விக்ரமும் நடந்து விட்டு வருவதாக சொல்லி சென்றான். அவன் நடக்கும் வேளையில் இருவர் அவனை முட்டிவிட்டு செல்ல அந்த திசையை நோக்கி சென்றவனுக்கு தென்பட்டது என்னவோ, விஜய் ஒரு பெண்ணை கையில் ஏந்தி கொண்டு இருக்கும் காட்சி தான்.
“இங்க என்ன நடக்குது?”, என்ற விக்ரமின் குரலில் விஜய் திடுக்கிட்டாலும், பின்பு சுதாகரித்து, “இந்த பொண்ண கிட்ட மூணு பேரு பிஸ்மிஹேவ் பண்ண பார்த்தாங்க”, என்று சொல்லவும், அருகே வந்தான் விக்ரம்.
“மைத்திரி”, என்று அவன் அழைத்ததும், “உனக்கு இவள தெரியுமா?”, என்று கேட்கவும், “என் அப்பா வச்சிருக்க ஆர்பனேஜ்ல தான் இருக்கா… நல்ல பொண்ணு… அவளை கொடு”, என்றவனை பார்த்து, “உன்ன எப்படி நம்புறது”, என்று அவன் கேட்கவும், விக்ரம் ஒரு முறை முறைக்க, “இந்த முறைக்கிற வேலை எல்லாம் வச்சிக்காத விக்ரம்… நீ அந்த பொண்ணு பேர சரியா சொல்றன்னு அவளை உங்கிட்ட விட்டுட்டு போக முடியாது”, என்றான்.
அவனுக்கு மைத்திரியை அவனிடம் கொடுக்க மனமில்லை.
அதே சமயம் அவர்களை தேடி வாகினி மற்றும் பார்த்தீவ் வந்து இருந்தார்கள்.
பிரணவ், வர்ஷா, ராகவ் மற்றும் சான்வியை அங்கேயே விட்டுவிட்டு வந்து இருந்தனர்.
“என்ன நடக்குது?”, என்ற வாகினியின் குரலில் இருவரும் பார்க்க, “மைத்திரி இங்க தான் இருக்கா அக்கா”, என்றவுடன், விஜயின் கையில் இப்போதும் இருக்கும் மைத்திரியை பார்த்தவள், “இவ எப்படி இங்க?”, என்று கேட்கவும், “மைத்திரி… மைத்திரி”, என்று அங்கே சாதனாவின் குரல் கேட்டது.
அவளும் அதே ஆஸ்ரமத்தில் இருப்பவள் தான்.
“சாதனா தானே அது?”, என்று விக்ரம் கேட்கவும், அங்கே வந்தவளை பார்த்து, “நீங்க என்ன பண்றீங்க இங்க?”, என்று வாகினி கேட்கவும், வாகினி மற்றும் விக்ரமை நிறைய முறை வேதாந்தம் உடன் பார்த்துகிறாள் என்பதால், “என்சிசி கேம்ப் காக வந்தோம்”, என்றவள் அப்போது தான் விஜயின் கையில் இருந்தவளை பார்த்தாள்.
“மைத்திரி”, என்று அவளின் அருகில் செல்ல, “அவளை தூக்கிட்டு வா”, என்று அவள் விஜயை பார்க்க, அவனும் அவளை விக்ரமிடம் கொடுக்காமல் தூக்கி கொண்டு வந்தான்.
அவனின் கைகளுக்கு அவள் பூ போல தான் தெரிந்தாள்.
சாதனாவும் அவர்களுடன் வந்து விட, “இப்படி தான் நைட் தனியா வருவீங்களா?”, என்று அவளை காய்ச்சி எடுத்து கொண்டு தான் வந்தாள் வாகினி.
“சாரி மேம்”, என்று சாதனா சொல்லவும், அவர்கள் இல்லத்தை நெருங்கி விட்டனர்.
