💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 72
நாளை பாக்ஸிங் மேட்ச் என்பதால் நேரத்துடன் வந்து பிள்ளைகள் பற்றிய விபரங்களை எழுதிக் கொண்டிருந்தான் தேவன். அவன் முகம் வாடிச் சோர்ந்திருந்தது.
நேற்று வினிதாவுக்கு அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அங்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே நெஞ்சம் படபடத்தது.
“தேவ்” எனும் வினிதாவின் குரலில் ஆர்வம் மின்ன நிமிர்ந்தவன், அவளது அருகில் நின்ற அஷோக்கைக் கண்டு முகம் சுருங்கினான்.
நிச்சயதார்த்தம் நடந்திருக்குமா? அவனது கண்கள் அவளின் கையை ஆராய்ந்தன. அதில் தெரிந்த மோதிரம் அவனை உலுக்க, அஷோக்கைத் திரும்பிப் பார்த்தாள் வினிதா.
கண்களால் சைகை காட்டி விட்டு, தேவனிடம் திரும்பியவன் “வினி நிறைய கஷ்டப்பட்டுட்டா தேவா! உன்னை நம்பி அவளை ஒப்படைக்கிறேன். அவ கண் கலங்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு” என சென்று விட்டான்.
விரிந்த விழிகளோடு வினியை நோக்க, ஈரெட்டில் நெருங்கி அவனை அணைத்துக் கொண்டாள் காரிகை.
“என்னடி ஆச்சு? நிச்சயதார்த்தம் நடக்கலையா?” எனக் கேட்க, “நடந்துச்சு” தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“அப்போ அவன் சொன்னது என்ன? தலையே சுத்துது வினி” மண்டை காய்ந்தது அவனுக்கு.
“நிச்சயதார்த்தம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நடந்தாச்சு. வேற யாரோடன்னு நெனக்கிற? உன் கூட தான் மக்கு மடையா” அவன் தலையில் தட்ட,
அவளின் கையை எடுத்துப் பார்த்தான். காதலித்த புதிதில் அவன் அணிவித்த மோதிரம் அது. அவள் விரலோடு விரல் இணைத்து இறுக்கிக் கொண்டான்.
“கல்யாணம் வேண்டாம்னு அஷோக் மறுத்துட்டான் தேவ். எனக்காக அவன் வேண்டாம்னு சொல்லிட்டான். என்னை உன் கூட சேர்த்து வைக்கிறதா சொன்னான். என் சந்தோஷம் நீ தான்னு அவன் புரிஞ்சுக்கிட்டான்” என்று வினி சொல்ல,
“உங்க அப்பா எதுவும் சொல்லலையா?” புருவம் உயர்த்தினான் தேவன்.
“அஷுவை ரொம்ப திட்டிட்டார். சமயம் பார்த்து கழுத்தறுத்துட்டோம்னு திட்டினார். என் முகத்தைக் கூட பார்க்குறதில்ல. அவரை விட நீ முக்கியமா போயிட்டனு அவருக்கு உன் மேல கோபம். உனக்கு ஒவ்வொன்னு சொல்லுறார். நான் எதிர்த்து கேட்க போய் என்னையும் திட்டிட்டார்” அவளுக்கு மனம் கலங்கியது.
“திட்டுறதால ஒன்னும் குறைஞ்சு போயிடாது வினி. எனக்காக எதிர்த்துப் பேசினா அவர் கோபம் என் மேல திரும்பும். அவர் உன்னை இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு வளர்த்திருக்கார். நான் திடீர்னு உன் வாழ்க்கைக்குள்ள வந்தா அவரால ஏத்துக்க முடியாது தானே? கொஞ்சம் பொறுமையா இரு” அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.
