“அது.. அது வந்து..’, என்று அவர் தயங்கி நிற்க, “சொல்லுங்க.. நீங்க பெத்த பொண்ணு தானே மிஸஸ் வாகினி பார்த்தீவ்.. புருஷன் மேல இவளோ பாசம் வச்சிருக்குறவங்க.. நீங்க பெத்த பொண்ண பார்க்க ஏன் வரல?”, என்று பிரணவ் மீண்டும் அவரை பார்க்க, “போகணும்னு நினைப்பேன்.. அப்போ எல்லாம்..”, என்றவர் ஒரு கணம் நிறுத்தி, “அப்போ எல்லாம் சரியா ரீமாவை நினைவு படுத்துற மாதிரி ஏதாச்சு நடத்துறோம்.. அதுக்கு அப்புறம் போக மனசே இருக்காது.. நானும் எத்தனையோ தடவை ஏன் இப்படினு யோசிச்சிருக்கேன்.. என்னோட பொண்ணோட வளைகாப்புக்கு போக இருந்தேன் தான்… ஆனா.. அன்னைக்கு கூட என்னால போக முடியல…”, என்றவர் சொல்லவும், “சரி ஏன் அன்னைக்கு விக்ரம பார்த்து அப்படி சொன்னிங்க?”, என்று கேட்டு இருந்தான் பிரணவ்.
“என்னைக்கு?”, என்றவர் முழிக்க, “உங்க அப்பா இறந்த அப்போ.. வர்ஷாவை பார்த்து அவன் உன்ன யூஸ் பண்ணிக்குறான். அப்படினு ஏன் சொன்னிங்க.. அவனுக்கும் தங்கச்சி தானே”, என்று கேட்க, “அது.. அப்போ ஒரு ப்ராஜெக்ட் எங்களுக்கு கிடைக்க வேண்டியதா இருந்துது.. என் அப்பா அத வேதாந்தமுக்கு விட்டு கொடுக்க சொன்னாரு.. நான் ஒத்துக்கல… எங்க வர்ஷாவை யூஸ் பண்ணி அந்த டாக்குமெண்டை எடுக்க பார்ப்பங்களோனு தான் அப்படி பேசுனேன்.. அன்னைக்கு ரொம்ப எமோஷனல்லா இருந்தேன்.. ஆனா உண்மையா நான் என்னைக்கும் அப்படி நினைச்சது இல்ல.. நான் உண்மையாவே என்னோட நாலு பசங்கள ஒருத்தவங்களுக்கு கூட நல்ல அம்மாவா இல்ல”, என்றவர் முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டார்.
அவருக்கு பருக தண்ணீர் கொடுத்தான் பிரணவ்.
“கொஞ்சம் காம் ஆகுங்க மிஸ் கலாவதி”, என்றவன் சொல்லிக்கொண்டே, மேலும் தொடர்ந்தான்.
“இது இன்வெஸ்டிகேஷன் கேள்வி இல்ல.. இருந்தாலும்.. ஏன் உங்களுக்கு மைத்திரி விஜய கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு ஒரு எண்ணம்?”, என்றவனை பார்த்து, “எனக்கு ரீமா தான் நினைவுக்கு வருவா.. அவளும் இப்படி தான் எனக்கு யாரும் இல்ல.. ஒரு அனாதை மாதிரி வந்தா.. ஆனா என் வாழ்க்கையே அழிச்சிட்டா.. அவங்க எல்லாரும் பணத்துக்காக தான் இப்படி இருக்காங்கனு ஒரு மைண்ட் செட் எனக்கு வந்திருச்சு.. மத்த படி எனக்கு எதுவும் இல்ல.. சாதனாவை தானே என் மகனுக்கே நான் பிஏவா வச்சேன்.. எனக்கு டாலேண்ட் தான் முக்கியம்.. ஆனா என் வாழ்க்கைல நடந்த கசப்பான சம்பவங்கள்.. நானும் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்னு இப்போ தோணுது..”, என்றவரை பார்த்து, “அப்போ சரி, இப்பவும் உங்களுக்கு வர்ஷா இங்க வர்றது, விக்ரம் வாகினி கிட்ட பேசுறது எல்லாம் பிடிக்கல இல்லையா?”, என்று கேட்கவும், அவர் தயங்கி பதில் பேசவில்லை.
