“யு பிளடி”, என்று அவனை நெருங்கி ஒரு குத்து விட்டான். நரேன் சுவற்றில் மோதி நிற்க, “சாரி விக்ரம்”, என்று அவன் கையை கூப்பி கெஞ்சவும், “பிரின்சிபால் கிட்ட சொல்லி உன்ன என்ன பண்றேன் பாரு”, என்று அவன் சிங்கமாய் கர்ஜிக்க, நடுங்கி விட்டான்.
விக்ரமின் காலையே பிடித்து விட்டான் நரேன்.
விக்ரமோ அவனை அற்ப பிறவியாக பார்க்க, “உனக்கு அறிவு இல்ல, இப்படி தான் ஒரு பொண்ணு கிட்ட பிஹேவ் பண்ணுவியா?”, என்று அவனை எட்டி உதைக்க முற்பட, நரேனை பார்த்தவன், கீழே காலை இறக்கி விட்டான்.
“வெளிய போடா ராஸ்கல்”, என்று அவன் சொல்லவும், தப்பித்தால் போதும் என்று நரேன் சென்று விட்டான்.
சான்வி தான் நடுங்கி கொண்டு இருந்தாள். அன்று அவள் பாவாடை தாவணியில் தான் ஆட வேண்டி இருந்தது.
நரேன் உள்ளே வந்த சமயம் தான் தாவணி அணிய துவங்கி இருந்தாள்.
அவன் வந்ததும் அவளை நெருங்கவும், அரண்டு விட்டாள்.
விக்ரம் உடனே வந்து விடவும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், சிறுபெண் அவளால் இதை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.
சான்வி பக்கம் திரும்பி இருந்தான்.
“சான்வி”, என்கிற அவனது அழைப்பில் சுயம் பெற்றவள், சட்டென அவளின் தாவணியை எடுக்க முற்பட, அவனே அவளிடம் கொடுத்து இருந்தான்.
அவளின் விசும்பல் அவனுக்கும் கேட்டது. மனதில் ஏதோ ஒரு வலி.
“தாவணி கட்டிட்டியா?”, என்று சிறிது நேரம் சென்றபின் அவன் கேட்கவும், அவளும், “ம்ம்”, என்று சொல்லி இருந்தாள்.
அவன் திரும்பியது தான் தாமதம், அவனை இறுகி அணைத்து இருந்தாள்.
அவனுக்கோ அவள் அழுவதே மனது கனத்தது.
“சான்வி”, என்று காற்றுக்கும் வலித்து விடும் மெல்லிய குரலில் அழைத்தான்.
அவள் அவனை பார்க்கவே இல்லை.
அவளின் கண்ணீர் அவனின் மார்பை நனைத்தது.
பதிமூன்று வயது சிறுமிக்கு என்ன காமா இருக்க போகிறது, வெறும் பாதுகாப்பு மட்டுமே அவனிடத்தில் உணர்ந்தாள்.
அவளை அவனிடம் இருந்து பிரித்து எடுத்தவன், “இதுக்கெல்லாம் அழலாமா? பி பிரேவ்”, என்று அவளின் கண்ணீரை அவன் துடைத்து விட, அவளும் அமைதியாகி விட்டாள்.
விக்ரம் வெளியே வந்து விட, பின்பு அவளை சமாளித்து கொண்டு வெளியே வந்தவள் அன்று நடனம் கூட ஆடவில்லை.
கடைசி நேரத்தில் உடம்பு முடியவில்லை என்று சென்று விட்டாள்.
“நீங்க இல்லமா போர் அடிக்கும் அண்ணா”, என்று வர்ஷா விக்ரமை பிடித்து கொண்டு கூற, “ஒழுங்கா படி… உனக்கு என்ன வேணும்னாலும் அண்ணா நான் இருக்கேன்”, என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.
அவன் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று இருந்தான். மெரிட் சீட்டில் அவனுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கிடைத்தது.
பின்பு அவன் வர்ஷாவை பார்ப்பது வாரத்தில் ஒரு முறை என்று ஆகி போனது.
ஒரு நல்ல விடயம் என்ன வென்றால் அவனும் விஜயும் கூட சந்தித்து கொள்ள வில்லை.
பிரணவ் அவனுக்கு விருப்பமான பிரிவை தேர்ந்து எடுத்து படிக்க துவங்கி இருந்தான்.
இதே சமயம் தான் பார்த்தீவ் யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று இருந்தான். அவனது இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி கண்டு இருந்தான்.
அடுத்த ஒரு வருடம் அவன் ட்ரைனிங் செல்ல வேண்டும். வாகினியும் அவளது நான்காவது வருட மருத்துவ படிப்பை துவங்கி இருந்தாள்.
பிரணவ்விற்கு ஏசிபி ஆக வேண்டும் என்று ஆசை.
அதற்கான முயற்சியிலும் அவன் எடுக்க துவங்கி இருந்தான்.
மூன்று வருடங்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
மூன்றாம் வருடம் முடிவில் இருந்தான் விக்ரம். இருப்பது வயது ஆண்மகன். அவனின் கண்ணசைவிற்காக இப்போது கன்னி பெண்கள் அனைவரும் ஏங்கி கொண்டு இருந்தார்கள் என்று சொன்னால் கூட மிகையாகாது.
பிரணவ் அவனின் படிப்பை முடித்து யுபிஎஸ்சிக்காக படிக்கலாம் என்று முடிவு எடுத்து இருந்தான்.
பார்த்தீவ் அவனின் ட்ரைனிங் முடித்து விட்டு, இரண்டு வருடங்கள் வடஇந்தியாவில் துணை கலெக்டர்ராக இருந்தவன், இப்போது சென்னைக்கே இடம் பெயர்ந்து வந்து இருந்தான்.
வாகினி அவளின் மருத்துவம் முடித்து, பிஜி ஜெனரல் சர்ஜனாக படித்து கொண்டு இருந்தாள்.
விஜயோ அவனது முதல் வருட கல்லூரி படிப்பை முடித்து இருந்தான். அவனும் ராகவும் ஒரே கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார்கள்.
வர்ஷா மற்றும் சான்வி பதினோராம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்தனர்.
பார்த்தீவ் மூன்று வருடங்கள் கழித்து சென்னை திரும்பி வந்ததில் விஸ்வநாதனுக்கும் விசாலாட்சிக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.
அவனின் ட்ரைனிங் சென்றவன், எவ்வளவு சொல்லியும் சென்னை வரவே இல்லை.
அவர்களை தான் அவன் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி இருந்தான்.
வாகினியை கூட வீடியோ கால் செய்து ஸ்கேய்ப்பில் பேசுவான் அவ்வளவு தான்.
“எப்படி இருக்கீங்க கலெக்டர் சார்?”, என்று கேட்டுக்கொண்டே வாகினி அவனின் முன் நின்று இருந்தாள்.
அவனின் வீட்டின் ஸ்டடி ரூமில் தான் அமர்ந்து இருந்தான்.
“வாங்க டாக்டர் மேடம், எங்க வீட்லயே ஒரு டாக்டர் இருக்காங்க நீங்க வர காரணம் என்னவோ?”, என்று அவனும் நக்கல் தோனியில் கேட்கவும், அவளுக்கோ அவ்வளவு கோவம்.
அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்தவள், அவனை வெளுக்க ஆரம்பித்து விட்டாள்.
“ஹே எதுக்கு டி அடிக்கிற?”, என்று அவன் கேட்டுக்கொண்டே அவளின் கையை பிடிக்கவும், அவளோ அவன் அமர்ந்து இருந்த, சேர் தடுக்கி அவனின் மேலே விழுந்து விட்டாள்.
அவனின் மடியிலே அவள் விழவும், இருவரின் கண்ணும் மோதிக்கொண்டன.