“புரியுது தேவ்! இருந்தாலும் உன்னைப் பேசும் போது என்னால பொறுத்துட்டு இருக்க முடியல. அவங்களை எதிர்த்து பேசனும்னு சொல்லல. உன்னை எதுவும் சொல்ல வேண்டாம்னு தான் சொன்னேன்” என்றவளுக்கு வேக மூச்சுகள் வெளியேறின.
“ரிலாக்ஸ் வினி! எல்லாம் பார்த்துக்கலாம் விடு. காலம் ஒன்றே நம்ம காதலை சேர்த்து வைக்கும், கவலைகளை மறக்க வைக்கும். அதுவரை காதலிக்கலாமா?” என்று வினவ,
“நிறைய காதலிக்கனும். உன்னைப் பிரிஞ்சு போய் எத்தனை வருஷமாச்சு. உன் காதலை அனுபவிச்சு எத்தனை நாளாச்சு. உன் குரல் கேட்டு தூங்கி பல காலமாச்சு. நிம்மதியான தூக்கமே பறி போச்சு தேவ். எல்லாமே வேணும். உன் கூட நிறைய பேசனும். நடந்தது அத்தனையையும் சொல்லனும். வாய் விட்டு அழனும்” அவள் கண்களில் மெல்லிய நீர்ப் படலம்.
“உன்னை அழ வெச்சேன்னு தெரிஞ்சா அந்த அஷோக் பையன் என் கிட்ட மல்லுக்கு வந்து நிற்பான். நீ அழக் கூடாது. இனிமே உன் முகத்தில் நான் சிரிப்பைப் பார்க்கனும்” அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவனது மார்பில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். எத்தனையோ வருடங்களின் பின், தன் மனங்கவர்ந்த கள்வனின் இதயத் துடிப்பை நிம்மதியானதொரு உணர்வோடு கேட்கிறாள்.
“தேவ்வ்வ்வ்” அவனை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டவளுக்கு வலிகள் யாவும், பரிதி கண்ட பனித்துளியாக விலகும் உணர்வு.
🎶 உன் மாரோடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் நெஞ்சோடு சேர்த்து வைத்த
வலிகள் தீரும் 🎶
அவனுக்கும் அப்படித் தான். தொலைந்து போன பொக்கிஷம் மீண்டும் தனக்காகக் கிடைத்து விட்டது போன்ற நிறைவில் மனம் நிறைந்தது.
🎶 உன் காதல் ஒன்றைத் தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டியும் ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே 🎶
🎶 நீ இல்லை என்றால் என்னாவேன்
ஓ ஓஓஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன் 🎶
“என் கூடவே இரு வினி. எங்கேயும் போயிடாத. என்ன பிரச்சினை வந்தாலும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம். தூர தூர இருந்து நாமளே சண்டை போட்டு, அழுது கஷ்டப்பட வேண்டாம். நாம ஒன்னா இருப்போம். அந்த சக்தி நம்மளை சேர்த்து வைக்கும்” அவன் குரலில் இருந்த உறுதி வினிதாவுக்கு ஆறுதல் தந்தது.
“ஆமா தேவ்! இதை நான் முன்னாடியே சொல்லி இருக்கனும். சொல்லாம உன்னையும் யோசிக்க வெச்சு நானும் ஒவ்வொரு நாளும் யோசனையில் தத்தளிச்சு.. அப்பப்பா எவ்ளோ வேதனை” நினைக்கும் போதே சுமை கூடியது.
“போனது போகட்டும் வினி. இனி நாம புதுசா வாழ ஆரம்பிப்போம். புதுசா லவ் பண்ணுவோம்” அவளின் கையைப் பிடித்தவன், “வில் யூ மேர்ரி மீ?” எனக் கேட்க,
“எஸ்! ஐ வில். லவ் யூ தேவ்! மேட்லி லவ் யூ டா” அவனது கையில் முத்தமிட்டாள்.
“மை ஸ்வீட்” அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து கட்டிக் கொண்டான் காதல் தேவன்.
………………
எழிலுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தாள் நந்து. அவள் விழிகள் தன்னவனை அனுபொழுக நோக்கின.
