படி சொல்லல, ஆனா உங்க வன்மதுனால நம்ப காதல் அழிஞ்சிருமோனு தோணுது”, என்ற காரிகையவளின் காதலை பணயம் ஆக்கி சாணக்கியன் ஆடும் போது அவளின் நிலை தான் என்னவோ?

“எப்பவும் அப்படி பண்ண மாட்டேன் டி”, என்றவனின் கூற்றை அவனே உடைப்பான் என்று அவனிற்கு தெரியாமல் போனது தான் விதியின் சதியோ?

இதே நேரம் உணவு உண்டு விட்டு, அவளின் காரின் டோரை திறந்து விட்டான் பிரணவ்.

“அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே வர மொளகா”, என்றவன் அவளின் கைகளில் ஒரு சிறிய பெட்டகத்தை கொடுக்க, அதில் ஒரு அழகான பிரேஸ்லெட் இருந்தது.

“தேங்க்ஸ் பிரணவ்”, என்று அங்கிருந்து அவளும் காரை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

வீட்டிற்கு வந்தவள் இன்று முழுவதும் கலாவதியை பார்க்காததே நல்லது என்று நினைத்து கொண்டாள்.

நாளைக்கு நிறைய பிளான் எக்சிகியூட் பண்ணனும் என்று நினைத்து கொண்டு உறங்குபவளுக்கு தெரியாது அன்றைய நாள் முடிவில் தான் எல்லா முடிச்சுகளும் அவிழ போகிறது என்று!

 

அத்தியாயம் 7

 

 

காலையில் வர்ஷா சீக்கிரமாகவே எழுந்து விட்டாள்.

வாகினி அவளுக்கு கொடுத்த உடையை அணிந்து கொண்டவள், நேரே சென்றது என்னவோ விக்ரமின் இல்லத்திற்கு தான்.

இன்றும் விக்ரம் சீக்கிரமாகவே சென்று விட்டான்.

இவள் வருவாள் என்று அவனுக்கு தெரியுமே!

அவனின் இல்லத்தை அவள் அடைய, ஏதோ அவளின் வீட்டிற்கே வந்த தோரணையில் உள்ளே வந்தவளை பேப்பர் பார்த்து கொண்டிருந்த வேதாந்தமும் கவனித்தார் தான்.

எதுவும் பேசவில்லை, “ஹலோ”, என்று அவரின் முன்னால் வந்து நிற்க, அவர் அவளை பார்த்துவிட்டு அவரின் அருகில் இருந்த ஒரு பார்ஸலை கொடுக்க, அதை வாங்கி பிரித்து பார்த்தவளுக்கு புது ஐபோன் தான் கண்களில் பட்டது.

“வாவ் தேங்க்ஸ் ஹேண்ட்ஸம்”, என்று சொன்னவள் அப்படியே அவரின் கன்னத்திலும் ஒரு முத்தத்தை பெற்று கொண்டு வெளியே சென்று விட்டாள்.

அதற்கு பிறகு தான் கோவிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து விட்டு, பின்பு அவளின் கார் நின்றது என்னவோ விக்ரமின் ஆபீஸ் முன்னே தான்.

அவனின் ஆஃபீஸிற்கு வந்தவளை மைத்திரி வழி மறைக்க, “மிஸ்டர் விக்ரம பார்க்கணும்”, என்று வர்ஷா சொல்லி நகரும் சமயம், “அப்பொய்ன்ட்மென்ட் இல்லாம பார்க்க முடியாது”, என்றவளை பார்த்து, “எனக்கு அப்பொய்ன்ட்மென்ட் தேவ இல்ல மிஸ் மைத்திரி, நீங்க உங்க வேலைய பாருங்க இல்ல உங்க ஒண்ணுத்துக்கும் உதவாத பாய் பிரண்ட் கூட கடலை போடுங்க… இப்படி வந்து என் குறுக்க நிறக்காதிங்க”, என்று சொல்லிவிட்டு அவளையும் தாண்டி சென்று விட்டாள்.

விக்ரமின் அலுவலக அறையை திறந்து உள்ளே நுழைந்து இருந்தாள் வர்ஷா.

“இன்னைக்கு என் பைர்த்டே! எனக்கு கிபிட் வேணும்”, என்று அவனின் முன் வந்து நின்றாள் வர்ஷா.

அவளை பார்த்த விக்ரமனின் கண்களில் எந்த உணர்வும் இல்லை.