“என்ன சொல்லுங்க”, என்று மீண்டும் அழுத்தம் கொடுக்க, “அது ஸ்ரீதருக்கு பிடிக்கலனு பீல் பண்ணேன்”, என்று உண்மையை முதல் முறையாக போட்டு உடைத்து இருந்தார் கலாவதி.
அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது. ஜெய் ஷங்கருக்கே புதிய தகவல். இன்று வரை ஏதோ வேதாந்தமின் மேல் உள்ள கோவத்தால் தான் அப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்று நினைத்தது உண்டு. ஆனாலும் சில நேரம், “விக்ரம், வர்ஷாயோட அண்ணா தானே”, பரிந்து பேசிய நாட்களும் உண்டு. ஆனால் இப்போது ஸ்ரீதரை அல்லவா சொல்கிறார்.
“ஏன் அப்படி பீல் பண்ணீங்க?”, என்றவன் ஸ்ரீதரை தான் பார்த்தான்.
அவரோ அப்படியே தான் அமர்ந்து இருந்தார்.
“சொல்லுங்க ஏன் அப்படி பீல் பண்ணீங்க?”, என்று இந்த முறை குரலை உயர்த்தவும், “ஏனா அவரு சொல்லுவாரு, விக்ரம் ஒன்னும் வர்ஷாயோட சொந்த அண்ணா இல்லையே.. ரீமா கூட வேதாந்தம் அண்ணான்னு தான் கூப்பிட்டானு..”, என்கவும், “உங்களோட பொண்ணும் தானே?”, என்று புருவம் உயர்த்தி கேட்டவனிடம், “என்னவோ வர்ஷாவை பொறுத்த வரையிலே எனக்கு எப்பவும் ஸ்ரீதருக்கு தான் அதிக உரிமை இருக்க போல பீல் ஆகும்!”, என்று முடித்து இருந்தார்.
“நான் உங்க பொண்ணு இல்லையா அம்மா?”, என்று உடைந்து கேட்டு இருந்தாள் வர்ஷா. அந்த கேள்வியிலேயே மறித்து இருந்தார் கலாவதி.
அவளை பார்க்கவே முடியவில்லை. வர்ஷாவின் கண்கள் சிவந்து இருந்தது. அழவும் முடியவில்லை. தொண்டை அடைத்தது.
அவளின் பிறப்பே கேள்வி குறியான தருணம் போல் அவளுக்கு தோன்றியது.
மொத்தமாக நொறுங்கி விட்டு இருந்தாள் அந்த வீட்டின் குட்டி இளவரசி.
விக்ரமால் பார்க்க முடியவில்லை. எழுந்து விட்டான். அவளின் அருகே சென்றவன், அவளின் கையை பற்றி, “ஸ்வீட் ஹார்ட்”, என்கவும், “அப்படி கூப்பிடாதிங்க.. நான் யாரோ.. எதுக்கு பொறந்தேனே தெரியல” என்கவும், அன்று அவன் அண்ணா என்று அழைக்காதே என்று சொல்லி இருந்தான். இன்று அவள் ஸ்வீட் ஹார்ட் என்று அழைக்காதே என்று சொல்கிறாள்.
காலம் தான் எத்தனை கொடியது?
“ஹே என்னைக்கும் நீ தான் என் ஸ்வீட் ஹார்ட்”, என்று அவன் அணைக்க முற்பட, அவள் விலகி விட்டு இருந்தாள்.
“வர்ஷா”, என்று இம்முறை விக்ரம் அழுத்தமாக அழைக்கவும், “எனக்கு வாழவே புடிக்கல… “, என்று வந்தது அவளின் பதில்.
நொந்து போய் விட்டாள் என்று தெரிந்தது. பெற்ற தாய் அவளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்ட பிறகு வாழ்ந்து என்ன பயன் என்கிற மனநிலையில் அவள்.
பிரணவ்வோ அழுந்த கண்களை மூடி திறந்தான். எத்தனை கொடிய வார்த்தைகளை உதிர்த்து விட்டாள்.