பார்த்தீவின் கை வாகினியின் இடையை இறுக்க, அப்படியே அவளும் அவனை நெருங்கி அமர்ந்தாள்.
“வாகினி”, என்று அவன் அவளின் காது மடலை உரச, அவளின் உடல் முழுக்க சிலிர்த்து அடங்கியது. அவன் அணைத்த அன்று என்ன உணர்வோ மறுபடியும் அதே உணர்வு.
“ம்ம்”, என்று அவள் முணங்கவும், “நீ ரொம்ப வெயிட் போட்டுட்டே டி”, என்று அவன் சொன்னது தான் தாமதம், “யு”, என்று அவள் மறுபடியும் அப்படியே அடிக்க ஆர்மபித்து இருந்தாள்.
இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் நெருங்கி இருப்பதை கூட உணர தவறி விட்டனர்.
இதே சமயம், ஸ்டடி ரூம் திறக்கவும், விக்ரம் மற்றும் பிரணவ் வர, பட்டென இருவரும் பிரிந்து விட்டனர்.
ஆனால் பிரணவ் மற்றும் விக்ரம் அவர்கள் இருந்த நிலையை பார்த்து விட்டனர்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, அர்த்தமாய் புன்னகைக்க, வாகினி மற்றும் பார்த்தீவ் திருதிருவென்று முழித்தனர்.
“நம்ப ஒரு ட்ரிப் போலாமா?”, என்று பிரணவ் கேட்கவும், “எதுக்கு டா திடீர்னு?”, என்ற பார்த்தீவை பார்த்து, “நீங்க வந்து இருக்கீங்க… எல்லாரும் வகேஷன்ல இருக்கோம் அதான்”, என்று விக்ரம் சொல்லவும், “நல்ல ஐடியா தான்”, என்று வாகினி சொல்லி இருந்தாள்.
“எங்க போகலாம்?”, என்று பிரணவ் கேட்க, “வர்ஷாவையும் கூப்பிடலாமா?”, என்று பார்த்தீவ் கேட்க, “நம்ப கூப்பிட்டா விட மாட்டாங்க.. அவளை வர மாறி வர வெக்கலாம்”, என்று விக்ரம் முடித்து இருந்தான்.
“ஊட்டி போகலாமா?’, என்ற பிரணவின் ஐடியா அனைவருக்கும் பிடித்து இருந்தது.
இதே சமயம் வர்ஷாவிற்கு அழைத்து இருந்தான் விக்ரம்.
“ஊட்டி போலாமா?”, என்று கேட்கவும், “செம்ம ஐடியா அண்ணா! நான் தாத்தா கிட்ட பேசிட்டு சொல்றேன்”, என்று அவளின் மகிழ்ச்சிக்கே அளவே இல்லை.
கலாவதியோ, “விஜய் கூட போ”, என்று சொல்லி விட, “சான்விய கூட்டிட்டு போறேன் தாத்தா”, என்று வர்ஷா சொல்லவும், “ராகவ கூட வரேன் சொல்றேன் மா”, என்று விஜய் தான் முடித்து இருந்தான்.
கலாவதிக்கு தெரியும், விக்ரம் மற்றும் வாகினிக்காக தான் வர்ஷா இந்த பயணம் மேற்கொள்கிறாள் என்று, இருந்தாலும் அவரின் தந்தையை மீறி எதையும் செய்ய முடியாது அல்லவா!
ஊட்டி சென்று விட்டனர்.
வேதாந்தத்தின் ஊட்டி வீட்டிற்கு எதிரே தான் கலாவதியின் வீடும் இருந்தது.
அவர்கள் அனைவரும் அங்கே வந்து விடவும், “அண்ணா அக்கா”, என்று வர்ஷா ஓடி சென்று விக்ரம் மற்றும் வாகினியை அணைத்து கொண்டாள்.