பிரணவ், வர்ஷா, ராகவ் மற்றும் சான்வி வேதாந்தத்தின் வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தில் தான் அமர்ந்து இருந்தார்கள்.
இதே சமயம் இவர்கள் உள்ளே நுழையவும், “யாரு இந்த பொண்ணு?”, என்று பிரணவ் சாதனாவை பார்த்து கேட்கவும், “எங்க அப்பா ஆர்பனேஜ்ல இருக்க பொண்ணு தான் டா”, என்று விக்ரம் சொல்லவும், ஒரு நாற்காலியில் மைத்திரியை கிடத்தி இருந்தான் விஜய்.
வாகினி தண்ணீர் தெளித்து அவளை எழுப்பவும், சிறிது நேரத்தில் விழித்தவள் முதலில் மிரண்டால் தான்.
“மைத்திரி”, என்கிற சாதனாவின் அழைப்பில் அவளை கட்டி கொண்டு அழ துவங்கி விட்டாள்.
“என்ன ஆச்சு?”, என்று வர்ஷா கேட்கவும், நடந்ததை விஜய் சொல்ல, அனைவருக்கும் பாவமாக இருந்தது.
“அந்த பொறுக்கிங்க எங்க டா?”, என்று பிரணவ் சீறவும், “விஜய் வந்ததும் அவனுங்க ஓடிட்டானுங்க”, என்று பார்த்தீவ் சொல்லவும், அமைதியாகி விட்டனர்.
“இப்படி தான் தெரியாத இடத்துல தனியா வருவியா? அதுவும் நைட்”, என்கிற வாகினியின் கேள்வியில், எதுவும் சொல்லாமல் தான் அமைதியாக இருந்தாள் மைத்திரி.
“அது ஒரு பெட் காக வந்தா”, என்று சாதனா சொல்லவும், “நாசமா போச்சு… கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என்ன வாகி இருக்கும்?”, என்று பார்த்தீவும் கோவமாக கடிய, மைத்திரியின் கண்களில் தண்ணீர் தேங்கி விட்டது.
“சரி இப்போ நீங்க தங்கி இருக்க ஸ்கூல் போங்க…விக்ரம் இவங்கள கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வா”, என்று வாகினி சொல்லவும், சரி என்று தலையசைத்தான்.
இதே சமயம், ராகவின் கண்கள் சாதனாவை தான் பார்த்தன.
சாந்தமான முகம், வட்ட வடிவ நிலவை போல அழகாக பதினாறு வயதிற்கே உரிய பூரிப்பில் இருந்தாள் பெண்ணவள்.
அவனோ பதினெட்டு வயது ஆண்மகன், ஹோர்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பித்தது.
“தேங்க்ஸ்”, என்று மைத்திரி சொல்லவும், வாகினி தலையசைப்புடன் நிறுத்தி கொண்டாள்.
அவர்கள் இருவரையும் விட, விக்ரம் சென்று விட்டான்.
ஆனால் விஜயின் கண் முழுக்க, மைத்திரி நிறைந்து இருந்தாள்.
அவன் முதன் முதலாக தீண்டிய பெண்ணவள் தான்.
வர்ஷா தான் அவனை அணைத்தது கூட இல்லையே!
மைத்திரியின் குழந்தை முகம் அவனை ஈர்த்தது என்னவோ உண்மை தான்.
விக்ரம் அடுத்த இருப்பது நிமிடங்களில் வந்து விட, “என்ன டா விட்டுட்டியா?”, என்று பிரணவ் அவனை பார்க்கவும், “ம்ம்”, என்று முடித்து கொண்டான்.
“எனக்கு என்னவோ அந்த பொண்ண பிடிக்கவே இல்ல.. எதுக்கு நைட் வெளிய வரணும்?”, என்று வர்ஷா கேட்கவும், “நைட் வெளியே வந்தது குத்தமா?”, என்று விஜய்யிடம் கேட்கவும், “நைட் வெளியே வந்தது தப்பு இல்ல.. ஆனா இப்படி ஊர் பேர் தெரியாத இடத்துல வந்தது தப்பு தான்”, என்று வர்ஷா கூறினாள்.
“இப்படி நரோ மைண்டெட்டா இருக்காதே”, என்றவனை பார்த்து, “ஆமா நீ ரொம்ப பரந்த மனப்பான்மை உடையவன் தான் அதனால தான் என்ன ஷார்ட்ஸ் போட வேணாம்னு சொல்றியா?”, என்று இருவரும் வாக்கு வாதத்தில் லயித்து கொண்டிருக்க, வாகினிக்கு கடுப்பாக ஆகி விட்டது.
“இரண்டு பேறும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?”, என்று அவள் கத்தியே விட்டாள்.
பின்பு தான் இருவரும் அமைதி ஆகினர்.
அதற்கு பின் மயான அமைதி அங்கே நிலவியது.
“போய் தூங்கலாமா?”, என்று பிரணவ் கேட்கவும், அனைவருக்கும் இப்போது அது தான் சரியாக பட்டது.
உறங்க சென்று விட்டனர்.
விஜய்க்கு உறக்கம் வரவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தான்.
அவனின் மனதில் ஏனோ மைத்திரியின் முகம் தான் வந்து சென்றது.
இப்படி எல்லாம் அவன் ஒரு பெண்ணை நினைத்ததே இல்லை.
இதே சமயம் ராகவிற்கும் இதே நிலை தான். அவன் நண்பர்கள் பல பேரை அவன் கிண்டல் செய்து இருக்கிறான்.
“ஏன் டா பார்த்ததும் காதல் வந்திருமா என்ன?”, என்று அவன் கேட்டது இன்று அபத்தமாக தெரிந்தது.
அவளின் அழகிற்காக அவன் பார்த்தததை விட, அவளின் தோழிக்காக இந்த இரவில் தேடி கொண்டு வந்தது தான் மிகவும் ஈர்த்தது.
அவனும் நண்பன் என்றால் உயிரை கூட கொடுத்து விடுவான் தானே!
அதே போல் தான் சாதனாவும் அவனின் கண்ணிற்கு தெரிந்தாள்.
விஜயை அவன் உயிரினும் மேலாக தான் பார்த்தான். ஏனென்று தெரியாமல் முளைத்த நண்பர்கள் அவர்கள்.
இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்க நிறைய காரணங்கள் இருந்தது.
ஆனால் அதே நண்பன் அவனின் மனதை உடைக்கும் போது ராகவின் நிலை என்னவோ?
இதே சமயம் தூக்கம் வராமல் வெளியே அமர்ந்து இருந்தான் விக்ரம்.
அவனை நெருங்கி வந்தாள் சான்வி.
“இங்க என்ன பண்ற?”, என்று அவன் கேட்கவும், “சும்மா தான் தூக்கம் வரல”, என்று சொன்னவள் அவனின் அருகில் அமர்ந்தாள்.
அவனோ அவளை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து, “உனக்கு வேற வேலை இல்லையா? எப்ப பாரு என்னையே உரசிகிட்டு இருக்க?”, என்றவனை பார்த்தவள், “நீங்க ஓகே தான?”, என்று கேட்கவும், அவளை ஒரு மார்கமாக பார்த்தான்.
“இல்ல இப்படி ஒரு பொண்ணு ஸ்லீவ்லெஸ் போட்டுட்டு உங்க முன்னாடி இருக்கேன்… உங்களுக்கு கொஞ்சம் கூட பீலிங் வரலையா?”, என்று கேட்கவும், “என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? இந்த வெளி தோற்றத்தை பார்த்து லவ் பண்ற ஆளு நான் கிடையாது”, என்று அவன் முகத்தை திருப்பி கொண்டான்.
“ஏன் என்கிட்ட மட்டும் எப்பவும் எறிஞ்சி விழறீங்க? வர்ஷா கிட்ட நல்லா தான பேசுறீங்க…”, என்றவளை பார்த்தவன், “அவ என் தங்கச்சி”, என்று முடித்து இருந்தான்.