“ஸ்ரீகலா குரூப்ஸ் எஸ்க்யூட்டிவ் டைரக்டர் மிஸ் வர்ஷா இங்க வந்து இருக்கறது அவங்க அண்ணா மிஸ்டர் விஜய சாணக்கியனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”, என்று அவன் கேட்கவும், “ஒன்னும் இல்ல மொத்தமா என்ன வேதாந்தம் குரூப்ஸ் சிஇஓ மிஸ்டர் விக்ரம சத்ரியனோட அனுப்பி விட்ருவாரு! எனக்கு உங்க கூட இருக்க ஓகே தான்”, என்று தோள்களை குலுக்கி கொண்டு அவள் சொல்லவும், அவனுக்கு தான் கடுப்பாக இருந்தது.

“எனக்கு மீட்டிங் இருக்கு”, என்றவனை பார்த்து, “ஐ டோன்ட் கேர்! இப்போ வருவீங்களா இல்ல மீடியாவை கூப்பிட்டு எல்லாருக்கும் நான் இங்க வந்ததா லீக் பண்ணவா?”, என்று அவள் கேட்கவும், அவனின் கை முஷ்டிகள் இறுகியது.

செய்யகூடிவாள் தான் என்று அவனுக்கு தெரியுமே!

அவனின் பிஎ மைத்திரியை உள்ளே அழைத்தான்.

அவள் வந்ததும் வர்ஷா அவளை முறைக்க, மைத்திரியும் அவளை முறைத்தாள்.

“மைத்திரி”, என்ற விக்ரமனின் அழைப்பில் நிதர்சனத்திற்கு வந்து இருந்தாள்.

“எனக்கு ஏதாச்சு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இப்போ இருக்கா?”, என்று அவன் கேட்கவும், “இல்ல சார், போஸ்ட் லன்ச் தான் இருக்கு”, என்று அவள் சொல்லி வெளியேறி விட்டாள்.

“அவளை எதுக்கு பிஎவா வச்சி இருக்கீங்க?”, என்று வர்ஷா எகிற, “தட் இஸ் நன் அப் யுவர் பிசினஸ்”, என்று கர்ஜித்து இருந்தான் விக்ரமன்.

“உனக்கு வேண்டியது கிபிட் தான? வா வாங்கி கொடுக்குறேன்! டோன்ட் டாக் அபௌட் அன்னேசெசரி திங்ஸ்”, என்று அவன் சொல்லவும், “உங்களுக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல”, என்றவளின் கண்கள் கலங்கி விட்டது.

பிறந்த நாள் அதுவுமாக அவளிடம் இப்படி நடந்து கொண்டது அவனிற்கு கூட கொஞ்சம் குற்ற உணர்வாக போய் விட்டது.

“இங்க பாரு வர்ஷா, ஸ்டாப் கிரைங்”, என்றவன் தண்ணீர் கொடுக்க, அதை வாங்கி அவளும் கொடுத்தாள்.

“சரி வா கிபிட் வாங்க போகலாம்”, என்று அவன் சொல்லவும், “கிபிட் மட்டும் பத்தாது, அழ வச்சிங்க தானே, இன்னைக்கு புள் டே, என் கூட ஸ்பென்ட் பண்ணனும்”, என்றவளை பார்த்து, “மீட்டிங் இருக்கு”, என்றதும், “அத மட்டும் அட்டென்ட் பண்ணிக்கோங்க”, என்றாள்.

அவனும் ஆழ்ந்த மூச்சை எடுத்து, “வா”, என்று அழைத்து கொண்டு சென்றான்.

வர்ஷாவை நகை கடைக்கு அழைத்து கொண்டு வந்திருந்தான் விக்ரம்.

“என்ன வேணுமோ எடுத்துக்கோ”, என்று அவன் சொல்லவும், அவளும் தேடி பார்த்து கொண்டிருந்தாள்.

அழகாக ஒரு இதய வடிவ நெக்ல்ஸ் தான் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் சுற்றி டைமென்ட் இருக்க, பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.

“இதையே எடுத்துக்குறேன்”, என்று உற்சாகமாக வர்ஷா சொல்ல, “பில் இட்”, என்று விக்ரம் சொல்லி திரும்பவும், அங்கே அவர்களை பார்த்து கொண்டு இருந்தான் விஜய்.

அவனும் வர்ஷாவிற்கு தான் பிறந்த நாள் பரிசு வாங்க வந்திருந்தான்.

அவனை பார்த்ததும் வர்ஷாவின் கண்கள் விரிந்தன!

அவளுக்கு பயம் விஜயின் மேல் இல்லை, அவன் போய் அவர்களின் அன்னையிடம் சொன்னால் அவர் தான் அவளை வேப்பிலை அடித்து விடுவார் என்று அவளுக்கு தெரியுமே.

அவளோ விக்ரமை விட்டு விலக பார்க்க, விக்ரமோ சட்டென வர்ஷாவின் கைகைளை பிடித்து கொண்டான்.

விஜய்க்கோ கோவம் எகிறியது. பிபி மெஷின் இருந்து இருந்தால் வெடித்து விடும் அளவிற்கு கோவம்.

வர்ஷாவோ விக்ரமை பார்க்க, அவனும் அவளை பார்த்து, “டோன்ட் வரி ஸ்வீட் ஹார்ட்”, என்று கண் சிமிட்ட, அவளுக்கோ மயக்கம் வராதா குறை தான்.

இப்போது தான் அவன் இப்படி எல்லாம் பேச வேண்டுமா என்று அவளுக்கு இருந்தது.

அவன் கூறியது விஜய்யின் செவிகளையும் அடைந்தது.

அவனோ அவளை முறைத்து கொண்டு வெளியேறிவிட்டான்.

“அச்சோ போச்சி இன்னைக்கு எனக்கு சங்கு தான்”, என்றவளை பார்த்து, “எதுவும் ஆகாது”, என்றவன் அடுத்து அவளை மதிய உணவிற்காக அழைத்து கொண்டு வரவும், அங்கே வந்தான் பிரணவ்.

“என்ன டா வர மொளகா உன் பர்ஸை இன்னைக்கு காலி பண்ணாம விட மாட்டா போல”, என்றவன் அருகில் அமரவும், “நீயா செலவு பண்ற?”, என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

விக்ரம் அமைதியாகத்தான் இருந்தான். ஆனால் வர்ஷாவும் பிராணாவும் தான் சண்டை போட்டு கொண்டே இருந்தனர்.

அவன் ஒன்று பேசினால் இவள் ஒன்று பேசினாள்.

ஒருவழியாக சாப்பிட்டு முடிய, விக்ரமும் வர்ஷாவும் அவனது காரில் சென்று விட்டனர்.

விக்ரம் அவனின் மீட்டிங்கிற்காக சென்று விட, மைத்திரியின் முன் அமர்ந்து இருந்தாள் வர்ஷா.

“எதுக்கு இன்னும் இந்த கம்பெனில இருக்க? அவன் கூட வேலை செய்யலாம்ல?’, என்று கேட்கவும், “உங்களுக்கு தேவ இல்லாதது மிஸ் வர்ஷா”, என்று மைத்திரியும் அவளுக்கு சலிக்காமல் பதில் அளித்தாள்.

“நீ யாருக்கு உண்மையா இருக்கன்னு எனக்கு தெரியல”, என்றதும், “தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சா போதும்”, என்று முடித்து விட்டாள்.

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, ஆனாலும் சொல்றேன், விஜய நம்பாத, ஹி வில் யூஸ் யு”, என்று வர்ஷா சொல்லவும், “உங்க அண்ணாவ பத்தி நீங்களே இப்படி பேசுறீங்க”, என்று மைத்திரி சீறவும், “அதனால தான் சொல்றேன்! ஐ க்னோ ஹிம் பெட்டர் தென் யு”, என்று வர்ஷா சொல்ல, “உங்க அக்கரைக்கு நன்றி! நான் பார்த்துக்குறேன்”, என்று மைத்திரி அவளின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

வர்ஷாவோ, “யுவர் சாய்ஸ்”, என்று விக்ரமிற்காக காத்துகொண்டு இருந்தாள்.

அவளின் கைபேசி அலறியது, கலாவதி தான் எடுத்து இருந்தார். ஆனால் வர்ஷா அழைப்பை ஏற்கவில்லை.

எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டாள்.

இதே சமயம் மீட்டிங் முடித்து விட்டு வந்த விக்ரம் அவளை ஒரு இடத்திற்கு கூட்டி செல்ல, அங்கே வாகினி, பார்த்தீவ், பிரணவ் மற்றும் ஆத்விக் இருந்தனர்.

வேதாந்தமும் இருந்தார்.

அவளுக்காக கேக் உடன் காத்துகொண்டு இருந்தனர்.

“ஹாப்பி பர்த்டே வர்ஷு”, என்று ஆத்விக் ஓடிவந்து சொல்லவும், அவனை தூக்கி கொண்டு, “தேங்க யு அமுல் பேபி”, என்றவள் அவனின் கன்னத்தில் முத்தம் கொடுக்க, “வந்து கேக் வெட்டு வர மொளகா”, என்று பிரணவ் அழைக்க, வாகினி, விக்ரம், வேதாந்தம் மூவரும் முறைத்தனர்.

“ஏன் டா இப்படி?’, என்று பார்த்தீவ் அவனின் காதுகளை கடிக்க, “ப்ளோல சொல்லிட்டேன் டா”, என்றதும், அவளும் கேக் வெட்டியவள் முதலில் வேதாந்தத்திற்கு தான் கொடுத்தாள்.

அவர் வாயை திறக்காமல் இருக்க, அவளே கன்னத்தை பற்றி திறக்க வைத்து ஊட்டி விட்டாள்.

வர்ஷாவின் அதிரடியை பற்றி தெரியுமே!

அவள் இப்படி பிறந்த நாள் கொண்டாடி ஆறு வருடங்கள் ஆகி விட்டது.

அவளின் தாத்தா இருக்கும் போது கொண்டாடியது, அதன் பிறகு இன்று தான் கொண்டாடுகிறாள்.

“ரொம்ப தேங்க்ஸ்”, என்று அனைவரையும் பார்த்து அவள் சொல்ல, பார்த்தீவும் அவளிடம் வந்து அவனது கிபிட் கொடுத்தான்.

அதில் ஒரு அழகிய கம்மல் இருந்தது.

“அழகா இருக்கு”, என்று அவள் சொல்லவும், “உன் நல்ல மனசுக்கு என்னைக்கும் நீ நல்லா இருப்ப வர்ஷா”, என்று அவளின் தலையை வருடி கொடுக்க, அவளும் புன்னகையை பதிலாக கொடுத்தாள்.

இரவு உணவு ஒன்றாக உண்டார்கள்.

வர்ஷா, பிரணவ் மற்றும் ஆத்விக் தான் ஓயாமல் பேசியது. பார்த்தீவ் எப்போதாவது பேசினான். ஆனால் மீதி மூவரும் தான் வாயே திறக்க வில்லை.

வர்ஷா ஆத்விக்குடன் போட்டோ எடுத்து கொண்டிருக்க, அதே சமயம் பிரணவ் மற்றும் விக்ரம் வர, “வாங்க போட்டோ எடுக்கலாம்”, என்று ஆத்விக் அழைக்க, நால்வரும் நின்று போட்டோ எடுத்தனர்.

“சிரி டா”, என்று பிரணவ் சொல்லவும், விக்ரமின் இதழ்கள் விரிய, வர்ஷா அவனின் தோள்களில் கை போட்டு கொண்டாள்.

இப்படியாக அவள் பிறந்த நாள் இனிதே முடிந்தது.

விக்ரமே அவளை அவளின் வீட்டின் வாசல் முன் விட்டான்.

அவள் சட்டென அவனின் கன்னத்தில் முத்தம் கொடுக்க, “பை”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

விக்ரமின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். அனைத்தையும் ஒதுக்கியவன் அவனின் வீட்டை நோக்கி நகர, வீட்டின் உள்ளே நுழைந்தவளின் கன்னத்தில் பளார் என்று அறைந்து காளியாக நின்று இருந்தார் கலாவதி.

“கலா”, என்று ஸ்ரீதர் தடுக்க நினைக்கும் சமயம், “நீங்க சும்மா இருங்க… எவளோ தைரியம் இருந்தா அந்த வீட்டு ஆளுங்க கூட உன் பிறந்த நாள்னு கூத்தடிச்சிட்டு வருவ?’, என்று கேட்கவும், “இதுல தப்பு என்ன இருக்கு?”, என்று கண்ணீரை அடக்கி கொண்டு கேட்க, “அவங்க யாருனு உனக்கு தெரியும் தானே”, என்று கோவமாக கத்தினார் கலா.

“தெரியுமே! என் அண்ணா விக்ரம், என் அக்கா வாகினி! உங்க முதல் புருஷன் வேதாந்தம் பசங்க! சரியா சொல்லிட்டேனா மிஸ்ஸஸ் கலாவதி ஸ்ரீதர்”, என்று அவள் பேசவும், அப்படியே நின்றார் கலாவதி.

ஆம், ஒரே தாயின் கருவறையில் இரு வேறு அப்பாக்களுக்கு பிறந்த நான்கு மணிசெல்வங்கள் அவர்கள்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!