“விக்ரம்”, என்று பிரணவ் தலையசைக்க, அவளின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
வர்ஷா அழ வில்லை, அடங்கி விட்டாள். எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவள், இன்று சிறகுடைந்து விட்டாள்.
“அவரு கிட்ட நீங்க பேசிருக்கலாமே மிஸ் கலாவதி. உங்க மகன் தானே?”, என்று பிரணவ் மீண்டும் விசாரணையை தொடர்ந்தான்.
“பேசியிருக்கேன். ஆனா அவரு எப்பவும் வேதாந்தமை தான் சுட்டி காட்டுவார்”, என்கவும், “ஆனா அவரு மட்டும் எல்லா ஈவென்ட்ஸ்க்கும் வந்திருக்காரே”, என்று கேட்டவனை பார்த்து, “அவரை ஏமாத்தளையே நான் தானே ஏமாந்துட்டேனு சொல்லுவாரு”, என்று சொல்லி முடிக்கவும், அனைவரின் பார்வையும் இப்போது ஸ்ரீதரிடம் திரும்பியது.
ஆனால் பிரணவ்வின் பார்வையோ ஜெய் ஷங்கரிடம், “அடுத்து நீங்க தான் மிஸ்டர்”, என்று திரும்பியவன், “ஏன் சார் உங்க பெஸ்ட் பிராண்ட்ட நம்பாம போயிட்டீங்க?”, என்று கேட்க, “நான் கண்ணால பார்த்தேன். அதான்”, என்று அவர் சொல்ல, “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்னு உங்களுக்கு தெரியாதா? சரி உங்க வைப் டெத் எப்படி நடந்தது?”, என்று அவர் வினவ, “ஆக்சிடென்ட்.. மிஸ்டர் தணிகாசலம் கூட போகும் போது தான் ஆக்சிடென்ட் ஆகிருச்சு… ஸ்பாட் அவுட்”, என்று முடித்து விட்டார்.
“எப்படி அந்த ஆக்சிடென்ட் நடந்தது?”, என்று கேட்க, “லார்ரி வந்து மோதிருச்சுனு சொன்னாங்க.. ட்ரைவர் குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்கான்”, என்றவரை பார்த்து, “ஆனா உங்க வைப் டெத் ரிப்ரோட்ல அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்னும் இருக்கு”, ,என்றவன் சொல்லவும், “ஆமா மே பி ஆக்சிடென்ட் ஆனா பிறகும் வந்து இருக்கலாம்”, என்றவுடன், “அவருக்கு ஓகே.. மிஸ்டர் தணிகாசலமாக்கும் செம் டைம் ஹார்ட் அட்டாக் வருமோ?”, என்று கலாவதியை பார்த்தான்.
“என்ன சொல்றிங்க?”, என்று கலாவதி வாய் விட்டு கேட்க, “உங்க அப்பாவோட டெத் ரிப்போர்ட் யாரு வாங்குனா?”, என்றவனுக்கு பார்வையாலேயே ஸ்ரீதர் என்று பதில் அளித்து இருந்தார் கலாவதி.
“சரி ஏன் உங்களுக்கு இவளோ நாள் வன்மம் உங்க பிரண்ட் மேல? நீங்க போய் பேசிருக்கலாமே?”, என்று இம்முறை ஜெய் ஷங்கரை பார்க்க, “அவன் ஸ்ரீதருக்கு ஒரு பாவம் பண்ணிருக்கான்”, என்று சொல்லவும், வேதாந்தமோ, “நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணல”, என்று கத்தி இருந்தார்.
“நீ தான் டா பண்ணி இருக்க.. நீ தான்.. அவனுக்கு ஆண்மை போகவே காரணம் நீ தான்”, என்று குரலை உயர்த்தி அவர் கத்தவும், அங்கிருந்த அனைவருக்கும் அடுத்த அதிர்ச்சி.
“இது என்ன புது கதை?”, என்று பிரணவ் கேட்க, “ஆமா.. அப்படி தான் ஸ்ரீதர் சொன்னான்.”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், பிரணவ்வோ, “என்ன எல்லாரும் புலி வருது புலி வருது கதையா.. ஸ்ரீதர் ஸ்ரீதர்னு சொல்றிங்க.. அப்போ ஸ்ரீதருக்கு இதுக்கும் தான் எல்லா சம்மந்தம் போலயே.. என்ன மிஸ்டர் ஸ்ரீதர் ஆரம்பிக்கலாமா?”, என்ற பிரணவ்வின் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகை.
விஜயோ ஸ்ரீதரை பார்க்க, இவ்வளவு நேரம் அமைதியாக, சாந்தமாக இருந்த அவரது முகத்தில், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வன்மம் வர ஆரம்பித்தது.
இத்தனை நாட்கள் நல்லவராக அனைவரின் முன்னும் வளம் வந்து கொண்டிருந்த ஸ்ரீதர் தான் இந்த சத்திரியனையும் சாணக்கியனையும் வைத்து பகடை ஆடிய உண்மையான சகுனி.
சகுனியும் இப்படி தானே, அன்பாக பேசியே துர்யோதனையை தீய வழிக்கு அழைத்து சென்று விட்டான். அவனின் குடும்பத்தின் வீழிச்சியை பழிவாங்க மொத்த குருகுலத்தையும் அழிக்க துணிந்து இருந்தான்.
அதே போல் தான் ஸ்ரீதரும் அவரின் சொந்த காழ்புணர்ச்சிக்காக, வேதாந்தத்தின் மொத்த குடும்பத்தையும் வைத்து பகடை ஆடி இருந்தார்.
வாகினி, விக்ரமிற்கு தாய் இல்லாமல், விஜய்க்கு அன்னை தந்தை என்று இருவரின் அன்பும் இல்லாமல், இப்போது வர்ஷா என்கிற பூவின் மொத்த இனிப்பையும் கசக்கி பிழிந்து எடுத்து கொண்டு இருக்கிறார்.
“என்ன மிஸ்டர் ஸ்ரீதர் எல்லாம் உண்மையும் வெளிய வந்திரும்னு பயமா? இல்ல இதோட வாழ்க்கை முழுக்க ஜெயில்னு கடைசி சிரிப்பா?”, என்று பிரணவ் கேட்கவும், “உங்க அப்பா மாதிரியே பேசுறியே பிரணவ்”, என்றவரின் குரலில் அப்படி ஒரு வில்லத்தனம்.
“உங்க அப்பா கூட இதே மாதிரி தான் என் கிட்ட பேசுனான். அதான் அவனை சொர்கத்துக்கு இதே கையால அனுப்பி வச்சேன்” என்றவுடன் அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது. விஜய் மற்றும் விக்ரமை தவிர, ராகவிடம் கூட ஒன்றும் அவர்கள் சொல்ல வில்லை.
பார்த்தீவ்வின் கண்கள் சிவந்து விட்டது. அவனின் தந்தையை கொன்றான் என்று அவனின் முன்னாலேயே ஒருவன் சொல்கிறான்.
“யு ப்ளாடி…”, என்று பார்த்தீவ் அவன் மேல் பாய போக, அதற்குள் விக்ரம் எழுந்ததால், ஸ்ரீதருக்கு அருகே இருந்த சான்வி இப்போது அந்த கயவனின் பிடியில் சிக்கி இருந்தாள்.
அதுவும் சான்வியின் கழுத்தில் அருகில் இருந்த கத்தியையும் வைத்து இருக்க, பதறி விட்டார்கள் அனைவரும்.
“விடு டா அவள”, என்று விக்ரம் கர்ஜிக்க, “விக்ரம்”, என்று அழ துவங்கி விட்டாள் பெண்ணவள்.
அவனின் இன்னுயிரானவள், இப்போது அவனின் உயிர்நீரையும் சுமந்து கொண்டு இருப்பவள், ஸ்ரீதரின் கை பிடியில், அவளை காப்பாற்றுவானா சத்திரியன்?
“கதைய இப்போ நான் சொல்றேன்”, என்று வில்லனுக்கும் வில்லனாக பேச துவங்கினார் ஸ்ரீதர்.
அத்தியாயம் 60
“சான்விய விடு”, என்று விக்ரம் மீண்டும் சொல்ல, “ஓஹ் ஹீரோ சார் எதுக்கு இப்போ கத்திகிட்டே இருக்கீங்க? உங்க மனைவியை பிடிச்சதுக்கே உனக்கு இவளோ கோவம் வருதே.. உங்க அப்பா என் வாழ்க்கையே அழிச்சிட்டான் டா.. அவனால தான்.. நான் இந்த நிலமைல வந்து நிக்குறேன்.”, என்று கத்தி இருந்தார் ஸ்ரீதர்.
“இங்க பாரு ஸ்ரீதர்.. எதுவா இருந்தாலும் பேசலாம்.. முதல்ல என் பொண்ண விடு.. அவ மாசமா இருக்கா”, என்றதும், “ஓஹ் விக்ரமோட வாரிசு இப்போ சான்வி வயித்துக்குள்ள இருக்குல்ல! அப்போ அது வேதாந்தமோட வாரிசும் தானே!”, என்கவும் அங்கிருந்த அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.
ஒரு சைக்கோவை போல் அல்லவா ஸ்ரீதரின் முகம் இருந்தது.
“விக்ரம்.. விக்ரம்”, என்று மீண்டும் சான்வி கத்த, அவளின் குரல் விக்ரமின் ஆழ்மனதை சென்று தாக்கியது.
வேதாந்தமோ, “இங்க பாரு ஸ்ரீதர்.. உனக்கு கோவம் என் மேல தானே.. என்ன என்னவென்னாலும் பண்ணு… ஆனா சான்விய விட்டுடு”, என்று அவரும் சொல்ல, அவர் கேட்டால் தானே! மனமே இல்லாத அந்த அரக்கனுக்கு அவர்கள் பதட்டம் புரிந்தால் தானே!
“இப்போ கெஞ்சுரியே வேதாந்தம்.. இதே மாதிரி உன் முன்னாடி ஒருத்தன் வந்து கெஞ்சுனான் நினைவு இருக்கா?”, என்றதும் வேதாந்தத்திற்க்கு ஏதும் நினைவு வர வில்லை.
“உங்களுக்கு எப்படி நினைவு வரும்? நீங்க தான் அப்போ ஜாலியா இருந்திங்களே.. உங்க காலேஜ் லைப் அப்போ ஒருத்தன் வந்து கெஞ்சுனான் நினைவு இருக்கா” என்று மீண்டும் சீற, “ஆமா ஒரு பொண்ண என் காலேஜ் சீனியர் கெடுத்துட்டான்.. அதை என் கண்ணால பார்த்து சாட்சி சொன்னேன். அப்போ அவன் கெஞ்சுனான். ஆனா நான் அவன் சொன்னதை செய்யல” என்றதும், “அந்த சீனியர் தம்பி நான் தான்”, என்றதும் நெஞ்சே அடைத்து விட்டது.
“உன் அண்ணா பண்ணது தப்பு.. அதுக்கு அமைதியா இருப்பாங்களா?”, என்று வேதாந்தம் கத்தவும், “அவன் ஒன்னும் தெரிஞ்சி பண்ணல.. அவனுக்கு ட்ரக் கொடுத்து அவன் பிரண்ட்ஸ் பண்ண வச்சிட்டாங்க.. டேய் எனக்கு தான் சின்ன வயசுலயே ஆண்மை இல்லனு தெரிஞ்சிருச்சு டா.. அவன் ஒருத்தன் தான் எங்க வீட்டோட வாரிசுன்னு நாங்க எல்லாரும் நினைச்சுகிட்டு இருந்தோம்… ஆனா நீ அதையும் பஸ்பம் ஆக்கிட்ட.. அவன் சூசைட் பண்ணி செத்துட்டான் டா… அப்போ தான் முடிவு எடுத்தேன் உன்ன பழிவாங்கணும்னு”, என்றவரின் குரலில் அப்படி ஒரு வன்மம்.
“லூசா நீ? உங்க அண்ணாக்கு ட்ரக் கொடுத்தாங்கனு எனக்கு எப்படி தெரியும்? அப்படியே இருந்தாலும் அவன் பண்ணது தப்பு. அது மட்டும் இல்ல அந்த பொண்ணு செத்து போய்ட்டா தெரியுமா?”, என்றவரை பார்த்து, “எனக்கு அதெல்லாம் தெரியாது.. உன்ன பழிவாங்கணும்னு காத்துகிட்டு இருந்தேன்.. அப்போ தான் அடிக்கடி நீ என்கிட்ட புலம்ப ஆரம்பிச்ச.. உன் பொண்டாட்டியோட சந்தேகத்தை பத்தி.. அது தான் என்னோட பெரிய கீ”, என்றவர் கலாவதியை பார்த்து, “உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா.. ஈஸியா ஏமாத்திரலாம் போல”, என்றவரின் குரலில் மொத்தமாக உடைந்து விட்டார் கலாவதி.
“உன் பிஏ ரீமா தான் அதுக்கான முதல் படிய எனக்கு செட் பண்ணி கொடுத்தா.. அவளுக்கு நீ கொடுத்ததை விட.. நாலு மடங்கு நான் கொடுத்தேன்.. நான் சொன்ன எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டா.. ஆமா எல்லாமே செட் அப் தான்.. உன்னோட வைன்ல ட்ரக் கலந்து கொடுத்தோம்.. ஆனா அப்போ கூட உன் பொண்டாட்டி பேர தான் டா நீ சொல்லிக்கிட்டு இருந்த.. அந்த விதத்துல நான் உன்ன பாராட்டுறேன்.. ஆனா உன் பொண்டாட்டிக்கு தான் உன் மேல கடுகு அளவு கூட நம்பிக்கை இல்லமா போயிருச்சு..”, என்றதும் கலாவதிக்கு மொத்தமாக ஒரு மனைவியாக தோற்று விட்டது போன்ற உணர்வு.
“ரீமாவை பேக் பண்ணி ஆஸ்திரேலியா அனுப்பிட்டேன்.. அப்புறம் தான் உன் வீட்ல விளையாட ஆர்மபிச்சேன்.. உன் பொண்டாட்டி சரியான முட்டாள் டா வேது… என்ன சொன்னாலும் நம்புறா.. கொஞ்சம் கூட மூளையே இல்ல.. பிசினஸ்ல இருக்க மூளையை அவ கொஞ்சமாச்சு குடும்பத்து மேல வச்சிருந்த இன்னைக்கு நீங்க எல்லாரும் நல்ல குடும்பமா ஷேமமா இருந்து இருப்பிங்க.. ஆனா பாரு விதி யாரை விட்டது? உன் பொண்டாட்டிய நீ லோட் பண்ணி அனுப்புனதும், அவ கருவை கலைச்சிட்டு இருந்தானு வை… நான் கூட என் விளையாட்டை நிறுத்திட்டு இருப்பேனோ என்னவோ.. ஆனா பாரேன்.. அவளுக்கு குழந்தை தேவை பட்டது. அதான்.. அதனால தான் இவளோ பிரச்சனை. அவளுக்கு வேற அடிக்கடி புள்ளைங்க மேல பாசம் வந்துரும் அப்போ எல்லாம் அவ கிட்ட பழைய நினைவுகளை திருப்பி திருப்பி நினைவு படுத்திகிட்டு இருந்தேன். இதுக்காக நான் நிறைய படிச்சேன். எப்படி எல்லாம் ஒரு மனிதனோட உணர்வுகளோடு விளையாடலாம்? எப்படி நம்ப எமோஷன்ஸ்ச அடக்கணும்னு நிறைய நிறைய படிச்சேன்”, என்றவரை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
உண்மையாகவே அவருக்கு மனநலம் சரி இல்லை என்று அனைவருக்கும் தெரிந்தது. இல்லையென்றால் இப்படி ஒருவரால் இத்தனை வருடங்களை பகைமையை வைத்து கொண்டு இருக்க முடியுமா என்ன? அதுவும் எவ்வளவு அழகாக படித்து எல்லாம் காயை நகர்த்தி இருக்கிறார்.