“சரி தங்கச்சி… இப்போ வந்தாங்களே இரண்டு பொண்ணுங்க அவங்க கிட்ட கூட கார் வரைக்கும் நல்லா தானே பேசிட்டு இருந்திங்க”, என்றவுடன், “வேவு பார்க்குறியா?”, என்று கேட்டான்.
“பார்த்தா என்ன? என்ன தவிர வேற எவலயாச்சு பார்த்திங்க..”, என்று அவள் இழுக்கவும், “பார்த்தா என்ன டி பண்ணுவ?”, என்று புருவம் உயர்த்தி கேட்டவன், அப்படியே எழுந்து கொண்டான்.
அவளும் எழுந்து, “உங்க கண்ணை நொண்டிடுவேன்”, என்று ஒற்றை விரலை அவன் முன் நீட்டவும், அந்த விரலை மடக்கி அப்படியே கீழே அழுத்தியவன், அவளை கையை பிடித்து இழுத்து கொண்டான்.
இருவரின் மேனிகளும் உரசின.
அவனின் மூச்சுக்காற்று அவளின் மீது மோதி சென்றன.
மேனியில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
அவனை அவள் அணைத்து இருக்கிறாள் தான். அப்போது பதிமூன்று வயது பாவை அவள்.
இப்போது அவளின் உடல் தோற்றமும் அவளின் வயதிற்கு ஏற்றார் போல் மாறி இருக்க, அவளின் மேனியில் பெண்ணிற்கே உறிய நாணம் வந்து சேர்ந்தது.
“நான் வேற பொண்ண லவ் பண்ண தான் போறேன்… நீ அத பார்க்க தான் போற”, என்று அவன் சொல்லி முடிக்கும் முதல், அவனின் இதழை சிறை செய்து இருந்தாள் பதினாறு வயதான பூம்பாவை!
முதலில் இதழ் ஒற்றலில் ஆரம்பித்த அவள் முத்தம் எப்போது அவன் வசம் ஆனது என்று அவளுக்கே தெரியவில்லை. ஏன் அவனுக்கே தெரியவில்லை.
இருபது வயதில் வருகின்ற உடல் மாற்றங்களாலா அல்லாது இத்தனை நாள் அவள் மேல் அவனிற்கு இருந்த காதலினாலா என்று அவனிற்கே வெளிச்சம்.
அவளோ அவனின் தோள்களை பற்றி கொள்ள, அவனின் கையோ அவளின் இடையை பற்றி இழுத்து மேலும் நெருக்கி கொண்டது.
அவளின் கை அவனின் தோள்களில் இருந்து அவனின் அடர்ந்து கேசத்திற்குள் இடம் பெயர, அவனின் கைகளும் இடையை தாண்டி மேலே சென்றது.
சட்டென நிதானத்திற்கு வந்தவள், அவனின் கையை பிடிக்க, அவனுக்கோ அப்போது தான் அவன் செய்யவிருந்த காரியமே நெற்றி பொட்டில் அறைந்தது.
உடனே விலகி விட்டான்.
இருவருக்குமே தொண்டையில் எச்சில் விழுங்கவே கடினமாக இருந்தது.
வயது கோளாறால் கொஞ்சம் அதிகமாகவே சென்று விட்டனரோ என்று தோன்றியது.
“ஏன் டி கிஸ் பண்ண?”, என்று அவன் சீறவும், “ஆமா நான் மட்டும் தான் பண்ணேன் சார் வந்து அப்படியே நின்னுட்டு இருந்திங்க பாருங்க”, என்று அவரும் சீறினாள்.
இதே சமயம் இதை எல்லாம் பார்த்தா ஒரு ஜோடி விழிகள் பிரம்மை பிடித்தது போல், சென்று ஒரு தூணில் மோதி நின்றது.