பக்கமாக சீவி விட்ட முடி காற்றின் சீற்றத்தில் கலைந்து, நெற்றியில் உரசிக் கொண்டு எழிலைக் கொடுக்க, வழமையிலும் மாற்றமானதொரு விதத்தில் அவள் கண்களுக்குத் தோன்றினான்.
“சைட் அடிச்சு முடிச்சாச்சா நந்து?” அவனது கேள்வியில் அவள் முகத் செந்நிறம் கொள்ள, “பார்த்துட்டீங்களா?” இதழ் கடித்துக் கேட்டாள் மனைவி.
“பார்க்காமலா? என் பொண்டாட்டி முகத்தை விட்டு பார்வையை திருப்ப முடியல. எப்போடா வீடு வரும்னு இருக்கு” அவன் குரலில் காதல் பொங்கி வழியலானது.
வீடு வந்ததும், இறங்கிச் சென்றவளைப் பின்னால் இருந்து அலேக்காகத் தூக்கிக் கொண்டான் கணவன்.
“ஆஆ எழில்” பயந்து போனவளோ, “யாராவது பார்த்துட போறாங்க. மலர் இருப்பா” என கண்களை மூடிக் கொள்ள,
“யாரும் இல்ல. மலர் அம்மாவோட அவ ஃப்ரெண்டு கல்யாணத்துக்கு போயிட்டா. நாளை தான் வருவாங்க” என்றவன் கடையால் வாங்கி வந்த உணவுப் பொட்டலத்தைப் பிரிக்க ஆரம்பித்தான்.
“எனக்கு ஊட்டி விடுங்க” அவனது தோளில் சாய்ந்து கொள்ள, “நீ சொல்லாட்டியும் ஊட்டுவேன். என் செல்லப் பொண்டாட்டி என்ன கேட்டாலும் தருவேன்” அவளுக்கு ஊட்டி விட்டான் எழில்.
சாப்பிட்டு முடித்து வந்தவனோ, “நீ எதுவும் கேட்கவே இல்லை நந்து. ஏதாச்சும் கேளு” அவளருகில் அமர்ந்து கொண்டான்.
“அப்போ முத்தம் கொடுங்க” அவள் சட்டென்று கேட்டு விட, தனது கையில் கிள்ளிப் பார்த்தான்.
“என்னாச்சு?”
“நீ ஏதோ கேட்டியே. அது என் காதில் தப்பா கேட்டுச்சா? நீ தான் பேசுனேன்னா அது கனவா இல்லையானு கன்பார்ம் பண்ணிக்க பார்த்தேன்” அவனது குரலில் கிண்டல் கொப்பளிக்க,
“போங்க! நான் இனிமே எதுவும் கேட்க மாட்டேன். கேட்டா தானே பிரச்சினை. சும்மா என்னை கிண்டல் பண்ணுறீங்க. நான் கேட்கவே போறதில்ல” முறைத்துக் கொண்டு சென்றவளின் கையைப் பிடித்துத் தன் மடியில் அமர வைத்தான்.
“என் நந்திதா இப்படி வெளிப்படையா கேட்க மாட்டா. அவளுக்கு வெட்கம் வகை தொகையா இருக்குமே. வாய் திறந்து முத்தம் கேட்டா எனக்கு ஹார்ட் அட்டாக் வராதா என்ன?” என்று வினவி அவளது முறைப்பை வாங்கிக் கொண்டவன், “கேட்காமலே உனக்கு கிலோ கணக்குல தருவேன். இப்போ வாய் திறந்து கேட்டுட்டல்ல. என் நந்தும்மாவுக்கு முத்தம் முடிவே இல்லாம கிடைக்கப் போகுது” அவளின் காதோரம் இதழ் உரசினான்.
“என்னங்க” அவளுக்கோ வெட்கம் பிய்த்துக் கொண்டு வந்தது.