“நான் தான் கலாவதியை ஏத்தி விட்டுக்கிட்டே இருந்தேன். ஆனா இதுல அஞ்சு கொலை பண்ண வேண்டியது வரும்னு தான் நான் எதிர் பார்க்கல.. இந்த தணிகாசலத்துக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சி போச்சு.. அவரு அமைதியா இருந்து இருக்கலாம்.. அன்னைக்கு அவருடைய காலை நீங்க யாரும் எடுக்கல.. ஆனா மிஸஸ் தாமரை ஜெய் ஷங்கர் தான் எடுத்தாங்க.. அதான் மொத்தமா இரண்டு பேரையும் போட்டுட்டேன்”, என்றவரின் முகத்தில் அப்படி ஒரு கொடூரமான புன்னகை.
“ஆனா ஆக்சிடென்ட் பண்ணி எல்லாம் அவங்க சாகல அவங்க சாப்பிட சாப்டுல ஹார்ட் அட்டாக் வர டேப்லெட் போட்டு இருந்தேன். அதுலயும் தப்பிச்சிட்டா அதனால தான் சேஃப்டிக்கு ஆக்சிடென்டும் பண்ணேன். தணிகாசலத்தோட ரிப்போர்ட் நான் தான் வாங்குனேன் அதனால எந்த பிரச்சனையும் இல்லாம போயிருச்சு.. நான் தான் அந்த ஆக்சிடென்ட் பண்ணவனுக்கு.. தோ இருக்காளே இந்த முட்டாள் அக்கௌன்ட்ல இருந்து பணம் அனுப்புனேன்.. எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்துது.. குறுக்கால இந்த கௌஷிக் வந்த மாதிரி… தோ நிக்குறானே இந்த ஏசிபி இவனோட அப்பா கமிஷனர் விஸ்வநாதன் வந்தாரு.. எங்க எப்படி டவுட் வந்ததுன்னு தெரியல.. எப்படியோ கலாவதியோட பேங்க் ஸ்டேட்மென்ட் அந்த ஆளு கிட்ட மாட்டிக்கிச்சு.. அங்க தான் பிரச்சனை ஆர்மபிச்சுது.. எல்லாத்தையும் தூசி தட்டி எடுத்துட்டாரு.. ஆனா உண்மையா உன் அப்பாக்கு தப்பாம பிறந்து இருக்க பிரணவ்.. உன் அப்பாவை இதே கையால தான் டா கொன்னேன்.. அத ஆக்சிடன்ட் மாதிரி செட் அப் பண்ணேன்.. உன் அம்மாவை தான் தேவை இல்லமா கொள்ளவேண்டியதா போயிருச்சு.. உன் அப்பா அன்னைக்கே சொன்னான்.. நீ வேணா பாரு டா என் மகன் உன்ன அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி மெய்யுவானு.. ஆனா நான் தான் உன்ன சாதாரணமா நினைச்சிட்டேன்… அப்பவே மொத்தமா உன்னையும் உன் அண்ணனையும் போட்டு இருக்கனும்.. சரி இவங்க கதை முடிஞ்சுதுனு வந்தா இந்த ரீமா திரும்பி வந்து நிக்குறா.. அதுவும் குற்ற உணர்ச்சியும்.. அவ குழந்தை அப்பவே செத்திருச்சாம்.. அதுல இருந்து அவளால தூங்கவே முடியலாம்.. சாகுற காலத்துல நியனோதயம் வந்திருக்கு அவளுக்கு.. வர கூடாதே.. அதான் அவ வந்ததும் நானே அவள பார்க்க போன எடத்துல அவளையும் கொன்னுட்டேன்.. நான் கொலை பண்ணி முடிக்கவும்.. தோ இந்த அறிவுகெட்டவ வரவும் சரியா இருந்துது… நான் பின்னாடி இருந்தது கூட மேடம் பார்க்கல..அப்படியே பயந்து ஓடிட்டாங்க.. சரி இவளையே கோர்த்து விட்டுடலாம்னு தான் நினைச்சேன்.. அத கொஞ்சம் டீவீக் பண்ண தான் உன் அப்பா அம்மா ஆக்சிடென்ட்ட எடுத்து விட்டேன். உனக்கு அதுக்கான எவிடென்ஸ் அனுப்புனேன்.. எல்லாம் கரெக்டா போய்ட்டு இருந்துட்டு ஆனா பாரு.. புலிக்கு பொறந்தது பூனை ஆகாதுன்னு நீ நிரூபிச்சிட்ட”, என்றவர் சொல்லளவும், இப்படி எல்லாம் ஒருவரால் செய்ய முடியுமா என்று யோசனையாக இருந்தது.
