83. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 83

 

“கண்ணாமூச்சி ஆடப் போறோம். எல்லாரும் வாங்க” சத்தமாக அழைப்பு விடுத்தான் யுகன்.

 

அந்த அழைப்பில் ஏற்கனவே வந்திருந்தவர்களோடு, அறையில் இருந்த தேவன் மற்றும் ரூபனும் வந்து விட்டனர்.

 

“ஒருத்தர் மட்டும் மிஸ்ஸிங்! யார்னு சொல்லுங்க” என்று ஜனனி கேட்க, “தனு அத்தை” எனப் பதிலளித்த அகிலன், கூடுதல் இணைப்பாக, “அத்தையை நான் கூப்பிட்டேன். வரலனு சொல்லிட்டாங்க” என்பதையும் குறிப்பிட்டான்.

 

“எனக்குத் தெரியும் அத்தை ஏன் வரலனு. சித்தா நிற்கிறதால தான்” என்றுரைத்தான் யுகி.

 

“நான் நின்னா என்னவாம்? உங்க அருமை அத்தையை நான் விழுங்கிட மாட்டேன். வந்து விளையாட சொல்லு” முறைப்புடன் சொன்னான் தேவன்.

 

“நீ இன்னும் முறைச்சிக்கிட்டு தானே இருக்க. போய் ஒழுங்கா பேசுனியா?” என்ற ரூபனின் கேள்வியில், “வரச் சொல்லு சிரிச்சு காட்டுறேன்” எனும் போது, “எங்கே சிரிங்க பார்ப்போம்” அவன் முன்னால் வந்து நின்றாள் தன்யா.

 

“அ..அது” அவன் தடுமாறிப் போக, “பேச்சு பேச்சா இருக்கனும். சொன்ன பேச்சு தவறக் கூடாது” என்றவள் யுகனிடம் திரும்பி, “வாக்கு மீறாமை எனும் தலைப்பில் ரெண்டு வார்த்தை எடுத்து விடு டார்லு” என்றாள்.

 

அவன் தொண்டையைச் செரும, “டேய் தேவா! கெஞ்சிக் கேட்குறேன். அவன் ரெண்டுனு சொல்லிட்டு ரெண்டாயிரம் வார்த்தை பேசுவான். அதைக் கேட்குறதுக்குப் பதிலா உன் சிரிப்பைப் பார்த்து மனசைத் தேத்திக்கலாம் டா” என்று அலறினான் ரூபன்.

 

“யுகி எவ்ளோ நல்ல பையன். உங்களை மாதிரியா. அவனை சொல்ல விடாம இப்படி பேசக் கூடாது சொல்லிட்டேன்” மகனின் காதைத் திருகினார் மேகலை.

 

“உங்க பையன் சிரிப்பாரா இல்லையாம்மா?” இடுப்பில் கை வைத்து மேகலையிடம் தன்யா வினவ, “அய்யோ சிரியேன்டா” மகனின் தோளில் தட்டினார்.

 

தாய் சொன்ன பிறகு ஏது தடா?

“போதுமாஆஆ” பல்வரிசை பளிச்சிடச் சிரித்தான் தேவன்.

 

“நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கீங்க சித்தா!” என்று அகிலன் சிரிக்க, அவனைத் தூக்கி கைகளில் வைத்துக் கொண்ட தேவன், “அப்படியா பாப்பா? நான் இனிமே கோபப்பட மாட்டேன். எப்போவும் சிரிச்சிட்டே இருக்கேன் சரியா?” அவனது கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டினான்.

 

“அடேய் இதெல்லாம் ஒரு நியாயமா? அவனோட சிரிப்பை மட்டும் அழகா இருக்குன்னு சொல்றீங்க. நான் அழகா இல்லையா? தினமும் சிரிக்கிறேன்ல அதனால உங்களுக்கு அருமை இல்ல. இனிமே நான் சிரிக்கவே மாட்டேன்” என்று சிலுப்பிக் கொண்டான் ரூபன்.

 

“நீங்க சிரிச்சாலும் அழகு. சிரிக்காட்டியும் அழகு தான் ரூபி” என்று யுகி சொல்ல, “என் பட்டுக் குட்டி” என்று அவனது தலைமுடியைச் சிலுப்பி விட்டான்.

 

“உங்க கூட இருக்கும் போது நேரம் போறது விளங்குதில்ல. செம ஜாலியா இருக்கு” இருவரையும் அணைத்து கொண்டாள் தன்யா.

 

“அப்போ நீங்க எங்க கூடவே இருந்திடுங்க அத்தை” என்று அகி கெஞ்ச, “அத்தை படிக்கணும் இல்ல. அவங்க நல்லா படிச்சு பெரிய ஆளாகிட்டு வருவாங்க. அப்புறம் நம்ம கூட தான் இருப்பாங்க” என்று யுகன் சொல்ல,

 

“ஆமா ஸ்வீட் ஹார்ட்” எனும் போது ரூபனின் அலைபேசி அலறியது.

 

அதை எடுத்தவன் முழித்துப் பார்க்க, எட்டிப் பார்த்த தனு “யார் அது? கார்த்தி யாரு? இப்போ எந்த பொண்ணு கூட கடலை போடுற?” எனக் கேட்டவாறே ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

 

“நான் கார்த்திக் பேசுறேன் ரூபன். அங்கே தன்யா இருக்காளா? அவ என் கிட்ட எதுவுமே சொல்லாம வந்துட்டா. வீட்டுக்கு போய் பார்த்தா இல்ல. ரொம்பவே பயந்து போயிட்டேன்” என்று சொன்னவனின் குரலில் அளவற்ற தவிப்பு கொட்டிக் கிடந்தது.

 

“கார்த்தி…!!” இந்தப்புறம் தன்யா அழைக்க, “தனு! அங்க தான் இருக்கியா? சொல்லிட்டு போகனும்னு உனக்கு தோணவே இல்லல்ல? நான் உனக்கு யாரோ தானே. நான் தான் உன்னை என்னவோ நினைச்சிட்டு இருந்தேன். பரவாயில்லை இரு. உன்னை அப்புறமா பார்த்துக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் கார்த்திக்.

 

“ஹோய் டார்லிங்! இங்கே என்ன நடக்குது? எதுவுமே இல்லன்னா இப்போ உன்னைக் காணலனு அந்த கார்த்தி ஏன் அப்படி பதறுறான்?” என்று புருவம் உயர்த்தினான் ரூபன்.

 

“உனக்கு எப்படி அவனோட நம்பர்?” எனக் கேட்டாள் தன்யா.

 

“எப்போவோ ஒரு நாள் கால் பண்ணி இருந்தான். சேவ் பண்ணது எனக்கு மறந்து போச்சு. அதான் யாருன்னு முழிச்சிட்டு இருந்தேன். நீ ப்ளேட்டை மாத்தாம கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. லவ்வா என்ன?” எனக் கேட்டான்.

 

“இல்ல டா! அவன் என் பெஸ்ட் ப்ரெண்டு. ஒரே டென்ஷன், இங்க வர்ற அவசரம், என்ன நடக்கும்னு தெரியல. அதனால கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். அவன் கிட்ட சொல்லிட்டு வரணும்னு கூட தோணல. என்னைக் காணலனு துடிச்சுப் போயிருப்பான்” என்று சொன்னாள் தனு.

 

“இப்போ கோவமா இருக்கானே அந்தப் பையன்?” என்று மேகலை கேட்க, “அதெல்லாம் அப்படித்தான் அத்தை. காணலைங்குற தவிப்பு தான் கோபமா மாறிடுச்சு. மத்தபடி உண்மையான கோபம் இல்ல. அப்புறமா சரியாகிடும். நீ போய் பேசு தனு” என்றாள் ஜனனி.

 

சத்யாவின் விழிகள் ஜனனியை நோக்கின. அவளோ புருவம் தூக்கிப் பார்க்க, “மத்தவங்கள பத்தி நல்லா யோசிக்கிற. என்னைப் பத்தி நீ ஏதாவது யோசிக்கிறியா?” என அவன் அடிக்குரலில் கேட்க,

 

“உங்களைப் பத்தி என்ன யோசிக்கனும்?” என்று வினவினாள் அவள்.