“எப்படி இருக்க?”, என்று வாகினி கேட்கவும், “நல்லா இருக்கேன்”, என்றவள் அப்படியே பார்த்தீவை பார்த்து, “எப்படி இருக்கீங்க கலெக்டர் சார்?”, என்று கேட்கவும், “நல்லா இருக்கேன் மேடம்… நீங்க ரொம்ப அழகா ஆகிட்டீங்க”, என்று சொல்லவும், வர்ஷாவின் முகம் சிவந்து விட்டது.
பதினாறு வயதில் அந்த பருவத்திற்கே உரிய அழகில் நிரம்பி சிற்பமாக நின்று இருந்தாள்.
“ஆனாலும் அவ வர மொளகா தான் டா”, என்று பிரணவ் சொல்லவும், “போடா பண்ணி”, என்று அவள் சொல்லிவிட்டு அங்கே செல்லவும், அங்கே விஜய் மற்றும் ராகவிடம் சென்றான் பார்த்தீவ்.
“எப்படி இருக்கீங்க?”, என்று அவன் கேட்கவும், “நல்லா இருக்கோம் கேப்டன்”, என்று இருவரும் ஒரு சேர சொல்ல, விஜயை அணைத்து விடு வைத்தான் பார்த்தீவ்.
“அண்ணா நீங்களும் ரொம்ப சூப்பரா ஆகிட்டீங்க”, என்று சான்வி சொல்லவும், அவனோ முத்து பற்கள் தெரிய சிரித்து, “நீயும் ஏஞ்சல் மாறி இருக்க சான்வி”, என்று அவளின் தலையை வருடி விட்டான்.
மலைகளின் அரசி அவர்களை அன்புடன் வரவேற்று இருந்தாள்.
“நாளைக்கு என்ன பிளான்?”, என்று விஜய் பார்த்தீவை பார்த்து கேட்கவும், “அப்படியே கார் எடுத்துட்டு போக வேண்டியது தான் டா”, என்று அவன் சொல்லவும், “உங்கள நாங்க பொல்லொ பண்ணிக்கிறோம்”, என்று ராகவ் முடித்து இருந்தான்.
பார்த்தீவ் தான் பாலம் இவர்கள் அனைவருக்கும், இல்லை என்றால் கஷ்டம் தான்.
“சரி நான் கொஞ்சம் வாக்கிங் போய்ட்டு வரேன்”, என்று விஜய் கிளம்பி இருந்தான்.
“என்ன உன் அண்ணனுக்கு இங்க வந்தது பிடிக்கல போல வர மொளகா?”, என்று வர்ஷாவை பார்த்து கேட்கவும், “அவன் கிடக்குறான்”, என்று முடித்தவள், அப்படியே வேறு கதை பேச துவங்கி இருந்தாள்.
இதே சமயம் வாக்கிங் போய் கொண்டு இருந்த விஜயின் காதுகளில் யாரோ ஒரு சிறு பெண், முனங்கும் சத்தம் கேட்டது.
அவன் அந்த திசையில் சென்று பார்க்க, அவனின் வயது உடைய மூன்று நபர்கள் ஒரு பெண்ணை பலவந்த படுத்த முயன்று கொண்டு இருந்தார்கள்.
அவனின் அருகில் இருந்த கட்டையை எடுத்தவன், அங்கிருந்த ஒருவனின் தலையில் அடிக்க, மற்ற இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
அந்த பெண்ணோ அப்படியே மயங்கி சரிய தாங்கி இருந்தான் விஜய்.
பள்ளியின் படிக்கும் பெண் என்று அவளின் சீருடையை வைத்து அவன் கண்டு பிடித்து விட்டான்.
ஐடி கார்டும் அணிந்து இருந்தாள்.
அவளின் ஐடி கார்டு எடுத்தவன், அதில் இருந்த பெயரை பார்த்து, “மைத்திரி”, என்று முணுமுணுக்க, “இங்க என்ன நடக்குது?”, என்கிற விக்ரமின் குரலில் திட்டுகிட்டு நின்றான் சாணக்கியன்.
Super and intresting sis