“அஞ்சு கொலை பண்ணிருக்கீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட கில்ட் இல்லையா அப்பா?” என்று வர்ஷா கேட்க, “ஹே யாரு யாருக்கு டி அப்பா?”, என்றவரை பார்த்து உறைந்து நின்று விட்டாள் வர்ஷா.
“விடிய விடிய கதை கேட்டு ராமனுக்கு சீதை சித்தப்பான்னு சொல்றவன் மாதிரி பேசுற.. எனக்கு தான் ஆண்மையே இல்லையே டி.. எனக்கு எப்படி நீ பிறப்ப? உனக்கு ஒரு உண்மை சொல்லவா?”, என்றவரின் முகத்தில் அப்படி ஒரு நக்கல்.
அது என்ன உணர்வென்று யாராலும் கணிக்க முடியவில்லை.
“உனக்கு அப்பா எவனே எனக்கு தெரியாது? உன் அம்மா தோ இந்த பதிவிரதை வயித்துல இவனோட விந்தணு செலுத்தப்பட்டதுனு எனக்கு தெரியாது.. நீ எவனுக்கு பிறந்தவளோ”, என்றவுடன், அவ்வளவு தான் கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு உலகமே தலைகீழாக நின்ற உணர்வு.
ஒரே நொடியில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து நின்று விட்டது. ஸ்ரீதரின் கவனமும் கொஞ்சம் சிதற, மின்னல் வேகத்தில் அவரின் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டு இருந்தான் விஜய்.
அடுத்த நொடி சான்வியை பிடித்து இருந்த கையையும் விடு வித்து அவன் நகர போக, அதற்குள் மீண்டும் கத்தியை எடுத்து இருந்தார் ஸ்ரீதர்.
கத்தியை எடுத்தவர், சான்வியின் வயிற்றில் குத்த வர, பிரணவ் அவனின் பிஸ்டலை எடுத்து சுடுவதற்கு முன், ஸ்ரீதர் அவரின் கையில் இருந்த கத்தியை வயிற்றில் சொருகி இருந்தார். சான்வியோ விக்ரமின் கை பிடியில் இருக்க, விஜயின் வயிற்றில் இருந்து குருதி வடிந்தது. ஆம், சத்திரியனின் வாரிசை காக்க, சாணக்கியன் அவனின் உயிரை பணயம் வைத்து இருந்தான்.
இங்கோ, “அம்மா”, என்று வாகினி அலறிக்கொண்டு நெஞ்சு வலி வந்த கலாவதியை தாங்க, பிரணவ் அவனின் பிஸ்டலை வைத்து சுடுவதற்கு முன், விஜயை குத்திய அதே கத்தியால் அவரை மாய்த்து கொண்டு இருந்தார் ஸ்ரீதர்.
“ஆஹ்”, என்று வர்ஷாவும், சான்வியும் அலற, ஒரு கையில் அவனின் தன்னவளையும், மறுகையில் அவனின் தமக்கையையும் தாங்கி நின்றான் சத்திரியன்.
அதிர்ந்து நின்று விட்டனர் அனைவரும்!
எத்தனை அதிர்ச்சிகள், ஒரே நாளில், மொத்த குடும்பமும் உடைந்து, நொறுங்கி, மிரண்டு, இப்போது இரண்டு உயிர்கள் அவர்களின் உயிர்க்கு போராடி கொண்டு இருக்கின்றனர். ஒரு உயிர் அவர்கள் கண் முன்னே பிரிந்து இருக்கிறது!
மொத்தமாக தெரிந்த, தெரிய வேண்டிய முடிச்சுகள் அவிழ்ந்து இருக்க, இன்னும் தெரியாமல் அவிழா முடிச்சுக்கள் எத்தனையோ?
அனைத்தையும் தாங்குவார்களா சத்திரியனும் சாணக்கியனும்?
Adapavi ippidi pannitta