 

“ஒன்னுமே யோசிக்காத. அப்படியே இரு” அவன் முறைத்துத் தள்ள, “ரொம்ப தான் சிலுப்பிக்கிறான் ஹிட்லர்” என்று சொல்லிக் கொண்டாள்.

 

இத்தனைக்கும் தேவன் இன்னும் சத்யாவிடம் மட்டும் பேசவில்ல. சத்யாவும் அதனைப் பெரிதாக எடுக்கவில்லை. பேசும் போது பேசட்டும் என விட்டு விட்டான்.

 

“இப்போ கண்ணாமூச்சி ஆடலாமா?” என்று அகி ஞாபகப்படுத்த, “ஆமா ஆடலாமே” தம் விளையாட்டை ஆரம்பித்தனர் அவர்கள்.

 

அகி முதலில் வர, அவன் மேகலையைப் பிடித்தான். மேகலை ஜனனியைப் பிடிக்க, அவளது கண்கள் கட்டப்பட்டன. தேடித் தேடி களைத்துப் போனவளின் கரங்கள் ஒரு கையைப் பிடித்துக் கொண்டன.

 

“ஹே பிடிச்சுட்டேன்” அவள் துள்ளிக் குதிக்க, “அது யாரு ஜானு?” எனக் கேட்டான் யுகி.

 

“உங்க டாடி தானே?” சிரிப்புடன் கண்கட்டை அவிழ்த்தாள் பெண்.

 

அவனுக்கோ அவள் தன்னை அடையாளம் கண்டு கொண்டதில் கொள்ளை ஆனந்தம். அவளில் நாளுக்கு நாள் தொலைந்து கொண்டிருந்தவனுக்குத் தன்னை எண்ணியே ஆச்சரியம்.

 

பள்ளிக் காதல் புரியும் மாணவன் போல் விதவிதமான ஆசைகள் வந்தன. அவளின் ஸ்பரிஷம் கூட சொப்பனத்திற்கு இட்டுச் சென்றது.

 

“அண்ணனுக்கு அண்ணி மேல லவ்வு வந்துடுச்சு தெரியுமா?” ரூபன் தேவனின் காதில் கிசுகிசுக்க, “வரலனா தான் ஆச்சரியம். அண்ணி கிட்ட அண்ணன் எப்போவோ விழுந்துட்டார்” என்று சொல்லிக் கொண்ட தேவனுக்கு, சத்யாவின் மகிழ்வில் மனம் களிப்புற்றது.

 

“எல்லாரும் இருக்கிற இடத்தில் ரகசியம் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கோம் தானே? தெரியாதா அது?” யுகன் இருவரிடமும் கேட்க,

 

“ரொம்பத் தான் அராஜகம் பண்ணுற. சாரி டா செல்லமே” அவனின் கன்னத்தைக் கடித்து வைத்தான் ரூபன்.

 

நேரம் மெல்லக் கடக்க, “நான் ஐஸ்கிரீம் கொண்டு வந்தேனே அண்ணி. அதை எடுத்துக் கொடுப்போம்” ஜனனியை அழைத்துக் கொண்டு சென்றாள் தன்யா.

 

அனைவருக்கும் கப்பில் போட்டு எடுத்து வந்து கொடுத்தனர்.

 

“ஹய் ஐஸ்கிரீம்” அகியும் யுகியும் குதூகலமாக வாங்கிக் கொண்டனர்.

 

“டாடியோடத எனக்கு கொடுங்க. அவரு சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டார்” என்று யுகன் சொல்ல, அதனை எடுக்க நீட்டிய கரத்தை மெல்ல எடுத்துக் கொண்டவன் யுகனுக்குக் கொடுக்குமாறு கண்களைக் காட்டினான்.

 

“நீ ஹாஃல்ப் சாப்பிட்டு அகிக்கும் கொடுக்கனும் சரியா?” என்றவாறு கொடுத்தாள் ஜனனி.

 

“டாடி இனிமே ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்னு சொல்லிட்டார் தெரியுமா? இப்போ என்ன பண்ணுவீங்க?” என்று அவள் வினவ, அனைவரது கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. மறு நொடியே தமது கப்பை அவனிடம் நீட்டி இருந்தனர்.

 

தன் முன்னே நீண்ட அத்தனை கரங்களையும் பார்த்தான் சத்யா. அவர்கள் வழங்கக் காத்திருந்தது வெறும் ஐஸ்கிரீமை அல்ல! அளவற்ற அன்பையும் தான் என்பதைப் புரிந்தவனுக்கு உள்ளம் கனிந்தது.

 

“நீங்க சாப்பிடுவீங்கனு எனக்கு தெரியாதே. இல்லனா நான் கேட்டிருக்க மாட்டேன் டாடி” உதடு பிதுக்கிக் கூறினான் யுகி.

 

“அதுக்கென்ன டா? உனக்கு தந்ததுல சந்தோஷம் தான்” என்றவன், “எனக்கு வேண்டாம். நீங்களே சாப்பிடுங்க”  மற்றவர்களிடமும் புன்னகையுடன் மறுத்தான் சத்யா.

 

“நீ சாப்பிடு சத்யா” என்று மேகலை சொல்ல, “இப்போ என்ன பண்ணுறீங்கன்னா ஒவ்வொருத்தரும் ரெண்டு வாய் ஊட்டி விடுங்க. அப்போ சரி தானே?” என்று யோசனை சொன்னாள் ஜனனி.

 

“நான் தான் முதல்ல ஊட்டுவேன்” முதல் ஆளாக ஊட்டி விட்டான் யுகன்.

 

அடுத்து அகிலன். அடுத்தடுத்து மேகலை, ரூபன் ஊட்டினர். தான் ஊட்டாமல் தேவன் ஊட்டும் வரை காத்திருந்தாள் தன்யா.

 

“நீ ஊட்டு தனு” என்று தேவன் கூற, “நோ! அண்ணாவுக்கு உங்களுக்கு அப்பறம் தான் நான். அதை அவரே என் கிட்ட சொல்லி இருக்கார். சோ அந்த இடத்துக்கு நான் வர மாட்டேன். அடுத்த இடத்தை நான் எடுத்துக்கிறேன்ணா” தன்யா சொன்னதைக் கேட்டு தேவனுக்கு என்னவோ போல் இருந்தது.

 

இப்படிப்பட்ட சத்யாவைத் தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமே என்று மனம் கலங்கினான்.

 

“ஊட்டு தேவா” என்று சொன்ன சத்யாவைத் தாவி அணைத்துக் கொண்டான் தேவன்.

 

“சாரி சத்யா! ரியல்லி சாரி. அன்புல உன் முன்னாடி நான் தோற்றுப் போயிட்டேன். ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல? என்னை மன்னிச்சுக்க. நான் இனிமே இந்த தப்பைப் பண்ண மாட்டேன். என்னை அடிச்சிடு சத்யா” அவனது கையைப் பிடிக்க,

 

“அடிக்கத் தான் போறேன். இப்படி அழுதா என்னால தாங்க முடியுமா? அழக் கூடாது” என்றவாறு தன் தம்பியை மாரோடு தழுவிக் கொண்டான் காளை.

 

“எல்லாம் மறந்துடு. எல்லாம் முடிஞ்சு போச்சு. இனிமே என் கூட ஒழுங்கா பேசு. கோபம், மனஸ்தாபம் எல்லாம் விட்று. நாம சந்தோஷமா வாழலாம்” சத்யா சொன்னதைக் கேட்டு, “நானும் வருவேன்” ரூபனும் அவர்களது அணைப்பில் இணைந்து கொண்டான்.

 

தன்யாவுக்கும் ஏக மகிழ்வு. தன்னால் பிரிந்த உறவு சேர்ந்து விட்டதில் அவளது வலிகள் யாவும் விலகிய உணர்வு.

 

“வா தனு” தன்யாவையும் தம் அணைப்பில் சேர்த்துக் கொண்டான் சத்யா.

 

“யாஹூஊஊஊ! எல்லாரும் சேர்ந்தாச்சு. ஜாலி ஜாலி” அகியும், யுகியும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

 

மேகலையின் அகமும் முகமும் மலர்ந்து போனது. தன்னைப் பார்த்து கண் சிமிட்டிய ஜனனியைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் மேகலை.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!