“நந்து…!!” அவன் ரகசியக் குரலில் அழைக்க, “ம்ம்” அவனது ஷர்ட் பட்டனோடு விளையாடிக் கொண்டு சொன்னாள்.
“என் முகத்தைப் பாரு நந்து. இங்கே என்ன பண்ணுற?” அவளின் நாணம் நிறைந்த முகத்தை இமை கொட்டாமல் பார்க்க நாடினான் நாயகன்.
“நீங்க ஒழுங்கா பேசுங்க. அப்போ தான் பார்ப்பேன்” இமைகள் படபடக்க கூற, “ஒழுங்கா தானே பேசுறேன். என்னடி புதுக் கதையா இருக்கு” சிரிப்புடன் கேட்டான் கணவன்.
“இல்ல! என்னால உங்க முகத்தைப் பார்க்க முடியல. நான் கேட்டதை மறந்துடுங்க”
“இந்த எழில் கொடுக்குற விஷயத்தில் தாராள பிரபு. நீ வேணாம்னு சொன்னாலுமே தருவேன். கேட்டதை மறந்தாலும், கொடுக்கனும்னு ஆசைப்படுறதை என்னால மறக்க முடியாது” அவன் கைகள் அவளது கன்னத்தில் கோடு போடத் துவங்கின.
“அய்யோ என்னங்க” அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு நாணம் பீறிட்டது.
“லவ் யூ சொல்லு நந்து” அவளது நாடி பிடித்துச் சொல்ல, “லவ் யூ எழில்” அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“லவ் யூ சோ மச் பொண்டாட்டி” அவள் நெற்றியில் ஆழமாக ஒரு முத்தம் பதித்தான்.
சிலிர்த்து அடங்கியது அவளுடல். இரு சோடி விழிகளும் உரசிச் செல்ல, இரு கைகளும் பிணைந்து கொள்ள, மனங்களிடையே காட்டாற்று வெள்ளமாக காதல் ஊற்றெடுத்துக் கிளம்பியது.
“என்னை எவ்வளவு பிடிக்கும் நந்து?” அவன் கேள்வி எழுப்ப, “உங்களுக்காக எதுவும் பண்ணுவேன். உங்களைத் தவிர வேறெதுவும் வேணாங்குற அளவு உங்களைப் பிடிக்கும்” அவள் குரலில் அத்தனை காதல்.
“உன் அளவுக்கு என்னால கூட பண்ண முடியாது நந்து. எனக்காக உசுரையும் தரத் துணியும் உன் காதல் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும். உன்னை கண் கலங்காம பார்த்துப்பேன் டா. என்னால முடிஞ்ச உச்சபட்ச சந்தோஷத்தை உனக்கு தேடித் தருவேன்” அவளின் தோள்களில் கை வைக்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“ஏதோ கேட்டியே நந்து?” செவிமடலில் மீசை குத்த ரகசியம் பேசினான்.
“மு..முத்தம்” அவனது தீவிரப் பார்வையில் வார்த்தை தடுக்கியது அவளுக்கு.
“முத்தம் தருவேனே. முத்தம் என்ன? உனக்கு மொத்தமும் தருவேன் என் மான் குட்டியே” அவளைப் பூங்குவியலாக அள்ளிக் கொண்டான்.
“என் சிங்கக் குட்டி” அவள் சிரிப்புடன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, “மான் குட்டியை சிங்கக் குட்டி என்ன செய்யுமாம்?” அவள் முக்கோடு மூக்கு உரசிக் கேட்க,
“வேட்டையாடுமாம்” தலை சாய்த்துப் பதில் வழங்கினாள் வஞ்சி.
“அதே தான்! இனி வேட்டை ஆரம்பம்” அவள் முகம் முழுதும் முத்தத்தால் மூழ்கடித்ததோடு அங்கு அரங்கேறத் துவங்கியது, காதல் வேட்டை.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி