57. சத்திரியனா? சாணக்கியனா?

4.9
(40)

அத்தியாயம் 57

இரவு நேரத்தில் அந்த அமைதியான சூழலில் ஆழியின் சத்தம் அவனின் மனதிற்கு சற்று அமைதி தந்தது என்னவோ உண்மை தான்.

மூன்று கார்களின் சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

“அப்படியே கடலை பார்த்துட்டு இருந்தா எப்படி ஏசிபி சார்?”, என்று வந்த விக்ரமின் குரலில் அவனை திரும்பி பார்த்தான் பிரணவ்.

“பதவியை வச்சி நான் தான் நிறைய செய்றேனே மிஸ்டர் விக்ரம்”, என்று அவன் சொன்ன அதே வார்தைகளை சத்திரியனுக்கு திருப்பி கொடுக்க, அவன் சளைத்தவனா என்ன? “நீங்களும் தான் பணம் பத்தும் செய்யும்னு சொன்னதா நியாபகம்”, என்றவன் அருகில் வந்து தோளில் கையை போட்டு, “பேச்சுக்கு பேச்சு சரியா போச்சு”, என்றான்.

பிரணவ்வால் கோவத்தை பிடித்து கொண்டு இருக்கவும் முடியவில்லை. அவனுக்கு இருந்த அழுத்தத்தில் விக்ரமிடம் வார்த்தையை விட்டுவிட்டான்.

ஆனால் இப்போது அவனுக்கும் மனது பிசைந்தது தான்.

“சாரி எல்லாம் சொல்லமாட்டேன்”, என்று பிரணவ் சொல்ல, “நானும் சாரி சொல்ல சொல்லலையே”, என்று கண்சிமிட்டவும், அவனை இறுக அணைத்து இருந்தான்.

அவனின் மனழுத்தத்துக்கு தேவை பட்ட அணைப்பு அது! என்ன தான் பார்த்தீவ் அவனிற்கு துணையாக இருந்தாலும் விக்ரம் தான் அவனின் மறுபாதி.

அவனின் அன்னை தந்தையை இழந்த பிறகு பிரணவ்வை முழுதாக தேற்றி எடுத்து விக்ரம் தான்.

அவனுக்கு பார்த்தீவ்விற்கு அடுத்து தோழனாக மட்டும் இல்லாமல் அவனின் தமையனாகவும் இருப்பவன்.

“சரி உங்க கர்ணன் துரியோதனன் நட்பு பாராட்டல் எல்லாம் முடிஞ்சிதுன்னா நம்ப பேசலாமா?”, என்று ராகவ் கேட்கவும் தான் இருவரும் விலகினார்.

“என்ன மச்சான் உன்னால உன் நண்பனை கட்டி பிடிக்க முடியலன்னு பொறாமைல பேசுற போலவே இருக்கே …”, என்ற விக்ரம் விஜயை பார்க்க, அவனிடம் எந்த உணர்வும் இல்லை.

“நம்ப எல்லாரையும் கூப்பிட்டதே அவன் தானே’, என்று பிரணவ் சொல்லவும் தான் அவர்களின் நினைவு பின்னோக்கி சென்றது.

பிரணவ் புருவம் சுருங்க பார்த்தான். விஜய் தான் அழைத்து இருந்தான்.

அழைப்பை எடுத்தவனிடம், “எதுக்கு கால் பண்ண?”, என்று கடுமையாகவே பேசவும், அவனோ நிதானமாக, “வெளிய மீட் பண்ணலாம் பிரணவ்.. கொஞ்சம் பேசணும்”, என்று தன்மையாக பேசினான்.

விஜய்க்கு வாழ்க்கை கடந்த சில தினங்களாக நிறைய பாடங்களையும் அதிர்ச்சிகளை கொடுத்து இருந்தது. அதில் இருந்து அவனுக்கு நிறையவே நிதானம் வந்து இருந்தது.

“சரி வரேன்” என்று வைத்து விட்டான்.

இங்கோ விக்ரம் ஜெய் ஷங்கரை ஒரு வழி ஆக்கி கொண்டு இருந்தான்.

“குடிங்க மாமா”, என்று அவனே அவருக்கு சுக்கு காபி போட்டு அவனே அவருக்கு குடி பாட்ட, “டேய் என்ன விடு டா… என் பொண்ணுக்கு ஊட்டி விட்டா ஒரு நியாயம் இருக்கு.. எதுக்கு டா என்ன சாவடிக்கிற?”, என்று அவர் கதற, ராகவ் மற்றும் சான்வி தான் சிரித்து கொண்டு இருந்தனர்.

“எப்படி தான் என் பொண்ணு உன்ன சமாளிக்கிறாளோ?”, என்று கேட்டே விட்டார்.

“அதெல்லாம் அவ சமாளிப்பா மாமா”, என்றவனை பார்த்து, “விக்ரம்.. என் பொண்ணுக்கு என்னைக்கும் நீ துரோகம் பண்ண மாட்ட தானே! எனக்கு அவ ரொம்ப முக்கியம்” என்கவும், “நான் ப்ரோமிஸ் பண்றேன்… உங்க பொண்ணு கண்ணுல இருந்து இதுக்கு மேல தண்ணி வந்தா அது அவளோட பிரசவ வலிக்காக தான் இருக்கும்.. அவளுக்கு என்னைக்கும் நான் உண்மையா இருப்பேன்”, என்று அவரின் கையை பற்றி கூறினான்.

“சரி நாங்க அப்போ கிளம்பறோம்”, என்று சான்வி சொல்லவும், விக்ரமின் கைபேசி அலறியது. விஜய் தான் அவனுக்கும் அழைத்து இருந்தான்.

“சொல்லு”, என்கவும், “உன் மச்சானை நைட் இந்த இடத்துக்கு வர சொல்லு.. நீயும் வா”, என்றவுடன், “அத நீயே அவன் கிட்ட சொல்லலாமே… அண்ட் எனக்கு நைட் என் பொண்டாட்டி கூட இருக்கனும் இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு… கொஞ்சம் ரோமன்ஸ் பண்ண விடு டா”, என்றவனிடம், “உனக்கு கால் பண்ணேன் பாரு என்ன நானே செருப்பால அடிச்சிக்கணும். பிரணவ்வை வர சொல்லிருக்கேன் விக்ரம்… ப்ளீஸ் வந்து தொலை”, என்று பற்களை கடித்து கொண்டு அவன் சொல்லவும், “சரி சரி… நான் சொல்லிடறேன்.. அப்புறம் கரெக்ட்டா வந்திடுறேன்”, என்று வைத்து விட்டான்.

“நாங்க கிளம்புறோம் மாமா”, என்றவன் ராகவை பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்தவன், அவனுடன் தனியே செல்ல, “இந்த பீச்க்கு நைட் வந்திரு.. உன் பிரண்ட் தான் கூப்பிட்டான்”, என்கவும், அவனுக்கு அவனிடம் நண்பன் பேசுவது கூட இல்லையே என்பது மனதை பிசைய செய்தது.

“நைட் பேசிக்கலாம்.. உன் பிரண்ட்டையும் உன்னையும் சேர்த்து வச்சிரலாம்”, என்று சொல்லிவிட்டு சென்றான் விக்ரம்.

இதை நினைத்து பார்க்க, “டேய் விக்கி நீ இப்படி மாறுவேனு நான் நினைக்கல டா”, என்று பிரணவ் சொல்ல, “ம்கூம் நான் என்ன டா பண்றது.. சில்லா இருந்த நீ சூடா ஆகிட்ட.. இவனுங்க இரண்டு பேறும் முறிக்கிகிட்டு இருக்கானுங்க.. யாராச்சு ஒருத்தர் பாலன்ஸ் பண்ணணும்ல… அதான் நான் ஜாலியா ஆகிட்டேன்”, என்று கண்ணை சிமிட்டி இருந்தான்.

“அவனுக்கு கல்யாணம் ஆன தெனாவட்டுல ஆடுறான்… நீ விடு பிரணவ்”, என்றவன் அவனின் முன் ஒரு பைலை நீட்டினான்.

“என்ன இது?”, என்று வாய்விட்டே கேட்டவனிடம், “இத படிச்சி பாரு”, என்கவும், எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

அவனும் வாங்கியவன், அதை படிக்க, அவனின் கண்கள் விரிந்தன.

“ஓ மை காட்… எப்படி இது சாத்தியம்?”, என்று பிரணவ் மேலும் வியக்க, “அத நீ தான் கண்டு பிடிக்கணும் பிரணவ்”, என்று விட்டான்.

“என்ன ஆச்சு?”, என்று ராகவ் வர, அவனிற்கு பைலில் இருந்த அனைத்து ஆவணங்களையும் காண்பித்தவனின் கண்கள் அதிர்ந்து விரிந்தன.

“என்னால இத நம்பவே முடியல”, என்று அவன் சொல்லவும், விக்ரமும் அதை வாங்கி பார்த்தான்.

“இப்போ என்ன பண்றது பிரணவ்?”, என்று ராகவ் கேட்க, “விசாரிக்கணும்.. நிறைய நம்ப சாட்சிகள் சேகரிக்கணும்… அதுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் நம்ப பேச முடியும்”, என்றவனின் முகம் இறுகி விட்டது.

விக்ரமோ அவனின் தோளை தொட்டு, “உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன்”, என்றவனை நிறுத்தி, “நாங்க எல்லாரும் இருக்கோம்”, என்று சொல்லிருந்தான் விஜய்.

ராகவோ அவர்களை பார்த்து, “அப்போ நம்ப பன்டஸ்டிக் போர்ரா?”, என்கவும், “இல்ல டா நம்ப பன்டஸ்டிக் பை”, என்று சொல்லி இருந்தான் விக்ரம்.

“ரொம்ப மொக்க ஜோக் மச்சான்”, என்றவனை பார்த்து, “சரி சரி நீயும் உன் பிரண்டும் ராசி ஆகிருங்க.. எவளோ நேரம் சண்டை போட்டுக்கிட்டே இருப்பிங்க”, என்று சொல்லவும், விஜயை பார்க்க, அவனோ, “பிரணவ் நீ ரொம்ப லக்கி உனக்கு எதுவா இருந்தாலும் ட்ரஸ்ட் பண்ற பிரண்ட் இருக்காரு.. அதே மாதிரி அவரையும் நீ ரொம்ப ட்ரஸ்ட் பண்ற..ஆனா ட்ரஸ்ட் இல்லனா என்ன பண்றது?”, என்று கேட்கவும், ராகவிற்கு நண்பனாக தோற்று விட்ட உணர்வு.

“டேய் நீ என்ன டா ட்ரஸ்ட்னுலாம் பேசுற.. உன் தங்கச்சி என்ன ஹார்ட்லெஸ்னு சொல்லிட்டு போயிருக்கா… இதுக்கு என்ன சொல்லுவ? இங்க பாரு விஜய்.. ஏதோ அவன் அண்ணனா அப்படி பேசிட்டான். ஒரு பிரண்ட்டா யோசிக்க மறந்துட்டான். முடிஞ்சா மன்னிச்சுடு இல்ல மறந்திடு… இந்த விஷயம் நடந்ததையே மறக்கறது தான் எல்லாருக்கும் நல்லது.”, என்று பிரணவ் சொல்லவும், விக்ரம் தான், “உன்ன ஹார்ட்லெஸ்ன்னு சொன்னாளா டா அந்த சுண்டெலி, அவ கிட்ட நான் போய் பேசுறேன்”, என்றான் விக்ரம்.

பிரணவ் சிரித்து விட, “சரி நீங்க பேசிட்டு வாங்க, நாங்க கிளம்புறோம்”, என்று சொன்னவர்கள் ராகவையும் விஜயையும் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.

விஜயும் ராகவும் அப்படியே நின்று இருந்தார்கள்.

எத்தனை நிமிடம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

“விஜய்”, என்று ராகவ் தான் ஆரம்பித்தான்.

“நீ எதுவும் சொல்லாத… நான் தான் ஒரு பிரண்ட்டா தோத்துட்டேன். மே பி உனக்கு நம்பிக்கையான பிரண்ட்டா நான் இல்ல போல”, என்றவனை நிறுத்தி, “விஜய்”, என்று அணைத்தவன், “சாரினு கூட சொல்ல முடியல டா… நான் உனக்கு பண்ணது ஒரு விதத்துல துரோகம்.. உன்ன நம்பி இருக்கனும். நம்பாம போய்ட்டேன். எனக்கு நீ சான்வி விக்ரம் கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டது கூட கோவம் வரல டா… விக்ரம் பொண்டாட்டி அதுவும் என் தங்கச்சிய அவனை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்க வந்துட்டியானு கொஞ்சம் பயந்துட்டேன்.”, என்றவன் சொல்லும்போதே, விஜயின் இதழில் விரக்தி புன்னகை.

“அது எப்படி உன்னால அப்படி யோசிக்க முடிஞ்சுது? அப்போ அவளோ கேவலமானவனா என்ன நினைச்சிருக்க அப்படி தானே?”, என்கவும், “டேய் விஜய்”, என்றவனை தள்ளி நிறுத்தி, “இல்ல ராகவ் ப்ளீஸ்.. என்னால முடியல.. என்ன மொத்தமா உடைச்சிட்டீங்க.. எனக்கு தெரிஞ்சி விக்ரமுக்கு என் மேல இருந்த நம்பிக்கை கூட யாருக்கும் இல்ல.. அட்லீஸ்ட் வாகினி அக்கா கூட சான்விய வச்சி எந்த கேள்வியும் கேட்கல ஆனா நீயும் மைத்திரியும்.. யு போத் ப்ரோக் மீ”, என்றவன் அப்படியே நடந்து சென்று விட்டான்.

ராகவிற்கு வலித்தது, விஜயின் வலியையும் இன்று புரிந்து கொள்ள முடிந்தது.

பின்பு அவனும் வீட்டிற்கு சென்று விட, அடுத்த நாள் விடிய, விக்ரமின் மார்பில் துயில் கொண்டு இருந்தாள் சான்வி.

கள்ளன் அவன், இரவில் அவளை உறங்கவே விடுவதில்லை.

அவளை அவனில் இருந்து பிரித்து எடுத்து அவன் அவர்கள் வீட்டில் உள்ள ஜிமிற்கு செல்ல, அங்கோ அவனின் கண்ணில் பட்டது அந்த அற்புதமான காட்சி.

அவனோ சிரித்து விட, “நைன்டி நைன்.. ஹண்ட்ரட்”, என்று விஜயின் முதுகில் ஏறி அமர்ந்து இருந்த ஆத்விக் துள்ளி குதித்து கீழே இறங்க, “என்ன இப்போல்லாம் நான் உன் கண்ணுக்கு தெரியர்தே இல்ல போல ஆத்விக்?”, என்று கேட்கவும், “மாமா எப்பவும் நீங்க தான் என் பேவரைட்.. ஆனா இப்போ விஜய் மாமாவும் ஸ்பெஷல்”, என்று சொல்லி கொண்டு இருக்கவும், “ஆத்விக்”, என்று வாகினி பாலுடன் வந்தாள்.

அவனோ விஜயின் பின் புறம் ஒளிய, “வெளிய வரியா? இல்ல அடி கிடைக்கும்”, என்று அவள் மிரட்ட, அவனோ விஜயை பார்த்தான்.

“அவனை என்ன பார்க்குற? அவனுக்கும் சேர்த்து தான் கிடைக்கும்.. ஓழுங்கா வந்து பால் குடிக்கிற வழிய பாரு”, என்று சொல்லவும், அவனும் வந்து பால் குடிக்க ஆர்மபித்தான்.

அடுத்த ஒரு மாதம் அப்படியே கழிந்தது.

பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஸ்ரீகலா குரூப்ஸ் பொறுப்புகள் வர்ஷா நடத்த விஜய் தான் உதவி செய்தான். அவளே வந்து, “அண்ணா ப்ளீஸ்”, என்று தினமும் கெஞ்சுவதால், நேரடியாக இல்லை என்றாலும் அவன் தான் மறைமுகமாக அனைத்து உதவிகளும் செய்து கொண்டு இருந்தான்.

அன்றைக்கு அவர்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை நடந்து கொண்டு இருக்க, சான்வி அப்படியே மயங்கி சரிந்தாள்.

அவளின் கையை பிடித்து பார்த்த வாகினி, “எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம்”, என்று விக்ரமை பார்த்து சொல்லவும், “நானா?”, என்று புருவம் உயர்த்தி கேட்க, “ஆமாம் நீ தான்… அப்பாவாக போற”, என்று சொல்லவும், விஜய் மற்றும் வர்ஷாவின் கண்களும் விரிந்தன.

வேதாந்தம் மகிழ்ச்சியில் இருக்கும் போதே, பார்த்தீவ் உள்ளே வந்தான்.

“என்ன ஆச்சு எல்லாரும் செம்ம ஹாப்பி போல”, என்கவும், “அப்பா.. அத்தைக்கு பாப்பா வர போகுது”, என்று அவன் சொல்லவும், “டேய் விக்கி”, என்று அவன் அணைத்து கொண்ட அதே சமயம், உள்ளே வந்தனர் ராகவும் ஜெய் ஷங்கரும், சான்வி மிகவும் கெஞ்சி கேட்டு கொண்டதால் அவர் வர ஒப்புக்கொண்டிருந்தார்.

வந்தவருக்கு இந்த விடயம் தெரிவிக்க பட, அவருக்கும் மகிழ்ச்சி தான்.

அடுத்து உள்ளே நுழைந்தனர் ஸ்ரீதரும், கலாவதியும், அவர்களை பார்த்தவர்களின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி.

எத்தனை ஆண்டுகள் கழித்து கலாவதி இந்த வீட்டிற்குள் வருகிறார்.

“நீங்க என்ன இங்க?”, என்று வர்ஷா கேட்கும் போதே, “நான் தான் வர சொன்னேன்”, என்று காக்கி சீருடையில் மிடுக்காக வந்தான் பிரணவ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!